Posts

Showing posts from November, 2021

நெருங்கினா(ள்)ல்? 6

Image
காலை சூரியன் தன் பணியை செவ்வன செய்துக் கொண்டிருக்க உணவு மேஜையில் ஏகலைவன் வரவிற்காக காத்திருந்தாள் குண்டலகேசி. இன்றோடு மூன்றாவது நாள். இன்னும் நான்கே நாட்களில் அவனிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வேண்டும். சட்டப் பூர்வமாக இறந்து போனதாக சான்றிதழ் வழங்கப்பட்ட ஒருவனை எப்படி திருமணம் செய்வது? பாவம் கல்யாண கனவுகளோடு மிதந்து கொண்டிருக்கும் சுந்தருக்கு எவ்வாறு துரோகம் இழைப்பது? அவளுக்கு சுந்தரை பிடிக்கவில்லை தான், அதற்காக நம்பவைத்து ஏமாற்றலாமா? தாய் இல்லாமல் தானே பெண்களை வளர்த்த போதிலும் ஆவுடையப்பன் ஏழு பெண்களையும் முன்னே அமர்த்தி சிறுவயதிலிருந்தே யாரையும் ஏமாற்றக் கூடாது.. நாம் ஏமாந்து போனாலும் கூட அந்த வலியை இன்னொருவர் மேல் சுமத்த கூடாது.. நான் ஏமாந்து போனேன் அதேபோல் அடுத்தவரை ஏமாற்றுவேன் என்று கிளம்ப கூடாது..என்பார்.  இதனாலேயே ஏப்ரல் ஃபுல் அன்று கூட கேசி யாரையும் ஏமாற்றியது கிடையாது. அப்படிப்பட்டவள் திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும்போது கல்யாண கனவுகளோடு மிதக்கும் சுந்தரை எப்படி ஏமாற்றுவாள்?  மூளை இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது மனமும்"நீ எங்கடி செல்லம

5 நெருங்கினா(ள்)ல்?

Image
வரிசையாக கீழே அமர்ந்திருந்த ஆறு மருமகன்களை பார்க்கையில் ஆவுடையப்பனுக்கு நினைவலைகள் இரண்டு நாட்களுக்கு பின் நொக்கி சென்றது. அன்று நடு ஜாமம் குண்டலகேசி கடத்தப்பட்ட செய்தி கேட்டு நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த மனிதரை அங்கிருந்த முகமூடிகள் வெளியே நிறுத்திருந்த மினி வேனில் அள்ளிப் போட்டுக் கொண்டு எங்கேயோ சென்றனர். ஆவுடையப்பனை மட்டுமல்ல அவரின் ஆறு புதல்விகளையும் அவர்கள் பெற்ற வாலுகளையும் தான். ஒரு வில்லாவினுள் வேன் நுழைந்தது.ஆவுடையை மீண்டும் தூக்கி கொண்டு வில்லா உள்ளே செல்ல அங்கே ஒரு மருத்துவர் இவர்களை எதிர்பார்த்து தயாராக இருந்தார். ஆவுடைக்கு அவசரமாக சிகிச்சை செய்யப்பட்டது. நல்ல வேளை பெரிதாக ஒன்றுமில்லை. கொஞ்சம் இனிப்பு நிறைய அதிர்ச்சி.. இதெல்லாம் சேர்ந்து தான் அவரை இந்நிலைக்கு தள்ளி விட்டது.. முகமூடிகளில் ஒருவன் ஆறு பெண்களையும் பார்த்து"இந்தாங்கம்மா உங்க அப்பனுக்கு ஒன்னும் இல்ல.. ஆளு இப்ப போக மாட்டான்.. எல்லோரும் உள்ளார போயி தூங்குங்க.. " "என்னது தூங்குறதா அண்ணே நாங்க என்ன கொடைக்கானல் டூரா வந்துருக்கம்..எங்கள கடத்திட்டு வந்துருக்கீங்க..எங்க தங்கச்சிய கடத்தி வெச்ச

4 நெருங்கினா(ள்)ல்?

Image
"எப்பா சாமி என்னா நாத்தம்.. ஒரே பொண நாத்தம் அடிக்குது.." சுகமாக குப்புறப்படுத்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தின் ஊடே திடீரென்று வீசிய கொடூர வாடையில் என்னவென்று யோசித்தாள் குண்டலகேசி. அதிகம் யோசிக்காதே மகளே அந்த நாத்தம் இதுதான் என்பது போல அவளின் ஆசன வாயிலிருந்து ஸ்ஸ்ஸ் என்று வெளியேறியது ஆசிட் வாயு ஒன்று.. "ஆஹா நம்ம குசு தான் நம்மள கொல்லப் பாக்குது.."என தலைவரை போர்த்திருந்த போர்வையை அவசரமாக ஒதுக்கியவள் அதன் பின்னே ஆசுவாசமாக மூச்சு விட்டாள்."இந்த அளவுக்கு நாறுறதுக்கு நேத்து என்னத்த திண்ணோம்.. மாதவி மொச்சக் கொட்டயும் பரங்கிகாயும் சேர்த்து கூட்டு செஞ்சா. அருமையா இருக்கேனு அள்ளி போட்டு தின்னது நம்ம உசுருக்கே வேட்டு வைக்குதே"திரும்பி படுத்து உறக்கத்தை தொடர அவள் மூளையில் மின்னி மின்னி மறைந்தது நேற்று நடந்த சம்பவங்கள். ஆவுடையப்பன்,சுந்தர்,இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம், பேய் முகமூடி, இறுதியில் ஒரிஜினல் பேய்.. ஐயோ என்று அலறி அடித்து எழுந்தமர்ந்து விட்டாள் குண்டலகேசி.அரையடி அமுங்கி கொடுக்கும் பஞ்சு மெத்தையில் அவள் ஒய்யாரமாக படுத்திருந்தாள்.நேற்று நடந்த சம்

3 நெருங்கினா(ள்)ல்?

Image
" குண்டம்மா குண்டம்மா இங்க கொஞ்சம் வாடா".. ஆவுடையப்பன் தான் குண்டலகேசியை இவ்வளவு செல்லமாக அழைப்பது. அவர் மட்டுமல்ல அந்த வீட்டில் உள்ள அனைவருமே குண்டலகேசியை அப்படித்தான் அழைப்பார்கள். கேசி என்று நாகரிகமாக அழைக்க அறிவு வேலை செய்யவில்லை. வழக்கம்போல சற்று கடுப்புடனே ஆவுடையப்பன் முன்பு சென்று நின்றாள் குண்டலகேசி. "ப்பா நானே கல்யாணம் ஆகி போக போறேன்.. இப்பயாச்சும் இப்படி கூப்பிடுறத நிப்பாட்டுங்க..சுந்தர் வீட்டில யாராச்சும் கேட்டா என்ன நினைப்பாங்க.." " எவன் என்ன நெனச்சா எனக்கு என்னடா.. என் செல்லத்த நான் அப்படிதான் கூப்பிடுவேன்.. அம்மாடி அக்காங்களுக்கு செஞ்ச மாதிரி உனக்கு செய்ய முடியலனு அப்பா மேல வருத்தமா  இருக்காடா.." அவரின் வாடிய முகம் கண்டு குண்டலகேசியின் மனம் இளகியது"ப்பா அந்த மாதிரி செஞ்சுருந்தாத்தான் நான் உன்மேல கடுப்பாயிருப்பேன்.." " இல்லடா என்னதான் மாப்பிள வரதட்சணை வேணான்னு சொன்னாலும் ஒரு பொட்டு பவுனு கூட இல்லாம ஒன்ன அனுப்பி வைக்க என் மனசு வலிக்குது டா.." " அப்ப ஒன்னு செய்யலாம் நம்ம வீட்டு பின்னால பொதச்சு வச்சிருக்கிற பு

2 நெருங்கினா(ள்)ல்?

