Posts

Showing posts from February, 2022

30 நெருங்கினா(ள்)ல்?

Image
ஹாய் டியரிஸ் ப்ளீஸ் என் சேனளுக்கு சப்போர்ட் பண்ணுங்க.. 🙏🏻🙏🏻❤️❤️❤️ https://youtube.com/channel/UChMcIeFRhMEK79zoNsM_Pmw எது அவளுக்கு தெரியக் கூடாது என்று வந்தியதேவன் இத்தனை நாள் நினைத்தானோ அது இன்று அவளுக்கு தெரிந்து விட்டது. அந்த நிலையிலும் அவனுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பெண்களின் பிடிவாத குணம் மட்டும் என்றுமே மாறாது என்பது ஐயம் திரிபற அவனுக்கு புரிந்து விட்டது. பேழையை கையில் வைத்துக் கொண்டே சிலையாக நின்றாள் குண்டலகேசி. அவளால் இதனை நம்ப முடியவில்லை.  அவள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதை புரிந்து கொண்ட வந்தியதேவன் அவள் தோளைத் தொட்டு உலுக்கினான். தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல திடுக்கிட்டவள் அவனைப் பார்த்தாள். அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டவன் " இதுக்கு தான் சொல்றது புருஷன் பேச்ச கேட்கணும்னு" " கொஞ்சம் உட்கார்ந்து பேசலாமா.. " அவளை அழைத்துக் கொண்டு தங்கள் அறைக்கு வந்தான். அங்கே வந்ததும் மெத்தையில் அவளை அமர வைத்து விட்டு இவன் சமையலறைக்குச் சென்று அவளுக்கு சூடாக குடிப்பதற்குத் காய்ந்த சூரியகாந்தி பூவை சுடு

29 நெருங்கினா(ள்)ல்

Image
நந்தன் அழகியின் கவனிப்பால் வேகமாக உடல் நலம் தேறினான்.அவளிடம் சகஜமாக பேச முயன்றான்.சொல்லப்போனால் அவளை சகஜமாகவே அவன் பேசினான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு இறுக்கத்தில் இருந்தாள் அழகி.தான் அடி வாங்கியதை கண்டு தான் அவள் பயந்து விட்டாள் என்று நினைத்தான் நந்தன்.அவனுக்குமே உள்ளூர ஒரு கேள்வி முண்டிக் கொண்டிருந்தது. அவனின் புரட்சிப் படையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் வெள்ளைக்காரரின் கையில் அகப்பட்டதுமே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள்.அப்படி இருக்க தன்னை மட்டும் எப்படி விடுதலை செய்தார்கள். அதுவும் ஊர் முழுக்க அவனை கழுவில் ஏற்றுவதை பற்றி தண்டோரா போட்டு அறிவித்தும் இந்த விடுதலை எப்படி கிட்டியது? அவனை பார்க்க வந்த சில நண்பர்களிடம் நந்தன் அழகி  அறியாமல் விசாரித்தான்.அவர்கள் அனைவரும் எப்படி என தங்களுக்கு தெரியாது என்று சொல்லி விட்டனர். பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் விசாரித்தான். உன் மனைவி எந்நேரமும் சிறைச்சாலையே கதியெனக் கிடந்தாள். பின்பு என்ன நினைத்தாளோ அந்த துரை பங்களாவிற்கு தனியாக சென்றாள். அதன் பிறகு தான் உனக்கு விடுதலை கிட்டியது என்று அழகியின் நடத்தையே மறைமுகமாக

28 நெருங்கினா(ள்)ல்?

