2 காதல் காட்டுமிராண்டி
கைபேசி விடாமல் அலறிக் கொண்டிருந்தது. மேஜையில் கேட்பாரற்று கிடந்த கைபேசிக்கு அதனை சுற்றி இருப்பவர்கள் நினைப்பதை அறிந்து கொள்ள முடியுமா என்ன? அதனுடைய அவசரத்திற்கு அது விடாமல் அழைத்துக் கொண்டே கிடந்தது.. அருகே சோபாவில் அமர்ந்திருந்த ரேணு சீரியலில் மூழ்கியிருந்தாள். இதுவே மற்ற நேரமாக இருந்திருந்தால் ஓடோடி வந்து யார் அழைக்கிறார்கள் என்பதை வேவு பார்த்திருப்பாள்.
சீரியலில் முக்கியமான கட்டம் ஓடிக்கொண்டிருக்க, அலைபேசி சத்தம் அவளது கவனத்தை பெரிதும் கலைத்தது. ரேணுவின் பொறுமை எல்லை மீறி போய்விட" அம்மா.. " ரேணு கத்திய கத்தலில் சரோஜா சமையல் கட்டில் இருந்து ஓடி வந்தார்.
" என்னடி ரேணு எதுக்கு இப்படி கத்துற? "
" எங்கம்மா போய் தொலைஞ்ச.. எவ்வளவு நேரம் போன் அடிக்குது. அத கூட எடுக்காம அப்படி என்ன உனக்கு வேலை சமையல் கட்டுல?"
" நாய்க்கு வேலையும் இல்ல நிக்க நேரமும் இல்லைன்னு சொல்லுவாங்க.. இந்த வீட்டில மாமியாருனு தான் எனக்கு பேரு.. கால நீட்டி போட்டு ஒரு நிமிஷம் அக்கடான்னு உட்கார முடியுதா? எந்த வேலை செஞ்சாலும் அரைகுறை. நான் கண்கொத்தி பாம்பா பக்கத்துல இல்லனா அரைகுறையா ஒரு வேலையை செஞ்சுட்டு வந்து உட்கார்ந்துக்குவா மகராசி.. மதிய சமையலுக்கு என்னென்ன காய் வேணும்னு எடுத்து வச்சுட்டு இருந்தேன்.
நீ இங்கதானே உக்காந்து டிவி பாத்துட்டு இருக்க. கொஞ்சம் எந்திரிச்சு வந்து அந்த போனை எடுத்து பேசினா குறைஞ்சா போயிடுவ?"
"ஆங்.. எவ்வளவு நல்ல கட்டம் சீரியல்ல போய்க்கிட்டு இருக்கு.. உன் மருமக போன் தான் விடாம அடிச்சுக்கிட்டு இருக்கு."
" அவ ஃபோனா? அவளுக்கு யாருடி இந்நேரத்துல போன் பண்றது? " கேள்வியாக மகளை நோக்கினார் சரோஜா.
" வேற யாரு உன் அன்னக்காவடி சம்பந்தி கூட்டம் தான்."
" என்னவாம்"
" தெரியலம்மா அவள வந்து போன் எடுத்து பேச சொல்லு.. விடாம அடிச்சுக்கிட்டு இருக்கு" ரேணு நொடித்துக் கொள்ள மீண்டும் கைபேசி அலறியது. இம்முறை சரோஜாவே கைபேசிக்கு உயிர் கொடுத்தார்.
" ஹலோ.. "
" ஹலோ சரோஜாவா? நான் அண்ணி பேசறேன் மா" பதட்டமாக ஒலித்தது பெரியநாயகியின் தாயார் மீனாட்சியின் குரல்.
