Posts

Showing posts from January, 2022

23 நெருங்கினா(ள்)ல்?

Image
ஒயிலழகி கடுப்போடு நடந்து கொண்டிருந்தாள்..காரணம் வேறு எதுவுமல்ல அவள் முன்னால் நடந்து கொண்டிருக்கும் நந்தன் தான் அவளின் கடுப்புக்கும் கட்டுக்கடங்காத கோபத்திற்கும் காரணம்.. என்ன தைரியம் இருந்திருந்தால் தன் கழுத்தை நெரித்துக் கொல்ல பார்த்திருப்பான்.. அப்படி என்ன தேசப்பற்று இவனுக்கு? சொல்லப் போனால் இவன் ஒன்றும் முழுதாக பாரத தேசத்தவன் கிடையாதே.. இவனுடைய தந்தை ஆயிரம் சொன்னாலும் வெள்ளைக்காரன் தானே..  இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது என் கழுத்தை பிடித்து நெறிக்க.. நேரம் கிடைக்கட்டும் நான் யார் என்று காட்டுகிறேன் என்று கறுவிக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள் அழகி.அவளுக்கு பாட்டியை பற்றிய ஞாபகமாகவே இருந்தது.. தன்னை காணாமல் தன்னுடைய பாட்டி எப்படி  பரிதவிக்கிறாறோ..  அந்த வெள்ளைக்காரன் பாட்டியை போட்டு என்ன பாடு படுத்துகிறானோ? எப்படியெல்லாம் தான் வளர்த்த பாட்டி கஷ்டப்படுகிறாரோ.. ஆம் பாட்டி அழகியை வளர்ந்ததை விட அழகி தான் பாட்டியைப் பார்த்து பார்த்து வளர்த்து கொண்டிருக்கிறாள். அவரின் ஆரோக்கியத்தில் இருந்து அவர் அணியும் உடை வரை அழகி தான் கண்ணும் கருத்துமாக இருந்து அனைத்தையும

22 நெருங்கினா(ள்)ல்?

Image
இந்த தொடரில் அழகியின் வயது வித்தியாசத்தை கண்டு பொங்கி விடாதீர்கள்.. ஏனென்றால் என் கொள்ளுப் பாட்டியை பத்து வயது சிறுமியாக இருக்கும் போது கல்யாணம் செய்து மலேஷியாவிற்கு என் கொள்ளுத் தாத்தா தூக்கி வந்தார் என்று கூறுவார். இங்கே வந்து பூப்படைந்த பின் பதினாறு குழந்தைகள் பெற்றார்.1930 நடந்தது இது..அதே போல வெள்ளையன்களின் அட்டூழியங்கள் இப்படி இருந்தது என என் கொள்ளுப் பாட்டி சொல்லியது உண்டாம். கதை நடைபெறும் காலம் 1900 களின் ஆரம்பம்..எனவே வயது வித்தியாசத்தை கண்டு பொங்கினால் கம்பெனி பொறுப்பாகாது..🙏🏻🙏🏻😁😁😁 சுகதம்மை பாட்டி கூறியதைக் கேட்காமல் அந்த வெள்ளையன் அழகியை பிடிக்க தனது ஆட்களை நாலாபக்கமும் அனுப்பினான். பாட்டிக்கு கிலி பிடித்து கொண்டது. இந்த நடு இரவில் தன்னுடைய பேத்தி எங்கு மறைந்திருக்கிறாளோ என்று அவரை பயம் பேயாய் பிடுங்கித் தின்றது.ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய போன தன் பேத்திக்கு அதே அவல நிலை வந்து விடக் கூடாது என்று தனது குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி நின்றிருந்தார் பாட்டி. அவருக்கு இருந்த ஒரே ஆறுதல் நந்தன். யாரென்றே அறியாத அவனின் முகம் பாட்டியின் மன

21 நெருங்கினா(ள்)ல்?

Image
ஒயிழலகி அந்த புரட்சியாளனை பற்றி மறந்தே போனாள். அவளுக்கு சீக்கிரம் காசு சேர்த்து செட்டியார் வீட்டம்மா அணிந்திருப்பதை போல காசு மாலை செய்ய வேண்டுமென அதிலேயே கண்ணாக இருந்தாள்.. வெள்ளையனுக்கும் இந்தியர்களுக்கும் புரட்சி ஆங்காங்கே பெரிதாக வெடித்துக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் போராட்டம் புரட்சி கூட்டம் கூடுதல் இப்படியாக ஆண்கள் பெண்கள் பாகுபாடின்றி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி கொண்டிருந்தனர். அழகிக்கும் ஆசை தான் அந்த மாதிரி புரட்சிப் படையில் சேர வேண்டும் என்று. ஆனால் அவளின் ஆச்சிக்கு அவள் ஒருவள் மட்டுமே இருக்கிறாள். புரட்சி போராட்டம் தேச சுதந்திரம் என்ற  சென்று விட்டால் நாளை வெள்ளையன் வயதான பெண்மணி என்று கூட பார்க்காமல் பாட்டி சுகந்தம்மையை சுருட்டி எடுத்து சென்று விடுவான். இப்போதெல்லாம் அழகிக்கு இன்னொரு கவலையும் சேர்ந்து கொண்டது. பாட்டிக்கு மிகவும் உடல்நிலை தேய்ந்து கொண்டே போவதால் சீக்கிரமாக அழகிக்கு ஒருவனைப் பார்த்து மணமுடிக்க சித்தம் கொண்டார். தங்கள் சமூக ஆட்களிடமும் இதைப் பற்றி கூறி அழகிக்கு தகுந்த மணவாளன் யாராவது இருந்தால் கூற சொல்லியிருந்தார். திருமணம் செய்து கொள்வ

20 நெருங்கினா(ள்)ல்?

Image
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கி இந்த "தை" உங்களுக்கு இன்பத்தை வாரி வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.. பொங்கலோ  பொங்கல்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 பேய் மழைக்கும் பலத்த காற்றிருக்கும் சவாலாக துடுப்பை போட்டுக் கொண்டிருந்த ஒயிலழகி தனது கரத்தை பற்றியது யாரென்று பார்த்தாள்.. புரட்சியாளனோடு முக்காடிட்டு வந்திருந்தவன் இப்பொழுது முக்காட்டை நீக்க முழு நிலவின் தயவால் அவனின் முழு உருவமும் அவளுக்கு தெரிந்தது. அவனைப் பார்த்த வேகத்தில் மிரண்டு விட்டாள் அழகி.  அவன் ஒரு வெள்ளையன்.. இருந்தாலும் முகத்தில் மீசையும் தாடியும் வைத்திருந்தான். மற்ற வெள்ளையனை போல சுண்ணாம்பு வண்ணத்தில் இல்லாமல் வெயிலின் தயவால் அடர் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டான்.  புரட்சியாளனை ஏமாற்றி முக்காடு போட்டு வந்திருக்கிறான் வெள்ளைக்காரன் என்று பயந்து போனாள் அழகி.  அவளின் மிரண்ட கண்களை பார்த்தவன் அவளது கையிலிருந்து துடுப்பை தான் வாங்கிக் கொண்டு  "எந்தா குட்டி அவ்வட நோக்குன்னு" (என்ன பொண்ணு அப்டி பாக்குற)..  வெள்ளையன் சரளமாக மலையாளம் பேசியதில் மேலும் திக

19 நெருங்கினா(ள்)ல்?

Image
ஹாய் டியரிஸ்.. எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன்.. ஒரு புது முயற்சியா miniature Cooking set வெச்சு சமையல் சேனல் ஸ்டார்ட் பண்ணிருக்கேன்.. மலேஷியா சமையல்.. வேஸ்ட்ர்ன்.. சைனிஸ் இப்படி எனக்கு தெரிஞ்ச சமையல செய்ய போறேன்.. உங்க ஆதரவ கொடுத்தா ரொம்ப சந்தோசமா இருக்கும்.. முடிஞ்சா போற போக்குல நம்ம சேனல்ல subscribe செய்ஞ்சிட்டு போங்க🧡🧡🧡🧡 🌻TASTY TINY https://youtube.com/channel/UCdkT_nuhf4lmyZVufSpG4VA🌻 வந்தியதேவன் அவனின் ஓட்டத்தை எவ்வளவு தான் எட்டி போட்டாலும் குண்டலகேசி அவளுக்கிருந்த அளவுக்கதிகமான ஆர்வத்தின் காரணமாக அந்த பேழையைத் திறந்து அதனுள் இருந்த பூட்டை வந்தியதேவன் சங்கிலியின் டாலருக்குள் பதுக்கி வைத்திருந்த சாவியால் திறந்து விட்டாள். சாதாரண பூட்டு என்றால் சாவி போட்டு திறந்தவுடன் மேலே டக் என்ற ஓசையோடு பூட்டு திறந்து கொள்ளும். ஆனால் இந்தப் பூட்டு சற்று வித்தியாசமாக இருந்தது. பூட்டியிருக்கும் மேல் பகுதி திறந்து கொள்ளாமல் கீழ்ப்பகுதியில் ஒரு விசை வந்தது."பூட்ட சாவி போட்டு தொறந்தா மேல தானே தொறக்கும்.. இது என்ன அடியில் இருந்து ஏதோ ஒரு சுவிட்ச்சு வருது..என்ன

18 நெருங்கினா(ள்)ல்?