Image
கதை நேரம்.. உங்களுக்கு பிடித்த கதைகள் ஆடியோ வடிவில் கேட்க❤️ என் சேனலை subscribe செய்து சப்போர்ட் செய்யுங்க டியரிஸ்❤️ https://youtube.com/channel/UChMcIeFRhMEK79zoNsM_Pmw குக்கிங் சேனல்  https://youtube.com/channel/UCdkT_nuhf4lmyZVufSpG4VA நந்தனை கழுவேற்ற வேண்டிய அவசியமே இல்லை.  ஏனெனில் அவனை அடித்த அடியில் அவன் பிணமாகத் தான் கிடந்தான்.  அவனது மனைவியை காணும் ஆசையில் மட்டுமே அவனின் உயிர் தொண்டை குழியில் ஒட்டிக் கொண்டு நின்றது.இந்த சூது வாது நிறைந்த உலகத்தில் அவளை எப்படி தனியாக விட்டுச் செல்வது என்று அவன் மனம் வினாடிக்கு ஒருமுறை நினைத்து வருந்தியது.ஆனால் என்ன செய்வது..  விதியை மாற்ற அவன் ஒன்றும் கடவுள் இல்லையே? அழகி தான் செய்த காரியத்தின் செயலால் தன்னுடைய கணவனுக்கு கிடைத்த தண்டனையை எண்ணி விக்கித்து போனாள்.அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அழகியை வசை பாடினார்கள். "நான் அப்பவே தல பாடா அடிச்சிக்கிட்டேன்.. பொட்டச்சி பேச்சு நாய் பேயுற மூத்திரத்துக்கு சமானம்னு கேட்டியா..ஊருல நாலு பெரிய மனுஷ மாருங்க இல்லாமையா போயிட்டானுங்க.. என்னமோ பெரிய சாவித்ரி மாதிரி போனியே புருஷன மீட்டுட்டு வர..

27 நெருங்கினா(ள்)ல்?

Image
ஹாய் டியரிஸ்.. உயிர் அலையுதடி ராவன் பனியை மறந்திருக்க மாட்டிங்க.. அவங்க இப்ப ஆடியோவா வராங்க.. என் youtube channel ல subscribe பண்ணி சப்போர்ட் பண்ணி அப்டியே ராவன் பனியை பாத்துட்டு வாங்க.. Moon's talk  https://youtube.com/channel/UChMcIeFRhMEK79zoNsM_Pmw அப்டியே என் குட்டி குட்டி குக்கிங் சேனலையும் subscribe பண்ணா புண்ணியமா போகும் 🙏🏻 ❤️🤣 https://youtube.com/channel/UCdkT_nuhf4lmyZVufSpG4VA ஒயிலழகி என்ன கனவா கண்டால் அவள் வாழ்வில் இப்படி ஒரு திருப்பம் நிகழும் என்று? பாட்டியின் திடீர் மறைவு..அவளின் திடீர் கல்யாணம்.திருமணம் முடிந்த கையோடு அவளை எட்டியும் பாராத உறவுகள். பிரமை பிடித்தவள் போல சுற்றிக் கொண்டிருந்தவளை காஞ்சிபுரம் அழைத்து வந்து ஒரு பெண்ணாக மாற்றினான் நந்தன். என்னதான் அவன் கணவனாக இருந்தாலும் அவளது மனதில் அவனுக்கான இடம் என்னவோ காலியாகத்தான் இருந்தது.அதில் குடி வர அவனும் எந்தவொரு வித்தையையும் செய்யவில்லை. அவளும் அப்படி ஒரு வித்தையை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நடப்பது எதுவாக இருந்தாலும் அது தானாக நடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நந்தன் அவள் இயல்பாக மாறினால்

26 நெருங்கினா(ள்)ல்?

Image
Do Support my channel🙏🏻❤️ https://youtube.com/channel/UCdkT_nuhf4lmyZVufSpG4VA தன்னுடைய பேத்தியின் வாழ்வு இனி நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சுகந்தம்மை பாட்டி இயற்கை எய்தினார்.. ஒயிலழகி எதுவும் பேசாமல் சிறிது நேரம் பாட்டியின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.பின்பு எழுந்து திண்ணையில் சென்று அமர்ந்து விட்டாள். அவளின் இந்த அமைதி நந்தனுக்கு புரிந்தாலும் அதனைப் பற்றி யோசிக்க அவனுக்கு நேரம் இல்லாமல் போனது. யாருமே இல்லாத  அழகிக்கு இனி எல்லாம் அவன் தான். பாட்டிக்கு அவன் கொள்ளி போட  ஏற்பாடு ஆகியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த ஊரில் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என மெல்ல கூட்டம் கூட ஆரம்பித்தது.  வீட்டின் முன்பு பாட்டியின் உடலை கிடத்தி அவரின் தலை மாட்டில் தேங்காய் உடைத்து இரு பக்கமும் வைத்து நடுவே விளக்கை வைக்க அதை அனைத்தையும் திண்ணையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் அழகி. அவளை யாருமே எதுவும் சொல்லவில்லை.இது அவளுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என்பது மட்டும் அங்கிருந்த அனைவருக்கும் நன்றாக புரிந்தது.நந்தன் அனைத்தையும் கவனித்துக் கொண்டான்.பாட்டிய

25 நெருங்கினா(ள்)ல்?

Image
ஹாய் டியரிஸ் இது என் youtube channel ஓட லிங்க்.. சப்போர்ட் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க.. இது குக்கிங் செனல்.. மலேஷியா சமையல் சுலபமான முறையில்..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 https://youtube.com/channel/UCdkT_nuhf4lmyZVufSpG4VA நந்தன் அழகியை அழைத்துக்கொண்டு மலையடிவாரத்துக்கு வந்தபோது தூரத்தில் தெரிந்த தனது குடிசையின் முன் சுகந்தம்மை பாட்டி  மாப்பிள்ளை வீட்டாரின் காலில் விழுவது நிழல் போல அழகியின் கண்களுக்கு தெரிந்தது."யோவ் அது என் ஆச்சி தான.. அது யாரோட காலுலயோ விழற மாறி இருக்கே.. நல்லா பாரு".. அவனும் அந்த காட்சியை பார்த்து அதிர்ந்து நிற்க அழகி கேள்வி கேட்ட மறுநிமிடம் ஓட ஆரம்பித்தவன் "ஆமா குட்டி அது நின்ன பாட்டி தான்" என்று நிற்காமல் ஓடினான்.. மனம் படபடக்க அவனையும் விட வேகமாக ஓடினாள் அழகி. என்னதான் வேகமாக ஓடினாலும் அதற்குள் மாப்பிள்ளை வீட்டார் காலில் விழுந்து "ஐயா என் சாமி.. என் பேச்ச கேளுங்கய்யா.. என் பேத்தி சொக்கத் தங்கம்ய்யா. இந்த வெள்ளைக்காரனுக்கு பயந்து தான் புள்ள காட்டுக்குள்ள ஓடிருச்சு.. அது எந்த தப்பும் பண்ணலய்யா.. அது மேல பழிய போட்டு இந்த கண்ணாலத்த நிறுத்திடாத

24 நெருங்கினா(ள்)ல்?

Image
ஒயிலழகியை தூக்கிக் கொண்டு நந்தன் தன்னால் முடிந்தவரை வேகமாக ஓடினான். அவனின் தேக்கு மர தேகம் பூங்கொடியவளின் உடல் எடையை தூசியென தாங்கிக் கொண்டது. பின்னால் அவர்களை துரத்தி வந்த வெள்ளையனின் ஆட்கொள்ளும் சலிக்காமல் ஓடி வர எங்கேயும் நிற்காமல் ஓடிய நந்தன் மலை உச்சியை சென்றடைந்தான். அதுவரை வேதாளம் போல் அவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டு பயணம் செய்தவள் என்னவோ அவளே கால் வலிக்க ஓடி வந்த மாதிரி ஐயோ அம்மா என்று அவள் மேலிருந்து இறங்கி மூச்சு வாங்கினாள்.. "ஓய் குட்டி முதுகு நோக நான் நின்ன தூக்கி வன்னு.. என்னமோ நீயே ஏறி வந்த மாறி நன்னாயின்டு நடிக்காம்" "யாருய்யா நடிக்குறா.. உனக்கென்ன ஒய்யாரமா தூக்கிட்டு வந்து சேத்துட்ட பருத்தி மூட்ட மாறி.. எனக்கு தான்யா தொங்கி கிட்டே வந்தது உடம்பு வலியா இருக்கு.." "இறங்கி நடக்க வேண்டியதல்லோ" "எதுக்கு இருட்டுல எங்கயாச்சும் கால வெச்சு பாம்பு போட்டு தள்ளவா.. யோவ் ஆளு ஒரு மார்க்கமா தான்யா திரியுற.. ஆமா இப்ப மல உச்சியில இருக்கோமே எப்பய்யா கீழ போவோம்" "இவட ஒரு நம்பூதிரி உண்டு குட்டி.. வரும் அவர நோக்கி வராம்.." &