" அதான் தெரியுதே.. ஏன் அண்ணி காலங்காத்தால உங்களுக்கு தான் வேலை இல்லாம வெட்டியா இருக்கீங்கனா நாங்களும் அப்படியே இருப்போம்னு நினைப்போ? எதுக்கு விடாம போன் அடிச்சுக்கிட்டு இருக்கீங்க. உங்க மகளுக்கு நல்ல காலத்திலேயே உடம்பு வளையாது வேலை செய்ய. இப்படி நொடிக்கு ஒரு வாட்டி போன் அடிச்சா வீட்டு வேலை விளங்கின மாதிரி தான்." அவ்வீட்டின் வேலைகள் அனைத்தையும் தானே செய்வதை போல சரோஜா பேசுவதைக் கேட்டு மீனாட்சி ஆச்சரியப்படவில்லை.
இன்று நேற்றா அவர் சரோஜாவை பார்த்துக் கொண்டிருக்கிறார்? திருமணம் ஆகி முப்பத்தி மூன்று வருடங்களாக நாத்தனார் சரோஜாவை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார் மீனாட்சி. பெரியநாயகி வேறு யாருமில்லை சரோஜாவின் சொந்த அண்ணன் மகள்.
நாத்தனாரின் குணம் தெரிந்து, முக்கியம் என்றால் ஒழிய மகளுக்கு அழைக்க மாட்டார் மீனாட்சி.
" இல்லம்மா சரோஜா.. உங்க அண்ணனுக்கு நாலஞ்சு நாளா உடம்பு அனலா கொதிக்குது. ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் பார்த்தோம். ஜுரம் இறங்குற மாதிரி தெரியல. ஃபிக்ஸ் வந்து கை கால் எல்லாம் இழுக்குது. சுயமே இல்லாம ஏதேதோ உளறிட்டு இருக்காரு. உன் அண்ணன் மனசுல நாயகிய பாக்கணும்னு ஆசை இருக்கோ என்னவோ? அதான் ஒரு எட்டு நீங்க எல்லாரும் வந்து அவர பார்த்துட்டு போயிட்டீங்கன்னா?
"ச்சீ ச்சீ.. உங்க வீட்டுக்கெல்லாம் நாய் வருமா? கூட பொறந்த அண்ணனாச்சேன்னு பரிதாபப்பட்டு உங்க வீட்டு பொண்ண எடுத்ததே பெருசு. உங்க புருஷனுக்கு உடம்பு முடியாம போறது என்ன புதுசா? காய்ச்ச வந்தா ஒன்னும் செத்துற மாட்டாரு.. அப்படியே ஏதாச்சும் ஒன்னுனா மட்டும் தகவல் சொல்லுங்க. பொறந்த வீட்டு கோடி போட வந்து சேர்றேன்" நாக்கில் நரம்பில்லாமல் பேசினார் சரோஜா. விளம்பர இடைவெளி விட்டுவிட சோபாவில் இருந்து எழுந்து அம்மா அருகே வந்து நின்றாள் ரேணு.
மீனாட்சிக்கு அளவுக்கு அதிகமான கவலையின் காரணமாக, பல சுருக்கங்கள் விழுந்திருந்த கண்கள் கண்ணீரை மௌனமாக கொட்டியது. அவரால் சரோஜாவை ஒரு வார்த்தை பேச முடியவில்லை. படிக்காத பாமர பெண் அவரைப் பொறுத்தவரை, வசதியில் மேன்மையில் இருக்கும் சரோஜாவுக்கு மட்டுமே பேச நாக்கு கொடுத்திருக்கிறார் கடவுள்.
" சரோஜா நீயே இப்படி பேசினா எப்படிமா? நீங்க யாரும் வரலைன்னாலும் பரவாயில்லை.. உன்னை கெஞ்சி கேட்டுக்கறம்மா ஒரே ஒரு தடவை நாயகிய அனுப்பி விடுமா.." இதுவே கைபேசி இல்லாமல் நேரில் நின்று பேசிருந்தால் இந்நேரம் சரோஜா காலில் கூட விழுந்திருப்பார் மீனாட்சி.
