அதரா 21 to 28



அதரா - 21


"வேந்தே உங்களது தோழர் அங்கே நடக்கவிருக்கும் விபரீதம் தெரியாமல் உறங்கிக் கொண்டிருக்கிறார் நீங்கள் என்னவோ அவரை சென்று அழைத்து வராமல் இங்கே உறங்கிக் கொண்டிருக்கும் கடல் கன்னியை வைத்த கண்ணை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்"வஜ்ரா பொறுக்காமல் கேட்டு விட

 வர்ணிகாவின் மேலிருக்கும் பார்வையை அகற்றாமல்"தோடா அவன் இன்னா போருக்கா போறான் அவனான்ட போயி சொல்லி உஷார் பண்ண..அத்தெல்லாம் என் நண்பன் பாத்துக்குவான்.. நீ பிரீயா வுடு வஜ்ஜு"

"என்ன வஜ்ஜுவா"

"உன் பேர தா சுருக்கி கூப்டேன். மாமா லவ் மூடுல இருக்கேன் அனாவசியமா என் மூட வந்து கெடுத்து விட்றாத.. அங்க தாரு தாரா வாழைபழம் இருக்காம் அத்த தின்னு.. நான் கொஞ்ச நேரம் என் செல்லா கிளி கூட ரொமான்ஸ் பண்ணிட்டு வரேன்"

" வேந்தே நீங்கள் என்னவோ பண்ணிவிட்டு போங்கள்.. ஆனால் அந்த சூனியக்காரி பொல்லாதவள். அவளால் மாய இளவரசிக்கும் நண்பருக்கும் விபரீதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் கொஞ்சல் படலத்தை கொஞ்சம் நிறுத்தி வைத்துவிட்டு சற்று நாட்டு காரியங்களை கவனித்தால் நன்றாக இருக்கும் என என் அபிப்பிராயம் "

" யானைகலாம் பேச்சு கொடுத்தா இப்படித்தான் பேச சொல்லும்.. இதோ பாரு வஜ்ஜு போன ஜென்மத்தில் தான் என் பொண்டாட்டி கூட சேர முடியாம போயிருச்சு.. அதும் என்ன மாதிரி நேரத்துல கடைசி ஒரே நிமிஷத்துல எங்க வாழ்க்கை புஸ்வானம் ஆயிடுச்சு.. திரும்பவும் அதே தப்ப நான் செய்ய மாட்டேன் நான் சாகுறதுக்குள்ள கன்னி கழிஞ்சிட்டு தான் டா நான் சாவேன்..இதுக்கு மேல இங்க நின்ன தந்தத்த ஒடச்சு வுட்றுவேன் போயிரு.. மனசன ரொமான்ஸ் பண்ண விடுங்கடா"

நதினின் இம்சை தாங்காமல் வஜ்ரா அந்த இடத்தை விட்டு புலம்பி கொண்டே செல்ல மாய அரூபர்களின் கோட்டையில் விருந்தினனாக தங்க வைக்கப்பட்டிருந்த நதின் ராட்சத காலி சிப்பி ஓட்டுக்குள் நறுமண மலர்கள் நிரம்பிருக்க தெளியாத மயக்கத்தில் விழி மூடிக் கிடந்த வர்ணிகாவை பார்த்தான்..

" மயக்கத்துல இருக்கிற உன்ன சைட் அடிச்சே காலம் போயிடும் போலிருக்கு.. எப்ப டி கண்ண தொறப்ப சட்டுபுட்டுன்னு கண்ண தொறந்தா அடுத்த பஞ்சாயத்த பார்க்கலாம்.. இப்படி கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு இருந்தா நான் எப்ப என்ன உனக்கு புரிய வைக்கிறது உன்னை கரெக்ட் பண்றது அப்புறம் ரொமான்ஸ் பண்றது கடைசியில பாப்பா தரறது ஐயோ நினைக்கும் போதே கண்ண கட்டுதே.. இந்தம்மா கடலு கன்னி கொஞ்சம் கண்ண தொற செல்லம்"..

குளிரும் பனியும்
என்னை சுடுதே சுடுதே
உடலும் உயிரும்
இனி தனியே தனியே
ஓ காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
தீ ஆகினால் நான்
மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்..

அடுத்த வரியாக காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன் என அவள் பாடுவாள் என்று அவன் எதிர்பார்த்தால் அங்கு தான் தப்பு. அவள் கண்விழித்து அவனை முறைத்து கொண்டிருந்தாள்.மயக்கம் தெளிந்து மெல்லமாக கண்திறந்தவள் காதில் விழுந்தது நதின் ஏக்கமாக பாடிய பாடலே..அவன் காந்த குரலில் காதல் வசனங்களை கதற கதற பேசி கேட்டிருந்தவள் இன்று தான் பார்க்கிறாள் அவன் பாடுவதை.

காதல் கொண்ட மனம் ஒரு குரங்கு.வானரம் மரத்திற்கு மரம் தாவுகிறதை போல அதும் காதலன் தவறிழைத்தாலும் ஏன் குற்றமே செய்தாலும் அவர்கள் செய்த நன்மையை நினைத்து பார்த்து அப்பொழுதும் அவர்களை நேசிக்கும். இங்கே வர்ணிகாவின் நிலையும் அது தான். அவன் செய்த பெரும் குற்றதை கூட மன்னிக்க அதைவிட மறக்க அவனது குரலே போதுமானதாக இருந்தது. அவர்களைச் சுற்றிலும் எதுவுமே வர்ணிக்காவின் கண்களுக்கு தெரியவில்லை. அவள் கண் விழிக்கும்போது அவள் பார்த்தது நதினின் முகம். கேட்டது நதினின் குரல்.

 அவன் செய்ததையே மறந்து அவனையே சில நிமிடங்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவள் உடனே தன்னை சுதாகரித்துக் கொண்டாள். அதுவும் தானாக அல்ல நதின் முந்திரிக்கொட்டை தனமாக செய்த ஒரு காரியத்தால். தன்னவள் தன்னை காதல் பார்வை பார்ப்பதை கண்ட நதின் கண்ணை வைத்துக் கொண்டு சும்மா இராமல் அவளைப் பார்த்து கண் சிமிட்ட அந்த ஒரே சிமிட்டலில் வர்ணிகாவின் சிந்தை தெளிந்தது.

 அவனை தீப் பார்வை பார்த்தவள் தான் இருக்கும் இடத்தை பார்த்தாள்" என்ன இது ஏன் நான் இங்கு இருக்கிறேன்.. என்னை நிம்மதியாக நீ விடவே மாட்டாயா.. நூறாண்டுகள் என்னை கல்லாக சிறை வைத்தாய்.. கற்சிலைக்கு விடுதலை கிடைத்த பின்னும் காரிகைக்கு விடுதலை கிடைக்கவில்லையா.. கடலில் ஆனந்தமாக மனக்குறைகள் நீங்க நீந்திக் கொண்டிருந்தவளை எதற்காக இங்கே கடத்தி வந்துள்ளாய்?"

" ஒரு சின்ன கரெக்ஷன் நா உன்னிய கடத்தின்னு வரல கவர்ந்து வந்துருக்கேன் மீனு குட்டி"

" இரண்டும் ஒன்றுதான்.. ஆமாம் அது என்ன மீனு குட்டி புதிதாக யார் அவள்?"

" அது ஒன்னும் இல்லடா செல்லம் மீனம்மானு கூப்டா ரொம்ப லென்த்தா இருக்கு.. அதான் எதுக்கு வீணா மூச்சு காத்த வேஸ்ட் பண்ணனும் மீன்னம்மாவ சுருக்கி மீனுக்குட்டி கூப்பிடலாமே அப்படின்னு எட்டாவது மூள சொன்னுச்சு"

" உங்களுக்கு அறவே மூளை இல்லை இதில் எட்டாவது மூளை வேறா.. மரியாதையாக என்னை கடலில் கொண்டு போய்விடு.. "

" அதுக்கு இன்னும் டைம் ஆகுமே மீனு குட்டி"

" யாரிடமும் வாய் ஜாலத்தை காட்டுகிறாய்.. நீ நின்ற இடத்தில் இருந்து ஒரே ஒரு சொடுக்கு இட்டால் மறுகணமே நான் ஆழியில் நீந்துவேன்.. ஒழுங்காக என்னை இப்பொழுதே என் கடலிடம் சேர்த்துவிடு"

" மீனுக்குட்டி உனக்கு ஒரு மேட்டர் தெரியுமா.. பூலோகத்துல கணவனே கண்கண்ட தெய்வம்னு ஒரு பழமொழியே இருக்கு.. அப்படி பார்த்தா நீ உன் புருஷன் கிட்ட தான் சேரனுமே வேண்டுமே தவிர கடலு கிட்ட இல்லடி செல்லம்"

" கணவனாம் கணவன் நீயெல்லாம் மனிதனே இல்லை நீ கணவனா.. நீ கயவனடா"

" கயவன் மீ.. கயவன்னா பொறுக்கினு அர்த்தம்.. பொறுக்கி என்ன பண்ணுவான்னு தெரியுமா மீனுக்குட்டி நான் என்னைக்காச்சும் உன்கிட்ட பொறுக்கி மாதிரி நடந்து இருக்கேனா.. சொல்லு சொல்லுடி"

"எதை சொல்வது.. உன்னிடம் பேசவே உன் உன்னை பார்க்கவே உன் சுவாசம் என்னை தீண்டவே எனக்கு பிடிக்கவில்லை.. உன் மூச்சு காற்று வீசும் இந்த இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை.. உன்னை கெஞ்சி கேட்கிறேன் ஒன்று என்னை இப்போது கடலிடம் சேர்த்து விடு. இல்லையே அது முடியாவிட்டால் என்னை கதையை முடித்து அனுப்பி விடு.." வர்ணிகா கெஞ்சும் பார்வையுடன் நதினை பார்த்து கூற

" அடிங்க ன்னா திமிரா வெச்சேன்னு வை காது கொயுங்கும்.. நானும் அப்பத்துல இருந்தே வாட்ச் பண்ணிட்டு இருக்கேன் ரொம்ப எகுறுற மவள தட்னேன்னு வை.. இன்னாடி பிரச்சன உனக்கு..உன்ன கல்லாக்கி போனவன் அதர நதினு அது போன ஜென்மம் இப்போ உன் முன்னாடி நிக்குறது வெறும் நதினு அது இந்த ஜென்மம்.. போன ஜென்மம் கதைய புடிச்சிக்கினு ஏன்டி என் உசுர எடுக்குற.. ஆமா கேக்கணும்னு நெனச்சேன் உனக்கு தான் என்ன புடிக்கல என்ன கண்டாலே காண்டாவுற.. அப்ரம் இன்னா எழவுக்குடி நா எவள பாத்தாலும் இங்கேருந்தே வாய்ஸ் கொடுத்த..

நீ மட்டும் கிராஸ் ஆவுலன்னா நா இந்நேரம் எளயாச்சும் உஷார் பண்ணி புள்ள குட்டியோட செட்டில் ஆயிருப்பேன்.. அத்த எல்லாம் கெடுத்துட்டு பேச்சா பேசற.. நா உன் முன்னாடி வந்து நின்னா சப்ரைஸா பீல் பண்ணுவேன்னு நெனச்சா சனியன் மாறி பீல் பண்ற.. போடி போ அந்த கடலுக்குள்ள நீந்தி அப்டியே ஜல சமாதி ஆயிரு.. "அவளை வார்த்தைகளால் நோகடித்தவன் அங்கிருந்து வேகமாக வெளியேற பாவம் வர்ணிகா அழுதே கரைந்தாள்.

நேரம் நகர்ந்ததே தவிர மாற்றம் ஏதுமில்லை.. அவன் எப்படியும் தன்னை விட போவதில்லையென தனக்குள் கூறி கொண்டவள் மெல்ல நடந்து அந்த அறையை சுற்றி பார்த்தாள். நதின் சாபம் விமோசனம் தருகிறேன் என்ற பெயரில் அவளை சாமானிய மனுஷியாகியதின் பலன் இப்பொழுது அவள் முழு மனுஷியாகி நிற்கிறாள். அறை முழுவதும் அலசியவள் வெளியே பார்க்க அந்த இடம் பரிட்சையமில்லாமல் இருந்தது.

"என்ன இடம் இது நூறு வருடத்தில் அதரா கோட்டை இவ்வளவு மாற்றம் அடைந்து விட்டதா..நாம் எதை கண்டோம் கல்லும் கண்ணீரும் மட்டுமே எஞ்சிருந்தது என் வாழ்வில் ம்ம்ம் சீக்கிரம் இந்த இடம் விட்டு செல்ல வேண்டும்.. அவனை கண்டால் அவன் கண்களை நோக்கினால் அவன் குரல் கேட்டால் அவன் சுவாசித்த காற்றை சுவாசித்தால் இவ்வளவு ஏன் அவனின் பிரத்தியேக மணமே அவளின் கோபத்தை அவன் செய்த செயலை மறக்கும் அளவு கோபத்தை மறக்கடிக்க போதுமானதாக இருந்தது..

இதனால் இங்கே இருப்பதே ஆபத்து. அவனிடம் மீண்டும் அடிபணிய அவன் அன்பை உண்மையென நம்பி ஏமாற நான் பழைய வர்ணிகா அல்ல.. ச்சை பெயர் கூட அவன் சூட்டியது அல்லவா.பெயரை பார் அவன் குரங்கு முகம் போலவே உள்ளது.. நான் பௌர்ணிமா.. இங்கே இருப்பதை அடியோடு வெறுக்கிறேன்.."என்றவள் அந்த அறையை விட்டு வெளியேற முயல முடியவில்லை. காரணம் அங்கே ஒற்றை புருவம் உயர்த்தி அவளை ஒரு டைப்பாக பார்த்தபடி நின்றான்.

வர்ணிகாவின் வயிற்றில் குளிர் பரவியது. அவனின் காதல் பார்வையை எதிர்த்து நிற்கும் அவளால் அவனின் அமைதி பார்வையை எதிர்கொள்ள இயலவில்லை. இது எதற்கோ அனர்த்தம். அவன் அடிமேல் அடி வைத்து அவளை நெருங்கி"மீனு குட்டி எங்க கெளம்பிட்டு இருக்க"

"என் இருப்பிடத்திற்கு"

"நடந்தா போற ரொம்ப தூரமாச்சே.. சரி நீ ஒன்னியும் கவல படாத மாமா அலுங்காம குலுங்காம கூட்டிட்டு போறேன் அதுக்கு முன்னாடி ஒண்ணே ஒன்னு கேட்டுட்டு போ"

வேண்டாம் அவனை பேச விடாதே என்று கதறிய மூளையின் பேச்சை துளியும் கேட்காமல் அவன் குரலை ரசிக்கும் மனதின் பேச்சை கேட்டு அவன் பேச்சை கேட்டாள்"மீனு குட்டி அன்னிக்கு அப்படி நா செஞ்சிருக்க கூடாது.. உன்ன பத்தி நெனச்சே பாக்காம உன் கஷ்டத்த துளி கூட யோசிச்சு பாக்காம நா அப்டி பண்ணிருக்க கூடாது.. எவ்ளோ கஷ்டபட்ருப்ப எவ்ளோ அழுந்துருப்ப கல்லா இருந்தாலும் உனக்கும் பீலிங் இருந்துருக்கும்.. எப்டி ரா பகல் தூங்காம என்ன நெனச்சு துடிச்சிருப்ப எல்லாம் என்னால தானே.. மன்னிப்பு கேட்டு என் தப்ப சின்னதாக முடியாது. இது குற்றம்.பாவம்.

நீ அனுபவிச்ச எதையும் நா அனுபவிக்கல இப்போ கூட என் கடமைய செய்ய தா திரும்ப பொறந்துருக்கேன்.. என்னால உனக்கு எப்பவும் கஷ்டம் தான். நா நல்லா யோசிச்சிட்டேன்."அவள் என்னவென்று பார்க்கும் போதே பெரிய வாளை அவள் கரத்தில் கொடுத்து

"என்ன கொன்று வர்ணிகா. என் காதல் உண்மையா இருந்தா நா சாக மாட்டேன் அதுவே சுயநலமான கேடு கெட்ட லவ்வா இருந்தா சத்தியமா நா செத்துருவேன்.. இது சாதாரண வாள் இல்ல.. அதரா வம்சத்தோட கடவுள் கொடுத்த வாள்.. வர்ணிகா நா சீரியஸா சொல்றேன். என்ன குத்து. என் காதல் சுயநலமானது உன் காதல் அளவு ஆழம் இல்லேனு நீ நெனைக்குற. அது அப்டியில்லனு நா சொல்றேன். அன்னிக்கு நா திரும்ப கடமைய செய்ய பொறப்பேன்னு எனக்கு தெரியும். ஆனா நீ திரும்ப பொறப்பியா.. நீ இல்லாத லைப் எனக்கு மட்டும் என்னத்துக்கு அதுக்கு தான் சுயநலமா முடிவு செஞ்சேன்.

அதெல்லாம் பழைய கத..இந்தா கத்தி வா வந்து என்ன குத்து நெஞ்சிலேயே குத்து.. வா வர்ணிகா வா"அவன் ஆவேசமாக பேச பேச வர்ணிகா கையில் வாளுடன் மிரண்டு விழிக்க அவள் கரத்தால் தன் நெஞ்சில் ஆழமாக குத்தி கொண்டான் நதின்.சரியாக இதயத்தில் கத்தி இறங்க வர்ணிகா இதழ்கள் அதரரே என முனங்க நதின் சரிந்து விழுந்தான்.

"மிமி"

"ம்ம்ம்ம் சொல்லு"

"ஓ விழித்து கொண்டு தான் இருக்கிறாயா.. நீ விழித்து என்ன புரோஜனம்.. அங்கே பார் மாய இளவரசியும் அந்த மடையனும் வரவிருக்கும் ஆபத்து தெரியாமல் உறங்கி கொண்டிருக்கின்றனர்."

"உனக்கு ஏன் இந்த வயித்து எரிச்சல்.. அவன் கொடுத்து வைத்தவன். எங்கே தலை வைத்து படுத்துள்ளான் பார்.."

"ம்ம்ம் அவன் அந்த பெண்ணின் நெஞ்சில் முகம் புதைத்து வெட்கமே இல்லாமல் உறங்குகின்றான் நீயும் என் நெஞ்சில் முகம் சாய்த்து உறங்க வேண்டுமா"

"அதற்கு தானடி காத்திருக்கிறேன் என் கண்ணே நீ ம்ம் சொல் உடனே கட்டையை நீட்டி விடுகிறேன்"

"மொட்டை மண்டையில் ஆணி அடித்து விடுவேன் ஜாக்கிரதை.. எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் என்று அலைந்து கொண்டிருக்கிறாய்..கொன்று விடுவேன்.."

"அட என்னடி நீ என் உணர்வுகளை புரிந்து கொள்ளவே மாட்டேன் என்கிறாய்..உன்னை போய் விரும்புகிறேனே என்னை சொல்ல வேண்டும். என் அழகுக்கும் ஆளுமைக்கும் எத்துணை குட்டி சாத்தன் நான் நீயென்று போட்டி போட்டது தெரியுமா.. என் நேரம் அவர்களை தவிக்க விட்டு உன்னை காதலித்தேன் அதற்கு தான் படுகிறேன்"

"அழகு ஆளுமை யார் நீ.. த்து..வாயில் நன்றாக வருகிறது சொல்ல வைக்காதே மூடிக்கொண்டு அவர்களை எழுப்பு.. சூனியக்காரி வந்து தொலைந்து விட போகிறாள்."

"அவள் ஒரு இம்சை நீ அவளை விட பெரும் இம்சை.."கூறிக்கொண்டே வருண் மோகினி உறங்கி கொண்டிருந்த மரத்தின் கிளையை அசைய செய்ய அதிலிருந்த பனி துளிகள் கீழே அடி வேரில் அடியில் உறங்கி கொண்டிருந்த இருவரின் மீதும் தெளிக்க அடித்து பிடித்து கண்விழித்தார்கள் இருவரும்.வருண் தான் மோகினியின் நெஞ்சமதில் மஞ்சம் கொண்டிருப்பதை கண்டவன் பதறி எழுந்தான்.

தவறிழைத்தவன் போன்ற அவனின் தோற்றத்தில் மோகினியின் பூரிப்பு முற்றாக சிதறியது.தர்மசங்கடத்துடன்"எம்மா மாங்கனி என்னிய மன்னிச்சுரு..போதையில தல ஸ்லிப் ஆயி உன் நெஞ்சுல ரெஸ்ட் எடுத்துருச்சு தப்பா எடுத்துக்காதம்மா"

"நீங்கள் ராத்திரி முழுவதும் என்னிடம் தப்பு செய்து விட்டு இப்பொழுது இப்படி கூறுகிறீரே இந்த ஆண்களே இப்படி தான் சுத்த மோசம்"அவள் நொடித்து கொள்ள

"இன்னாமே சொல்லிக்கினு இருக்க தப்பு செஞ்சேனே இன்னா மாறி தப்பு கொஞ்சம் டீடெயில்லா சொல்லு"

"ஐயோ உங்களுக்கு விவஸ்தையே இல்லையா தப்பு என்று கூறி விட்டேன் அதை இன்னும் என்னத்தை விளக்குவது.. தப்பு அதாவது அந்த தப்பு"அவள் நாணி கோணி முகத்தை மறைக்க

"ஹேய் இன்னாடி சொல்ற நமக்குள்ள மேட்டர் முடிஞ்சா..ப்ச் போதையில இன்னாடா பண்ணி வெச்சிருக்கிற வருணு.."பெரும் பாவம் செந்தவனை போல அவன் அவளை குற்றவுணர்ச்சியுடன் பார்க்க அவளோ சிரிப்பை உள்ளே அடக்கி வைத்தபடி வெளியே வெட்கப்பட்டு கொண்டே அவனை பார்த்து

"நடந்தது நடந்து விட்டது நான் உங்களிடம் ஒரு குழந்தையை கேட்டேன் நீங்கள் கொடுத்து விட்டிர்கள் எதற்காக தலையில் இடி விழுந்ததை போல் முகத்தை வைத்துள்ளீர்.. உங்கள் முகம் உங்கள் விருப்பம் நான் போகிறேன்"அவள் எழுந்து செல்ல அவள் பின்னோடே சென்றவன்

"வந்து ரொம்ப கஷ்டமா இருந்துச்சா என்கிட்ட இருந்து தப்பிக்க போராடுனீயா.. நா முரட்டு தனமா உன்னிய.. என்ன மன்னிச்சிரு மோகினி.. குடியில எனக்கே தெரியாம உன் காலுல விழுறேன்"படக்கென்று அவள் காலில் விழுந்தவனை கண்டு பக்கென்று சிரித்தாள் மோகினி..

"ஐயோ வருணரே நன்றாக ஏமார்ந்து விட்டீர்கள்.. ஒரே ஒரு பொய் சொன்னேன் அதற்கு போய் என் காலில் விழுந்து ஐயோ ஐயோ"அவள் சிரிக்க சிரிக்க அவள் காலில் சாஸ்ட்டாங்கமாக விழுந்து கிடந்தவன் உள்ளடக்கபட்ட கோபத்துடன் எழுந்தான்.. எழுந்த வேகத்தில் ஓங்கி ஒரே குத்து அவன் கையை அவனே அருகே இருந்த பாறையில் குத்திருக்க கூறான கள் குத்தி ரத்தம் பீரிட்டு வந்தது.

அரண்டு விட்டாள் மோகினி.."என்ன செய்து விட்டிர்கள்.."அவன் கையை அவள் பிடிக்க அவளை தள்ளி விட்டு நடந்தவன் பின்னால் ஓடி வந்து அவன் கையை பிடித்து ஒரு பாறையில் மீது அமர வைத்து சற்று தூரத்தில் சலசலத்து ஓடி கொண்டிருந்த அருவி தண்ணீரை உள்ளங்கைகளைக் குவித்து அள்ளி எடுத்து வந்தவள் ரத்தத்தின் மீது ஊற்ற என்னவொரு விந்தை அந்த தண்ணீர் பட்டதும் காயம் மறைந்து போனது..

 அதை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த வருணை"ஏன் இப்படி செய்திர்கள்.. உங்களையே காயப்படுத்தி கொண்டு அடுத்தவர்களையும் கஷ்டப்படுத்துகிறீர்.. எவ்வளவு ஆழமான காயம் அது.. என்மேல் கோவம் இருந்தால் என்னை அடியுங்கள் ஆனால் உங்களை வதைக்க யார் உங்களுக்கு அனுமதி தந்தது"

"அனுமதியா என்ன அடிக்க எனக்கே அனுமதியா ஓஹோ எந்த ஊரு சட்டம்டி இதெல்லாம்.. ஏன்டி உனக்கு எவ்ளோ அதுப்பு இருந்தா இப்டி கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம அள்ளி விட்ருப்ப.. எவளாச்சும் இதுல பொய் சொல்லி விளையாடுவாளா.. ஆனா நீ த்து.. பாக்க அழகா தேவத கணக்கா இருக்கியேனு நெனச்சா நீ ஒன்னா நம்பரு ஐட்டமா இருக்க..உனக்கு உடம்பு சொகம் தா வேணும்னா அத ஒழுங்கா சொல்லிருக்கலாம் தானே.. அத்த விட்டு ஸ்ஸ்ப்பா ஆமல நீ சொன்ன.. எனக்கு புள்ள கொடுன்னு.. நா தா வெண்ண வெட்டி சரியா புரிஞ்சிக்கல..

தோ பாரு செல்லம் மாமா இப்ப உன்னிய நல்லா புரிஞ்சிக்கிட்டேன்.. உனக்கு உடம்பு சொகம் தானே வேணும் மாமா அள்ளி வழங்குறேன் பாரு.. அதுக்கு சன்மானமா காசு கொடுக்க இப்ப மாமா கையில ஒன்னியும் இல்ல.. அதுக்கு நீ ஒர்ரி பண்ணாத.. மாமா உங்க வேந்தன் கிட்ட சொல்லி உனக்கு பெரிய பரிசா கொடுக்க சொல்றேன் சரியா..அதான் பரிசு தரேன்னு சொன்னேனே அப்றம் ஏன்டி அங்க நிக்குற ஓடி வந்து மாமாவுக்கு உம்மா கொடு"

வருண் பேசி கொண்டே போக மோகினி திரும்பி ஓட தொடங்கினாள். முதலில் அவளை கண்டுக்காதவன் அவள் அருவி உச்சியை நோக்கி ஓட அவள் பின்னால் கத்தி கொண்டே ஓடினான். என்ன ஓடி என்ன வர்ண மோகினி அருவி உச்சியில் இருந்து குத்திதே விட்டாள். சூனியக்காரியிடம் இருந்து அவளை காக்க வந்த மிமியும் சுசுவும் வருண் என்ற ஆபத்திடம் இருந்து அவளை காக்கும் வழியறியாமல் நின்றன..

அதரா - 22


"நீ அனுபவிச்ச எதையும் நா அனுபவிக்கல இப்போ கூட என் கடமைய செய்ய தா திரும்ப பொறந்துருக்கேன்.. என்னால உனக்கு எப்பவும் கஷ்டம் தான்.நா நல்லா யோசிச்சிட்டேன்."அவள் என்னவென்று பார்க்கும் போதே பெரிய வாளை அவள் கரத்தில் கொடுத்து

"என்ன கொன்று வர்ணிகா. என் காதல் உண்மையா இருந்தா நா சாக மாட்டேன் அதுவே சுயநலமான கேடு கெட்ட லவ்வா இருந்தா சத்தியமா நா செத்துருவேன்.. இது சாதாரண வாள் இல்ல.. அதரா வம்சத்தோட கடவுள் கொடுத்த வாள்.. வர்ணிகா நா சீரியஸா சொல்றேன். என்ன குத்து. என் காதல் சுயநலமானது உன் காதல் அளவு ஆழம் இல்லேனு நீ நெனைக்குற. அது அப்டியில்லனு நா சொல்றேன். அன்னிக்கு நா திரும்ப கடமைய செய்ய பொறப்பேன்னு எனக்கு தெரியும். ஆனா நீ திரும்ப பொறப்பியா.. நீ இல்லாத லைப் எனக்கு மட்டும் என்னத்துக்கு அதுக்கு தான் சுயநலமா முடிவு செஞ்சேன்.

அதெல்லாம் பழைய கத..இந்தா கத்தி வா வந்து என்ன குத்து நெஞ்சிலேயே குத்து.. வா வர்ணிகா வா"அவன் ஆவேசமாக பேச பேச வர்ணிகா கையில் வாளுடன் மிரண்டு விழிக்க அவள் கரத்தால் தன் நெஞ்சில் ஆழமாக குத்தி கொண்டான் நதின்.சரியாக இதயத்தில் கத்தி இறங்க வர்ணிகா இதழ்கள் அதரரே என முனங்க நதின் சரிந்து விழுந்தான்.

