5 காதல் காட்டுமிராண்டி





கைப்பேசி அடித்துக் கொண்டே இருந்தது. மணிமேகலையும் மீனாட்சியும் கடைக்கு சென்று இருக்க வீட்டில், தந்தையை கவனித்துக் கொண்டு மற்ற இரு சகோதரிகள் மட்டுமே இருந்தார்கள்.

கைபேசி விடாமல் அடிக்க, சிந்தாமணி அதை கவனித்து விட்டு" நாயகி, உன் புருஷன் தான் டி போன் பண்றான். நாலஞ்சு வாட்டி பண்ணிட்டான். இதுக்கு மேல நீ எடுக்காம இருந்தா என்ன ஆட்டம் ஆடுவானோ தெரியாது"

பெரியநாயகி அப்போதும் அசராமல் அமர்ந்து இருந்தாள். அவளது கண்கள் கலங்கிருந்தது. சிந்தாமணி ஆதரவாக பெரியநாயகி பக்கத்தில் அமர்ந்து" என்னடி இப்ப எதுக்கு அழற? "

" என் புருஷன் ஏன் போன் பண்றான்னு உனக்கு தெரியுமா? "

" அந்த வீணா போனவன் எதுக்கு போன் பண்றான்னு எனக்கு எப்படி தெரியும்.. இதுவே என் புருஷனா சொல்லு.. காசுக்காக தான் கண்டிப்பா போன் பண்ணுவான்"

"ப்ச் இவன் எதுக்கு பண்ண போறான்? ஏன்க்கா உனக்கே என்ன பத்தி நல்லா தெரியும்.. நான் மனசால கூட தப்பா நினைச்சது இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடி யாரையும் லவ் பண்ணதும் இல்ல. கல்யாணம் ஆனதும் என் புருஷன் இப்படித்தானு தெரிஞ்சு, வாய மூடிட்டு வாழ்ந்துட்டு இருக்கேனே தவிர அவனுக்கு துரோகம் செய்யணும்னு நான் நினைக்கவே இல்ல. ஆனா ஒவ்வொரு நாளும் திலீப், நான் கேவலமானவன் இல்ல கேடு கெட்டவன்னு நிரூபிச்சிட்டு இருக்கான்.. இப்ப எதுக்கு ஓயாம போன் பண்றான் தெரியுமா?


அங்க டூருக்கு மாமாவோட அக்கா பொண்ணு ஹேமா வந்திருப்பா.. அவளுக்கு மனசுல பெரிய அழகின்னு நினைப்பு. எல்லா ஆம்பளையும் அவ அழகுல மயங்கி விழுவனும். கல்யாணம் ஆனவன் ஆகாதவன் அவளுக்கு கணக்கு இல்ல. எவனா இருந்தாலும் அவள அழகுல மயங்கி நிக்கணும். என் புருஷன பத்தி உனக்கு சொல்லவே வேணாம். கல்லுக்கு புடவை கட்டி விட்டால் கூட, இந்த ஆளுக்கு மூடு கிளம்பிரும்.

அந்த ஹேமா நல்லா இவன உசுப்பேத்தி விட்டிருப்பா.. காட்றதெல்லாம் கண் குளிர காட்டிட்டு தொட போற நேரத்துல, பக்கத்துல கூட சேர்த்துருக்க மாட்டா. இவருக்கு மூடுல என்ன செய்யறதுன்னு தெரியாம, இப்ப வீடியோ கால் பண்ணி எனக்கு அதை தொறந்து காட்டு, இங்க காட்டுனு காட்டுனு கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம என் உயிர போட்டு வாங்குவான்." சிந்தாமணிக்கு அதைக் கேட்கும் போதே காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதை போல இருந்தது.

" வேற எதுக்காவது போன் பண்ணி இருக்கலாம் இல்ல"

" கண்டிப்பா இல்ல ஏன்னா நேத்தும் இதுதான் நடந்துச்சு.. என் புருஷனுக்கு நேரம் காலம் இல்லக்கா. எத்தனை தடவை ஆபீஸ்ல இருந்துகிட்டு, அவருக்கு வாட்ஸ் அப்ல, ஒட்டுத்துணி இல்லாம படம் அனுப்ப சொல்லிருப்பாரு தெரியுமா? நான் அனுப்பாம ரெண்டு மூணு தடவ முத மொரண்டு புடிச்சேன். அன்னைக்கு ராத்திரி எல்லாம் நரகம் என் கண்ணு முன்னுக்கு வந்து வந்து போணுச்சு.

