Posts

Showing posts from March, 2022

39 நெருங்கினாள்(ல்)? இறுதி பாகம்

Image
ஹேரி மற்றும் வந்தியதேவன் இருவரும் இந்த இரண்டு வருடமாக தவமிருக்கிறார்கள் குண்டலகேசியை பார்ப்பதற்கு.  அவர்கள் மட்டுமல்ல ஆவுடையப்பன் அவரது மற்ற மகள்கள் இப்படி அனைவருமே குண்டலகேசி எப்போது வருவாள் என்று வழி மேல் விழி வைத்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆவுடையப்பன் மட்டும் அவளின் தற்போதைய நிலையை அறிந்து அதை வெளியே சொல்ல முடியாமல் தனக்குள் ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கிறார்.  குண்டலகேசியின் ஆறு சகோதரிகளும் தினம் தோறும் பூஜை புனஸ்காரங்கள் செய்து தங்களுடைய சகோதரி விரைவாக வீட்டிற்கு வர வேண்டும் என்றும் அவள் எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.  இந்த இரண்டு வருடத்தில் ஹேரி மற்றும் வந்தியதேவன் இருவரும் தங்களுடைய இல்லீகள் தொழிலை விட்டுவிட்டு நன்முறையில் பிசினஸ் செய்து வருகிறார்கள். தனிமை வேண்டும் என்று கேட்டுச் சென்றாளா? அல்ல அந்த தனிமையை தங்களுக்கு பரிசாகக் கொடுத்து விட்டு சென்றாளா என்று இருவருக்கும் புரியவில்லை.அவள் இல்லாத இந்த தனிமை அவர்களை கொலையாய் கொன்றது.  அவள் என்ன செய்கிறாள்?  யாரோடு இருக்கிறாள்? இப்படி அனைத்து கேள்

38 நெருங்கினாள்(ல்)?

Image
குண்டலகேசி அந்த அப்பார்ட்மெண்டின் பால்கனியில் நின்று துபாயின் பொன் மாலை வேளையை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளது கரங்கள் ஆசையாக அடி வயிறை தொட்டது.அங்கே அவளது குழந்தை ஒன்பது மாத கருவாக உறங்கிக் கொண்டிருக்கிறது. குண்டலகேசியின் எண்ணங்கள் பின்னோக்கி சென்றது. சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவள் சென்னை வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டாள். வந்தியதேவன் ஹேரி இவர்கள் இருவரிடமும் இருந்து தப்பித்து இந்த ஆறு மாதமாக  அவள் நிம்மதியாக இருக்கிறாள். ஆவுடை என்ன செய்வாரோ என்று அவளுக்கு பயம் இல்லை. ஏனென்றால் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து விட்டு தான் இங்கே வந்து இருக்கிறாள். தனியாக இருக்கும் தந்தைக்கு  உதவியாக தினம் வீட்டிற்கு வந்து வேலை செய்து சமைத்து வைத்து விட்டு செல்ல நம்பிக்கையான பெண் ஒருவரையும் ஏற்பாடு செய்திருந்தாள். அவள் அங்கிருந்து கிளம்பியது அவளது சகோதரிகளுக்கு கூட தெரியாது.யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாய் மறைந்து விட தான் நினைத்தாள். ஆனால் மனம் கேட்கவில்லை அதனால் தன்னுடைய தந்தைக்கு இன்னொரு தடவை ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் அவரிடம் மட்டும் தான் எங்கே செல்ல போகிறேன

37 நெருங்கினாள்(ல்)?

Image
"என்னமா யோசிட்டு இருக்க"ஆவுடை கேட்க தன் சிந்தையில் இருந்து கலைந்தவள் லேசாக தலையை நிமிர்த்தி ஆவுடையை பார்த்தாள். "அப்பா" "உன் அப்பன் தான்.. சொல்லு என்ன யோசன என் பொண்ணுக்கு. அதுவும் இந்த உலகத்துல இல்லாத அளவுக்கு.. நான் சொல்லட்டுமா"அவளின் நெற்றி சுருங்கி விரிந்தது. "மாப்பிள்ளய பத்தி யோசிச்சிட்டு இருக்க".. ஆவுடை பளீரென சிரிக்க கேசி சலிப்பாக உச்சிக் கொட்டினாள். "அப்பா மனசு, கண்ணு இது ரெண்டுல யார் சொல்றத நாம கேக்கணும்".. "ம்ம்ம்..ரெண்டு சொல்றதையும் கேக்கலாம் தப்பு இல்ல. ஆனா அது உண்மையா இருக்கனும்.கண்ணு ஆயிரம் பாக்கும். எல்லாத்துக்கும் சாட்சி வெச்சிக்கும். பாக்குறது எல்லாம் நமக்கு இல்லையேனு ஏங்க சொல்லும்.. இதுவே மனசுனா நமக்கு பிரியமானவங்க என்னதான் கொலை குத்தம் செஞ்சாலும் அவங்க பக்கம் இத்துனோண்டு நல்லது இருக்கானு தேடும். நியாயம் நீதி தர்மம் எதுவுமே மனசுக்கு தெரியாது. அதுக்கு தெரிஞ்சது எல்லாமே அன்பு தான்.அந்த அன்பு கெடைக்கலனா அத நெனச்சு ஏங்கி துடிக்க செய்யும். மனசுக்கு நல்லது கெட்டது தெரிஞ்சாலும் அது ஒரு

