9&10&11 பைத்தியத்தின் வைத்தியமே
டியர்ஸ் எனது கதைகளை ஆடியோ வடிவாக கேட்க Moon's talk channel ஐ கேட்கவும். அப்படியே முடிந்தால் subscribe செய்து ஆதரவு கொடுங்க டியர்ஸ்💛🧡 https://youtube.com/@moonstalk6914 அத்தியாயம் 9🧡 தோட்டத்து பொந்திலிருந்து வெளி வந்த எலி கூட இலக்கியன் கட்டிய தாலியை பார்த்ததும் மீண்டும் பொந்துக்குள் சென்று பதுங்கி விட்டது. அந்த வீட்டில் அவ்வப்போது திருடித் தின்ன வரும் எலிக்கே அவ்வளவு அதிர்ச்சி இருக்கும் போது பைத்தியத்திற்கு ட்ரீட்மெண்ட் செய்ய வந்த பவள மல்லிக்கு தன் கழுத்தில் தொங்கும் தாலியை பார்த்து எவ்வளவு அதிர்ச்சி இருக்க வேண்டும். பாரதிராஜா படம் போல இலக்கியன் திடீரென்று கட்டிய தாலியை பார்த்ததும் அரக்கப் பரக்க வந்து கொண்டிருந்த மணியண்ணா அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்காமல் ஒரு காலைத் தரையிலும் மற்றொரு காலை ஹேரிலும் வைத்தபடி நிற்க, வலியில் முனகிக் கொண்டிருந்த டோலி வாயைத் திறந்து முட்டை கண்ணை விரித்து அந்த காட்சியை பார்க்க, நம் தன நம் தன நம் தன ஆ ஸ்லொவ் மோஷனில் 360 டிக்ரி கோணத்தில் இலக்கியன் பவள மல்லியை சுற்றி சுற்றி கதையும் சுற்றுகிறது.. கையில் ஓப்போ கைபேசியில் டைப் செய்தவாறு எழுத்தாளி