Image
குண்டலகேசி ஒரு பக்கம் ஆர்வத்தோடும் ஒரு பக்கம் தன் விதியை மாற்றிய விடுகதையை அறிந்து கொள்ளும் பதற்றத்தோடும்  மழைக்காக வானம் பார்த்து நிற்கும் விவசாயி போல தன் வாழ்வை திசை திருப்பிய சம்பவத்தை  தெரிந்து கொள்ள வந்தியதேவனின் முகம் நோக்கி பார்த்திருந்தாள். தன் கால் அருகே சட்டமாக அமர்ந்து கதை கேட்கும் அவளைப் பார்க்கையில் ஆசை பொங்கி வழிந்தது அவனுக்கு.  அதே சமயம் குற்ற உணர்ச்சியாகவும் இருந்தது. " இப்படியே என் மூஞ்ச பார்த்துக் கிட்டு இருந்தா எப்போ தான் நீ கத சொல்லி முடிப்ப..சட்டு புட்டுன்னு கதைய சொல்லு..புல்லு குத்துது.. அரிக்குது வேற" சலிப்பாக சொல்லியவள் சற்று எம்பி தன்னுடைய பின் பக்கத்தை  சொறிந்தாள். அவளின் செய்கையை பார்த்து தலையாட்டிக் கொண்டவன் மீதி கதையை சொல்லத் தொடங்கினான்.. "சுகிர் பாய் கிட்ட வேலை செஞ்சிட்டு இருந்தேன்..சுகிர் பாய்க்கு நேஷனல் லெவெல்ல பிஸ்னஸ் இருந்துச்சு.. என்ன அப்படி பார்க்கிற.. நீ நினைக்கிறது சரிதான்..  அண்டர் கிரவுண்ட் பிசினஸ்.  சென்னையில அவரோட பிசினஸ பார்த்துட்டு இருந்தவன் ஒப்போசிட் டீம் கிட்ட காச வாங்கிட்டு பாய்க்கு துரோகம் செஞ்சுட்டான்.அவனால பல

17 நெருங்கினா(ள்)ல்?

Image
"தேவா.."..  மாலையில் தோட்டத்தில் அமர்ந்து தேனீர் குடித்துக் கொண்டிருந்தவனை அழைத்தாள் குண்டலகேசி..  அந்த ஆற்றில் குதித்து மர்ம அறைக்குள் நடந்த மர்மங்கள் யாவும் நடந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது.  அதற்கு முன்பும் சரி அதற்குப் பின்பும் சரி அவளிடம் அளந்தே பேசி வந்தவன் இந்த மூன்று நாட்களாக அடியோடு தன்னுடைய பேச்சை நிறுத்திக் கொண்டான்.கமலிக்கு இறுதியாக தாங்கள் இருவரும் குளத்தில் குதித்தது மட்டும் தான் நினைவுக்கு இருந்தது. அதன் பிறகு என்ன ஆயிற்று என்று குண்டலகேசியிடம் அவள் வினவினாள். உண்மையை கூறாமல் இவர்கள் இருவரும் சென்று நீண்ட நேரம் ஆகி விட்டதால் இவர்களைத் தேடி வந்தியதேவன் அங்கே வந்தான். அவன் தான் அவர்கள் இருவரையும் குளத்தில் குதித்து காப்பாற்றினான் என்று ஒரு பொய்யை அளந்து விட்டாள் குண்டலகேசி. என்னதான் அவனுக்கான வேலைகளை அவளே பார்த்து பார்த்து செய்தாலும் அவன் அவளின் முகத்தை பார்த்து பேசவே இல்லை. தன்னுடைய தலை முழுவதும் கேள்வியை நிரப்பி வைத்திருந்த குண்டலகேசிக்கு இந்த மவுனம் ரொம்பவே கொடுமையாக தெரிந்தது. ஒன்றுமே தெரியாமல் தன்னுடைய வாழ்க்கை இந்த சில தினங்களில் ஒரு பெர