36 நெருங்கினாள்(ல்)?

Image
டியரிஸ், எனக்கு நீங்க கொடுக்குற ஊக்கம் தான் எனர்ஜி பூஸ்ட்.. முடிஞ்சா சேனல்ல subscribe செஞ்சு எனக்கு சப்போர்ட் பண்ணுங்க❤️ https://youtube.com/channel/UChMcIeFRhMEK79zoNsM_Pmw குண்டலகேசி ஆவுடையப்பனின் மடியில் படுத்து இருந்தாள்.அவளது கண்கள் கலங்கவில்லை. முகமும் வாடவில்லை. ஆனால் உணர்ச்சிகள் துடைத்த தோரணையில் அவள் வாழ்வையே தொலைத்தது போல் படுத்திருந்தாள். மகளின் மனதில் என்ன இருக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. அன்று மருத்துவமனையில் தன்னை வந்து பார்த்து சென்ற மருமகன் விரைவில் மகளை தன்னைக் காண அழைத்து வருவதாக கூறிச் சென்றான். மகள் வருவாள்.தன்னை பார்ப்பாள். பின் கணவனோடு அவள் வீட்டிற்குச் சென்று விடுவாள். குங்குமம் நெற்றி வகுடில் சூடிருக்க கழுத்தில் மஞ்சள் கயிறு மங்களமாக வீற்றிருக்க இந்த ஏழ்மையின் பிடியில் இருந்து ஒரு நல் வாழ்க்கை அமைந்த செழுமையில் மகள் கணவனோடு செல்லும் காட்சியை மனநிறைவோடு காணலாம் என்று அந்த அன்பான தந்தை எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அனைத்துமே பொய்யாகி விட்டது.ஒன்று மட்டும் மெய். அவர் நினைத்தது போலவே மகள் வந்தாள். வந்தியதேவன் எனும் ஹேரி அவரை வந்து பார்த்து விட்டு

அதரா 6-9

Image
அதரா - 6 'ஆருஷ் என்னடா அவன் காண போய் ரெண்டு நாளாச்சு இன்னும் ஒரு தகவலும் இல்ல அவன் எங்க போனான் என்ன ஆனான் ஒண்ணுமே தெரில அவன் கூட வருணும் எங்க போய் தொலைஞ்சான்னு தெரில ஐயோ கடவுளே என் புள்ளைக்கு என்னாச்சு அவனுக்கு இருபத்தேழு வயசுல கண்டம் இருக்குன்னு தெரிஞ்சும் அத பெருசா எடுத்துக்காம நா தா இருந்தேனா அதுக்கு தா இப்ப அனுபவிக்குறேன் போல..நதின் அம்மா உன்ன சரியா பாத்துகல அதான் என்ன விட்டு போயீடியா திரும்ப வந்துரு பேபி திரும்ப மம்மி கிட்ட வந்துரு டா." சுகன்யாவின் அழுகை குரல் அந்த பெரிய வீடு முழுக்க ஒலித்தது.இந்த இரண்டு நாட்களாக அவர் அழுந்த முகமும் அரற்றும் குரலும் அவர் அவராக இல்லை.ஆருஷ் தம்பியை கண்டு பிடிக்க பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் பலனில்லாமல் போனது.இறுதியாக வருணுடன் மீன் பிடிக்கும் சக மீனவர்களில் சிலர் ஆழ கடலின் மத்தியில் சிதிலமடைந்த கப்பல் ஒன்றை கண்டதாக காவல்துறையினரிடம் தெரிவிக்க நதினை காணாமல் தேடிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அந்த கப்பல் இருந்த இடத்திற்கு இன்னொரு கப்பலின் மூலம் சென்றனர்.  அவர்களுடன் ஆருஷ் சென்றான். கப்பலின் ஏற்கனவே தேடி பார்த்த மீனவர்கள் கூறியதை