வர்ணிகா அதிர்ச்சியில் சிலையாக நின்றது சில கணங்களே. அங்கே நதின் அவள் காலடியில் வீழ்ந்து கிடந்தான். சட்டென்று கீழே அமர்ந்தவள் அவனை இழுத்து தன் மடியில் கிடத்திக் கொண்டு"அதரரே அதரரே"என கதறினாள்.இப்படி ஆகுமென அவள் எதிர்பார்க்கவில்லை.நதினின் குருதி பொங்கும் அலை கடலென இதய கடலில் இருந்து பொங்கி வழிந்து வர்ணிகாவின் மடியை நனைத்தது.

அவன் பேச்சு மூச்சற்று அவளை உயிரோடு கொன்று கொண்டிருந்தான். அவளால் என்ன பண்ண முடியும் அவனை கீழே படுக்க வைத்து விட்டு உதவி கேட்டு அறையை தாண்டி ஓடினாள்.அவளுக்கிருந்த பதற்றத்தில் அது அதர கோட்டையா என கவனிக்கும் நிலையில் இல்லை. மனமெங்கிலும் ஒருவித வலி பரவி நொடியில் உடலை அந்த வலி ஆக்கிரமிக்க என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை கடல் கன்னிக்கு.

ஓடினாள் ஓடினாள் ஓடிக்கொண்டே இருந்தாள் ஒரு கொசு கூட அங்கே பறக்கவில்லை. யாரிடம் சென்று உதவி கேட்பாள். அந்த மாளிகையின் மூலை முடுக்கு வரை ஓடியவளுக்கு யாரையும் காணாமல் வெறியே பிடித்து விட்டது. அங்கே அவளின் உயிரானவன் அல்லவா உயிருக்கு போராடி கொண்டிருக்கிறான். ஆ என கத்தியப்படியே தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள் ஒரு நொடி.

மறு நொடி எழுந்து தலை தெறிக்க ஓடினாள் நதின் இருந்த அறைக்கு.வாலிற்கு பதிலாக கால்களை சாப விமோசனமாக கொடுத்த நதினுக்கு சொல்லப்போனால் அவள் நன்றி தான் கூறிருக்க வேண்டும் அந்த தருணம்.வேக வேகமென அறைக்குள் வந்தவள் கால்கள் நதினின் இதயத்தில் இருந்து பெருகிய குருதி வெள்ளத்தில் நனைந்தது.

இவ்வளவு இரத்தமா.. அவளுக்கு தொண்டை அடைத்தது.  மூச்சுமுட்டி கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.  ஆனால் இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. நதின் அருகே ஓடினாள். அவனை அள்ளி தன் மடியில் கிடத்தி"அதரரே என்ன காரியம் செய்து விட்டீர்கள்.. இதை செய்யவா இத்தனை காலம் என்னை கல்லாக சமைய வைத்தீர்கள்.. இந்த கொடுமையெல்லாம் காண்பதற்கு நான் கல்லாகவே இறந்து போய் இருப்பேன்.  ஏன் இப்படி செய்தீர்கள் என்னை விட்டுச் செல்ல உங்களுக்கு எப்படி மனம் வந்தது..

அன்றும் என்னை கல்லாக சமைய வைத்து என் கண் முன்னால் நீங்கள் உயிர் துறந்தீர்கள். இன்று என் கை கொண்டு கத்தியால் குத்திக் கொண்டீர்கள்.. என் மேல் அப்படி என்ன கோபம் உங்களுக்கு.  இம்மாதிரி என்னை இம்சை செய்வதில் அப்படி என்ன ஆனந்தம். இதற்கு தாங்கள் உங்களை குத்திக் கொள்வதற்கு பதிலாக என்னை குத்தி இருக்கலாமே.. சந்தோசமாக செத்து மடிந்திருப்பேனே.

அதரரே என் கண்ணீரை காண்பதில் உங்களுக்கு அவ்வளவு ஆனந்தம் என்றால் காலமுள்ள வரைக்கும் நான் அழுதே கரைகிறேன். ஆனால் அதைப் பார்த்து ரசிக்க நீங்கள் வேண்டும். நான் சந்தோஷப்படுவேன் என்று உங்களை நீங்களே நோகடித்து என்ன பயன். தயவு செய்து திரும்பி வாருங்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கை நான் நூறு வருடங்கள் அனுபவித்து நரகம்.

மீண்டும் அந்த நரகத்தில் என்னை தள்ளி விடாதீர்கள்..  தயவு செய்து என்னிடம் வாருங்கள். தயவு செய்து என்னிடம் வந்துவிடுங்கள். நான் உங்களை காயப்படுத்துவேன் அது அளவில்லாத என் காதலினால் விளைவது. நான் உங்களை கோபப்படுத்துவேன் அது உங்கள் மேல் கொண்டு உரிமையால்.என்னை அழ வைக்காதீர்கள் அதரரே என்னிடம் வந்து விடுங்கள் என்னிடம் வந்து விடுங்கள்".. வர்ணிகாவின் கண்ணீர் அந்த மாளிகை முழுதும் எதிரொலிதது.

"மிமி அந்த இளவரசி அருவியில் குதிக்க பார்க்கிறாள்"

"ஆமாம் சுசு குதிக்க பார்க்கிறாள் இப்பொழுது என்ன செய்ய"

" என்னைக் கேட்டுக் கொண்டிருக்கிறாய் சென்று அவளை காப்பாற்று"

" என்ன நான் சென்று காப்பாற்றவா..  ஏன் நீ காப்பாற்ற வேண்டியது தானே"

" அவள் என்ன என்னையா ஒருமுறை காப்பாற்றினால் உன்னை தானே காப்பாற்றினாள். அந்த உதவிக்கு நன்றியாக இப்பொழுது அவளை காப்பாற்று"

" நான் எப்படி காப்பாற்றுவது எனக்கு நீச்சல் தெரியாது"

" என்ன நீச்சல் தெரியாதா. அடப்பாவி அப்புறம் எதற்கு அன்று என்னை ஆனந்த குளத்தில் உல்லாசமாக நீந்த அழைத்தாய்"

" எல்லாம் தண்ணீரில் தப்பு பண்ண தான் வேறு எதற்கு "

"மொட்டை மண்டை மண்டூகமே கொன்று விடுவேன் உன்னை.. ஐயோ அங்கே பாரடா அந்த பெண் குதிக்க போகிறாள்.. குதிக்க போகிறாள்"

" பாவி மகள் குதித்தே விட்டாள்"

" ஆமா நீ உட்கார்ந்த இடத்தில் இருந்தே வாய் கிழிய பேசிக் கொண்டிரு ஆனால் ஒரு உதவி செய்து விடாதே.. அய்யோ அங்கே பார் அவன் குதித்தது மட்டுமல்லாமல் அவனும் சேர்ந்து குதிக்கிறான்"

" குதித்து விளையாட இது என்ன குளமா.. சரி குதித்தது தான் குதித்து விட்டான் அந்த இளவரசியை அவனே காப்பாற்றி மேலே வரட்டும் அவனால் தானே அந்த பெண் அருவியில் குதித்தால். எனக்கெல்லாம் ஒரு பெண் வந்து குழந்தை கொடு என்று கேட்க மாட்டாளா என்று ஏக்கமாக உள்ளது.. இந்த மூதேவிக்கு வலிய வந்த அந்தப் பெண் கேட்டும் வாய் வானத்தை தொட்டு வருவது போல அப்படி ஒரு குத்தல் பேச்சு.. "சுசு மிமியை முறைக்க வருண் மோகினியை காப்பாற்ற அருவியில் குதித்து விட்டிருந்தான்.

கடல் மாதாவின் செல்ல பிள்ளைக்கு இந்த அருவி எம்மாத்திரம். சில நொடிகளிலேயே அவளை கண்டுபிடித்து கரைக்கு இழுத்து வந்தான். பலநூறு அடி மேலிருந்து விழுந்ததால் என்னவோ அவள் மயக்கத்தில் இருந்தாள். அவனிடம் விடாமல் வம்பு பேசிய இதழ்கள் அவன் அறையும் போது பற்களில் உராய்ந்து லேசாக ரத்தம் கட்டி போயிருந்தது. வருணின் கைத்தடம் அவள் முகத்தில் இருந்தது. மோகினியின் கன்னத்தில் தட்டி அவளை எழுப்பிக் கொண்டிருந்தான் வருண்.

அவள் எழாமல் போக அவளுடைய வயிற்றில் கை வைத்து அழுத்தினான்.அவள் குடித்த தண்ணீர் எல்லாம் வாய் வழியாக கசிய ஆரம்பித்தது.மொத்த தண்ணீரையும் அமுக்கியே வெளியே கொண்டு வந்தவன் அவள் முகம் பார்க்க அப்பொழுதும் அவள் கண் விழிக்காமல் கிடந்தாள்."ஐயோ மாரியாத்தா நா ஏதோ காண்டுல இந்த பொண்ண பேசிட்டேன்..அதுக்குன்னு இப்படியா பொசுக்குன்னு குதிக்குறது..எனிக்கு படபடன்னு வருது. நா இதவரைக்கு என் அம்மா சாவ கிடந்தப்போ கூட உன்ன வேண்டிக்கல. என் நதினுக்காகவும் உன்ன வேண்டுனது இல்ல.. இப்போ லைப்ல ப்ரஸ்ட் டைம் உன்னிய வேண்டிகுறேன்..ஆத்தா இந்த பொண்ண காப்பாத்து.."

"இந்தா பொண்ணு அடியே இந்தாடி எழுதிரிடி.. அடியே நடு காட்ல வந்து மால்லாந்து கெடகியே உங்கப்பன் கேட்டா என்னடி சொல்லுவேன்..அம்மாடி செல்லம் ராசாத்தி எழுதிரிடி.."வருண் எழுப்ப மோகினி எழாமல் போக வேறு வழியின்றி அவள் இதழருக்கே சென்றான்.

"மிமி அவன் முத்தமிட போகிறான் போல.. நான் தடுக்கிறேன்"

"என்ன தடுக்கிறாயா காலை வெட்டி விடுவேன்.. இம்மாதிரி காட்சி எல்லாம் அதிசயம் அபூர்வம்..எனக்கு தான் கொடுத்து வைக்கவில்லை யார் பெற்ற பிள்ளையோ அவனாவது அனுபவிக்கட்டும்.. நீ மூடிக்கொண்டு நில்"

"அட கர்மம் பிடித்தவனே.. ஆமாம் அவன் என்ன முத்தமிடாமல் எங்கோ எழுந்து செல்கிறான்"

"அதானே.. வாய்ப்பு கிடைக்கும் போதே அனுபவிக்க தெரியவில்லையே முட்டாள்.. நான் வேண்டுமென்றால் அவனுக்கு சொல்லி கொடுக்கவா"

"ஒருத்தனுக்கு ஒரு பொண்டாட்டிக்கே வக்கில்லையாம் இதில் முதலிரவுக்கு பால் கிண்ணம் வாங்குகிறனாம்"

"சரிடி என் மூளையில்லா மந்தி".. வருண் வேகமாக அவள் இதழை நெருங்கியவன் என்ன நினைத்தானோ பட்டென்று விலகி அருவி நீரில் வாய் கொப்பளித்து வந்தான். உள்ளங்கையை வாய் அருகே கொண்டு சென்று ஊதி பார்த்து"ஏதோ பரவால்ல செத்துற மாட்டா"தன் வாய் மீது தனக்கே நம்பிக்கை வந்து மோகினியை நெருங்கி இதழில் இதழ் பதித்து மீதி நீரினை இவன் உறிந்து எடுத்து அவள் கன்னம் தட்டினான்.இப்பொழுது மெல்லமாக கண்விழித்தால் மோகினி.

உண்மையில் கோபத்தில் இருக்க வேண்டிய வருண் குதூகலத்திலும் வெட்கத்தில் இருக்க வேண்டிய மோகினி வெறியாக இருந்தனர்."ஒருவேள வாய் நாறிருச்சோ"வருணின் மைண்ட் வாய்ஸ்.

"என்ன செய்தீர்கள்"

"இன்னா"

"ஏன் என்னை முத்தமிட்டீர்கள்"

"அது நீ எந்திரிக்கவே இல்ல. இந்த அத்துவான காட்டுக்குள்ள உன்னிய வெச்சிக்கினு என்ன பண்ண.. கிஸ் அடிக்கணும்னு பண்ணல உன் வயித்துல இருந்த தண்ணிய உறிஞ்சி எடுத்தேன் ஏன்டா செல்லம் வாய் கப்படிச்சிருச்சா"

"ப்ச் என்னை ஏன் காப்பாற்றினீர்.. முதலில் பெண் என்றும் பாராமல் அப்படி கேவலமாக பேச எப்படி மனம் வந்தது.. உங்களிடம் நான் இதனை எதிர்பார்க்கவில்லை..வாயே கிழியுமட்டும் பேசியவர் என்னை சாக விடாமல் காப்பாற்றிய காரணம் என்னவோ.. ஒருவேளை இந்த குளிருக்கு இதமாக போர்த்திக்கொள்ள உங்களுக்கு ஒரு பெண்ணுடம்பு கேட்கிறதோ.. மன்னிக்க வேண்டும் நான் அம்மாதிரி பெண் அல்ல.. உங்கள் காம பசியை தீர்க்க வேறு இடம் தேடி செல்லுங்கள்.."

"ஹேய் அடச்சி மூடு.. இன்னாடி சொம்மா சாமி ஆடிக்கினு இருக்க.. வாங்குனது பத்தலயா.. நா ஒன்னியும் யோக்கியன் இல்ல..சொல்ல போனா பொம்பள இல்லமா என்னால இருக்க முடியாது.. தம்மு சரக்கு பொம்பள இதான் நம்ம லைப்.. சொம்மா மஜாவா இருப்பேன்.. ஆனா நீ அப்டியா.. உன்ன பாத்தாலே தெரியுது. எப்படி தெரியும்னு கேக்காத. என் அனுபவம் அப்டி."

"என்ன அனுபவம் பெரிய பொல்லாத அனுபவம்.. இதெல்லாம் ஒரு அனுபவமா.. உண்மையான அன்புக்கும் மெய் நேசத்திற்கும் வித்தியாசம் தெரியாத அனுபவம். பெண்ணென்றால் உடல் தேவைக்கு மட்டும் தானா. அதை தாண்டி அவளுடனான வாழ்க்கை எப்பேர்ப்பட்டதாக இருக்குமென யோசித்து பார்த்தீர்களா."

"இன்னா மயிருக்கு நா அதெல்லாம் யோசிக்கணும் சொல்லேன். இங்க பாருமா எனிக்கு இந்த லவ்வெல்லாம் செட்டே ஆகாது. உன் நேசம் பாசம் எல்லாமே பொய்.நா நம்ப மாட்டேன். ஏற்கனவே ஒருத்தன் நேசத்தையும் பாசத்தையும் வெச்சு நாசமா போயி நிக்குறான். நானே எப்டி அவன காப்பாதரதுன்னு முழிச்சிகினு இருக்கேன் இதுல வந்துட்ட நீயு."

"ஆமாம் மனிதனாக இருந்தால் உங்களுக்கு என் நேசமும் பாசமும் புரிந்திருக்கும் இந்நேரம். நீங்கள்தான் அரக்கன் ஆயிற்றே அரக்கனுக்கு எங்கிருந்து நங்கை இவளின் பாசமும் நேசமும் புரிய போகிறது."

"ஸ்ப்பா ஹேய் நிப்பாட்டு. நானும் அப்போ புடிச்சு பாக்குறேன் என்ன பேசுற நீ எனக்கு புரிய மாட்டுது.. இப்ப நீ என்னான்ற. எனக்கு தெளிவா சொல்லு. இந்த ஜாட பேச்சு எல்லாம் எனக்கு புரியாது"

"இன்னும் புரியவில்லையா. சரி புரியும்படி சொல்கிறேன். நான் உங்களை விரும்புகிறேன். உங்களை மணந்து கொள்ள ஆசைப்படுகிறேன். " மோகினி பட்டென்று விஷயத்தை போட்டு உடைக்க வருண் அதிர்ந்து போய் அவளை பார்த்துக் கொண்டிருந்தான். அவனது அதிர்ந்த கண்களில் ஒரு நொடி தன்னுடைய கயல்விழிகளை கலக்க விட்டவள்

" ஏன் இப்படி பார்க்கிறீர்கள்.. எதற்காக இந்த அதிர்ச்சி. சொல்லக்கூடாத எதையும் நான் சொல்லவில்லையே. ஆமாம் நான் உங்களை விரும்புகிறேன். எப்படி எப்பொழுது எதனால் என்று இந்த கேள்விகள் அனைத்தையும் உங்கள் மனதோடு மூட்டை கட்டி வைத்து விடுங்கள். கையில் மதுபான கோப்பையோடு உங்கள் முன் அரூபமாக நின்றவளை பார்த்தே தீர வேண்டும் என பிடிவாதம் பிடித்தீர்களே அப்பொழுது உங்களது குழந்தை தனம் என்னை கவர்ந்தது.

 கட்டழகு மீசையிலே என் இதயம் கட்டவிழ்ந்து போனது. நான் முகத்தை காட்டாமல் இருக்க உங்களது பிடிவாதம் அதிகரித்தது. சரி எங்கள் வேந்தனின் நண்பனின் வேண்டுதலை மறுக்க முடியாமல் என் உருவத்தை காட்டியவுடன் நீங்கள் மயங்கி விட்டீர்கள் அப்பொழுது உண்மையில் மயங்கியது நீங்கள் அல்ல. மயங்கியது நான் அதும் உங்களிடம். இந்த மயக்கம் தீராத இனிய மயக்கம். எத்தனையோ சிற்றரசர்கள் என் கரம் பற்ற தயாராக உள்ளார்கள். எங்கள் மாய உலகத்திலே என் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக்கொண்டிருக்கும் காளைகளின் எண்ணிக்கை அதிகம். அவர்களிடம் எல்லாம் மயங்காத மனம் ஊர் பெயர் தெரியாத உங்களிடம் மயங்கி நின்றது.

 மயக்கத்திற்கு நீங்கள் எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். என்னை வேசியாக சித்தரிக்கலாம். இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இலப்பமாக பேசலாம். ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் மயங்கிய நான் இனி மரணத்திடம் மட்டும் தான் மயங்குவேன்." மோகினி பேசி விட்டாள்.

 பேச்சற்று நின்றது வருண் தான். அவள் கண்கள் சொன்ன செய்தி பொய்யல்ல. அவள் இதழ்கள் மொழியும் வார்த்தைகளும் பொய்யல்ல.பொய்த்துப் போனது அவனே.அவன் இதயமே.ஆம் அவள் உண்மையை உடைத்து பேசும் பொழுது இவன் எப்படி உண்மையை உணராமல் இருக்கலாம்..மோகினி பேச பேச அவன் ஒரு உண்மையை உணர்ந்து கொண்டான் தனக்கு எல்லாம் காதல் வருமா தன்னையும் ஒருவள் காதலிப்பாளா என்று ஏங்கிக் கொண்டிருந்த அவனுக்கு தன்னையும் ஒருவள் கண்ட உடனே காதலித்தது அவன் கடின இதயத்தை அடித்து உடைத்து விட்டது.

ஒரு இரவை அவளுடன் கழித்த அவனுக்கு அவளைத் தவறான பார்வை பார்க்க தோன்றவில்லை. அவள் சொன்ன வார்த்தையை அதாவது குழந்தை வேண்டும் என்ற வார்த்தையை மட்டும் வேறு ஒரு பெண் சொல்லியிருந்தால் ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை கொடுத்திருப்பான் வருண். ஆனால் இந்த பெண் அந்த வார்த்தைகளை கூறும் பொழுது எங்கிருந்து தான் அவ்வாறு கோபம் வந்தது என்றே புரியவில்லை. அவள் எப்படி இம்மாதிரி தரம் இறங்கி பேசலாம் என்ற அகங்காரம். அவள் அவன் கண்களுக்கு குழந்தையாக தெரிந்தாள். அவளுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் மனதில் புதுவிதமான இனிய இம்சையை தோற்றுவித்துக் கொண்டிருந்தது.

 ஆனால் அவனுடைய தகுதி அவனுக்கு நன்றாக தெரியும்.என்னதான் அவன் இங்கே வேந்தனின் நண்பனாக இருந்தாலும் ஒரு நாள் அவன் அவனுடைய உலகத்திற்கு சென்றுதான் ஆகவேண்டும். அதுவுமில்லாமல் இளவரசிக்கும் மீனவனுக்கும் ஒத்து வருமா..உப்பு காற்றில் பிறந்து வாழ்ந்து அதையே உயிராக மதிப்பவனை இந்த இளவரசிக்கு பிடிக்க வாய்ப்பு இருக்குமா. ஆனால் இருக்கிறதே. இதோ அவள் வாயாலே கூறி விட்டாளே. அவனின் சுடுசொல் தாங்கமுடியாமல் தன் உயிரையே மாய்த்துக் கொள்ள பார்த்தாலே இதற்கு மேல் என்ன வேண்டும்.

 அவள் எந்த உலகத்தில் இருந்தாலும் அத்தனை உலகங்களையும் அவளுக்காக தாண்டி வர அவன் தயாராகிவிட்டான். அவனுடைய உலகம் அவளுடன் நிற்கப் போவதில்லை. அவன் பார்க்கும் அனைத்து உலகத்திலும் இனி வர்ண மோகினி இருப்பாள். எது நடந்தாலும் சரி அவளுக்காக அதைத் தாங்கிக்கொள்ள தயாராகிவிட்டவன் தன் முன்னால் தேம்பி கொண்டிருந்த அவளை இழுத்து நெஞ்சில் சாற்றி கொண்டான். அதிர்ந்து விலக துடித்தவளை மேலும் தன்னோடு இறுக்கி"ஓய் மாங்கனி ஐ லவ் யூ"

" தாங்கள் என்ன சொல்கிறீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லையே "

"நா உன்னிய விரும்புறேன்னு சொல்றேன்"அவள் சடாரென்று அவனிடமிருந்து விலகி அவன் முகத்தை பார்க்க"நா ஒரு மீனவன். உப்பு காத்துல பொறந்து வளந்த சாமானிய பையன். அனாத. எனக்கு சொந்தம் நதின் மட்டும் தா. சரக்கடிப்பேன் தம் அடிப்பேன் போதை சுர்ருனு ஏறுனா சொம்மா போற எவனாயாச்சும் இழுத்து போட்டு அடிப்பேன்.காசு கொடுத்து பொம்பள கூட போயிருக்கேன். எனக்குன்னு ஒரு ஓட்டு வீடு இருக்கு பைக் இருக்கு. அத தவிர சொந்தமா போர்ட் இருக்கு. ஆனா காசு பணம் சத்தியமா இல்ல. உன்னிய மாறி பக்க பக்கமா வசனம் பேச நம்மால முடியாது. ஒரே பேச்சு தான். என்ன கட்டிக்குறியா"அவள் கண்களில் கண்ணீர் வழிய அவனை தாவி கட்டிகொண்டாள்.

"சுசு நன்றாக பார்த்து கொள். இதுதான் உண்மையான அன்பு காதல்.அணைப்பை பார்த்தாயா"

" பார்க்காமல் என்ன நானும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறேன். அவர்கள் இருவரும் நல்ல ஜோடி. அவர்களது காதல் வெற்றி பெற நாமும் சேர்ந்து வாழ்த்துவோம். "

" உனக்கு நேரடியாக சொன்னாலும் புரியாது நாசுக்காக சொன்னாலும் புரியாது இன்னும் நேரடியாகவே சொல்கிறேன் எனக்கு அதுபோல் ஒரு அணைப்பு வேண்டும்"

" அணைப்பு தானே அதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்"மிமி ஆர்வத்துடன் பார்க்க சுசு அதனை கட்டியணைத்து மொட்டை மண்டையில் தன் நீண்ட பற்களை பதிக்க மிமி துடித்து போனது..

" அணைப்பு எப்படி இருந்தது"

"சண்டாளி எதற்கடி என் மண்டையை கடித்து வைத்தாய் "

" இது என் அன்பின் பரிசு. முதன்முறை கொடுக்கும் பரிசு உன் வாழ்வில் என்றுமே நீ மறக்கக் கூடியதாக இருக்கக் கூடாது..எப்படி என்னுடைய பரிசு"

' கேவலமாக அதைவிடக் கொடூரமாக இருக்கிறது..மண்டைக்குள் மூளை இல்லாத உன்னை காதலிக்கிறேன் பார் என்னை எதில் முட்டிக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை"இரண்டும் ஒன்றை ஒன்று முறைத்து கொண்டு அவர்களை பார்த்தன.

வருணின் அணைப்பில் சுகமாக பதுங்கிருந்தால் மோகினி. மெல்ல அணைப்பிலிருந்து அவளை விலக்கி அவளது நெற்றியில் தனது முதல் முத்திரையைப் பதித்தான். மோகினி கண்கள் காதலாக விரிந்தது. மேலும் முன்னேறி அவள் கன்னத்தில் நாசியில் சின்னம் வைத்து இறுதியில் இதழ் கவ்வ மோகினி கிறங்கி போனாள். இதழ் கடந்த முத்தம் கழுத்தில் இறங்க தன்னிலை உணர்ந்து விலகினான் வருண். ஆனால் அவன் விலகலை பொறுத்து கொள்ள இயலாத மோகினி அவனை இறுக்கமாக அணைக்க உணர்வுகளை மீறிய இருவரும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி கொண்டனர்.

மிமி ஆர்வமாக வாயைப் பிளந்து அந்த காட்சியை காண சுசு அதன் மொட்டை மண்டையில் அடித்து கண்களை மூட செய்தது. கல்லுக்குள் தேரை போல ஈர பாறையில் வருணின் மீது ஒட்டிக் கொண்டிருந்தால் மோகினி. அவன் முகம் காண முடியாத வெட்கம். அவனுக்குமே மனம் நிறைந்த காதலுடன் இணையும் உறவு இதுவே.இவள் எனக்கானவள் என்று பூரிப்பு. அவளிடமிருந்து மெல்ல நகர்ந்தவன் தன் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை அவளுக்கு அணிவித்தான். "மாங்கனி இது எங்கம்மாவோட.அவங்க ஞாபக்காம நா போட்ருந்தேன் இனிமே இது உன்னோட."பேசிக்கொண்டே இருந்தவன் திடிரென்று உருண்டு புரண்டான்.

மிமியும் சுசுவும் ஒன்றுமே புரியாமல் வேடிக்கை பார்க்க மோகினி அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தாள். வருணின் உள்ளே ஆயிரம் மின்னல்கள் பாய்ந்த உணர்வு. உடளெல்லாம் றெக்கை முளைத்த மாதிரி. கண்விழித்து பார்த்தான் அவன் கண்ணெதிரே ஒரு மாய கோடாரி தோன்றியது. கை நீட்டி அதனை தொட்டான். அவன் கரத்திற்குள் அடங்கியது.என்னவென்று யோசிக்கும் போதே அனைத்தும் மாயமென மறைந்து போனது.

வருண் குழப்பதோடு மோகினியை பார்க்க"வருணரே நா நேற்று ஒரு சூனியக்காரியை பற்றி கூறினேனே நினைவில் உள்ளதா"வருண் யோசித்தான். அவள் கூறியது ஒன்றன் பின் ஒன்றாக மூளையில் மின்னலடித்தது. புரியாமல் அவளை பார்க்க

"அந்த சூனியக்காரியை ஒரு ஆண் மட்டுமே அடக்க முடியும். அந்த ஆண் என்னுடன் கலந்தவனாக இருக்க வேண்டும். மெய் அன்பில் என்னை வெல்பவனாக விளங்க வேண்டும்.அப்படி ஒரு சாபம் அவளுக்கு. அதனாலேயே என்னை கொல்ல தேடி கொண்டிருக்கிறாள். என் தந்தையின் மந்திர சக்திகள் அனைத்தும் கொண்டு பிறந்தவள் நான்.என்னுடன் இரண்டர கலக்க என் சக்திகள் உங்களுக்குள் வந்து விட்டது.உங்களால் மட்டுமே அவளை கொல்ல முடியும். இப்பொழுது நீங்கள் சாமனியன் அல்ல மாய உலகத்தின் வீராதி வீரன் ஆவிர். அவள் நம் இனத்திற்கு செய்த கொடுமை சொல்லில் அடங்காது. இன்றோடு அதற்கு ஒரு முடிவு உண்டாகட்டும்."வருண் தன்னவளை பார்த்து

"நீ இன்னமோ சொல்லிக்கினு இருக்க. எனக்கு ஒன்னியும் புரில.யாரயோ போட சொல்ற அது மட்டும் புரியுது. சரி உனக்கொசரம் என்ன வேணா செய்வேன் போதுமா"..அவள் ஓடி வந்து அவனை கட்டி கொண்டாள்.

வர்ணிகா கலைந்த ஓவியமாக தரையில் கிடந்தாள். மனமெங்கிலும் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. கோபத்தின் காரணமோ அவள் கால் மாட்டில் சப்பலமிட்டு அமர்த்திருந்தது. சற்று முன் நடந்தது.

"அதரரே என்னை தவிக்க விட்டு செல்லாதீர்கள் வந்து விடுங்கள் என்னிடம். உங்கள் வர்ணிகா இன்னும் எவ்வளவு துன்பத்தை தான் தங்குவாள். அவள் மேல் உங்களுக்கு பாசம் இல்லையா இரக்கம் இல்லையா.. அவள் பாவமில்லையா.. ஏன் இப்படி சித்ரவதை செய்கிறீர். வந்து விடுங்கள்."அவனை போட்டு அடித்து உளுக்கி ஒரு பைத்தியக்காரியை போல காட்சியளித்தாள் வர்ணிகா. அவன் எழவில்லை. அவளும் விடவில்லை. அழுது அழுது ஓய்ந்து களைத்து விழுந்தவள்"வேண்டாம் நீ பிடிவாதக்காரன் சுயநலக்காரன்.உன் முடிவிலிருந்து என்றும் பின் வாங்க மாட்டாய்.

என்னை என்றும் அழவைப்பது உனக்கு பிடித்தமான விடயம்.அதை நன்றாக செய்து கொண்டிரு.இதோ உன் மூச்சு ஊசலாடி கொண்டிருக்கிறது நீ இன்னும் சாகவில்லை. சென்ற முறை உன் சாவை நான் கண்டேன் இப்பொழுது என் சாவை நீ உணர்ந்து கொள். நீயில்லாத உலகமும் வாழ்வும் எனக்கு வேண்டாம். நீ வேண்டுமானால் சுயநல பேயாக இருக்கலாம் ஆனால் நான் உன் மேல் மெய் நேசம் கொண்டவள். அதனாலே உனக்கு முன் நான் சாகிறேன்"என்றவள் நதினின் இதயத்தில் குத்திருந்த வாளை உருவி தன் நெஞ்சில் சொருக போக அது நொடியில் மறைந்து போனது. வர்ணிகா புரியாமல் விழிக்க அங்கே குறும்பு சிரிப்புடன் நின்றிருந்தான் நதின்.

அவன் நிற்கும் தோரணையில் அவள் விளங்கி கொண்டாள் இவ்வளவு நேரமும் அவன் நடித்திருக்கிறான். தன்னை அழவைத்து பார்த்திருக்கிறான். வந்த கடுப்பில் அவனை சரமாரியாக தாக்கியவள் சுருண்டு கீழே படுத்து கொண்டாள். அனைத்து அடிகளையும் வாங்கி கொண்டவன் அவள் கால் மாட்டில் அமர்ந்திருந்தான்.

தொடரும்

அதரா - 23



வருணும் மோகினியும் தங்களை மறந்து விழியின் மொழியில் உரையாடி கொண்டிருந்தனர். அங்கே அருவி ஆர்ப்பரித்து விழும் ஓசையை தவிர வேறு எந்த ஓசையும் இல்லை. மீறி ஏதாவது ஓசை கேட்டிருந்தாலும் அது அவர்களது சிந்தையை கலைக்க போவதில்லை. இருவருமே ஒவ்வொருவருக்குள் ஒருவரை விழியின் வழியாக உயிருக்குள் அனுப்பும் வேலையை செய்து கொண்டிருந்தனர். காஞ்ச கருவாடோ நெத்திலி மீனோ கிடைத்தால் போதுமென நினைத்தவனுக்கு அமிர்தமும் சாக்லேட்டும் கலந்து செய்த புதுவித இனிப்பு சொர்க்கமாக கிடைத்தாள் வர்ண மோகினி.

அவளே ஒரு வர்ண கலவையாக தான் தெரிந்தால் அவன் கண்களுக்கு.அவன் கை பட்டு சிவப்பதை காட்டிலும் அவன் கண் பட்டு இளமஞ்சள் மேனியால் இளசிவப்பு மேனியளாக உருமாறி கொண்டிருந்தாள். சிறுப்பெண்னென்று அவன் எண்ணியவள் கொஞ்சும் குமரியாகி அவனை கொன்று கொண்டிருந்தாள் இனிய ஆயுதமான தன் விழியால்.

"ஸ்ஸ்ப்பா மிமி இன்னும் எவ்வளவு நேரம் இவர்கள் கண்களால் பேசிக் கொண்டிருப்பார்கள்.. இப்படி நேரத்தை விரயமாக்குவதை விட்டுவிட்டு அந்த சூனியக்காரிக்கு முடிவு கட்ட ஏதாவது ஒரு திட்டத்தை தீட்டி இருக்கலாம் அல்லவா"

" என்னடி என் செல்லமே உனக்குதான் உணர்வுகள் இல்லை என்றால் உணர்வுகளின் பிடியில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கும் அவர்களையாவது நிம்மதியாக விடேன். அவர்களின் காதலுக்கு முன் சூனியக்காரி என சூலாயுதம் கொண்டு சூலி வந்தாலும் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.. "

" சூலி வந்தாலாவது அவர்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும். ஆனால் சூனியக்காரி வந்தால் அவர்களுக்கு எலும்பு கூட மிஞ்சாது. "

"இப்பொழுது என்ன தான் செய்ய சொல்கிறாய்'

"வா நேரம் ஓடி கொண்டிருக்கிறது. அவன் அந்த பெண்ணை பார்க்கும் பார்வையை பார். அடுத்த சுற்றுக்கு கண்களாலயே தகவல் அனுப்பி கொண்டிருக்கிறான். ஏற்கனவே இவர்களின் காம லீலைகள் எனும் கருமத்தை கண்ணும்படியாகி விட்டது. இன்னும் இன்னொன்று என்றால் ஐயோ சாமி என்னால் முடியாது.. சீ கருமம் கருமம்"

"கருமம்மா வாயில் அடி வாயில் அடி. அடி உணர்ச்சியற்ற குட்டி சாத்தானே அந்த காதல் லீலைகளையா நீ கருமம் என்கிறாய்.. உனக்கு ஈரேழு ஜென்மம் எடுத்தாலும் நானே மணலானாய் வருவேன் இது என் சாபம்..

அதரா - 24

"வருணரே வருணரே"மோகினியின் உலுக்களில் ஹான் என்று சுயநினைவுக்கு வந்தவனை கண்டு சுசுவும் மிமியும்"நின்று கொண்டே கனவு காண்பவனா சூனியக்காரியை கொல்ல போகிறான்"எனும் ரீதியில் பார்க்க

"வருணரே உங்கள் தாய் கனவு காணும் வேளையில் தாங்கள் பிறந்து விட்டீரோ.. எந்த வேளை பார்த்தாலும் நின்று கொண்டே கனவு காண்கிரீரே"

"இன்னா.. இன்னா சொன்ன..கனவா.. நீ மெய்யாலுமா சொல்ற"

"இல்லை பொய் சொல்கிறேன். என்னை காண பொய் உரைப்பவள் போல் உள்ளதா ஹான்"..

"அப்ப சூனியக்காரி சாவலையா"சுற்றும் முற்றும் பார்த்தவன் அந்த குட்டி சாத்தான்கள் சொன்ன செய்தியில் அரண்டு நின்றிருக்க வேண்டும். வெறும் கற்பனையில் அவளை வீழ்த்தி அதும் கேவலத்திலும் படும் கேவலமாக வஜ்ராவின் வெட்டையை வைத்து வீழ்த்திருக்க வேண்டும்."நல்ல வேள கற்பனயா பூட்டுச்சே.. மெய்யாலுமே நடந்துகினா அந்த அவமானத்த எங்க போயி சொல்லுகினு இருந்துருப்பேன்"

"இளவரசியின் காதலரே மனம் கேளாமல் உங்களிடம் ஒன்று சொல்லி கொள்ள விளைக்கிறேன். தயை கூர்ந்து கேட்ப்பீராக.. சூனியக்காரி வரும் பொழுது கண்டபடி உறங்காதீர்கள்"மிமி கூற அதை மேலும் கீழுமாக வருண் ஒரு லுக்கு விட மிமி அசட்டு சிரிப்புடன் அவனை பார்த்தது.

" நீயெல்லாம் என்னப் பாத்து சிரிக்குற நிலமையிலயா என் நெலமா இருக்கு..  இந்த நேரம் என் நண்பன் இருந்திருக்கணும் சீனே வேறயா இருந்துருக்கும்.. அந்த மூதேவி எங்கிட்டு போய் தொலைஞ்சிதோ..  அந்தக் கடல் கன்னி பின்னாடி போவாதடா போவாதடா தலப்பாட அடிச்சிக்கிட்டேன் கேட்டானா அந்த நாயி..இப்ப கடலுக்கடியில நீந்துரானா இல்ல தரையில தவளுறானா ஒரு எழவும் புரியல"வருண் தன் போக்கில் புலம்பிக் கொண்டிருக்கும் பொழுது அவன் தோளில் ஒரு கரம் விழுந்தது. அந்தத் தொடுகை வருண் திரும்பிப் பாராமலே கரங்களுக்கு சொந்தக்காரன் யார் என்று உணர்த்தியது.

மச்சான் என்ற கூச்சலோடு நதினை கட்டிக் கொண்டான் வருண்.மோகினியின்  தந்தையும் வஜ்ராவும் அவர்களுக்கு அருகே நின்றனர்."மகளே மோகினி மீண்டும் உன்னை காணும் வரை என் உயிர் என்னிடம் இல்லையம்மா.. நீ நலமாக இருக்கிறாய் தானே."

"உங்கள் மருமகன் இருக்கும் பொழுது என் நலத்திற்கு என்ன குறை வந்திட போகிறது தந்தையே.. ஆம் அது வந்து தந்தையே இவர்தான் அவர்".. மோகினியின் முகத்தில் வெட்கம் குடியேற வருணின் காதுக்குள்

"இன்னா இருந்தாலும் மச்சான் உன் ஆளு செம தில்லு. பெத்த அப்பன் கிட்ட தன்னோட ஆள எவ்ளோ தைரியமா சொல்றா பாரேன் அதும் மேட்டர முடிச்சினு"

"மச்சான் உனக்கு எப்டிடா"

"நதினோட பெருமை உனக்கு தெரியாதாடா"

"வாலிப வயசு மச்சான் திடிர்னு ரத்தம் சூடாயிருச்சு.. ஆமா நீ எப்டி கரெக்டான நேரத்துல இங்க வந்துகின'

"மாமே நாங்கள் நேற்று இரவே இங்கே வந்து விட்டோம்."

"நேத்திக்கு நைட்டேவா அப்பாலிக்கா ஏன்டா நாயே என்ன வந்து கண்டுக்கல"

"அது மச்சி என் ஆளு கடலு கன்னி மயக்கத்துல இருந்துச்சி. அத பேசி உஷார் பண்ணனும். அப்றம் நீயும் இந்த பொண்ணும் ஒன்னு சேரனும் அதான் நைட்டு வராம இப்ப வரேன்"

"டேய் சூனியக்காரி அது இதுனு இதுங்க போட்டு விடுத்துங்க. இதெல்லாம் மெய்யாலும் இருக்கா'

"ஆமா மச்சான் மெய்யாலுமே தான். அந்த பொண்ணு உன்கிட்ட சொல்லிருக்கும். உன்னால மட்டும் தான் அவளுக்கு பாட கட்ட முடியும். உன்ன பொறுத்தவர நா வெறும் நதினு மச்சான். ஆனா இங்க நா அதரா. சோ உன் ஜாதகமே நம்ம கையில.நீ இன்னா பண்ற சூனியக்காரிய போட்டு தள்ளிட்டு இந்த பாப்பாவ கல்யாணம் பண்ணிக்கினு இந்த மாய உலகத்துக்கே ராஜாவா ஆகுற"

"ராஜா கூஜா எல்லாம் நீயாவே இரு.. இந்த ஆட்டைக்கு என்ன இழுக்காத."

"ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் மருமகனே.  எனக்கு அடுத்த இந்த மாய உலகத்தை ஆளப்போவது தாங்களும் என் மகளும் தானே. பின் எதற்காக இப்பொழுது அரசு பதவியை தட்டிக் கழிக்கிறீர்கள்..  சூனியக்காரியை ஒழித்துக் கட்டிவிட்டு வரும் அடுத்த நல்ல நேரத்திலேயே உங்கள் இருவருக்கும் நான் விவாகம் நடத்தி வைக்கிறேன்."

"எவன் டா இது தம்மாதூண்டு இருந்துகினு சவடால் வுடுறது'

'அடக்கி வாசி மச்சி அது உன் ஆளோட நைனா"

"அட மாம்ஸு.. நம்மள ப்லெஸ் பண்ணு மாம்ஸு"

"என்ன வேந்தே மருமகன் மாமிசம் கேட்க்கிறார். நாங்கள் சைவம் உண்பவர்கள் ஆயிற்றே"

"அய்ய யோவ் மாம்ஸு நா கவுச்சி கேக்கலயா.. உன்ன மாமான்னு எங்க பாஷையில கூப்டேன்'

'ஓ அப்படியா நல்லது மருமகனே. என் மகளின் தேர்வு பிரமாதம். ராஜ தோரணை முகத்தில் களை கட்டுகிறது."

"மச்சான் இந்த ஆளு ஓவரா தூக்குறான்"

'அமுக்க தான்'

"வருண் மாமே'

"ஹேய் வஜ்ரா மாமே.. எப்படி இருக்க. பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் எப்படி இருகாங்க. வீட்ல கேட்டதா சொல்லு.இன்னா சரியா துண்றது இல்லயா ஆளே எளச்சு துரும்பா போய்ட்டே"

"மாமே வயிற்று எரிச்சலை கெளப்பாதீர்கள் நான் பிரம்மசாரி. மேலும் ஒரே நாள் மட்டுமே காணாத என்னை ஆண்டுகள் பல கடந்து விட்டதை போல் நலம் விசாரிக்கிறீர்கள்"

"சரி வுடு மாமே இந்த லோக்கத்துலயே ஷோக்கான பொம்பள யானயா பாத்து உனக்கு கட்டி வைக்குறேன்"

"நீ அதுக்கு கட்டி வைக்குறது இருக்கட்டும். இப்போ சூனியக்காரி வரப்போறா. அவள ஒழுங்கா முடிச்சு வுடுற வழிய பாரு"

"இன்னாடா இம்மா ஈஸியா சொல்லிகின"

"அவளுக்கு டைம் கொடுக்காத வருணு"நதின் இந்த வார்த்தையை கூறியதும் வருணிற்கு அந்த கற்பனை நினைவுக்கு வந்தது. ஐயோ மெய்யாலுமே சாணியா என்ற ரீதியில் நதினை பார்க்க அவனோ வருண் கற்பனைக்கு சமாதி கட்டி அவன் வயிறுக்கு பாலை வார்த்தான்.

மிமியும் சுசுவும் நதினையும் மாய அரசரையும் வணங்கி விட்டு"வேந்தே தாங்கள் மீண்டும் அதர லோகத்திற்கு வந்தது பெரும் கலிப்பாக இருக்கிறது. உங்களின் வரவால் இந்த அதர லோகம் மீண்டும் செழித்து மிளிர போகிறது என்பதில் எங்களுக்கு சிறிதும் ஐயமில்லை.  சிறிது காலம் தாங்கள் இந்த லோகத்தில் இல்லாமல் போனதின் விளைவு இம்மாதிரி தீய செயல்கள் செய்யும் சூனியக்காரர்கள் தலை எடுத்து வந்துள்ளனர். அவர்கள் எப்படியும் வந்து தொலையட்டும் ஆனால் எங்கள் உலகத்தில் அக்கடா என்று உலாவிக் கொண்டிருந்த எங்களை அவர்களின் தீய மந்திர சக்தியைக் கொண்டு சிறைப்பிடித்து இங்கே ஏவளுக்காக கொண்டு வந்து விட்டனர்.

குட்டிச்சாத்தான் என்றாலும் எங்களுக்கும் குடும்பம் குட்டி உறவுகள் வேண்டும் அல்லவா.. இதோ என் பக்கத்தில் நிற்கிறதே மூளை இல்லாத ஒரு முண்டம் இந்த முண்டத்தை தான் நான் பல நாட்களாக காதலித்துக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் சூனியக்காரியின் பிடியில் அடிமையாக இருக்கும் என்னை இவள் எப்படி காதல் செய்வாள்.மீறி காதல் செய்தாலும் சூனியக்காரிக்கு மட்டும் இந்த உண்மை தெரிந்தால் எங்கள் இருவரையும் கொதிக்க வைத்து உப்பும் மிளகும் தட்டிப் போட்டு அப்படியே விழுங்கி விடுவாள்."

"வேந்தே அவர் கூறுவது ஒரு விதத்தில் உண்மைதான்.  அடிமையாக இருப்பதினால் அவரை நான் காதலிக்காமல் அல்ல.என்னால் அவர் உயிருக்கும் ஒரு ஆபத்து என்றால் அதை எவ்வாறு என் பெண்மனம் சகித்துக் கொள்ளும். சூனியக்காரிக்கு நாங்கள் யாரும் சிரித்தாலே பிடிக்காது இதில் காதல் கத்திரிக்காய் என்றால் அவ்வளவுதான் எங்கள் தலையை கிள்ளி எறிந்து விடுவாள்..  எங்களைப் போல் அவளிடம் மாட்டிக் கொண்டு அவதிப்படுவோர் எண்ணிக்கை கணக்கில் இல்லாதது. உங்கள் நண்பரின் வருகை எங்களுக்கு விடிவு வரும் என நாங்கள் அனைவரும் நம்புகிறோம்..  தயைகூர்ந்து அவரிடம் இன்னொரு விஷயத்தைக் கூறி விடுங்கள்..  நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் மனிதர் திடீரென்று கனவு உலகத்திற்கு சென்று விடுகிறார்.  சூனியக்காரி ஒரு நூல் கிடைத்தாலே அதை வைத்து ஒரு ஊருக்கே துணி தைத்து விடுவாள். இவரும் நூல்கண்டு மழையையே அவளிடம் கொடுப்பதுபோல்  போர் நேரத்தில் உறங்கி கொண்டிருந்தால் அவள் வெகு சுலபமாக இவரை வதைத்து விடுவாள்."

" ஆமாம் சுசு சொல்வது மெய்தான்.வேந்தே சூனியக்காரி அவளது பலத்தை எல்லாம் ஒன்று சேர்த்து அவளது இடது கை விரலில் ஒரு மோதிரமாக அணிந்து உள்ளாள். அந்த மோதிரத்தில் தான் அவளது சக்திகள் அனைத்தும் உள்ளது.  ஆனால் அந்த மோதிரத்தை இனம் காண்பது முடியாத ஒரு விஷயம் இடது கை விரல்களின் எந்த விரலில் அவள் அந்த மோதிரத்தை போட்டுள்ளாள் என எங்களுக்கு தெரியாது. இடது கை முழுவதுமே அவளுக்கு மோதிரங்களால் நிரம்பி இருக்கும். அதில் சரியான ஒரு மோதிரத்தை இனம் கண்டு அந்த மோதிரத்தை உடைத்து போட்டால் அவளின் சக்திகள் முழுதும் வடிந்துவிடும்.  அதன் பின் அவளின் தலையை கொய்து அவளை வெகு சுலபமாக வதைத்து விடலாம்."

"டேய் இன்னாடா இதுங்க ஏதேதோ சொல்லி கோத்து விட பாக்குதுங்க.இந்த விஷ பரிச்ச தேவயா மச்சான்'

"கொஞ்சம் அங்கட சூடு"நதின் மோகினியை சுட்டி காட்ட அவள் அவளது தந்தையின் கரத்தைப் பற்றிக்கொண்டு வருண் செய்யவிருக்கும் வீரதீர சாகசக் கதை பற்றி உரையாடிக் கொண்டிருந்தாள் பெருமிதத்தோடு.அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியே கூறியது அவன் மேல் அவள் வைத்திருக்கும் நம்பிக்கையை.  அந்த நம்பிக்கை எனும் பெரிய மலர்ச்சியை தனது அவநம்பிக்கையால் உடைத்தெறிய  வேண்டுமா. அம்மாதிரி ஏதாவது நடந்து விட்டால் அவள் தான் தாங்குவாளா.  என்ன நடந்தாலும் சரி இதில் தன் உயிரே போனாலும் சரி அவளுக்காக அந்த சூனியக்காரியை எதிர்க்க வருண் தயாராகிவிட்டான்.

"மச்சான் கைய மடக்குற ஆம்ஸ காட்டுற சூனியத்த போட்டு தள்ள ரெடியாயிட்ட போல."

"ஆமா மச்சான் இன்னைக்கு பாப்பேடா வருண் யாருனு"..

அதுவரை சிரித்து கொண்டிருந்த நதின்"மச்சான் இது நீ செய்ய வேண்டிய சண்ட. நா ஹெல்ப் பண்ண முடியாது. ஆனா உனக்கு ஒரு ஆபத்துனா என்ன தாண்டி தான் உன்கிட்ட வர முடியும் புரியுதா..அவ வரப்போறா" என்றவன் தனது சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி மந்திர வேலியை அந்த மாய உலகத்தை சுற்றிலும் போட்டான்.

"மச்சான் இது இந்த அதராவோட பவர வெச்சு போட்ட பாதுகாப்பு கவசம்.உங்க சண்டயில மத்த யாருக்கு ஒன்னியும் ஆக கூடாது அதுகாண்டி தான் இத பண்ணிருக்கேன்.உன்ன தவிர இந்த பாதுகாப்பு கவசம் மத்த எல்லோரையும் காப்பாத்தும். உன்னால முடியும் மச்சான்.."நதின் வருணை கட்டி கொள்ள மோகினி கண்களில் அதீத நம்பிக்கையுடன் வருணை காண அந்த விழிவீச்சில் வீறு கொண்டு தயாராக நின்றான் வருண்.

என்றுமே கற்பனைக்கும் நிகழுக்கும் வித்தியாசம் உண்டல்லவா. அதே போல் பறக்கும் காக்கை ரதத்தில் சூனியக்காரி வரவில்லை.  மாறாக காக்கை தலையும் மனித உடலும் கொண்ட அவளின் ஏவல்கள் வருணை தாக்க வானத்தைக் கிழித்துக் கொண்டு பறந்து வந்தன.  முதல்கட்ட தாக்குதலே தாறுமாறாக அமைய அந்த சக்தி வாய்ந்த கோடாரி தோன்றியது.  துடுப்பு பிடித்து காய்ப்பு காய்த்து கனமான வலைவீசி ஆழ்கடலின் ஆழத்தில் மூச்சடக்கி முங்கி எழும் அவனின் கரத்தின் பலம் அப்பொழுது தான் அங்கிருந்த அனைவருக்கும் புரிந்தது.

காக்கை ஏவல்கள் வானத்தை கிழித்து கொண்டு வருணை நோக்கி பாய்ந்து வர ஒரு நிமிடத்தில் வருணை சுற்றி ஒரே கரும்புகையாக மாறியது. கருப்பு சூறாவளிக்குள் அவன் சிக்கி கொண்டதை போன்ற உணர்வு. அந்த கரும்புகை அப்படியே அந்தரத்தில் எழும்ப இங்கே நதினுக்கே சற்று கலக்கமாக இருந்தது. அப்படியென்றால் மோகினியை பற்றி கூறவே வேண்டாம்.பயந்த விழிகளை சற்றும் மூடாமல் அகல விரித்து கரும்புகைக்குள் கண்ணாலனை தேடி கொண்டிருந்தாள். சில நிமிடங்களில் கரும்புகை கலைய தொடங்கியது. இல்லையில்லை சுக்கு நூறாக சிதற தொடங்கியது.

அதோ சிதறும் கரும்புகையின் ஊடே வருண் தெரிகிறான் ஒய்யாரமாக ஒரு காக்கையின் கழுத்தில் அமர்ந்து கொண்டு மற்ற காக்கைகளை கோடாரியால் வெட்டி வீழ்த்தி கொண்டிருக்கிறான். சுசுவும் மிமியும் ஆஹா ஓஹோ என்று குதிக்க மோகினிக்கு அப்பொழுது தான் உயிரே வந்தது. கோடாரியின் சக்தியா இல்லை அவனுள் மறைந்திருந்த வருணேந்திரனின் வீரமா அறியவில்லை. நிமிடங்களில் வந்து காக்கை ஏவல்கள் அனைத்தையும் வேட்டையாடி முடித்தவன் அந்தரத்தில் இருந்து கீழே குதித்தான். குதிக்கும் போதே தான் அமர்ந்திருந்த காக்கையையும் அழிக்க தவறவில்லை.

வருண் கால்கள் தரையில் பட்ட நொடி அவனால் தரையின் அதிர்வை நன்றாக உணர முடிந்தது.கேட்கவே கூடாத அபாய ஒலி அவன் செவியை தாக்கியது. காக்கைகள் கூறிய நகத்தால் கீறி கோர அலகால் கொத்தியது வேறு உடல் சல்லடையாக கிடந்தது. ரத்தம் பெருக்கெடுத்து வெளியேற பேய் சிரிப்பு ஒன்று வெளியேறும் ரத்தத்தை உறைய வைக்கும் அளவு அருகே கேட்டது. மிமியும் சுசுவும் சிரிப்பு சத்தம் கேட்டு மோகினியின் பின்னே மறைய கதைகளில் கேட்டதைப் போல பறக்கும் துடைப்பதில் பறந்து வந்தால் சூனியக்காரி. சடைப்பிடித்த கூந்தலும் ஒடுக்கிய முக வெட்டும் அழுத்தமான கண்களும் கோரமாக சிரிக்கும் இதழ்களும் அவள் அணிந்திருந்த கருப்பு நிற அங்கியும் கூறாமல் கூறியது இவள் கொடூரமானவள் என்று.

ஹிஹிஹி.. வருணை சுற்றி ஒரு வட்டம் போட்டவள் அவனுக்கு நேர் எதிரே அந்தரத்தில் பறந்து நின்று "ஹிஹிஹி நீதான் என்னை கொல்ல பிறந்தவனோ.. பார்க்கவே பொடிப்பையன் போல் உள்ளாய். உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. அந்த மாய இளவரசியின் அழகில் மயங்கி என்னை கொல்ல தவறான முடிவு எடுத்துள்ளாய். என்னுடன் வந்துவிடு அவளைவிட பேரழகியை நான் உனக்கு பரிசளிக்கிறேன்.  இதுவரை எனது படையை யாரும் தொட்டதுகூட இல்லை.  நீ என் முதல் படையான ஏவல் படைகளை தரைமட்டமாகி விட்டாய். உண்மையில் நீ ஒரு வீரன் தான் என்னுடன் வந்து விடுகிறாயா"

"உன் சித்து வேலலாம் இளிச்சவாயன் எவன் கிட்டயாச்சும் காட்டு என்கிட்ட வேணா"

"கோபம் வருகிறதா குட்டி பையா உனக்கு ஹிஹிஹி.. ஐயோ எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லையே அடேய் மிமி கேட்டாயா இவனுக்கு கோபம் வருதாம்"..மிமி அங்கிருப்பதை அவள் அறிந்து கொண்டாள் என்று தெரிந்ததும் மிமியும் சுசுவும் மோகினியின் இருப்பக்கம் நின்று அவளை பார்க்க"என் கூடவே இருந்து என் முதுகில் குத்துகிறீர்களா.. துரோகிகளே.  உங்கள் இருவரையும் நான் சும்மா விட போவதில்லை.  இவனுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டு இந்த மாய உலகத்தை அழித்து என்னை வெல்ல நினைக்கும் மாய அரசனைக் கொன்று அவன் மகளாகிய இந்த அழகிய இளவரசியை என் துர் சக்திகளுக்கு பலியிடுகிறேன்.

பிறகு உங்கள் இருவரையும் கவனித்துக் கொள்கிறேன்.. அடடா யார் இது தேவர்களைப் போல் களையான முகத்துடன் என்னை எரிக்கும் நோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவன் அட நமது வேந்தன்.. என்ன வேந்தே நூறாண்டு காலமாக எங்கே சென்றிருந்தீர். சென்றதுதான் சென்றீர்கள் அப்படியே சென்று ஒழிந்து இருக்கக் கூடாதா எதற்காக என் கையில் மடிவதற்கு மீண்டும் பிறவி எடுத்து வந்தீர்..  இவன் உங்களது நண்பன் தானே முதலில் இவன் மரணத்தை தாங்கள் காண வேண்டும்..  நீங்கள் முன்பு எங்களுக்கு செய்த அநியாயத்தை எல்லாம் நான் இன்னும் மறக்கவில்லை..  அந்த அநியாயத்திற்கு இன்று நான் நியாயம் செய்கிறேன்."