அந்த ஆளுக்கு தெரிய மாட்டுது, அவர் கையில போன் இருக்கிற வரைக்கும் சரி. வேற யார் கைக்காச்சும் போன் போனா என் மானம் போய்டாதா? போட்டோ பார்த்தா டெலிட் பண்ணாவது பரவால்ல. அப்படியே வச்சிருக்கிறது.. என்ன அம்மணமா பாத்துகிட்டே இருக்கணும் அந்த ஆளுக்கு. அப்படி ஒரு வக்கிர புத்தி. இன்னிக்கு எனக்கு டேட். என்னால முடியல அக்கா.. அங்க இருக்கும்போது நாளு கிழமைனு ஒன்னும் இல்ல.." பெரியநாயகி பெருமூச்சு விட்டாள்.

சிந்தாமணி வாழ்க்கையில் முதல் முறையாக வலிப்புக்கு நன்றி சொன்னாள். வலிப்பு மட்டும் வரவில்லை என்றால் இந்நேரம் அவள் அல்லவா இந்த நரகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பாள். திலீப் ஓயாமல் அழைத்துக் கொண்டே இருந்தான். அதற்கு மேலும் விட்டால் சரி வராது என சிந்தாமணியே சென்று அழைப்பை எடுத்தாள்.

" சனியனே பீடை, போன் எடுக்காம அங்க எவன் கூடடீ இருக்க" காதில் கேட்க முடியாத கொச்சை வார்த்தைகளால் மனைவியை அர்ச்சித்தான் திலீப். அவனது வெளி தோற்றத்திற்கும் அவனது உள் அழுக்குக்கும் சம்பந்தமே கிடையாது. சிந்தாமணிக்கு தங்கையை நினைத்து பரிதாபமாக இருந்தது.

" ஹலோ"என்றாள். குரலை வைத்தே அது சிந்தாமணி என்று தெரிந்து போயிற்று அவனுக்கு.

"ஹெலோ.. சிந்தாவா? நீ ஏன் போன் எடுக்குற.. உன் தங்கச்சி எங்க"

" நாயகி, கடைக்கு போய் இருக்கா அம்மா கூட. போன்ல சார்ஜ் இல்லன்னு வீட்டில வச்சுட்டு போயிட்டா"

" வீட்ல தனியாவா இருக்க சிந்தா" திலீப்பின் குரல் குழைந்தது.

" இல்ல பக்கத்து வீட்டு அக்கா இருக்காங்க."

" அந்த பொம்பளைக்கு நம்ம வீட்ல என்ன வேலை"

" அது ஆட்டுக்கல்ல ஆட்ட வந்தாங்க.. " வாய்க்கு வந்த பொய்யை அடித்து விட்டாள் சிந்தாமணி.

"நீயும் ஆட்டுவியா" மனைவியின் சகோதரி அதிலும் திருமணமானவள் என்ற எண்ணமே இல்லாமல், இரு பொருள் பட அவன் சொன்ன விஷயத்தை கேட்டு சிந்தாமணிக்கு பற்றி கொண்டு வந்தது. அவள் ஏதாவது வாய் துடுக்காக சொல்ல போக, ஒன்று தங்கைக்கு இதனால் பெரிய ஆபத்து. இன்னொன்று திலீப் நேராக  சேகருக்கு அழைத்து இதை வற்றி வைத்து விடுவான். பணம் வாங்கி வரச் சொன்னால் ஊர் வம்பை விலைக்கு வாங்கி வருகிறாயா என்று அவளின் விளங்காத கணவன் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்.

எப்படியோ திலீப்பின் அழைப்பை வைத்து விட்டு திரும்பியவளை பெரியநாயகி " உன்கிட்டயும் கடலை போட்டு இருப்பானே"

" எப்படி டி இவன் கூட எல்லாம் வாழ்ந்துட்டு இருக்க"

" நம்மள மாதிரி ஆளுங்களுக்கு சாவும் வராது வாழவும் முடியாது" பெரியநாயகி சொல்வது உண்மைதானே.