சரோஜாவும் அதை நினைத்து சற்று நேரம் மௌனமாக இருந்தார். மீனாட்சி தன் காலில் விழுந்து கதறுவதைப் போல பிம்பம் அவர் கண் முன் தோன்றி மறைந்தது. நல்ல வாய்ப்பு தவறிய சலிப்பு அவரது முகத்தில். இருந்தும் உடனே பதில் சொல்லாமல் வீட்டில் பேசிவிட்டு சொல்வதாக தொடர்பை துண்டித்தார் சரோஜா.
" யாருமா அத்தையா? "
" அந்த பிச்சைக்காரி தான்"
" என்னவாம்"
" என் அண்ணன் இருக்கானே அந்த விளங்காதவன். அவனுக்கு உடம்புக்கு முடியாம இழுத்துகிட்டு இருக்கான். பெரியநாயகி பார்த்தா உயிர் பூ போல போயிரும்னு அவன் பொண்டாட்டி சொல்றா. இவள அங்க அனுப்பிட்டா இங்க யாரு வேலை பார்க்கிறது.."
ரேணுவின் மூளை படு வேகமாக வேலை செய்தது. இன்னும் இரண்டு நாளில் பள்ளி விடுமுறை ஆரம்பம் ஆகிறது. சரோஜாவும், எங்காவது குடும்பத்தோடு டூர் சென்று வரலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். கணேசனின் அக்கா, வள்ளியின் குடும்பமும் டூர் செல்வதாக இருந்தால் தாங்களும் உடன் வருவதாக சொல்லி இருந்தார்கள். டூர் செலவை அவர்கள் தலையில் கட்டுவது மிகவும் சுலபம்.
மிகச் சிலருக்கு மட்டுமே மட்டமான வக்கிர புத்தி இருக்கும். வலியவர்கள் எளியவர்களை மிதிப்பது ஆண்டாண்டு காலமாக நடப்பது தான். ஆனால் எதிர்த்து பேச முடியாத நிலையில் நிற்பவருக்கு, ஒரு பொட்டு நல்லதும் நடக்கக்கூடாது என எதிர்பார்ப்பவர்கள் இன்னும் நம்மை சுற்றி இருக்க தான் செய்கிறார்கள். ரேணுவும் அப்படித்தான். பெரியநாயகியை அவளுக்கு சின்ன வயதில் இருந்தே பிடிக்காது. ரேணு பால் நிறத்தில் இருப்பாள். நிறமிருந்து என்ன துளி லட்சணம் அவள் முகத்தில் இருக்காது.
பெண் என்றால் நிறத்தை விட லட்சணம் மிக அவசியமல்லவா? அவளது கணவன் கூட அவளை கேலி செய்வான் நீ ஒரு பிளேவோட் என. ஒடிசலான தேகம். எலிவால் கூந்தல். முன்னழகு பின்னழகு இவற்றுக்கு அர்த்தமே தெரியாது அவளுக்கு. இந்த அழகில் கை கால்களில் கரடியைப் போல முடி வேறு. கண்ட களிம்புகளை முகத்தில் போட்டு இருக்கும் கலரை இன்னும் மெருகேற்றுகிறேன் என்று, நன்றாக இருந்த முகத்தை கெடுத்து குண்டும் குழியுமாக முகம் இப்போது காட்சியளிக்கிறது.
அவளுக்கு நேர் எதிராக இருப்பவள் பெரியநாயகி. எலுமிச்சை நிறத்தில், தொடையில் வந்தடிக்கும் கூந்தல். எடுப்பான மார்பகங்கள். கிறங்க வைக்கும் பின்னழகு. வேக்சிங் செய்யாமலேயே கை கால்களில் முடிகள் இல்லாமல் வளவளவென இருக்கும். கழுவி துடைத்து பொட்டு வைத்த முகத்தில், சோகம் டன் கணக்கில் அப்பி கிடந்தாலும், அழகிய நீண்ட கண்களோ, சிவந்த இதழ்களோ, கூறிய நாசியோ, பளபளக்கும் கன்னங்களோ ஏதோ ஒன்று அவளை பேரழகியாக காட்டிவிடும்.
இதுவே ரேணு, பெரியநாயகியை வெறுப்பதற்கு போதுமான காரணங்களாக இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் பெரியநாயகி மட்டம் தட்டுவதை பொழுதுபோக்காக வைத்திருப்பவள் ரேணு. டூர் என்றால் பெரியநாயகியும் உடன் வருவாள். அங்கே அவள் வந்து செய்ய ஒரு வேலையும் இருக்காது. பெரிய மகாராணி போல அவளும் ஊரை சுற்றிப் பார்ப்பாள். இதை நினைக்கும் போதே ரேணுவுக்கு பற்றி கொண்டு வந்தது.
இப்போது மீனாட்சி சொன்ன தகவல் இன்பத்தேன் வந்து ரேணு காதில் பாய்ந்தது."அம்மா, பேசாம அவள இன்னும் ரெண்டு நாள்ல அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டுரு.."
"ஐயோ வீட்டு வேலை" நெஞ்சில் கை வைத்தார் சரோஜா.
டூர் பற்றிய தனது திட்டமிடுதலை அம்மாவிடம் பகிர்ந்தவள்" அம்மா டூர் காசு எல்லாத்தையும் அத்தை தலையில கட்டிடலாம். நாம மட்டும் குடும்பத்தோட ஜாலியா போயிட்டு வரலாம்.. இவ என்னத்துக்கு கூட அட்ட மாதிரி.. ஆயிரம் இருந்தாலும் அங்க இழுத்துகிட்டு கிடக்கிறது உன்னோட அண்ணன். நாள பின்ன அவருக்கு ஏதாச்சும் ஒன்னு ஆயிருச்சுன்னா உன் மேல தான் பழி வரும். சும்மாவே உன்னோட அண்ணிக்கு உன்ன கண்ட ஆகாது. அப்பாவி மாதிரி மூஞ்சிய வெச்சிக்கிட்டு உன் மேல பழிய தூக்கி போட்டுரும் அந்த பொம்பள." இன்னும் ஏதேதோ சொல்லி தாயை ஒப்பேற்றினாள் ரேணு. இறுதியில் சரோஜாவுக்கும் மகள் சொல்வதே சரியென பட, மாடியில் துணி காய போட போயிருந்த பெரியநாயகி இறங்கி வந்ததும் மீனாட்சி அழைத்ததை சொன்னார்.
கூடவே தந்தையை பார்க்க அனுமதி கொடுத்ததை நினைக்கும் போது தான் பெரியநாயகிக்கே ஆச்சரியமாக இருந்தது. சரோஜாவின் அனுமதியோடு மீனாட்சிக்கு அழைத்து, இன்னும் இரண்டு நாட்களில் தான் சென்னை வருவதாக கூறினாள்.
இரவு வீட்டிற்கு வந்த திலீப்புக்கு, இரண்டு நாட்களில் பெரியநாயகி அவளது வீட்டிற்கு செல்லப் போகும் செய்தி பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது. அவனது காம பசிக்கு எதை தீனியாக போடுவான்? எங்கே குழந்தை பிறந்தால் அவனது காம லீலைகளுக்கு இடமில்லாமல் போய்விடுமோ என்று பயந்து, இப்போது குழந்தை வேண்டாம் என மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்று, அதற்கு பலனாக ஒவ்வொரு நாள் இரவும் மாத்திரை உட்கொள்கிறாள் பெரியநாயகி.
ஆனால் வெளியே இந்த ரகசியத்தை திலீப் சொல்லவே மாட்டான். பார்க்கும் சொந்த பந்தங்கள் சுற்றத்தார் அனைவரும் வெந்தப் புண்ணில் வேலை பாய்ச்சுவதை போல" விசேஷம் எதுவும் இல்லையா" கேட்டு வைப்பர். உண்மையை அவர்களிடம் சொல்லவா முடியும்? சிறிய புன்னகையோடு அவர்களை கடந்து விடுவாள் பெரியநாயகி.