"ஹேய் இந்தாடி இன்னா அதுப்பு இருந்தா என் முன்னாடியே அவன போட்டு தள்ளுவேன்னு சொல்லுவ உன்னிய உசுரோட வுட்டா தானடி இன்னைக்கு பாத்ரலாம்டி"வருண் கோடரியை இறுக்கி பிடிக்க மீண்டும் அகோர சிரிப்பொன்று அங்கே நாராசமாக கேட்டது.இம்முறை சூனியக்காரியின் பறக்கும் துடைப்பதில் இருந்த துடைப்ப குச்சிகள் யாவும் உதிர்ந்து கீழே விழ அவற்றிலிருந்து குச்சி குச்சியாக உயர்ந்த உருவம் கொண்ட அரக்கர்கள் உருவாகினர்.  அவர்கள் யாவரும் தங்கள் கரத்தை வீசினால் துடைப்பக் குச்சியை போல் சுளீர் சுளீரென்று வருண் மீது அடி விழுந்தது. விழும் அடி யாவும் அவன் தோளை சதையோடு பிய்த்து எடுக்க வருண் வழியில் சுருண்டு போனான்.

அவன் வலியை அங்கே இருந்து பார்த்துக்கொண்டிருந்த மற்ற யாவரும் துடித்துப் போனார்கள்.  சுசு பயத்தில் மிமியின் கரத்தைப் பற்றிக் கொள்ள அதை ஆதரவாக அணைத்துக் கொண்டது மிமி. நதினால் வருணிற்கு உதவ முடியும்.ஆனால் வருண் தன்னை நிரூப்பிக்க வேண்டும். அவனை நம்பி தன்னை கொடுத்த மங்கை அவன் மேல் வைத்த நம்பிக்கைக்காக அவன் தன்னை நிரூபிக்க வேண்டும். அவனால் தங்களுக்கு விடிவு வரும் என நம்பி அவனுக்கு உதவி செய்வதற்காக ஓடோடி வந்திருக்கும் குட்டி சாத்தான்களின் நம்பிக்கைக்காக அவன் தன்னை நிரூபிக்க வேண்டும். இங்கிருக்கும் மரம் செடி கொடி பறக்கும் குட்டி மனிதர்கள் விலங்குகள் ஊர்வன பறப்பன அனைத்தும் அவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கைக்காக அவன் தன்னை நிரூபித்தே வேண்டும்.

ஆதலால் நதின் இறுகிய மனதோடு கல்லாக நின்றான். ஆனால் கண்களில் மட்டும் நண்பனின் உதிரம் கண்டு கண்ணீர் வழிந்தது. அந்த கண்ணீரின் ஊடே தன் மனதினுள் வருணோடு பேசினான். "மச்சான் விட்றாதடா.. உன்னால முடியும் மச்சான்"..

மனசிக்கமான குரல் வருணின் எண்ண அலைகளில் ஊடுருவி அவனிடம் சென்றதோ என்னவோ படக்கென்று நதினை திரும்பி பார்த்தான். அந்தக் கண்கள் அவனை எழுந்திரு எழுந்திரு என குரல் கொடுத்தது.  உடல் முழுவதும் ரத்தம் ஆறாகப் பெருகி வரும் நீ எழுந்து நிற்கும் பொழுது அவனுடைய ரத்தம் மண்ணில் விழுந்தது.  கரத்தில் கோடாரி பரபரவென்று தான் இருப்பை காண்பிக்க அவ்வளவுதான் ஆவேசம் வந்தவனாக அந்த குச்சியை உருவங்கள் அனைத்தையும் வெட்டி வீசினான் வருண். அவைகளும் விடாமல் தாக்க வெறி வந்தவன் போல் வருணின் தாக்குதலுக்கு மந்திரத்தால் ஏவப்பட்ட அவைகளின் தாக்குதல் எடுபடவில்லை. சிறிது நேரத்திலேயே சூனியக்காரியின் இரண்டாவது படைகளையும் வேரறுத்து வெற்றிமகனாய் நின்றான்.

"ஹா நான் நினைத்ததை விட நீ பலசாலி தான்.  இனி உன்னுடன் விளையாட என் படைகளை அனுப்ப எனக்கு நேரமில்லை. இரண்டு முறை வெற்றி பெற்று இருமாப்புடன் என் முன்னே நிற்கிறாய் இந்த மூன்றாவது முறை என்னை வெற்றிகொள் அப்பொழுது ஒத்துக் கொள்கிறேன் நீ வீரமான ஆண்மகன் என்று இல்லையேல் ஒருவேளை நீ மறுத்தால் நான் கூறிய யாவையும் உன் உயிர் கடைசி நிமிடத்தில் ஊசலாடும் தருணம் செய்து முடிப்பேன்" சவால் விட்டு சூனியக்காரி இப்பொழுது வருண் முன்பு எதிர்த்து நின்றாள்.

"ஐயோ மிமி என்ன இது இந்த கேடு கெட்டவளை எவ்வாறு இந்த வீரன் எதிர்பான்.. இவள் கண்ணிமைக்கும் நேரத்தில் மந்திரத்தை உபயோக்கப்படுத்துவாளே"

"கலங்காதே சுசு நம்பிக்கையோடு இரு"தைரியம் கூறியதே தவிர அதன் நடுகத்தை யாரிடம் சொல்ல. சூனியக்காரி நேரடியாக அவனுடன் போரிடாமல் தன்னைப் போல் பல உருவங்களை அங்கே தோற்றுவித்தாள். நூற்றுக்கணக்கான சூனியக்காரிகள் இப்பொழுது வருணை சுற்றி நின்று இருந்தனர்.  அனைவருமே ஒரே தோற்றத்தோடு இருக்க இதில் வருண் உண்மையான சூனியக்காரியை எவ்வாறு கண்டுபிடிப்பான்.  ஆனால் அவன் கண்டுபிடித்தே தீர வேண்டும் அவளைக் கண்டு பிடித்து அவள் கரத்தில் இருக்கும் மோதிரத்தை உடைத்தால் மட்டுமே அவளுடைய சக்திகளை அவள் இழக்க நேரும்.

குழப்பத்துடன் வருண் நதினை கண்டான். நதினுமே சற்று திகைத்து போய் அங்கே நடப்பதை காண அதற்குள் சூனியக்காரிகள் படை அவனை நோக்கி தாக்க ஆரம்பித்தனர். ஒற்றை ஆளாக அவர்களின் தாக்குதலை எதிர்கொண்டு வருண். மோகினிக்கு இருப்பே கொள்ளவில்லை.  தான் வருணிற்கு உதவப் போகிறேன் என அவள் தந்தையிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள்.  மாய அரசர் அதற்கு அனுமதிக்கவில்லை. மகளிடம் மறுத்து கொண்டிருந்த அவரை தள்ளி விட்டு நதினிடம் ஓடி வந்தவள்"வேந்தே தயை கூர்ந்து உங்கள் நண்பருக்கு உதவுங்கள். உங்களால் மட்டுமே அவரை காக்க இயலும்.அவரை காப்பாறுங்கள்"

அவளை தீர்க்கமாக பார்த்த நதின்"என்னால மட்டும் இல்ல உன்னால கூட அவன காப்பாத்த முடியும்"

"என்ன என்னால் அவருக்கு உதவ முடியுமா எப்படி வேந்தே"

"உண்மையான சூனியக்காரிய கண்டுபுடிச்சு அவ கையில இருக்குற மோதிரத்த ஒடைக்கணும்.. அப்ப அவளோட சக்தி அவள விட்டு போயிரும்"

"உண்மையான சூனியக்காரி எவ்வாறு அடையாளம் காண்பது.  அவள்தான் நூற்றுக்கணக்காக தன் உருவத்தை அங்கே நிறுவியிருக்கிறாளே"மோகினி தவிக்க சுசு ஒரு யோசனை கூறியது.

" இளவரசி பதட்டப்படாதீர்கள். சூனியக்காரியின் கழுத்தில் ஒரு கடி பட்ட அடையாளம் இருக்கும்.  அங்கிருக்கும் எந்த சூனியக்காரியின் கழுத்திலும் அந்த அடையாளம் தெரியவில்லை.  அந்த அடையாளம் இருப்பவள் தான் மெய்யான சூனியக்காரி. "

"சுசு உனக்கு எப்படியடி அவள் கழுத்தில் இருக்கும் அடையாளம் தெரியும்"

" அவளை கடித்ததே நான் தானே.நமது உலகத்தில் அவள் அடாவடியாக நுழைந்து நாம் அனைவரும் சிறை செய்யும் போது அவள் கழுத்தில் கடித்து நான் தானே.  அதற்காக தானே என்னை அவளது அடிமைகளில் பிரதான அடிமையாக வைத்துள்ளாள்"

" கழுத்து கடிக்கு பின்னால் இந்த சரித்திரம் வேறு இருக்கிறதா.  சரி கழுத்தில் கடிபட்ட தழும்பு இருக்கும் சூனியக்காரி தேடுங்கள் சீக்கிரமாக." அனைவரின் கண்களும் அங்கியிருந்த சூனியக்காரிகளை சல்லடை போட வஜ்ரா கழுத்தில் கடிப்பட்ட தழும்பு இருக்கும் சூனியக்காரியை கண்டுபிடித்துவிட்டது.

" வேந்தே நான் கண்டுபிடித்துவிட்டேன்.வருணருக்கு என் உதவி தேவைப்படுகிறது நான் சென்று அவருக்கு உதவுகிறேன்"

" நீங்கள் மட்டுமல்ல வஜ்ரா.  உங்களுடன் நானும் வருவேன். வேந்தே உங்களின் பாதுகாப்பு கவசத்தை பற்றி எங்களுக்காக தளர்த்திக் கொள்ளுங்கள்"

" மகளே மோகினி வேண்டாம் நான் சொல்வதைக் கேள் அங்கே செல்வது உன் உயிருக்கு ஆபத்து."

" தந்தையே என் மணவாளன் அங்கே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது நான் எப்படி இங்கே பார்த்துக்கொண்டு சும்மா இருப்பேன் அப்படித் தாங்கள் வீரம் இல்லாமல் என்னை வளர்க்க வில்லையே"மோகினியும் வஜ்ராவும் நதினை நச்சரிக்க அவனும் பாதுகாப்பு கவசத்தை தகர்த்தான். அங்கே வருண் போராடி கொண்டிருக்கும் போது மோகினி வஜ்ரா மீதேறி மெய்யான சூனியக்காரியை கண்டுபிடித்து அவளுக்கு பின்னால் சென்று அவளை தாக்க முற்பட சூனியக்காரி அவளை இனம் கண்டு கொண்டாள்.

அவளும் மோகிணியை தாக்க முற்பட வஜ்ரா அவளின் நோக்கம் அறிந்து அவளை தும்பிக்கையால் தாக்க அந்த சமயத்தில் தன் தந்தையின் வாளால் சூனியக்காரியின் கரத்தை வெட்டினால் மோகினி.கரம் தனியாக மண்ணில் விழ வஜ்ரா நொடியும் தாமதிக்காமல் ஒரே மிதி அந்த கரத்தை. ஒரு மோதிரத்திற்கு பதிலாக ஐந்து மோதிரங்களும் சுக்கு நூறாக சிதறி போனது.  வருணை சுற்றியிருந்த சூனியக்காரிகளின் மாயை வெடித்து சிதற மெய்யான சூனியக்காரி தன் சக்திகளை இழந்து கதறி மண்ணில் விழுந்தாள்.  நொடியும் தாமதிக்காது வருண் அந்த மந்திர கோடாலியால் அவள் கழுத்தை வெட்டி சூனியக்காரிக்கு முடிவு கட்டினான்.

அதுவரை அந்த இடத்தை சுற்றி இருந்த அந்தகாரமான நிலை மாறி மீண்டும் மாயலோகம் செழித்து நின்றது. குட்டி மனிதர்களும் மாய உலகத்தின் பிரஜைகளும் மிருகங்களும் பறவைகளும் ஊர்வன மரங்கள் கொடிகள் செடிகள் கல் பாறைகள் மலைகள் அனைத்துமே வருணை புகழ்ந்து தங்களுக்கு விடுதலை அளித்த அவனுக்கு நன்றி கூறினர். மோகினி தன்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் மறந்து வருணை தாவி அணைத்துக் கொண்டாள். தன்னவளின் கலக்கத்தை புரிந்து அவளை ஆசுவாசப்படுத்திய வருண் வஜ்ராவை பார்த்து"நன்றி மாமே"என்றான்.

அவனை தும்பிக்கையால் தழுவி"நீங்கள் நலமாக உள்ளதே போதும் மாமே"என்றது உள்ளார்த்த அன்புடன். மாய அரசர் மருமகனை கொண்டாட சுசுவும் மிமியும் ஒருவரை ஒருவர் அணைத்து கொள்ள நதின் ஒன்றுமே சொல்லாமல் வருணை பார்த்து கொண்டிருந்தான்.

"இன்னா மச்சி இந்நேரம் கூட்டத்தை ஒதுக்கிட்டு நீதான் ஓடி வருவேன்னு பாத்தேன். நீ ஏன் வரல.."

"எப்படி இருந்தாலும் நா சாவ போறவன் மச்சான் எனக்கு அப்றம் உனக்கு உண்மையான ஒரு உறவு வேணும் அதுக்கு தான் நா வரல.மோகினி உனக்கு கெடச்ச வரம். வஜ்ரா உன்னோட உண்மையான நட்பு"

"டேய் எத்தன உறவு இருந்தாலும் நீ இல்லாத உசுரே எனக்கு வேணா டா வெண்ண"நண்பர்கள் இருவரும் அணைத்து கொள்ள இருவரின் கண்களிலும் கண்ணீர்.

"டேய் நதினு கேக்கணும்னு இருந்தேன் எங்கடா கடலு கன்னி.. இன்னா சொல்லுது. உம்மேல செம காண்டுல இருந்துச்சு"நதினின் நினைவு சற்று பின்னோக்கி சென்றது.

நதினை அடித்து துவைத்து கைகள் ஓய்ந்து அவள் அமர்ந்து விட இவன் சாதுவாக அவள் காலடியில் அமர்ந்தான். மணி துளிகள் நகர்ந்ததே தவிர அவள் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. கண்களில் மட்டும் கண்ணீர் நின்றபாடில்லை. மூச்சை இழுத்து விடுகிறாளா என்ற சந்தேகம் கூட வந்தது நதினுக்கு.இந்த அமைதி அவனை சுட்டெரித்தது.அவனின் ஆண்மனம் கர்வதில் தகித்து நின்ற மனம் இப்பொழுது ஊமையாய் தன்னவளுக்காக அழுதது.

"மீனம்மா ஏன்டி பேச மாட்ற. இப்டியே அழுந்திட்டு இருந்தா இன்னாடி அர்த்தம். ப்ளீஸ்டி பேசாம என்ன கொல்லாத.பேசும்மா.ஏதாச்சும் பேசு"

அவள் தீர்க்கமாக அவனை பார்த்து பின் எழுந்து அந்த அறையின் மூலைக்கு சென்றாள். அங்கே வெளிச்சத்திற்கு எரியும் அக்கினி தீப்பந்தத்தையே வெறித்து பார்த்தவள்"பேசவா என்ன பேச. அன்றொரு நாள் உங்களை பற்றிய பேச்சை நான் தவிர்த்திருந்தால் இன்று இந்த நிலமையே வந்திருக்காதே. உங்களை பற்றிய பேச்சை மூளைக்கு கொண்டு சென்று அதை மனதில் பதிய வைத்த குற்றம் இன்று அனைத்தையும் இழந்து நிற்கிறேன். இன்னும் இழக்கவும் போகிறேன்.கடமையை நிறைவேற்ற மீண்டும் பிறப்பெடுத்து வந்து அதை நிறைவேற்றி நீங்கள் சரித்திரத்தில் இடம் பிடிப்பிர்கள். ஆனால் உங்கள் சுயநலந்தால் வாழ்வை இழந்து விதியை ஏமாற்றி அபலை இவள் என்னாவாள்..

என் உணர்வோடு விளையாடுவதை எப்பொழுது நிறுத்தி கொள்வீர்கள் அதரரே.. போதும் ரணப்பட்டு ரணப்பட்டு ஈன பிறவியாகி போனேன்.கடற்கன்னியிவளின் கதறல் கோமகன் செவியில் எட்டாமல் போனது எனது துரதிஷ்டமே. என் உணர்வோடு தாங்கள் விளையாடி அழுத்திருபிர்கள் அல்லவா. உங்களை நான் கவர காரணமாக இருந்தது என்ன வேந்தே. இந்த புற அழகு தானே.மாசு மாறுவற்ற சருமமும் மோகத் தீ மூட்டும் தேக்கமும் தானே இனி அதை இல்லாமல் செய்கிறேன்.. "அதுவரை ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு பேசியவள் ஆவேசம் வந்தவளாக தீப் பந்ததை எடுத்து தன் முகத்தில் வைக்க போக பதறிய நதின் சொடுக்கிட்டான். ஒற்றை சொடுக்கில் அனைத்தும் ஸ்தம்பித்து நின்றது.

வர்ணிகா மட்டும் விழியசைத்து அவனை பார்த்து கொண்டிருக்க அவள் அருகில் வந்து தீப் பந்ததை உறுவியவன் தன் நெஞ்சில் வைத்து அழுத்த அவள் விழிகள் விரிந்தன. கருமணிகள் இங்கும் அங்கும் அசைந்தன. சொல்லொண்ணா வேதனையை அவள் கண்கள் பிரதிப்பளிக்க நெஞ்சில் பட்ட காயம் கூட இரண்டாம் பட்சம் ஆனது. அவளை நெருங்கி ஆழ்ந்த இதழ் முத்தத்தை அவளுக்கு வைத்தவன் அவளை மயக்கமுற வைத்து விட்டு வஜ்ரா மற்றும் மாய அரசரோடு வருணிடம் சென்றான்.

சுசுவும் மிமியும் மாய அரசர் எவ்வளவு அழைத்தும் பிறகு வருவதாக சொல்லி செல்ல இவர்கள் அனைவரும் மாளிகை திரும்பினர்.

அதரா - 25



காணங்கத்த மீனு வாங்கி புள்ள மீனு வாங்கி
காரத்தோடு சமைச்சு வெச்சேன் மாமா சமைச்சு வெச்சேன்
கொதிக்குது அது கொதிக்குது
குக்கர்ல கொதிக்கிது
கொதிக்குது அது கொதிக்குது கொழம்பு குள்ள கொதிக்குது ஹேய்.."வருண் மேஜையில் தாளம் போட்டு பாட வஜ்ரா அவன் அருகில் நின்று கொண்டு மண்டையை ஆட்ட மோகினிக்கு அந்த பாடலே புரியவில்லை. அவனை ங்கே என பார்த்து கொண்டிருந்தாள்.

"வருணரே என்ன கொதிக்கிறது"

"கொழம்பு மாங்கனி.. நீயு மீனு கொழம்பு துண்ணுது இல்ல"

"உவ்வெக் நாங்கள் சுத்த சைவம்"

"இருந்துட்டு போ அதுக்கு ஏண்டி வாந்தி எடுக்குற..மாமே நீ துண்ணுருக்கியா"

"நான் என்னத்தை கண்டேன் இலையையும் தழையையும் தவிர"நீண்ட பெருமூச்சு வஜ்ராவிடம்.

"வுடு மாமே நம்ம கையாள மீனு கொழம்பு துண்ணது இல்லயே..சொம்மா அப்டித்தான் இருக்கும்.. அப்றம் ஆக்கி தரேன்"

"என்ன மீனா நான் அதையெல்லாம் உண்டது இல்லை மாமே. உங்கள் அன்புக்கு நன்றி நீங்களே சமைத்து நன்றாக உண்டு மகிழுங்கள். என்னை நடுவில் இழுக்கதீர்கள்"

"என்ன மாமே இப்டி சொல்லிகினா.. நா ஆக்குறேன் நீ துண்ற.. அப்டியே மாமா ஊட்டி விடுவேன் நீயும் மொச்சிக்கு மொச்சிக்குன்னு துண்ற ஓகேவா மாங்கனி"

"அய்ய உவேக் எந்த கருமத்தையாவது சமைத்து நீங்களே கொட்டி கொள்ளுங்கள் என்னை விட்டு விடுங்கள்.."அவள் ஓடி விட வஜ்ரா

"மாமே உங்களிடம் நான் ஒன்று சொல்ல வேண்டும். நேற்றைய தினம் நடந்ததை வேந்தன் உங்களிடம் கூறவில்லை. கூறினால் வருத்தப்படுவீர்கள் என்று நினைத்தாரோ என்னவோ"

"இன்னா மாமே இழுக்குற.. என்ன ஆச்சு"பதற்றம் வருணை தொற்றி கொள்ள வஜ்ரா நதின் வர்ணிகா இருவருக்கும் நடுவே நடந்த அனைத்தையும் கூறி முடித்து

"எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை மாமே.. யார் மீது தவறு யார் செய்த குற்றம்..இருவரில் யார் புறம் உள்ள நியாயத்தை கேட்பது என்றே புரியவில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் நடுவே இருந்த உறவைப் பற்றி நான் முழுதாக அறியவில்லை. ஆனால் நான் பிறந்து எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே ஒவ்வொரு நாளும் வர்ணிகா கல்லாக சமைந்த இடத்திற்குச் சென்று அவர்களை பார்த்துவிட்டு வருவேன். புதர்மண்டி அந்த இடமே பயங்கரமாக இருக்கும். மக்கள் அனைவரும் அதை ஒரு பாறையாகவே பார்த்து வந்தனர்.

 அப்படி இருக்க எனக்கு மட்டும் அந்தப் பாறைக்குள் ஒரு இதயம் துடிப்பது நன்றாக தெரிந்தது. கல் கண்ணீர் வடிப்பதை அப்பொழுது தான் கண்டேன்.. வர்ணிகா அதரரின் காதலை பற்றியும் சாபத்தை பற்றியும் சந்ததி சந்ததியாக மக்கள் அவர்கள் தலைமுறைக்கு கூறி வருகின்றனர். உங்களுக்கு ஒன்று தெரியுமா அதர லோக மக்கள் அனைவரின் வேண்டுதலும் அதரா மீண்டும் பிறந்து வர வேண்டும்.

 அவரால் கல்லாக்க பட்ட வர்ணிகா சாபம் விமோசனம் பெற வேண்டும் அதன் பிறக்காவது அவர்கள் பிணக்கு நீங்கி ஒன்றாக வாழ வேண்டும் என்பது தான்.நீங்கள் இருவரும் இங்கே வந்ததும் எங்கள் அனைவரின் எண்ணமும் கல்லாக கண்ணீர் வடிக்கும் காரிகைக்கு முதலில் விடுதலை என்பது தான். விடுதலை கிடைத்து என்ன இப்பொழுது.

விடும் கண்ணீர் குறைந்தபாடியில்லையே. மாமே வேந்தன் மிகவும் நல்லவர். அவரை போல் அதரா வம்சத்தில் ஒருவரும் இன்னும் பிறந்ததில்லை.அப்பேர்பட்ட வீராதி வீரன் அசகாய சூரன் அவர் ஆனால் என்ன இதை கூறுவதற்கு தாங்கள் என்னை கோபித்து கொண்டாலும் பரவாயில்லை. வேந்தன் ஒரு சுயநல காதலன். தன் காதலை காதலியை இழந்து விட கூடாதே என்று மட்டுமே சிந்தித்த அவர் காதலித்த பெண்ணின் மனதை அறிய முற்படவில்லை.அதைவிட இப்படிக் கூறலாம்.காதலியின் மன விருப்பம் அவருக்கு தேவையற்றதாக இருந்தது.

இன்று கல்லாக இருந்து கன்னியாக மாறியவளின் உணர்வோடு மீண்டும் விளையாடிக் கொண்டிருக்கிறார். இது தவறு என்று அவருக்கு புரியவில்லையா. இல்லை புரிந்தாலும் புரியாதது போல் நடிக்கிறாரா.. எனக்கு சத்தியமாக விளங்கவில்லை மாமே.அந்தப் பெண்ணைப் பார்க்க உங்களுக்கு பாவமாக இல்லையா. கண்டவுடன் காதல் கொண்டு தன்னையே உங்களிடம் இழக்கும் அளவு நம்பிக்கை கொண்ட மாய இளவரசியின் காதல் எவ்வளவு உயர்வோ அதற்கு சற்றும் குறைந்ததல்ல கடல் கன்னியின் காதல். ஏன் சொல்லப்போனால் இந்த உலகம் இதுவரை காணாத காதல் அவர்களுடைய காதல். காரிகை கல்லாக சமைந்து இருந்தபோதும் கன்னியின் நெஞ்சமதில் எந்நேரமும் ஒரே சிந்தனை தான் அது அதராவின் பெயர் மட்டுமே.

 நான் மனித இனமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அந்தப் பெண்ணின் மன உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எவ்வளவு காயப்பட முடியுமோ அவ்வளவு அந்தப் பெண் ரணப்பட்ட கிடைக்கிறாள்.உயிர் மட்டும்தான் அந்த பெண்ணுக்கு மிஞ்சியிருக்கிறது.அதைக்கூட போக்கிக் கொள்ள பல முறை முயற்சி செய்து விட்டாள்.அவள் உயிரின் மேல் அவளுக்கே உரிமை இல்லாத போது எப்படி உயிரை மாய்த்துக் கொள்ள முடியும்.போதும் மாமே தயவுசெய்து வேந்தனிடம் கூறுங்கள். நீங்கள் கூறினால் அவர் கண்டிப்பாக கேட்பார்"விசுவாசமான வேலைகாரன் தன் எஜமானின் நலன் கருதி பேசி முடித்தது.

 பேச்சற்று நின்று கொண்டிருந்தான் வருண்.வார்த்தைகள் ஒவ்வொன்றும் சாட்டையாக அவன் இதயத்தில் சுழன்று அடித்து கொண்டிருந்தது. கண்டவுடன் காதல் கொண்டு ஒரே இரவில் தனக்காக தன்னையே இழந்த மோகினியால் கன நேரம் என்னை பிரிய முடியுமா.சூனியக்காரியிடம் சண்டையிடும் போதிலும் அவளின் கண்கள் அவனை விட்டு பிரிய மறுத்ததே.அப்படியிருக்க நூறாண்டுகள் காதலை மனதில் சுமந்து காதலனின் சுயநலந்தால் கல்லாக மாறிய போதும் அவனை துவேசிக்காமல் காதல் கொண்டுள்ள வர்ணிகாவின் காதல் எத்துணை மேன்மையானது..

தன் நண்பன் மட்டும் என்ன.. சுயநலம் தான் ஆனால் எதற்காக. அவள் மேல் கொண்ட பைத்தியக்கார தனமான காதலுக்காக. இருவருமே ஒருவர் மேல் ஒருவர் உயிரையே வைத்து கொண்டு சேர முடியாமல் அல்லாடி கொண்டிருக்கின்றனர். போதும் இது நாள் வரை அவர்கள் பட்ட பாடும் வேதனையும். நான் நலமாக வாழ்வதில் பேரானந்தம் கொள்பவன் என் நதின்.அவன் வாழ்வும் மலர வேண்டும்.நான் மலர செய்வேன். ஒரு முடிவுக்கு வந்த வருண்"மாமே இப்ப அந்த பொண்ணு எங்க இருக்கு"

"யார் கடல் கன்னியா.. அவர்கள் வடக்கு திசை அறையில் உள்ளார்கள்"வஜ்ரா கூறியதும் அதன் மீது அமர்ந்தவன்"அந்த பொண்ணு அறைக்கு போ மாமே.. இன்னைக்கே இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்றேன்"அவன் முகத்தில் தெரிந்த தீவிரத்தில் வஜ்ரா கேள்வி கேட்காமல் வர்ணிகா அறை நோக்கி சென்றது. அங்கே ஆழ்ந்த மயக்கத்தில் கிடந்தாள் வர்ணிகா. அவளை கண்டதும் பாவமாக இருந்தது வருணிற்கு. பக்கத்தில் இருந்த தண்ணீர் குடுவையை எடுத்து வர்ணிகா முகத்தில் தண்ணீர் தெளித்தான்.அவள் மயக்கம் தெளிவதாய் இல்லை.அவள் இரு கன்னங்களை பலமாக தட்ட இம்முறை முயற்சி பலன் அளித்தது. வர்ணிகா மயக்கத்திலிருந்து கண்களைத் திறந்தாள். தன் முன்னால் நதின் இல்லாமல் இல்லாமல் வேறு ஒருவன் நிற்பதைக் கண்டு முதலில் குழம்பியவள் அவனுக்குப் பின்னால் வஜ்ராவை கண்டதும் அமைதியானாள்.

