அதரா 10



அதரா - 10


காதல் எப்படி வரும் எப்பொழுது வரும் அது செல்களின் சதிராட்டமா உணர்வுகளின் உயிரோட்டமா புரியவில்லையே..இருமனங்கள் இணைவது அன்பாலே அது யாருக்கு வேண்டுமானாலும் நிகழலாம் தாயின் மனம் குழந்தைக்கு புரியும் தந்தையின் மனம் மகளுக்கு புரியும்.. மனங்கள் இணைந்தால் அங்கே அன்பென்ற புரிதல் இருக்கும். ஆனால் இரு ஆத்மாக்கள் இணைந்தால்? அங்கே மெய்யான ஒரு விசித்திர அன்பு தோன்றும். அந்த அன்பு பிடிவாதம் கொண்டது சுயநலம் மிக்கது எதிர்பார்ப்பு அங்கே பெரியதாக கருதப்படும் தனக்கான உரிமையை நிலைநாட்ட போராடும் எந்த ஒரு வேலையை செய்தாலும் அன்பானவர்களை ஒரு விநாடியாவது மனம் அவர்கள் எண்ணங்களை தேடி தறிகெட்டு ஓடிவிடும்.

அப்படித்தான் அதராவின் மனமும் எந்த நொடியில் கடற்கன்னியை கண்டானோ அந்த நொடியில் இருந்து வேறாக துடிக்க தொடங்கியது. அதுவரை அவனது நெஞ்சத்தில் தன் லோகம் மக்கள் தன் உறவுகள் என்று நினைவை எல்லாம் பின்னுக்கு தள்ளி அங்கே புதிதாய் ஒரு மாற்றம் வந்தது.இதுவரை இருந்த அமைதி அடக்கம் அனைத்தும் தலைகீழாக மாறி அமைதியான இதயத்தில் ஏற்கனவே இருந்த  பிடிவாதமும் சுயநலமும் இரட்டிப்பாக சேர்ந்து கொண்டது.

அந்த சுயநலமும் பிடிவாதமும் விருப்பமே இல்லாத பெண்ணை கவர்ந்து வர செய்து அவள் வாயாலே தன்னை திருமணம் செய்ய மொழியும் அளவுக்கு கொண்டு வர செய்தது. அவனுக்கு தெரியாமல் என்ன இது தவறென்று ஆம் நன்றாக தெரியும் தெரிந்தே தான் தவறிழைக்கிறான் வர்ணிகாவிடம்.

வர்ணிகா கண்ணில் தேங்கி நிற்கும் கண்ணீரை வழியவிடாமல் கண்மூடி நீந்தி கொண்டிருக்கிறாள் அதரனின் அறையில் இருந்த குளத்தில்.மனமெங்கிலும் வேதனை ஊசியாக சுருக் சுருக்கென்று குத்துவது அவளுக்கு நன்றாக தெரிந்தது. ரணம் மரண ரணம் இப்பொழுதே செத்து விட மாட்டேனா என்று அந்த கடற்கன்னி அகன்ற ஆழியில் ஆனந்தமாக நீந்த வேண்டியவள் தற்போது அதரனவன் அறையிலிருக்கும் சிறிய குளத்தில் தன்னையே குறுக்கி நீந்தி கொண்டிருக்கிறாள். சொல்ல போனால் படுத்த வாக்கில் மிதந்து கொண்டிருக்கிறாள்.

சில நாழிகை முன் நிகழ்ந்த அனைத்துமே அவள் நினைவு பெட்டகத்தில் ஒன்றன் பின் ஒன்றாக முட்டி மோதி வந்து நின்றது. அந்த நினைவில் நடுநாயகமாக சிம்மாவின் மேல் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான் அதர நதின். முதல் நாள் அவள் விவாகம் செய்ய சம்மதம் கூறியதும் முகத்தில் பெரிய புன்னகையோடு தன் பெற்றோர்களின் முன் நின்றவன்"அம்மா அப்பா நான் உங்களிடம் உரைக்க போகும் செய்தியில் மெய்மறந்து நின்று விடுவீர்கள்"

"ஏற்கனவே நீ கொடுத்த செய்தி ஒன்றில் இதயமே ஒரு நிமிடம் நின்று பின் துடித்தது அதைவிட ஒரு செய்தி உண்டா என்ன"அதரனின் தந்தை மகனின் முகம் நோக்கி முறைத்து கொண்டே வினவ அதை அலட்சிய படுத்தியவன் தாயிடம்

"அம்மா நீங்கள் என்ன செய்தியென்று வினவ மாட்டீறா"

"வினவாமல் விட்டு விடுவாயா என்ன செய்தி என சொல் மகனே"

"நீங்கள் இத்துணை காலம் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த தருணம் நெருங்கி விட்டது அம்மா.."

"அதரா புதிர் போடாமல் அது என்ன செய்தியென்று கூறி விடடா என்னை பதற செய்யாதே.. இப்பொழுது எல்லாம் நீ செய்தி என்று சொன்னாலே என் இருதயம் நடுங்குகிறது"

"நடுக்கம் அவசியமற்றது அம்மா.. நல்லாசி கூற தயாராக இருங்கள் ஏனெனில் நாளை உமது புத்திரனின் விவாகம்"

"என்ன"என்ற அலறலோடு காந்தனும் அமிர்தியும் அதிர்ச்சியில் எழுந்து நின்றே விட இவர்கள் பேசுவதை அறைக்கு வெளியே நிறை மாத வயிறுடன் மிருளா ஒட்டு கேட்க அவளுக்கு பின்னே வருணன் உள்ளே இவர்கள் பேசுவதை ஒட்டு கேட்டு கொண்டிருந்தான். உள்ளே பெரியவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட அதே அதிர்ச்சி தான் வெளியே இருவருக்கும். வருணன் அதிர்ச்சி தாளாமல் விழிவிரித்து நிற்க"மாமா இதற்கு மேல் இப்படி உன் விழியை விரிக்காதே நான் தான் பயந்து விட்டேனென்று நினைத்தால் வயிற்றில் இருக்கும் உன் பேரனும் கூட பயந்து அஞ்சுகிறான்.. ஒரு தாத்தா இப்படி தான் தன் பேரனை அச்சுறுத்துவாரோ"

"என்ன தாத்தாவா கொன்று விடுவேன் உன்னை.. வயதில் உன்னை விட இரண்டு அகவை மட்டுமே பெரியவன் நான்.. இன்னும் கன்னி கூட கழியவில்லை என்னை பார்த்தா தாத்தா என்கிறாய் என்ன ஓரவஞ்சனை உனக்கு.."

"அகவையை விடு முறை சரிதானே"

"பேசாமல் ஓடிவிடு வாளெடுத்தேன் வரி வரியாக இழுத்து விடுவேன்.. உள்ளே உன் அனுஜன் கூறிய கூற்றை கேட்டாயா சற்று முன் தான் அந்த பெண்ணை தரதரவென்று கோபமாக எங்கோ இழுத்து சென்றான் இப்பொழுது பார்த்தால் முகமே பல்லாக நாளை விவாகம் என்கிறான்..நம்மை பார்த்தால் கிறுக்கர்களாக தெரிகிறதோ அவனுக்கு"

"எனக்கும் அதே சந்தேகம் ஆனால் அந்த சந்தேகத்தில் நீ மட்டும் விதிவிலக்கு.."

"மிருளா நான் யாரையும் இன்று அடிக்க மாட்டேனென்று தெரிந்து தானே என்னிடம் வார்த்தையாடி கொண்டிருக்கிறாய்..அனாவசியமாக விரதத்தை கலைக்க வைத்து விடாதே உள்ளே போ"மிருளா கேலி புன்னகை சிந்தி விட்டு உள்ளே செல்ல அங்கே அதரனின் கூற்றால் அதிர்ச்சியில் இருந்தவர்கள் மீண்டிருந்தனர்.

"அதரா நீ இந்த லோகத்தின் வேந்தனாக இருக்கலாம் ஆனால் நான் உன் தந்தை என்பதை மறவாதே..ராஜ காரியத்தில் தலையிட எனக்கு உரிமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் உன் வாழ்க்கையில் தலையிட எனக்கு உரிமை உள்ளது. உன் விவாகம் என்று இப்பொழுது கூறினாயே அது யாரோடு.. அந்த கடற்கன்னியுடனா அல்ல வேறு எவளையாவது கவர்ந்து வந்துள்ளாயா"

"தந்தையே உங்கள் மகன் கயவன் அல்ல கண்ணில் பட்ட கன்னிகளை எல்லாம் கவர்ந்து வர.. நான் கவர்ந்து வந்தவள் என் காதலி அவளையே நாளை விவாகம் செய்ய உள்ளேன்"

"மகனே என்னடா இது ஏன் மென்மேலும் தவறு இழைக்கிறாய்.. முதலில் என்னவோ சொன்னாயே முப்பது நாளில் அவளுக்கு விருப்பமில்லை என்றால் முப்பத்து ஒன்றாவது நாளில் அவளை விட்டு விடுவதாக.. இப்பொழுது விவாகம் என்கிறாய்"

"அம்மா.. அம்மா ஏன் இவ்வளவு அதிர்ச்சி..விவாகத்தை நாளை வைக்க கூறியதே அவள் தான் என்னிடம் எங்கள் வாழ்விற்காக அவள் முதன் முதலில் வேண்டிய விஷயம் அதை மறுக்க எனக்கு விருப்பமில்லை.. வேண்டுமானால் அவளிடம் சென்று வினவுங்கள்..ஆனால் நாளை என் விவாகம் இது உமது புதல்வனும் அதரலோகத்தின் வேந்தனுமான அதரா நதினின் ஆணை..மாமா"

"என்ன அதரா"

"நாளை விவாகத்திற்கு வேண்டியதை ஏற்பாடு செய்.. இப்பொழுது என்னோடு வா"என்றவன் சென்று விட அவனின் தந்தையோ

"இவனின் பிடிவாதமும் சுயநலமும் என்றைக்கு அவனுக்கே எதிரியாக வந்து நிற்க போகிறதோ தெரியவில்லை..அமிர்தி இல்லை வேண்டாம் மிருளா நீ சென்று அந்த பெண்ணின் விருப்பம் வினவி வா.. ஒருவேளை அவளுக்கு இதில் விருப்பமில்லை என்றால் விவாகத்தை எப்படியும் தடுத்து விடுவேன்.. அதில் என் உயிர் போனாலுமே சரி தான்"

"அன்பரே என்ன வார்த்தை இதெல்லாம்"

"கல்நெஞ்சக்காரனை மகனாக பெற்று விட்டேன் அமிர்தி அதற்காக பட்டு தானே ஆக வேண்டும்.. மிருளா நீ செல்"மிருளா அதரனின் அறையை அடைய வர்ணிகா குளத்தின் அருகே நின்றிருந்தாள் அதில் தெரியும் தன் பிம்பத்தின் மீது வெறுப்பான பார்வையை பதித்தவாரே.. அவளை பார்க்க கஷ்டமாக இருந்தாலும் அவளை நெருங்கினாள் மிருளா..

"வர்ணிகா".. மிருளாவின் குரலில் திரும்பி பார்த்தவள் பார்வை அவளின் மேடிட்ட வயிறை நோக்கியது. மிருளா சற்று தைரியத்தோடு பேச தொடங்கினாள்."வர்ணிகா நீ மச்சக்கன்னியாக இருக்கலாம் ஆனால் நீயும் ஒரு பெண் தான். உன் மனம் எனக்கு புரியாமல் இல்லையம்மா. ஒருவகையில் உனது இந்த நிலைக்கு நானும் ஒரு காரணமாவேன். என் பொருட்டே  அவன் கடலுக்குள் வந்தான் உன்னை கண்டான்.. அந்த வகையில் என்னை மன்னித்து விடு வர்ணிகா"

"வேண்டாம் லோகம் ஆளும் வேந்தனின் சகோதரி அல்ப கடற்கன்னியிடம் மன்னிப்பு வேண்டலாமா"

"வர்ணிகா.. நீ குத்தி காட்டி பேசுகிறாயோ இல்லை மெய்யாக தான் கூறுகிறாயோ எனக்கு புரியவில்லை.. நான் என் மன்னிப்பை கேட்டு விட்டேன் அதை ஏற்று கொள்வதும் கொள்ளாமல் போவதும் உன் விருப்பம். ஆனால் ஒன்று இங்கே அனைத்துமே ஒருவனின் விருப்பப்படியே நடக்கும் அது அதரனின் விருப்பம். வர்ணிகா நாளை விவாகம் என்று அதரன் கூறுகிறான். உண்மையை கூறு உனக்கு இந்த விவாகத்தில் விருப்பமா"

"விருப்பம் இல்லயென்றால் என்ன செய்வதாய் உத்தேசம்"

"என் தந்தை அதரனுடன் போரிட்டு உன்னை விடுவிப்பார்"

"என்னால் தந்தை மகன் இருவருக்குள்ளும் சர்ச்சையா..குடும்பத்தை பிரிந்து படும் வேதனை எனக்கு தெரியாதா அதனை உங்கள் தம்பியும் அனுபவிக்க வேண்டுமா.. ஒரு விதத்தில் இது எல்லாமே என் தவறு தானே தவறு கூட அல்ல குற்றம் நான் இழைத்த பாவம்.. உங்கள் தம்பியை காண ஆவல் ஏன் கொண்டேன் அந்த பாழாய் போன ஆவளுக்காக தானே இப்பொழுது இந்த நிலையில் உள்ளேன்.. இதோ பாருங்கள்.. அவப்பெயரோடு இனி ஒருநாளும் இங்கிருக்க மாட்டேன் அதனாலே உங்கள் தம்பியிடம் விவாகத்திற்கு சம்மதம் கூறினேன்.."

"வர்ணிகா விரக்தியில் பேசாதே சரி செய்ய இயலாத தவறு ஏதும் நிகழ்ந்து விடவில்லை"

"வேண்டாம் தயவு செய்து இந்த விவாதத்தை விட்டு விடுங்கள்..எனக்கு தனிமை வேண்டும்"அதற்கு மேல் அங்கே நில்லாமல் தன் பெற்றோரிடம் வர்ணிகா கூறியதை கூற இவளே இவ்வளவு உறுதியாக இருக்கும் போது அவர்கள் மட்டும் என்ன செய்வார்கள்.. பலன் மறுநாள் அதரலோகமே அசந்து பார்க்கும் விதத்தில் அதரனுக்கும் வர்ணிகாவிற்கும் விவாகம் நடந்தது.

விவாகத்தை காண வர்ணிகாவின் உறவுகள் அனைவரையும் இரவோடு இரவாக சென்று அழைத்திருந்தான் அதரன். முதலில் கலங்கிய வர்ணிகாவின் பெற்றோர் கூட அதரனே தங்கள் பெண்ணை மணக்க கோர ஆனந்தமாக சம்மதித்தனர். அவர்களை விவாகத்தின் போது கண்டதும் வர்ணிகா ஒரு நிமிடம் தயங்கி நின்றாள். ஆனால் அவர்கள் முகத்தில் இருக்கும் புன்னகை வர்ணிகாவை சுட்டு பொசுக்கியது.

வேந்தனுக்கு பெண் கொடுக்கும் பூரிப்பு அவர்கள் முகத்தில். தன் மனம் யாருக்கும் புரியவில்லை. புரிய போவதும் இல்லை.அவர்கள் முறைப்படி அதரன் நீல முத்துக்கள் கோர்க்கப்பட்ட கால் சங்கிலி ஒன்றை கையிலெடுத்தான். மணமகன் முழங்கால் படியிட்டு அமர மணப்பெண் மணமகனின் இதயத்தில் தன் ஒற்றை பாதத்தை வைக்க அவளின் முகம் பார்த்து கொண்டே அவள் பாதத்தில் சங்கிலியை அணிவிக்க வேண்டும்.

அணிவித்து முடித்ததும் பெண்ணவளின் பாதம் பற்றி அதில் இதழோற்ற வேண்டும். இதற்கு அதரன் மட்டும் விதிவிலக்கா என்ன.. அவன் முழங்காலிட்டு அமர வர்ணிகா இரும்பென கணக்கும் தன் பாதத்தை அசைக்க முடியாமல் அமைதியாக நிற்க புன்சிரிப்புடன் மென்மையாக அவள் பாதம் பற்றி தன் இதயத்தில் மேல் வைக்க வர்ணிகா தடுமாறாமல் இருக்க மிருளா பின்னிருந்து அவளை தாங்கி கொண்டாள்.

தன் இருதயத்தின் மீதிருக்கும் பாதத்தில் அழகிய நீல முத்து சங்கிலியை அணிவித்தவன் அவளின் பாதத்தை கரத்தில் தாங்கி அழுத்தமாக முத்தமிட அந்த கண்களில் தான் எத்துணை காதல். லோகத்தின் வேந்தன் கோடான கோடி மக்களின் மத்தியில் அழுத்தமாக ஆழமாக ஆத்மார்த்தமாக அவளின் பாதத்தில் தன் காதலை சமர்பித்தான்.

குட்டி பறக்கும் மனிதர்கள் யாவரும் ஆகாயத்தில் இருந்து நீல மினுக்கும் துகள்களை தூவி வானவில் வர்ண மலர்களை மேகத்தில் இருந்து சொரிய செய்ய மக்கள் யாவரும் ஆனந்த கூச்சலிட்டு ஆரவார நடனமிட அங்கே அனைவருமே மகிழ்வுடன் இருந்தனர் ஒருவளை தவிர. அதன் பின் எல்லாமே வர்ணிகா பதுமை போல அதரனின் கைசிறையில் இருந்து செய்தாள். அவள் உடல் நடுங்க ஆரம்பிக்கும் போதே அவள் தேவை அறிந்து அவளை தூக்கி வந்து குளத்தில் விட்டு அவள் ஆசுவாசம் அடைந்ததும் மீண்டும் அவளை நடக்க வைத்து அழைத்து சென்றான்.

அவளின் உறவுகளின் தேவை அறிந்து அவர்கள் கால்கள் வால்களாக மாறும் போது ஆசுவாச படுத்தி கொள்ள கடலை அவன் கோட்டை அருகேயே வரவழைத்திருந்தன் அவனின் ஜாலத்தால். எல்லாமே வேக வேகமாக நடந்தேறி முடிந்து இப்பொழுது அதரலோகத்தின் அரசி அமைதியாக குளத்தில் மிதந்து கொண்டிருக்கிறாள்.

"என்னை பற்றி தான் நினைத்து கொண்டிருக்கிறாயோ"அவனின் குரலில் நினைவு நின்றிட குளத்திலிருந்து வெளியே வந்தாள் வர்ணிகா.அலட்சியமாக அவனை பார்த்து

"ஆமாம் எத்துணை அழகான நினைவு அவைகள் காலத்தால் அழியாத காவியம் அல்லவோ அதை கல்வெட்டில் செதுக்கி வைத்தால் வரும் சந்ததிகள் தங்களின் பராக்கிரமத்தை புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்"

"ஹாஹாஹா வர்ணிகா என் கற்பு உன் கண்ணசைவில் தன்னை இழக்க காத்திருக்கிறது.. அதை அறிந்து கொண்டு தானே சூசகமாய் சம்மதம் உறைக்கிறாய் கள்ளி"

"என்ன நான் எங்கே எப்போது சொன்னேன்"

"இதோ இப்பொழுது தான்.. வரும் சந்ததிகள் என்று நீ கூறவில்லையா.. நாம் ஒன்று கூடினால் தானே கண்ணே நமக்கு சந்ததி தோன்றி அவர்கள் வாயிலாக வம்சம் விருத்தியாகும்.. எப்படி உன் கணவனின் கணக்கு"

"சீ ஒரு பெண்ணிடம் இவ்வாறு பேச வெட்கமாக இல்லை.மறந்து விட்டேன் பாருங்கள் உங்களுக்கு தான் வெட்கம் என்பதே கிடையாதே இருந்திருந்தால் உங்களை வெறுக்கும் ஒருவளை மணப்பீரா"

"வர்ணிகா உன் பேச்சு எல்லை மீறுகிறது இது என் மீனம்மாவிற்கு நல்லது அல்லவே"

"எல்லை மீறலோ அப்படி என்றால் என்ன வேந்தே.. தாங்கள் தான் அதில் வல்லவன் ஆயிர்றே.. தங்களை போல் சாமர்த்தியம் ஏதும் எனக்கில்லை"

"சாமர்த்தியம் எதற்கடி கண்ணே சாமத்தில் நடக்கும் பூஜைக்கு"என்றவன் நொடியில் அவளை தன் கைசிறைக்குள் கொண்டு வர அவனிடமிருந்து திமிறியவள்

"எதற்காக என்னை இப்படி இறுக்கி அணைத்து கொண்டிருக்கிறீர்கள்.. என்னால் மூச்சு விட கூட இயலவில்லை.. என்னை விடுங்கள்"

"விட முடியாது என்னடி செய்வாய்..முடிந்தால் இந்த அதரனின் பிடியிலிருந்து தப்பி கொள் பார்க்கலாம்"வர்ணிகா எவ்வளவு முயன்றும் திமிறியும் தன்னால் முயன்ற அளவு முயற்சித்து ஓய்ந்து பாவமாக அவனை பார்க்க

"வர்ணிகா உன் அனல் கக்கும் விழிகளை கூட எதிர்கொள்வேனடி ஆனால் இந்த பார்வை.. என்னால் தாங்க இயலவில்லை மீனம்மா.. இப்படி பார்த்து வைக்காதே என் உயிரே ஆட்டம் காண்கிறது..பச்சை கண்ணழகியிடம் பிச்சை வேண்டுகிறேன் இனியும் இம்மாதிரி பார்வை பார்த்து என்னை கொல்லாதே..நீ கலைத்து காணப்படுகிறாய் வா உறங்கலாம்"இதுவரை அவன் கூறிக்கொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்த வர்ணிகா தூங்கலாம் என்ற மஞ்சத்தை காட்டியதும் அதிர்ந்து போனாள்.

11

அதரா - 11



"வர்ணிகா உன் அனல் கக்கும் விழிகளை கூட எதிர்கொள்ளவேனடி ஆனால் இந்த பார்வை.. என்னால் தாங்க இயலவில்லை மீனம்மா.. இப்படி பார்த்து வைக்காதே என் உயிரே ஆட்டம் காண்கிறது..பச்சை கண்ணழகியிடம் பிச்சை வேண்டுகிறேன் இனியும் இம்மாதிரி பார்வை பார்த்து என்னை கொல்லாதே..நீ கலைத்து காணப்படுகிறாய் வா உறங்கலாம்"இதுவரை அவன் கூறிக்கொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்த வர்ணிகா தூங்கலாம் என்ற மஞ்சத்தை காட்டியதும் அதிர்ந்து போனாள்..

இவன் என்ன உளறுகிறான் நான் எவ்வாறு மஞ்சத்தில் துயில் கொள்ள இயலும்.. நேற்றைய இரவு பொழுது அதரா அந்த அறைக்குள் நுழையவே இல்லை. அதனால் நிம்மதியாக முழுவதும் கடற்கன்னியாக தன்னை மாற்றி கொண்டவள் எப்பொழுதும் கடலில் துயில் கொள்வாள் நேற்று சிறிது மாற்றமாக குளத்தில் துயில் கொண்டாள் இடம் வேறாக இருக்கலாம் ஆனால் தண்ணீர் என்பது ஒன்று தானே.. ஆனால் இப்பொழுது என்ன செய்வது..

"ஹேய் துயில் கொள்ளலாம் வா என்று தானே அழைத்தேன்.எனது நெஞ்சமெனும் மஞ்சத்தில் படுத்துறங்கு என்றா கூறினேன்.. அல்ல என் அன்பு வர்ணிகாவிற்கு அது தான் ஆசையோ?"

"உங்கள் ஆசை நாசமாக போக.. ஆசையை பார் ஆசையை கன்றாவியான ஆசை இதெல்லாம்.இந்த லோகத்தையும் ஐம்பூதங்களில் ஒன்றான தீயையும் அடக்கி ஆளும் வேந்தே உமக்கு சிறிதேனும் அறிவு இருக்கிறதா.. நான் எவ்வாறு மஞ்சத்தில் படுத்துறங்குவேன்.. இதனை கொஞ்சமேனும் யோசிதீரா"

"அடடா வர்ணிகா இம்மாதிரி யோசனை எல்லாம் நீ பக்கத்தில் இருக்கும் போது எனக்கு எப்படியடி வரும்.. ஏனெனில் என் உடல் பொருள் ஆவி அனைத்துமே சுற்றி சுற்றி உன்னை வளைத்து கட்டியே சுழலுகிறதே பின் வேறு யோசனை எப்படி வரும்"

"பரிகாசம் செய்யாதீர்கள் வேந்தே.. எனக்கு எரிச்சலாக வருகிறது..நாங்கள் கடலை வீடாக கொண்டவர்கள். உங்களை போல் மானிட பிறவி அல்ல. பாதி மானிடராக இருப்பினும் மீதி மச்சத்தின் உருவத்தை பெற்றுள்ளோம்.பாதி நேரம் மனிதியாகவும் மீதி நேரம் மீனாகவும் என்னால் இருக்க இயலவில்லை. என் வேதனை எங்கே தங்களுக்கு உரைக்க போகிறது.. இன்னும் சிறிது நேரத்தில் என் கால்கள் மறைந்து வால் தோன்றும் அப்பொழுது மஞ்சத்தில் உங்கள் கை சிறையில் நான் அனலில் இட்ட மீனாக துள்ளி துடிப்பேன் நன்றாக கண்டு களியுங்கள்.. ஆஹா அது ஒன்றும் உங்களுக்கு புதிது அல்லவே நேற்று அம்மாதிரி ஒரு ஆனந்த காட்சியை கண்டு சொக்கி நின்றவர் தானே தாம்"

நாடியில் கை கொடுத்து அவள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தவன் "அப்பப்பா என்ன பேச்சு திறன்.. வர்ணிகா நீயெல்லாம் அதராவின் தளபதியாக இருக்க வேண்டியவள்.பேசி பேசியே எதிரியை பின்னங்கால் பிடரியில் இடிப்பட ஓட வைத்து விடுவாய்.. இந்த குட்டி உதடுகள் இவ்வளவு பேசுமா மீனம்மா"வர்ணிகாவின் கீழுதட்டை இழுத்து கண்களில் போதையுடன் வினவியவனை

"என் உதட்டில் இருந்து கரத்தை எடுங்கள் இல்லையென்றால்"

"இல்லையென்றால்"குறும்பு சிரிப்புடன் அவன் கேட்க அவளோ சடுதியில் அவன் கரத்தை தட்டி விட்டு அவன் கழுத்தில் ஆழமாக பற்களை பதிக்க அவனுக்கு வலிதான். அந்த வலியின் தாக்கத்தில் உச்சி முடி நட்டு கொண்டது. இருந்தும் ஆழ மூச்சுகள் எடுத்து தன்னை சமன் செய்து கொண்டான். வர்ணிகா அவன் கழுத்தில் இருந்து பற்களை பிரித்து பார்க்க அவனின் உதிரம் ஆழமாக பற்கள் பதிந்த இடத்தில் இருந்து வெளியேறி கோடாக நெஞ்சை நோக்கி பயணித்தது.

"கழுத்தின் ஓரத்தை கடிக்க தெரிந்த எனக்கு குரல்வளையை குதறி எடுக்க எவ்வளவு நாழிகை பிடிக்கும்..என் பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு வேந்தே.. இவளாக வந்தாள் விவாகத்திற்கு சம்மதம் சொன்னால் என்று இறுமாந்து இருந்திருப்பீரே.. ஆம் நானாக வந்தேன்.. என் ஆசையை கொன்று இயற்கையின் விதியை மீறி சுயநல பேயாக என்னை இங்கே கொண்டு வந்த வேந்தனுக்கு இந்த அதரலோகத்தில் தண்டனை தர யாருக்கு உரிமை உள்ளது.ஆதலால் யாருக்கும் இல்லாத உரிமையை நான் எடுத்து கொள்ள போகிறேன்.என் உணர்வுகளை மீறி உயிர்ப்பை கொள்ளும் அரக்கனான உங்களுக்கும் முடிவு ஒன்று உள்ளது தானே அது என்னால் தான் வேந்தே.."

"ஐயோ என் செல்லமே வர்ணிகா இனியும் இதழை சுழித்து பற்களை கடித்து விழியை உருட்டி வில்லி வேஷம் போடாதே எனக்கு ஒரே சிரிப்பாக வருகிறது அதையும் மீறி சுழிக்கும் இதழ்களுக்கு சேதாரம் ஏற்பட்டால் அரசு பொறுப்பேற்காது பெண்ணே"

"ஹான்"அவள் மூச்சு வாங்க முறைத்து கொண்டிருக்க அவளின் கோலத்தில் மயங்கி கண நேரத்தில் அவள் இதழுக்கு தன்னால் எவ்வளவு சேதாரம் ஏற்படுத்த முடியுமா அவ்வளவு சேதாரத்தை ஏற்படுத்தி பெருத்த நஷ்ட்டத்தை உண்டாக்கினான் அவள் இதழ்களுக்கு. நஷ்டம் அவளுக்கு மட்டுமே அவனுக்கு கணக்கிட இயலாத லாபம் சுக்கிர திசை போலும்.

வர்ணிகாவின் இதழ்களை விடுவித்து விட்டு"வர்ணிகா ஒரே நாளில் உன் வில்லத்தனத்தை எல்லாம் உளறி கொட்டி வீணாக்கி விடாதே.. நமக்கு காலம் விரிந்து கிடக்கிறது. 
அதனால் பொறுமையாக இருப்பாயாக. இப்பொழுது உன் பிரச்சனை எங்கே மஞ்சம் என்பது தானே. உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் நம் மஞ்சம் இனி"

அவள் அவனையே பார்த்து கொண்டிருக்க"இனி இந்த குளத்தின் நடுவே"..

"என்ன"

"ஆம் வர்ணிகா இப்பொழுது பார்" என்றவன் காற்றில் கரத்தை அசைக்க அந்த குளத்தின் மத்தியில் ஒரு குழி உண்டாகி அது பெரியதாக அங்கே பீடம் ஒன்று உருவாக்கி அதன் மேல் வட்ட வடிவில் தண்ணீர் நிரம்பிய மஞ்சம் ஒன்று நடு நாயகமாக காட்சி தர குளத்து தண்ணீர் எல்லாம் மஞ்சத்தை சுற்றி வட்டம் அடித்தது."வர்ணிகா உனக்கு வேண்டும் பொழுது நீ ஒன்றும் செய்ய வேண்டாம். இந்த நீர் மஞ்சமே உனக்கு தண்ணீரின் உணர்வை கொடுத்து உன்னை ஆசுவாச படுத்தும். நீ தண்ணீரை தேடி செல்ல வேண்டாம். தண்ணீரின் மேலே தான் நாமே படுத்திருப்போம் சரிதானே மீனம்மா..உன் வீர வசனங்களை கேட்டே சோர்வாகி விட்டேன் இனி உன்னை அணைத்து உறங்கினால் ஒருவேளை சோர்வு நீங்கி புத்துணர்ச்சி வருமோ என்னவோ.. வா அதையும் அறிந்து கொள்ளலாம் வர்ணிகா"

அவன் மஞ்சத்தில் படுப்பான் இவள் தனியாக நீரில் தூங்கலாம் என்று நினைத்தால் அவன் அதிரடியாக இப்படி செய்ய இவனுடன் இவன் கையணைப்பில் உறங்குவதா..