சரோஜாவுக்கும் ரேணுவுக்கும் இந்த உண்மை தெரிந்தாலும், வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல"வயித்துல புள்ள பூச்சி உண்டாகாதவள கட்டி வெச்சு என் மவன் வாழ்க்கையே நாசமா போச்சு.. ஒரு கோயில் குளத்துக்கு போக முடியல. எழவு வீட்டுக்கு போக முடியல. கல்யாண காட்சிக்கு போக முடியல. அட மாவுக்கு போவ முடியல.. எங்க பார்த்தாலும் என்ன சரோஜா விசேஷம் இல்லையான்னு கேட்டு மானத்தை வாங்குறாளுங்க..வயிறு விளங்காதவள என்னத்த சொல்ல.. ம்ம்ம் எப்ப அந்த ஆத்தா மகமாயி என் குடும்பத்துக்கு ஒரு வாரிச கொடுக்கப் போறாளோ" நீட்டி முழக்குவார் சரோஜா.
திலீப் முடியவே முடியாது என சரோஜாவிடம் ஒரேடியாக சொல்லி விட்டான். அவனை சமாதானப்படுத்துவதற்குள் நாக்கு தள்ளி விட்டது, அம்மா மகள் இருவருக்கும். இறுதியில் ஒரு வழியாக சமாதானம் ஆகிவிட்டான் திலீப்.. சரோஜா மகனிடம் இவ்வளவு போராட வேண்டிய அவசியமே கிடையாது. அத்தை மகள் ஹேமா வருவாள் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், அந்த இரவே, கிடைக்கும் ரயிலில் மனைவியை பெட்டி படுக்கையோடு ஏற்றி அனுப்பிருப்பான் திலீப்..
தனக்கு திருமணம் ஆகிவிட்டாலும், அரேபிய குதிரை போல் இருக்கும் அத்தை மகள் ஹேமா மீது தனிப்பட்ட தாபம் திலீப்புக்கு. அடுத்து வந்த இரு நாட்களும் பெரியநாயகியின் பெண்ணுறுப்பே சோர்ந்து போனது.. அவளால் தரையில் கூட சம்மனமிட்டு அமர முடியவில்லை. ஒழுங்காக நிற்க முடியவில்லை..
வெறிபிடித்த மிருகத்தை விட கேவலமாக, பெரியநாயகியை வேட்டையாடி இருந்தான் திலீப்.. ரேணு, அத்தை வள்ளிக்கு தொடர்பு கொண்டு டூர் செல்லலாம் என்று கூறி விட்டாள். டூர் வேலை ஒரு பக்கம் ஏகபோகமாக நடந்து கொண்டிருக்க, பெரியநாயகி சென்னைக்கு செல்ல தனக்கு வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். இங்கிருந்து ஏதாவது ஒன்றை அமுக்கி சென்று அம்மா வீட்டில் கொடுத்து விடுவாள் என, பெரியநாயகி பெட்டி எடுக்கும் போதும் அவள் அருகே நின்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார் சரோஜா.
திலீப்பும், பெரியநாயகியோடு சேர்ந்து சென்னை சென்று அவனது மாமா கிருஷ்ணனை, நலம் விசாரித்து விட்டு வருவது என முடிவானது. அங்கே பெரிய நாயகியின் தங்கை, மணிமேகலையை பார்க்கும் ஆசையில் திலீப்பும் நாக்கை தொங்கப் போட்டு கிளம்பி விட்டான்.
அப்பாவை பார்ப்பதை விட, அடுத்த ஏழு நாள் இந்த நரகத்திலிருந்து விடுதலை என்பதை நினைக்கும் போது தான் சின்னதாய் மனதில் குளிர்ச்சி பரவியது பெரியநாயகிக்கு. சென்னைக்கு செல்லும் ரயிலில் கணவனின் அருகே அமர்ந்திருந்த போது கூட அவள் அறியவில்லை, இதுதான் அவள் தலையெழுத்தை மாற்ற போகும் பயணமென.
தொடரும்..
Comments
Post a Comment