Image
குலதெய்வம் காட்டு முனிக்கு நேர்ந்து விட்டது போல சடையாய் சிகை. சிக்கெடுக்கவே சில வருடங்கள் ஆகலாம். சரி முடி தான் அந்த லட்சணத்தில் இருக்கிறது என்று பார்த்தால் முகத்தில் தாடி மீசையை தவிர வேறொன்றும் அடையாளம் தெரியவில்லை.  திடீரென்று டைனோசர் ஒன்றுக்கு தாடி மீசை முளைத்து சடை சடையாய் தொங்கிய சிகையோடு குண்டலகேசியை நெருங்கி அவளது இதழில் முத்தமிட முயன்றது. முயலவில்லை முத்தமிட்டே விட்டது. "ஆஆ" என்று அலறலோடு விழுந்தடித்து எழுந்தாள் குண்டலகேசி. அவளின் பக்கத்தில் படுத்திருந்த மணிமேகலை குண்டலகேசியின் கடைசி அக்கா"என்னடி.. பூரான் எதாச்சும் கடிச்சிருச்சா.. அங்க சுண்ணாம்பு வச்சிருக்கேன் எடுத்து தடவிட்டு மூடிக்கிட்டு தூங்கு.." என்றதோடு பேச்சு மூச்சை காணவில்லை. முத்து முத்தாக வியர்த்து ஊற்றியது குண்டலகேசி... "சே கனவா..இவ்ளோ கொடூரமாவா கனவு வரும்.. எல்லாம் அந்த ஜடாமுனியால வந்தது" அவளின் சிந்தனை இரண்டு நாட்களுக்கு முன்பு சிறையில் சென்று இறுதியாக பேட்டி எடுத்தவனிடம் வந்து நின்றது. பிறரிடம் சொல்ல ஏதாவது வார்த்தைகள் இருக்கிறதா என்று இவள் குத்துமதிப்பாக கேட்க அவனோ நான்

1 நெருங்கினா(ள்)ல்?

Image
மத்திய சிறைச்சாலை சென்னை.. என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தவுடன் குண்டலகேசிக்கு வியர்வை ஆறாய்  ஊற்றியது. அவளது பரம்பரையில் இவள் ஒருவளே முதன்முதலாக சிறைச்சாலை வாசலை மிதிக்கிறாள் எனும் பெருமை மாண்புமிகு குண்டலகேசியையே சேரும். கண்களில் கலக்கத்தோடு அப்படியே நின்று கொண்டிருந்தாள் குண்டலகேசி. சிறையிலிருந்து வெளியே செல்பவர்கள் தெனாவட்டாகவும் உள்ளே காவலர்களால் இழுத்துச் செல்லப்படுவார்களில் சிலர் அலட்சியமாகவும் பலர் இது பழக்கப்பட்டது தானே என்பது போலவும் நடந்து கொள்ள இவற்றையெல்லாம் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்த குண்டலகேசிக்கு ஏன் தான் இந்த வேலைக்கு வந்தோமோ என்று வருத்தமாக இருந்தது. ஜெர்னலிஸம் தான் படிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றதை நினைத்தால் எங்காவது பழைய செருப்பு ஒன்று கீழே கிடைக்கிறதா என்று தேட சொல்லி அவளின் மனம் ஏங்கியது.. கிடைத்தால் பொது இடம் என்று கூட பார்க்காமல் அந்த பழைய செருப்பை கொண்டு தன்னைத்தானே அடித்துக் கொள்ளும் ஆர்வம் அவளிடம் மேலோங்கி காணப்பட்டது. இது அவளின் முதல் தொலைக்காட்சி அனுபவம்.. சொல்லப்போனால் இந்த முதல் அனுபவத்தை அவள் சரியாக செய்தால் மட்டுமே இந்த தொலைக்காட்