"இவனுடன் இவன் கையணைப்பில் உறங்குவதா என்று தானே எண்ணி கொண்டிருக்கிறாய்.. நான் தான் உன் சம்மதம் அன்றி என் கற்புக்கு சேதாரம் வராது என்று வாக்குறுதி அளித்து விட்டேனே பிறகென்ன கவலை வா என்னோடு"என்றவன் அவளை தூக்கி தோளில் போட்டு கொண்டு குளத்து தண்ணீரின் மீது நடந்து மஞ்சத்தை அடைந்து அவளை அப்படியே தொப்பென்று மஞ்சத்தில் போட தண்ணீர் நிரம்பிய மஞ்சத்தில் வர்ணிகா குலுங்கி விழுந்தாள்.

அவள் அங்கங்களும் குலுங்க இங்கே அதரனின் நெஞ்சே குலுங்கியது. இருந்தாலும் ஏதும் பேசாமல் படுக்க அவளோ அவனை விட்டு விலகி படுக்க "வர்ணிகா இவ்வளவு பெரிய மஞ்சத்தின் ஓரத்தில் ஒட்டி கொண்டிருப்பதாக சபதம் செய்துள்ளாயா"

"உங்களுடன் ஒரே மஞ்சத்தில் படுப்பதே மேல்..இந்த இடைவெளி தாண்டி அருகில் வர எண்ணம் கொண்டால் அடி பலமாக விழும். கழுத்தில் இருக்கும் கடி அதற்குள் மறந்து விட்டதா"

"அடி கடி என்னமாய் பேசுகிறாய் ஹாஹாஹா.. சரி வர்ணிகா நான் இடைவெளி தாண்ட மாட்டேன் ஆனால் நீ தாண்டினால் உன்னை விடமாட்டேன்"

"அப்படி ஒரு எண்ணம் இருந்தால் உள்ளுக்குள்ளேயே எரித்து விடுங்கள்.."அவனுக்கு வக்கனை காட்டி அவள் திரும்பி படுக்க அந்த மஞ்சம் சிரியதானது. என்னடா இது இடம் போதவில்லையே என்று சற்று உள்ளே நகர்ந்து படுத்தாள்.மீண்டும் மஞ்சனை சிறியதாக சற்று உள்ளே படுத்தாள். இப்படியே அவள் கண்ணயரும் நேரம் எல்லாம் மஞ்சம் சிறியதாகி கொண்டே வர வர்ணிகா உள்ளே தள்ளி படுத்தே அதரனின் நெஞ்சில் முட்டினாள்.. உடனே கரத்தால் அவளை வளைத்து கொள்ள

அவன் முகம் பார்க்க திரும்பி படுத்தவள்"இதெல்லாம் உங்கள் வேலை தானே எனக்கு அப்பொழுதே ஒரு சந்தேகம் இருந்தது ஆனால் திருப்பி உமது முகம் காண பிடிக்காமல் இருந்து விட்டேன்.. இப்படி கள்ள தனம் செய்து உங்கள் இச்சையை ஈடேற்றி கொள்ள வெட்கமாக இல்லை"

"இச்சை ம்ம்ம் இச்சை.. இச்சை என்றால் என்ன பெண்ணே கொண்ட மனைவியை கடசியணைத்தால் இச்சையோ பின் எப்படி உன் தந்தை கடலரசன் உமது அன்னையை கூடி உன்னை பெற்றார்.. அதற்கு பேர் பலாத்காரமா"

"சீ என்ன சொன்னீர் என் தந்தையும் தாமும் ஒன்றா.. அவர்கள் மெய் நேசம் கொண்டவர்கள்.. உம்மை போல் இறுமாப்பு கொண்டு பிடிக்காத ஒருவளை கவர்ந்து வந்து கொடுமை படுத்தவில்லை"

"கொடுமையா எது வர்ணிகா அதரலோகமே பார்த்து மரியாதை செலுத்தும் அதரனையே ஆளும் உன்னை யார் கொடுமை செய்வார்கள்.. என் முகம் பார்த்தே பேச பயம் கொள்ளும் மக்கள் மத்தியில் என் கைசிறைக்குள் இருந்தே தைரியமாக வார்த்தையால் குத்தி கிழிக்குறாயே அதை எல்லாம் கேட்டும் என்னடி சொன்னாய் என்று உன்னை ஒருவழியாகாமல் விட்டு வைத்து உன் பேச்சுகளுக்கு அமைதியாக பதில் தருகிறேனே இதான் கொடுமையோ"

"உங்களுக்கு என்ன தலையெழுத்தா இந்த பேச்சுக்களை கேட்க.. வெட்கமாக இல்லை.. ஒழுங்காக என்னை விட்டு விடுங்கள்.. இல்லையேல் உங்கள் இச்சையை தணிக்க இந்த அதர லோகத்தில் பெண்களா இல்லை அவர்களை நாடி செல்லுங்கள்"

"வேண்டாம் வர்ணிகா. பேசும் உரிமை உண்டென்று பேசி கொண்டே இருக்கிறாய் இது உனக்கு நல்லதல்ல.

"நீங்கள் மட்டும் நல்லவரா.. கொடூரன் அரக்கன் படும்பாவி பிசாசு பேய் அசுரன் இச்சை ஆசை கொண்டவன் காமகொடூரன்"அவள் இறுதியாக கூறிய வார்த்தையில் அவனின் மென்மை கரைந்து கோபம் தலைக்கேறி

"என்னடி சொன்னாய் காம கொடூரனா.. உன்னை கவர்ந்து வந்து கற்பை அழித்தேனா சொல்லடி.. கவுரவமாக கரம் பிடித்துள்ளேன். உன் சம்மதத்திற்காக மனம் முழுக்க காதலுடன் காத்து கிடக்கும் எனக்கு பெயர் காம கொடூரனா.. இந்த பெயர் எனக்கு பொருந்தவில்லை.நீ ஆசையாக வைத்த பெயரல்லவா அதனால் பொருந்தாததை பொருந்த செய்து விடுகிறேன்"என்றவன் வர்ணிகாவின் மார்மறைத்த வஸ்திரத்தை பிடித்திழுக்க அவள் அவனின் மூர்கத்தனத்தை எதிர்த்து தடுக்க அப்படியும் முடியாமல் அவளின் வஸ்திரம் அவன் கையோடு வந்தது.

அன்று கடலின் ஆழத்தில் அவன் கண்ட அதிசயம் இன்று கட்டிலின் மேலே.. தன்னை அவன் பார்த்து கொண்டிருக்கிறான் என்று கவனித்த வர்ணிகா அன்று போல் தன்னை மறைத்து கொள்ளவில்லை. மாறாக தனது இடை வஸ்திரத்தையும் கலைந்து முழு நிர்வாணமாக அவன் முன் படுத்து கொள்ள அவன் தான் பதறி போனான்.

"என்ன வேந்தே ஏன் இந்த பதற்றம் இந்த கோலத்தை காண தானே ஆவல் கொண்டீர் பின் ஏன் உத்தம வேஷம் போடுகிறீர்.. இந்த கோலமெல்லாம் உமக்கு புதிதா என்ன.. எத்துணை நங்கைகளை கையாண்டு இருப்பிர்கள்.. அதில் சற்று வித்தியாசமாக கடற்கன்னியை இப்பொழுது கையாள போகிறீர்கள். கவலை வேண்டாம் கூடலின் போது நான் கடற்கன்னியாக மாறிட மாட்டேன் வாருங்கள்"

அவள் ஒட்டு துணியின்றி அவன் முன் படுத்து கிடக்க அவனுக்கு தான் மனமே வலித்தது.. வேண்டாமென்று தலையசைத்து அவள் மேல் ஆடையாக விழுந்து கட்டி அணைத்தவன் உடலில் ஆடைகள் மாயமாய் மறைந்தது..இருவரும் ஒருவரை ஒருவர் ஆடையாய் அணிய வேண்டிய நிலை. அதரன் அவளை அணைத்து தன் உடல் உஷ்ணத்தை அவளுக்கு கொடுத்து உச்சியில் முத்தமிட்டு"உன் தேகம் எனக்கு வேண்டும் வர்ணிகா ஆனால் அது இப்படியல்ல.. விழி நிரம்பிடும் ஆசையோடு காற்றில் எனக்கு செய்தி அனுப்புவாய்..ஆத்மா இணைந்த நிலையில் அந்த செய்தி காற்றில் என்னை தேடி வந்து செவியில் செய்தி உரைக்கும்.

நானோ குறும்பு சிரிப்புடன் இருக்கும் வேலைகளை எல்லாம் நிதானமாக பார்த்து விட்டு மெல்லமாக உன்னிடம் வருவேன். ஆனால் அதற்குள்ளாக நீ என்னை எண்ணி பொய்யான ஊடல் கொண்டு பரிதவிக்க வேண்டும். என்னை கண்டு ஊடலுடன் முகம் திரும்பி கொள்ளும் உனை பின்னிருந்து அணைத்து படர்ந்த முதுகு தண்டில் இதழில் ஒற்ற வேண்டும்.

ஒற்றை இதழ் முத்தம் உன் ஊடலை சுக்கு நூறாக சிதற விட நீ நாணம் கொண்டு என்னை திரும்பி அணைக்க உனை காற்றாய் மாறி கைகளில் ஏந்தி இதே மஞ்சத்தில் கிடத்தி வெட்கத்தில் வெடிக்க வைத்து கூடலின் இறுதி அங்கமாக என் ஆண்மையை உன்னுள் செலுத்த நீ வலியில் முகம் சுணங்கி என்னை பார்க்க அந்த நொடி உன்னை எதுவும் செய்யாமல் வெறுமனே கட்டியணைத்து கொண்டு உன்மேல் சாய்ந்து கொள்ள வேண்டும். என் ஆண்மை உன் பெண்மையின் உள்ளே பாதுகாப்பாக பதுங்கி கிடக்க ஈருடலும் ஓருயிராகி நம் காமம் காதல் அனைத்தையும் கடந்து ஆத்மநிலையை ஒன்றிணைக்கும்.

அப்படி பட்ட உறவு மட்டுமே எனக்கு வேண்டும் வர்ணிகா இம்மாதிரி தேகங்கள் கேவலமாக இணைவது அல்ல. இப்பொழுது கோபமாக இருக்கிறாய் என் உடற் சூட்டில் கோழிக்குஞ்சாய் பதுங்கி உறக்கம் கொள் மீனம்மா"என்றவன் அதற்கு மேல் ஏதும் பேசாமல் கண்மூடி கொள்ள என்னவோ வர்ணிகா பேச்சற்று போனாள்.

காலையில் அவள் எழும் போதே அவளின் வஸ்திரங்கள் அவள் மேனி தழுவி கிடந்தது. எழுந்து தன் கடன்களை முடித்தவள் என்ன செய்வதென்று யோசிக்கும் போதே மிருளா உள்ளே வந்தாள்"வர்ணிகா"

"வாருங்கள்"அவளை என்ன முறை சொல்லி அழைப்பதென்று தெரிந்தும் வர்ணிகா தடுமாற அதை புரிந்து கொண்டவள்

"வர்ணிகா நீ என்னை பெயர் சொல்லியே அழைக்கலாம்.. நாம் நல்ல தோழிகளாக இருப்போம் சரிதானே..எங்கே சொல் என் பெயர் என்ன"

"உங்கள் பெயர் தெரியாது"

"தெரியாதா.. சரியாக போனது.. என் பெயர் மிருளா"

"மிருளா அழகான பெயர்"..

"ஆயிரம் இருந்தாலும் உன் பெயர் போல் அழகில்லை.."

"என் பெயரே அதுவல்லவே"

"பிறகு "

"என் பெயர் பௌர்ணிமா"

"என்ன அழகான பெயர் பௌர்ணிமா.. ஆமாம் இத்துணை அழகான பெயரை எதற்கு மாற்றினாய்"

"மாற்றியது மட்டும்மல்ல அதை மறக்கடித்தும் விட்டார் உமது சகோதரன்"

"ஓ இது என் தம்பியின் வேலையோ அவன் எப்பொழுது ஜோதிட சாஸ்திரம் பயின்றான் என்று எனக்கு தெரியவில்லையம்மா.. ஆனாலும் இந்த பெயர் அந்த பெயரை விட ஒரு படி மேல் தான்.பௌர்ணிமா என்றால் நிலவு.வர்ணிகா என்றாலும் நிலவு தான் இருந்தாலும் இதற்கு இன்னொரு அர்த்தம் வர்ணிக்க இயலா எழில் என்பதாகும். அந்த வகையில் என் தம்பி கெட்டிக்காரன் தான்"வர்ணிகாவிற்கு மிருளாவின் பேச்சு எரிச்சலாக இருந்தாலும் அவளது பேசும் முறை பிடித்திருந்தது.

எனவே"போதும் மிருளா உங்கள் தம்பியின் புராணம்.. நாம் வேறு எதையாவது பேசலாமா"

"பேச வேண்டுமா அட வர்ணிகாவே இது பேசும் நேரமில்லை பசியாறும் நேரம்.. நீ இதுவரை என்ன மாதிரி உணவை உண்டாயோ தெரியவில்லை.. ஏனென்றால் வந்த இரண்டு நாளும் நீ பழம் மட்டும் உண்டு கொண்டிருந்தாய் என்று நான் அறிவேன்.இப்பொழுது சொல் உன் உணவு முறை என்ன"

"நாங்களும் மச்ச வகை என்பதால் மற்ற மச்சங்களை வேட்டை ஆடாமல் கடலில் வாழும் தாவரங்களை மட்டுமே உணவாக உண்போம்.எப்போதாவது கரைக்கு வந்தால் பழங்களை உண்போம்"

"அப்படியா சரி சரி.. இதோ பார் வர்ணிகா இனி காலையில் நீ எழுந்ததும் முதலில் உனக்கு வாள் பயிற்சி காத்திருக்கிறது.. அடுத்து"

"இருங்கள் இருங்கள் வாள் பயிற்சியா"

"ஆம் வர்ணிகா நம் வேந்தனின் கட்டளை நாளை உனக்கு வாள் பயிற்சி காத்துக்கொண்டிருக்கிறது"

"கடற்கன்னியாகிய எனக்கு வாள் பயிற்சி என்ன வேண்டிருக்கிறது.. என் வாலையே நான் அவ்வப்போது தான் பார்க்கிறேன்.. இதில் வாள் பயிற்சி எனக்கெதற்கு"

"அவசியம் உனக்கு தேவைப்படும் மீனம்மா"என்றபடி தரை அதிர நடந்து வந்தான் அதரன்.

"அக்கா நீ செல்.. நான் வர்ணிகாவை அழைத்து வருகிறேன். மாமாவிடம் இருந்து செய்தி வந்திருக்கிறது"என்றது தான் தாமதம் 

"அதை ஏனடா இவ்வளவு தாமதமாக கூறுகிறாய் மடையா.. அதரா என் தங்கமே ஒரே ஒரு சொடுக்கு போட்டு எனை நொடியில் செய்தி வந்திருக்கும் இடத்தில் நிறுத்தேன்"

"அக்கா செய்தி ஒன்றும் ஓடி விடாது நீ மெல்லமாக நடந்தே செல்"

"நடப்பதா அதரா நான் பாவமில்லையா என்னவரிடமிருந்து செய்தி தாங்கி வந்திருக்கிறது.என்னால் உன் மருமகனை சுமந்து கொண்டு எப்படியடா ஓட இயலும்.. மனமிரங்கி ஒரே ஒரு சொடுக்கு போடுடா"அவன் கரத்தை பற்றி கெஞ்சும் தமக்கையை பார்க்கையில் சிரிப்பு பீறிட ஒருமுறை சொடுக்கிட்டான் அடுத்த நொடி மிருளா செய்தியை படித்து கொண்டிருந்தாள் வேறு அறையில்.

வர்ணிகாவிற்கு ஆச்சர்யம் தன்னவனுக்காக நொடியில் மிருளாவின் தவிப்பு அவளுக்கு புதிதாக இருந்தது. அவளையே பார்த்து கொண்டிருந்தவன்"அந்த தவிப்பின் பெயர் உயிர் நேசம் வர்ணிகா"

"நான் தங்களிடம் விளக்கம் கேட்கவில்லை. என் வாலையே கட்டி வைத்து விட்டு வெட்டும் வாள் பயிற்சி எதற்கு இப்பொழுது"

"அதர லோகத்தின் வேந்தனின் ராணி வாள் ஏந்த தெரியாதவளாய் இருந்தால் எப்படி"..

"தெரியாதது தெரியாமல் போகட்டும்"

"அப்படியா"என்றவன் அவளிடம்

"வாள் ஏந்த கற்றுக்கொள் வர்ணிகா ஒருவேளை வாளினால் என்னை வென்றால் நீ என்ன சொன்னாலும் செய்வேன் இது அதரலோகத்தை உண்டாக்கிய கடவுளின் மீது ஆணை"

"அப்படியென்றால் கண்டிப்பாக கற்று கொள்வேன்.. கற்று உங்களை வெல்வேன்"

"ம்ம்ம் ஒருவேளை நீ தோற்றால்"

"தோற்றால்?"....

தொடரும்..

அதரா - 12


"இன்னும் எத்தனை நாள் நாம் காத்திருப்பது.. நாளுக்கு நாள் நம்முடைய பலம் மேலோங்கி நிற்கிறது நம்முடைய தொழில்நுட்ப முறைகள் எந்த லோகத்தில் உள்ளது.. இவ்வளவு உயர்ந்து நிற்கும் நம்மால் ஏன் இன்னும் இந்த அண்ட சராசரத்தை ஆள முடியவில்லை"

"மற்ற உலகங்களை நம் காலடியில் வைத்திருப்பது போல அந்த ஒரு உலகத்தை நம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர இயலவில்லை..அந்த உலகத்தின் பெயர் அதரலோகம்.. அதற்கு காரணம் அதை காக்கும் அரசன் அதரா"

"போதும் பொறுமையாய் இருந்தது இனி பொறுக்க முடியாது..இம்முறை அந்த பொக்கிஷத்தை அபகரிக்க நான் செல்கிறேன்.."

"நீயா நீ மட்டும் தனியே சென்றா.."

"ஏன் என்னை பற்றி உனக்கு தெரியாதா"

"நீ அந்த லோகத்தை ஆளுபவனை பற்றி அறியாமல் பேசுகிறாய்.இதுவரை இருந்து வந்த அதராகளில் மாவீரன் இவன்.மதி விதி இரண்டிலும் அவனை வெல்ல இயலாது. ஆனால் சதி ஒன்றில் அவனை வீழ்த்த முடியும்"

"சதியா சரி சதியும் செய்வோம் அதே வேலையில் அவனை வென்று அவன் கண்முன்னால் அந்த பொக்கிஷத்தை எடுத்து கொண்டு வருகிறேன் பார்"இயந்திரத்தால் ஆன மயான பூமியில் கரும் வானம் சூழ எங்கு திரும்பினாலும் உலோக மனிதர்களாக ஏலியன்கள் வலம் வர அங்கே பூமிக்கடியில் கூம்பு போல் இருந்து உலோக கட்டடத்தில் இன்னொரு ஏலியனின் பழுதான கண்ணை இன்னொரு ஏலியன் மின்சார கம்பியால் சரிப்படுத்தி கொண்டே சதியை செய்ய தயாராயின அவைகள். மனிதர்கள் மட்டுமில்ல ஏலியன்களும் சதி செய்கின்றன..

"அன்பரே"

"என்ன அமிர்தி ஏதோ சொல்ல வந்து மென்று விழுங்குகிறாய்.. உன் மகன் அந்த கடற்கன்னியை கொன்று விட்டானா"

"என்ன சொன்னீர்கள் யாரை பார்த்து என்ன வார்த்தை கூறுகிறீர்கள்.. இதை மட்டும் அவன் கேட்டிருந்தால்"

"கேட்டிருந்தால் என்ன எப்படி தந்தையே உண்மையை சரியாக கூறிவிட்டிரே என்று பூரித்து போவான்"

"வேண்டாம் என் கோபத்தை கிளறாதீர்கள்.பெற்ற பிள்ளையின் மேல் எத்துணை பெரிய நல்ல எண்ணம் உங்களுக்கு"

"நல்ல எண்ணம் ஏராளம் இருந்தது அதைவிட அவனை பற்றி கர்வமே கொண்டிருந்தேன் அமிர்தி அனைத்துமே சர்வ நாசமாகி விட்டது அவன் நடந்து கொண்ட முறையில்.. நமக்கும் ஒரு பெண் இருக்கிறாள் அவளை இம்மாதிரி ஒருவன் கவர்ந்து சென்று விவாகம் புரிந்திருந்தால் நீ ஏற்று கொள்வாயா"

"அன்பரே வர்ணிகா அவளாகவே தான் விவாகத்திற்கு சம்மதம் சொன்னாள் அவள் பெற்றோர் இருவருக்கும் கூட இதில் ஆனந்தமே"

"சம்மதிக்காமல் என்ன செய்வது அமிர்தி. லோகத்தை ஆளும் வேந்தனை எதிர்க்க யாருக்கு துணிவு உண்டு.. பிறகு என்ன சொன்னாய் வர்ணிகா அவளாகவே சம்மதம் கொடுத்தாளா. அவள் அவனை பழிவாங்கவே இந்த விவாகத்திற்கு தலையாட்டிருப்பாள் என்று எனக்கு தோன்றுகிறது.. நீ வேண்டுமானால் பார் வர்ணிகா அதரனை அழிக்கும் ஆயுதமாவாள்.."

"வேண்டாம் அன்பரே உங்கள் வாயால் அப்படி கூறாதிருங்கள்.. ஏற்கனவே என் இதயம் நடுங்கி கொண்டிருக்கிறது.. நீங்களும் அனர்த்தம் ஏற்படும் வார்த்தைகளை உறைக்காதீர்கள்"

"ஏன் அமிர்தி இப்படி நடுங்கி நிற்கிறாய் உன் கண்களில் கலக்கம் எதனால்"

"அன்பரே நீங்கள் அறியாததா.. நமது லோகத்திற்கு அனைத்து வல்லமையையும் அளிக்கும் பொக்கிஷத்தை காக்க அதர வம்சத்தினர் நூறு வருடத்திற்கு ஒரு முறை தங்கள் உயிரை தாங்களே அந்த பொக்கிசத்தின் முன் தியாகம் செய்வர்.இந்த வருடம் சரியாக நூறாவது வருடம்"

"ஆம் அமிர்தி அதனால் தானே அதரனிடம் சிறுவயதில் இருந்தே இதனை கூறி அவனை தயார் படுத்தி கொண்டிருக்கிறோம்."

"அது தெரியாமல் என்ன அன்பரே.. இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ளது.நூறாவது வருடத்தின் தியாக நாளுக்கு. என்ன தான் இது நமது கடமை என்றாலும் என் மகனை இன்னும் மூன்று வாரத்தில் இழந்து விடுவேன் என்ற வேதனை என்னை கொன்று போடுகிறது"

"அமிர்தி உன் வேதனை புரியாமல் என்ன.. எனக்கும் அதே நிலை தான் ஆனால் கடவுள் நமது வம்சத்தை தேர்ந்தெடுத்து பொக்கிஷத்தை காக்கும் கடமையை கொடுத்திருக்கிறார். அதனால் சுய வெறுப்பு விருப்பை விடுத்து கடமையே மேலோங்கி நிற்கிறது.இன்னும் மூன்று வாரத்தில் வர்ணிகா அவனை ஏற்று கொள்வாளா அவளால் தான் அடுத்த அதர வேந்தன் உருவாவான். ஆனால் இந்த பெண்ணோ"

"அதற்கு தானே அன்பரே அவன் மனம் கவர்ந்தவளை விவாகம் புரிந்துள்ளான் கடவுள் கிருபையால் அந்த பெண் அவனை புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் நம் வம்சம் வாரிசு அற்று போய்விடும்".. இப்படி இவர்கள் பேசுவதை தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்த வர்ணிகா கேட்க நேரிட்டது.

வாள் பயிற்சி வேண்டவே வேண்டாம் என்று அவனிடம் மல்லுக்கு நின்றவள் வேறு வழியே இல்லாமல் அவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை அது வேறு விஷயம்..தலை விதியை நொந்து கொண்டு நடந்து கொண்டிருந்தவள் அதரனின் பெயர் ஒரு அறையில் ஒலிக்க அதுவும் அவள் பெயரும் சேர்ந்து ஒலிக்க பெரிய சாளரத்தின் பின் மறைந்து நின்றவளுக்கு கிடைத்தது இன்னும் மூன்று வாரத்தில் அதரன் இறக்க போகிறான். அதாவது அவள் கணவன் இறக்க போகிறான் எனும் செய்தி.

எப்படி நடந்து தோட்டத்திற்கு வந்தால் என்று அவளுக்கே புரியவில்லை ஆனால் அவள் கால்கள் அவளை தோட்டத்தில் நிறுத்திருந்தது.பறந்து விரிந்த நீல புல் தரையில் அவளின் பாதம் பதிய ஒவ்வொரு அடிக்கும் புற்களில் இருந்து வெள்ளி மினுக்கும் துகள்கள் பறந்தது. அவள் எப்பொழுது கரைக்கு வந்தாலும் இம்மாதிரி புற்களின் மீது நடந்து பார்ப்பாள். அவளின் ஒவ்வொரு அடிக்கும் புற்களில் இருந்து பறக்கும் வெள்ளி துகள்களை காணும் போதும் அப்படி ஒரு பரவசம் தோன்றும் அவளுக்கு. ஆனால் இங்கே வந்ததில் இருந்து அந்த பரவசத்தை காணவில்லை. நேற்று இரவில் அதரன் அவளுடன் உறங்க வரவில்லை. ஏதோ முக்கிய வேலை இருப்பதாக வருணனுடன் கிளம்பிருந்தான். போகும் முன் அவளை காண வந்திருந்தான்.

அவளோ தன்னுடைய வாலை குளத்தில் மிதக்க விட்டு குளத்தின் ஓரத்தில் அமர்ந்திருந்தாள். நினைவுகள் எங்கேயோ இருந்தது. அவன் வந்த அரவத்தை கூட உணரவில்லை. "கோட்டைக்கு சொந்தக்காரிக்கு இன்னும் எந்த கோட்டையை பிடிக்க இந்த யோசனை".. அவனின் குரல் கேட்ட பிறகும் திரும்பி பாராமல் அமைதியாக இருக்க

"வர்ணிகா என்னாயிற்று இந்நேரம் என் குரல் கேட்டதற்கு கோடி முறை என்னை கரித்து கொட்டிருப்பாயே.. இன்று மௌனம் ஏனம்மா.. ஒருவேளை வாயில் புண் வந்து விட்டதா. புண்ணாகும் அளவுக்கு நான் எதுவும் செய்யவில்லையே"

"ஐயோ போதும் நிறுத்துங்கள் உங்கள் பிதற்றலை. பைத்தியத்தை போல உங்கள் பிதற்றலை கேட்க எனக்கு நேரமில்லை. என்னை சிறிது நேரமாவது தனியே விட மாட்டிர்களா.எதுக்கு மணிக்கொரு முறை என்னை தொந்தரவு செய்கிறீர்கள். இந்த என்ன எங்கள் கடலா கண்டு பிடிக்க சிரமப்பட.. இந்த கோட்டையில் எங்கே சுற்றினாலும் உங்களின் கண்களில் இருந்து தப்ப முடியுமா.பின் எதற்கையா நான் என்ன செய்கிறேன் எங்கு இருக்கிறேன் முதல் கொண்டு இருக்கிறேனா இல்லை ஓடி விட்டேனா என்று மணிக்கொரு முறை உங்கள் முகத்தை என்னிடம் காட்டுகின்றிர்கள்"

"நீ மேகங்களின் ஊடே மறைந்திருந்தாலும் தென்றலாய் உன்னை தீண்டி அணைத்து கொள்வேன் மீனம்மா. கடலில் உன்னை தேடுவதா கடினம்.மணிக்கொரு முறையல்ல நொடிக்கு நொடி உன் வாசத்தை நுகர்ந்து வெறுப்பை கக்கும் கண்களின் விழுந்து சாம்பலாக ஆசையாக இருக்கிறது ஆனால் என்ன செய்ய நான் வேந்தனாகி போனேனே இதுவே சாமானியனாக இருந்திருந்தால் என் வர்ணிகாவை விட்டு நொடியும் நகர்வேனா.. சரி அது போகட்டும்.வர்ணிகா இன்று நீ மட்டுமே நிம்மதியாக உறக்கம் கொள்ளலாம் என் இம்சை இன்றி எனக்கு வேறு ஒரு வேலை உள்ளது.. ஆனால் மறக்காமல் நாளை வாள் பயிற்சிக்கு சென்று விடு உனக்கு கற்று தரும் ஆசான் கோபத்தில் பொல்லாதவர்.

அவர் சொல்வதை கேட்கவில்லை என்றால் கை கூட நீட்டி விடுவார்.. என்ன அப்படி பார்க்கிறாய் வேந்தனின் மனைவியை கூட அடிக்க முடியுமா என்றா.. முடியும் மீனம்மா ஏனெனில் அவர் எனக்கே ஆசனயிர்றே.. குருவை கோபப்படுத்ததே நேரத்திற்கு சென்று விடு..இன்னொன்று மீனம்மா இதை உன் கணவனாக கூறவில்லை அதராவின் வேந்தனாக சொல்கிறேன் நான் வரட்டுமா"என்றவனை திரும்பியும் பாராமல் அமர்ந்திருந்தவளை பின்னிருந்து அணைத்து கழுத்தில் ஆழமான இதழ் ஒற்றல் ஒன்றை சிந்தி விட்டு சிரித்து கொண்டே ஓடி விட்டான்.

அவன் இம்சை இல்லாமல் தூங்கலாம் என்றாலோ நேற்று பார்த்து தூக்கம் சதி செய்தது. அவனும் இம்சை அவன் கோட்டையில் துயில் கொள்வது அதைவிட இம்சை என்று நினைத்து கொண்டே விழித்து கிடந்தவள் காலையில் எழுந்ததில் இருந்து நான் எதற்கு வாள் பயிற்சிக்கு செல்லவேண்டுமென நினைத்தாள் ஆனால் ஏதோ ஒன்று அவளை ஊந்தி தள்ள வேறுவழியில்லாமல் தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தாள். அப்பொழுது காதில் விழுந்தது தான் அதரனின் விஷயம்.

அவனிடமிருந்து விடுதலை என்னை என்ன பாடு படுத்தினான் எவ்வளவு கெஞ்சி கதறினேன் கொஞ்சமாவது செவி கொடுத்தானா இறுமாப்பு பிடித்தவன்..கர்வம் கொண்டவன்.. நன்றாக வேண்டும் செத்து தொலையட்டும் வேந்தனாம் வேந்தன் மூஞ்சியும் மொகரையும் பார் சும்மாவே காண சகியாது முகம் அதில் நமட்டு சிரிப்பு வேறு கேடு அவனுக்கு.. இப்படியாக அவள் உதடுகள் வசைபாட உள்ளமோ ஏதோ இனம் புரியாத துன்பத்தில் உழன்றது. ஒரு வலி அவளால் அதை என்னவென்று விவரிக்க இயலவில்லை. மனம் முழுவதும் பாரமாக தொண்டை அடைத்து பெரும் அழுகைக்கு தயாராக இருந்தபோதிலும் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை.

மனதின் பாரம் உடலெங்கும் வியாபிக்க அப்படியே புற்தரையில் அமர்ந்து விட்டாள்.அவள் சிந்தை முழுதும் ஒரே கேள்வி ஏன் அவனை காண ஆவல் கொண்டேன் அந்த நாசமாய் போன ஆவல் தானே என் ஆவியை இங்கே கொண்டு வந்து நிறுத்தி விட்டது.. தேவைதானா இது விவாகம் முடிந்து முப்பது நாட்களுக்குள் இறக்க இருப்பவன் எதனால் என் வாழ்வை வீணாக்கினான். அவனுக்குமே தெரியும் அல்லவா பிறகு ஏன் முப்பது நாள் எனக்கு கெடு வேறு கொடுத்தானே..

"என்ன கடல் கன்னி கால்கள் வலிகிறதோ.. புற்தரையில் பூங்கோடி அமர்ந்திருப்பதன் காரணம் என்னவோ"..

"தாங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்.. இது வாள் பயிற்சிக்கான நேரம் தாங்கள் இங்கிருந்தால் நான் பயிற்சி மேற்கொள்ள மாட்டேன்"

"ஆஹான் குருவிடமே இம்மாதிரி குரலை உயர்த்தி பேசலாமோ மகளே பிறகு சாபம் கொடுத்தால் குருவை கோபித்து பயனில்லை"

"என்ன குரு தாங்களா"

"ஆம் நானே தான் உன் குரு அதரநதின்.."

"உங்களிடம் நான் பயிற்சி பெற மாட்டேன்.. எனக்கு இந்த வாள் பயிற்சியே தேவையில்லாத ஒன்று உங்கள் தொல்லை தாங்க முடியாமல் தான் வேறு வழியின்றி ஒப்பு கொண்டேன்.. இப்பொழுது குருவே நீங்கள் என்றால்"

"என்றால் இந்த வாள் பயிற்சியே தேவையில்லை.. நகருங்கள்"அவள் அவனை தாண்டி செல்ல கனமான வாள் ஒன்று அவள் கூந்தல் நுனியை அழகாய் வெட்டியது.வர்ணிகா அப்படியே நின்று விட

"பெண்ணே உன் அனைத்து சிறுபிள்ளை தனத்திற்கும் தாளம் போடுவேன் என்று எண்ணிடாதே.. என்னிடம் பேசும் போது நான் சொல்வதை கேட்க்காமலோ அன்றி செய்யாமலோ யாரும் செல்ல கூடாது.. மீறி சென்றால்"இதோ வாழ்வின் முதல் தடவை அவன் கண்களில் மெய்யான சீற்றத்தை காண்கிறாள் வர்ணிகா. இதுவரை அவளுள் இருந்த அசட்டு துணிச்சல் சென்ற இடம் தெரியவில்லை. அவள் முன் நிற்பவன் காதலன் அல்ல இத்தேசத்தின் காவலன்.அவனுக்கு என்னவோ போல் ஆயிற்று அவளின் சிறுபிள்ளை தனமான கோபத்தில் கூட ரசனையை தேடுபவன் இன்று தன்னை அவமதித்து செல்பவளிடம் சற்று கடுமையாக தான் பேசி விட்டானோ..

இருந்தாலும் என்ன பேசுவோமே.. அவள் கொஞ்சினால் குழையும் குழந்தையல்ல கெஞ்சினாள் மசியும் கிழவியும் அல்ல அவள் கொஞ்சினால் குரல்வளையை கடித்து குதறும் ராட்சசி கெஞ்சினாள் கபாலத்தை உடைத்து மாலையாக கழுத்தில் போட்டு கொள்ளும் யட்சினி.. அவளிடம் இந்த அணுகுமுறை தான் சரி என்று நினைத்தவன்"வர்ணிகா உன்னுடன் வார்த்தையாடி நேரத்தை கடக்க எனக்கு பிரியமில்லை..இப்பொழுது நீ வாள் பயிற்சி மேற்கொள்ள போகிறாய் புரிகிறதா.. ம்ம் என்ன வஸ்திரம் இது"

பிரம்மை தெளிந்தவள்"என் வஸ்திரத்திற்கு என்ன குறை"

"குறை தான் நிமிர்ந்து நின்று என்னை பித்தனாகும் நெஞ்சம் இரண்டும் ஒரு சிறிய சிவப்பு வஸ்திரத்தின் உள்ளே மறைக்கப்பட்டு விடுமா என்ன.. அல்ல வாள் பயிற்சி வேகமாக செய்யும் போது ஏறி இறங்கும் நெஞ்சமத்தில் என் சிந்தையெல்லாம் தஞ்சம் கொள்ளாதோ"

"தாங்கள் என்ன சொல்கிறீர்கள் சற்று சத்தமாக தான் கூறுங்களேன்"இதுவரை வாய்க்குள் பேசிகொண்டவன்

"ஆஆ அது ஒன்றுமில்லை வர்ணிகா பயிற்சியின் போது எதாவது காயம் ஏற்பட்டு விடுமென சொல்லி கொண்டிருந்தேன்.. நீ இரு இப்பொழுதே உன் ஆடையை மாற்றுகிறேன் இல்லையேல் எனக்கு காயம் பட்டு விடும்"

"பயிற்சியற்றவள் நான் காயம் என்மேல் அல்லவா பட வேண்டும் உங்கள் மேல் எப்படி"

ரொம்ப அவசியம் இது மனதிற்குள் நினைத்தவன்"உன் மேல் காயம் பட்டால் என் இதயத்தில் கோடி முறை வாள்கொண்டு அறுத்த வலி உணர்வேன் வர்ணிகா".. பேசிக்கொண்டே அவளது வஸ்திரத்தை காற்றில் கை வீசி மாற செய்தான். பாதுகாப்பு கவசம் அவள் மனதை மட்டுமல்ல இவன் மனதையும் சேர்த்து பாதுகாத்தது.வர்ணிகாவிடம் ஒரு வாளை கொடுத்து அவள் பின்னிருந்து அவள் இடது கையை இவன் இடது கையால் பிடித்து அவளது வயிற்றின் மேல் வைத்து கொண்டு வலது கையால் அவள் வலது கையை பிடித்து வளைத்து வளைத்து காற்றில் வாள் கொண்டு கிழிக்க வர்ணிகாவிற்கு உற்சாகம் பீறிட்டது.

வாள் பயிற்சி மேல் ஆசை கொள்ளாத அவளே அவ்வளவு ஆசையாக கற்று கொண்டாள். ஆனாலும் மனதின் உள்ளே ஒரு குரல் இன்னும் மூன்று வாரத்திற்கு பின் இப்படி பின்னிருந்து அணைக்கும் வலிய கரம் இருக்கதல்லவா.. அந்த குரல் கேட்டப்பின் அவள் உற்சாகம் போன இடம் தெரியவில்லை.

அவள் கரம் வேகம் இல்லாமல் இருப்பதை உணர்ந்தவன்"உனக்கு போதுமான பயிற்சி அளித்து விட்டேன் எங்கே என்னுடன் சண்டைக்கு வா"

"ஆஹ் இல்லை நான் இப்பொழுது தான் வாளை பிடித்து இரண்டு சுற்று சுற்றிருக்கிறேன் அதுவும் நானாய் சுற்ற வில்லை தாங்கள் சுற்ற வைத்தீர்கள்.. அப்படியிருக்க எப்படி சண்டை செய்வது உங்களோடு"

"இதோ இப்படி தான்"என அவளின் வாளை அவளிடமே தூக்கி போட அவள் சரியாக பிடித்து விட அடுத்த நொடியே அவனுடைய வாள் அவள் வாளை உரசியது."இதோ பாருங்கள் எனக்கு எதுவும் தெரியாத நிலையில் உங்களை காயப்படுத்த போகிறேன் பாருங்கள்"

"நீ ஏற்கனவே முதல்நாள் இரவன்று காயம் படுத்தி விட்டாயே அதையே தாங்கி கொண்டேன் இதை தாங்க மாட்டேனா.. உனக்கு இது ஒரு வாய்ப்பு தானே நன்றாக என்னை வாளால் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து உன் ஆத்திரத்தை தீர்த்து கொள் வர்ணிகா"

வர்ணிகா வேண்டாம் வேண்டாம் என்று கதறி கொண்டிருக்க அவனோ வாளை வீசி கொண்டே இருந்தான். அவளும் வேறுவழியின்றி வாளை தடுக்கிறேன் பேர்வழி என்று தடுத்து வீசத்தெரியாமல் வீசி அவனை வரி குதிரை போல ஆக்கி கொண்டிருந்தாள். அவன் நினைத்திருந்தால் அவளையே இல்லாமல் ஆக்கிருபான் ஆனால் அவனுக்கு இந்த தழும்புகள் வேண்டும். அவள் கரத்தால் கொடுக்கும் வலிகள் வேண்டும் அதனால் சிரித்து கொண்டு அவளின் வீச்சை எதிர்கொண்டான்.

அவளுக்கு தான் ஐயோ என்றிருந்தது. வியர்த்து விறுவிறுத்து நெற்றியில் இருந்து உருண்டு வந்த வியர்வை துளியொன்று அவள் கண்ணிமையின் மேல் சற்று நேரம் ஓய்வெடுத்து கீழே வழிய கண் உறுத்தல் தாங்க இயலாமல் கண்ணை மூடி கொண்டே ஒரே வீச்சு அதரனின் ஸ்ஸ்ஸ் என்ற குரலில் கண்ணை கசக்கி விட்டு நிமிர அவனது தாடையில் லேசாக ஒரு கோடு. அவ்வளவு தான் வாளை அப்படியே போட்டு விட்டு அவனை நெருங்கி

"நான் தலைப்பாடாக அடித்து கொண்டேனே கேட்டிர்களா.. இப்பொழுது பாருங்கள் வரிக்குதிரைக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உடலெங்கும் குருதி பெருகெடுத்து ஓடுகிறது இதில் ஏற்கனவே உங்கள் முகம் காண சகியாது இந்த அழகில் அந்த முகத்தில் கோடு வேறு விழுந்து விட்டதே.. ஐயோ எவ்வளவு உதிரம். ஒரு பெண்ணை எதிர்கொள்ள முடியவில்லை அதுவும் முதல் தடவை வாளை தொட்டு பழகும் என்னிடம் வெட்கமாக இல்லை நீங்களெல்லாம் என்ன வேந்தன்.. வாருங்கள் இப்படி அமருங்கள்"அவனை இழுத்து கொண்டு குளக்கரையில் அருகே வந்தவள் அவனை கீழே தள்ளி விட்டு அவளும் அரக்க பறக்க அமர்ந்து குளத்து நீரை அள்ளி அவன் உதிரத்தை கழுவினாள்.

கழுவ கழுவ உதிரம் நின்றபாடில்லை. என்ன செய்வதென்று ஒரு நிமிடம் புரியவில்லை."என்னை சொடுக்கிட்டு மருத்துவ கூடத்திற்கு அனுப்பி வையுங்களேன்"

"ஹாஹாஹா எதற்கடி"

"உங்களுக்கு மருந்து வாங்கி வரத்தான்"

"அதெல்லாம் முடியாது என்னால் மந்திரத்தை உச்சரிக்க இயலவில்லை தாடையில் வெட்டு ஆழமாக விழுந்து விட்டது அதனால் நாவை உபயோகிக்க இயலவில்லை'

"தாடையில் வெட்டு விழுந்ததற்கு நாவை உபயோகிக்க இயலவில்லையா பரிகாசம் செய்யாதீர்கள் இருங்கள் எங்கேயும் சென்று விடாதீர்கள் நான் வருகிறேன்.."அவள் எழுந்து ஓட அவளுக்கு முன்பாக அதரனின் வாள் சுழன்று வந்து அவள் கண்ணிமையில் சொட்ட காத்திருக்கும் வியர்வை துளியை ஒரே சீவாய் சீவி சுழன்று சென்று அதரன் கரத்தில் அமர்ந்து கொள்ள வர்ணிகா பயத்தில் அப்படியே நின்று விட்டாள்.

அவளின் அதிர்ச்சி புரிந்து அவளை இழுத்து மார்பில் சாய்த்து கொண்டவன்"இந்த வியர்வை துளிதானே என் வர்ணிகா விழியை உறுத்தியது"என வாளில் லேசாக வழிந்திருந்த வியர்வை துளியை கர்வமாய் பார்க்க

"ஏன் என்னிடம்"

"என்ன"

"ப்ச் அபரிமிதமான வாள் வீசும் திறமை கொண்ட தாங்கள் என்னிடம் ஏன் இம்மாதிரி வெட்டு வாங்கி நிற்கிறீர்கள்"

"அன்று நீ கழுத்தில் கொடுத்த தழும்பு எனக்கு போதவில்லை அதன் சுகம் என் மேனியெங்கும் வேண்டுமென்று தான் இம்மாதிரி செய்தேன். நான் இறக்கும் நேரத்தில் கூட என் ஆத்மா ஆவியாய் வெளியேறும் போது கூட என் மீனம்மா கொடுத்த தழும்போடு தான் செல்லும்"அவள் கால்கள் நடுங்க தொடங்க அவளின் நிலை உணர்ந்தவன் அவளை அப்படியே தூக்கி குளத்தில் இறங்கினான்.

கால்கள் மறைந்து வாலாக மாற அவளின் கவச உடை அவளுக்கு அசோகாரியமாக இருக்கும் என்பதை உணர்ந்தவன் அந்த ஆடைகளை மறைய செய்தான் அவளை கழுத்து வரை தண்ணீரில் நிறுத்தி. உடனே வேறு உடை தரிவிக்காமல் அவளை வெற்று மேனியோடு இறுக்கி அணைத்து கொண்டு இதழில் இதழ் பதித்து"பெண்மையின் மென்மை அறிய ஆவல் தான் ஆனால் அதைவிட அந்த மென்மையின் மத்தியில் புதைந்திருக்கும் ஆழ மனதில் இடம் பிடிக்க அதைவிட ஆசை. என் ஆசை நிறைவேறுமா மீனம்மா"

அவள் என்ன சொல்லுவாள்..அவனின் உதிரம் குளத்து நீரில் கலப்பதை கையாலாகாத தனத்தோடு பார்த்து கொண்டிருப்பதை தவிர..

தொடரும்.

அதரா - 13


தன் முகத்தையே தண்ணீரில் பார்த்து கொண்டிருந்த வர்ணிகா கண்களும் இதயமும் ஒருங்கே கலங்கி தவித்தது.
போதும் இதற்கு மேல் அவளால் முடியாது. அவளின் போலி முகத்திரை கிழித்து எறியப்படும் நேரம் நெருங்கி விட்டது.காரிகை அவள் கதறியலுகிறாள் காயப்பட்ட இதயத்தின் மேல் கரத்தை வைத்து அழுத்தி..

வினாடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் மணிகளாக மாறி மணிகள் நாட்களாக ஓட தொடங்க வர்ணிகாவின் இதயம் படபடத்தது.ஏன் எதனால் எதற்கு இப்படி அவளையே முட்டி மோதி கேள்வி கேட்டு பார்த்து விட்டாள் எந்த கோணத்தில் கேட்டு பார்த்தாலும் கேள்விக்கு என்னவோ ஒன்று தான் அந்த பதில் .... பதில்.... பதில்.... வர்ணிகா அதரனை நேசிக்கிறாள் என்பது தான். அவளுக்குமே அதிர்ச்சியே ஆனால் அவளே அவளை கேட்டு உணர்ந்து கொண்ட உண்மை அது.

அவளிடமே அவள் உண்மையை மறைக்க விரும்பவில்லை.அவளுக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்து அவள் காதில் விழும் பெயர் அதரன் அந்த லோகத்தின் வேந்தன் இதுவரை இருந்த அதராக்களில் திறமை மிக்கவன் மாவீரன்.அப்படிப்பட்டவனின் உருவம் எப்படி இருக்குமென அவள் பலமுறை நினைத்து பார்த்ததுண்டு. பறவைகளும் கொக்கு நாரைகளும் மீன்களிடம் சொல்லும் செய்தியை இவளும் காதில் வாங்கி கொள்வாள்.

அப்படி வாங்கியதன் பலனே அவனை காண ஆவல் அதும் சாதாரண ஆவலா பேராவல் கொண்டு அல்லவா அவனிடம் மாட்டி கொண்டாள்.இதோ இன்று தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தை கண்டு தனக்கு தானே வலியுடன் சிரித்து கொண்டிருக்கிறாள் எதனால் அவளே எதிர்பாராமல் அதரன் வாழ்வில் அவள் நுழைந்து விட்டதை எண்ணி. ஆம் அவள் அதரனை காண ஆவல் கொண்டது வெறும் வேந்தனை காணும் ஆவல் மட்டுமல்ல சிறுவயதில் இருந்தே அவளுள் உருவான அவன் மீதான ஒருவித ஈர்ப்பே காரணம்.

முதலில் அவளுக்கு அவன் நடந்து கொண்ட விதத்தில் பயமும் வேதனையும் சேர்ந்தே வந்தது.இவனை காணவா ஆவல் கொண்டோம் என்று எண்ணி வாடினாள் அவன் மேல் ஆத்திரம் கொண்டாள்.ஆனால் அந்த ஒரே நாளிலே அவன் அவள் மீது வைத்திருந்த காதல் அவளுக்கு புரிந்தது. முப்பது நாள் அவன் கெடு கொடுத்திருக்க அவனை உடனே விவாகம் செய்ய என்ன பண்ணலாம் என்று சிந்தித்து கொண்டிருந்தவளை சீண்டி புத்திசாலித்தனமாக தன்னை மணக்க வைத்ததாக அதரன் நினைத்து கொண்டிருந்தான்.

ஆனால் வல்லவனுக்கு வல்லவன் போல் அதி புத்திசாலியான அவனுக்கும் அதி அதி புத்திசாலி தனமாக அவனை வைத்தே மனம் கவர்ந்தவனை மணந்து கொண்டாள் வர்ணிகா.முதல் இரவு நாளன்று அவனிடம் கடுமையாக நடந்து கொண்டதும் அவனை பார்க்கும் நேரமெல்லாம் விஷ நாகமென நாவால் கொத்தியது எல்லாமே அவன் காதலின் ஆழத்தை சோதிக்கவே.அவளின் பிடிவாதத்தை எந்த அளவுக்கு அவன் தாங்குகிறான் என பார்ப்பதற்கே தேவையில்லாமல் விதண்டாவாதம் செய்தாள். பிடிக்காத விவாகம் என அனைவரின் முன்பும் காட்டி கொண்டாள்.

இவ்வளவும் செய்தவளுக்கு ஒரு உண்மை ஒன்று தெரியாமல் போனது விதியா வினையா?அவன் இறக்க போகிறான்.அதாவது அவனே தனது இன்னுயிரை தியாகம் செய்ய போகிறான்.ஏன் எதனால் எதற்கு இந்த மூன்று கேள்விகளுமே இப்பொழுது வேறு தொனியில் ஒலிக்கிறது. ஏன் அவன் பற்றிய செய்திகளை என் மனக்கூட்டில் சேமித்தேன்.. எதனால் அவன் மேல் அளவில்லா நேசத்தை வைத்தேன்.. எதற்கு அவனுக்கு காதல் ஆசையை அதும் என்மேல் அந்த ஆண்டவன் உண்டாக்க வேண்டும்..

இப்படி இந்த மூன்று கேள்விகளின் தொனியும் மாறி ஒலித்தது அவள் இதயத்தில்.அவள் கொடுத்த தழும்புகளை தன் மேனியெங்கிலும் என்னோவோ வீர பதக்கம் போல ஏந்தி கொண்டு சிரித்தானே ஒரு சிரிப்பு அதில் அல்லவோ அவள் போலி முகமூடி விரிசல் விழுந்து சில்லு சில்லாய் சிதறி போயிற்று.தன் மனதை சொன்னால் அவன் என்ன சொல்வான் ஏற்று கொள்வானா அல்ல வேண்டுமென்றே அவனை அவமானப்படுத்தியதை நினைவில் வைத்து புறம் தள்ளி விடுவானா.ஐயோ என்ன செய்வேன் நான் எப்படி அவன் உயிர் தியாகத்தை தடுத்து நிறுத்துவேன். என் காதலை அவனிடம் வெளிப்படுத்துவேன்..

கேள்விகள் ஒன்றென்ன இரண்டென்ன ஆயிரம் லட்சம் கோடி கணக்கில் வந்து கொண்டே இருக்கும் ஆனால் பதில் ஒன்று கூட இல்லையே. திடீரென ஏதோ ஒன்று மின்னலாக உள்ளே பளிச்சிட குளத்தில் இருந்து எழுந்தவள் வேகமாக ஓடினாள். தன் முன்னே மூச்சிரைக்க நின்று கொண்டிருந்த வர்ணிகாவை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்தான் வருணன்.

"வர்ணிகா ஏனம்மா இந்த ஓட்டம் ஓடுகிறாய்..அதும் என்னை காண ஓடோடி வந்ததின் நோக்கம் என்னை திட்டி தீர்க்கவா அல்ல உன் மன்னவனின் மேலுள்ள கோபத்தில் என்னை குனிய வைத்து முதுகில் குமுறவா"

"இல்.. லை அ.. து நா.. ன்"

"இரும்மா இரு சற்று பொறுத்து நன்றாக மூச்செடுத்து சொல்.. அரக்க பறக்க ஓடிவந்து சொல்லும் அளவிற்கு என்ன செய்தியென்று தெரியவில்லையே ஒருவேளை பிசாசு எதாவது துரத்துகிறதா.. வர்ணிகா அதரன் எங்கேயம்மா"அவள் தெரியவில்லையென மூச்சிரைக்க கைகளை விரிக்க

"அப்பொழுது எப்படி பிசாசு துரத்திற்கும்.. துரத்த வேண்டிய மருமகன் எங்கேயென தெரியவில்லையே"..அவன் கூற்றை கேட்டு முறைத்த வர்ணிகா

"நான் முதலில் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்..அன்று மரியாதை இல்லாமல் பேசி உங்களை காயப்படுத்தி விட்டேன்.. தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள்"

"மன்னிப்பு கேட்கும் அளவிற்கு நான் மானமுள்ளவன் இல்லையம்மா. அதும் அதரன் என்று வந்தால் நான் உயிரை கூட பார்க்க மாட்டேன் இதில் மானமென்ன மரியாதையென்ன.. ஆமாம் என்ன திடீர் ஞானோதயம் எப்படி வந்தது இந்த மன்னிப்பு கேட்கும் குணம்"

"அது பிறவியில் இருந்தே இருக்கிறது. சேனாதிபதி இந்த உப்பில்லாத ஆராய்ச்சியை விட்டொழித்து விட்டு நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும் தாங்கள்"

"கேள்வியை கேள்ளம்மா.. முடிந்தால் நிச்சயமாய் பதில் சொல்கிறேன்"

"அது நம் வேந்தன் இன்னும் மூன்று வாரத்தில் உயிர் தியாகம் செய்ய உள்ளாரா"பட்டென்று கேட்டே விட்டாள்.வருணன் அவள் வந்ததில் இருந்தே இயல்பாக பேசினாலும் உள்ளத்தில் கேள்விகள் ஏராளம் இருந்து கொண்டே வர அவள் இப்படி கேட்டதும் அதிர்ந்தே போனான்.

"வர்ணிகா உன்னிடம் யார் இதை பற்றி கூறியது"

"யாரும் கூறவில்லை நான்.. நான் வேறெருவர் பேசி கொண்டிருந்ததை கேட்கும் படி ஆயிற்று"என்றவள் நடந்ததை சொல்லி முடிக்க

"ஒட்டு கேட்டிருக்கிறாய் இதில் மழுப்பல் வேறு.. நீ ஒட்டு கேட்ட விஷயம் உண்மையே நம் வேந்தன் இன்னும் மூன்று வாரத்தில் உயிர் தியாகம் செய்ய உள்ளார்.அவர் அம்மாதிரி செய்வது உனக்கு நல்லது தானே பெண்ணே சொல்லப்போனால் ஒரே கும்மாளமாக இருக்குமே"வருணின் கேள்வியில் சடாரென்று நிமிர்ந்து அவன் முகம் நோக்கியவளின் கண்களை கண்டவன் பேச்சை நிறுத்தி கொண்டான். அந்த கண்களில் தெரியும் வேதனை அதரனுக்காகவா.. அவன் மடிந்தால் இவளுக்கு ஒருவகை விடுதலை தானே பின் ஏன் இந்த வேதனை..

"சேனாதிபதி உங்கள் காலில் கூட விழுகிறேன் தயை கூர்ந்து இம்மாதிரி கொல்லும் வார்த்தைகளை இனியும் உபயோகிக்காதீர்கள்..என்னால் தாங்க இயலாது. இப்பொழுது நான் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு தவறாகவும் நடிப்பாகவும் தோன்றும் அதனால் நான் ஏதும் கூற போவதில்லை. இன்னும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் கூறிவிடுங்கள். நம் வேந்தனுக்கு பதிலாக அவரின் தந்தை உயிர் தியாகம் செய்ய முடியாதா"

"என் தமக்கை அமங்கலியாவதில் உனக்கேனம்மா இத்துணை ஆர்வம்"

"ஐயோ அப்படியில்லை.. வேந்தனின் தந்தை வாழ்வை வாழ்ந்து முடித்தவர். பேர குழந்தையின் வரவுக்காக காத்திருப்பவர் ஆனால் இவரோ இன்னும் வாழ்வை தொடங்காதவர். சந்ததி காணாதவர் அதிலும் நான் விவாகம் முடிந்து முப்பதே நாட்களில் அமங்கலியாக வேண்டுமா.. கடற்கன்னி என்றாலும் எங்களுக்கு மனதும் உணர்வும் இல்லையா"

"வர்ணிகா உன் இதழ்கள் எதையோ மறைத்து பாதி உண்மையை மட்டுமே பரிதவிப்பாக என்னிடம் பேசி கொண்டிருக்கிறது. எனக்கு உன் கேள்விகள் புரிகிறதோ இல்லையோ உன் தவிப்பு புரிகிறதம்மா.. அவன் மேல் உனக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம் ஆனால் கொண்டவனை இழக்க போகும் துயரம் உன்னுள் எழுகிறது. உன் அனைத்து கேள்விக்கான பதில் ஒரே ஒருவனிடம் உள்ளது அவன் உன் கணவன் அவனிடம் கேள் தக்க பதில் கிடைக்கும்"

"அவரா அவர் தற்பொழுது எங்கு உள்ளார்"

"தெரியவில்லை வர்ணிகா அதரன் இப்படி தான் அவன் எங்கிருக்கிறான் என்ன செய்கிறான் என யாருக்குமே தெரியாது மாயாவி அவன். திடீரென வந்து நிற்பான் கண் மூடி திறப்பதற்குள் மறைந்து போவான். அவன் இங்கு வந்தால் நீ தேடுகிறாய் என்று சொல்கிறேன் சரியா"வருணின் பதிலில் சோர்வுற்ற வர்ணிகா கனத்த இதயத்தோடு திரும்பி செல்ல எத்தனிக்க

"ஒரு நிமிடம் வர்ணிகா நான் இதை சொல்ல கூடாது ஆனாலும் அதரனுக்காக சொல்கிறேன். அவன் எதையுமே ஆசை பட்டதில்லை வர்ணிகா கேட்கும் முன் கிடைத்து விடுவதாலோ என்னவோ அவன் இதுவரை எதையுமே கேட்டதில்லை. யாரிடமும் தலைகுனிந்து அவமானபட்டதும் இல்லை. இவ்வளவு ஏன் அவன் முன் நின்று பேசவே நடுங்கும் ஆட்களின் மத்தியில் அவனை கேள்வி கேட்க துணிவது யார்.. அப்படிப்பட்டவன் உன் விடயத்தில் நடந்து கொண்டது என்னவோ தவறுதான். ஆனாலும் அவன் அன்பு பொய்யில்லை.

உன்னை கண்டவுடன் பித்தாகி போனான் உன்னை விட்டு தனித்து வரவும் திராணியற்று விருப்பமில்லாதவளை கவர்ந்து வந்தான் சூழ்ச்சி செய்து உன் வாயாலே விவாகத்திற்கு சம்மதம் சொல்ல வைத்தான் விவாகம் முடிந்து இத்தனை நாட்களில் உன் நிழலை தொட்டே இன்பம் கொள்கிறான். இதெல்லாம் ஏன்னென்றால் அவன் உன் மேல் கொண்ட நேசம். அவனை புரிந்து கொண்டு அவன் வாழப்போகும் நாட்களில் அவனுக்கு வாழ்வை பரிசாக தந்து விடு வர்ணிகா. ஆனால் ஒன்று அவன் மரணிக்க போவதால் பரிதாபம் கொண்டு அவனை ஏற்று கொள்ளாதே அது அவனுக்கும் அவமானம் உன் பெண்மைக்கும் இழுக்கு"

"இவ்வளவு பேசுகிறீரே அவர் மரணிப்பதை எவ்வாறு இம்மாதிரி சுலபமாக ஏற்று கொண்டிராம் தாம்"

"வேறு என்ன செய்வது வர்ணிகா அவனுடனே சேர்ந்து மரணிக்க சொல்கிறாயா அதனால் பலன் என்னவோ.. எங்கள் வம்சத்தில் இது ஒரு வழக்கம் அனைவருக்குமே இந்த பாக்கியம் வாய்க்காது.தேர்ந்தெடுக்க பட்டவர்களுக்கு மட்டுமே அந்த பொக்கிஷம் உயிர் தியாகத்தை ஏற்று கொள்ளும்.. அதரன் பிறந்ததில் இருந்தே இதற்கு தயாராக உள்ளான். அவனோடே நாங்களும் தயாராக உள்ளோம். அதர நதின் இறக்கலாம் ஆனால் எங்கள் அதரா வம்சம் இறக்காது.வேரூன்றி வளர்ந்து கொண்டே இருக்கும் எப்போதும்"..அதற்கு மேல் வர்ணிகாவின் கால்கள் நடுங்க தொடங்க அவள் வருணனிடம் நின்று பேசிக்கொண்டிருக்கவில்லை.

தங்களது அறை நோக்கி ஓட தொடங்கியிருந்தாள். அவளால் கண்ணீரை அடக்கவே இயலவில்லை. உப்பு நீரில் சந்தோசமாக நீந்தியவளுக்கு கண்களில் இருந்து திரண்டு உருண்டு வரும் உப்பு நீர் உதட்டில் பட்டதும் வேதனை பன்மடங்காக பெருகியது. வர்ணிகா இப்போது தன் காதலுக்காக அழவில்லை. தன்னை இவ்வளவு நேசிக்கும் ஒருவன் மரணத்தின் போது எத்துணை தூரம் பிரிவின் வலியை அனுபவிப்பான். அந்த வலியை அவனுக்கு கொடுக்க இருப்பவள் அவளல்லவா. அவனின் வேதனை நினைத்தே இவள் வாடினாள்.

எப்படியாவது அவன் உயிர் தியாகம் செய்வதை தடுக்க யோசித்தாள். அவளின் அதரன் வாழ வேண்டும். அவன் நேசிக்கும் அவனது வர்ணிக்காவுடன் வாழ வேண்டும். அவள் செய்யபோகும் காரியத்தால் அவனின் கோபத்திற்கு ஆளாகி தன் கால்களை இழந்து நூறு வருடத்திற்கு சிலையாகி போக போகிறாள் என பாவம் கடற்கன்னி அறிந்திருக்கவில்லை.அவளுடைய காதலையும் பாவம் அவனும் அறிந்து கொள்ள போவதுமில்லை தன் முரட்டு தனமான பிடிவாதத்தால்.

தொடரும்.

அதரா - 14



காதலில் தவிப்பு என்பது பல கோணங்களில் ஏற்படும்.சிலது அதுவாக ஏற்படும் சிலதோ பிறரால் ஏற்படும் மற்றும் சிலதோ காதலிப்பவர்களாலே ஏற்படும்.இதில் அதரன் வர்ணிகாவின் பிரச்சனை யாரால் ஏற்பட்டது  அவர்களாலா அல்ல விதியாலா இல்லை இது சதியால் உருவான தவிப்பு.தான் இறக்க போவது தெரிந்தும் அதரன் வர்ணிகாவை கவர்ந்து வந்தது தவறு கூட இல்லை அது மன்னிக்க இயலா குற்றமே ஆகும்.அவன் மட்டும் அன்று தான் வந்த வேலையை மட்டுமே பார்த்துவிட்டுச் சென்றிருந்தால்  வர்ணிகாவும் அதரன் மேல் கொண்டது வெறும் ஈர்ப்பு என்று எண்ணி எட்டா கனியான காதலை மனதினுள் போட்டு புதைத்திருப்பாள்.

ஆனால் அதரன் தன்னிலை அறிந்திருந்தும் மனதை அடக்க வழியறியாமல் அவசரத்தில் எடுத்து முட்டாள் தனமான முடிவால் இன்று வர்ணிகா எனும் கடற்கன்னி கலங்கி தவிக்கிறாள்.கண்டதும் பிடித்து போன மனசுக்கு அவளை விட மனதில்லை. அதனால் அவளை கவர்ந்து வந்து தன்னை மணக்கும்படியும் செய்து விட்டவன் இன்னும் மூன்று வாரத்தில் இறக்க உள்ளான். அதன் பின் அவள் நிலை? ஏன் இந்த சுயநலக்காரன் வர்ணிகாவின் எதிர்காலத்தை எண்ணி பார்க்கவில்லை. காதலென்று வந்து விட்டால் அதில் பொறாமை இருக்கும் உண்மைதான் சுயநலமும் அதிலும் வெறித்தனமான சுயநலம் இருப்பது சற்று ஆச்சர்யம் தான்.

"மாமனே நான் வந்ததை கூட கண்டு கொள்ளாமல் பணிப்பெண்ணை வைத்த கண்ணெடுக்காமல் காண்பதின் பொருள் என்னவோ"அதரன் வருணனின் பின்னால் நின்று எட்டி பார்த்து கேட்க அதிர்ந்த வருணன்

"மருமகனே நீயா அது எப்படியடா எனக்கென்று ஏதாவது சிக்கும் போது உனக்கு மூக்கு வேர்த்து விடுகிறது.. என்னை பின்தொடர ஆள் வைத்துள்ளாயா.. இல்லை என்னை கண்காணிப்பதையே ஒரு பிழைப்பாய் வைத்துள்ளாயா"

"ஆமாம் உன்னை கண்காணித்து நான் என்னத்தை செய்வது மட மாமனே.. கவனிக்க வேண்டியவளை கவனிக்கவே நேரமின்றி வேலை நெட்டி முறிக்கிறது"

"அட சொல்ல மறந்து விட்டேன் பார்"

"மறக்கும் அளவுக்கு அதிசயமா"

"அதிசயம் ஆச்சர்யம்..அதரா உன்னை தேடி வர்ணிகா வந்தாள்"

"அதிசயம் ஆச்சர்யம் இரண்டிற்கும் மேலாக இது பேரதிர்ச்சி"

"எனக்குமே அப்படித்தான் இருந்தது. ஆனால் அவள் உனை தேடியது உண்மை"

 "ஏனாம் திடீரென்று என்னை காண்பதில் அத்தனை ஆர்வம் அவளுக்கு.. பார்க்கும் நேரமெல்லாம் கரித்து கொட்டுகிறது பத்தாதென்று ஆள் இல்லையென்றால் தேடி வந்து வேறு வறுத்து வாயில் போட்டு கொள்ள வேண்டுமோ"

"அது எனக்கு எப்படியடா தெரியும். அதிலும் அவள் என்னிடம் ஒரு கேள்வி வேறு கேட்டாள்"

"கேள்வி கேட்க அவள் வாயை திறக்கும் முன் நீ எகிறி ஓடிருப்பாயே"

"மருமகனே சற்று நேரம் வாயை மூடிக்கொண்டு நான் சொல்வதை கேட்பாயாக."

"இல்லையென்றால்"

"இல்லையென்றால் நான் மூடி கொண்டு செல்கிறேன்"

"சரி சரி விஷயம் என்ன சொல்லி தொலை"

"வர்ணிகா உனை தேடி வந்து இன்னும் மூன்று வாரத்தில் நீ உயிர் தியாகம் செய்யவிருப்பது உண்மையா என்று வினவினாள்"

"ஓஹோ அவளுக்கு எவ்வாறு இந்த விஷயம் தெரிந்தது நீ ஏதாவது"அதரன் பேசி கொண்டே வருணன் கழுத்தை பிடிக்க

"என் கழுத்து என்ன உன் மனையாள் இடையா.. தடவி கொண்டு இருக்கிறாய் கூச்சமாக இருக்கிறது மருமகனே கையை எடு"அதரன் வருணனின் கழுத்தில் இருந்து கரத்தை எடுத்ததும்

"எனக்கென்ன தலையெழுத்தா அந்த விஷயத்தை அவளிடம் சொல்ல.. அவளே தெரிந்து கொண்டாள் உன்னை பெற்ற செல்வங்களின் மூலம்"வருணன் வர்ணிகா கூறியதை கூற

"ப்ச் ஏன் மாமா உன் அக்கா புலம்பலை நிறுத்தவே மாட்டாரா"

"இந்த அதர லோகமே அக்கு அக்காய் சிதறினாலும் அது மட்டும் நடக்காது..ஆமாம் உனை கண்டாலே கொல்லும் வெறியோடு இருந்தவள் ஏன் பதறி கொண்டு இந்த விஷயத்தை கேட்க வேண்டும்"

"அதானே ஏன்'

"அதரா இது நமக்கெல்லாம் சாமானிய விடயம் ஆனால் அவளுக்கு அப்படியல்ல..அவள் கண்களில் நான் கண்ட தவிப்பும் பொய் உரைக்கவில்லை.. நான் ஒன்று வினவலாமா"

"என்ன மாமா என்னிடம் அனுமதி வாங்கி தான் நீ கேட்க வேண்டுமா"

"உன் மரணம் அறிந்தும் ஏனடா அவளை மணந்தாய்"

"மாமா..மாமா உனக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். எனக்கு ஒன்று பிடித்தால் அது உயிராக இருந்தாலும் ஜடமாக இருந்தாலும் அது எனக்கு வேண்டும். அதை பேணிக்காப்பவனும் நானாக இருக்க வேண்டும் அதை அழித்து போடுபவனும் நானாக இருக்க வேண்டும் அப்படியிருக்க கண்ட நொடியே என்னை வேரோடு சாய்த்து விட்டவளை எப்படி நான் அங்கேயே விட்டு வருவேன்.. அவள் என்னவள் மாமா.நான் இறக்க போறவன் தான் ஆனால் தனியாக அல்ல"

"வேண்டாம் அதரா உன் மரணம் உன் இஷ்டம் ஆனால் அந்த பெண்ணின் உயிர் உனக்கு சொந்தமல்ல"

"எனக்கு சொந்தமில்லையா அவள் உயிர் மட்டுமல்ல அவள் உடல் பொருள் ஆவி அனைத்துமே ஒரே ஒருவனுக்கு மட்டுமே சொந்தம் அது இந்த அதர நதினுக்கு மட்டுமே.."

"அதரா நான் சொல்வதை"

"மாமா அதோ அந்த பெண் உன்னையே பார்க்கிறாள் நீ அவளை பார்த்து கொண்டிரு..நான் சென்று என் மீனம்மாவை பார்த்து வருகிறேன் சரியா"..

"அடேய் நான் சொல்வதை கேளடா அதரா திமிர் பிடித்தவனே.. போய் விட்டான் மற்ற விஷயத்தில் எல்லாம் நல்லவனாக அதைவிட வல்லவனாக இருக்கிறான்..தான் என்று வந்து விட்டால் மட்டும் சுயநல பிசாசாக மாறி விடுகிறானே எப்படி.. ஒருவேளை அவன் அப்பா பக்கத்து பழக்கமோ என்னவோ"

அதரன் மெல்லமாக மிக மிக மெல்லமாக ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்து கொண்டிருந்தான். சேவகர்கள் அவன் இப்பொழுது தான் நடக்க நடைபழகி கொண்டிருந்ததை போல ஆச்சர்யமாக பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டனர்.அதரன் வந்து வருணனிடம் பேசி கொண்டிருந்ததை சேவகர்கள் மூலம் அறிந்து கொண்ட வர்ணிகா அவனின் வரவிற்காக ஒவ்வொரு நொடியும் காத்திருந்தாள். அப்படி அவள் காத்திருப்பாள் என்று அறிந்தே இந்த திமிர் பிடித்தவன் இட்ட அடி நோக நடந்து கொண்டிருக்கிறான்.

"ஸாரா"

"சக்கரவர்த்தினி"

"எங்கே உமது வேந்தர்"

"அவர் வந்து கொண்டிருக்கிறார் அடி மேல் அடி வைத்து"

"என்ன"

"ஆமாம் சக்கரவர்த்தினி வேந்தர் அடி மேல் அடி வைத்து மெல்லமாக நடந்து வந்து கொண்டிருக்கிறார்"

"வினை பிடித்தவன் வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறான் இந்நேரம் அவனின் மாமன் நான் தேடியதை சொல்லாமலா இருந்திருப்பான் உடனே என்னை வந்து சந்திக்காமல் அடிமேல் அடியெடுத்து அன்ன நடையில் வருகிறானா வரட்டும் வரட்டும் என் வாழ்க்கையை கேள்விக்குறியாகி விட்டு அன்ன நடை கேட்கிறதோ வரட்டும்.. ஸாரா நீ போகலாம்"வர்ணிகா பணிப்பெண்ணை போக கூறிவிட்டு தண்ணீரில் நீந்தி கொண்டே அவன் வருகைக்காக காத்திருந்தாள்.

அவனோ ஒரு நாழிகை முழுதாய் கழிந்த பின்னே அவர்கள் அறையில் நுழைந்தான். சரி நுழைந்தது தான் நுழைந்தான் அதன் பின்னாவது வேக எட்டுக்களில் அவளை அடைந்து கண்ணே வர்ணிகா நீயாக என்னை தேடினாயாமே என்ன விஷயம் என்று கேட்க வேண்டாமோ. ஆனால் அவன் ஒவ்வொரு அடிக்கும் ஒரு நிமிடம் இடைவெளி விட்டு இன்னும் தாமதமாகி கொண்டிருந்தான் அவன் நடையை.

வர்ணிகாவின் பொறுமை சுக்கு நூறாகியது.. ஆத்திரமாக தரைக்கு வந்தவள்"பார்த்து பார்த்து கால் துண்டாகி விழ போகிறது இன்னும் வேகமாக நடந்தால்"என்றாள்.

அவனோ ஏளனமாக அவளை பார்த்து"என் கால்..அதுதுண்டாகி விழுந்தால் உனக்கென்ன விழாமல் போனால் உனக்கென்ன"

"அதானே எனக்கென்ன எல்லாம் தெரிந்தும் எப்படி தான் உங்களால் மட்டும் இப்படி பொய் வேஷம் போட முடிகிறதோ. குறளி வித்தைக்காரன் உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்"

"என் நடைக்கும் குறளி வித்தைக்கும் என்ன சம்மதம் வர்ணிகா"

"ஸ்ஸ்ஸ்ப்பா போதும் நிறுத்துங்கள். இப்பொழுது குறளி வித்தை பேச்சும் உங்கள் வீணா போன கால்களுமா முக்கியம்.. உயிரே ஊசலாடி கொண்டிருக்கையில் கால்களுக்கு என்ன கேடு வந்தது"

"உயிர் ஊசலாடுகிறதா அதை ஏன் ஊஞ்சல் ஆட விட்டாய் வர்ணிகா அறிவில்லை உனக்கு.. ஊஞ்சலாடியது போதும் என்று மறுபடியும் அதை பிடித்து உன் உடற்கூட்டில் சேர்த்து கொள்.. இல்லையென்றால் எங்கேயாவது போய் விட போகிறது"

"ஆஹ் நீங்கள் என்ன பைத்தியமா ஏன் சம்மதம் இல்லாமல் உளறி கொட்டி கொண்டிருக்கிறீர்.. இல்லை நீங்கள் வேண்டுமென்றே என்னை திசை திருப்ப பார்க்கிறீர்கள். நான் எதற்காக உங்களை எதிர்பார்த்து இருக்கிறேன் என்று அறிந்தும் வேண்டுமென்றே எனை அலைக்கழிக்கிறீர்"

"அலையோடு விளையாடியவளை அலைக்கழிக்க முடியுமோ"

"ச்சை போதும் என் கோபத்தை கிளறாதீர்கள். உங்கள் நடிப்பை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள். இன்னும் மூன்று வாரத்தில் சாக இருக்கும் உங்களுக்கு விவாகம் தான் குறைச்சலோ"

"ஏனம்மா சாக இருப்பவன் விவாகம் புரிய கூடாதென்று சடங்கு ஆச்சாரம் ஏதாவது உண்டா. இல்லை நீங்கள் எல்லாம் சாகா வரம் பெற்ற அமரரா"அவள் நிலை புரியாமல் இந்த கிறுக்கன் வேண்டுமென்றே அவளிடம் வாயாட

"நீயெல்லாம் ஒரு மனசனே அல்ல இந்த லட்சனத்தில் இந்த லோகத்தின் வேந்தன் வேறு, த்து..உனக்கே தெரியும் உன் நிலை என்ன என்று அப்படியிருக்க நீ ஏன் என்னை இங்கே இழுத்து வந்தாய் உன் உடல் தேவைக்கா அல்ல வேறு எதற்கு.. என் எதிர்காலத்தை சூனியமாக்க உனக்கு யார் அதிகாரம் கொடுத்தது..என்னை அமங்கலியாக்க உனக்கு என்ன உரிமை உள்ளது.. ஏன் இப்படி செய்தாய் எதற்கெடுத்தாலும் பாசம் உயிர் நேசம் என்று வசனம் பேசுவாயே இப்பொழுது பேசு.. உண்மை நேசமிருந்தால் சாக இருக்கும் நீ என் வாழ்வை வீணாக்குவாயா?வீணாக என் மனதையும் கெடுத்து இதில் உனக்கு என்ன ஆதாயம் உள்ளது"வர்ணிகா அவன் மேல் கொண்ட நேசத்தை மறைமுகமாக உடைந்த குரலில் கூற அவனோ அப்பொழுதும் அடிமேல் அடியெடுத்து வைப்பதை நிறுத்தினான் அல்ல.

அவளோ சினத்தின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தாள்.. அதீத சினத்தால் அவள் தளிர் மேனி நடுங்க தொடங்கியது. மூச்சு வாங்க அவளே அறியாமல் கண்களில் கண்ணீர் வழிய அவனை அடிபட்ட பார்வை பார்த்தவள் அவனை சுற்றி கொண்டு ஓட முயன்றாள். ஆனால் அவன் முகத்தை பார்த்தால் எங்கே அவனை கட்டி கொண்டு கதறி விடுவோமோ என்ற பயத்தில் கண்களை இருக்க மூடி கொண்டே ஓடியவள் ஓடி கொண்டு தான் இருந்தாள் கடல் நீர் காலில் பட்டதும் திடுக்கிட்டு கண் திறந்தாள்.

அவள் நின்று கொண்டிருந்தது அவளது முந்தைய வசிப்பிடமான கடலில். எப்படி இது சாத்தியமா நாம் அதரனின் கோட்டையில் அல்லவா இருந்தோம் குழம்பி தவித்தவள் ஒரு வினாடியில் சுதாகரித்து திரும்பி பார்த்தாள். அங்கே அவளை தவிர யாருமே இல்லை. இது அந்த மாயக்காரனின் வேலையென்று புரிந்தது.ஆழியை விட அதிகமான அலைகள் அவள் மனதினுள் அடிக்க வேறு ஏதும் யோசிக்காமல் சட்டென தண்ணீரில் பாய்ந்தாள். கால்கள் வாலாக மாறியது.

சில நாட்களுக்கு பிறகு தன்னுடைய பிறந்தகத்தை அடைந்த புதுமண பெண்ணாக ஒரு நிம்மதியை உணர்ந்தாள் வர்ணிகா. ஆனாலும் புதுமண பெண்ணுக்கே உரிய நாணமும் பூரிப்பும் அவளிடம் காணாமல் போயிருந்தது. கடலின் உள்ளே அவளை கண்ட கடல் வாழ் உயிரினங்கள் யாவும் "ஹேய் இவள் கடலரசனின் மகள் அல்லவா."

"ஆம் பௌர்ணிமா"

"அவள் இப்பொழுது கடலரசனின் மகள் இல்லை.. நம் வேந்தன் அதரநதினின் மனைவி"இவ்வாறு தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டு அவள் பின்னால் இடைவெளி விட்டு நீந்தி செல்ல அவளோ எதையும் உணரும் நிலையில் இல்லை. அவள் மனமோ எங்கே அவன்?எதற்காக என்னை இங்கே அனுப்பியுள்ளான்.. என்னை மீண்டும் அழைத்து செல்வானா இல்லை இங்கேயே நிரந்தரமாக விட்டு செல்வானா.. ஏன் என் காதல் கருவிலேயே கருகி நிற்கிறது..

இப்படி ஏதேதோ சிந்தனையில் அவள் நீந்தி கொண்டிருக்க ஒரு கட்டத்தில் அவளால் நீந்த இயலவில்லை. அவளது வாலை யாரோ பிடித்து இழுப்பதை போல் இருக்க படபடப்புடன் திரும்பி பார்த்தவளை கண்டு கண்ணடித்து சிரித்தான் அதரன். அந்த சிரிப்பில் அவளது மனம் கிறங்க சொல்லியது. ஆனால் மூளையோ அவளை கோபப்பட சொல்ல அவள் மூளை சொல்லியதை பின்பற்றினாள்.

கோபமாக அவனை முறைத்து பார்க்கத்தான் முயன்றாள். முயன்று பார்த்தவளின் விழிகள் சுற்றி அந்த பகுதியை பார்க்க முறைப்பு மறைந்து விழிகள் விரிந்தது. அது அவள் அதரனை காண ஆவல் கொண்டு செடிகளுக்கு பின்னால் மறைந்திருந்த இடம்..அவள் கண்டு கொண்டதை பார்த்தவன் அவளை நெருங்கி கொடி இடை நொறுக்கி தன்னோடு இணைத்து கொண்டு"நீ கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் தர கடமை பட்டுள்ளேன் வர்ணிகா. பின்பு ஏன் உன்னை கோபமேற்றி வேடிக்கை பார்த்தேன் என நினைக்கிறாயா.. அது என்னவோ போ உன்னை வெறுப்பேற்றி குளிர் காய்வதில் எனக்கொரு ஆனந்தம்.

சரி சரி முறைக்காதே.. ஆனாலும் ஒரு உண்மையை சொல்லியே ஆக வேண்டும் வர்ணிகா அது என்னவென்றால் நீ சும்மாவே பேரழகி முறைக்கும் சமயம் பேரழகிகளின் இருப்பிடம். அதனால் தான் உன்னை வெறுப்பேற்றி மறைமுகமாக ரசிக்கிறேன். "

"நீ வெறுப்பேற்றி ரசித்தது போதும்..என் கேள்விக்கு பதில் சொல். சாக போவது தெரிந்தும் ஏன் என்னை இழுத்து சென்றாய்"

"ஏன் ம்ம்ம் ஏனென்றால் என்ன சொல்லலாம் ஆம் ஒன்று சொல்லலாம்.. இந்த பேரழகியின் நீண்ட பொன்னிற கூந்தல் என் கவனத்தை ஈர்த்தது.ஈர்த்தது என்னவாக இருக்குமென நான் மெதுவாக எட்டி பார்க்க என்னை மொத்தமாக சாய்த்தது உன் முகம். பார்த்த நொடி பார்த்து கொண்டே இருக்க மின்னாமல் முழங்காமல் என் இதயத்தில் ஒரு இடி விழுந்தது. அந்த இடி வர்ணிகா என்ற இடி. இடி இடித்து மின்சாரம் உடலெங்கும் பாய இனி இவள் இன்றி நீ இல்லையென்று என் மனம் சொல்ல கேட்டேன் அந்த கனம் முடிவெடுத்தேன். மரணமாக இருந்தாலும் அது என் வர்ணிகாவின் கணவனாக இருக்கும் பொழுது தான் என. உன் அனைத்து கேள்விக்கும் பதில் நீ அதர நதினின் வர்ணிகா"

அவ்வளவு தான் வர்ணிகாவின் கோபமும் ஊடலும் வெகுதூரம் ஓடி போக அடுத்த கணம் அவள் அதரனின் நெஞ்சு கூட்டில் புதைந்து கடல் நீரோடு தன் கண்ணீரையும் கலந்து கொண்டிருந்தாள்.

தொடரும்.

அதரா - 15



வர்ணிகாவும் அதரனும் கட்டிக்கொண்டு நின்றதை கடல் வாழ் உயிரினங்கள் மட்டுமல்ல வர்ணிகாவின் பெற்றோர்களும் பார்த்து மனம் நிறைந்து போயினர். அவர்களின் காதல் தேன் குடித்த கண்கள் நான்கும் ஒன்றோடு ஒன்று ஒட்டி ஒரசி கொள்ள அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என ஒன்றையும் கவனிக்கும் நிலையில் இல்லை அவர்கள். வர்ணிகாவின் பெற்றோர் இருப்பிடத்திற்கு அழைத்ததை கூட மறுத்து விட்டால் வர்ணிகா.

அவளுக்கு அதரனுடன் இருக்க வேண்டும். அவன் பரந்த மார்பில் தலைசாய்த்து மண்டையை குடையும் கேள்விகளுக்கு வினா காண வேண்டும். அனைத்திற்கும் மேலாக அவனுக்கு அவளை இன்று இப்பொழுது தர வேண்டும் அதனால் பெற்றோர் ஆசையாக அழைத்ததை கூட தட்டி கழித்தவள் உடனே அதரனை அழைத்து கொண்டு கடலின் மேல் மட்டத்திற்கு வந்தாள்.

நடு கடலின் மத்தியில் நின்றவன் அவளை தன் கரங்களில் ஏந்தி கொண்டு மெல்லமாக நடக்க தொடங்கினான்.. உச்சி வானின் சூரியன் இவர்களை வேடிக்கை பார்த்தது. அதரனுக்கு இந்த நொடி இப்படியே நின்று விட கூடாதாயென இருக்க அவளுக்கோ எரிச்சலாக இருந்தது"ஏன் இம்மாதிரி தாமதித்து இம்சை செய்கிறீர் ஒரே சொடுக்கில் கோட்டைக்கு செல்லலாம் தானே"

"ம்ம்ம் ஒரே சொடுக்கில் சென்று விட முடியும் தான் ஆனால் இந்த மனோரம்மியமான நிமிடங்கள் மீண்டும் கிடைக்குமா சொல்.நம் இருவரையும் இணைத்து இந்த ஆழி நம் இருமனங்களை இணைத்ததும் இந்த ஆழியே அதனால் கரை சேரும் மட்டும் உன்னை கரங்களில் இருந்து இறக்கவும் மாட்டேன் வேகமாக கரையை அடையவும் மாட்டேன்"

அவனின் நேசம் அவளுக்கு கண்ணீரை வரவழைத்தது ஏன் தான் என்மேல் இந்த பைத்தியம் உனக்கு என அயர்ந்து கொண்டவள்"ஏன் தான் உங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறதோ என்றேனும் ஒரு நாள் என் மனதை புரிந்து கொள்வீரா என்றும் புரியவில்லை..எப்பொழுதும் உங்கள் சுயநலமான எண்ணம் மட்டுமே வெற்றி அடைகிறது. என் எண்ணங்கள் அடிபட்டு பலத்த தோல்வியை தழுவி நிற்கிறது.. "

"இப்பொழுது ஏனடி அயர்ந்து கொள்கிறாய்.. என்ன புரிந்து கொள்ளவில்லையாம் நான்"

"ஒரு பெண்ணின் மனதை உங்களால் மட்டுமல்ல யாராலும் புரிந்து கொள்ள முடியாது.. எனக்கு உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்"

"இப்பொழுதா வேண்டாம் மீனம்மா இந்த நிமிடங்களை பத்திரமாக என் உடலில் ஓடும் ஒவ்வொரு அணுவிலும் திசுக்களிலும் சேகரித்து கொண்டிருகிறேன் இந்த இனிய நிகழ்வை கேள்வி கேட்டு கெடுத்து விடாதே"

" முடியாது நான் கேள்வி கேட்க தான் போகிறேன்.அதற்கு பதில் சொல்வது உங்களின் கடமை ஆகும். இல்லையென்றால் என்னுடன் பேசாதீர்கள்" அவள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள

" அட கடவுளே இந்த பெண்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் பொசுக்கு பொசுக்கென்று கோபம் வருகிறதோ தெரியவில்லை..அவர்களின் கோபத்திற்கு நம்மையும் அடிமையாக்கி விடுகிறார்கள். என்ன செய்வது நாமும் விரும்பி அடிமையாகி தான் போகிறோம் ம்ம்ம் அதான் விதி போல. சரிடி எவ்வளவு நேரம் அங்கேயே பார்ப்பாய் திரும்பி மனம் திருடிய கள்வனையும் சற்று பார்க்கலாம் தானே? "

" உங்களைத் திரும்பிப் பார்த்தால் நான் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவேன் என் கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாரா"

" தயார் ஆனால் ஒரு நிபந்தனை"

"நிபந்தனை என்னவோ"

" உன்னுடைய சிற்பி இதழ்களை அங்கும் இங்கும் சுளிக்காமல் சொல்ல வேண்டியதை பட்டென்று சொல்லி விட வேண்டும். இல்லையென்றால் எனது கவனம் திசை திரும்பி இந்த ஆழியே நமது பள்ளியறை ஆகிவிடும் பின்பு என்னை குற்றம் சொல்லி ஒன்றும் நேர போவதில்லை"

" ஐயோ இந்த லோகத்தின் வேந்தன் பேசுவதை பார்.. எல்லோரும் கேட்டு சிரிக்கப் போகிறார்கள்."

" சிரிக்கட்டுமே நன்றாக சிரிப்பாய் சிரிக்கும்"

" போதும் உங்கள் பரிகாசம் நான் இப்பொழுது வினாக்களை கேட்க போகிறேன்.. இன்னும் மூன்று வாரத்தில் உயிர்த்தியாகம் செய்ய இருக்கும் நீங்கள் எதற்காக என்னை விவாகம் புரிந்தீர்கள்" கேட்க வேண்டியதை பட்டென்று போட்டு உடைத்தாள் வர்ணிகா.

சற்றும் சலனமில்லாமல் அவளின் கேள்விக்கு பதில் சொல்ல ஆயத்தமானான் அவன்"மீனம்மா என்னடி குருட்டு தனமாக கேள்வி கேட்கிறாய் இருந்தும் உனக்கு சற்று மந்த புத்தி என்பதால் உனது கேள்விக்கு விடை கூறுகிறேன்.. என்னடி அதான் விடை கூறுகிறேன் என்றேனே பின்னர் ஏன் இந்த முறைப்பு.. ஹிஹி சரி சரி மந்த புத்தி என்று வாய் தவறி உண்மையை உளறி விட்டேன் என்னை மன்னித்து விடடி..

ஹான் எங்கே விட்டேன்.ஆம் கேள்விக்கு பதில்.. வர்ணிகா எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும் நான் உயிர் தியாகம் பண்ண வேண்டும் என்று. அதனாலே என் அம்மா என்னிடம் மன்றாடி கொண்டிருந்தார்கள் விவாகம் செய்து கொள்ளடா என்று.வரிசை பெற்று சந்ததியை உருவாக்க மட்டுமே விவாகம் தேவையா சொல்.. நான் சாக போறவன் தான் ஆனால் என் உயிர் பிரிவதற்குள் எந்தன் மனம் நிறைந்து உயிர் ஊடுருவியவளை காதலுடன் சேர வேண்டுமென நினைத்தேன்..

அதனாலே விவாகம் செய்யாமல் தவிர்த்து வந்தேன். அதரா வம்சத்தில் வேந்தனை கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை அதனாலே என் அம்மா என்னிடம் மன்றாடினாரே தவிர கட்டாயப்படுத்தவில்லை.. ஒரு பெண்ணை கண்டு அந்த நொடி அவள் எனக்கே எனக்கு உரிமையானவள் என்று தோன்ற வேண்டும். அவள் சுவாசிக்கும் மூச்சும் என் மூச்சிலிருந்து வெளிப்பட வேண்டும் என்னை தீண்டிய காற்று பாதுகாப்பாக உள்ளபடியால் மட்டுமே என்னவளை தழுவ வேண்டும் அதும் பட்டும் படாமல்.. இப்படி ஒருவளை கண்டதும் நான் பித்தாகி போக வேண்டுமென நினைத்தேன்.

அப்படி ஒருவளாக நீ என் கண்களில் விழுந்தாய் உயிரில் கலந்தாய் வர்ணிகா.உனை கண்ட நொடி நான் மரணிக்க இருப்பவன் அதும் இன்னும் மூன்றே வாரத்தில் என்பதெல்லாம் எனக்கு நியாபகத்தில் வரவில்லை.. என் சிந்தை எல்லாமே உன் உருவமே நிரம்பி தளும்பியது. கண்டதும் என்னை களவாடி விட்ட கள்ளி நீ. உன்னை பயமுறுத்தி இழுத்து வந்து கெடு கொடுக்கும் போதும் சரி உன்னை கோபப்படுத்தி உன் வாயாலே விவாகத்திற்கு சம்மதிக்க வைத்த போதும் சரி என் செயல் சுயநலமென நான் எண்ணவில்லை.

என்னுடைய மரணத்தை காரணம் காட்டி உனை அணுகாமல் விட்டு விட்டு என் உள்ளம் கவர்ந்த உனை யாரோ ஒருவன் உரிமை கொண்டாடுவதை என்னால் எப்படி தாங்கி கொள்ள முடியும் வர்ணிகா அம்மாதிரி பரந்த மனம் எனக்கில்லை. நான் சுயநலவாதி தான் அதும் நீ என்று வரும்போது"

அவன் கூற்றையே மெய்மறந்து கேட்டு கொண்டிருந்தவள்"நீங்கள் மட்டுமா அதரா வம்சத்தில் இருக்கிறீர்கள் உங்களுக்கு முன் உங்கள் தந்தை உள்ளாரே ஏன் அவர் உங்களுக்கு பதிலாக உயிர் தியாகம் செய்ய கூடாது"

"வர்ணிகா உன் படபடப்பு எனக்கு புரியாமல் இல்லை. நீ ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நம் லோகத்தை காக்கும் பொக்கிஷம் அத்துணை சாதாரணமது அல்ல. அதற்கு முன் ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒரு முறையும் உயிர் தியாகம் செய்யும் ஒருவனை அந்த பொக்கிஷமே தேர்ந்தெடுக்கும்.அதரா வம்சத்தில் பிள்ளை வளர்ந்ததுமே அவனிடம் ஆட்சி பொறுமை ஒப்படைக்க வேண்டும்.