"ம்ம் என் பேரு வருணு.. நா நதினோட ஃப்ரண்ட்டு..ப்ச் நண்பன். இந்தா பாருமா தங்கச்சி நமக்கு சுத்தி வளச்சு பேச புடிக்காது.போன பிறவி எப்டியோ அது போயிருச்சு..இனி குட்டிக்கரணம் அடிச்சாலும் அது வராது. வராதுன்னு தெரிஞ்சும் எதுக்கு கொரங்கு கணக்கா அத புடிச்சிக்கினு தொங்கணும்..போன நிமிஷத்த கூட நம்மாள கொண்டு வர முடியாது.ஆனா என் நண்பன் நூறு வருஷ முன்னாடி இருந்த உன்ன அப்டியே பிரஷா இங்க கொண்டாந்து சேத்துருக்கான்.அவன் சாமி புள்ள. அவனுக்கு தெரியும் மறுக்கா அவன் கண்டிப்பா போறப்பான்னு. ஆனா நீ பொறப்பியா. அந்த டவுட் இருக்க போயி தான் உன்ன கல்லா மாத்திகினான்.

அவனால அப்ப இன்னாதான் பண்ண முடியும் சொல்லேன் பாப்போம். கடமைய செய்ய அவன் ரெடியா இருக்கான்.திரும்பவும் உன்ன கல்லா மாத்த மாட்டான். முன்னாடி சொன்னான் செத்தாலும் உன்ன விட மாட்டானு ஆனா இப்ப அப்டி இல்ல. அவன் உன்ன விட்டு்டான்.உனக்கு மன பூர்வமா விடுதல தரான். நீ ஆசப்பட்ட மாறி வாழு.வேற ஒருத்தன கட்டிக்கினு நிம்மதியா வாழு..போம்மா தங்கச்சி இனிமேயாச்சும் சந்தோசமா இரு. அவன நெனச்சு பீல் பண்ணாத அவன் கடமை கடமைன்னு செத்து போயிருவான்.நீ எதையும் போட்டு கொளப்பிக்காம சந்தோசமா இரு சரியா"வஜ்ரா என்ன இவன் ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பான்னு நெனச்சா ஏலெட்டு எலுமிச்ச பழம் புளிஞ்சு செய்வினை வைக்குறான் என்ற ரீதியில் பார்த்து வைத்தது.

வருண் கூறியதை கேட்ட வர்ணிகா நிதானமாக"இப்போ அவர் எங்கே"

தான் எதிர்பார்த்தது நடக்க ஆரம்பிக்க "அவனா அவன் வெளிய கொளம் இருக்குல்ல அங்க பராக்கு பாத்துட்டு நிக்குறான் நீ போ கெளம்பி போயி உன் வாழ்க்கய பாருமா"அவள் அவனுக்கு பதில் கூறவில்லை. மாறாக ஜங்கு ஜங்கென்று நடந்து சென்றால் நதினை பார்க்க.கால்கள் அதன் போக்கில் நடக்க மனமோ அவன் எப்படி என்னை விட்டு செல்லலாம் என நினைக்கலாம். பிறகு ஏன் என்னை நூறாண்டுகள் காத்திருக்க வைத்தான். சாக துணிந்தவளை ஏன் காப்பாற்றினான். எனக்கும் சேர்த்து அவனே முடிவெடுக்க இந்த வாழ்க்கையில் அவனுக்கு மட்டுமே பங்கு உள்ளதா..

மனம் அனலாக கொதிக்க தன் முன்னால் கோபம் தெறிக்க முறைத்து கொண்டிருக்கும் வர்ணிகாவை புரியாமல் பார்த்தான் நதின்."மீனு குட்டி என்னடா செல்லம் அதியசதில அதிசயமா மாமாவ தேடி நீ வந்துருக்க"

"வரவேண்டிய சூழ்நிலை வந்து தானே ஆக வேண்டும். என்ன நினைத்து கொண்டிருக்கிரீர் உங்கள்‌ மனதில்.உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து எனக்கும் முடிவெடுக்க யார் உரிமை கொடுத்தது. எனக்கு வேறு வாழ்க்கை ஏற்படுத்த அறிவுறுத்த தாங்கள் யார். ஏற்கனவே விவாகம் முடிந்தவள் நான்.அதரனின் மனைவிக்கு மணமகன் பார்க்கும் வேலையை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள். இல்லையேல்"விரல் நீட்டி அவனை எச்சரிக்கை செய்தவள் திரும்பி பாராமல் நடக்க அவளா வந்தா கத்துனா போய்ட்டே இருக்கா என்ன ஆச்சு இவளுக்கு திடிர்னு குழம்பி தவித்தான் நதின்.

இதனை மறைந்திருது பார்த்து கொண்டிருந்த வஜ்ரா வருணுக்கு ஒன்று மட்டும் விளங்கியது. வர்ணிகா என்றுமே அதரனின் காதலி என்பது.அதரனின் கண்களில் தூரத்தில் தன்னை மறைந்து பார்க்கும் நண்பனும் வஜ்ராவும் பட இது அவர்கள் வேலை என புரிந்து கொண்டான்.மனம் வர்ணிகா பேசிய பேச்சை அசை போட அவளது உரிமை பேச்சு அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது. கூடவே நிம்மதியும்.

தொடரும்.

அதரா - 26


"சுசு நீ இப்படி ஆடி அசைந்து வருவதற்குள் அங்கே விவாகம் நடந்தேறி விடுமடி சற்று சீக்கிரம் கிளம்பி வா"

"என்ன மிமி நான் அழகாக இருந்தால் உனக்கு தானே பெருமை. நம் குட்டி சாத்தான் உலகத்திலேயே மிக மிக அழகான பெண் குட்டி சாத்தான் நான்தானே.."

"லொக் லொக்"

"என்னாயிற்று மிமி..காய்ச்சலா"

"இல்லை சுசு என் நெஞ்சில் ஏதோ ஒன்று அடைத்துக்கொண்ட உணர்வு"

" ஐயோ அப்படி என்றால் உனக்கு நெஞ்சுவலியா.. இரு இப்பொழுது வருகிறேன்"சுசு எங்கேயும் வேகமாக ஓடி ஒரு மண் குடுவையில் எதையோ கலக்கி எடுத்து வந்தது. அதை எட்டிப் பார்த்த மிமி

" என்ன கண்றாவி இது பழுப்பு நிறத்தில் இருக்கிறது.. உவெக் உன் கையில் குடுவையை வைத்திருக்கும் போதே இந்த நாத்தம் நாறுகிறது அதை தயவு செய்து என் மூக்கின் அருகே கொண்டு வராதே"மிமி மூக்கை மூட

"இது காட்டேரியின் மலம்.காட்டேரி மலத்திற்கு நெஞ்சுவலியை குணமாக்கும் சக்தி உள்ளது என்பது உனக்குத் தெரியுமல்லவா"

" கண்றாவி கருமாந்திரம்..உனக்கு என்ன துணிவிருந்தால் என்னை காட்டேரியின் மலத்தை உண்ண கூறுவாய்.."

" நான் ஒன்றும் சும்மா இருக்கும் காட்டேரியின் மலத்தை தின்ன சொல்லவில்லையே..நெஞ்சு வலிக்கிறது என்று கூறினாய் என் கையில் வைத்திருக்கும் பானத்திற்கு உன் நெஞ்சு வலியை குணமாக்கும் சக்தி உள்ளது வேண்டுமென்றால் குடி இல்லை என்றால் விட்டுவிடு"

"என் கோபத்தைக் கிளராதே அந்த கருமத்தை இங்கிருந்து எடுத்துச் செல்.அடியே இன்னும் எவ்வளவு நேரம் நீ இப்படியே நிற்கப் போகிறாய் அங்கேயே வாழ ஆரம்பித்துவிடும்"

" ஐயோ இப்பொழுது இதை நான் என்ன செய்வது உனக்கு நெஞ்சு வலி என்று சும்மா இருந்த காட்டேரியிடம் உதவி கேட்டேன்.இப்பொழுது இதனை குடிக்காமல் வீணாக்கினால் அது கோபித்துக் கொள்ளும்..இப்பொழுது நான் என்ன செய்வது"

"ம்ம் தலையில் ஊற்றிக் கொள்.. இந்த கருமத்தை தூக்கி தூர எறிந்துவிட்டு சீக்கிரமாக வந்து சேரு.."மிமி நடந்து வாசலுக்கு செல்ல சுசு கையிலிருந்த குடுவையை தூக்கி எரிந்து விட்டு வாசலுக்கு ஓடியது.அவர்கள் விழா நடக்கும் இடத்திற்கு செல்லும் பொழுது வருண் வர்ண மோகினியின் விவாகம் இனிதே நடைபெற்று முடிந்து இருந்தது. மணமக்கள் கோலத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து இருக்க அவர்களை அதர லோக வாசிகளுடன் சேர்ந்து மாய உலகம் கடல் உலகம் குள்ளர் உலகம் இப்படி பல உலகங்களில் சேர்ந்த மக்கள் அனைவரும் வாழ்த்தி கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து உள்ளே நுழைந்தார்கள் குட்டிசாத்தான் இருவரும்.

"அடடா யார் வந்திருக்கிறது பார்த்தீர்களா மாமே..வரவேண்டும் வரவேண்டும் என்ன இவ்வளவு தாமதம்"வஜ்ரா தும்பிக்கையை ஆட்டி ஆட்டி வரவேற்க

" இவள் மண்டையில் இருக்கும் நான்கு முடிகளை சீவி சிங்காரிக்க தாமதமாகிவிட்டது.."என மிமியும் சுசுவும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு வந்து வருண் மோகினி இருவரிடமும் வாழ்த்துக் கூற

"இன்னா மிமி நீ எப்ப கல்யாண சோறு போட போற" வருணின் கேள்வியில் வெட்கமடைந்த சுசு மூடியில்லாத மொட்டை மண்டையை பரபரவென சொரிய

" அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் நண்பா..உங்களை எடுத்துக்கொள்ளுங்கள் அதரா உலகத்திற்கு வந்து மூன்றே நாட்களில் உங்கள் காதல் வெற்றி அடைந்து விட்டது.இதோ நான்காவது நாளில் திருமணம் முடிந்து விட்டது. ஆனால் என்னை எடுத்துக் கொள்ளுங்கள் எத்தனை ஆண்டுகள் என்று எனக்கே தெரியவில்லை. இப்பொழுது தான் இந்த அம்மாள் மனமிரங்கி என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கிறாள்.இனி இவள் எப்பொழுது மனமிரங்கி திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டுகிறாளோ அன்று விவாக சாப்பாடு உங்களுகாக தயாராக காத்திருக்கும்."

"ரொம்ப அலுத்துகாத நண்பா..உன் வேந்தன பாரு நூறு வருஷ லவ்வு அதுவே ஒன்னு சேராம ஊசலாடுது.அத எல்லாம் பாத்துக்குன்னு நம்ம மனச தேத்திக்குனும்"

"மச்சான் என்ன பத்தி தான் பெருமையா பேசுற போல. வந்தேன்னு வெச்சுக்கோயேன் சங்குலயே மிதிச்சிருவேன் மூடிட்டு நில்லு"

"ஆமாமா இது பெரிய தங்கமல ரகசியம்.உன் அரும பெரும இன்னாவோ இதுங்களுக்கு தெரியாத மாறியே சீன் போட்ற மச்சான்..எருமைக்கு இல்ல சொரண நண்பனுக்கு இல்ல கருணனு சொம்மாவாட்டிக்கா சொன்னாங்க பெருசுங்க"

"டேய் நானே என் மீனு குட்டி பாக்கலன்னு கடுப்புல சுத்திட்டு இருக்கேன். மவனே சொம்மா கலாய்சினு இருந்த நீ ஏரியா பொண்ணுங்க கூட அப்டி இப்டினு இருந்தத உன் பொண்டாட்டி கிட்ட சொல்லுவேன்"

"இதுக்கு பேரு இன்னா தெரியுமாடா வயித்தெரிச்சல் பொறாமை.நல்லவனா தானடா இருந்த எப்பத்துல இருந்து நாரதர் வேல பாக்க ஸ்ட்ராட் பண்ண..அங்க பாரு உன் மீனு குட்டி மின்னலா போது பின்னாடியே போடா"

"ஆமா மீனு எங்க போறா மச்சான் பாத்துக்கோ வரேன்"நதின் சென்றதும் மோகினி

"ஏரியா என்றால் என்ன வருணரே"

"ஏரியாவா அது தங்கிருக்குற இடம்"

"அங்கே நிறைய பெண்கள் உண்டோ.. அவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துக் கொள்வீர்கள்" மோகினி ஒரு மார்க்கமான லுக்குடன் கேட்க

 அடப்பாவி மச்சான் நதினு நாரதர் வேலைய பாத்துட்டு போயிட்டியேடா.. இவளுக்கு தான் நாம பேசுற பாஷை புரியாதே இது மட்டும் எங்கிருந்து புரிஞ்சிதோ தெரியலையே."இந்தா பாருமா மாங்கனி.. அவன் சொன்ன அப்படி இப்படி எப்டின்னா நான் பொண்ணுங்கள பாத்தா பாக்காத மாதிரி கண்ண மூடிகிட்டு போயிருவேன்.பொம்பள வாடயே நமக்கு செட்டாகாது..அந்த மாதிரி உன்கிட்ட தள்ளி போ வேணா அப்படின்னு சொல்ல வரான்."

" அப்படியா அவர் கூறினார். ஆனால் பெண்கள் விஷயத்தில் தாங்கள் மிகவும் மோசமானவர் என்று தாங்களே என்னிடம் கூறினீர்களே.. அது உண்மை இல்லையா"

" இந்த கருமம் வேறயா..இதை எப்ப சொன்னேன்னு எனக்கே தெரியலயே.. இந்த பாருமா மாங்கனி இன்னா சொம்மா நொய்யு நொய்யுங்குற.. நா ஏதோ ஒண்டி கட்டயா அப்டி இப்டினு இருந்தேன். அது அங்க.இங்க நீ கெடச்ச. இனிமே மாமா உன்னிய தவர வேற ஒருத்திய நிமிந்து கூட பாக்க மாட்டேன் செல்லம் ஓகேயா" அவன் கூறியதை மோகினி அகமகிழ்ந்து நிற்க

"மாமே சற்று நேரத்திற்கு முன்பு அந்த குள்ளர் இளவரசியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தீரே அதை எந்த கணக்கில் சேர்ப்பது"

"உன் முப்பாட்டன் கணக்குல சேத்து வையு..இங்க பாரு மாமே இந்த மேட்டரு நமக்குள்ளயே இருக்கனும். வெளிய லீக் ஆனுச்சு பிதுக்கியே சாணிய வெளியாகிருவேன் பாத்துக்க"

" வெளியே சொல்லக் கூடாது என்றால் எனக்கும் சீக்கிரமாக ஒரு ஜோடியை பார்த்து விவாகம் முடித்து வைக்க வேண்டும்"

" மனுஷனுக்கு பொண்ணு பாக்கலாம் யானைகுல்லாம் உன்ன பாக்கணும்னு என் தலையில எழுதி இருக்கு.. பாக்குறேன் பாத்து தொலையுறேன் இப்ப நீ கொஞ்சம் மூடிக்கிட்டு நில்லு"வருண் மோகினியின் விவாகம் விமர்சையாக முடிந்தது. விவாகத்திற்கு முன்பே மாய அரசர் தனது மருமகனான வருணை மாய உலகத்தின் புதிய அரசனாக நியமித்தார். வருண் முதலில் மறுப்பு தெரிவித்தான்.ஆனால் நதின் அவனை ஏற்றுக் கொள்ளச் சொல்ல நண்பனின் பேச்சை தட்ட முடியாத மீனவன் மாய உலகத்தின் அரசனானான்.

 அதன் பின்னே தன் மகளை அவனுக்கு விவாகம் செய்து வைத்தார் மோகினியின் தந்தை.விவாகம் கோலாகலமாக ஒரு பக்கம் நடந்தேறி முடிய வருணிர்க்கு அனைத்துமாக நதின் நின்று சடங்குகள் செய்ய மோகினி தனக்கு அனைத்து சடங்குகளும் வர்ணிகா செய்ய வேண்டும் என விரும்பினாள். வர்ணிகாவின் காதலையும் அவளின் சாபத்தையும் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த மோகினி அவள் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தாள்.

 எப்படி ஒரு பெண்ணால் ஒருவனை இந்த அளவு நேசிக்க முடியும் என்பது அவளுக்கு இன்னும் புரியாத புதிரே. அவனை எவ்வளவு நேசித்திருந்தால் இன்று நூறு ஆண்டுகளாக கல்லாக சமைந்து இருப்பாள் என்று எப்பொழுதுமே வர்ணிகாவின் சிலை முன்பு நின்று யோசனை செய்வாள் மோகினி. தனது அரண்மனையில் சாப விமோசனம் பெற்ற வர்ணிகாவை கண்டதும் மோகினிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. தாய் இல்லாத பெண் அவள்.ஏனோ தெரியவில்லை அவளுக்கு நெருங்கிய சிநேகதிகள் இருந்ததில்லை.வர்ணிகாவைப் பார்த்த உடனே மோகினிக்கு மிகவும் பிடித்துவிட வர்ணிகா மோகினியின் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டாள்.

நதின் மேல் உள்ள கோபத்தில் சூழ்நிலை கைதியாக அந்த மாளிகையில் உலாவிக் கொண்டிருந்த வர்ணிகாவிற்கும் மோகினியைக் கண்ட உடன் ஏனோ பிடித்துவிட்டது.அவளின் மருண்ட பார்வையோ அல்ல கனிவு ததும்பும் முகமோ அல்ல வர்ணிக்கவை கண்டதும் அணைத்துக்கொள்ள பரபரத்து நீண்ட கரங்களோ தெரியவில்லை ஏதோ ஒன்று மோகினியின் பால் ஈர்க்க கண்ட உடனே அவள் மீது அளவில்லாத நேசம் கொண்டால் வர்ணிகா.நதின் வருண் பந்தம் ஜென்மங்கள் என்றால் பார்த்த கணத்தில் இருந்து நேசம் கொண்ட பெண்களின் பந்தமும் நெருங்கிய உறவின் பாலமாக அமைந்தது.

 மோகினி கேட்டுக் கொண்டதற்காக வர்ணிகா மணப்பெண் தோழியாக நிற்க நதின் தான் வேந்தனாக இருந்தும் தனது தோழனுக்கு மாப்பிள்ளை தோழனாக நின்றான். அலட்டல் இல்லாமல் வருணிடம் பேசி சிரித்துக் கொண்டு இருந்தவனை மோகினியின் அருகிலிருந்து ஓரக்கண்ணால் பார்த்தாள் வர்ணிகா. அன்றும் இன்றும் அவனில் எந்த மாற்றமும் இல்லை. அதே கம்பீரம் அதே திமிர் பார்வை அதே வீரம் அதே பலம் அதே பிடிவாதம் அதே முரட்டு சுபாவம் ஆனால் மனம் மட்டும் கடவுளை கொள்ள ஆசைப்படும் பிள்ளை மனம்.

 நண்பனுடன் பேசிக்கொண்டு இருந்த அவன் சட்டென்று ஏதோ தோன்ற வர்ணிகா பின் பக்கம் பார்வையை செலுத்த ஒரே ஒரு நொடி இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சங்கமித்தது.அந்தப்பார்வை சொன்ன சேதி என்ன?பார்வையால் பேச முடியுமா?பார்வைக்கு மொழி தெரியுமா?பாஷைகள் புரியுமா? புரிந்ததே அன்பு கொண்ட இரு நெஞ்சங்களின் பார்வை ஆயிரம் மொழி பேசாத மௌன பாஷையாக அங்கே தங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை விழிகளின் மூலம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

இந்த நூறாண்டுகள் இடையில் நடந்த எதுவும் அந்த நொடி இருவரின் மனதிலும் இல்லை.சலனமற்று ஜாடை பார்வை மட்டுமே. அதற்குள் மோகினி எதையோ கேட்க பார்வை பரிமாற்றம் தட்டுப்பட்டது. "இன்னா பார்வடா அது ச்சே.. ஏன் என் மீனு குட்டி இப்டி பாத்தா.. இந்த லுக்கு நூறு வருஷத்துக்கு முன்னாடி அவளோட காதல சொன்னதுக்கப்புறம் பாத்த அதே லுக்கு.அத ஏன் இப்ப பாக்குறா. ஒருவேள என்ன மன்னிச்சிட்டாளா.. இதுவும் இன்னொரு தடவ ரொமான்டிக்கான ஒரு லுக்கு விட்டு பார்ப்போம்.." மூடிக்கொண்டு சும்மா இராமல் வர்ணிகாவை பார்த்து கண்ணடிக்க அவள் கண்களில் தீ பறக்க அவனை முறைத்து பார்த்தாள்.அதானே இவன் நம்மல பாத்துட்டாளும்..

விவாக கோலகலத்தில் குதுகலமாக அனைவரும் இருக்க வர்ணிகாவிற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனக்குன் அதரனுக்கும் நடந்த விவாகம் நியாபகம் வந்தது. அவளுக்கு அந்த நினைவுகளை அசைபோட தனிமை தேவையாக உள்ளதால் மோகினியிடம் சொல்லிவிட்டு தனிமையான இடம் தேடி சென்றாள். அவள் போவதை கண்டு நதினும் அவளின் பின்னால் சென்றான்.வர்ணிகா காலார நடந்து கானகத்தின் ஒரு அமைதியான இடத்திற்கு வந்து நின்றாள். அவள் கால் புல் தரையில் படும் போது அதிலிருந்து நீல நிற துகள்கள் வெளிப்பட ஆசையாக அதனை கையில் தொட்டுப் பார்த்தாள். மனம் பழைய நினைவுகளில் சிக்குப் பட்டு தவித்தது.

 அவள் அவனை மன்னித்து விட்டாள். அன்று அவன் செய்த காரியத்திற்கு அவன் பக்கம் நின்று யோசித்து பார்த்தால் அது மிகுந்த சுயநலம்தான் ஆனால் அந்த சுயநலம் எதனால் உண்டாயிற்று. அவள் மேல் அவன் கொண்ட அளவில்லாத நேசத்தினால் உண்டான சுயநலம் அது. நதியினை மன்னிக்க முடிந்த வர்ணிகாவால் அவன் செய்த காரியத்தை இன்னும் எதையும் மறக்கவில்லை. அன்று அவளின் கதறல்கள் இப்பொழுதும் அவளது செவிகளில் ஒலித்தது..

 அன்று அவளின் கால்கள் மறைந்து வாலாக வேண்டும் என சாபம் கொடுத்தவன் சற்று நேரம் அவளை தரையில் விட்டிருந்தால் மூச்சுக்கு ஏங்கியே மாண்டு விட்டிருப்பாள். சந்தோஷமாக இறப்பின் தருவாயிலும் தன்னுடன் விண்ணுலகம் நோக்கி பயணித்து இருப்பாள். அவன் சாபமிட்டதையோ அவள் வாழாமல் போனதையும் அந்த நொடி அவள் யோசிக்கவே இல்லை. அவள் மனம் முழுவதும் தன்னவன் இன்னும் சில நிமிடங்களில் தன்னை விட்டு நிரந்தரமாக பிரிய போகிறான் அந்த பிரிவிலும் தான் அவனுடன் இருக்க வேண்டும் என அந்த பேதை உள்ளம் என்னமாக தவித்தது.

 அந்த தவிப்பை கொஞ்சமும் கருதாமல் சுயநலமாக அவளைக் அல்லாத சமய வைத்தான் அதரன். காரணம் அவன் கண்டு மயங்கி பித்தாகி காதல் கொண்டு மணந்த அதை வர்ணிக்கா தான் வேண்டும் என இந்த பாதகச் செயலைச் செய்தான். செய்துவிட்டு அவன் சென்று விட்டான்.அந்த செயலின் தாக்கம் முழுவதையும் நூறாண்டுகள் அனுபவித்தவள் அவள்தானே. தன் உறவுகள் அனைத்தையும் இழந்து பசி பட்டினி தூக்கம் துறந்து கல்லாக இருந்த வேளையிலும் கண் நீர் வற்றாமல் நொடிப்பொழுதும் அவனையே மனதில் நிறுத்தி எத்தனை தூரம் துன்பம் பட்டாள்.. இதற்கெல்லாம் அலுங்காமல் குலுங்காமல் தலுகாக ஒரு மன்னிப்பைக் கேட்டு விட்டால் போதுமா.. இப்பொழுது கூட அவன் அவளுக்காக வரவில்லையே. அன்றும் இன்றும் என்றுமே அவன் வேந்தன் அதற்குப் பிறகுதான் அனைத்துமே அவனுக்கு. தன் கடமையான உயிர் தியாகம் செய்யவே வந்துள்ளான்.

 சொன்ன சொல் மாறாதவன் தன் கடமையை செய்து விட்டு சென்று விடுவான் மீண்டும்.அப்பொழுது அவளின் நிலை என்ன திரும்பவும் கற்சிலை வாசமா..காரிருள் வாசமா. கணவனைப் பிரிந்த இந்த கண்மணியால் வாழ முடியுமா. இப்படித்தான் தனக்குள் அவள் மறுகி கொண்டு நிற்கும் வேலை மீனம்மா என்ற ஒரு குரல் கேட்டது.

 திரும்பி பார்க்க வேண்டிய அவசியமே இல்லை அவளை இவ்வளவு உரிமையாக இந்த பெயர் சொல்லி அழைக்கும் ஒரே ஒருவன் அவன் மட்டுமே தான்..அவள் திரும்ப மாட்டாள் என் தெரிந்தவன்"மீனு குட்டி ஏன்டா பாதில வந்துட்ட.. தல கில வலிக்குதா"

"இதுவரை இல்லை தலைவலியே நேரில் வந்து தலை வலியா என கேக்கும் போது லேசாக வலிக்க செய்கிறது"

"நோவும்டி நோவும் உனக்கு இதுவும் நோவும் இதுக்கு மேலயும் நோவும்.. அப்டியே வெச்சேன்னா தெரியும்.."

"என்ன பாஷை இதெல்லம்.முன்னே எவ்வளவு அழகாக பேசுவீர்கள் இப்பொழுது நீங்கள் பேசுவதில் பாதி புரியவில்லை"

"ஆமா செந்தமிழ்ல பேசுனாலும் செருப்படி சென்னை தமிழ்ல பேசுனாலும் செருப்படி.. இதுல எதுல பேசுனா இன்னா..அத்த வுடு எதுக்குடி ஒண்டியா இங்க வந்த"

"உங்களிடம் நான் ஏன் கூற வேண்டும்"

"ஏன்னா நா உன் புருஷன்டி.. எங்கையில சொல்லாம வேற யாரான்ட சொல்லுவ.."

"ம்க்கும் பெரிய புருஷன் பொல்லாத புருஷன் கட்டியவளை கல்லாகிய புருஷன்"

"இத பாரு மீனம்மா நடந்தது நடந்துருச்சு.அதுக்கு காரணம் சுயநலம் தான். எத்தன பிறவி எடுத்தாலும் என்ன மொத மொத பாத்தியே ஒரு பார்வ அதே பார்வய உன்னால பாக்க முடியுமாடி..அப்டி முடியும்னு சொல்லிரு பாப்போம். பாக்குற பார்வை எப்பயும் ஒன்னு போல தான் இருக்கும்.ஆனா அந்த மொத பார்வ.. என்னால எப்பவும் மறக்க முடியாதுடி.. அந்த பார்வ பாத்த கண்ணு என்ன மயக்குன உதடு நா தொட்டா செவந்த உடம்பு என்ன அடியோட கூறு போட்ட அதே வர்ணிகா வேணும்னு தான் அப்டி பண்ணேன் இதுக்கும் மேல என்னால விளக்கம் சொல்ல முடியாது. சொல்லவும் நேரம் இல்ல..நாளைக்கு உயிர் தியாகம் பண்ற நாளு வர்ணிகா"

சாபமில்லாமல் மீண்டும் கல்லாகி போனாள் வர்ணிகா.இப்படி மறந்தால் அவள் வாழ்வை அடியோடு சீர்க்குழைத்த நாளை எப்படி மறக்க முடிந்தது.அன்று அவனுடன் வாழவில்லை இன்றும் வாழ்வை தொடங்கவில்லை.அவனை தடுக்க இயலுமா. தடுத்தால் கேட்பவன் அல்லவே அவன்.இப்பொழுது என்ன செய்வது. நூறாண்டுகள் அவள் இருந்த தவம் என்னாகும்..

தொடரும்.

அதரா - 27



"முடியாது மச்சி நீ இன்னா சொல்லிகினாலும் என்னால இத ஏத்துக்க முடியாது..இன்னா வெளாடுறியா நீயு.. நாள பின்ன உங்கம்மா வந்து எங்கடா என் புள்ளன்னு கேட்டா இன்னாடா பதில் சொல்லிக்குவேன்.. அத்த வுடு.. நீ இல்லாம நா இன்னா பண்ணுவேன்.. நதினு உயிர் தியாகமும் வேணா ஒரு தயிர் தியாகமும் வேணா..மூடிட்டு வாடா நம்ம ஒலகத்துக்கு போயிரலாம்"வருண் நதினிடம் மன்றாடி கொண்டிருந்தான்.

 ரொம்ப நேரமாகவே அவன் அதை தான் செய்து கொண்டிருந்தான். மன்றாடி கெஞ்சி கூத்தாடி அழுது புரண்டு கோபம் காட்டி அவன் வாழ்ந்த வாழ்வை அவனுக்கு நினைவூட்டி சொந்தங்களின் அருமையை எடுத்துச் சொல்லி காதலியின் கண்ணீரை சுட்டிக்காட்டி அவனில்லாமல் நண்பன் அவன் படும் துயரங்களை மன வேதனையோடு சொல்லாய் வடித்து புதுமாப்பிள்ளையவன் மணக்கோலம் கலைந்து நண்பனின் பிணக் கோலம் காண சகியாமல் கதறிக் கொண்டிருந்தான்.

 வர்ணிகா அறையை விட்டு வெளியே வரவே இல்லை.அவள் மனம் முழுவதும் ரணமாகி கிடந்தது. அவளுக்கு மடி கொடுத்து தன்னால் முயன்ற ஆறுதலை முடி கோதலின் வழியாக சொல்லிக்கொண்டிருந்தாள் மோகினி. அவளால் மட்டும் வேறு என்ன செய்திட முடியும்.ஒரு பெண்ணாக வர்ணிகா மனம் படும் பாடு அவள் அறியாதது அல்லவே.நதின் நாளை உயிர் தியாக நாள் என்று சொல்லிச் சென்றது முதல் இந்த நொடி வரை அவள் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசினால் அல்ல. திக்பிரமை பிடித்தவள் போல் இருந்தாள்.

 விழா முடிந்து நண்பன் எங்கே என்று தேடி சென்ற வருண் அவன் தனியாக அமர்ந்திருந்ததை கண்டு அவன் அருகே சென்று தோள் தொட"இன்னா மச்சி பொண்டாட்டி கூட இல்லாம இங்கு வந்து நிற்கிற..உள்ள போடா அந்த புள்ள உன்ன பாத்து கிட்டு இருக்கும்"

"அவ பாக்குறது இருக்கட்டும்.. கடல் கண்ணி கிட்ட நீ இன்னா சொன்ன எதுக்கு அந்த பொண்ணு இடி விழுந்த மாதிரி உள்ளபோது. நானும் இந்தாம்மா ஏய் அப்படின்னு கூப்டுறேன் திரும்பிக்கூட பாக்காம நேரா போய் படார்னு கதவ அடச்சிருச்சு. ஏன்டா உனக்கு எல்லாம் அறிவே இல்லயா எம்மா தடவ சொல்லிக்கிறது அந்த பொண்ணுகிட்ட பக்குவமா பதமாக பேசி வையுன்னு.. இப்படி சொம்மா அந்த பிள்ளய நோண்டிக் கிட்டே இருந்தா அது எப்படிடா உன்ன ஏத்துக்கும்"

" இனி அவர் ஏற்றுக் கொண்டு என்ன செய்யப் போகிறார் மாமே.. "

" இன்னா மாமா இப்படி கேட்டுபுட்ட..ஏத்துகிட்டு வாழ வேண்டிதான்"

"வாழ்க்கயா அட விஷயம் புரியாமல் உளறிக் கொண்டு இருக்கிறீர்கள் நீங்கள்.. விவாக நேரத்தில் வீண் சர்ச்சை என்பதால் தான் நான் எதையும் வெளிக்காட்டாமல் இருந்தேன்.உங்களுக்கு ஒன்று தெரியுமா நாளை எனது வேந்தன் உங்களின் நண்பன் உயிரோடு இருக்கப் போவதில்லை"

"ஹேய் நீ இன்னா சொன்ன"

"ஆம் வேந்தன் அதர நதின் நாளை உயிரோடு இருக்கப் போவதில்லை. ஏனெனில் எந்த கடமைக்காக அவர் நூறாண்டு காலம் வரம் கேட்டு பிறந்தாரோ அந்த காரணம் அந்தக் கடமை நாளை முடிவடையப் போகிறது. நாளை உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நாள்" மிகுந்த வருத்தத்துடன் வஜ்ரா இந்த விஷயத்தை அவனிடம் கூற விஷயத்தை கேள்விப்பட்ட வருண் துடித்து போனான்.நதின் வாயால் கேட்டபோது இவ்வளவு துடிப்பு அவனிடம் இல்லை அவன் தன்னிடம் விளையாடுவதாக எண்ணினான். நூறில் ஒரு வாய்ப்பாக நண்பன் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தன் உயிரை கொடுத்தாவது அவன் உயிரை காக்க நினைத்தான். ஆனால் இப்பொழுது அந்த முடிவில் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. நதினின் உயிருக்கு பதிலாக அவன் உயிரை கொடுக்க வருண் தயாராக இருக்கிறான். ஆனால் என்ன பலன் அதனால்..

 தன்னால் முடிந்த மட்டும் உயிர் தியாகத்தை தியாகம் செய்யுமாறு வருண் கெஞ்சி கொண்டிருந்தான். அவனுக்கு நண்பனின் உயிரை விடவும் வர்ணிகாவின் வாழ்க்கை பெரிதாக இருந்தது. சுயநலமாக முடிவெடுத்தது தன் நண்பன் ஆனால் அவன் மேல் கொண்ட காதலுக்காக அந்த பெண் இன்னும் எவ்வளவு வேதனைகளை தான் அனுபவிப்பாள். அவள் நெஞ்சம் இந்த செய்தி கேட்டு என்ன பாடுபட்டிருக்கும். இதற்கு பதிலாக அவள் கற்சிலையாக காலம் கடத்தி இருக்கலாமே.கற்சிலைக்கு உயிர் கொடுத்து காரிகை அவளை தினம் தினம் உயிரோடு வதைத்துக் கொண்டிருக்கிறான் அவனின் நண்பன்.

வருண் எவ்வளவு மன்றாடியும் நதின் அவனது கடமையில் இருந்து துளியும் விலகவில்லை."மச்சி நீ என்ன வேணா சொல்லிக்கோ எனக்கு இத பத்தி எல்லாம் கவல கெடையாது. சுயநலமான முடிவெடுத்தேன் அந்த முடிவால் யாருமே சந்தோஷமா இல்ல. ஒத்துக்கறேன்.அதுக்குதான் வர்ணிகாவுக்கு விடுதல கொடுத்தேன். இனிமேலாச்சும் அவ ஆசைப்பட்ட வாழ்க்கய அவ வாழட்டும். மச்சி ஒரு நண்பனா நீ எனக்கு எவ்வளவு செஞ்சிருக்க இந்த ஜென்மத்துல மட்டுமில்ல போன ஜென்மத்துல என்னோட உறவா இருந்து என் கூட கடைசி வரைக்கும் பயணிச்ச. இதுவரைக்கும் நீ மீனவனாக இருந்திருக்கலாம் நதினோட ப்ரண்டா இருந்திருக்கலாம். ஆனா இப்போ நீயும் ஒரு அரசன். ஒரு அரசனா இருந்து நீ யோசிச்சு பாரு உன்னோட நாடும் நாட்டு மக்களும் உனக்கு முக்கியமா இல்ல உன் பொண்டாட்டியும் உன் பொண்டாட்டியோட சந்தோஷமும் உனக்கு முக்கியமா"வருணிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் நண்பனின் முகம் பார்த்தான் பதிலிற்காக.

நதினே கூறினான்" பதில் உன் மனசுக்கே தெரியும். நம்மள நம்பி நாம பார்த்துபோம்னு ஒரு தைரியத்துல இத்தன கோடி பேரு நமக்கு கீழே இருக்காங்க. அத்தன கோடி பேரயும் விட்டுட்டு நாம பொண்டாட்டி புள்ளைங்க குடும்பம்னு சுயநலமா எப்படி முடிவெடுக்கிறது. ஒரு வேந்தனா என்னோட உலகத்து மக்கள காப்பாத்துறது என்னோட கடம. நான் உயிர் தியாகம் செஞ்சாதான் பொக்கிஷத்துக்கு பலம் வரும். இல்லனா முன்ன நடந்த மாதிரி ஏதாச்சும் வேற்று கிரகவாசிங்க நம்ம உலகத்துக்கு வந்து பொக்கிஷத்த திருடாதான் பாப்பாங்க திருடிட்டும் போயிருவாங்க. நீ என்ன உன்னோட நண்பனா பாக்குற வர்ணிகாவோட புருஷனா பாக்குற.ப்ளீஸ் மச்சான் என்ன ஒரு வேந்தனா பாரு..நா திரும்பி வருவேனு இவ்வளவு நம்பிக்கையா இருந்தாங்க இந்த மக்கள்.இவங்க நம்பிக்கய குழைச்சுட்டு தான் நா வாழனுமா சொல்லுடா"

" என்னத்த சொல்ல சொல்ற. சரி நீ சொல்றது எல்லாமே வாஸ்தவம்தான். என்ன வுடு உங்க அம்மாவ வுடு இந்த அதரா லோகத்து மக்கள வுடு. அந்த பொண்ண பார்க்க உனக்கு பாவமாக இல்லயா.. அவளுக்கு இன்னா பதில் சொல்லப் போற."வருண் கெஞ்சலை விடுத்து கோபத்தில் கொதித்தான்.

"பதில் அப்படின்னா என்ன மச்சி. ஒரு கேள்விக்கு கண்டிப்பாக பதில் இருந்தே ஆவணும்ன்னு ஒன்னும் அவசியம் இல்லயே. விடயில்லாத கேள்வி நெறைய இருக்கு தெரியுமா. அந்த மாதிரி ஒரு கேள்வியா எங்க வாழ்க்க இருந்துட்டு போகட்டும். கடவுள் விட்ட வழி. காதலா கடமயானு வரும்போது ஒரு வேந்தனா என் கடம எனக்கு முக்கியம்..ஆனா என்னோட காதல் ப்ச்.. நான் பாவி மச்சான் ரொம்ப பாவி சரியான பீட புடிச்சவன்.. நல்ல குடும்பம் சுத்தி எல்லாருமே நல்லவங்க நல்ல ஃப்ரண்ட்டு கல்லா மாத்துன என்னயவே காதலிக்கிற என்னோட பொண்டாட்டி என்மேல் அளவுகடந்த நம்பிக்க வெச்சிருக்கிற அதர உலகத்தோட மக்கள் எல்லோரும் இருந்தும் அவங்க கூட வாழ முடியாத ஒரு துர்பாக்கிய சாலி நா.. மச்சி இது பத்தி நா எதுவுமே பேச ஆசைப்படல. எனக்கு தனியா இருக்கனும். நீ போ உன் பொண்டாட்டி கூட இரு.. வர்ணிகாவ தனியா விட சொல்லு"

"டேய் நதினு.. நீ வேந்தனா இருந்துக்கோ இல்ல எந்த புடிங்கியா வேணும்னாலும் இருந்துக்கோ அத பத்தி எனக்கு கத இல்ல.. ஆனா உனக்கு மட்டும் சாவுனு வந்தா இந்த அதர ஒலகத்த படைச்ச கடவுளையே சண்டக்கு கூப்பிடுவேன்.கண்டிப்பா கடவுள் என்கிட்ட தோத்து போயிடுவான். ஏன்னா நட்போட ஆழம் என்னானு அவனுக்கு தெரியாது. நல்ல நண்பனு அவனுக்கு யாரும் கெடையாது. அந்த வகையில கடவுள விட என்கிட்ட எக்ஸ்ட்ரா பலம் இருக்கும். இந்த ஒலகத்த படைச்ச கடவுள தோற்கடுச்சிட்டு உன்ன உசுரோட கொண்டு வருவேன்"நதின் பாய்ந்து வருணை கட்டி கொண்டான்.

மறுநாள் உயிர் தியாக நாளென்று அதர லோகம் முழுவதும் அறிவிக்கப்பட வருண் கனத்த மனதோடு உண்ணாமல் உறங்க செல்ல மோகினி வர்ணிகாவின் மேல் பரிதாபம் கொண்டு அவளை ஆறுதல் படுத்தி கொண்டிருந்தாள். நதின் அந்த அறைக்குள் செல்ல மோகினி மட்டும் நிமிர்ந்து அவனை பார்த்தாள். வருணிற்கு புரியாத ஒன்று அவளுக்கு புரிந்தது. அவளும் அரச குடும்பத்தில் பிறந்தவள்.அரசப் பணிகளைப் பற்றி நன்கறிந்தவள். அவளிடமே யாராவது குடும்பமா கடமையா என்று கேட்டால் அவள் கண்டிப்பாக கடமை என்றுதான் சொல்லுவாள். அப்படியிருக்க அந்த லோகத்தின் வேந்தன் அவன் கடமையை செய்ய தயாராக இருக்கும் பட்சத்தில் அவனை உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லி தடுக்க பார்ப்பது முட்டாள்தனம். மாய உலகத்தின் இளவரசி இப்பொழுது அரசியாக மாறியவளுக்கு கடமை முதன்மையாக இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணாக வர்ணிகாவின் நிலை அவளை நிலை தடுமாற செய்தது.

நதின் அவளை பார்த்து"மோகினி வருண் ரூமுக்கு போய்டான் சாப்பிடாம. நீ இன்னா பண்ற இங்க சாப்பாடு கொடுத்து அனுப்பிட்டு அவனயும் சாப்ட வை. அப்டியே கடமைன்னா இன்னானு அவனுக்கு சொல்லு போம்மா"அவள் அதராவை கண்டதில்லை. நூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவனை அவள் எப்படி காண முடியும். ஆனால் நிறைய கேள்விப்பட்டிருக்கிறாள். இதுவரை இருந்த அதராகளில் மேன்மையானவன் திறமையானவன் என அவன் புகழ் பாடாதவர்களே இல்லை.

 அவனை முதன்முதலில் அன்று கடற்கரையில்தான் கண்டாள். வருணிடம் எதையோ பேசிக் கொண்டிருந்தான். குரலில் அவ்வளவு கம்பீரம் ஒரு ஆழ்ந்த அமர்ந்த குரல் அவனது.என்ன ஒரு ஆளுமையான குரல் என அன்று எண்ணினாள். ஆனால் அந்த குரல் இன்று வேறாக ஒலித்தது. ஓய்ந்து கலையிலந்து இது தான் கடைசி என்பது போல சோர்ந்து தெரிந்தது. அவனிடம் எதையும் பேசாமல் ஒரு சிறு தலைய அசைவுடன் அந்த அறையை விட்டு சென்றாள்.

வர்ணிகா நிமிரவே இல்லை. அவன் குரல் அவளைத் தீண்டும் முன் அவன் இங்கே தான் வந்துகொண்டு இருக்கிறான் என்பதை அவள் அறிந்திருந்தாள்.அவனின் பாத ஓசைகளை கூட லட்சம் பேர் இருந்தாலும் அவளால் சரியாக கண்டுபிடிக்க முடியும். அப்படியிருக்க இப்போது முடியாதா என்ன.. இதோ அவன் என்ன சொல்ல போகிறான். தன்னை நியாயப்படுத்தி என் வாழ்க்கையை விடுதலை ஆக்கி விட்டேன் என்று கூற போகிறான். இப்படி அவள் நினைத்திருக்க அவன் ஆடாமல் அசையாமல் அவளை பார்த்து கொண்டு நின்றான். பணிப்பெண் ஒருத்தி வந்து உணவை வைத்துவிட்டு சென்றாள்.

 உணவுத் தட்டுடன் வர்ணிகாவை நோக்கி நடந்தவன் அவளை பிடித்து இழுத்து அமர செய்ய அவளோ பிடிவாதமாக அவனிடமிருந்து திமிறினாள்.ஒரே கையில் அவளை அனாசயமாக தூக்கி நிறுத்தி தன்னை காண வைத்தவன்"கடைசியா உன்கூட என் நினைவுகள் இருக்குற நேரம் இதான்..சாக போறவனோட கடைசி ஆச நிறைவேத்த மாட்டியா மீனம்மா"ஆழ்ந்த குரல் அவள் செவியை தாக்கவில்லை செயல்பட்டு கொண்டிருந்த இதயத்தை தாக்கியது.

மறுப்பு சொல்ல முடியாமல் விழிகள் அவன் முகத்தில் பதித்து கொண்டன. வாயும் அவள் வசமிளந்து அவன் உணவை அள்ளி கொடுக்க தானாக திறந்து வாங்கி கொண்டது. அவளை அமர வைத்து அவன் நின்று கொண்டே உணவூட்ட அவனின் விழிகள் அவள் தொண்டை குழிமேல் பதிந்து மீண்டது. அவள் உணவை விழுங்க இவன் ஊட்ட காரதில் அவள் இதழ்கள் சுருங்கினால் அவள் முகத்தை பார்த்து கொண்டிருந்தவன் உடனே உணவிலிருந்த காரப்பொருட்களை எடுத்து ஒதுக்கி அவளுக்கு ஊட்ட சிறு செயலே என்றாலும் நெடு நாளைக்கு பிறகு வர்ணிகாவிற்கு அன்னையின் நியாபகம் வந்தது.

அவனும் இப்பொழுது அன்னையாக மாறி தான் நிற்கிறான்.கண்டவுடன் அவளை காதலித்து கவர்ந்து சென்று கைபிடித்தும் என்ன வாழ்ந்து விட்டான் அவன்..ஈறுடல் ஓருயிறாய் கலக்கும் கடைசி நொடியில் கூட கடமைக்காக தன்னை விலகி சென்றானே. அவனுக்காக அவன் வாழவே இல்லையே. அவளை கல்லாகி அவன் மட்டும் நிம்மதியாகவா இருந்தான்.ஒரு மானிட பிறவி முடிந்து நதினாக பிறந்து அந்த உலக வாழ்க்கையை ராஜா போல் ஜம்மென்று அனுபவிக்காமல் சரியான நேரத்தில் இங்கே வந்து விட்டானே.வந்ததும் இல்லாமல் முதல் வேளையாக அவளுக்கும் விடுதலை கொடுத்து அவள் பின்னால் அலைந்து அவளிடம் மானங்கெட்டு அவள் எவ்வளவு கேவலப்படுத்தினாலும் அவள் பின்னால் வால் பிடித்து இதோ நாளை இறக்க போகிறான். அவனின் கடைசி ஆசை அவளுடன் இருக்க வேண்டுமாம். அப்படி என்ன காதல் என் மீது. பித்து பிடித்து சித்தம் முழுவதும் நிறையும் வண்ணம் என்னிடம் எதை கண்டு கிறங்கி நிற்கிறான் பாவி.

அவன் அவளுக்கு உணவூட்டி முடித்து அவள் உண்ட எச்சில் தட்டில் தனக்கும் உணவு வைத்து நின்று கொண்டே லபக் லபக்கென்று இரண்டு வாய் அள்ளிப்போட்டு கொண்டான். இதையெல்லாம் அவள் பார்வையில் படுகிறது. மனதோ அவனை பற்றி அசைப்போடுகிறது.உண்டு முடித்தவன் எங்கேயோ செல்கிறான் சிறிது நேரம் கழித்து வருகிறான் அவன் கையில் எதையோ எடுத்து வருகிறான் என்ன அது.

அது ஒரு மோதிரம். அவள் முன் மண்டியிட்டு அந்த மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தவன்"மீனம்மா ரொம்ப நன்றிடா.இந்த ஜென்மத்துல உன்கூட வாழ முடியல. அதுக்குன்னு நா கவலப்பட மாட்டேன் ஏன்னா எனக்கும் சேத்து நீ என்ன லவ் பண்ணிட்ட.உன்ன ரொம்ப படுத்திட்டேன்ல. ஆங் எதுக்கு நன்றி சொன்னேன் தெரியுமா. என் கையாள சாப்டதுக்கு.. மீனம்மா இத பாத்தியா இந்த மோதிரம் கள்ளுக்குள்ள இருக்குறது இன்னா தெரியுமா."அவள் மோதிரத்தை பார்த்தாள். கண்ணாடி கல்லில் சிவந்த திரவம் ஒன்று ஓடியது.

"இந்த கல்லுக்குள்ள இருக்குறது என் ரத்தம்"அவள் விசுக்கென்று நிமிர்ந்து அவனை பார்க்க"ஆமாடி இது என் ரத்தம்.இந்த அதரா லோக்கத்துல நீ எங்க வேணும்னாலும் போலாம் வரலாம். இன்னா உருவம் வேணும்னாலும் எடுக்கலாம். எப்படி வேணும்னாலும் வாழலாம். எவனும் ஒன்னும் சொல்ல முடியாது.இந்த மோதிரம் உன்கிட்ட இருக்குற வரை நீ மஹா ராணி. உன் வாழ்க்கைய உன் ஆசப்படி அமைச்சிக்கோ.. இந்த ராத்திரி மட்டும் தான் உன்கூட இருக்க முடியும். உன் கைய புடிச்சிகிட்டே தூங்கட்டுமா மீனம்மா"

கண்களில் சிறுகுழந்தையின் எதிர்பார்போடு அவளிடம் வேண்டுதல் வைத்தான் வேந்தன். தொண்டை அடைக்க அவள் தலையாட்ட அவள் கரத்தை தன் கரத்திற்குள் வைத்து கண்மூடி சிறிது நேரத்தில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றான். வர்ணிகா அவனை பார்த்து கொண்டிருந்தாள். அவள் அழவில்லை தவிக்கவில்லை. கல்லாக இருந்த போதிலும் அவள் தவம் செய்தவள். கடவுளை நினைத்து அல்ல கணவனை நினைத்து. அந்த காதலுக்கு சக்தி அற்று போய் விடுமோ.விதியின் மீது நம்பிக்கை வைத்து உறங்கும் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

வருண் கத்தினான் கதறினான் கோபத்தில் பொருட்களை உடைத்து சிதறடித்தான்.அவனை அடக்க படாத பாடு பட்டாள் மோகினி. அவன் அடங்கினால் தானே.அடக்க முடியவில்லை. அடங்க விடவில்லை அவனுக்குள் இருந்த நட்பு. நண்பனை இழந்து விடுவேனோ என்ற பயமே அவன் தேகமெங்கும் ஓடி இரும்பு தேகம் கொண்ட அவனையும் உருக்குழைக்க அப்படியே கால் மடக்கி அமர்ந்து முகத்தில் அறைந்து கொண்டு கதற அதனை கண்ட மோகினி ஓடி வந்து அவனை அணைத்து கொண்டாள்.

நதின் கூறியது போல் கடமையை பற்றி அவள் எடுத்து கூறிய எதுவுமே அவன் செவியில் எட்டவில்லை.அவன் மச்சான் மச்சான் என்று பிதற்றி கொண்டே அவனே அறியாமல் உறங்கி போக மோகினி உறக்கமின்றி நாளை தன்னவன் அனுபவிக்க போகும் வேதனையை எண்ணி துடித்தவளாக அமர்ந்திருந்தாள்.

விடியல் அதர லோக வாசிக்களுக்கு புதிதாக இருந்தது. இன்று உயிர் தியாக நாளென்று அதர லோகத்திற்குள் இருக்கும் பல உலகங்கள் மனிதர்கள் மிருகங்கள் ஊர்வன பறப்பன செடி கொடி கல் மலை நீந்தவன என ஒரு இண்டு இடுக்கு இல்லாமல் ஒவ்வொரு இடத்திலும் இதுவே பிரதான செய்தி.நதின் வர்ணிகா வருண் மோகினி வஜ்ரா இவர்கள் அனைவரின் எண்ணங்களும் வெவ்வேறு கோணத்தில் இருந்தது.

வருண் எழுந்ததில் இருந்து நண்பனை இந்த தியாகம் செய்ய வேண்டாமென்று மன்றாடி இறுதியில் நதின்"மச்சான் உன்ன மேஜிக் பண்ணி அசையாம நிக்க வெச்சு தான் என் உயிர தியாகம் பண்ணனும்னா சொல்லு அப்டியே பண்றேன்"இதை கேட்டப்பின் வருண் ஏதும் பேசவில்லை. மனதை கல்லாக்கி கொண்டான். வர்ணிகா முகத்தை மட்டுமே நதினின் கண்கள் நொடிக்கு நொடி வருடி சென்றது.ஆனால் வார்த்தைகள் அங்கே பாஷை மறந்து விட்டன.

பொக்கிஷம் இருக்கும் இடத்தின் அருகே சென்றதும் அங்கே குழுமிருந்த தன் லோக வாசிக்களை கண்டு உரத்த குரலில் பேசலானான்"இங்க வந்த பொறவும் கூட நா நதினா மட்டும் தா இருக்கேன்.. இப்ப அதராவா உங்க வேந்தனா என் கடைசி நிமிசத்துல பேச போறேன்.."மோகினி வருணிற்கும் வர்ணிகாவிற்கும் இடையே நின்று கொண்டிருந்தாள் ஒரு திகிலுடன்.நதின் பொக்கிஷ அறைக்குள் சென்று அதனை எடுத்து வந்து அனைவர் முன்னிலையிலும் வைத்தான்.

"என் அதர லோக பிரஜைகளே இத்துணை ஆண்டுகள் நான் உங்களை விட்டு பிரிந்திருந்த வேளையிலும் என்னை மறந்திடாமல் ராஜ விசுவாசிகலாக நடந்து கொண்டதை காணும் போது என் நெஞ்சம் கர்வம் கொள்கிறது. இவர்கள் என் மக்கள் என்று. எனக்காக என் பிரஜைகள் நம்பிக்கை வைத்து காத்திருக்க அவர்களுக்காக கொண்ட கடமையை முடிக்கவே மீண்டும் பிறந்து வந்துள்ளேன். எனக்கு பிறகு இந்த அதர லோகத்தை ஆள என் நண்பன் மாய உலக அரசன் வருணை அடுத்த அதராவாக நியமிக்கிறேன்.."

வருண்"டேய்"என கத்த அதனை பொருட்படுத்தாமல்"மேலும் வர்ணிகா அவர்களுக்கு நான் முழு சுதந்திரம் அளிக்கிறேன். அவர்கள் விரும்பினால் கோட்டையில் பெரும் பதவி வகிக்கவும் அவருக்கு உரிமை உண்டு. அவருக்கு என்றுமே இந்த அதர லோகம் கடமை பட்டிருக்கிறது.வஜ்ரா நீ தான் இனி வருணின் நிழல். அவனை விட்டு நீ நொடியும் விலக கூடாது..நான் பேச வேண்டியதை பேசி முடித்து விட்டேன்.. அனைவரும் நலமோடு வாழுங்கள்"நதின் தன் உரையை முடித்து வர்ணிகாவை பார்க்க அவளோ விரிந்த விழிகளில் நீ கீழே விழாமல் இழுத்து பிடித்து கொண்டு இருந்தாள்.வருணிற்கு அதிர்ச்சி தாள முடியாமல் நண்பனிடம் ஓட முயன்றவனை வஜ்ரா தும்பிக்கையால் இழுத்து பிடித்து

"வேண்டாம் மாமே காலம் கடந்து விட்டது.உங்கள் நண்பன் நதினை உங்களால் தடுக்க இயலும். அதர வேந்தனை தடுக்கும் உரிமை யாருக்கும் கிடையாது"கண்ணீர் ஊற்ற சொல்ல வருணோ

"மச்சி வேணாடா. இத செய்யாத நதினு நீ இல்லாம நா எப்படி டா இருப்பேன். நமக்கு இந்த எலவெடுத்த ஒலகமே வேணாடா நம்ம ஒலகத்துக்கு போயிரலாம். ராஜாவும் வேணா ஒரு மயிரும் வேணா. நதினு வந்துருடா நதினு மச்சான்".. அவனின் பாஷை சரியாக புரியாமல் இருக்கலாம் ஆனால் அவன் கதறளும் கண்ணீரும் அங்கிருந்த அனைவரின் கண்களிலும் தண்ணீரை கொண்டு வந்தது.