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்

Image
" என்னை விட்ரு..உனக்கு என்ன வேணும்?என் கிட்ட கொடுக்க எதுவுமே இல்ல. மெட்டி ஒளி சிதம்பரத்த விட எங்கப்பனுக்கு தான் பொண்ணுங்க ஜாஸ்தி. நாங்க மொத்தம் ஏழு பொண்ணுங்க. பாவம் மனுஷன் நொந்து வெந்து ஆவியா போய்ட்டாரு.எல்லா டாக்டர்ஸும் சூடம் அடிக்காத குறையா சத்தியம் பண்ணாங்கலாம்.. நான் ஆம்பளயா பொறப்பேன்னு. என் அப்பாவோட கிரகம்  நான் பொம்பளயா பொறந்துட்டேன். அதுலயே அவரு பாதி இடிஞ்சிட்டாரு. இதுல என் அக்காங்க எல்லோருக்கும் மாப்ள பாத்து சீரு செனத்தி செஞ்சு கட்டி கொடுக்குறக் குள்ள மீதியும் இடிஞ்சு ஒடஞ்சு தூள் தூளா ஆயிட்டாரு.. ஏதோ இளிச்சவாய் மாப்ள ஒருத்தன் கெடச்சி சீரு செனத்தி வேணா உங்க பொண்ண மட்டும் கொடுங்கன்னு கட்டிக்க இருக்கான். அது உனக்கு பொறுக்கலையா? உடனே தூக்கிட்ட. இதோ பாரு தம்பி,நீ அடிச்சு கேட்டாலும் சரி கடிச்சு கேட்டாலும் சரி எங்கப்பன் ஆவுடை கிட்ட அஞ்சி காசு கூட கிடையாது.. தயவு செஞ்சு என்ன ரிலீஸ் பண்ணு"..புது படமா அவளை ரிலீஸ் பண்ண?தன்னை ஒருவன் கடத்தி வைத்துள்ளான் அவனிடம் எப்படி பேசுவது என்று கூட தெரியாமல் உளறிக் கொண்டு இருக்கிறாள்.. கேசி.. இது அவளின் செல்லச் சுருக்கம்.. முழுப் ப

பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 27 இறுதி பாகம்

Image
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா வராமல் வந்த என் தேவி ராஜ் மித்ரன் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான். காரில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் ஏதோ ஒரு கோளாறினால் திடீரென்று பிரேக்கடிக்க அதை கவனித்த ராஜ் அவனும் சற்றென்று பிரேக் வைத்தான். ஆனால் அவன் பின்னால் வந்து கொண்டிருந்த காரோ சாலை கட்டுப்பாட்டை மீறி அளவுக்கு அதிகமான வேகத்தில் வந்து பிரேக் வைக்க அப்பொழுதும் முடியாமல் ராஜ் காரின் பின் பக்கத்தை அடிக்க அவன் வண்டி முன்னால் இருந்த காரின் பின்பக்கத்தில் மோதியது. மற்ற இரு வாகனத்தின் ஓட்டுநர்களுக்கும் அந்த அளவுக்கு காயங்கள் இல்லை. ஆனால் நடுவில் சிக்கிக் கொண்ட ராஜ் ரத்தவெள்ளத்தில் மீட்டெடுக்கப்பட்டான். ஆம்புலன்ஸ் வரவழைத்து சாலையில் சென்று கொண்டிருந்த இதர வாகன ஓட்டிகள் அவனை மருத்துவமனையில் சேர்ப்பிக்க உதவி செய்தார்கள்.  டிராபிக் போலீஸ் அவன் கைபேசியில் இருந்த எண்களை வைத்து முதலில் ரிஷிக்கு அழைத்து ராஜ் விபத்துக்குள்ளான விஷயத்தைக் கூறினார் அவனை தூக்கி சென்ற மருத்துவமனை பெயரையும் கூறினார். விஷயத்தைக் கேள்விப்பட