நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்


"என்னை விட்ரு..உனக்கு என்ன வேணும்?என் கிட்ட கொடுக்க எதுவுமே இல்ல. மெட்டி ஒளி சிதம்பரத்த விட எங்கப்பனுக்கு தான் பொண்ணுங்க ஜாஸ்தி. நாங்க மொத்தம் ஏழு பொண்ணுங்க. பாவம் மனுஷன் நொந்து வெந்து ஆவியா போய்ட்டாரு.எல்லா டாக்டர்ஸும் சூடம் அடிக்காத குறையா சத்தியம் பண்ணாங்கலாம்.. நான் ஆம்பளயா பொறப்பேன்னு.

என் அப்பாவோட கிரகம்  நான் பொம்பளயா பொறந்துட்டேன். அதுலயே அவரு பாதி இடிஞ்சிட்டாரு. இதுல என் அக்காங்க எல்லோருக்கும் மாப்ள பாத்து சீரு செனத்தி செஞ்சு கட்டி கொடுக்குறக் குள்ள மீதியும் இடிஞ்சு ஒடஞ்சு தூள் தூளா ஆயிட்டாரு.. ஏதோ இளிச்சவாய் மாப்ள ஒருத்தன் கெடச்சி சீரு செனத்தி வேணா உங்க பொண்ண மட்டும் கொடுங்கன்னு கட்டிக்க இருக்கான்.

அது உனக்கு பொறுக்கலையா? உடனே தூக்கிட்ட. இதோ பாரு தம்பி,நீ அடிச்சு கேட்டாலும் சரி கடிச்சு கேட்டாலும் சரி எங்கப்பன் ஆவுடை கிட்ட அஞ்சி காசு கூட கிடையாது.. தயவு செஞ்சு என்ன ரிலீஸ் பண்ணு"..புது படமா அவளை ரிலீஸ் பண்ண?தன்னை ஒருவன் கடத்தி வைத்துள்ளான் அவனிடம் எப்படி பேசுவது என்று கூட தெரியாமல் உளறிக் கொண்டு இருக்கிறாள்.. கேசி.. இது அவளின் செல்லச் சுருக்கம்.. முழுப் பெயர் குண்டலக்கேசி.

Comments

  1. போச்சு ஆரம்பமே ஹீரோயின் யார்கிட்டவோ சிக்கிட்டா.இவன் வில்லனா ஹூரோவா.எப்படியோ தேனும்மா எபி போட ஆரம்பிச்சிட்டாங்க.மீ ஹேப்பி.👍🏻👍🏻👍🏻👌👌👏👏👌🏼💖💜💜💖💖💜💖💜💖💖💖💜💜💖💜💖💜💜💜💜

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே