Posts

Showing posts from October, 2021

பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 25

Image
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா.. எம் பி ட்ரீயில் பாடல் ஒலிக்க அது தன்னவளை நினைவு படுத்த ராஜ் மித்ரனின் யோசனை சில மாதங்களுக்கு முன் சென்றது.திருமணம் ஆனதிலிருந்து எத்தனை பிரச்சனைகள். ஒவ்வொன்றில் இருந்தும் மீண்டு வருவதற்குள் எத்தனை மன வேதனைகள்..எண்ணிப்பார்க்கவே ஆயாசமாக இருந்தது.வெண்ணிலா அவள் தான் எவ்வளவு மென்மையானவள்.  இதுவே வேறு ஒரு பெண்ணாக இருந்தால் அவன் தாயும் சகோதரியும் பேசிய பேச்சிற்கு எப்பொழுதோ மூட்டை கட்டிக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றிருப்பாள். சாதாரண நிறக் குறைபாட்டை பெரிய தொத்து வியாதியாக நினைத்து கங்காவும் கமலாவும் பேசிய பேச்சுகள் அவனாலேயே மறக்க முடியவில்லையே. அவளுக்கும் அப்படித்தானே இருக்கும். ஆனாலும் இவன் தன் மேல் காட்டும் அன்பிற்காக எதையும் வாய்விட்டு கூறாமல் தனக்குள்ளேயே வைத்திருக்கிறாள். அவளது அம்மா அவளிடம் சகஜமாக பேச ஆரம்பித்த பின்பும் அவளால் அவர்களுடன் இழைய முடியவில்லையே.காரணம் தன் கணவன் அவன் தாயாரோடு பேசாமல் இருக்கும் இந்த நேரத்தில் தான் மட்டும் தன்னுடைய குடும்பத்தோடு

பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 24

Image
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி என் கண் பார்த்தது என் கை சேருமோ கை சேராமலே கண்ணீர் சேருமோ கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காதல் முகம் கண்டுகொண்டேன் ராஜ் வெண்ணிலாவை அழைத்துக்கொண்டு மாறன் வீட்டிற்கு சென்றான். வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்தே"வேணா ராஜ் நாம பேசாம வீட்டுக்கு போயிரலாம்..அங்க போனா என் அம்மா என்ன சொல்லுவாங்கன்னு தெரியல..கண்டிப்பா என் மேல கடுப்புல இருப்பாங்க.என்ன ஏதாச்சும் சொன்னாலும் பரவால்ல..அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல உன்ன எப்படி பேசினாங்க..அந்த மாதிரி இப்ப பேசிட்டா என்ன பண்றது.. இந்த நிலைமையில என்னால எதிர்த்துப் பேசாம இருக்க முடியாது..  உடனே அவங்க சாபம்தான் விடுவாங்க. எதுக்கு இந்த வீண் வேல.. வண்டிய திருப்பு வீட்டுக்கு போகலாம்"அவளின் ஆசையை அடக்கிக் கொண்டு அவனுக்காக இந்த நேரத்திலும் அவள் சிந்திப்பது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவளின் சந்தோஷத்தை விடவா தாமரை பேசப் போவது அவனுக்கு வேதனையாக இருக்கும்?  அப்படி என்றால் கமலா என்னென்ன வார்த்தைகள் கொண்டு அவளைக் கூறு கிழித்திருப்பார்.. அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு வார்த்தை பேசிருப்பாள

பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 23

Image
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே… இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்… "பாப்பா என்னடா பண்ற."என்றவாரே வந்தான் ராஜ் மித்ரன்.. வெண்ணிலா ஸ்டடி ரூமில் அமர்ந்திருந்தாள்.ராஜ் நிலா இருவருக்குமே புத்தகங்கள் என்றால் உயிர். திருமணமாகிய புதிதில் ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் அதைப் படித்து முடிக்கவே முடியாத ஒரு நிலையில் இருந்தாள் நிலா. காரணம் ஆசையாக எடுக்கும் புத்தகத்தின் பத்து பக்கங்களை அவள் படித்து முடிப்பதற்குள் அவளுக்கு பதினோராவதாக ஒரு பிரச்சனை வந்து நிற்கும். இப்பொழுது ஓரளவு பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அவளுக்காக ஆசை ஆசையாக அந்த அறையை ஹோம் டிசைனர்ஷை கூப்பிட்டு கண்களுக்கு குளிர்ச்சியாக அங்காங்கே செடி கொடிகளை வைத்து அழகாக குட்டி லைப்ரரி போல ரேக் செய்து அதில் நிறைய புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்திருந்தான். அவளுக்கு படுத்துக்கொண்டே கதை படிப்பதில் அவ்வளவு ஆர்வம். எனவே அவள் அமர்ந்து கதைப்படிப்பதற்கு குட்டி மேஜையும் அவளுக்கு முதுகு வலிக்காமல் இருக்க சாய்வு நாற்காலியும் வாங்கிப் போட்டிருந்தான். இன்னொரு பக்கத்தில் ஒரு ஆள் படுக்கக்கூடிய மெத்தை. அந்

பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 22

Image
ராஜ் வேறு வழி இல்லாமல் குணாவிற்கு அழைத்து கங்காவை பற்றிய விவரங்களை தெரிவித்தான். அதிலும் அவள் விவாகரத்தை கேட்டதை மென்று விழுங்கி அவன் கூற குணாவும் ராஜ் கூறிய அனைத்தையும் கேட்டு எந்த ஒரு பிரதிபலிப்பும் கொடுக்காமல் அவர்கள் இருக்கும் இடத்தின் முகவரியை தனக்கு அனுப்பி விடும் படி கேட்டான். கண்டிப்பாக குணா வருவது கங்காவை நாக்கை பிடுங்குவது போல் நான்கு கேள்வி கேட்க தான் என்பது ராஜிற்க்கு தெள்ளத் தெளிவாக தெரிந்தது. உடன் பிறந்த சகோதரியாக இருந்தாலுமே அவள் இதுவரை நடந்து கொண்ட முறை எதுவும் அவனுக்குமே பிடிக்காது. நாத்தனாரை வெறுத்தாள். தான்தோன்றித்தனமாக ஆடினாள். புகுந்த வீடு ஒன்று இருப்பதை மறந்து பிறந்த வீட்டிலேயே டேரா போட்டு விட்டாள். ஒரு பெண்ணுக்கு உள்ள லட்சணம் எதுவுமே அவளுக்கு கிடையாது. எப்போதுமே அகங்காரமாக தான் நினைப்பதை நடத்திக் காட்டும் ஒரு வெறி அவளுள் இருந்து கொண்டே இருந்தது. இறுதி தப்பாக பெற்ற பிள்ளையைக் கூட அழகை காரணம் காட்டி ஒதுக்கி வைத்தது தான் ராஜால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.அவளுக்கு கிடைத்த இந்த தண்டனை சரி என்றே அவன் நம்பினான். பாவம் அவனது அன்பு மனைவி வெண்ணிலா தான் கங்காவ

பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 21

Image
வெண்ணிலா வானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம் புரியாதோ என் எண்ணமே அன்பே கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது..தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க கடையில் கூட்டம் அதிகமாகியது. ராஜ் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருக்க அவனுக்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. கைப்பேசியை எடுத்துப் பார்த்தவன் அதனை உயிர்ப்பித்து பேசாமல்  அணைத்து வைத்தான். மீண்டும் மீண்டும் கைபேசி சினுங்க எரிச்சலோடு எடுத்து காதில் வைத்து ஹலோ என்றான்.. "டேய் உனக்கு ஃபோன் எடுக்க இவ்ளோ நேரமா.. எத்தன தடவ உனக்கு ஃபோன் பண்றது.. வேணுமுனே ஃபோன எடுக்காம இருக்கியா..இங்க யாரு செத்து கெடந்து ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்ட அப்படித்தான.."எரிச்சலோடு கேட்டார் கமலா. "நீங்க எல்லாம் உலகமே அழிஞ்சாலும் இப்ப போக மாட்டீங்க.. அதனால வெட்டி கதை பேசாம ஏன் ஃபோன் பண்ணிங்கன்னு சொல்லுங்க.."பதிலுக்கு சிடு சிடுத்தான் ராஜ். "டேய் மித்ரா நம்ம கங்காவுக்கு என்னமோ ஆச்சுடா.. ரெண்டு மூனு நாளா சாப்பிடாம அரைகுள்ளயே அடைஞ்சு கெடந்தா..நா எவ்வளவோ பேசிப் பாத்துட்டேன் அவ ரூம விட்டு வெளிய வரல.. ஒருவேளை அவளோட புருச

பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 20

Image
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா என் மனதில் அம்பு விட்ட நிலா இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா குழந்தை வெண்ணிலாவின் வீட்டிற்கு வந்து ஒரு மாதமாகிவிட்டது. இந்த ஒரு மாதத்தில் கமலா வாரத்திற்கு ஒருமுறை தன்னுடைய அண்ணனுடன் இங்கே வந்து கங்காவின் வாழ்க்கை இந்த குழந்தையால் கெட்டுவிட்டது என்று சாபமிட்டு செல்வார். ராஜ் இருந்தால் பேசுவதற்கு முன்பே வாயை அடைத்து விடுவான் என்பதால் அவன் கடையில் இருப்பதை உறுதி செய்து கொண்டே இருவரும் வீட்டிற்கு வந்து நிலாவை கரித்துக் கொட்டி விட்டு செல்வார்கள்.  சில நேரங்களில் சிந்து மட்டும் தனியே வந்து தன் அண்ணன் குழந்தையை தூக்கி வைத்துக் கொஞ்சுவதைப் போல நாடகமாடி செல்வாள்.குணா அவளை நம்ப வேண்டாம் என்று நிலாவிடம் பலமுறை கூறி விட்டான். ஆனால் நிலாவோ" எனக்கு எப்படி அவ மருமகளோ அதே மாதிரி தானே சிந்துவுக்கும் அவ மருமக..அவள எப்படி நான் குழந்தைய பாக்க வேணானு சொல்லுவேன்.. நான்தான் குழந்தை கூடவே இருக்கேனே.. என்ன மீறி என்ன நடக்கப் போகுது..  நான் பாத்துக்குறேண்ணே"  இப்படி நிலா குணாவின் வாயை அடைத்து விட சிந்து தன்னுடைய வீட்டிற்கு வந்து

பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 19

Image
பிரியா கொளுத்திய நெருப்பு ராஜ் வீட்டில் பற்றி எரிந்தது. கங்கா குறுஞ்செய்தியை பற்றி கமலாவிடம் ஒன்றுக்கு நான்காக கொளுத்தி போட கமலா ராஜிடம் பேயாட்டம் ஆடி மகனிடம் அதற்கு பதிலாக காட்டமான வசவுகளை வாங்கி கட்டிக்கொண்டு அந்த கடுப்பில் நேராக கிளம்பி வெண்ணிலா வீட்டிற்கு வந்து விட்டார்.அந்நேரம் வீட்டில் அனைவருமே இருக்க தெருவில் நின்றே தொண்டையை திறந்து விட்டார் கமலா. கங்கா அவரை அடக்காமல் இன்னும் ஏற்றி விட குணா இவர்கள் இருவரையும் அடக்கும் வழியறியாமல் நைசாக ராஜிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி விட்டு சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். தாமரையும் மாறனும் வெளியே வந்து "ஏங்க இப்டி ரோட்ல நின்னு சத்தம் போடுறீங்க.. எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள வந்து பேசுங்க.. அக்கம் பக்கத்துல எல்லோரும் பாத்து சிரிக்குறாங்க" "சிரிக்கட்டுமே. உங்க மவ பண்ண வேலைய கேட்டு ஊரே சிரிப்பா சிரிக்கட்டும் எனக்கென்ன.. பொண்ணா பெத்து வெச்சிருக்கீங்க நீங்க".. இப்பொழுது மாறன்"அம்மா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க. நீங்களும் ஒரு பொண்ண பெத்து வெச்சிருக்கீங்க தான. ரோட்ல நின்னு பேசுனா எவ்ளோ கேவலம்னு தெரியாதா உ