அதே நேரம் தியாக நாளுக்கான திகதி என் ஆட்சி காலத்தில் வருவதால் நான் தான் உயிர் தியாகம் செய்ய வேண்டும். உனக்கு மட்டும் தான் இது வேதனையான விஷயம் எனக்கோ இல்லை அதரா வம்சத்தினருக்கோ இது கிடைக்கப் பெறாத பாக்கியம். நூறு ஆண்டுகளுக்கு பிறகு அந்த பாக்கியம் இந்த அதரநதினுக்கு கிடைத்துள்ளது. அதை எக்காரணம் கொண்டும் தவற விட மாட்டேன் அந்த காரணம் நீயாக இருந்தாலுமே"

அதரன் திட்டவட்டமாக கூற அவளோ என்ன செய்வாள் பாவம்.. கண்களில் நீர் கன்னங்களில் உருள இப்பவோ அப்பவோ என நேரம் பார்க்க அவளோ அதற்கெல்லாம் நேரமில்லை என்பதை போல கண்களை மூடி கொண்டாள். இவன் என் நேசன் ஆனால் சுயநலவாதி.நான் என்ன கூறினாலும் இவன் மனம் மாறப்போவதில்லை. இவன் உயிர் தியாகம் செய்யாது நாம் தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

"வர்ணிகா வர்ணிகா அடியே மீனம்மா"

"ஹாங் என்னாயிற்று ஏன் இப்படி அலறுகிறீர்கள்"

"பின்னே என்னடி அழைத்து கொண்டே இருக்கிறேன் நீ விழி மூடி உறங்கி கொண்டிருக்கிறாயே"

"விழிகளை வெறுமனே மூடிருந்தேனே தவிர உறங்கவில்லை உடனே அங்கலாய்க்காதீர்கள்.. எதற்கு என்னை அழைத்தீராம்"

"எதற்காக அடியே உன் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டதா.. நீ மட்டும் கேள்விக்கே பிறந்த மாதிரி கேள்வி கணைகளை தொடுத்தாயே இப்பொழுது என்னுடைய கேள்விக்கு பதில் கூறடி"

"என்ன உங்களது கேள்வி"

"நீ எப்பொழுது எப்படி எதனால் என்னை ஏற்று கொண்டாய்"

"ம்ம்ம்"

"என்ன ம்ம்ம்.. உதட்டை சுழித்து முட்டை விழிகளை உருட்டாமல் உண்மையை கூறு"

"ஏன் எதனால் எப்பொழுது எப்படி என உங்கள் குறுக்கு விசாரணைகளை மூட்டை கட்டி வைத்து விடுங்கள் வேந்தே..என்னை பலமுறை அழ வைத்ததற்கு தண்டனையாக இப்பொழுது அந்த ரகசியத்தை உங்களிடம் கூற போவது இல்லை.நேரம் வரும்போது சொல்கிறேன்"

"அதற்குள் நான் செத்து விடுவேன் மீனம்மா.. உன் காதலின் விடையறியாமல் மண்ணுலகம் விட்டு விண்ணுலகம் சென்று விடுவேன் பின் உன் காதல் ரகசியத்தை எவ்வாறு கூறுவாய்.. காற்றாய் கலந்தவனிடம் காற்றில் உரைப்பாயோ"

அவன் கூறியது அவளை வேதனையுற செய்ய கண்கள் கலங்க அவன் கழுத்தை சுற்றி கரம் போட்டு அவனது மார்பில் முகம் புதைத்து கொண்டாள். அவள் கலங்குகிறாள் என உணர்ந்தவன் வேறு எதையும் பேசாமல் அவளை மாரோடு இறுக்கி அணைத்தபடி கரைக்கு வந்து சேர்ந்தான். அதன் பின் நொடியும் தாமதியாமல் ஒரே சொடுக்கில் தங்களது சயன அறைக்கு வந்து சேர்ந்தான்.

அதை கூட உணராமல் அவன் மனக்கூட்டின் வாசம் நுகர்ந்து கொண்டிருந்தாள் வர்ணிகா. அவளை மன்மத சிரிப்போடு மஞ்சத்தில் அவன் கிடத்த அதன் பின்னே சுற்று சூழல் உணர்ந்தாள். அவனை முறைக்க முயன்று கொண்டிருந்தவளின் மேல் அம்பென பாய்ந்தான் அதரன். அவனின் நோக்கம் அவளுக்கு புரியாமல் இல்லை.அவளும் இதற்கு தானே காத்திருந்தாள். ஆனாலும் அவன் வேகம் பயம் தர அவள் விழிகளின் மிரட்சியை கண்டவன் ஒட்டு மொத்த நேசத்தையும் கண்களில் தேக்கி அவள் நுதலில் முத்தமிட அதோடு அவள் பயமும் விலகியது.

இருவரும் முத்தக்கடலில் நீந்த இருவரின் சுவாசமும் அனலென கொதிக்க அதரனின் உடலோ எரிமலை சிலையாக கொதித்தது. அந்த சிலையின் கொதிப்பை பனி வெள்ளமாக அணைக்க வேண்டியவளோ மேலும் முத்தத்தால் விளக்கு செய்து நாணமெனும் திரி போட்டு சிணுங்களில் எண்ணெய் ஊற்றி தீயாக தன் பெண்மையை ஏற்றி எரிமலை சிலையின் முன் வைக்க அந்த சிலையோ முன்னை விட பிரகாசமாக மிளிர்ந்தது.

அதரன் தனது உயிர் நீரினை அவள் பெண்மையின் உள்ளே செலுத்தும் வேளை என்ன நினைத்தனோ அவளை விலகி எழுந்து ஒரு முழு நிமிடம் தன்னை சமன் செய்து கொண்டான். என்ன நடந்தது ஏன் தன்னை விலகி எழுந்தான் என ஒன்றுமே புரியாத வர்ணிகா"என்னாயிற்று"

"ஒன்றுமில்லை நம் லோகத்திற்கு ஆபத்து நான் செல்ல வேண்டும்.."

"இப்பொழுதா"

"ஆம் இந்த நொடியே"என்றவன் அவள் முகம் கலக்கத்தில் அவளது உச்சியில் இதழ் பதித்து நொடியில் மறைந்து மாயமானான். இதுவே அவர்கள் இறுதி இனிய பொழுதென அவனும் அறியவில்லை அவளும் உணரவில்லை.இந்த ஒரே நாளில் காதலும் கைசேர்ந்து கல்லாக சமைய இருப்பதை காரிகை அவள் அறியாதது விதியோ?

தொடரும்..

அதரா - 16


"மாமா என்னாயிற்று எவ்வாறு இந்த அனர்த்தம் நடந்தது.. இதற்கா நீ சேனாதிபதியாக இருக்கிறாய்"

"அதரா நான் என்ன செய்வேனடா சிற்றரசர்கள் ஒருபுறம் கலகம் செய்து குடைச்சலை கொடுக்க அந்த பிரச்சனையில் என் கவனம் தப்பி விட்டது ஆனாலும் என்ன நாம் தான் சமாளித்து விட்டலாமே.. நம்மை மீறி இந்த லோகத்தை விட்டு காற்று கூட வெளியேற முடியாது"

"இந்த இருமாப்பும் அலட்சியமும் இன்று எந்த நிலைக்கு கொண்டு வந்தது பார்த்தீரா.உங்களை சொல்லி என்ன செய்வது லோகத்தின் அதிபதியாகிய நான் என் கடமையை செய்யாமல் காரிகையவளின் காலில் விழுந்து கிடந்ததின் பலன் இன்று பொக்கிஷம் களவு போய் உள்ளது.."

"கவலை கொள்ளாதே அதரா பொக்கிஷம் எங்கேயும் சென்றருக்காது.."

"இல்லை மாமா இன்னும் உயிர் தியாகம் செய்யவில்லை. அப்படி செய்தால் மட்டுமே பொக்கிஷம் அதீத சக்தியுடன் இருக்கும்..இந்த இறுதி நாட்களில் பொக்கிஷம் வலுவிலந்து இருக்குமே மாமா.. அதனால் தானே அந்த கயவர்கள் அதனை கடத்தி சென்றுள்ளனர்"

"அதரா இப்பொழுது என்ன செய்யலாம் என்று சொல்"

"மாமா உடனே நம் வீரர்களை லோகத்தின் அனைத்து மூலை முடுகளிலும் அனுப்பி வை..லோகத்தை விட்டு யாருமே வெளியே செல்ல கூடாது.."

"அதரா அவர்கள் ஆகாய மார்க்கமாக வந்து நமது பொக்கிஷத்தை திருடி உள்ளனர்..நீயென்ன என்றால் இருக்கும் வீரர்களை எல்லாம் லோகத்தின் மூலை முடுக்குகளுக்கு அனுப்ப சொல்கிறாய்.. இது வேறு ஒரு அனார்த்ததிற்கு வழி வகுக்கும்"

"மாமா வேந்தன் நீயா நானா அந்த கயவர்கள் மட்டுமில்லை இனி யாருமே அதர லோகத்தின் உள்ளே காலடி எடுத்து வைக்கவும் யோசிக்க வேண்டும்.."

"அதற்கு நீ ஏதோ திட்டம் தீட்டுகிறாய் போல சரி உன் ஆணைப்படி செய்ய காத்திருக்கிறோம் வேந்தே"வருணன் அதரனின் ஆணைப்படி அனைத்து வீரர்களையும் பறக்கும் யானைகளின் மீதும் குதிரைகளின் மீதும் வேகமாக சென்று அதர லோகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தயார் நிலையில் நிற்க சொல்லி உத்தரவு கொடுத்தான். கோட்டையே பரபரப்பாக இருந்தது. சிலருக்கு விஷயம் என்னவென்று புரிந்தது சிலரோ விஷயம் தெரியாமலே வாயில் வந்ததை சொல்லி பீதியை கிளப்ப அதரன் போர் உடையில் முதுகில் கேடையமும் அதற்குள் இரு பக்கமும் வாளுமாக தாய் தந்தையின் முன் வந்து நின்றான்.

அவர்களும் கலங்கி தான் நின்றனர். இதுவரை யார் காலத்திலும் இம்மாதிரி பொக்கிஷம் களவு போனது இல்லை. ஆனால் அதர வம்சத்திலே பிரசித்தி பெற்ற ஒருவன் வேந்தனாக இருக்கும் போதேவா இம்மாதிரி அசம்பாவிதம் நிகழ வேண்டும்..பொக்கிஷம் இல்லையென்றால் அதர லோகம் அழிந்தே விடும்..அதை மீட்க ரட்சகனாக செல்கிறான் அதரன்.எப்பொழுதும் போல இல்லாமல் அவன் முகம் கடினப்பட்டு இருந்தது. தாய் தந்தையிடம் வந்தவன்

"இதுவரை நம் வம்சத்தினர் சேர்த்து வைத்திருந்த நம்பிக்கையை நான் சிதைத்து விட்டேன் அதற்கு என்னை மன்னிக்கவும்.. பொக்கிஷத்திற்கு முன் உயிர் தியாகம் செய்யப்படாத நிலையில் அது தன் சக்தியை இழந்தே இருக்கும். அதை அவர்கள் அபகரித்து செல்வது கூட வீண் தான். இருந்தும் பொக்கிஷத்தை மீட்டு அவர்களின் சாவை மிகவும் கொடூரமாக நிகழ்த்தி காட்டுவேன்.

என் லோகத்தில் இனி இம்மாதிரி எண்ணங்களுடன் வரும் யாவருக்கும் அதரன் என்றால் யாரென்று தெரியவேண்டும். ஒருவேளை நான் மடிந்து விட்டால் இந்த போராடத்தில் அடுத்த நூறு வருடம் நீங்கள் காத்திருக்க வேண்டும்."

"அதரா ஒரு வீரனாக உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் ஆனால் என் மகனாக என்னால் பெருமைப்பட முடியவில்லை மகனே "

 "ஆம் அதரா எங்கே உன்னை இழந்து விடுவோமோ என்று மனம் கிடந்து அடித்துக் கொள்கிறது.. இருப்பினும் கடவுள் நம் இனத்தின் மீதும் நமது வம்சத்தின் மீதும் நம்பிக்கை வைத்து கொடுத்த இந்த பணியை நிறைவாக செய்வது நமது கடமையாகும். இதுவரை இருந்த அதராகளில் மேன்மையானவன் நீ. உன் ஆட்சி காலத்தில் இம்மாதிரி அசம்பாவிதம் நடந்தது விதி என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. நீ சென்று வா மகனே உன் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது கண்டிப்பாக பொக்கிஷம் திரும்பவும் நமது கரங்களுக்கு வரும்.."

"ஒரு வேந்தனாக உனது முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் ஒரு பெற்றோராக உனது இந்த முடிவைக் கேட்டு நாங்கள் பெருமை கொள்கிறோம் ஆனால் மகனே உனது மனைவியாக இருப்பவளின் மன நிலையை நீ கொஞ்சம் நினைத்துப் பார்.. உன்னுடைய சுயநலத்தால் அந்த அப்பாவிப் பெண்ணின் வாழ்வு இன்று கேள்விக்குறியாகி உள்ளது அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாய்.. இதுவரை நம் வம்சத்தில் யாருமே இம்மாதிரி பெண்ணின் சாபத்திற்கு ஆளாகியவர்கள் கிடையாது. நீயும் அந்த பொல்லாத சாபத்திற்கு ஆளாகி விடாதே. போகும் முன் ஒரு நிமிடம் ஒரு வார்த்தை சொல்லி விட்டு போ.."

" ஆகட்டும் அம்மா நான் என் சுய நலத்திற்காக அவளை மணந்து கொண்டேன் அதில் எந்த மாற்றமும் இல்லை அதை நான் மறுக்கவுமில்லை.. என்ன நடந்தாலும் சரி பொக்கிஷத்தை திரும்ப மீட்டு வருவது என் கடமை ஆகும் அதே போல் நான் இல்லாமல் என் வர்ணிகாவிற்கு இங்கே எந்த வேலையும் இருக்காது.. ஒருவேளை நான் உயிரோடு திரும்பி வந்தால் உங்களின் சக்கரவர்த்தினியாக என் மனைவி இருப்பாள்.நான் திரும்பி வராமல் போனால் என் வர்ணிகா என்னுடன் வருவாள்"

" அதரா என்னடா சொல்கிறாய் வேண்டாம் மகனே நீ ஏற்கனவே அந்த அறியா பெண்ணின் வாழ்க்கையில் நிரம்ப விளையாடிவிட்டாய்.. இன்னும் இன்னும் தீங்கிழைக்காதே அந்த பெண்ணிற்கு. தந்தை உன் நல்லதுக்கு சொல்கிறேன் கேள்"

" தந்தையின் சொல் மகனிடம் எடுபடும் நீங்கள் இப்பொழுது பேசிக்கொண்டிருப்பது அதர லோகத்தின் வேந்தனிடம்".. அவன் கூறியதைக் கேட்டதும் பெற்றோர்கள் இருவரும் செய்வதறியாது கையைப் பிசைய அதரனின் பார்வை அவன் சகோதரியை நோக்கி திரும்பியது. மிருளா மிரண்டு போய் தன் சகோதரனை பார்த்து கொண்டிருந்தாள். கண்களில் இதுவே கடைசி என்பதின் காரணம் அறியாமலே கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. மிருளாவை பார்த்ததும் அதரனின் கண்கள் அவள் மேடேறிய வயிறை தொட்டு அங்கேயே நின்றது.

வேகமாக சகோதரியின் அருகில் வந்தவன் இரு கரத்தினாலும் அவள் வயிறை தொட்டு"செல்லமே நீ பிறக்கும் போது ஒருவேளை மாமன் உயிரோடு இல்லையென்றால் நீ தான் நம் வம்சத்தை தொடர வேண்டும். அதராவின் பிரதிநிதியாக இருந்து இந்த லோகத்தை ஆழ வேண்டும்.நீ பெண்ணாக இருந்தாலோ கலங்காதே கண்ணே அதராவின் உதிரமாகிய உன் உடம்பிலும் வீரத்தின் வேகம் உற்பத்தியாகி கொண்டிருக்கிறது.. அதனால் எதற்கும் அஞ்சாமல் அதர லோக வாசிகளை ரட்ச்சிப்பாயாக"

"அதரா என்னடா ஏதேதோ உளறுகிறாய் அதெல்லாம் உனக்கு ஒன்றும் ஆகாது.. நீயேன் அபசகுனமாக பேசிக் கொண்டிருக்கிறாய்"

" அக்கா என் உள் மனது சொல்கிறது இன்றோடு இந்த அதர நதினின் பயணம் முடியப் போகிறது..பயணம் முடியும் முன்னரே என்னுடைய கடமைகளை நான் செய்தாக வேண்டுமல்லவா.. "

" மகனே ஆனால் அதர லோகத்தின் வேந்தனான உன்னுடைய வாரிசை தவிர வேறு யாருடைய வாரிசும் அதர லோகத்தை ஆழ முடியாது.. அதே சமயம் உயிர் தியாகம் செய்தாலும் அதை பொக்கிஷம் ஏற்று கொள்ளாது மாறாக நாம் கடவுளின் கோபத்திற்கு ஆளாகி பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்".சற்று நேரம் கண் மூடி தாயின் கூற்றை தன்னுள் ஆலோசித்து அதரன்

" அம்மா சொல்வதும் உண்மைதான்.. அக்கா நான் திரும்பி வருவேன் கண்டிப்பாக என் கடமையை நிறைவேற்ற இதே அதர லோகத்தில் என் காலடி படும்"

" எப்பொழுது அதரா"

" ஒருவேளை இந்த பொக்கிஷத்தை மீட்கும் போரில் நான் மரணித்து விட்டால் உயிர் தியாகம் செய்ய வேண்டிய நூறாவது வருடம் நான் இங்கே வருவேன்..இந்த உலகத்தின் எந்த மூலையில் நான் பிறந்து இருந்தாலும் என்னுடைய கடமையை நிறைவேற்ற அதர வேந்தனாக நான் இங்கே வருவேன்"அவன் உணர்ந்து சொன்னானா இல்லை எதிர்காலத்தை தீர்க்கதரிசனமாக சொன்னானா தெரியவில்லை ஆனால் அவன் கூறிய கூற்று கடவுளால் அவன் வாயிலிருந்து சொல்லப்பட்ட கூற்று..

 அதன்பின் அதரன் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவில்லை..வருணனை ஆயத்தமாக இருக்க சொல்ல அவன் தன்னவளை தேடிச் சென்றான். அவளை இங்கே அழைத்து வந்த நாளில் இருந்து இந்த நடைபாதையில் எத்தனை முறை நடந்து இருப்பான். அறையில் அவள் இருப்பாள் என இந்தப் பாதையில் நடக்கும் போதே அவன் மனம் பூரித்து போகாதா.. ஆனால் இன்று அவன் ஒரு கணக்குப் போட விதி இன்னொரு கணக்கு போட்டது.உயிர் தியாகம் செய்வதே தன் கடமை என கூறியவன் எந்த பொக்கிஷத்தின் முன்பு உயிர்த் தியாகம் செய்ய வேண்டுமோ அந்த பொக்கிஷமே களவாடப்பட்ட அவன்தான் என்ன செய்வான்..

இப்பொழுதும் அவன் மனதில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது அது அவனின் மீனம்மாவை விட்டுச் செல்லக்கூடாது. அறைக்குள் நுழைந்தவன் அவளை கண்களால் தேடினான். என்றுமே அவனுக்கு போக்கு காட்டுபவள் இன்று அவளாக வந்து அவன் முன் நின்றாள். சற்று முன்பு இதே அறையில் அவளுடன் பின்னிப் பிணைந்து அவளது வாசனையில் தன்னை தொலைத்த கணங்களை நினைத்து பார்த்தான். அனைவரிடமும் உத்தரவிட முடிந்த அவனால் அவளின் கண் பார்த்து பேச முடியவில்லை.

 ஏதோ ஒரு தவிப்பு அவனிடம். அவனின் தவிப்பை சரியாக இனம் கண்டு கொண்டவள்" தாங்கள் அனைவரிடமும் கூறியதை நானும் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். அதர லோகத்தின் பிரஜையாக எனக்கும் இந்நாட்டின் பொக்கிஷத்தை காக்க கடமை உள்ளது.பிரஜையாக என்பதைவிட சக்கரவர்த்தினியாக அந்தக் கடமை இன்னும் அதிகமாகவே என்னிடம் உள்ளது.ஆதலால் நீங்கள் ஏதும் மறுத்துப் பேச கூடாது. நானும் இப்பொழுது உங்களுடன் வரப்போகிறேன்"

 அவளைக் கண்டதும் அவனே அறியாமல் பேச்சற்று நின்று கொண்டிருந்தவன் அவர் கூறிய சொல்லின் பொருள் புரிய திடுக்கிட்டு" என்ன உளறிக் கொண்டிருக்கிறாய் வர்ணிகா.. நான் ஒன்றும் பூப்பறிக்க செல்லவில்லை பொக்கிஷத்தை களவாடிய அவர்களிடமிருந்து அதனை மீட்க செல்கிறேன் அப்படியிருக்கையில் நீ என்னுடன் வர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதின் பொருள் என்ன"

" பொருள்..இந்தப் பொருள் உங்களுக்கு தெரிந்திருந்தால் என்னை திருமணம் செய்திருக்க மாட்டீர்கள்..உங்களுக்கு என்னை பார்த்ததும் எந்த பொருள் நினைவிற்க்கு வந்ததோ அதே போல் தான் இன்றும் எனக்கு உங்களுடன் வர வேண்டும் என தோன்றுகிறது அதற்கு தாங்கள் என்ன பொருள் வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ளலாம்.. "

" வீணாக என் கோபத்தைக் கிளராதே பெண்ணே.உன் பேச்சுக்களுக்கு எல்லாம் வளைந்து கொடுப்பவன் அதரன் அல்ல"

"நான் வளைந்து கொடுக்க சொல்பவள் அல்ல..நீங்கள் வேந்தன் உங்கள் கடமையை செய்ய செல்கிறீர்கள். நான் இந்த வேந்தனின் மனைவி ஆதலால் எனக்கும் இந்த லோகத்தை காக்கும் பொறுப்பு உள்ளது நானும் என் கடமையை செய்ய வருவேன்"..

"வேண்டாம் வர்ணிகா நான் சொல்வதை கேள் நானே திரும்பி வருவேனே இல்லையா என்று தெரியவில்லை இதில் உன்னை எப்படி நான் அழைத்துச் செல்வேன்"

" இல்லை நான் தெரியாமல் தான் கேட்கிறேன் நீங்கள் என்னை அழைத்து செல்லவில்லை என்றால் என்னை என்ன செய்வதாய் உத்தேசம்"

 "அது அது எதற்கு உனக்கு"

" உள்ளதை சொல்வதற்கு எதற்கு இந்த தயக்கம் நான் சொல்லிவிடவா.. "

" என்ன என்ன சொல்லப் போகிறாய்"

" ஒருவேளை நீங்கள் மரணித்துவிட்டால் என்னை உங்களோடு அழைத்துச் செல்ல ஆயத்தமாக இங்கே ஒரு ஆளை விட்டு செல்கிறீர்கள். அந்த ஆள் வேறு யாருமல்ல உங்களது மாமா.. எப்படி நான் சரியாக சொல்லி விட்டேனா"

" உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும் ஒட்டு கேட்டாயா.. எவ்வளவு தைரியம் இருந்தால் வேந்தனின் பேச்சை ஒட்டு கேட்பாய்"

" நான் ஒன்றும் வேந்தனுக்கு வேண்டாதவளாக ஒட்டு கேட்கவில்லை வேந்தனின் மனைவியாக தாங்கள் என்ன அடுத்து செய்யப் போகிறீர்கள் என்பதை மறைந்திருந்து தெரிந்து கொணடேன்"

" சரி நீ தெரிந்து கொண்டது உண்மைதான் நான் ஒரு வேளை மரணித்துவிட்டால் உன்னை இங்கே விட்டுச் செல்வேன் என்று கனவிலும் எண்ணாதே.. ஒருவேளை நான் திரும்பி வந்தால் உயிர் தியாகம் செய்யும் நாள்வரை உன்னுடன் வாழ்ந்த என் உயிரை உனக்குள் விட்டுச் செல்வேன்.. "

" என்னைப் பார்த்தால் எப்படித் தோன்றுகிறது உங்களுக்கு உங்கள் வம்சத்தை சுமந்து ஈன்றடுக்க தான் நான் பிறந்திருக்கிறேனா.. சரி நேரம் சென்று கொண்டிருக்கிறது வீன் வாதத்திற்கு நேரமில்லை. ஒன்று செய்யலாம் நானும் உங்களுடன் இப்பொழுது வருகிறேன்.. ஒருவேளை நீங்கள் மரணித்து விட்டால் அந்த கணமே என் உயிரை நான் தியாகம் செய்கிறேன். நீங்கள் பிழைத்துக் கொண்டால் உங்கள் உயிரை சுமந்து இந்த அதிர வம்சத்தை செழிக்க வைக்கிறேன்.. இரண்டில் ஒன்று உங்கள் விருப்பப்படிதான் நடக்கும்.. தயவு செய்து என்னையும் தங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.. உங்கள் வாயால் கேட்ட அவச்சொல் நிறைவேறினால் மரணத்தின் வாயிலில் உங்களை என் மடி தாங்கி இதழ்களில் என் இதழ் பொருத்தி வழி அனுப்ப வேண்டும்..

 "அதர வேந்தே வேண்டி உங்களிடம் வரம் வேண்டி நிற்கிறேன் தயைகூர்ந்து நான் வேண்டும் வரத்தை தருவீராக" வர்ணிகா அதரனின் முன் கண்களால் இறைஞ்சி கேட்க அவனாலும் அவனை விட்டு பிரிய முடியவில்லை. எனவே அவள் கூற்றுப்படி வருணனையும் அவளையும் அழைத்துக் கொண்டு பொக்கிஷம் திருடுபோன இடத்திற்கு வந்து சேர்ந்தான்.

 நெடுங்காலமாக திட்டமிட்டு இன்று அந்த திட்டத்தை நிறைவேற்றி பொக்கிஷத்தை அபகரித்தனர் ஏலியன்கள். அதரன் கூற்றுப்படி அவளிடம் மயங்கி கிடந்ததே ஒரு முக்கிய காரணம்.பொக்கிஷத்தை காக்காமல் காதலியை மட்டுமே கண்னோக்கி கொண்டிருந்த பலன் இப்பொழுது அனுபவிக்கிறான். வேற்று கிரக வாசிக்கலான ஏலியன்கள் தங்களது பறக்கும் தட்டில் அதர லோக்கத்திற்குள் தடலாடியாக நுழைந்தனர்.

அவர்களின் முன்னோர்கள் தொழில்நுட்பபடி கணக்கிட்டு கூறிந்ததை இன்று செயல்படுத்துவதே அவர்கள் நோக்கம். கணக்கீடு என்னவென்றால் ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒரு முறையில் அதர வம்சத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதரா தன் உயிரை அந்த பொக்கிஷத்தின் முன்பு தியாகம் செய்யவேண்டும். தன்னலம் கருதாத உண்மையான தியாகத்தால் அந்த பொக்கிஷத்தின் பலம் பெருகும் சக்தி அதிகரிக்கும்.

 ஆனால் உயிர் தியாகத்தில் காண நாள் நெருங்க நெருங்க பொக்கிஷம் தனது பலத்தை இழந்து கொண்டிருக்கும். அதன் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக மங்கி கொண்டிருக்கும். சரியாக அந்த நேரம் சென்றால் மட்டுமே பொக்கிஷத்தை கையகப்படுத்த முடியும். இந்தக் கணிப்பு படி தான் ஏலியன்கள் உயிர்த்தியாகம் செய்ய இன்னும் மூன்றே வாரம் இருக்கும் நிலையில் அதன் ரோகத்திற்கு வந்தன. பறக்கும் தட்டில் வந்தவர்கள் தங்களுடைய தட்டை கீழே இறக்கினால் எங்கே அதரனுக்கு தெரிந்து விடுமோ என எண்ணி நடுவானத்தில் ஒரு மாய உலகம் இருக்கும். அங்கே தங்களின் கப்பலை தரை இறக்கி விட்டு அங்கிருந்து அதர லோகத்தினுள் குதித்தனர்.

 இப்படி ஒரு உலகம் இருப்பது ஏலியன்களை தவிர அதர வம்சத்திற்கே தெரியாது. வானத்தில் இருந்து அவர்கள் குதித்து அதரலோகத்தில் தரையிறங்கிய நேரத்தில் யாருமே அவர்களை கவனிக்காதது தான் விதி போல. இல்லை கவனிக்க வேண்டியவன் காதலியை கவனித்து கொண்டிருந்ததின் விளைவா..

தரையிறங்கிய அவர்களுக்கு பொக்கிஷத்தை வைத்திருக்கும் இடம் நன்றாகவே தெரியும் அவர்களுக்கு மட்டுமல்ல அதரலோக்கத்திற்கே தெரியும் அளவு ஒரு இடத்தில் தான் அந்த பொக்கிஷம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. யாருமே அதர வம்சத்தை தாண்டி அதனை தொட்டது என்ன பார்த்தது கூட கிடையாது..பொக்கிஷம் பாதுகாக்கபட்ட இடத்திற்கு வந்த ஏலியன்கள் அங்கிருந்த வீரர்களை தாக்க தொடங்க அவர்கள் என்ன சாமானிய மானிடார்களா..

அதரனின் வீரர்கள்.ஒரு கையில் காதயுதம் போல ஒன்றும் மறுக்கையில் ஆறடி வாளும் ஏந்தி வந்த ஏலியன்களை தாக்க அவைகள் தங்கள் தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தி கோழி குண்டு அளவே ஆன சிறிய உருண்டையை எடுத்து அந்தரத்தில் மிதக்க விட அந்த சிறிய உருண்டையில் இருந்து ஐந்து பக்கமும் நீண்ட வாள் தோன்றி காற்றில் சுழன்று வந்து அதர வீரர்களை வெட்டி வீழ்த்தியது.

வீரர்கள் இரண்டாக வெட்டப்பட்டு விழ ஏலியன்கள் சுலபமாக பொக்கிஷத்தை கையெக்கப்படுத்த நொடியில் விஷயம் அறிந்து கொண்டான் அதரன்.அதர லோகத்தின் வீரர்கள் வேந்தனின் ஆணைப்படி பறக்கும் யானையின் மீதும் குதிரையின் மீதேறி லோகத்தின் மூலை முடுக்குகளில் தயாராக நிற்க இன்னும் இன்னும் வான்வழியாக பறக்கும் தட்டுகள் வர அவைகளின் உள்ளிருந்து மேலும் பல ஏலியன்கள் அதர லோக்கத்திற்குள் குதிக்க அதர வீரர்களுக்கும் அவைகளுக்கும் கடும் யுத்தம் நிலவியது.

லோகமே மயான காடாக மாறி கொண்டிருக்க நொடியில் அங்கே வந்தான் அதரன் வர்ணிகா வருணனுடன்.தன் வீரர்களை கொன்று குவிக்கும் ஏலியங்களை கண்டவன் ரத்தம் சூடேரியது. அங்கே பொக்கிஷத்தை எடுத்த ஏலியன்கள் அதரனை கண்டு ஓடாமல் அவனை வீழ்த்த வர வர்ணிகாவின் கரத்தை பிடித்து வருணனிடம் ஒப்படைத்து விட்டு களம் இறங்கினான்.குட்டி குட்டி பறக்கும் மனிதர்களும் கூட கையில் வாள் ஏந்தி சண்டையிட அந்த இடத்தை காண முடியவில்லை. ஒரே இரத்த வெள்ளம்.

பறக்கும் மனிதர்கள் குட்டி வாளால் அந்த ஏலியன்களின் கண்களை குத்தி குருடாக்க உடனே பெரிய வீரர்கள் அவைகளின் தலையை உடலில் இருந்து பிரிதெடுத்தனர்.வர்ணிகாவின் தந்தை கடலரசன் தங்கள் பங்கிற்கு தன் படை வீரர்களான பெரிய பெரிய ஆழிகளையும் அதனை வழிநடத்த திமிங்கலம் சுறா சண்டை மீன்கள் டால்பின்கள் என தன் சேனதிபதிகளை அனுப்ப ஆழிகளின் மேல் அமர்ந்து வந்த அதர வீரர்களை தவிர ஏலியன்களை சுருட்டி ஆழியின் உள்ளே இழுத்து சென்று ஆழ கடலின் உள்ளே தரை பிளந்து கொள்ள ஏலியன்கள் கடலின் அடியில் புதைக்கப்பட்டன.

அதர லோகத்தின் மரங்களும் செடிகளும் கொடிகளும் கூட தங்கள் பங்கிற்கு துவம்சம் செய்து ஏலியன்களை சிதறடித்தன. அதரனோ இருக்கரங்களிலும் இரு வாள்களை ஏந்தி தன் முன்னால் நின்ற அத்தனை ஏலியன்களின் தலைகளையும் வெட்டி வீழ்த்தி கொண்டிருந்தான்.வர்ணிகாவிற்கு வேறு கால்கள் நடுங்க தொடங்க அவளின் நிலையுணர்ந்த வருணன் அவளை அருகில் இருந்த குளத்தில் இறக்கி விட்டான். அவனும் வாளேந்தி எதிரிகளை வெட்டி வீழ்த்த பொக்கிஷத்தை வைத்திருக்கும் ஏலியன்களை கண்டு அவைகளை கொன்று அந்த பொக்கிஷத்தை தன் வசபடுத்த அதற்குள் வேறு ஏலியன்கள் அவனுடன் சண்டைக்கு வந்தது.

தன் கையில் பொக்கிஷத்திற்கு பாதுகாப்பு இல்லை என்பதை புரிந்து கொண்டவன் வர்ணிகாவை தேட அவள் குளத்தின் அருகே வந்த ஏலியன்களை தன் வாளால் தாக்கி கொண்டிருந்தாள். நிமிடத்தில் அவள் முன் தோன்றியவன் ஏலியன் இதயத்தில் ஒரு சொருகாக வாளை சொருகி விட்டு"வர்ணிகா இந்த பொக்கிஷத்தை எடுத்து கொண்டு கடலுக்குள் சென்று விடு"என்றவன் நொடியும் தாமதியாமல் தாக்குதலை தொடர்ந்தான்.

வர்ணிகாவோ பொக்கிஷத்தை பார்த்தாள்.அதர லோகத்தை காக்கும் தெய்வம்.ஆனால் இதுவல்லவோ தன் கணவனை தன்னிடமிருந்து பிரிக்க பார்க்கிறது.. இது இருந்தால் தானே அவன் உயிர் தியாகம் செய்து என்னிடம் இருந்து பிரிந்து செல்வான். என நினைத்தவள் பொக்கிஷத்தை எடுத்து கொண்டு நீரிலிருந்து வெளியே ஓடினாள் ஏலியன்களை நோக்கி.

என்னதான் தாக்குதலில் கவனமாக இருந்தாலும் வர்ணிகா மேலும் ஒரு கண்ணை வைத்தவன் அவள் ஓட அவள் செய்ய போகும் காரியத்தின் அனார்த்ததை உணர்ந்து உள்ளம் பதறி"வர்ணிகா நில் இந்த அனர்த்தம் செய்யாதே"என கூறிக்கொண்டே ஏலியன்களை கொன்று குவித்தான். ஆனால் வர்ணிகா எதையும் காதில் வாங்காமல் ஓடி கொண்டே இருக்க வேறு வழியின்றி கடமை வீரனாய்"வர்ணிகா நான் அதர லோகத்தின் வேந்தன் உனக்கு சாபமிடுகிறேன் உன் கால்கள் இரண்டும் மறைந்து நிரந்தர வாலாக மாறாட்டும்"என்றான்.

உடனே வர்ணிகாவின் கால்கள் மறைந்து வாலாக மாற அவளோ நிலைதடுமாறி விழ அவள் கையிலிருந்த பொக்கிஷம் தூர விழுந்தது. அதை ஒரு ஏலியன் எடுத்து கொண்டு வானத்தின் மத்தியில் மறைந்திருக்கும் மாய உலகத்திற்குள் செல்ல தன்னவளை தானே வஞ்சித்த கொடுமையை எண்ணி கண்ணீர் வடிக்கவும் நேரமில்லாமல் அதரனும் வானில் பறக்க தொடங்க அவன் முதுகில் இறக்கை முளைத்தது.

நடுவானில் மறைந்த அந்த ஏலியணை எங்கிருந்து கண்டு பிடிப்பான் அதரன். ஆனாலும் அவன் அதரனாயிற்றே. மனதை ஒருநிலை படுத்தி தன் எண்ண கோட்டினை நேராக அவன் சிந்தையில் பளிச்சிட்டது அந்த மாய உலகம். இப்படி ஒரு உலகம் இருப்பது அவனுக்கே தெரியாத நிலையில் இப்பொழுது ஆச்சர்யதோடு அந்த மாய உலகத்தின் வாசலை தேடி உள்ளே நுழைந்தான் அதரன். அங்கே அந்த ஏலியனை போல் அல்லாமல் மிருக தலையுடன் பல உருவங்கள் அலைய தங்கள் உலகத்திற்குள் வந்தவனை எதிர்க்க வந்த அந்த உலக மனிதர்களிடம் தான் யாரென்பதை தெரிவிக்க அந்த உலகத்தின் அதிபதி அதராவிடம் மன்னிப்பு கேட்டான் அவனும் ஏலியன் பேச்சை கேட்டு அவைகளுக்கு உதவி புரிந்ததற்கு.

அதரன் அவனை பெருந்தன்மையாக மன்னிக்க ஏலியனை அழிக்க அவனுக்கு வழிவிட்டு விலகி நின்றனர் மாய உலகத்தினர். அதரன் கொலைவெறியுடன் அந்த ஏலியனையும் வெட்டி வீழ்த்த அப்பொழுது அந்த ஏலியனின் கொடுக்க அதரனின் இதயத்தை கிழிக்க உயிரை இழுத்து பிடித்தவன் ஏலியனை கொன்று பொக்கிஷத்தை கைப்பற்றி மாய உலக அதிபதிக்கு நன்றி உறைத்து தன் லோகம் வர அங்கே ஏலியன்கள் அனைத்தும் அழிந்து கிடந்தன.

தள்ளாட்டமாக தரையிரங்கியவனை தாங்கி பிடித்தான் வருணன்.பொக்கிஷத்தை வருணனின் கரத்தில் ஒப்படைத்தவன் தன்னவளை நோக்கி தள்ளாடிப்படியே ஓடினான். உடல் முழுவதும் சிதைந்து குருதி பெருக்கெடுக்க தன்னவளை தேடி ஓடினான். அவனால் கால்களை இழந்து தரையில் மூச்சுக்கு ஏங்கி கொண்டிருந்தாள் வர்ணிகா. வருணன் அவளை தூக்க போக பிடிவாதமாக மறுத்து அங்கேயே கிடந்தாள்.

தன்னவளின் நிலை கண்டு அதரனின் கண்களில் கண்ணீர் உருண்டு ஓடியது. அவளை தூக்கி தன் நெஞ்சில் கிடத்தியவன்"பைத்தியக்காரி எதற்கடி இந்த பிடிவாதம்..நீ செய்த அனர்த்தத்தின் விளைவை பார்த்தாயா"

"பார்க்காமல் என்ன.. அனர்த்தம் என அறிந்தே தான் செய்தேன். ஏனென்றால் நான் உங்களை நேசிக்கிறேன். நீங்கள் என்னை விட்டு செல்வதை நான் அனுமதிக்க இயலாது.உங்கள் காதலின் ஆழம் எனக்கு தெரியும். ஆழமான காதலை ஆயுள் வரை வாழாமல் அல்ப ஆயுளில் புதைக்க என்னால் முடியாது. அதனாலே அப்படி செய்தேன்.. என்னை மன்னியுங்கள்"

"வர்ணிகா என் கண்ணே.. என் மேல் இத்தனை காதலாடி உனக்குள்..நீ செய்த காரியத்திற்கு மன்னிப்பு வேண்ட அவசியமில்லை ஆனால் நான் செய்ய போகும் காரியத்திற்கு என்னை மன்னித்து விடடி மீனம்மா"என்றவன் அவளை விலகி எழுந்தான். அவள் புரியாமல் தவிக்க அவளின் தவிப்பை கண்டவன் சகிக்க இயலாமல் தட்டு தடுமாறி வருணனை கையை பிடித்து"மாமா பொக்கிஷம் பத்திரம் நான் சொன்னபடி நூறு ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப அதர லோக்கத்திற்குள் வருவேன்.. இன்று என்னால் பொக்கிஷத்தின் முன் உயிர் தியாகம் செய்ய முடியாமல் போய் விட்டது.நூறு ஆண்டுகளுக்கு பிறகு வருவேன் உயிர் தியாகம் செய்து என் கடமையை செய்வேன். அதுவரை என் வர்ணிகா"

அவன் தன்னை கொல்ல போகிறான் மரணத்திலும் அவனோடே பயணிக்க ஆவலாக இருந்தவளுக்கு இடி இறக்கினான் அவன்"அதுவரை வர்ணிகா உயிருள்ள கற்சிலையாக சமைந்திருப்பாளாக.."என்றது தான் தாமதம் மூச்சுக்கு போராடி கொண்டிருந்தவள் கத்தி கதறி அழ தொடங்கினாள். எட்டி அவன் கால்களை பிடித்து கதறி துடித்தாள். "வேண்டாம் இம்மாதிரி என்னை சபிக்காதீர்கள் என்னையும் கொன்று விடுங்கள் ஆனால் இந்த சாபத்தை மட்டும் கொடுக்காதீர்கள் வேந்தே வேண்டாம் இந்த தண்டனை"

வர்ணிகாவின் கதறல் அங்கிருந்த அனைவருக்கும் கண்ணீரை வரவழைக்க வருணனோ"அதரா வேண்டாமடா இம்மாதிரி செய்யாதே.. இது சுயநலம் அதரா.. உனக்கு மறுபிறவி உண்டென்றால் அவளுக்கும் கண்டிப்பாக இருக்கும் நீ பிறவி எடுக்கும் போது அவளும் பிறந்து உன்னை மணப்பாள் என்று வரம் கொடு அது நியாயம் இது அநியாயம் அதரா வேண்டாம்"

"இல்லை மாமா எனக்கு என் வர்ணிகா தான் வேண்டும்.நான் பார்த்த நொடியே என்னை களவாடிய வர்ணிகா தான் வேண்டுமென்றவன்"தன் கரத்தை காற்றில் வீச வர்ணிகா நீல நிற துகல்களால் சூழப்பட்டு கதறி கொண்டே கர்சிலையாகினாள். அவளின் கண்ணீர் கற்சிலையாக மாறினாலும் விடாமல் வழிய அவளை பார்த்து கொண்டே அதரநதினின் உயிர் பிரிந்து சடலம் கீழே விழுந்தது.

அதன் பின் அதரன் கூறியது போல மிருளாவிற்கு பெண் குழந்தை பிறக்க அக்குழந்தையே அதர லோகத்தை வழிநடத்த வருணன் பொக்கிஷத்தை பாதுகாக்க வர்ணிகாவின் கற்சிலையை அதரன் இறந்த இடத்திலேயே விட்டு சென்றார்கள்.அவர்களும் சிலையை கோட்டைக்குள் வைக்க தான் முயற்சித்தார்கள் சிலை ஒரு அடி கூட நகரவில்லை.வருணன் இருந்த வரை வர்ணிகா சிலையை தினம் வந்து பார்த்து சென்றான். அவன் மறைந்ததும் காலப்போக்கில் வர்ணிகா இருந்த இடம் புதர் மண்டி போனது.

மிருளாவின் புதல்விக்கு அடுத்து வந்த அனைவரும் அதரா வம்ச அரியணை காவலாளியாக மட்டுமே இருந்தனர். மக்கள் அதரா வருகையை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.காலங்கள் ஓட அதரனின் ஆன்மா ஒருமுறை வெள்ளைகாரனாக பிறந்து வாழ்ந்து முடித்து நதினாக மகேந்திரன் சுகன்யா தாம்பதிகளின் மகனாக பிறக்க உண்மையான பாசமா இல்லை விதியா என்று கிரகிக்க இயலாமலே வருணன் வருணாக பிறந்து இப்பிறவியிலும் நதினிடம் மாட்டிக்கொள்ள இதில் பாவப்பட்ட பிறவியாக நூறு ஆண்டுகள் கற்சில்லையாக காரிகையவள் காத்திருந்தாள்..

அதரா - 17


"மச்சி நாம ஏன் இங்க வந்துருக்கோம்னு தெரிஞ்சிருச்சுடா"

"ஏன் மச்சி"

"நா உயிர் தியாகம் பண்ண"

"என்னாது"அதிர்ச்சியில் வாய் பிளந்தான் வருண்."டேய் இன்னாடா இன்னானமோ சொல்லிக்கினு இருக்க உயிர்த்தியாகம்னா உசுர கொடுக்குறது தானே.. நீ ஏன் உசுர கொடுக்கணும் இப்ப. மொதகாண்டி நீ அந்த கோட்ட குள்ளார தானே உலாதிகினு இருந்த.அப்றம் என்ன எழவுகாண்டி பேய் வாக்கிங் போற ராத்திரி இங்கே ஒக்காந்து இருக்க"

"மச்சி நாம எதுக்காண்டி இங்கன வந்தோம்னு கண்டுபுடிக்க வந்தேன்டா"

"தோ டா ஜேம்ஸ் பாண்டு இன்னாத்த ராசா கண்டு புடிச்ச"நதின் தீர்க்கமாக வருணை பார்க்க அதுவரை இருந்த இலகு தன்மை மறைந்து நண்பன் கூறப்போவதை கேட்க தயாரானான் வருண். முதலில் ஏனோதானோவென்று கேட்டுக் கொண்டிருந்தவன் பின்பு ஒரு கட்டத்தில் மணலில் அமர்ந்து விட்டான் ஒரு கையை தலையில் வைத்து. நதின் விறுவிறுவென தன் வாழ்க்கை வரலாற்றையே கூறி முடித்து நண்பனை பார்க்க" மச்சி இன்னாடா இதுக்கே ஒக்காந்துட்ட.. இன்னும் எவ்வளவோ இருக்கு மச்சி"

" டேய் கஸ்மாலம் என் வாயில நல்லா வண்டி வண்டியா வந்துரும் சொல்லிட்டேன்.. செவனேன்னு கண்ணாலத்துக்கு வந்தவன இங்கன இழுத்துட்டு வந்து விட்டுட்டு பேய் கதை எல்லாம் சொல்லி இந்த குயந்தய பேஜார் பண்றியா..நெஞ்சுல இருக்குற மஞ்சா சோத்த எடுத்துருவேன் அவ்ளோதான் மாமே சொல்லிட்டேன்"

"மச்சி இன்னாடா நா சொன்னா நம்ப மாட்டியா.. அவ்ளோதானா நம்ம நட்பு?"

"ஸ்ஸ்ஸ் மாமே ஓவரா சீன் போடாத.. உன்னிய நம்பாம வேற எவன நா நம்புவேன்.."

"அப்றம் இன்னாடா..அதான் நம்புறேன்னு சொல்றல வா நாம போயி பொக்கிஷத்த கண்டுக்கிட்டு வரலாம்"

"ஏது பொக்கிஷமா மாமே பொக்கிஷமும் வேணாம் புசுவானமும் வேணா.. மூடிக்கினு நடைய கட்டு நா வரும்போதே தம்மாதுண்டா மனுஷனுங்க பறந்துகினு இருந்தானுங்களே அவனுங்க கையில விசாரிச்சிட்டு வந்துருக்கேன் இங்க மந்திரவாதி எல்லாம் படும் பயங்கரமா இருக்காங்களாம் எப்படியாச்சும் வூட்டுக்கு போயி சேந்துரலாம் மச்சி"

"முடியாது மச்சி நீ வேணும்னா போ.. என்னால முடியாது.. எனக்காக நூறு வருசமா காத்திருக்காங்க மாமே நா எப்டி சுயநலமா என் உசுரு மட்டும் பெருசுனு பொசுக்குன்னு விட்டு போக முடியாது நீ போ"

"கழுத்து மேலயே ரெண்டு போட்டேன்னு வையென் உன்னிய இங்க சாவ உட்டுட்டு நா பொழச்சு இன்னாடா பண்ண போறேன்.. எது எப்டியோ நீ எங்க இருப்பியோ அங்க தான் நானும் இருப்பேன்.. சரி மச்சான் ஆனா ஒரு டவுட்டு.. போன ஜென்மத்துல உன் சுயநலத்தால அந்த கடலு கன்னியை இந்த பாடு படுத்தி இருக்கியே இந்த ஜென்மத்துலயாச்சும் அவள ரிலீஸ் பண்ணுவியா"

"இன்னா மச்சி இப்படி கேட்டுட்ட என்ன நீ புரிஞ்சுகிட்டேன் அவ்வளவுதானா.. அந்த அளவுக்கு சுயநலமானவனா இந்த நதினு..அவளுக்கு ரிலீஸ் டேட்டே அவ வாழ்க்கையில இல்லடா.. "

" டேய் இதுக்கு பேரு சுயநலம் இல்லாம வேற இன்னா"

"லவ்வு மாமே"..

" என்ன நாசமா போன லவ்வோ.. சரி அந்த ஜென்மத்துல என் ஆளு யாரு மச்சி"

"உன் ஆளா மாமே போன ஜென்மத்துலயும் நீ மொட்ட பய தான்"

"டேய் நதினு வேணாடா அந்த வார்த்தய சொல்லாத மச்சி கேக்குறப்போ நெஞ்சே வெடிகுறே மாறி இருக்கு.."

"இன்னும் வெடிக்கலயா'

"கூடிய சீக்கிரம் வெடிச்சிரும்.. அங்க பாருடா அந்த பறக்குற யார வருது"வஜ்ரா இவர்களை நோக்கி வர

"வஜ்ரா எங்கள காணலன்னு தேடிகின்னு வந்தியா"

"ஆம் வேந்தே தங்களை நெடு நேரமாக தேடிக்கொண்டிருந்தேன்..பின் உங்கள் நண்பர் இங்கே வந்ததை கேள்வியுற்று அவரை பின்தொடர்ந்து உங்களை கண்டு விட்டேன்.."

"வஜ்ரா நீ அப்டியே லுக்குல சிம்மாவ மாறியே இருக்க.."

"மன்னிக்கவேண்டும் வேந்தே தாங்கள் கூறியது புரியவில்லை"

"ஸ்ஸ்ஸ்ப்பா உன்னிய பாக்க சிம்மா மாறி இருக்கேனு சொன்னேன்"

"வேந்தே அப்படியானால் தங்களுக்கு"

"ம்ம் நா அதர நதின்"

"அற்புதம் வேந்தே மிக அற்புதம் தங்களுக்கு அனைத்தும் நினைவு வந்து விட்டது.."

"ம்ம்ம் ஆமா இப்ப யாரு இந்த லோக்கத்த ஆளுரா"

"வேந்தே இப்பொழுது யாரும் ஆளவில்லை.உங்களுக்கு பிறகு வந்த அதராக்களில் இறுதியானவர் வாரிசின்றி இருந்து போக ராஜ விசுவாசிகள் உங்களுக்காக அதர அரியணையை காப்பாற்றி வருகிறார்கள்.."

"ம்ம்ம் செம்ம.. மச்சி கேட்டியா இங்க அய்யா ராஜா"

'அதான் சாவ போறியே நீ ராஜாவா இருந்தா இன்னா கூஜாவா இருந்தா இன்னாடா என் வென்று"

"போடாங்க..வஜ்ரா நீ இவன இட்டுக்கினு போ நா பின்னாடியே வரேன்"

"வேந்தே தாங்கள்"யானை தும்பிக்கையால் காதை நீவி அவன் பேசும் பாஷை புரியாமல் செய்கை செய்ய

"வருண கூட்டிட்டு போன்னு சொன்னேன்"

"கூட்டிட்டு போறதா சார் எங்க போறீங்க அப்ப"

"என் பொண்டாடிய பாக்க'

"உனக்கு எப்படா கண்ணாலம் ஆனுச்சு"

"நூறு வருஷம் முன்னாடி போடா"நதின் சொல்லிக்கொண்டே ஓடி போய் கடலில் குதிக்க வருணும் அவன் பின்னே ஓட முயன்றான் அவனை ஒரே தூக்காக தூக்கி முதுகில் உட்கார வைத்தது யானை..

"இந்தா யான எதுக்கு ஆ ஊன்னா என்னிய தூக்கி டாப்ல ஒக்காற வைக்குற"

"எங்கள் வேந்தன் தங்களை அழைத்து செல்ல கூறினாரே அதுக்கு"

"அவன் சொன்னா என்ன டாப்ல ஒக்கார வைப்பியா செஞ்சிருவேன் உன்ன.. நீ இன்னா பண்ற அடிச்சாலே சும்மா கபாலத்துக்கு காத்து அடிக்குற மாறி ஒரு சரக்க எடுக்கினு வா"

"என்ன நண்பரே"

"அதாவது அது ஆ சோமபானம் கொண்டு வா"

"சோமபாணமா அதை என் கொண்டு வர வேண்டும் இங்கயே கிடைக்குமே"

"இங்க நம்மள தவிர வேற எவனயும் காணலையே.."

"உங்கள் விழிகளுக்கு புலப்படவில்லை அதற்காக இங்கே நம்மை தவிர வேறு யாரும் அல்லவென்று நீங்கள் சொல்ல கூடாது நண்பரே"

"கண்ணுக்கே தெரியாத மனுஷங்களா அப்டினா பேயா'வருண் பீதியில் உறைய வஜ்ரா ஒரு பலத்த பிளிரலை பிளிர அங்கே காற்றில் மிதந்து கலந்து அரூபமாய் ஒரு பெரிய கிண்ணம் மட்டும் மிதந்து அந்தரத்தில் நிற்க வருண் பயத்தில் அலறி வஜ்ராவின் மண்டையில் படுத்து அலற

"நண்பரே ஏன் இந்த கொடூர அலறல்"

"ஐயோ பேயி இந்தா யான உன் காலுலகாண்டி விழறேன் தயவு செஞ்சு விருட்டுன்னு பறந்து வேற ஏரியாவுக்கு போ"

"தாங்கள் கூறுவது புரியவில்லையே நண்பரே"

"இன்னா புரியலையா பேஜார் பண்ணாத சொல்லிட்டேன் இங்கன இருந்த தெரிச்சிருவோம்"

"தாங்கள்"

"செத்துருவ வாய மூடிரு இங்க பேய் இருக்கு வேற இடத்துக்கு போ"

"நண்பரே எங்கள் உலகத்தில் அப்படி ஏதும் இல்லை"

"என் கண்ணு நொள்ளையா அப்றம் எப்டி கப்பு காதுல மிதக்குது"

"ஓ அதுவா அரூப மானிடர்கள் இந்த பகுதியில் வசிக்கிறார்கள் இப்பொழுதும் கூட அவர்களில் ஒருவர் தான் உங்களின் அருகில் நிற்கிறார் அதும் அவர் பெண்"

"இன்னாது பொண்ணா.. ஐயோ மானம் போச்சே"பெண் என்றதும் வருண் கலையாத சிகையை களைத்து விட்டு கையாலே சீவி தன் மன்மத சிரிப்பை சிந்த அந்தரத்தில் மிதந்த கோப்பை மண்ணில் விழுந்தது..அதை கண்டதும் தன் இமேஜ் டேமேஜ் ஆகிய கடுப்பில்

"ஹேய் யாரு அது அறிவில்ல.. ஒரு மட்டு மறுவாதி இல்ல.. இப்டிதான் கப்ப கீழே போடுவியா அதும் சரக்கு கப்ப.. சரக்கோட அரும தெரியுமா உனக்கு.. ஹேய் நீ யாரா இருந்தாலும் இப்ப உன் மூஞ்ச நா பாக்கணும் ஒழுங்கா உன்ன காட்டு"

"நண்பரே ஏன் இவ்வளவு கோபம் பொறுமை பொறுமை"

"பொறும பொங்கி ஊத்துது.. நீ மூடு..ஹேய் இந்தாடி ஒழுங்கா ரவுசு பண்ணாம உன்ன காட்டுடி"ஒரு முழு நிமிடத்திற்கு பிறகு இளஞ்சிவப்பு வண்ண மினுக்கும் துகள்கள் மேலிருந்து கீழ்வரை ராட்டினம் சுற்ற மெல்ல மெல்லமாக ஒரு உருவத்தின் வடிவருவம் தெரிந்தது.முதலில் கால் விரல்கள் செம்பவள பாதங்கள் அதற்கு மேலே கண்கள் கூச செய்யும் கால்கள் இளஞ்சிவப்பு வஸ்திரம் சுற்றிய தொடைகள் பாலின் வெண்மையில் இடை அதற்கு மேலே இளம் பச்சை வண்ண வஸ்திரம் மாரழகை மறைக்க நீண்ட கழுத்தில் பச்சை நரம்புகள் வெளியே தெரிய முகத்தை கண்ட வருண் மயங்கியே விழுந்து விட்டான் வஜ்ரா மண்டையில்..

நடுகடலில் தன்னவளை தேடி திரிந்து கொண்டிருந்தான் அதரா..அமைதியான ஆழியில் அந்தக்கார இருளை கூர் விழிகளில் கிழித்து தன்னவளின் வாசம் தேடி சென்றான். அவன் மனமே அவனுக்கு வழிகாட்ட உணர்வுகளின் வழிகாட்டலில் வர்ணிகா இருக்கும் இடத்தை கண்டு பிடித்தான்.அங்கே ஒரு குகை போன்ற ஒரு கல்லின் உள்ளே தன்னை குறுக்கி கண்மூடி அமர்ந்திருந்தாள் வர்ணிகா.

நதினுக்கு அவளை காண வேதனை நெஞ்சை பிடிங்கியது.அவன் மட்டும் பிறந்து வளர்ந்து சந்தோசமாக ஆடி ஓடி திரிந்து வாழ்ந்துள்ளான். ஆனால் அவளோ அவனால் அல்லவா தன் உறவுகளை இழந்து கால்களை இழந்து நட்ட நடு கானகத்தில் கற்சிலையாக கனத்த இதயத்தோடு காலங்கள் நூறாண்டுகள் கடந்த நிலையில் இன்று அனாதையாக நிற்கிறாள். அவளின் நிலைக்கு காரணம் இவன் தானே..

மனம் வலிக்க அவளருகில் சென்றான்"எதற்கு இங்கு வந்தாய் உயிரோடு உள்ளேனா இல்லையா என காண வந்தாயோ.. இந்த அவல நிலைக்கு அன்றே என்னை கொன்று புதைத்திருக்கலாமே ஏன் இந்த அனர்த்தம் செய்திர்கள் வேந்தே"மூடிய விழிகள் மூடியப்படி இருக்க உதடுகள் மட்டும் அசைய அவன் வரைவை அறிந்து கொண்டவள் கூறிய வார்த்தை ரணமாய் வலிக்க

"வர்ணிகா என்ன மன்னிச்சிரு.. நா பண்ணது தப்பு தான்.. ஆனா அப்ப இன்னா பண்றதுன்னு ஒன்னியும் புரியல உன்ன வுட்ற கூடாதுனு அப்டி பண்ணிட்டேன்.. என் லவ்வு உண்ம வர்ணிகா"

"உங்கள் பிதற்றலை கேட்க எனக்கு நேரமில்லை புரியவும் இல்லை.. தயை கூர்ந்து இங்கிருந்து சென்று விடுங்கள்'

"போறேன் அதுக்கு முன்னாடி உன் சாபத்த ஒடச்சிட்டு போறேன்.
வர்ணிகா நா நதின் திரும்பவும் கடமைய நிறைவேத்த பொறந்து வந்துருக்கேன் அப்டின்றது உண்மன்னா உன் சாபம் இப்பவே சரியாகனும்.. நீ எங்கள மாறி சாமானிய மனுஷியா மாறனும்..ஆனா உனக்கு வேணும் போது நீ கடல் கன்னியா மாறலாம்"என்று சாபம் விமோசனம் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவளை மனிதியாக்க வர்ணிகா அடுத்த நிமிடமே வால்கள் மறைந்து கால்கள் தோன்றி மூச்சு விட முடியாமல் மூச்சுக்கு போராடி மூர்ச்சையானாள்..அங்கே வருண் மூர்ச்சையானன் இங்கே வர்ணிகா மூர்ச்சையானாள்.

தொடரும்..

அதரா - 18


"நண்பரே நண்பரே என்ன இது என் சிரசின் மீது துயில் கொள்கிறீர்கள் எழுந்திருங்கள் நண்பரே"மயங்கி வஜ்ராவின் மண்டை மீது விழுந்து கிடந்த வருண் எழுவதாய் சாத்திய  கூறுகள் இல்லை. வஜ்ரா பலமுறை அவனை எழுப்பி பார்த்து முடியாமல் கடல் நீரை தும்பிக்கையால் அல்லி தன் தலை மேல் தெளிக்க நீர் பட்டு கண் திறந்தான் வருண்.. அவன் மயக்கம் தெளிந்து விட்டான் என்பதை அவனுடைய அசைவை வைத்து உணர்ந்து கொண்ட வஜ்ரா

" நண்பரே என்ன ஆயிற்று உங்களுக்கு.. நன்றாக தானே பேசிக் கொண்டிருந்தீர்கள் சோமபானம் கேட்டீர்கள்  நானும் வரவழைத்தேன் அதை உண்டு மகிழாமல் பின்பு ஏன் மயங்கி விழுந்தீர்கள்..  சிறிது நேரத்தில் நான் பயந்தே போனேன்.. உங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் எங்கள் வேந்தனிடம் யார் பதில் சொல்வது..  அவரோ என்னை நம்பி உங்களை விட்டுச் சென்றுள்ளார்"

" இன்னா சொன்ன பயமா வருணுக்கா ஹெஹ்ஹே யம்மா பெரிய ஆளா இருந்தாலும் அச்சு ஒச்சு பொட்டலம் கட்டிருவான் இந்த வருணு.. அவனுக்கே பயமா.. பயம் தான் என்ன பாத்து மெர்சலாவும் மாமே"

" உங்களுக்கு பயம் இல்லை என்று கூற வருகிறீர்களா"

"இம்மா நேரமும் அத்த தானே சொல்லிக்கினு கெடக்கேன்"

" அதை ஒரே வரியில் கூறாமல் எதற்கு இவ்வளவு நேரம் இழுத்து கொண்டிருக்கிறீர்கள்"

"உனக்கு புரியனும்ல அதுக்கு தான்.. ஆமா ஒரு பொண்ணு சரக்கோட நின்னுச்சு எங்க அவ"

"அவர்கள் எப்போதோ சென்று விட்டார்கள்..நீங்கள் அடித்த கூத்தை பார்த்து பாவம் மிரண்டிருப்பார்கள்.."

"அய்ய ரொம்ப பாவம் பாக்காத மாமே.. பொண்ணுங்க நம்ம வீக் பாயிண்ட்லயே அடிச்சிருவாங்க.. நாம ஆம்பளங்க ஐயோ அந்த பொண்ணு மூஞ்சு தொங்கி போவுதேனு கொஞ்சம் எறங்கி பேசுனா நம்மயே கிளோஸ் பண்ணிருவாளுங்க.."

"ஆமாம் மாமே மாமே என்று வார்த்தைக்கு மூன்று முறை சொல்கிறீரே அப்படியென்றால் என்ன"

"இன்னா மாமே இப்டி சொல்லிட்ட..மாமேன்னா ஐயோ ரொம்ப யோசிக்குறதா இருக்கே..ஹான் ரொம்ப நெருக்கமான நட்புனு அர்த்தம்"

"அப்படி என்றால் நான் தங்களுக்கு நெருக்கமான நட்பா நண்பரே"

"ஆமா என் நதினுக்கு எம்மா மறுவாதி தர அப்ப நீ எனக்கு நண்பன் தான்"

"சரி மாமே"

"பார்டா நீயெல்லாம் இப்டி கூப்ட ஸ்டார்ட் பண்ணிட்ட.. ஆமா மாமே அந்த ஃபிகரு ரொம்ப டல்லாயிடுச்சா"

"என்ன கூறுகிறீர் மாமே"

"அந்த பொண்ணு ரொம்ப வருத்தப்பட்டுச்சா'

"வருத்தம் என சொல்வதற்கில்லை ஆனால் மிகவும் பயந்து விட்டார்"

"ப்ச் எனக்கு பொண்ணுங்க மூஞ்சி வாடுனாலே மனசு தாங்காது மாமே.. பிஞ்சு மனசு வேறயா அதான் நீ இன்னா பண்ற அந்த பொண்ண மறுக்கா கூப்டேன்"

"மீண்டும் அழைக்க வேண்டுமா.. வேண்டாம் மாமே அவர் அரூப வம்சத்தின் ராஜகுமாரி.. பிறகு வேண்டாத விபரீதங்கள் வந்து விடும்.."

"ராஜா மவளா இது நல்லாருக்கே.."வருணின் நினைவுகள் பின்னோக்கி சென்றன..

"அய்ய கஸ்மாலம் மூஞ்சி பாரு தீஞ்ச தோச மாறி.. உன் மூஞ்சிக்கு டாவு கேக்குதா"

"தோ பாரு வருணு துட்டு இருந்தா கொடுத்துட்டு வா சொம்மா உன் கூட வர நீ இன்னா மைனர் குஞ்சா"

"இன்னா வருணு உனக்குன்னு ஒரு வத்தலயோ தொத்தலயோ உஷார் பண்ணி வெச்சிருந்த அது நேத்து நைட்டு நம்ம குமாரு போட்டுக்கு பின்னாடி ஒக்காந்துகின்னு எவன் கூடவே மேட்டர் செய்யுது.. செய்யாம உன் மூஞ்சியும் பாத்து எவடா வருவா"இப்படி பல குரல்கள் வருணின் எண்ண நினைவுகளில் வட்டமிட வஜ்ராவின் மண்டைக்கு மேல் கால் மீது கால் போட்டு மீசையை முறுக்கி தொடை தட்டி

"கண்ணுக்கே தெரியாம காத்துல ஒலாத்துற ஃபிகரா இருந்தாலும் சரிதான் அவள தேடி புடிச்சு கல்யாணம் பண்ணி ஒரு சிங்க குட்டிய பெக்கல என் பேரு வருணு இல்ல"

"மாமே மனுஷ குழந்தை தங்களுக்கு வேண்டாமா சிங்க குட்டி தான் வேண்டுமா அதற்கு ஒரு பெண் சிங்கத்தை அல்லவா விவாகம் செய்ய வேண்டும்"

"எதுக்கு என் சங்குலயே பாயாருதுக்கா"

"அப்படியில்லை"

"மூடு வஜ்ரா நீ இன்னா பண்ற அந்த பொண்ணு இருக்குற இடத்துக்கு என்ன இட்டாந்து போ"

"கூட்டி கொண்டு செல்ல வேண்டுமா அந்த பெண்ணின் இருப்பிடத்திற்கா ஐயோ நான் மாட்டேன்"

"நீயா இட்டாந்து போறியா இல்ல நானே கண்டு புடிச்சு போயிக்கவா"வருண் வஜ்ரா மெல்லிருந்து தும்பிக்கையில் சரிந்து கீழே இறங்க அவனை மீண்டும் தூக்கி தன் மேல் அமர வைக்க வஜ்ரா எத்தனிக்கும் போதே அவன் பாய்ந்து ஓடினான்.

"யாரு கிட்ட எங்க முடிஞ்சா புடி பாப்போம்"

"மாமே வேண்டாம் ஓடாதீர்கள் நில்லுங்கள்.. தங்களை பாதுகாக்க வேண்டியது என் பொறுப்பு தயை கூர்ந்து நில்லுங்கள்"வஜ்ரா அவன் பின்னோடு காற்றில் மிதக்க அவன் வனத்திற்குள் ஓடி கொண்டிருந்தான்.காட்டு மரங்கள் யாவும் இவன் தங்கள் வேந்தனோடு வந்தவன் என அறிந்து குனிந்து அவனுக்கு அடிபணிய காட்டு மிருகங்கள் யாவும் சிரம் தாழ்த்தி அவனுக்கு மரியாதை செய்தன.

பூக்களும் செடிகளும் கொடிகளும் தலை வணங்குவத்தை கண்ட வருண் நதினின் நிலையை அறிந்தான். அவன் கூறிய கதையின் ஆழம் புரிய தன் நண்பனின் உயிர் உண்மையில் ஆபத்தில் உள்ளதை உணர்ந்தான். மனம் தடுமாற கால்கள் பின்னி சரிவில் விழ வஜ்ரா என்ற குரலுடன் அந்த சரிவில் சரிந்தான் வருண். வஜ்ரா நிலைக்குலைந்து போனது. ஏனென்றால் அந்த சரிவில்?

அந்த சரிவில் விழுந்து சறுக்கி கொண்டே கிளை கொடி வேர் என அனைத்திலும் மாட்டி ஒருவழியாக சாக போகிறேன் என்ற உண்மை உரைக்க கண்களை இருக்க மூடிக் கொண்டான் வருண். சில நிமிடங்கள் கழித்தும் அவனுக்கு ஏதும் ஆகாமல் இருக்க"ஏர்லயே நம்ம உசுரு போச்சு போல"என கண் விழித்தவன் பத்திரமாக பஞ்சு பூத்தரையில் கிடந்தான். அங்கே புற்கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்க அந்த இடத்தை சொர்க்கம் என நினைத்து கொண்டு"நாம அவ்ளோ நல்லவன் இல்லையே அப்டி இருந்தும் செத்து சொர்க்கதுக்கு வந்துருக்கோம் பரவால்லயே.. ஐயோ நதினு உன்ன அம்போண்ணு விட்டு வந்துட்டேனே மச்சி நீ ஒண்டியா இன்னா பண்ணுவ"

வருண் முகத்தை மூடி அழ"தாங்கள் இன்னும் மரணிக்கவில்லை"அமிர்தம் நாவில் தான் பாயுமென யார் சொன்னது இது வருணிற்கு காதில் பாய்கிறதே.. சட்டென்று நிமிர்ந்து பார்த்தான் அங்கே யாரும் இல்லை.. இது பிரம்மையா இல்லையே அவன் தன் இரு செவியாலும் கேட்டானே.. ஆனால் யாரும் இங்கே இல்லையே..

விழுந்த அதிர்ச்சியென நினைத்தவன் கண்களில் கண்ணீர் உருண்டு திரண்டு ஊற்றியது நதினு நதினு என.. "அழாதீர்கள் நீங்கள் இன்னும் மரணிக்கவில்லை உயிரோடு தான் இருக்கிறீர்கள்"மீண்டும் தலை உயர்த்தி பார்த்தவன் தன் கரத்தை பற்களால் கடித்து பார்த்தான். அவனின் உதிரம் வழிந்தது..

"ஆமா ரத்தம் வருது செத்து போன ரத்தம் வருமா இந்த ரத்தம் வேற சூடா இருக்கு.. இன்னாவா இருக்கும்.."எழுந்தவன் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே நடக்க அங்கே ஒரு ஈ கூட பறக்கவில்லை"ஹலோ யார்னா இருக்கீங்களா இந்தா பொண்ணே இப்ப பேசுனியா அது உன் வாய்ஸா சொம்மாங்காண்டி சொல்ல கூடாது ரொம்ப ஸ்வீட்டா இருக்கு.. ஆனா இன்னாத்துக்கு வெறும் வாய்ஸ் மட்டும் தர முன்னாடி வந்து கண்ணுக்கு குளிர்ச்சியா மூஞ்ச காட்டுனா தானே மனசுக்கு கொஞ்சம் குளுகுளுன்னு இருக்கும்"அவன் பாட்டில் பைத்திய காரத் தனமாக பேசிகொண்டே போக எதிர்பக்கமிருந்து ஒரு சத்தமும் எழவில்லை.

"தோ பாரு நீ பொண்ணா இல்ல மோகினி பேயா தெரியாது ஆனா வாய்ஸ் சொம்மா செமயா இருந்துச்சு சொன்னேன்.. அதுக்குன்னு கோச்சிக்க கூடாது ஆமா இது இன்னா இடம் ஒரே சூனியமா இருக்கு..மனுஷ பயலுகள தா காணோம் அட ஈ கொசுவ கூடவுமா காணோம்..குழப்பமா இருக்கே. இந்தாம்மா வாய்ஸ் கொடுத்த மோகினி கொஞ்சம் பெரிய மனசு பண்ணி என்னிய இங்கேருந்து அதரா கோட்டைக்கு போக வழி சொல்லுமா.. உனக்கு புண்ணியமா போவும்"

"வழி கூறினால் என்ன தருவிர்கள்"

"அடிப்பாவி இந்த ஒலகத்துலயும் உசுருக்கு பேரம் பேசுறீங்களா..அடியே நா யாருன்னு தெரிஞ்சும் பயம் இல்ல.. சரி இன்னா வேணும்னு நீயே கேளு"

"கேட்டால் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்'

"என்னிய இங்கேருந்து போவ வையு.. என் உசுர தவிர நீ என்ன கேட்டாலும் கொடுக்குறேன். உசுர கூட கொடுப்பேன் அப்றம் என் நண்பனுக்கு ஒரு பிரச்சனனா அவன் கூட யாரு நிக்கிறது'

"உங்கள் உயிர் வேண்டும்"

"சரி'

"உங்கள்"

"என்னோடு"

"உங்களது"

"என்னோடது'

"உங்களது"

"அட இன்னமா கொரலு கொடுக்குற பொண்ணு என்னோட இன்னம்மா வேணும்.. வேணும்னா வா மாமா ஒரு புள்ளய தரேன்..உங்க ஒலகத்துல மாமா மாறி பிரிலியண்ட்டு ஒரு பயலும் இல்ல.. மாமாவே பெரிய மனசு வெச்சு என் வாரிச கொடுத்தா தான் உண்டு"

"அதே தான் உங்களின் குழந்தை தான் வேண்டும்"

"இன்னாது".. வருண் அதிர்ந்து நிற்க அங்கே வர்ணிகா மயங்கி நதினின் கரங்களில் தவழ்ந்தாள்..

காலம் கடந்த காத்திருப்பு
கண்ணில் நெருப்பிடும் 
நிகழ்விற்காகவா...?
மன்னிப்பென்ற
ஒன்றை - ஒரு 
முறை தாராயோ
வர்ணிக்க இயலா
வண்ண நிலவே

தவறு மன்னிக்கக்கூடியது 
குற்றம் தான் தண்டிக்கக்கூடியது


"நான் இன்னாடி செஞ்சேன் எதுக்கு இப்ப மயக்கம் போட்டு வுழுந்து கெடக்க..மீனம்மா மீனம்மா எந்திரி கண்ணு"அவள் மயக்கம் கலைவதாக இல்லை..

"அப்டி இன்னா சொன்னேன் உன் சாபத்த தானே எடுத்தேன் அதுக்கா மயங்கிட்ட..மீனம்மா என்னிய மன்னிக்கவே மாட்டியா..நா செஞ்சது தப்போ குற்றமோ இல்லடி அது லவ்வு.. உனக்கு எப்டி சொல்லி புரிய வைப்பேன் ஆனா ஒன்னுடி நீயும் என்ன பயங்கரமா லவ் பண்ணிட்டு என்கிடேயே சீன் போட்ட பாரு அத்த தான்டி என்னால சீரணிக்கவே முடில..இவ்ளோ லவ்வ மனசில வெச்சிக்கினு என்ன நாய் மாறி அலைய விட்டியேடி பஜாரி.. ம்ம்ம் உன்ன என்னமோ நெனச்சேன் ஆனா நீயு..ம்ம்ம் ஆமா அப்ப பாத்ததுக்கு இப்ப இன்னும் அழகா இருக்கியே எப்டி செல்லம்.. இந்த அழகான கண்ணு எனக்காக எவ்ளோ அழுந்துச்சு.. இந்த மூக்கு எவ்ளோ சிவந்துருக்கும் இந்த வாய் என்ன கழுவி ஊத்திருக்கும் இந்த கை கால் என்னால அசையாம இருந்துருக்கும் ஆனா இந்த நெஞ்சு மட்டும் எனக்காக துடிச்சிருக்கும்.. இத்தன வருசத்துல என்ன பத்தி மட்டுமே இந்த நெஞ்சு நெனச்சு ஒவ்வொரு துடிப்பிலும் என் பேர மட்டுமே சொல்லிருக்கும்..

கல்லா இருந்தாலும் என்ன நோட்டம் விட்டட்டே இருந்துருக்க.. இல்லனா வாய்ஸ் மட்டும் கொடுப்பியா.. மாமா மேல எம்மா லவ்வு உனக்கு.. உன்ன இப்டியே விட்டுட்டு போனா வரலாறு மாமாவ தப்பா பேசாது.. எப்படியும் நா சாக போறேன்.. அத என் வர்ணிகா கூட வாழ்ந்து சாகறதுல எனக்கு சந்தோசம் தான்.. மீனம்மா நமக்கு இந்த அதரா லோகம் வேணா.. மாமா உன்ன வேற ஒலகத்துக்கு கடத்திட்டு போக போறேன்.. நீ மயங்கனதும் நல்லது தான். நா சொல்ற வர மயக்கத்துலயே இரு.. "என்றவன் அவள் தலையில் கை வைக்க அவள் உடல் ஒருமுறை துடித்து பின் சலனமற்று கிடந்தது.

அவளை அலேக்காக தூக்கி தோளில் கடத்தியவன் கடலுக்கு மேல் வந்து கரையை அடைய அங்கே வஜ்ரா கலகத்துடன் நின்றுருந்தது..நதினை கண்டவுடன்"வேந்தே வேந்தே"

"என்ன வஜ்ரா"

"வேந்தே நண்பர் நீங்கள் சென்றவுடன் சோமபானம் கேட்டார் நானும் இங்கே உலவும் அரூப மனிதர்களிடம் சோமபானம் வேண்ட அதை ஒரு பெண் எடுத்து வந்தார். நண்பர் அந்த பெண்ணின் முகத்தை பார்த்தே ஆகவேண்டுமென பிடிவாதம் பிடித்து பார்த்து மூர்ச்சையாகி பின் தெளிந்து தொடை தட்டி அந்த பெண்ணையே விவாகம் செய்வேனென சபதமிட்டு கானத்திற்குள் ஓடி ஒரு சரிவில் விழுந்து அரூப உலகத்திற்குள் மாட்டி கொண்டார்".. வஜ்ரா கவலையோடு கூற நதின் வர்ணிகாவை வஜ்ரா மீது படுக்க வைத்து தானும் அமர மூவரும் அரூப உலகம் சென்றனர்.

தொடரும்

அதரா - 19




"அட இன்னமா கொரலு கொடுக்குற பொண்ணு என்னோட இன்னம்மா வேணும்.. வேணும்னா வா மாமா ஒரு புள்ளய தரேன்..உங்க ஒலகத்துல மாமா மாறி பிரிலியண்ட்டு ஒரு பயலும் இல்ல.. மாமாவே பெரிய மனசு வெச்சு என் வாரிச கொடுத்தா தான் உண்டு"

"அதே தான் உங்களின் குழந்தை தான் வேண்டும்"

"இன்னாது"..என திறந்த வாய் மூடாமல் சிலையாக நின்றான் வருண். அவன் விளையாட்டுக்கு இல்லை அப்படி சொல்ல முடியாது அந்த குரல் கொடுக்கும் பெண்ணின் இனிய முகம் காணவே இவ்வாறு உரைத்திருக்க அவளோ அவன் கூற்றுக்கு தன் சம்மதம் அளித்தாள்.வருணிற்கு அதிர்ச்சி விலகாமல் இருக்க கைதட்டும் ஓசை அவன் காதருகே கேட்டது..

"என்ன ஆயிற்று கண் விழித்து கொண்டே உறக்கம் கொண்டீரோ"

கை தட்டும் ஓசையில் தன்னிலை அடைந்தவன்"ஹாங் ஆமா நீ இன்னா சொன்ன"

"கண் விழித்து கொண்டே உறக்கம் கொண்டீரோ என கேட்டேன்"

"ப்ச் அது இல்ல.. நீ என்னதயோ சொன்ன எனக்கு தா ஸ்பீக்கர் அவுட்டா இல்ல ஒழுங்கா தா கேட்டு தொலச்சனோ தெரில.. கோச்சிக்காம மறுக்கா சொல்லு"

"அப்படியென்றால் இன்னொரு தரம் கூற சொல்கிறீரா"

"ஆமா"

"எனக்கு உங்கள் ஜீவ தண்ணீரில் ஒரு சிசு வேண்டும் தருவிர்களா"

"அப்டியா நீ இன்னா பண்ற உன் மூஞ்சிய இப்ப காட்டுற.. அத பாத்தா தான் நா ஒரு முடிவுக்கு வர முடியும்"

"கணவரை அன்றி வேறு ஒருவர் முகத்தை எங்கள் குல பெண்கள் பார்க்க கூடாது"

"அதான் புள்ளயே கேட்டியே அப்றம் இன்னா.. எவனோ ஒருத்தன் கிட்ட புள்ள கேப்பியோ.. சொம்மா பேஜார் பண்ணமா மூஞ்ச காட்டு"வருண் அவள் முகத்தை பார்த்தே ஆகவேண்டுமென பிடிவாதம் பிடிக்க வேறு வழியில்லாமல் அந்த பெண் முகம் காட்ட ஒப்புக்கொண்டாள்.சில நொடிகள் எந்த சலனம் அங்கில்லை.பொறுத்து பார்த்த வருண்

"இன்னாமா பொண்ணு இருக்கியா போய்டியா"என அன்பே என்ற மதுரமான குரல் செவியில் பாய திரும்பி பார்த்தான். பார்த்தவன் அந்த பெண்ணை மெதுவாக நெருங்கினான். அவள் அவனுக்கு பின்னால் தான் நின்று கொண்டிருந்தாள். அவளை நெருங்கியவன் ஓங்கி ஒரே அறை. அந்த மாய பெண் சுருண்டு கீழே விழுந்தாள்.

"உனக்கு இன்னா திமுரு இருந்தா ஒரு ஆம்பள கிட்ட இப்டி பேசுவ.. புள்ளன்னா என்ன கா கிலோ சக்கறயா பொட்டலம் போட்டு தர்ற.. ஏன்டி நா யாரு இன்னானே தெரியாமயே எப்டிடீ என்கிட்ட இந்த மாறி பேசலாம்.. உனக்கு அப்பன் ஆத்தாலாம் இல்லையா..அந்த பெருசுங்க வேத்து ஆளு கிட்ட இன்னா மாறி பேசணும்னு சொல்லி கொடுத்து உன்ன வளக்கலையா? ஏன்டி நா பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ இன்னா பரந்தாமன் போஸ்ல படுத்துக்கினு கெடக்க.அடச்சீ எந்திரிடீ"வருணின் அதட்டலில் பதறி எழுந்தாள் அவள்.

"சொல்லு யாரு நீயு.. இது இன்னா எடம்.. உனக்கு அதரா தெரியும் தானே என்ன அதர கோட்டைக்கு இட்டாந்து போ. அதுக்கு முன்னாடி உன் அப்பன் ஆத்தா எங்க. அதுங்கள வர சொல்லு.. புள்ள வளக்குறத பத்தி கொஞ்சம் புத்தி சொல்லிட்டு போறேன்"

"அதெல்லாம் ஒன்றும் வேண்டும் நீங்கள் மட்டும் பெரிய யோக்கியமா.. ஒரு பெண்ணை கை நீட்டி அடிக்கும் பண்பை தான் உங்கள் பெற்றோர் கற்று கொடுத்தனரோ அப்படியென்றால் உங்கள் பெற்றோரின் வளர்ப்பு எப்படி..என்னை அவர்களின் முன்பு அழைத்துச் செல்லுங்கள் குழந்தை வளர்ப்பு பற்றி நான் அவர்களிடம் பாடம் எடுக்கிறேன் " அந்தப்பெண் அவ்வாறு கூறியதும் வருணின் பொறுமை எல்லாம் அதர லோகத்தை விட்டு அப்பால் ஓடியது.

" ஏய் இன்னாடி வெட்டுக்கிளி மாறி இருந்துகினு அப்டியே செவுல சேத்து வுட்டேன் மவள வாய பொளந்துருவ.. பொம்பளையாச்சேனு பாக்குறேன். யார்டீ நீ என் வளப்ப பத்தி பேச நானா வந்து உன்ன படுக்க கூப்டேன் வாடி என் கூட வந்து படுடி மாமா ஒரு புள்ளய கொடுத்துட்டு போறேன்னு நீயா தானடி சொன்ன.. இன்னா இன்னாத்துக்கு மொறைக்குற சரி நா தா மொத உன் மூஞ்ச பாக்கணும்னு சொன்னேன் ஆனா அது வெளாட்டுக்குடீ அதுக்கு இப்படியா"..

"நீங்கள் ஆண்கள் விளையாட்டுக்கு என்ன வேண்டுமானாலும் கூறலாம் ஆனால் பெண்களாகிய நாங்கள் மனதில் பட்டதை கூறினால் உடனே நடத்தை சரியில்லாதவள் என்று பொருளாகுமோ.. நீங்களும் மற்ற ஆண்கள் மாதிரி தான் இருக்கிறீர்கள் உங்களிடம் போய் குழந்தை கேட்டேனே என்னை அடிக்க வேண்டும்.. நீங்கள் என்ன கேட்டீர்கள் அதராவ கோட்டைக்கு வழி தானே.. இதோ இந்தப் பாதையில் நேராகச் சென்றால் ஒரு பெரிய அருவி வரும் அந்த அருவியில் விழுந்தால்'

"சங்குதான்"

" குறுக்கே பேசாதீர்கள்.. அந்த அருவியில் விழுந்தால் அருவியின் அடியில் இருக்கும் பெரிய துவாரத்தின் வழியே அதர லோக கடலில் கலந்து விடுவீர்கள் பின்பு நீங்கள் நீந்தி கரைக்கு செல்லலாம் அதன் பிறகு அதர கோட்டைக்கு செல்லும் வழி உங்களுக்கு தானாக தெரியும்.. என்ன இங்கிருந்து நீங்கள் இரண்டு நாட்கள் நடக்க வேண்டும் அந்த அருவி கரையை அடைய.. ம்ம்ம் கிளம்புங்கள்"அவள் படபடவென பேசிவிட்டு நடக்க

"அடச்சே இந்த பொண்ணு வெகுளியா இருக்கே இத்த போயி தப்பா பேசிட்டேனே சரி இன்னா பண்ண.. இந்தா பொண்ணு ஹேய் நில்லு நில்லு ஹோல்ட் டவுன்.."அவள் முன்னே சுற்றி கொண்டு ஓடி நின்றவனை கண்டவள் முறைக்க

"நா என்னிக்குமே பொண்ணுங்க கிட்ட இப்டி பேசவே மாட்டேன் அதுலயும் எந்த பொண்ணும் என்கிட்ட நின்னு பேசாது அது வேற கத.. உன்ன பாத்தோன அப்டி எக்கேடோ கெட்டு ஒழின்னு விட முடில.. ஏன்னா"அவன் சிந்தை மது கோப்பை ஏந்தி நின்ற மாங்கனியின் நினைவில் சிக்கி வெளியே வர முயல முடியவில்லை ஏனெனில் அவன் முன்னே சிறிய கண்களை முட்டை போல் விரித்து கஷ்டப்பட்டு முறைத்து கொண்டு நின்றிருந்தாள் அதே மாங்கனி.கண்டவுடன் சிந்தை மயக்கிய மாங்கனி யாரென்றே தெரியாத ஆடவனிடம் குழந்தை கேட்க அந்த கோபத்தில் தான் அறைந்து விட அவளின் குழந்தை பேச்சில் தெரிந்தே மயங்கி நிற்கிறான் வருண்.

"இங்கே பாருங்கள்"அவனை பிடித்து உளுக்கியவளை கண்டு

"ஹான்"

"என்ன ஹான்.. விழித்து கொண்டே கனவு காண்பதை நீங்கள் நிறுத்தவே மாட்டிரோ.. திடிர் திடீரென கனவுலகத்திற்கு சென்று விடுகிறீர்கள்.. இதெல்லாம் எனக்கு பிடிக்காது.. நீங்கள் வழி கேட்டீர்களா நான் வழி கூறினேன்.. உங்கள் வழி பார்த்து செல்லுங்கள்.. என் வழியில் நிற்காதீர்கள்"

"அடியே லூசு இருக்குறதே ஒத்த வழி தான்டீ.. எனக்கு ஒரு ஒதவி பண்ணு என்னிய அந்த அருவிக்கு கூட்டிட்டு போ அங்கெருந்து நா போயிருவேன்..ஹேய் இரு இரு நா ஏதோ பள்ளத்துல வுழுந்து சறுக்கி இங்க வந்தேன்.. அது ஒரு ஐஞ்சு நிமிஷம் இருக்குமா.. நீ வஜ்ரா கூப்டோன எப்டி டக்குனா வந்த"

களுக்கென சிரித்தாள் மாங்கனி"ஐயோ ஐயோ உங்களுக்கு எதுவும் தெரியவில்லை.. நீங்கள் சறுக்கி எங்களின் மாய லோக்கத்திற்குள் விழுந்து விட்டீர்கள்.. வருவது ஒரு சில நொடிகள் ஆனால் இந்த லோக்கத்திற்குள் இருந்து வெளியேற இரண்டு நாட்களாவது ஆகும்.. "

"சரி நீ எப்டி டக்குனு அங்க வந்த"

"நா மாய காரிகை..இரவு வேளைகளில் யார் கண்களுக்கும் புலப்படாமல் கடற்கரையில் உலாத்துவோம் அப்பொழுது யாரவது எங்களிடம் உதவி கேட்டால் அங்கே யாரவது எங்கள் குலத்தவர் இருந்தால் உதவி செய்வோம். இன்று நான் அங்கே உலாவி கொண்டிருந்தேன். வஜ்ரா உதவி கேட்டது உதவி செய்ய வந்தேன்.. வந்து பார்த்தால் நீங்கள் என்னை கண்டு பயந்து மயங்கி வீட்டிர்கள் ஐயோ ஐயோ ஹாஹாஹா"அவள் வயிறை பிடித்து சிரிக்க

"போதும் ரொம்ப இளிக்காத பல்லு சுளுக்கிற போது..இது இன்னா இடம் ஒரு மனுசன காணோம்"

"இங்கே அனைவரும் இருப்பார்கள் ஆனால் யார் கண்களுக்கும் தெரிய மாட்டார்கள்.. எல்லோரும் பத்திரமாக அவரவர் இல்லத்தில் இருப்பர்.."

"ஏன் அப்டி"

"அது அப்படித்தான் நாமும் இங்கிருந்து விரைவில் செல்ல வேண்டும் வாருங்கள்"அவள் பாட்டில் எங்கேயோ நடந்து செல்ல

"இந்தாமா மாங்கனி"என்றழைக்க

"என் பெயர் ஒன்றும் மாங்கனி அல்ல"

"பின்ன உன் பேரு இன்னா"

"வர்ண மோகினி"

"ஐ நம்ம பேரு வருணு இவ பேரு வர்ண மோகினி இன்னா ஒரு பேரு பொருத்தம்.. ஆனா நா உன்னிய மாங்கனினு தான் கூப்டுவேன்'அவள் முறைத்து கொண்டே நடக்க சிரித்து கொண்டே பின்னால் சென்றான் வருண்.எங்கே பார்த்தாலும் வெள்ளை பனி.. இப்பொழுது வருணும் மாங்கனியும் வெள்ளை பனி நிறைந்த மரங்களின் ஊடே நடந்து கொண்டிருந்தார்கள். அவள் ஏன் அவ்வாறு கேட்டாள் என அவனுக்கு புரியவில்லை.

அவள் ஆளை அசரடிக்கும் பேரழகி. அவனையும் அசரடித்து விட்டாள். வருணிற்கு அவளுடன் நடக்க சந்தோசமாக இருந்தது. ஆனாலும் பசி உயிர் போனது அதைவிட சறுக்கி விழுந்ததால் பின்பக்கம் முழுவதும் டேமேஜ். அவள் நடப்பாள் என்று பார்த்தால் செங்குத்தான மலை சரிவில் குதித்து கொண்டு ஏறுகிறாள். அவன் ஒவ்வொரு மரமாக பற்றி கொண்டு ஏற"ஏன் நீங்கள் எவ்வளவு தாமதமாக வருகிறீர்கள்.. உங்களுக்கு வயதாகி விட்டதா"

"வயசுலாம் சின்ன வயசு தான் ஆனா பின்னாடி புண்பட்ருக்கு தாயே.. இதே என் வீட்டுன்னா புண் பட்ட பாடிய சரக்கு ஏத்தி தேத்திருப்பேன் இங்க எப்டி"

"என்ன கேட்டிர்கள்"

"அது சோமபானம் கேட்டேன்"

"அவ்வளவு தானே வாருங்கள் இங்கே நில்லுங்கள்.."அவள் ஒரு பெரிய பனி மூடிய மரத்திற்கு கீழே நிற்க வைத்து விட்டு"என் முகத்தை பார்த்தால் சோமபானம் கிடைத்து விடுமா.. ம்ம் என்னை தூக்குங்கள்"

"இன்னா"

"என்னை தூக்குங்கள்"அவள் கைகளை உயர உயர்த்தி தூக்க சொல்ல வருணின் ஆண் நெஞ்சம் அடித்து கொண்டு அழுதது. அழும் மனதிற்கு ஆறுதல் கூறி அந்த வஞ்சிக்கோடியை அலேக்காக தூக்க அவளோ அந்த மரத்தின் மேல் பொந்தில் இதழ் குவித்து ஏதோ கூறி கொண்டிருந்தாள்.

"ஏம்மா மாங்கனி அந்த பொந்துல இன்னாத்துக்கு வாய வெச்சின்னு இருக்க.. உள்ளேருந்து பாம்பு ஏதாச்சும் போட்ற போதும்மா"

"சற்று நேரம் வாயை மூடுங்கள்"என்றவள் மீண்டும் அதே போல் செய்ய குளிர் காற்று எழும்பை தழுவி சென்றது. மரத்தின் ஒவ்வொரு கிளையும் அசைந்து இறுதியில் பொந்து இருந்த இடத்திலிருந்து அந்த மரத்தை சிறியதாக்கினால் எப்படி இருக்குமோ அதே போல உள்ளங்கை அளவே ஆன குட்டி மரம் வெளியே வந்தது. பெரிய மரத்தின் கிளை ஒன்றில் குட்டி மரம் தாவி ஏறி அமர அந்த குட்டி மரத்திற்கு கண் வாய் காது மூக்கு என இருப்பதை கண்டு வருண் கண்களை விரித்தான்..

"வர்ணமோகினியாரே எதற்கு உறங்கி கொண்டிருந்த என்னை எழுப்பினீர்கள்'

"அது ஒன்றுமில்லை நண்பா எனக்கு உடனடியாக சோமபானம் வேண்டும் அதற்கு தான் உன் தூக்கத்தை கெடுக்க வேண்டியதாயிற்று"

"அதற்கு என்ன தாராளமாக எடுத்து செல்லுங்கள் ஆமாம் இவர் யார்"

"இவரை தெரியவில்லையா.. இவர் அதர வேந்தனின் நண்பர்.. வழி தவறி நம் உலகத்திற்குள் வந்து விட்டார்"

"ஓ அப்படியா சங்கதி சரி சரி..".. குட்டி மரம் பெரிய மரத்திலிருந்து இலைகளை பிடிங்கி அதை கோப்பை போல் உறுமாற்றி அதில் பெரிய மரத்தின் ஒரு சிறிய கிளையை உடைத்து அதில் வழியும் சாறை கோப்பையில் நிரப்பி மாங்கனியிடம் கொடுக்க அவளோ நன்றி கூறி அதனை பெற்று கொண்டாள்.

அவளது நன்றியை பெற்று கொண்ட குட்டி மரம் அதிக நேரம் வெளியே சுற்ற வேண்டாமென கூறி விட்டு மீண்டும் பொந்திற்குள் சென்று மறைந்து விட"போதும் என்னை இறக்கி விடுங்கள்"

"அவ்ளோ சீக்கிரமாவா"

"என்ன"

"அது.. இத்துனூன்டு மரம் எல்லாம் இங்க இருக்கா"பேசிக்கொண்டே அவளை மெல்ல இறக்கி விட 

"ம்ம்ம்.. இருக்கிறது"என்றவள் இலை கோப்பையை அவனிடம் கொடுக்க

"இன்னா இது"

"சோமபானம்"

"அடியே யார் கிட்ட இதான் உங்க ஊர்ல சரக்கா.."

"இந்த சோமபானம் போதையும் கொடுக்கும் அதைவிட பலத்தையும் கொடுக்கும் இது அமிர்ததை விட நன்மையானது என்னை நம்பினால் பருகுங்கள்"

"இவ்ளோ சொல்ற உன்னிய நம்பாம எப்டி கொண்டா அது"ஒரே கல்பில் உள்ளே தள்ளினான் வருண்.. போதை தலைக்கேறி குடித்த உடனே தள்ளாடி விழ போனவனை பிடித்து இழுத்து கொண்டு அங்கிருந்த இன்னொரு பெரிய மரத்தின் அடி வேரில் பதுங்கி கொண்டாள் மாங்கனி.

வர்ணிகா வஜ்ராவுடன் மாய உலகத்திற்குள் வந்த நதின் அந்த உலகத்தின் அரசனை சென்று சந்தித்தான்."வாருங்கள் வேந்தே நானே தங்களை வந்து காண வேண்டுமென நினைத்திருந்தேன்.. நல்ல வேளை தாங்களே வந்து வீட்டிர்கள்."

"வணக்கம் மாய அரசே..உங்க மக எங்க"

"அவளை தான் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.. கடற்கரைக்கு சென்றால் இன்னும் வந்து சேர்ந்த பாடில்லை"

"அவ வர இன்னும் ரெண்டு நாளாவும்"

"என்ன"

"ஆமா அவ அவளோட கட்டிக்க போறவன பாத்துட்டா அவன் கூட இருக்கா"

"வேந்தே என்ன சொல்கிறீர்கள்"

"அவன் என் நண்பன் அவளுக்காக பொறந்தவன் நீங்க கவலபடாதீங்க.."

"என் கவலை அதை பற்றி இல்லை..அந்த சூனியக்காரியை பற்றி"

தொடரும்..

அதரா - 20


"மாய அரூபர்களின் இளவரசி நம் எல்லைக்குள் வந்து கொண்டிருக்கிறாள். இத்தனை நாள் நம் தலைவிக்கு அஞ்சியே அவளின் தகப்பன் அவளை கண்ணும் கருத்துமாக பாதுக்காத்து வந்தான். இப்பொழுது எப்படி இவளை வெளியே விட்டான்."முடியில்லாத வழுக்கை மண்டையை பரபரவென ஆவி பறக்க சொரிந்தது அந்த குட்டி சாத்தான்.

"பானை வயிறு கால் முட்டியை தொடுகிறது அளவாக தின்று பழகு என்று சொல்கிறேன் எங்கே என் பேச்சை கேட்கிறாய்"மண்டையில் முடியிருந்தும் மூளையில்லாத குட்டி சாந்தான் இன்னொன்று கூற

" ஐய்யோ இருவரும் சற்று நேரம் உங்கள் திருவாயை மூடிக் கொண்டு இருங்கள்.. நீ இருக்கிறாயே உனக்கு மண்டைக்கு மேல் எதுவும் இல்லை. உனக்கு மண்டைக்குள் எதுவும் இல்லை.. உங்கள் இருவரையும் வைத்துக்கொண்டு நான் படும் பாடு இருக்கிறதே அதற்கு அந்த சூனியக்காரி பரவாயில்லை போல.. "

"தாஷா உனக்கு இவ்வளவு தைரியமா.. நம் தலைவியை பட்டென்று சூனியக்காரி என்று விட்டாயே.. இது மட்டும் அவரின் காதில் விழுந்தால் உன் நிலை என்ன.. யோசித்தாயா.. இதை எல்லாம் யோசிக்காமல் எங்களை மட்டும் மண்டையில் மூளை இல்லை மண்டைக்கு மேல் எதுவுமில்லை என்று பரிகசித்து கொண்டிருக்கிறாய்"

" அவள் சூனியக்காரி இல்லாது பின்ன என்ன.. நம் தலையெழுத்து சூனியக்காரிக்கு சேவகம் செய்ய வேண்டும் என்பது.. நான் பாட்டுக்கு என் கும்பலோடு கும்பலாக சுற்றிக் கொண்டிருந்தேன் என்னை இங்கே பிடித்துக் கொண்டு வந்து விட்டாள். அவளின் மந்திர கட்டில் இருந்து விடுபட முடியாமல் அவளின் ஏவலுக்கு ஓடோடி போய் அடிபணிந்து நிற்கிறேன்.. அதை எல்லாத்தையும் விட மிகப் பெரிய கொடுமை என்ன தெரியுமா அவளிடம் சேவகம் செய்யும் உங்களை மாதிரி அடிமுட்டாள்களை கட்டி மெய்ப்பதே ஆகும்" கொள்ளிவாய் பிசாசாக தன் கூட்டத்தோடு கூட்டமாக வாயில் புகை விட்டு கொண்டு நடந்தவளை தனது சூனியத்தால் தனக்கு அடிமையாக கொண்டு வந்து இங்கே வேலை வாங்கிக் கொண்டு இருக்கிறாள் சூனியக்காரி.

 தாஷா என்கிற கொள்ளிவாய் பிசாசு தனது சொந்தக் கதை சோகக் கதையை அதற்குக் கீழாக வேலை செய்யும் அடிமைகளிடம் சொல்லிக் கொண்டிருக்க என்ன செய்ய சுதந்திரமாக தங்கள் பேய் உலகத்திற்குள் இருந்த அவைகளையும் தனது சூனியத்தால் இங்கு அடிமைகளாக கொண்டு வந்தவள் அதே சூனியக்காரி தான். அங்கிருந்த அனைத்து குட்டிசாத்தான் ஏவல்களும் கொள்ளிவாய்ப் பிசாசின் சொந்தக் கதை சோகக் கதையைக் கேட்டு தாங்கள் சூனியக்காரியிடம் சிக்கிய கதைகளையும் பரிமாறிக்கொண்டு பொழுதை நெட்டித் தள்ளின.

அப்பொழுது மண்டையில் முடி இல்லாத அந்த குட்டி சாத்தான்"தாஷா மாய இளவரசியை நாம் காப்பாற்ற முடியுமா. அவள் கையில் சிக்கும் நாளுக்காக சூனியக்காரி பல வருடங்களாக காத்திருந்தாள். இன்று சூனியக்காரியின் நல்ல நேரமா அல்ல இளவரசியின் கெட்ட நேரமோ வசமாக சிக்க போகிறாள். ஆனால் உனக்கு ஒன்று தெரியுமா அந்த இளவரசி மிகவும் நல்லவள். ஒருமுறை சூனியக்காரியிடம் சிக்க இருந்த அவளை நான்தான் காப்பாற்றினேன் "

 குட்டிச்சாத்தான் கூறியதைக் கேட்டு அங்கிருந்த மற்ற பேய்கள் அத்தனையும் அதிர்ச்சியில்" என்ன என்ன கூறினாய் அந்த இளவரசியை நீ பார்த்திருக்கிறாயா அவளுடன் பேசி அதுமட்டுமல்லாமல் அவளை காப்பாற்றியும் உள்ளாயா.. இதை நம்பும்படி இல்லையே"

" என்றுதான் நான் கூறியதை நீங்கள் நம்பி இருக்கிறீர்கள் இன்று நம்புவதற்கு.. ஒருமுறை நான் சூனியக்காரியின் இம்சைக்கு அடிபணிந்து வெள்ளி மானை வேட்டையாட சென்றிருந்தேன். நீங்களே அறிவீர்கள் தானே வெள்ளிமான் சூரிய கிரகணத்தின் போது தான் நம் கண்களுக்கு தெரியும். அந்த வெள்ளி மானை உட்கொண்டால் நமது ஆயுள் அதிகரிக்கும் வெள்ளி மானின் மந்திர சக்திகள் நமக்கும் கிடைக்கும்.

 அதுவுமில்லாமல் வெள்ளி மான் இறைச்சியை அவ்வளவு நன்றாக இருக்கும். அப்படி பார்க்காதீர்கள் நான் உண்டதில்லை கேள்விப்பட்டிருக்கிறேன்.. சூனியக்காரியின் இம்சை தாங்க முடியாமல் வெள்ளி மானை வேட்டையாட சூரப்புலியாக நான் சென்றிருந்த நேரம் வெள்ளி மான் என் கண்களில் தெரியத்தான் செய்தது. அதே லாவகமாக பிடிக்கலாம் என்று நான் பல ராஜ தந்திரங்களை தீட்டினேன். வெள்ளி மானுக்கும் ராஜதந்திரங்கள் தெரியும் என்று நான் என்ன கனவா கண்டேன்.

 நான் ஒரு தந்திரம் செய்தால் அது வேறு ஒரு தந்திரம் செய்து என்னை ஒரு புதை குழிக்குள் தள்ளி விட்டு ஓடி மறைந்துவிட்டது. காட்டின் மையத்தில் இருக்கும் மந்திர புதைகுழியை தாங்கள் அறிவீர்கள் தானே. அதற்குள் விழுந்தால் மான் என்ன மனிதன் என்ன யாராயிருந்தாலும் விழுங்கிவிடும். அப்படியிருக்க குட்டிசாத்தான் என்னை மட்டும் விழுங்காமல் என்ன செய்யும்.. அந்த மாய புதைகுழிக்குள் நமது மந்திர தந்திரங்களும் செல்லுபடியாகாது. இன்றோடு நம் கதை அவ்வளவுதான் என்று முடியில்லாத என் மண்டையில் தட்டி யோசித்துப் பார்த்தும் ஒன்றும் எனக்கு பிடிபடவில்லை.

 கண்களை இறுக்க மூடி மரணத்தை தழுவும் வேளையில் யாரோ என் கழுத்தில் கயிற்றை வீசி இருக்கி என்னை தரையை நோக்கி இழுத்தார்கள். யாரடா அது நம்மைக் காப்பாற்றுவது ஒருவேளை நமது எஜமானி சூனியக்காரியோ என்ற நப்பாசையில் கண்ணை திறந்து பார்த்தால் அங்கேயே நின்று என்னை கட்டி இழுத்துக் கொண்டு இருந்தது அந்த மாய இளவரசி தான். அவளின் தயவால் நான் உயிர் தப்பினேன். . எனது பெரும் வயிற்றை தடவி நான் காட்ட அந்த புண்ணியவதி என் தேவை அறிந்து நானுண்டு புசிப்பதற்கு அறுசுவை உணவுகளை வரவழைத்துக் கொடுத்தாள்.

 நானும் அங்கேயே ஒரு குட்டி தூக்கம் போட்டு என் உயிரை காப்பாற்றி கொடுத்ததற்காக அந்தப் பெண்ணிடம் பலநூறு நன்றிகளை உரைத்து விட்டு திரும்ப எத்தனிக்கும் போது எனது சிந்தையில் மின்னல் அடித்தது. சூனியக்காரி இளவரசி வெளியில் வந்தது தெரிந்து விட்டது என. உடனே சூனியக்காரி அந்த இளவரசியை பிடிக்க வரும்முன் இளவரசிக்கு ஆபத்து என்று சொல்லி அவளை அவளின் தகப்பனிடம் அனுப்பி வைத்து சூனியக்காரி வருவதற்குள் இளவரசியை காப்பாற்றி விட்டேன். மிகவும் தாமதமாக அங்கே வந்த சூனியக்காரி என்னை போட்டு மிதித்து துவம்சம் பண்ணதெல்லாம் வேறு கதை..

 என் உயிரை காப்பாற்றியவளின் உயிரை நான் ஒருமுறை காப்பாற்றி விட்டேன்.. அவள் இனியாவது ஜாக்கிரதையாக இருப்பாள் என்று பார்த்தால் அவளோ பேர் ஊர் தெரியாத ஒருவனுடன் சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாள். ஓயாமல் அவளை காப்பாற்ற நான் என்ன இந்த அதர லோகத்தின் வேந்தனா.. ஒரு முறை அவளை காப்பாற்றியது சூனியக்காரிக்கு தெரிந்தாலும் என்னை உயிரோடு சமைத்து சாப்பிட்டு விடுவாள்.. ஆனால் மனம் கேட்கவில்லை அந்த இளவரசியை ரொம்பவும் நல்லவள். தாஷா அவளை காப்பாற்ற வழி சொல்லேன்"

 வாயில் நெருப்பை விட்ட அந்த கொள்ளிவாய்ப் பிசாசு" என் வலியே பெரும் வலியாக இருக்கிறது இதில் நான் உனக்கு வழி சொல்ல வேண்டுமா எல்லாம் நேரக் கொடுமை.. நீ என்ன பண்ணு சூனியக்காரி வருவதற்குள் அந்தப் பெண் இருக்கும் இடத்திற்கு செல்.. உடனே அவளின் தந்தையின் கோட்டைக்குள் சென்று மறைந்து கொள்ள சொல். நாங்கள் ஒன்று செய்கிறோம் சூனியக்காரிக்கு அளவே இல்லாது சோம பானத்தை ஊற்றிக்கொடுத்து அவளை நிலை கொள்ள விடாமல் செய்கிறோம்.."

" வாயில் புகை கக்கினாலும் உனக்கு நல்ல அறிவு போ.. தாஷா பழைய பகை ஏதாவது மனதில் இருந்தால் அதை உள்ளே வைத்துக் கொண்டு என்ன இப்பொழுது மாட்டி வைத்து விடாதே.. என்ன பகை இருந்தாலும் நாம் பிறகு பேசி தீர்த்துக்கொள்ளலாம்.. நீங்கள் அனைவரும் இங்கிருந்து சூனியக்காரியை பார்த்துக் கொள்ளுங்கள்.. நானும் மிமியும் சென்று அந்த இளவரசிக்கு நன்றாக பாடம் புகட்டி அவளை அவள் தகப்பனிடம் கொண்டுபோய் விட்டு அந்த மன்னனையும் பத்திரமாக இருக்க கூறி விட்டு வருகிறோம்" மண்டையில் முடி இல்லாத குட்டி சாத்தானின் பெயர் சுசு.. மண்டைக்குள் மூளை இல்லாத குட்டிச்சாத்தானின் பெயர் மிமி.

 இருவரும் கிளம்பிச் செல்ல சூனியக்காரியிடம் அடிமைகளாக பணிபுரியும் அவர்கள் அனைவரும் அவளுக்கு சோமபானதோடு மயக்க மூலிகையும் சேர்த்து கொடுத்து அவளை ஒருவழியாக மயங்க செய்ய இங்கே மற்ற இரண்டு குட்டி சாத்தான்களும் வர்ண மோகினி இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்றன.

 சோமபானம் குடித்து அரை போதையில் உழன்றவனை பிடித்து இழுத்துக்கொண்டு பெரிய மரத்தின் வேரின் அடியில் பதுங்கி அமர்ந்தால் மோகினி. அரை போதை ஆயினும் அடித்த சோமபானம் நல்ல தரமானதாக இருக்க வருண் உலரத் தொடங்கினான்.. "இன்னாடா சரக்கு இது அச்சோன சொம்மா சுர்றேன்னு ஏறுது.. நம்ம நாட்லயும் தா விக்கிறானுங்க..எவ்ளோ அடிச்சாலும் ஏறாமா அதானே எப்டி ஏறும் எல்லாமே கலப்படம் தானே நம்ம நாட்ல.. ஆனா வெள மட்டும் தங்க வெள விக்கிறானுங்க ஒரு நா இல்ல ஒரு நா பாரு ஒட்டு மொத்த டாஸ்மாக்குக்கும் சூனியம் வைக்கிறேனா இல்லயானு.. இந்த வருண யாருனு நெனச்ச..சொம்மா வூடு கட்டி அடிப்பேன்"..

 வருண் அரை போதையில் கத்திக் கொண்டிருக்க அவன் வாயில் கை வைத்து" இப்பொழுது எதற்கு இப்படி பினாத்தி கொண்டு இருக்கிறீர்கள். ஆசைப் பட்டு கேட்டதால் சோமபானம் வாங்கி தந்தேன் அதை குடித்துவிட்டு உறங்காமல் ஏன் இப்படி படுத்தி எடுக்கிறீர்கள்"

" படுத்துக் கிட்டனா யாரு கூட"

"என்ன நான் என்ன கூறுகிறேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்"

"நா இன்னா சொன்னேன்.. ம்ம்ம்"யோசிக்குறேன் என்ற பெயரில் தன் தாடியில் கை வைத்து தடவாமல் மோகினியின் தாடையை தடவி"ஐயோ இன்னா இது என் தாடி எங்க போச்சு..அய்யயோ என் தாடி எவன் கூடவோ ஓடி போச்சு.இனிமே நா இன்னா பண்ண தாடி இல்லாம நா வாழ்ந்து இன்னா பொறோஜனம்.. நா சாவுறேன்.." உளறிக்கொண்டே எழுந்த அவனை கையைப் பிடித்து மீண்டும் அமர வைத்தால் மோகினி.

" ஐயோ நீங்கள் சத்தமிட்டு நாம் இருக்குமிடத்தைக் காட்டிக் கொடுத்து விடுவீர்கள் போலவே.. உங்களுக்கு மெதுவாக பேசவே வராதா ஏன் இந்த கானகமே அதிரும் வண்ணம் தொண்டையை தொறக்குறீர்கள்.. தயவுசெய்து மெதுவாக பேசுங்கள் அவள் வந்துவிட போகிறாள்"

"எவ அவ'

" அவள் சூனியக்காரி. இந்த மாய உலகை ஆட்டிப்படைக்க நினைப்பவள். ஒருவேளை அவள் நல்லவளாக இருந்திருந்தால் நாங்கள் அனைவரும் அவள் ராஜ்யத்திற்கு மகிழ்ச்சியாக உட்பட்டு இருப்போம். ஆனால் அவளோ அவளுக்கு கிடைத்த மந்திர சக்திகளை தவறாக பயன்படுத்தி வேறு உலகத்தில் இருக்கும் ஆன்மாக்களையும் அடிமைப்படுத்தி கொடுமைப் படுத்திக் கொண்டிருக்கிறாள். அவளை தட்டி கேட்க என் தந்தையைத் தவிர இங்கு வேறு யாருக்கும் தைரியம் இல்லை. ஆகையால் எனது தந்தை அவளை தட்டி கேட்டார். அவளின் மந்திர வித்தைகளை என் தந்தை முறியடித்தார். சாமானிய மக்களை தனது மந்திர சக்திகளை மெருகேற்றுவதற்காக துர் சக்திகளுக்கு உயிர் பலி கொடுத்து இன்னும் வாயில் சொல்ல முடியாத பல கேவலமான விஷயங்களை செய்து வந்தவளை என் தந்தை அவரின் மந்திர சக்திகளை கொண்டு பூமிக்கு அடியில் சிறை வைத்தார்.

 அவள் அப்போதும் திருந்தாமல் என் தந்தையை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். மேலும் சாமானிய மக்களை விட்டு விட்டு பேய் உலகத்தில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மாக்களை தனது மந்திர சக்தியால் பிடித்து தனக்கு அடிமையாக்கி சேவகம் செய்ய வைத்து பாதாள உலகத்தில் ராணியாக அவளை அவளே முடிசூட்டிக் கொண்டு இருக்கிறாள். என் தந்தையை பழிவாங்க அவரது ஒரே வாரிசான என்னை அவளின் துர் ஆன்மாக்களுக்கு பலியிடவே இவ்வளவு நாள் என்னை விடாமல் துரத்திக் கொண்டு இருக்கிறாள். இவளால் தான் என் தந்தை என்னை எங்கும் வெளியே தனியாக அனுப்ப சம்மதிக்க மாட்டார்.

 ஆனால் இன்று அவர் கண்ணில் மண்ணை தூவி விட்டு கடற்கரையில் கால் நனைக்க வந்தேன் வந்த இடத்தில் தாங்கள் என்னை பார்த்த மயக்கம் ஆகிவிட்டீர்கள். " மோகினி கூறியதை அறைகுறையாக கேட்டுக்கொண்டிருந்த வருண்

"சூனியக்காரின்னா வெளக்கமாத்துல பறந்து வருவாளா"

" எதில் பறந்து வருவாள் என்று கேட்கிறீர்கள்.. "

"வெளக்கமாறு"

" எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆனால் அவளால் பறக்க முடியும் என்பது மட்டும் எனக்கு தெரியும்."

" சரி விடு மாமா பத்தி தெரியும்ல சூனியக்காரி வந்தாலும் சூப்பு வெச்சு குடிச்சிருவேன்..மாமா கூட இருக்கும் போது என்னடி செல்லம் உனக்கு கவல.. நீ ஒன்னியும் பேஜார் ஆவத.. எல்லாம் மாமா இருக்கேன்ல நா பாத்துக்குறேன்"என்றவன்

"மச்சான் நதினு நீ எங்கடா போயி தொலைஞ்ச..அந்த கடலு கன்னி தா உன்ன கண்டாலே காண்டாவுதே மறுக்கா மறுக்கா எதுக்கு டா வெக்கமே இல்லாம அது பின்னாடி போயி கடலுல குதிக்குற..உனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நா இன்னாடா பண்ணுவேன்.. நதினு மச்சான் உனக்கு ஒன்னு தெரியுமா இந்த பொண்ணு இருக்குல்ல எங்க அவ எம்மா மாங்கனி"வருண் மோகினி அமர்ந்திருந்த எதிர் திசையில் காற்றில் கை வீசி துலாவ

"அம்மாடி மாங்கனி மச்சான் அந்த பிகவ்Gர காணலடா போய்ட்டா போல.. உனக்கு தெரியுமாடா அந்த புள்ள பொசுக்குன்னு என் கிட்ட புள்ள கேக்குதுடா.. நா தர மாட்டேன்னு சொல்லல ஆனா அவளே குயந்த மாறி இருக்கா அவளுக்கு ஒரு பாப்பா வேணுமாம்..கேட்டோன சுர்ருனு ஏறிருச்சு அதான் உட்டேன் ஒன்னு செவுலுல.. இதே நானா இருக்க கண்டி ஓகே.. இதுவே வேற ஒருத்தன்னா பாஞ்சிருப்பான் இந்நேரம். என்ன பாக்க அவளுக்கு எப்டிடா இருக்கு.. குட்டியோண்டு இருந்துகினு அந்த பேச்சு பேசுறா.. அவள இரு அவ அப்பன பாத்து நறுக்குன்னு நாலு கேள்வி கேக்குறேன் ஏன்ய்யா பெருசு இதான் நீ பொண்ணு வெச்சிருக்கிற அழகா வரவன் போறவன் கிட்டலாம் புள்ள கேக்குது. நானா இருக்க போயி உன் மவ கற்போட விடுறேன்..

இனியாச்சும் பொட்ட புள்ளய பாத்து சூதனமா வளக்க பழகுன்னு".. அவன் உளறி கொண்டே பின்னால் சரிந்து மோகினியின் நெஞ்சில் விழ அவனை விளக்க திமிறியவளின் போராட்டத்தை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அவன் அவளை பார்த்து திரும்பி படுக்க இப்பொழுது ரோகினி கீழே சரிய அவளின் நெஞ்சில் தலைவைத்து சுகமாக படுத்துக்கொண்டான் வருண்.

"இதோ பாருங்கள் என்ன செய்கிறீர்கள் ஒழுங்கு மரியாதையாக என் மேல் இருந்து எழுந்து கொள்ளுங்கள். எனக்கு உங்களிடம் பிள்ளை கேட்க தோன்றியது கேட்டேன். அதுதான் முடியாது என்று கூறி இப்பொழுது போதையில் வேறு உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிரீறே.. பிறகு எதற்கு என்னை கட்டி அணைத்து படுத்து கொண்டிருக்கிறீர்.. எழுந்திரும்"

"இன்னாடா இது ஒரே மாயமா இருக்கு இந்த ஒலகத்துல மெத்த எல்லாம் பேசுது.."என்றவன் அவள் நெஞ்சில் முகம் பதித்து அப்படியும் இப்படியும் உரச பாவம் மோகினி ரொம்பவே சிரமப்பட்டாள் தன்னை அடக்க. அவன் உமிழ் நீர் வடிய உறங்கி போக அவளோ கண்மூடி அந்த நிமிடத்தை தன்னுள் நிறைந்தாள்.

 அவனிடம் கூறியது போலவே அவள் அன்று கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தாள். சிம்மா அவளிடம் உதவி கேட்டதும் அதன் கோரிக்கையை ஏற்று சோமபானம் வரவழைத்து கொடுத்தாள். ஆனால் அதை ஏற்காது அவளை பார்த்தே ஆக வேண்டும் என அவன் பிடிவாதம் பிடிக்க அதர வேந்தனின் நண்பனின் பேச்சை மீற முடியாமல் அவள் முகத்தை காட்ட இவனோ மயங்கி விழுந்தான்.

ஆனால் உண்மையில் மயங்கியது விழுந்தது வர்ண மோகினி தான் வருணின் மேல். அவனின் வியந்த விழியில் அவள் அவளை தொலைத்தாள்.அதன் பின் அவளுக்கு நேரமாகி விட அவள் மாய உலகத்திற்குள் மெதுவாக அடிமேல் அடி வைத்து செல்ல அவள் மனமெல்லாம் ஒரு பாரம் ஏறியது உண்மையே.அந்த பாரம் எதனால் என்பது அறியாமல் பாவையவள் நடைப்பழக அப்பொழுது நாளாக மடிந்து வந்து விழுந்தான் வருண்.

ஏதோ பெரிய அலறலுடன் விழவும் பயந்தவள் விழுந்தது அவன் தான் என்பதை கண்டதும் தன் மன பாரம் நீங்கியத்தை உணர்ந்தாள். வாய் பிளந்து மயங்கி கிடந்தவனை எழுப்பி அவள் குழந்தை கேட்க அவன் விட்ட ஒரே அறையில் முடிவெடுத்து விட்டால் அவளின் குழந்தைக்கு தகப்பன் அவன் தான் என்று.அவன் விழியில் தன் மனதை தொலைத்து அவன் உயிரில் தன்னை தொலைக்க சித்தமானாள் மோகினி.

நொடியில் அதர கோட்டையை சென்றடைய இயலும் ஆனாலும் இவள் சுற்று பாதையில் அவனை அழைத்து செல்கிறாள் எதனால் அவன் மீது கொண்ட காதலால்.இதோ அந்த காதல் இங்கே சரிந்து அவள் நெஞ்சில் முகம் புதைத்து உமிழ் நீர் ஒரு பக்கமாக வழிய அந்த உமிழ் நீர் அவள் மேலாடையில் ஊறி பாலாடை மேனியில் குளுமை ஏற்படுத்த அந்த அவஸ்தையில் நெளிய ஆரம்பித்தவளின் அசைவில் பெரிய மனது வைத்தவன் சர்ரே கிளிறங்கி இடையை கட்டி கொண்டு உறங்க பாவம் மோகினி சிவந்தே போனாள்.

அவனின் உமிழ் நீர் அவள் இடையில் பட்டு ஏறி இறங்கும் வயிற்றில் நகர்ந்து நடு மையமான தொப்புளில் மையமிட அவனை பிடித்து தள்ளினாள். அரை போதையில் உலன்று கொண்டிருந்தவன் லேசாக விழி மலர்ந்து பார்க்க அங்கே அவனின் செயலால் உடல் நடுங்கி கொண்டிருந்தாள் மோகினி.

"இன்னா மாங்கனி உடம்பு ஏன் இப்டி ஒதறுது. குளுருதா எனக்கும் தா.."என்றவன் தாவி அவளை இறுக்கமாக அணைத்து கொண்டு "இனி குளுராது"என அவளும் அதை தெய்வ வாக்காக எடுத்து கண்ணயர அவளை தேடி வந்த மிமியும் சுசுவும்

"மிமி அங்கே பார்த்தாயா"

"பார்த்து கொண்டு தானே இருக்கிறேன்.. ஒரே கிளு கிளுப்பாக இருக்கிறது தானே"

"அதற்கு நீயென வெட்கப்பட்டு நாணி கோணி நிற்கிறாய் அந்த நினைவெல்லாம் உனக்கு இருக்கவே கூடாது சொல்லிவிட்டேன்"ஆண் குட்டி சாத்தனாகிய சுசு பெண் குட்டி சாத்தனாகிய மிமியிடம் சொல்ல

"உனக்கு தான் உடம்பில் உணர்வென்பதே கிடையாது எனக்கும் அப்படியா.. அங்கே பார் எப்படி இருவரும் கட்டிக்கொண்டு துயில் கொள்கிறார்கள் ம்ம்ம் இதற்கெல்லாம் கொடுப்பணை வேண்டும்.. உனக்கு சூனியக்காரியிடம் மொத்துப் பட வேண்டுமானால் கொடுப்பணை உள்ளது"

"ரொம்பத்தான் கொடுப்பணை.. மூளையே இல்லாத மிமியே இப்பொழுது இவர்களுக்கு இந்த கொஞ்சல் தேவையா இந்நேரம் சூனியக்காரிக்கு மூக்கு வேர்த்துருக்கும்.. அவள் இவர்களை விட்டு வைப்பாளா"

களுக்கென சிரித்தது மிமி"அடப்பாவி சுசு..உன் வாயில் நல் வார்த்தை வராதா.. அந்த சூனியக்காரி கனவிழிக்க முழுதாக இரண்டு நாளாகும்.."

"எப்படி மிமி"

"அதெல்லாம் அப்படி தான்.. அதனால் நாம் இருவரும் இவர்களை தொந்தரவு செய்யாமல் அவர்கள் நேச விளையாட்டை ரசிக்கலாம்.. அதை பார்த்தாலாவது உனக்கு அந்த உணர்வு வருதா என்று பார்க்கலாம்"சுசு மிமியை முறைக்க வருணின் நெஞ்சில் சுகமாக கண்ணயர்ந்தால் வர்ண மோகினி.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்