வர்ணிகா இதயம் துடிப்பது வெளியே கேட்டது. வெடிக்கும் நிலையில் அவள் இதயம். மிமி சுசு கூட கண்ணீரோடு வர்ணிகாவை பரிதாபமாக பார்க்க அவள் நதினை பார்த்து கொண்டிருந்தாள்.அவன் கண்களில் என்ன அது.அளவே இல்லாத காதல் பொங்கி வழிய அவளை ஒரு முழு நிமிடம் பார்த்தவன் வருணை பார்த்து இறுதி புன்னகையை செலுத்தி அவனுடைய வாளை நூறாண்டுகள் கழித்து கையிலெடுத்தான்.கண்மூடி மானசீகமாய் வேண்டி கொண்டவன் வாளை உயர்த்தி அனைவரும் பார்க்கும்படி செய்து மறுக்கனமே தன் சிறசை தானே கொய்தான்.அதர லோகமே ஸ்தம்பித்து நிற்க வருண் பேச்சற்று நிற்க வர்ணிகா மூச்சற்று கீழே சரிந்தாள்.

தொடரும்.

அதரா - 28



அதர லோகமே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றது.என்ன நடந்தது ஏது நடந்தது என்று யாருக்கும் புரியவில்லை. ஒரே ஒரு வினாடியில் அனைத்தும் முடிந்துவிட்டது.அதரா தன் கடமையை செய்ய வருவான் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த ஒன்றே. ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு கம்பீரமாக அவன் அந்த அதரலோகத்தில் காலடி எடுத்து வைத்த நொடி அனைவரின் மனதிலும் காலடி எடுத்து வைத்திருந்தான். இவ்வளவு அழகான கம்பீரமான ஒரு வேந்தனை இழக்க யாருக்கும் மனம் வரவில்லை.

 அதைவிட வர்ணிகாவின் கதை அங்கிருந்த அனைவரும் அறிந்ததே. நூறாண்டுகள் கல்லாய் இருப்பவள் இனியாவது அதரனுடன் சேர்ந்து இன்புற்று வாழவேண்டும் என அதர லோகத்து மக்கள் அனைவரும் விரும்பினர். அதனாலேயே அவன் உயிர் தியாகம் செய்ய கூடாது என்று தங்கள் கடவுளிடம் வேண்டுதல் வைத்து கொண்டிருந்தனர்.ஆனால் கடவுள் எல்லா விஷயத்திலும் உடனே பதில் கொடுப்பதில்லையே.அதரன் விஷயத்திலும் அவர் வெறுமனே நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தார்.

எப்படியும் இறுதி நேரத்தில் ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்து இந்த உயிர் தியாகம் நின்று விடக் கூடாதா என்று அனைவரும் விழி தட்டாமல் அவனையே பார்த்துக் கொண்டு நிற்க அவன் கடமை வீரனாய் தன் கடமையை நிறைவேற்றி முடித்தான்.அந்த வீரனின் மனம் கொள்ளை கொண்ட வர்ணிகா தன் மூச்சை நிறுத்தி கொண்டாள். சுசுவும் மிமியும் வர்ணிகா கீழே சரிவதை கண்டு அவளை தாங்கி கொள்ள மோகினி வர்ணிகாவை பார்ப்பாளா அல்ல வருணை பார்ப்பாளா?

வருண் மூச்சு விடுகிறானா என்றே தெரியவில்லை. சிலையாக அப்படியே நின்றான். அவன் கண்கள் நண்பனின் உடலற்ற தலையிடம் நிலைக்குத்தி நின்றன.மேகங்களின் இடையே இருந்து பெரும் சத்தம் ஒன்று உண்டானது. அதை தொடர்ந்து பொக்கிஷத்தை சுற்றி கண்கூசும் படியான ஒளி உருவாக ஒருவராலும் கூட அந்த ஒளியைக் காண இயலவில்லை.அந்த ஒளி அவர்களின் உடம்பில் பட்டதும் உடலில் மின்சாரம் பாய்ந்த ஒரு உணர்வு.தலை முதல் கால் வரை ஒரு பரவச நிலை. அவர்கள் அவர்களாக இல்லை. ஒரு முழு நிமிடம் புரியாத விளங்காத சொர்க்க லோகத்தில் இருப்பது போல் ஒரு மாயை. ஒரே ஒரு நிமிடம் தான் மறுநிமிடம் அந்த ஒளி மறைந்தது.

அதர நதின் எனும் வீரனின் உயிர் தியாகத்தை அந்த பொக்கிஷம் ஏற்றுக் கொண்டது.மீண்டும் ஒரு அசாதாரண அமைதி அங்கே நிலவியது. வருண் இன்னும் தன் நிலைக்கு வந்து சேரவில்லை. அவனின் நிலையறிந்து வஜ்ரா தனது தும்பிக்கையால் அவனை உந்தியது. வஜ்ராவின் தொடுக்கையில் இயல்பு நிலைக்கு திரும்பியவன் கண்களை நதினிடம் இருந்து மீட்டெடுத்து வர்ணிகாவை பார்த்தான். அவள் பேச்சு மூச்சற்று கிடக்க மோகினி அவளின் கன்னம் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தாள்.மிமி வர்ணிகாவின் நாடி பிடித்துப் பார்த்து"கடல் கன்னி இறந்துவிட்டார்"என்றது கடும் சோகத்தோடு.

 கூடியிருந்த அதர லோக மக்கள் தங்களுக்குள் சலசலத்து கொண்டனர். என்ன கடல்கன்னி இறந்துவிட்டாளா.. பாவம் அந்தப் பெண்..அவள் என்ன தவறு செய்தாள்..அவள் செய்த குற்றம்தான் என்ன.. வாழ்வை வாழா நிலையில் நூறாண்டுகள் கற்சிலையாக சாபம் பெற்று சாப விமோசனம் அடைந்தும் அவள் வாழவில்லையே. அவள் தலை எழுத்து இப்படியா அமைய வேண்டும்.. கடவுளே தயைகூர்ந்து மனம் இரங்குங்கள். வாழவேண்டிய இந்த அன்பு உள்ளங்களை வாழ வையுங்கள்..அதர லோக மக்களிடம் உடனடியாக ஒரு வேண்டுதல் எழுந்தது.

வர்ணிகா இறந்து விட்டாள்.அவள் மூச்சு நதின் மூச்சை பின்தொடர்ந்து சென்று விட்டது.மோகினியால் இதை தாங்கவே முடியவில்லை.எனக்கே இப்படி என்றால் ஒரே நேரத்தில் தன் நண்பனையும் அவன் மனைவியையும் இழந்த தன் கணவனுக்கு எப்படி இருக்கும் என்ற எண்ணமே அவளை துடியாய் துடிக்க வைத்தது. வருண் எதுவும் பேசவில்லை.நதினின் தலையை எடுத்து அவனது உடலோடு சேர்த்து வைத்து பார்த்தான்.

கண்களில் நீர் நிற்காமல் வழிந்தது.இனி தன்னை யாரும் டேய் மச்சான் வருணு என்று அழைக்கப்போவதில்லை. இன்னா மாமே சொல்லிகின என சீண்ட போவதில்லை.அந்தஸ்து பாராது நட்பு பாராட்டி தன்னை அவன் உடலில் ஒரு அங்கமாக பாவித்தவன் இப்பொழுது இந்த லோகத்தின் வேந்தனாக முடிசூட்டி விட்டு கடமை வீரனாய் கண்ணயர்ந்து விட்டான்.ஆழ் கடலில் சுவாச கருவிகள் இல்லாமலே நீரினுள் பாய்ந்து நீந்துபவன் அவன். அப்பொழுது எல்லாம் அடைக்காத மூச்சு இப்பொழுது அடைத்தது. நெஞ்சை பிடித்து அப்படியே அமர்ந்து விட்டான். மோகினி ஓடி வந்து அவனை தன் நெஞ்சில் சாற்றி கொண்டாள்.

என்ன பண்ண இதோ அதர லோகத்தின் இணையில்லாத வீரன் அதர நதினின் இறுதி காரியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதரனின் அருகே வர்ணிகாவின் உடல் கிடத்தி வைக்கப் பட்டிருந்தது.இருவருக்கும் சேர்த்து இறுதி காரியத்தை தானே செய்தான் வருண். அதர லோகமே கண்ணீரில் தத்தலித்தது. வருண் ஒரு இறுகிய மனநிலையில் இருந்தான்.பிடிவாதமாக கண்ணீரை வெளியே காட்டாமல் காரியங்களை செய்து முடித்து அதர நதின் வர்ணிகா இருவரின் உடல்களையும் அதர கோட்டையின் தோட்டத்தில் புதைத்தான்.பத்து நாட்களுக்கு முன்னர் உன் நண்பனுக்கு நீயே பால் ஊற்றுவாய் என யாரவது கூறிருந்தால் கூறியவனுக்கு பால் ஊற்றி இருப்பான். எல்லாம் முடிந்தது.

மிமி சுசு இருவரும் கனத்த இதயத்துடன் தங்களது உலகத்திற்கு சென்றனர்."மிமி என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாயா"

"என்ன சுசு திடீரென்று மன்னிப்பு கேட்டு ஏற்றுக் கொள்வாயா என்று கேட்கிறாய்"

" ஆமாம் மன்னிப்பு நான் அவசியம் வேண்ட வேண்டிய ஒன்று. உன்னுடைய காதலை புரிந்து கொள்ளாமல் நான் உன்னை மிகவும் காயப் படுத்தி உள்ளேன் அதற்காக என்னை மன்னித்துவிடு.. சிறு பிள்ளையென நான் நடந்து கொண்ட முறைகளை மன்னித்து என்னை ஏற்றுக் கொள்வாயா"

" என்ன என் அருமை காதலியே திடீரென்று உனக்கு ஞான உதயமாயிற்று..எப்படி சாத்தியம் இது" நிலைமையை சகஜமாக்க சுசு கேட்க

" ஞான உதயமா.. ம்ம் அப்படி ஒன்று இல்லவே இல்லை இது மனதின் போராட்டம். அந்தப் பெண் வர்ணிகா அவள் வாழ்வில் எந்த சுகத்தை கண்டாள்.. சுயநலமான காதலால் அவள் இழந்ததுதான் அதிகம்.நாம் மானிடர்களாக பிறக்காமல் இருக்கலாம் ஆனால் மனிதர்களை நம்மால் புரிந்து கொள்ள முடியுமே.. அதரனின் மீது எவ்வளவு காதல் கொண்டிருந்தால் அவன் இறந்த மறு நொடியே இந்தப் பெண்ணும் தன் உயிரை தியாகம் செய்து இருப்பாள்.."

"ம்ம்ம் ஆமாம் சுசு.. வேந்தனின் காதலுக்கும் என்ன குறை.. இறுதி நொடி வரை வேந்தனின் கண்கள் வர்ணிகாவை விட்டு விலகவில்லையே.. சில நேரங்களில் வார்த்தைகள் பேசாத மொழிகளை மௌனங்கள் பேசாத பாஷைகளை கண்கள் பேசிய விடுகின்றன. அவர்கள் இருவருக்கும் இடையே என்ன மனஸ்தாபம் இருந்த போதிலும் அவர்கள் என்றுமே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்தது அல்ல. வார்த்தைகள் அவர்களிடம் அதிகமாக உபயோகமில்லாத இருந்தபோதும் பார்வை ஒன்றே அவர்களுக்குப் போதுமானதாக அமைந்தது. காதலை சொல்லி கொஞ்சிக் குழைந்தால் மட்டும்தான் அன்பா..வார்த்தைகள் அதிகம் இல்லாத போதும் தன் தேவையை உணர்ந்து அதை செய்து முடிக்கும் துணை தான் காதலுக்கு அடிதளம். அவர்கள் இருவரின் காதலும் என்றுமே அதர லோகத்தில் யாராலும் மறக்கமுடியாத ஒன்றாக இருக்கும்."

"கண்டிப்பா மிமி அப்படி சொல்லாத காதலாக நம் காதலும் இருக்கக்கூடாது என்பதற்காக தான் நான் என்னை ஏற்றுக்கொள்ள சொல்கிறேன்.. விரைவில் நமது விவாகம் நடைபெற வேண்டும்"

" கெட்டதிலும் ஒரு நல்லது உண்டு என்பது போல் அதரன் வர்ணிகா இறப்பில் உன் மனக் கண் திறந்து விட்டது அது போதும் எனக்கு.." அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே அவர்களது உலகத்துக்குள் நுழைய அங்கே குட்டிச் சாத்தான்கள் மட்டுமல்லாமல் கொள்ளிவாய்ப் பிசாசு குறளைப் பேய்கள் இன்னும் பயங்கரமான பேய்கள் பூதங்கள் அனைத்தும் வரிசைகட்டி நின்று கொண்டிருந்தன.

"சுசு என்னடி இதெல்லாம் எதற்கு இவர்கள் எல்லாம் இப்படி வரிசைகட்டி நமக்காக காத்திருக்கிறார்கள்"

" நானும் உன்னுடன் தானே வருகிறேன் எனக்கு மட்டும் எப்படி தெரியும்..காட்டேரி தமக்கையே ஏன் எல்லோரும் இப்படி நின்று கொண்டிருக்கிறீர்கள் ஏதாவது பிரச்சனையா மீண்டும் எவளாவது ஒரு சூனியக்காரி நம்மை பிணைய கைதியாக்க வந்து விட்டாளா"

' உன் வாயில் நல்ல வார்த்தையே வராதா ஏன் நாங்கள் எல்லோரும் இப்படி நிற்கிறோம் என்று நீயே வந்து பார்"மிமியும் சுசுவும் அதரன் இல்லாத நேரம் என்ன இது புது சோதனையோ என்ற பயத்துடன் காட்டேரியை பின் தொடர்ந்து செல்ல அங்கே சிம்மாசனத்தில் நடுநாயகமாக வீற்றிருந்தான் அதர நதின். கழுத்தில் இருந்து தலை தனியாகி விட்டதால் அதை நதினின் உடலுடன் ஒன்றிணைத்தே வருண் புதைத்திருந்தான். எனவே தலைக்கும் உடலுக்கும் நடுவே இருந்த கோடு தெரியாமல் இருக்க அந்தக் கழுத்திலிருந்த கோட்டை சுற்றி சிவப்பு நிற பட்டு துணி ஒன்றை மெல்லியதாக சுற்றிருக்கு அது கழுத்து சங்கிலியாகி அவனுக்கு மேலும் அழகூட்டியது.

நதினை உயிருடன் அதுவும் தங்களது லோகத்தில் கண்ட சுசுவுக்கும் மிமிக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனால் அவர்கள் காண்பது மெய் அவர்கள் முன் அமர்ந்து இருப்பது அதே அதர நதின்.வார்த்தைகள் தந்தியடிக்க"வேந்தே தாங்கள் எங்கே இங்கே..இப்பொழுதுதான் உங்கள் உடலை அடக்கம் செய்துவிட்டு வருகிறோம்.அங்கே உங்களது நண்பர் இடிந்துபோய் அமர்ந்துள்ளார். அவரைக் காணவே எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் எங்கள் அனைவரின் முன்பும் தானே உயிர் தியாகம் செய்தீர்கள்.பிறகு எப்படி இந்த உலகத்தில்..ஒருவேளை துர்மரணம் சம்பவதிருந்தால் நீங்கள் பேய் உலகத்தில் இருக்க ஒரு நியாயம் இருக்கிறது.ஆனால் நீங்கள் வேந்தன் ஆயிற்று எப்படி அரசே இந்த உலகத்திற்கு வந்தீர்கள்"ஆச்சரியமும் அதிர்ச்சியும் அதோடுகூட ஆனந்தமும் சேர அவனை உரிமையாக கேள்வி கேட்டது மிமி.

 அதன் கண்களில் மெய்யான ஆனந்தத்தை கண்டு நதின்"மிமி உனக்கு அவசியமா உண்ம தெரியணும்னா சீக்கிரமா போய் உங்களோட புது வேந்தன என் முன்னுக்கு கூட்டிட்டு வாங்க" அவன் சொன்னதுதான் தாமதம் மிமி ஒரே ஓட்டமாக ஓடியது வருணை அழைக்க. நண்பனை அடக்கம் செய்துவிட்டு துக்கம் தாளாமல் ஒரு தனி அறையில் தன்னை பூட்டிக்கொண்டு தனிமையில் நண்பனை எண்ணி கதறிக் கொண்டிருந்த வருணை கதவிற்கு அப்பாலிருந்து அழைத்து கொண்டிருந்தாள் மோகினி"ஹேய் இப்ப இன்னாடி உனக்கு.. என்ன தனியா வுடு..என் நண்பன் என்ன அம்போண்ணு விட்டுட்டு செத்த மாறி நானும் உன்ன விட்டுட்டு செத்து தொலஞ்சிற மாட்டேன் கம்முனு போடி அங்குட்டு"சிடுசிடுப்பை மனைவியிடம் காட்ட

"ஐயோ வருணரே நான் முக்கியமான செய்தி கொண்டு வந்துள்ளேன்.வேந்தன் இன்னும் மரணிக்கவில்லை அவர் ஆவிகள் உலகத்தில் இருக்கிறார் என்றும் அவர் உடனே உங்களை அழைத்து வரச்சொன்னார் என்றும் கூறிக்கொண்டு மிமி வந்துள்ளது" மோகினி சொன்னதுதான் தாமதம் வருண் படாரென்று கதவை திறந்தான். அவன் செவியில் மற்ற எதுவும் விழவில்லை நதின் உயிருடன் இருக்கிறான் என்ற செய்தி மட்டுமே அவன் மூளையை எட்டியிருந்தது.மிமியிடம் விசாரித்தவன் நொடியும் தாமதிக்காமல் வஜ்ரா மேலே ஏறி ஆவி உலகம் சென்றான் அவனுடன் மோகினியும் சென்றாள். மனம் முழுவதும் ஏகப்பட்ட கேள்விகள். விடை தெரியா மர்மங்கள்.இது உண்மையா இது சாத்தியமா..சாத்தியம் என்றால் அவன் ஏன் கோட்டைக்கு வராமல் ஆவி உலகத்தில் அமர்ந்துள்ளான்.. ஒருவேளை சூனியக்காரியின் ஆவி மிமி உருவத்தில் வந்து அவர்களை கவர்ந்து செல்கிறதோ என்ற சந்தேகம் ஒரு புறம் வருணை ஆட்டிவைக்க என்ன இருந்தாலும் சரிதான் நண்பன் இருந்தாலே போதும் என்றாகிவிட்டது அவனுக்கு.

வருண்"மாமே இன்னா நீ பறக்க சொன்னா நவுறுற.. சும்மா தெறிக்க வுடு மாமே..குண்டா இருக்கக்கண்டி தா உன்னால சுருக்கா போ முடியலன்னு நெனைக்குறேன் இனிமே தீனியா கொஞ்சமா முழுங்கு"

"மாமே இது உங்களுக்கே நியாயமா நான் என்ன இயந்திர பறவையா வேகமாக பறக்க..என்னால் முடிந்த அளவு காற்றை கிழித்து கொண்டு செல்கிறேன். நீங்கள் சுகமாக என் மண்டையில் அமர்ந்து கொண்டு என்ன பேச்சு பேசுகிறீர்கள்"

"இன்னாது சொகமா குந்திகினு வரேன்னா எவன் சொன்னது.. நதினு என் மச்சி அங்க உசுரோடு இருக்கானு மிமி சொன்னத கேட்டு உசுர கையில புடிச்சிக்கினு போய்டுருக்கேன் மாமே.. என்னால இதெல்லாம் உண்மன்னு நம்ப முடில ஆனா நூத்துல ஒரு வாய்ப்பா அவன் இருந்தா"சொல்லும் போதே அவன் இருக்க வேண்டுமென மனம் வேண்டுதல் வைத்து கொண்டிருந்தது.

வஜ்ரா தன் பலத்தையெல்லாம் திரட்டி அதர உலகத்திற்கு பாதாளத்தில் இருக்கும் பேய் உலகத்திற்கு வருண் மோகினியுடன் நுழைந்து.புதிய வேந்தனை மற்ற பேய்கலெல்லாம் ஆர்வமாக பார்க்க வருணிற்கு மற்ற எதுவும் கருத்தில் பதியவில்லை.அவன் ஓடினான் உள்ளே. அங்கே எலும்புகளால் ஆன சிம்மாசனத்தில் நடுநாயகமாக வீற்றிருந்தான் நதின். மெய்யாக வருணின் நண்பன்.

வருணை கண்ட நதின் எழுந்து வந்து கட்டிக்கொள்ள வருணும் மச்சி என்று நண்பனை கட்டி கொண்டான். பார்த்து விட்டான் தன் உயிரானவனை.ஆனால் நதின் உடல் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியாக இருந்தது."மச்சி நீ எப்டிடா இங்க.. ஏன் உன் மேல ஜில்லுனு இருக்கு"

"மச்சி நா செத்து ஆவியாவி இந்த பேய் ஒலகத்துக்கு ராஜாவா ஆயிட்டேன்.."

"எப்டிடா"வருண் புரியாமல் பார்க்க

"அது எப்படினா மச்சி அப்டித்தான்"

"டேய்"

"காண்டாவாத.. மச்சி என் லவ்வு இன்னா நேத்து பாத்து இன்னைக்கி வந்ததா.. அது நூறு வருஷ பொக்கிஷம் மச்சி.செத்துப் போய் மறுபிறவி எடுத்து அப்பயும் செத்து போய் இன்னொரு பிறவி எடுத்து அந்தப் பிறவியில இந்த உலகத்துக்கு வந்து என் காதல பத்தி தெரிஞ்சிகிட்டேன். ஆனா என்னோட வர்ணிகா செல்லம் நூறு வருஷம் ஆகியும் அத கல்லாகிட்டுப் போன என்ன நினைச்சே லவ் பண்ணி இருக்கு. சோ எங்க ரெண்டு பேருக்கும் ஒரு வேல்யூ இருக்கு மச்சி.அதாவது ஒரு பவர் இருக்கு.அந்தப் பவர் தான் நான் செத்தோடன அவளும் சேந்து செத்து மனுஷ உடம்போட நாங்க இருக்குறப்போ வாழாத வாழ்க்கய ஆவி ஒலகத்துல சந்தோஷமா வாழ போறோம்."

"மச்சான் அப்ப நீயு பேயா"

" இன்னா மச்சான் பொசுக்குன்னு பேயினு சொல்லிட்ட. நீ சொல்றதை பார்த்தா எனக்கே ஜர்க் ஆவுது.பேயு தா ஆனா இல்ல.. ஒன்னால என்ன கட்டி புடிக்க முடியுதுல.."

"ம்ம்ம்'

"அப்றம் எப்படி பேயாவேன்"வருண் தலைசுற்றி போய் ஓரமாக அமர்ந்து விட்டான்.வஜ்ரா அவனருகில் வந்து"மாமே என்ன படக்கென்று அமர்ந்து விட்டீர்கள்.. நமது வேந்தன் பேயாக பிறவி எடுத்ததை நாம் கொண்டாட வேண்டாமா"

"மாமே தந்தத்த ஒடச்சு விட்ருவேன் மூடிட்டு அங்குட்டு போயிரு.. அந்த பண்ணாட இன்னாதான் சொல்ல வரான்னு புரியவே மாட்டுது.. இதுல உனக்கு கொண்டாட்டம் கேக்குதோ"வருண் கூறியதை கேட்டு சிரித்த நதின் வருணின் தலையை பிடித்து ஆட்டி கூற தொடங்கினான்.

 அவன் உயிர் தியாகம் செய்ய அதனைக் காண சகியாத வர்ணிகா அளவில்லா காதலின் காரணமாக இதயம் வெடித்து இறந்து போனாள். வாழும் போது இருவரும் ஒன்றாக வாழ முடியாவிடினும் இருப்பில் அவர்கள் காதல் ஒன்று சேர்ந்தது. தன் உடலை விட்டு வெளியேறிய நதின் ஆன்மா தன்னை இழந்து கதறும் அதர லோக வாசிகளை கண்ணீரோடு பார்த்தது. வருணை அணைத்து ஆறுதல் கூறியது. ஆனால் அவனை உணர அங்கே யாரும் இல்லை.சுசு மிமியால் கூட அவனை காண இயலவில்லை. அப்பொழுது தான் ஒன்றை உணர்ந்தான். வர்ணிகா இறந்த செய்தி கேட்டு பார்வையை அங்கும் இங்கும் சுழல விட்டான். அங்கே அவனையே பார்த்துக்கொண்டு காற்றில் கலக்க தயாராகிக் கொண்டிருந்தாள் வர்ணிகா.

 நொடியில் அவளை நெருங்கியவன் அவளது கரத்தை இறுகப் பற்றி தங்கள் கடவுளிடம் அழைத்துச் சென்றான்.மேலுலகத்தில் அவர்களது கடவுள் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்.அந்த இடத்தில் தேவர்கள் தேவதைகள் என பலர் கூடியிருந்தனர்.நதின் வர்ணிகாவின் கரத்தைப் பற்றி தங்கள் கடவுளின் முன்பு தலை வணங்கி நின்றான்.

"அதரனே உன் கடமை உணர்வை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். அன்று நிறைவேற்ற முடியாத உன் கடமையை மறுபிறவி எடுத்து வந்து நிறைவேற்றி முடித்திருக்கிறாய்.இடையில் காதல் நட்பு குடும்பம் சமூகம் என பல இருந்தாலும் அவற்றையெல்லாம் தாண்டி உன் கடமையை செவ்வனே செய்து முடித்துள்ளாய்.உனது இந்த குணம் என்னை பூரிப்படைய செய்கிறது என் உள்ளம் ஆனந்தக் கூத்தாடுகிறது.கேள் மகனே உனக்கு என்ன வேண்டுமோ கேள்"

" வணங்குகிறேன் கடவுளே.. அதரனாக பிறந்து, பிறந்த கடனை நான் செய்து முடித்து விட்டேன். அனைவருக்கும் என்னாலான அனைத்து நல்லதையும் குறைவின்றி செய்து விட்டேன்.ஆனால் என் சுயநலத்தால் தன் வாழ்வையே இழந்து விதியை மாற்றி இதோ இங்கே என் வசம் தன் உயிரை இழந்து நிற்கிறாளே இவளுக்கு நான் என்ன செய்வது..என்ன செய்தால் இவள் இழந்த இழப்பிற்கு ஈடாகும்"

 கடவுள் வர்ணிகாவை பார்த்தார். அவள் இதயம் வெடித்து போயிருந்ததை கண்டார்.மௌனமாக தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். அவர் பல உலகங்களின் காதல் கதைகளை கண்டவர். அதிலெல்லாம் அவர் மனதை இளக்காத காதல் தன் முன்பு கடமை வீரனாய் நிற்கும் அதரனைக் கண்டும் கல்லாய் தன்னை சுயநலத்தால் மாற்றியவனையும் காதலித்து அவனுக்காக உயிர் துறந்த பெண்ணவளை கண்டும் கடவுளுக்கு மனம் இளகியது.

"என் மகனே நீ என் மனதை குளிர்வித்திருக்கிறாய். அந்தப் பெண் இறந்த இழப்பிற்கு என்ன செய்வது என்று கேட்டாயே.. அவள் இழந்த இழப்புகளை ஈடு செய்வது என்னவென்றால் அது உன் அன்பே ஆகும். உனது அன்பு மட்டுமே அவள் இழப்புகளை ஈடு செய்ய வல்லது.நீ அதர வேந்தனாக அதர லோகத்தை ஆண்டாய். இனி அதை உன் நண்பன் உன் ஆலோசனையோடு ஆளட்டும்.நீ என்ன செய்கிறாய் என்றால் இப்போதே உன் மனைவியை அழைத்துக்கொண்டு பேய் உலகத்திற்கு செல்.அங்கே கட்டுக்கடங்காமல் வால்தனம் செய்யும் அனைத்து பேய்களையும் அடக்கி நல்வழிபடுத்து. மேலும் விதி முடிந்தவர்களை இனி என் தேவர்கள் வந்து அழைத்துச் செல்லமாட்டார்கள். அதர லோகத்தை பொறுத்தவரை விதி முடிந்தவர்களை நீ தான் என்னிடம் அனுப்பும் பொறுப்பை செய்ய போகிறாய்.

 மாண்டவர்கள் முதலில் உன்னிடம் வர அவர்களில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து என்னிடம் அனுப்பு. கெட்டவர்களை உன் வழியில் அடக்கி அவர்கள் பாவங்கள் முழுவதும் நீங்கும் வரை அவர்களை உன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து பாவம் முழுவதும் நீங்கிய பின் என்னிடம் அனுப்பு.. நீங்கள் இருவரும் இதுவரை பட்ட கஷ்டங்கள் போதும். உங்களுக்கு மானுட உடம்பு இனி கிடைக்காது.ஆனால் உங்களுக்கு ஒரு மாய உடலை தருகிறேன்.உனது மந்திர சக்திகளும் உன்னுடன் இருப்பதாக.மனிதர்கள் போல் இந்த மாய உடம்பு உங்களுக்கு இருக்கும்.ஆனால் உதிரம் சிவப்பாக இருக்காது. வெண்மை நிறத்தில் இருக்கும் உங்களுக்கு ஒரு மகள் கூட பிறப்பாள். உனை அடுத்து பேய் உலகத்தை மட்டுமல்லாமல் அதர லோகத்தையே ஆள்பவள் அவள். இருவரும் சென்று உங்களுக்கான காலம் முடியும்போது என்னிடம் வந்து சேருங்கள் எப்பொழுது செல்லுங்கள்.. "நதினும் வர்ணிகாவும் கடவுளுக்கு பெரிதாக நன்றி கூறிவிட்டு திரும்பி செல்ல எத்தனிக்கும் போது

"மகனே"என்றழைத்தவர்" இனிமேலாவது உங்கள் வாழ்வை சண்டை போடாமல் வாழுங்கள்"என்று புன்னகையுடன் கூறி அவர்களை அனுப்பி வைக்க இருவரும் பேய் உலகத்திற்கு வந்து சேர்ந்தனர்.பேய் உலகத்திற்கு வந்ததும் வர்ணிகா ஒரு தனி அறைக்குள் சென்று விட அவன் தன்னை யாரென்று அனைவருக்கும் உணர்த்தி சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்து விட்டான்.

நதின் அனைத்தையும் கூறி முடிக்க அங்கிருந்த அனைவருக்கும் அவ்வளவு ஆனந்தம்.அவன் அதிர லோகத்தின் வேந்தனாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் திரும்பி இழந்த வாழ்வை வாழ வந்திருக்கும் அவனை எண்ணி அனைவருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி."மச்சான் என்னால நம்பவே முடியலடா. பேயோ பிசாசோ எப்படியோ என் மச்சான் உயிரோடு வந்தாலே போதும்னு இருந்தேன் நீ வந்துட்டே அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம். இனிமே என்ன விட்டு போயிடாத மச்சான்"

"அடச்சீ பன்னாட..எதுக்கு சும்மா சீன் போடுற.செட் ஆகல மச்சி" என்னதான் வாய் கூறினாலும் கண்களில் கண்ணீர் துளிர்க்க தான் செய்தது. மோகினி வர்ணிகாவை தேடி அழைத்து வந்தாள்.அவள் அருகே சென்று வருண்"எம்மா கடலு கன்னி நீ என்ன எப்டிவேணாலும் நெனச்சிக்கோ.. ஆனா நா உன்ன என் தங்கச்சியா பாக்குறேன். நடந்தது நடந்துருச்சு. இது மறு பிறவி மாறி. இனிமேலாச்சும் ரெண்டு பெரும் பழச புடிச்சிக்கினு தொங்காம சேந்து இருங்க.. டேய் உன்னயும் தான்"வருண் நதினையும் வர்ணிகாவையும் அதர கோட்டைக்கு வரவழைத்து அதர லோகம் மக்களுக்கு நடந்த உண்மைகளைக் கூறினான்.

 பேயோ பிசாசோ தங்கள் வேந்தன் திரும்ப வந்தது அவர்களுக்கு போதுமாய் இருந்தது.அதர லோகமே விழாக்கோலம் பூண்டது.மீண்டும் சீரும் சிறப்புமாக அன்றைய நாளிலே நதின் வர்ணிகா விவாகம் கோலாகலமாக நடந்தது.நதின் தங்களது பேய்யுலக கோட்டையில் அமர்ந்திருந்தான்.வர்ணிகா குளித்து கொண்டிருந்தாள்.ஈர உடலில் அவள் ஆடை சுற்றி வர அவளை எதிர்பாராத நேரம் அள்ளி தூக்கி கொண்டான் நதின்.

அவள் அதிர்ச்சியை காட்டினாலே தவிர வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனாலும் சுகமாக தன்னவனின் அணைப்பில் அடங்கியிருந்தாள். அவளைத் தூக்கிக் கொண்டு சென்றவன் சுவரில் பதிக்கப்பட்டிருந்த பெரிய கண்ணாடியின் முன் அமர வைத்து அவள் ஈரக்கூந்தலை உலர்த்தி அவள் முன்பு வந்து மண்டியிட்டு அமர்ந்து" மீனு குட்டி நீ என்கிட்ட பேச மாட்ற அது ஏன்னு தெரியுமாட்டுது ஏதாச்சும் புது பஞ்சாயத்தா.." அப்பொழுதும் அவள் பேசாமல் இருக்க

"ஹேய் இப்பதான்டி எல்லா பிரச்சினயும் ஓஞ்சிருக்கு செத்து பொழச்சு வந்திருக்கோம். திரும்பவும் ஆரம்பிக்காத.இனிமே நம்ம வாழ்க்கையே புதுசா வாழலாம்.என்னா ஒன்னு முன்னாடி நம்மள சுத்தி மனுஷங்களா இருந்தாங்க இப்ப பேய்ங்களா இருக்கு. அது ஒன்னும் பெரிய விஷயம் இல்ல என் பொண்டாட்டியே பெரிய பேயா இருக்கும்போது இந்தப் பேய பாத்து நான் பயப்படுவேனா.."

 அவள் முறைக்க" இப்டி மொறைச்சு பாத்து மாமனுக்கு மூடு ஏத்தாத.. அப்புறம் என் கண்ட்ரோல் இல்லாம ஏதாச்சும் ஏடாகூடமாயிட போது"

"ம்க்கும் பேச்சு தா.. ஒன்றும் ஆக மாட்டுதே"வர்ணிகா வாய்க்குள் மனம் உனக்கு அந்தப் பாம்பு செவி கொண்டவனுக்கு அது நன்றாக கேட்டது..

"ஹேய் இன்னா சொன்ன இப்ப.. மறுக்கா சொல்லு"அவள் முறைக்க"சொல்லுடி..பேச்சு தா ஒன்னும் ஆக மாட்டுதேனு சொன்ன தான" கண்களில் ஆச்சரியம் தொக்கி நிற்க ஆராய்ச்சி பார்வை பார்த்தபடி அவன் கேட்க அவளோ அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் எழுந்து சென்று மஞ்சத்தில் அமர்ந்தாள்.பார்க்கும் பார்வையில் மன்மத பாணத்தை கட்டி தன்னவனை நோக்கி எய்திட அது நேராக சென்று நதினின் இதயத்தில் பாய்ந்தது.

அவள் கூறிய செய்தி அவனுக்கு பெரும் ஆச்சர்யமே. எழுந்து ஓடினான் அவளிடம். அவள் காட்டிய பார்வை பாஷை உண்மையா என்று அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது.ஆனால் அவளுக்கு அந்த பொறுமை இல்லை போல. தன் முன்னால் கேள்விக்கணைகளை பார்வையில் தொடுத்து நின்றவனை பிடித்து இழுத்து மஞ்சத்தில் தள்ளியவள் இதழ் முத்தத்தால் அவனை சிறை பிடித்தாள்.அந்த ஒற்றை முத்தம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை அழைத்துச் சென்றது.

 அது கூட சிறிது நேரம்தான் பின்பு நூறு ஆண்டுகளும் அவர்களுக்கு நினைவில்லை நகரும் நொடியும் அவர்களுக்கு தெரியவில்லை.தெரிந்தது எல்லாம் இது நிஜம் என்பதே புரிந்தது எல்லாம் இதழில் உணரும் ஈரப்பசையே.வர்ணிகா தொடங்கியத்தை நதின் பொறுப்பேற்று கொண்டான்.தொடங்கியத்தை முடிக்கும் எண்ணமில்லை அவனுக்கு. எனவே முடிவே இல்லாத கதையை எழுத தொடங்கி விட்டான் வர்ணிகா மேனியில். கதையின் முடிவு இன்னும் பல ஆண்டுகள் கடந்தாலும் தெரிய போவது இல்லை. ஆனால் முடிவு என்றுமே ஆனந்தமே.

பலவருட தேடலை தன்னவளுல் தேடி கலைத்தவன் அவள் நெஞ்சில் தலை வைத்து படுத்து"மீனு குட்டி உனக்கு எம்மேல இருந்த காண்டு போய்டுச்சு"

"என்ன'

"அது கோபம்"

"இருந்தால் தானே போவதற்கு"

"அப்றம்'

"இல்லாத கோபத்தை நீங்களே வரவைத்து விடுவீர்கள் போல. இறுதி முறையாக இதை பற்றி பேசி விடுகிறேன். நீங்கள் செய்த அனைத்தும் மன்னிக்க முடியாத குற்றமே. ஆனால் அந்த குற்றம் செய்தது எதனால்.. என்னால். என்மேல் கொண்ட அன்பால் நேர்ந்த பிழை இது. அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவித்து உள்ளீர்கள். கடவுளே உங்கள் காதலையும் கடமையையும் கண்டு நாம் இருவரையும் சேர்த்து வைக்கவில்லையா.. இனி பழையதை எப்பவும் பேசாமல் நீங்கள் வெறும் நதினாகவும் நான் உங்கள் மீனு குட்டியாகவும் இன்புற்று வாழலாம்"..


அவள் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டாள்.அவன் செய்த முட்டாள்தனத்தின் அடிப்படையை அவள் கண்டு கொண்டாள். குற்றம் செய்தாலும் முட்டாள்தனம் என்றாலும் அதன் அடிப்படை அவள் மேல் வைத்த அளவில்லாத அன்பே ஆகும். அதை வர்ணிகா மிக சரியாக கண்டு கொண்டாள். தன்னவளின் மார்பில் ஆழ பதிந்து இதழ் ஒற்றி தலை நிமிர்ந்து அவள் கண்களை பார்த்து கூறினான்"கடவுள் என் காதல மட்டும் இல்ல உன் காதலோட சக்தி பாத்துதான் இந்த வரத்த கொடுத்தாரு..என் சகலமும் நீ மீனு குட்டி"அதன் பின் விட்டதை தொடர அங்கே இனிமையாய் தொடங்கியது நதின் மீனு குட்டி வாழ்க்கை.

 விவாக நாளில் புது மாப்பிள்ளையாக கொண்டாட வேண்டிய முதலிரவை கொண்டாட முடியாமல் தன் நண்பனுக்காக கண்ணீர் விட்ட வருண் இப்பொழுது அனைத்து பிரச்சனைகளும் முடிவடைந்த நிலையில் சந்தோஷத்தின் உச்சகட்டத்தில் நிறைவாக கொண்டாடிக் கொண்டிருந்தான் தனது மாங்கானியுடன்.

"வருணரே ஏன் என் கன்னத்தை கடித்து வைக்கிறீர்கள்"

"மாங்கானி என்ன டெஸ்ட்ல இருக்குனு பாத்தேன் செல்லம்.."

"நன்றாக பார்த்தீர்கள்.தள்ளி படுங்கள் அந்த பக்கம்.. என் மேனியை புண்ணாகி விட்டீர்கள்."

"மாமா இருக்கும் போது புண்ணாயிருச்சா. எங்க மாமா பாக்குறேன்"

"வேண்டாம் வருணரே தள்ளி செல்லுங்கள் பக்கத்தில் வராதீர்கள்"கேட்பவனா அவன் புண்ணாகிய மேனியை மென்மையாக முத்தமிட்டு மருந்திட்டான்.

மகிழ்ச்சி என்பது இதுதானா வாழவே முடியாதென நினைத்த வாழ்வை சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருந்தான் நதின். பேய் உலகத்தில் சிம்மாசனத்தில் அவன் அமர்ந்து வழக்கை விசாரித்தால் புது வரவாக வந்திருந்த பேய்கள் அனைத்தும் நடுங்கி விடும்.மிமி நதினின் அமைச்சனாக தனது அமைச்சனுக்கு அவன் விரும்பிய பெண்ணை அதாவது சுசுவை விவாகம் செய்து வைத்தான் நதின். விவாதத்திற்கு அதர வேந்தன் வருண் நேரடியாக வந்து மணமக்களை வாழ்த்தி பரிசு அளித்து விட்டுச் சென்றான். அடுத்தபடியாக வஜ்ரா மட்டுமே கன்னி கழியாமல் சுற்றிக்கொண்டிருக்க அவனுக்கும் அவன் மனதிற்குப் பிடித்த பெண் யானையாக பார்த்து முறைப்படி அவளின் பெற்றோரிடம் பெண் கேட்டு வருணின் நிழலான வஜ்ராவிற்கு விவாகம் செய்து வைத்தனர்.

இடையில் ஒருநாள் நதின் வருணை அழைத்துக் கொண்டு தங்கள் உலகத்திற்கு சென்றான். கடவுள் அவன் மந்திர சக்தியை அவனிடமே விட்டுவிட ஒரு ஒரே சொடுக்கில் அவனது அறையில் இருந்தான் நண்பனுடன்.நெஞ்சம் வேகமாக அடித்துக் கொண்டது. இருவரும் அரூபமாக மற்றவர்களை தேடி சென்றனர். சுகன்யா மகேந்திரனின் தோள் சாய்ந்து அமர்ந்திருக்க அவர்கள் முகத்தில் சொல்லொண்ணா சோகம்.அவர்களது பார்வை சுவற்றில் மாட்டியிருந்த நதினின் புகைப்படத்தில் விழுந்திருந்தது.

 தாயை அப்படி கண்டதும் நதின் கண்களில் நீர் தளும்பியது. வருண் அவனை வற்புறுத்தினான். அவர்களிடம் சென்று அனைத்து உண்மைகளையும் கூறச் சொன்னான். ஆனால் நதின் மறுத்து விட்டான். இவர்களது விதி அதர லோகத்தில் நிர்ணயிக்கப்பட்டது.இவர்களது விதி பூலோகத்தில் நிர்ணயிக்கப்பட்டது. இப்பொழுது சென்று இவர்களிடம் உண்மையை கூறினால் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.ஒன்று தாங்களும் நதினுடன் அதரலோகம் வருவதாகக் கூறுவார்கள். இல்லை அவர்களை இங்கே இருக்க சொல்லி வற்புறுத்துவார்கள். இது இரண்டுமே சாத்தியப்படாத ஒன்று.

எனவே நதின் அரூபமாக தன் பெற்றோரின் அருகே சென்று அவர்களை காற்றாய் தீண்டி அவர்கள் மனதில் இருக்கும் வருத்தத்தை தனது மந்திர சக்தியால் எடுத்து விட்டான். அவர்களே அறியாமல் அவர்களுக்குள் ஒரு எண்ணம் உருவானது. அவர்களது இரண்டாவது மகன் இறக்கவில்லை. அவன் எங்கோ ஒரு இடத்தில் உயிரோடு நலமாக உள்ளான். நிச்சயம் ஒரு நாள் அவனைக் காண்போம் என்ற உறுதியும் நிம்மதியும் அவர்களுக்கு அந்த நொடி உண்டாயிற்று. மனதை அழுத்தும் பாரம் அவர்களை விட்டு நீங்கியது.

ஆருஷ் கரிஷ்மா இருவரும் அவர்களது அறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அவர்கள் பேசுவதை கண்டாலே தெரிகிறது ஒரு கணவன் மனைவியாக அவர்கள் இன்னும் வாழ தொடங்கவில்லை. நண்பர்கள் ரீதியில் அவர்களது பேச்சு இருக்க நதின் அவர்கள் மனதில் தன் இருக்கும் தனது எண்ணத்தை மாற்றினான். சுகன்யா மகேந்திரனை போல இவர்களுக்கும் நதின் இன்னும் எங்கேயோ ஒரு இடத்தில் உயிரோடு உள்ளான் என்ற எண்ணம் தோன்றி நிம்மதி அளித்தது. அதோடு நில்லாமல் அவர்கள் மனதில் இருவரும் மறைத்து வைத்திருந்த காதல் வெளியேறியது. அது அவர்களின் கண்களில் தெரிய இனி அவர்களது வாழ்க்கை நலமாகும் என்பதால் நதின் வருண் இருவரும் அதர லோகம் சென்றனர்.

"அதரரே என்ன கண்றாவி ஆடை இது.. இதை அணிந்துகொண்டு எவ்வாறு நான் உங்கள் முன் காட்சி அளிப்பேன்"வர்ணிகாவின் குரல் கதவிற்கு அப்பாலிருந்து கவலையுடன் ஒலித்தது. குறும்புச் சிரிப்போடு

"அதனால என்னடி மாமா உன் முன்னாடி வரேன்"

"ஐயோ வேண்டாம் வேண்டாம்.. அங்கேயே நில்லுங்கள். பூலோகத்திற்கு சென்றீர்கள்.உங்கள் பெற்றோரை பார்த்து விட்டு மட்டும் வராமல் ஏன் இந்த கன்றாவிகளை கொண்டு வந்தீர்கள்"நதினும் வருணும் அங்கிருந்து வரும்பொழுது ஷாப்பிங் மால் சென்று அரூபமாக தங்களுக்கு வேண்டிய பொருட்களை மாயமாக எடுத்து கொண்டு அதற்கு ஒரு தங்க கட்டியை கல்லாபெட்டியில் வைத்து விட்டு வந்திருந்தனர். நதின் தன்னவளுக்காக தேடி தேடி வாங்கிய ஆடை எல்லாமே வித விதமான இரவு உடைகள். லிங்கிரி எனும் சொல்லப்படும் உள்ளாடை ரகங்கள்.

அதை ஆசையாக அவளுக்கு அணிய கொடுத்தால் அதை அணிந்து கண்ணாடியில் தன்னை பார்த்தவள் நொந்து போனாள். உள்ளே இருக்கும் அங்கங்கள் வெளிப்படுத்திய காட்சிகளே அவளுக்கு பகிரன்றது.அவன் முன் செல்ல வெட்கப்பட்டு நின்றுருந்தவளை கள்வன் பின்னிருந்து அணைத்தான்.

"ஐயோ நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள் நான் உங்களை இங்கே வரக்கூடாது என்று கூறினேன் அல்லவா..'

"நீ வர காணோம் அதான் நா வந்தேன்.. எங்க திரும்பு இந்த டிரஸ்ல நீ எப்படி இருக்கன்னு பாப்போம்.."

" ஐயோ வேண்டாம் என்ன கண்றாவி ஆடை இது.. இதை எப்படி போட்டுக் கொள்வது.. "

" நீ எப்படி போட்டு இருக்கியோ அப்படி தான் செல்லம்.."

" எனக்கு இந்த ஆடையே வேண்டாம் நான் என் வழக்கமான ஆடையை போட்டுக் கொள்கிறேன் நீங்கள் நகருங்கள்"

" உனக்கு இந்த ட்ரஸ் போட புடிக்கல அவ்வளவுதானே.. அப்ப கலட்டு"

"அதற்கு தானே செல்கிறேன்"

"நீ செல்லவே வேணா மாமா எதுக்கு டா செல்லம் இருக்கேன்.."என்றவன் அவள் திமிற திமிற தூக்கி சென்று தன் தேவைகளை தேடி கொண்டான். இவர்களின் காதல் நாளோறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நகர மோகினி கருவுற்றாள். அதர லோகமே மகிழ்ச்சி அடைந்தது."மாங்கானி ரொம்ப தேங்க்ஸ்டி. என்னயும் மனுஷனா மதிச்சு கல்யாணம் பண்ணி இப்ப எனக்கு ஒரு பாப்பாவும் பெத்து தர போற"

"உங்கள் இந்த பாவம் முகம் செட் ஆகவில்லை வருணரே"என்று அவனை பரிகசித்த மோகினி இப்பொழுது வருண் போல பாஷை பேசவும் கற்று கொண்டாள். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்க நண்பன் மகனுக்கு நதின் தான் பெயர் வைத்தான் ஏரன் என்று. ஏரன் என்றால் வான் போல என அர்த்தம்.குட்டி பையனை கொஞ்சி கொண்டிருந்த வர்ணிகா அந்த நேரத்தில் இன்னொரு மகிழ்ச்சியான விஷயத்தை நதினிடம் கூறினாள். அவள் தாயாக போவதை.

 அனைவரும் இரட்டிப்பு சந்தோஷத்தில் மூழ்கியிருக்க அடுத்த சில மாதத்தில் பிறந்தாள் நதின் வர்ணிகாவின் புதல்வி அதர லோகத்தை ஆளப்பிறந்தவள் அவளுக்கு ஆசை ஆசையாக பெயர் சூட்டினான் வருண் அஷ்வி என.வஜ்ரா மனைவி இப்பொழுது தான் கருவுற்று உள்ளது. மிமி சுசு தங்களது குட்டி சாத்தான் குழந்தைக்கு கொள்ளி வாய் பிசாசை ஆயாவாக நியமித்திருந்தனர்.

"மச்சான் இதெல்லாம் கனவு மாறி இல்ல"

"ஆமாடா.. நமக்கே புள்ள பொறந்துருச்சு ஆனாலும் ஏதோ கனவு மாறி இருக்கு"

" வாழ்க்க ரொம்ப புதிரானது மச்சான். எங்கேயோ பொறந்து வளந்து இங்க வந்து சேர்ந்து இங்க என்னென்னமோ நடந்து நீ இந்த உலகத்தோட வேந்தனா ஆயிட்ட.நா செத்துப் போயி காத்தோடு கலைஞ்சு போயிடாம என் பொண்டாட்டி கூட ஜாலியா இருக்கேன்.. "

"மச்சி நா உன்கையில ஒன்னு சொல்லிகனும்டா"

"இன்னாடா"

"ஐ லவ் யூ மச்சி"

"லவ் யூ டூ மச்சி"என்று இருவரும் கட்டி பிடித்து செல்லம் கொஞ்ச அங்கே வந்த வஜ்ரா

"பானை பானையாக சோமபாணம் குடித்து விட்டு இந்த அக்கபோரு செய்கிறீர்களே.. இது உங்களுக்கே அடுக்குமா.. மாமே நீங்கள் என்ன வேந்தனை காதல் பார்வை பார்த்து கொண்டிருக்கிறீகள்"அதர லோகத்தில் அனைவரும் நதினை வேந்தன் என்றும் வருணை சக்கரவர்த்தி என்று அழைத்து வருகிறார்கள். நதின் மறுத்தும் அவர்கள் அப்படியே கூப்பிட அதுவே வழக்கமாக்கியது.

"அதுவா மாமே நா என் நண்பன அவ்ளோ டாவடிக்குறேன் அதான்"

"நீங்கள் டாவடிப்பது இருக்கட்டும் மோகினி தேவி வருகிறார் அவர் உங்களை சாவடிக்காமல் பார்த்து கொள்ளுங்கள்"வஜ்ரா கூறியது தான் தாமதம் வருண் நதினை தள்ளி விட்டு நல்ல பிள்ளையாக நின்று கொள்ள மோகினி வரவும் அவர்கள் அதர கோட்டைக்கு செல்ல ஆயுதமாயினர்.ஏரன் அஷ்வியை விட்டு நகராமல் அடம்பிடிக்க வருண்"டேய் கண்ணா அழாதடா..இவ தான் உன் ஆளு.. இவ உன்ன மட்டும் இல்ல இந்த லோக்கதயே ஆள போறா. அப்படிபட்ட என் மருமவளுக்கு புருஷனாவ போறவன் இப்டி அழலாமா".. ஏரனுக்கு ஒன்றும் புரியாவுடினும் தந்தை குரல் கேட்டு அழுகையை நிறுத்தினான்.

இரவு மோகினி வருணின் மீசையை பிடித்து இழுத்து கொண்டே"எவ்வளவு தைரியம் இருந்தால் சோமபாணம் அருந்தி இருப்பீர்கள் உங்களை"

"அடியே பஜாரி கொஞ்சூண்டு தான்டி குடிச்சேன்.. நான் எல்லாம் எம்மா பெரிய குடிகாரன் தெரியுமா.. பெரிய அண்டாவுல எல்லா சரக்கயும் மிக்ஸ் பண்ணி மொண்டு குடிச்சவன்டி.என்ன சொட்டு சொட்டா குடிக்க வெச்சதும் இல்லாம பேச்சாடி பேசுற"

"ஓ உங்களுக்கு அந்த போதை தான் வேண்டுமென்றால் போங்களேன் யார் வேண்டாம் என்றது"மோகினி திருப்பி கொள்ள அவளை அணைத்தவன்

"அந்த போதையோட பெரிய போதை இங்க இருக்கே இத விட்டு நா எங்கடி போவேன் என் மாங்கனி"பேசி பேசியே மாங்கனியை மயக்கி விட்டான் வருண்.

"ஹேய் மீனுக்குட்டி இன்னும் கடலு கன்னின்னு நெனப்பா உனக்கு இந்த நேரம் தண்ணில நீந்திட்டு இருக்க.. வெளிய வாடி"

"நாம் என்ன மானிடர்களா உடல் நலம் குன்ற..பிறகு ஒன்று நீங்கள் சொன்னாலும் சொல்லா விட்டாலும் நான் கடல்கன்னி தான்"

"ம்க்கும் வால் போயும் பேச்சு அடங்கள.. உன்ன இருடி வரேன்" அவனும் தண்ணீரில் குதிக்க இருவரும் சற்று நேரம் நீந்தி விளையாடினார்கள்."அதரரே உங்களுக்கு நினைவு உள்ளதா.. நாம் முதன் முதலில் சந்தித்ததும் தண்ணீரின் உள்ளே தான்"

"அத்த எப்டி மறப்பேன் செல்லம்.. மாமா உன்ன பார்த்து கிறங்கி போய் நின்னத"அவன் பார்வை அவள் கழுத்திற்கு கீழ் செல்ல

"நீங்கள் கிறங்கி என்னைக் கிறுக்காக்கியது போதும்..வாருங்கள் தண்ணீருக்கு மேலே செல்லலாம்"

" ஏண்டி உனக்கு என்ன பாக்க எப்படி இருக்கு நான் பாட்டுக்கு சிவனேனு மேல தான் நின்னுட்டு இருந்தேன்.. சும்மா இருந்தவன நீந்தி உசுப்பேத்தி விட்டு இன்னும் உசுப்பேத்தி விடுற மாதிரி நம்ம மொத பாத்தத சொல்லி இன்னும் நல்லாவே ஏத்தி விட்டு இப்போ மேல போலாம்னு சொல்ற..அதெல்லாம் முடியாது வாடி இங்க"

"ஆங் போய்விடுங்கள் சொல்லிவிட்டேன்" அவள் குளத்து நீரில் மூழ்கி அவனுக்கு போக்கு காட்ட அவனும் சளைக்காமல் அவளுடன் விளையாடி இறுதியில் அவளுக்கு விட்டுக் கொடுப்பது போல் அவளை வென்று அவளின் இதழில் இதழ் பதித்தான்.இதழ் முத்தத்தின் முடிவில் லேசாக தலை பிடித்து அவள் கண்களில் தன் கண்களை கலங்க விட்டு"மீனம்மா எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் உடல் அழிந்தாலும் மெய் அன்பு என்றுமே என்பது அழியாதது உன் வரையில் உண்மையாகிவிட்டது. நீ எனக்கு கிடைத்த வரம்.அந்த நிகழ்வைப் பற்றி பேசக்கூடாது என்று சொன்னாய். ஆனால் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை.நீ என்னை மன்னித்து விட்டாய்.அது எனக்கு நன்றாக தெரியும். இருந்தபோதும் இன்னொரு முறை மன்னிப்பு கேட்கிறேன் என்னை மன்னிப்பாயா மீனம்மா"

இதோ மெய்யான அதர நதின் அவள் கண்களுக்கு தெரிகிறான். நூறாண்டுகள் கழித்தும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அவனின் பிழைகள் யாவும் அவள் மேல் கொண்ட அன்பால் நிகழ்ந்தது. இன்றும் வருந்தி மன்னிப்பு கேட்கிறான்.அவன் கேட்கும் மன்னிப்பை கொடுக்காவிட்டால் அவள் என்ன மனைவி.கொடுத்தாள் அவன் கேட்ட மன்னிப்பையும் அவன் கேட்காத தண்டனையையும்.மன்னிப்பை முத்தத்தால் கொடுத்து தண்டனையை உடலால் கொடுத்தாள் அதர நதினின் வர்ணிகா..

முற்றும்..

Comments

  1. A Legal Disclaimer is an official statement that protects your law firm from potential liability. This is essentially telling people who visit your website that the information listed is not legal advice, not subject to attorney-client privilege, and so on.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்