கடைக்குச் சென்ற மீனாட்சியும் மணிமேகலையும் வீட்டிற்கு வந்துவிட, இரவு சமையலுக்கான வேலை ஓடிக்கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து தங்கவேலுக்கு அளவுக்கு அதிகமாக மூச்சை இறைத்தது. பெரியநாயகி வந்ததிலிருந்து அவளிடம் ஓர் இரு வார்த்தைகள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தவர்,வலியின் வீரியம் தாங்க முடியாமல்

" என்ன கொன்னுருங்க.. என்ன கொன்னுருங்க.. என்னால முடியல.. ஐயோ என்ன கொன்னுருங்க" தங்கவேலு போட்ட சத்தத்தில் அக்கம் பக்கத்தில் இருந்த கூட்டம் எல்லாம் திரண்டு விட்டது.

வீட்டுப் பெண்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதிர்வீட்டு பரமசிவம்" மீனாட்சி அக்கா இதுக்கு மேல விட்டா சரி வராது.. தூக்குங்க ஆஸ்பத்திரி கொண்டு போய்டலாம்" பரமசிவம் ஆட்டோ பிடித்து வர தங்கவேலுவை தூக்கிக் கொண்டு குடும்பமே ஆஸ்பத்திரிக்கு ஓடியது.

மீண்டும் அதே தனியார் மருத்துவமனை.  தங்கவேலுவை அரசு மருத்துவமனையில் சேர்க்க மனம் விட்டு போனது. இத்தனை ஆண்டுகளாக அங்கே தான் பார்க்கிறார்கள். பலன் தான் பூஜியம். மருத்துவர்கள் அன்று சொன்னதை தான் இப்போதும் சொல்கிறார்கள். கிட்டினியில் கட்டி வந்து வெடித்து, இப்போது சலம் வைத்து விட்டது. அதன் தாக்கம் தான் வயிறு வரை பரவி வலியை கிளப்பிருக்கிறது.விடிந்து விட்டது.

உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள். பணத்திற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. வேறு வழியில்லாமல் பெரியநாயகி திலீப்புக்கு அடித்தாள். ஹேமா ஏற்றிவிட்ட சூட்டை தணிக்க, டூர் வந்ததை மறந்து அவன் அந்த மாதிரி பெண்களை தேடி கிளம்பி விட்டான். மனைவியின் அழைப்பை பார்த்தும் வேண்டுமென்றே அதை தவிர்த்து விட்டான்.

சரோஜாவுக்கு அழைத்தால், காதில் கேட்க முடியாத வார்த்தைகளால் பேச்சு வாங்க வேண்டியது. மாலா, சிந்தாமணி அழைத்த வேகத்திற்கு பணம் தயாராகி விட்டதா என்று கேட்கிறார். மற்ற இரு தங்கைகள் போனை எடுக்கவே இல்லை. மணிமேகலை தன் கல்லூரி தோழிகளிடம் கேட்டுப் பார்த்தாள். உருட்டி பிரட்டி அஞ்சாயிரம் தேறியது. மீனாட்சி தன் வேலை செய்யும் இரு வீடுகளிலும் கண்ணீர் விட்டு கதறினார்.

மேலும் ஒரு மணி நேரம் வீட்டில் வேலை செய்ய வேண்டும் என பேரம் பேசி, இரு வீட்டிலும் ஆளுக்கு அஞ்சாயிரம் தந்தார்கள். அவர்களின் தேவை இலட்சக்கணக்கில் இருக்கும் போது 15 ஆயிரம் எந்த மூலை?

என்ன செய்வதென்றே புரியாமல் பெண்கள் இடிந்து அமர,மீனாட்சி நினைவு வந்தவர் போல"வீட்டில சாமி படத்துக்கு பின்னால, ஒரு உண்டி வச்சிருக்கேன். மாசம் என்னால முடிஞ்சது அதுல போட்டுட்டு வரேன். கொஞ்சம் காசு சேர்ந்ததும் உங்க மூணு பேருக்கு, ஆளுக்கு மூணு மூணு பவுன்ல ஏதாச்சும் வாங்கி தரலாம்னு.

உங்கள யாராச்சும் ஒரு ஆள் வீட்டுக்கு போய் அதை எடுத்துட்டு வாங்க." சிந்தாமணியை மணிமேகலையும் அங்கே இருக்க சொல்லிவிட்டு, பெரியநாயகி வேகமாக ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றாள். மீனாட்சி சொல்லிய உண்டியை தேடி எடுத்து உடைத்து பார்க்க, அவளுக்கு அழுகையில் உதடு துடித்தது.

மூவாயிரம் சில்லரை அவளை பார்த்து சிரித்தது.அம்மாவின் அறியாமையை எண்ணி, அடுத்து என்ன யோசிப்பது என்று தெரியாமல் அப்படியே அமர்ந்து விட்டாள். எங்கே சென்று பணம் புரட்டுவது என்று தெரியாது. பேசாமல் அவளது கிட்டினியை  விற்று விடலாம் என்று நினைத்தாலும், கிட்டினி என்ன சட்னியா? ஆளாளுக்கு போட்டி போட்டு வாங்க..

அவளது கைபேசி அலறியது. எடுத்துப் பார்த்தாள் திலீப். வேகமாக அதனை அட்டென்ட் செய்தவள் நப்பாசையோடு" என்னங்க அப்பாவுக்கு"

"அவன் கிடக்கேன் பரதேசி.. ஹேய் செம மூடா இருக்குடி.. உடனே உன்ன பாக்கணும் போல இருக்கு.. சேலைய அவுத்துட்டு படம் அனுப்பு".. பெரியநாயகி காதிலிருந்து அலைபேசியை எட்ட எடுத்தாள். ஒரு நிமிடம் அதை வெறித்து பார்த்தாள். மறு நிமிடம் கைபேசியை சுவரில் ஒரே அடி. கைபேசி சிதறி விழுந்தது.

வேகமாக ஒரு வெள்ளை கடுதாசியை தேடி எடுத்தாள். அதில் தான் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்வதாகவும், தான் இறந்த பிறகு தனது கிட்னியை தனது தந்தைக்கு தானமாக தருவதாகவும் எழுதியவள் கதவை சாற்றி விட்டு உத்தரத்தின் கீழே நாற்காலியை இழுத்து போட்டு, புடவை முந்தானையை உத்திரத்தில் போட்டு முடிச்சு போட்டாள்.

உலக வாழ்க்கையையே வெறுத்து விட்டாள் பெரியநாயகி. இனி இந்த உலகத்தில் வாழ அவளுக்கு ஆசை இல்லை. அவள் கண் முன்னே சுவரில் வரிசையாக சாமி படங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அதனைப் பார்த்தவளின் கண்களில் அத்தனை ஆவேசம்.. சாமி படத்தின் முன்பே தூக்கு மாட்டிக் கொள்வது, ஒரு குடும்பத்தை காப்பாற்றாத கடவுளுக்கு அவள் கொடுக்கும் தண்டனையாக நினைத்தாள்.

சுருக்கை தன் கழுத்தில் போட்டு சுருக்கி, நாற்காலியை காலால் தள்ளிவிடும் சமயம், பலமாக காற்றடித்தது. சாமி படத்தின் முன் இருந்த விளக்கு பேயாட்டம் போட, ஏதோ ஒன்று அங்கிருந்து பறந்து வந்து பெரியநாயகி ஏறி நின்று கொண்டிருந்த நாற்காலியின் கீழே விழுந்தது.

பெரியநாயகி அதை உற்றுப் பார்த்தாள். அன்று பணம் தேவை என்றால் இந்த நம்பருக்கு காண்டாக்ட் செய்யவும் என்று கொடுத்த விசிட்டிங் கார்டு. அந்தக் கார்ட்டையும் சாமி படத்தையும் மாறி மாறி பார்த்தாள் பெரியநாயகி. கழுத்தில் போட்ட சுருக்கை, கழட்டி எடுத்தாள். மெல்லக் கீழே இறங்கியவள் அந்த விசிட்டிங் கார்டை கையில் எடுத்தாள்.

அலைபேசியை மீண்டும் ஒன்றிணைத்து உயிர் கொடுத்து, கைகள் நடுங்க அந்த விசிட்டிங் கார்டில் இருந்த நம்பருக்கு அழைத்தாள்.

அழைப்பு எடுக்கப்பட்டும் யாரும் பேசாமல் இருக்க காய்ந்திருந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டு
"ஹெலோ"என்றாள்.

எதிர் முனையில் ஒரு வினாடி வளர்த்த மௌனத்தில் இருந்து விட்டு"ஹெலோ" என்றது அழுத்தமான ஆண் குரல்.


Comments

Popular posts from this blog

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி