Posts

Showing posts from 2023

9&10&11 பைத்தியத்தின் வைத்தியமே

Image
டியர்ஸ் எனது கதைகளை ஆடியோ வடிவாக கேட்க Moon's talk channel ஐ கேட்கவும். அப்படியே முடிந்தால் subscribe செய்து ஆதரவு கொடுங்க டியர்ஸ்💛🧡 https://youtube.com/@moonstalk6914 அத்தியாயம் 9🧡 தோட்டத்து பொந்திலிருந்து வெளி வந்த எலி கூட இலக்கியன் கட்டிய தாலியை பார்த்ததும் மீண்டும் பொந்துக்குள் சென்று பதுங்கி விட்டது. அந்த வீட்டில் அவ்வப்போது  திருடித் தின்ன வரும் எலிக்கே அவ்வளவு அதிர்ச்சி இருக்கும் போது பைத்தியத்திற்கு ட்ரீட்மெண்ட் செய்ய வந்த பவள மல்லிக்கு தன் கழுத்தில் தொங்கும் தாலியை பார்த்து எவ்வளவு அதிர்ச்சி இருக்க வேண்டும். பாரதிராஜா படம் போல இலக்கியன்  திடீரென்று கட்டிய தாலியை பார்த்ததும் அரக்கப் பரக்க வந்து கொண்டிருந்த மணியண்ணா அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்காமல் ஒரு காலைத் தரையிலும் மற்றொரு காலை ஹேரிலும் வைத்தபடி நிற்க,  வலியில் முனகிக் கொண்டிருந்த டோலி வாயைத் திறந்து முட்டை கண்ணை விரித்து அந்த காட்சியை பார்க்க, நம் தன நம் தன நம் தன ஆ ஸ்லொவ் மோஷனில் 360 டிக்ரி கோணத்தில் இலக்கியன் பவள மல்லியை சுற்றி சுற்றி கதையும் சுற்றுகிறது.. கையில் ஓப்போ கைபேசியில் டைப் செய்தவாறு எழுத்தாளி

7 & 8 பைத்தியத்தின் வைத்தியமே

Image
அத்தியாயம் 7❤️ "இலக்கியன் என்ன பண்ற.. பொருக்கி நாயே.. உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இப்டி பண்ணுவ.. உன்ன சாவடிச்சிட்டு தான் டா மொத வேல".. பவளமல்லி கட்டுக்கடங்காத கோபத்தோடு தன் இதழை அனுமதியின்றி சிறைப்பிடித்தவன் மேல் பாய்ந்தாள்.அவன் wwf ஹன்டர் டேக்கர் போல் அவளை மடக்கிப் பிடித்து மேலும் சில பல முத்தங்களை தாராள பிரபுவாக  வாரி வழங்க மல்லி சிறகொடிந்த கோழிக்குஞ்சென அவனை எதிர்க்க பலமில்லாமல் துவண்டு போனாள். ஒரு கட்டதில் மல்லி துவண்டு கால் மடிந்து அப்படியே அமர்ந்து விட்டாள் தரையில்..அதற்கு மேலும் அவளுக்கு முத்தச் சிகிச்சை கொடுக்க அவனுக்கு மனமில்லை. அவளுக்கு எதிரே மண்டி போட்டு அமர்ந்தவன்"கம் ஒன் மல்லி..கிஸ்ல என்ன வந்துச்சு.. இதுக்கு போய் இவ்ளோ சீன் போடுற.. நான் என்ன எனக்கு செம மூடா இருக்கு.. என் கூட வந்து படுத்துட்டு போன்னு சொன்னனா.. உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்.. உன்கிட்ட மட்டும் தான் எனக்கு அப்படி ஒரு பீலிங் வருது. அத ஹோனஸ்ட்டா உன் கிட்ட வந்து சொன்னேன்.. அதுக்கு போய் ஏன் இப்படி" வெறுப்பை உமிழும் கண்களோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் பவளமல்லி." நீ ப்ரொபோஸ்

6 பைத்தியத்தின் வைத்தியமே

Image
அத்தியாயம் 6❤️ மணி நள்ளிரவு மூன்று. பனியாய் இல்லை புகை மூட்டமாக என்று தெரியாத அளவிற்கு கண்கள் மிசு மிசுவென தெரிந்தது.. கூந்தலை அள்ளி கொண்டையாக உச்சியில் போட்டுக் கொண்டுச் சுடுகாட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லி. அவள் பயப்படுவாள், மிரண்டு விழிப்பாள் என்று  இலக்கியன் எண்ணிருக்க அவளோ சாவகாசமாக அந்த இடத்தை சுற்றி பார்க்க இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கானு யோசிக்க வைத்தது. "மல்லி உனக்கு பயமே இல்லையா.. ரொம்ப கேஷுவளா இருக்க".. "என்ன பயம் இலா..என்னிகா இருந்தாலும் நம்மளும் இதுல ஒரு அங்கம் தான.. ஜ்யோதில ஐக்கியம் ஆகி தான ஆகணும்.. உங்களுக்கு தெரியுமா.. எனக்கு சின்ன வயசுல இருந்தே சுடுகாட்ல போய் மிட் நைட்ல ஒக்காரணும்னு ஆசை" "ஏன்" "இங்க இருக்குற அமைதி வேற எங்க இருக்கு.. அதுக்கு தான்.. ஆமா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..மீட்டர் மாறி எதையோ கையில வெச்சிட்டு மானிட்டர்ல என்னத்த பாக்குறீங்க.." "நம்மள சுத்தி எக்ஸ்ட்ரா எனர்ஜி ஏதாச்சும் இருந்தா இதுல தெரியும்.. அதான் பாத்துட்டு இருக்கேன்" "ஏன் இலா... சுடுகாட்டுல கூட பேய்க்கு பஞ்சம் ப

5 பைத்தியத்தின் வைத்தியமே

Image
அத்தியாயம் 5 காலை உடற் பயிற்சியை முடித்து தோட்டத்தில் தங்களுக்கான ராஜியத்தை பிடித்து ஒய்யாரமாக வாசனை வீசிக்கொண்டிருந்த மலர்களை பார்க்கையில் சற்றே பொறாமை எட்டிப் பார்த்தது பவளமல்லிக்கு.. இயற்கையோடு இயற்கையாக ஒன்றி விட அவளுக்கு ஆசை தான். ஆனால் முடியவில்லையே? புதிதாக பூத்துக் குலுங்கிக் கர்வத்தோடு வாசம் வீசி மணம் பரப்பி கொண்டிருந்த மல்லிகை பந்தலின் அருகே சென்று நின்று கொண்டிருந்தாள். "ஒரு மல்லி இன்னொரு மல்லிய பார்த்து ரசிக்குது போல" திடீரென தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்த்தாள். வியர்வை ஆறாக ஓட இலக்கியன் நின்று கொண்டிருந்தான். சற்று தூரத்தில் இருக்கும் பார்க்கில் ஜோகிங் முடித்து வந்திருந்தான் போல. மல்லி பேசாமல் நிற்க அவளருகே சற்று நெருங்கி வந்தவன்  பூத்துக் குலுங்கிய வெண்மையான மல்லியை கையில் வருடி" உன்ன மாதிரியே அழகா இருக்குல்ல.. குண்டு மல்லி." " அப்போ என்ன குண்டுனு சொல்றீங்க.." " அப்படி இல்ல.. ஆனா நீ ஒல்லியும் இல்லையே.. மல்லி எப்படி குண்டா அழகா இருக்கோ அதே மாதிரி உன்னோட கன்னம் பன்னு மாதிரி நல்லா உப்பி அழகா இருக்கு. ஸப்பியா அழகா கும்

4 பைத்தியத்தின் வைத்தியமே

Image
அத்தியாயம் 4🧡 இரவு தூக்கம் வராமல் தவித்தாள் மல்லி. தனுஷ் இந்நேரம் அவனது முதலிரவை சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்க தான் மட்டும் அவனை நினைத்து உறங்காமல் தவிப்பதா என்று அவள் மேலேயே அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. எத்தனை வருட காதல்.  அவள் பின்னால் நாயாய் பேயாய் சுற்றி காதலே வேண்டாம் என்று மறுத்தவளையும் காதலிக்க வைத்தானே? எதற்கு இப்படி பணக்கார பெண் கிடைத்ததும் தன்னை அம்போ என்று விட்டுவிட்டு செல்வதற்கா? பணம் தான் அவனுக்கு பெரிதென கூறிருந்தால்  அவளே விலகி போயிருப்பாளே?அன்று அந்த நாளை எப்படி கூறுவது? கருப்பு நாள் என்றா? இல்லை கருப்பான இருட்டுப் பாதையில் செல்லவிருந்த தன்னை கடவுள் காப்பாற்றிய நாள் என்பதா? மல்லிக்கு புரியவில்லை. குத்துமதிப்பாக ஏதோ ஒரு நாள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நாள் ஆசை ஆசையாக அவனுக்கு பிடித்த வெள்ளை நிறத்தில் குர்த்தி அணிந்து தேவதையாக அவன் முன் சென்று நின்றாள்.. எப்போதுமே அவளைப் பார்த்தால் "மல்லி என்ன அந்த மல்லிக பூவுக்கே போட்டி கொடுக்குற"என்பான் தனுஷ்.. ஆனால் இன்று அவளைப் பார்த்தும் எதுவும் கூறாமல் பேசாமல் இருந்தான். அவனது முகம் மாற்றம் அவளுக்கு அவன்

3 பைத்தியத்தின் வைத்தியமே

Image
அத்தியாயம் 3💙 மல்லி இளாவை தள்ளி ஓய்ந்து விட்டாள்.அவன் பிடி அவ்வளவு வலிமையாக இருந்தது. இளா தான் நினைத்ததை எழுதி முடித்த நிம்மதி பெருமுச்சோடு பிடித்திருந்த அவள் கன்னத்தையும் சேர்த்து விட்டான். இரண்டு பக்கமும் பற்கள் உராய்ந்து இருந்ததால் லேசாக உதிரம் கசிந்தது.  அதை தன் உமிழ் நீரோடு விழுங்கி விட்டாள் மல்லி. கோபமாக அவனைத் திட்ட வாயைத் திறந்தவள் என்ன நினைத்தாளோ வேகமாக ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் சென்று கண்ணாடியில் அவன் என்ன தன் முகத்தில் கிறுக்கினான் என்று பார்த்தாள். ஏதேதோ நோட்ஸ் எழுதி வைத்திருந்தான் சிறு சிறு குறிப்புகளாக. ஆத்தி இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்பது போல அவனை அதிர்ந்து பார்த்தாள் மல்லி."ரைட்டு பையன் ஓவர் படிப்ஸ் போல.. " ஏனென்று தெரியவில்லை அவன் மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் "ஆமா.. இப்ப என் மூஞ்சில எழுதிட்டிங்களே.. நான் முகம் கழுவுனா எல்லாம் அழிஞ்சு போயிருமே.. அப்ப என்ன பண்ணுவீங்க".. ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டாள். அவன் வேக வேகமாக அங்கும் இங்கும் ஓடினான். அவனது கண்கள் நிற்காமல் சுழன்றது.வலது கை விரல்கள் காற்றில் மத்தலம் இல்லாமல் தாளம் போட