6 காதல் காட்டுமிராண்டி
ஒருவரின் குரல் வளத்தை வைத்து அவர்களின் குண நலனை கணிக்க முடியுமா? தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம், எதற்காக இங்கே வந்திருக்கிறோம் என்பது எதுவுமே தெரியாத நிலையில் அந்தக் கண்ணாடி கட்டிடத்தின் முன்பு நின்று கொண்டிருந்தாள் பெரியநாயகி.
செக்யூரிட்டி கார்ட் ஃப்ளாகில் இருந்த டீயை ஊற்றி குடித்துக் கொண்டே, அவளை மேலும் கீழுமாக பார்த்தார். பின் பார்க்காமல் என்ன செய்வார்? ஒன்று கேட்டை தாண்டி உள்ளே செல்ல வேண்டும். இல்லை ரோட்டை பார்த்து கிளம்ப வேண்டும். இரண்டுக்கும் நடுவே கேட் முன்பு நின்று சாலையையும், கட்டிடத்தையும் மாறி மாறி பார்த்தால் அவர்தான் என்ன செய்வார்?
அரை மணி நேரமாக, பெரும் குழப்பத்தோடு அங்கு நின்று கொண்டிருந்தாள் பெரியநாயகி. சின்ன தூறலாக ஆரம்பித்த மழை, அழுது வடிய ஆரம்பித்தது. செக்யூரிட்டி கார்ட்டுக்கு பெரியநாயகியை பார்த்து பாவமாக இருந்தது. அவளது பெரிய பரிதவிக்கும் விழிகளை பார்த்தாலே, அந்த அனுபவம் மிகுந்தவருக்கு பெரியநாயகி ஏதோ பதட்டத்தில் இருப்பது புரிந்தது.
" இந்தாம்மா.. ஹேய் உன்னதான்" பெரியநாயகி அவரைப் பார்த்தாள்.
" யாருக்காவது வெயிட் பண்றியா? உள்ள போணுமா அப்பாயின்மென்ட் இருக்கா? " அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க பெரியநாயகிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
"எதுக்கு இப்படி மழையில நின்னுட்டுருக்க.." இப்படியே எவ்வளவு நேரம் தான் அவளும் மழையில் நிற்பது. ஒரு முடிவுக்கு வந்தவளை போல
" இல்ல நான் உள்ள தான் போகணும்"
" அப்பாயின்மென்ட் இருக்கா"
"இருக்கு"..
" அப்பாயின்மென்ட் இருந்தா மொதயே உள்ள போக வேண்டியது தானே? எதுக்கு இப்படி அரை மணி நேரமா கால் கடுக்க வெயில்ல நின்ன. இப்போ மழையில நிக்கிற.." பெரியநாயகியின் உடை அலங்காரத்தை பார்த்த செக்யூரிட்டி கார்ட்டுக்கு அவளது வார்த்தையில் எந்த அளவுக்கு உண்மையுள்ளது என்பதில் சந்தேகம் இருந்தது. உள்ளே செல்லட்டும். வரவேற்பு பெண்ணிடம் அவளது வரவை பற்றி சொல்லட்டும். அவளைப் பார்ப்பதும் பார்க்காமல் நிராகரிப்பதும் முதலாளி கையில் இருக்கிறது அல்லவா?
அந்த ஒரே காரணத்திற்காக உள்ளே அனுமதித்தார் செக்யூரிட்டி கார்ட். கண்ணாடி கட்டத்தின் உள்ளே அவள் செல்லும் போதே, இன்றைய கால நாகரிகத்தில் ஊறிப் போயிருந்த இளைஞர்கள், அங்கு வேலை செய்பவர்கள், அவனை மேலும் கீழும் பார்த்து தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டது கண்ணில் பட்டது. அவளது தோற்றத்தைப் பற்றி அவர்கள் கிண்டல் அடிக்கிறார்கள் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை.. ஆண்களின் கண்கள் பெரியநாயகியை விட்டு நகர மறுத்தது. சும்மாவே அவள் அழகி. இப்போது மழையில் நனைந்து ஆடைகள் உடலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் போது சொல்லவா வேண்டும்?
வரவேற்பு பெண்ணிடம், தயங்கிக் கொண்டு தன் வரவை பற்றி சொன்னாள். அழுத்தமான சிவப்பு சாயம் பூசப்பட்டிருந்த அந்த வரவேற்பாளினி, பெரியநாயகியை கண்டு முகம் சுளித்தாள். அப்பாயின்மென்ட் ஆர்டர் இல்லை. விசிட்டிங் கார்டு கிடையாது. முதலாளி பெயர் கூட அவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது உங்கள் பாஸ் தான் என்னை வரச் சொன்னார். என் பெயரை சொல்லுங்கள் அவருக்கு தெரியும் என்று இருமாப்பாக கூறுகிறாள் இந்த பைத்தியக்கார பெண். இப்படியாக நினைத்துக் கொண்டே வரவேற்பாளினி, சும்மாவே போனை எடுத்து டயல் செய்வது போல செய்து பேசிவிட்டு,
" மேம் நீங்க சொன்ன மாதிரி பாஸ் கிட்ட கேட்டேன். உங்கள யாருன்னே தெரியாதுன்னு சொல்லிட்டாரு. நீங்க போகலாம்" பெரியநாயகிக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பணம் வேண்டுமானால் இந்த முகவரிக்கு வந்து சேர் என்று அவன் தானே சொன்னான். இப்பொழுது ஆளே தெரியாது என மழுப்புகிறான்.
" வசதியா ஒருத்தன பார்த்தா போதும், உடம்ப காட்டிக்கிட்டு அலையுதுங்க" வரவேற்பாளினி வாய்க்குள் முணங்கியது நன்றாக கேட்டது. அவமானம் பிடுங்கி தின்ன, அங்கிருந்து வேகமாக வெளியேற முயற்சித்தாள் பெரியநாயகி.
அதற்குள், ஆறடிக்கும் மேலான உயரத்தில், வெளிர் நீல நிற கேஷுவல் சட்டையும், அதே நிறத்தில் டையும்,கருப்பு பேண்ட்டும், அணிந்திருந்த ஒருவன் ஓடி வந்தான்.
" ஹலோ எக்ஸ்கியூஸ் மீ மேம்.. "பெரியநாயகி முன்பு வந்து வழியை மறைத்தார் போல நின்றான். பெரியநாயகி அவனைக் கண்டதும் குழப்பமாக பார்த்தாள்.. ஒருவேளை இவன்தான் அவளிடம் போனில் பேசியதோ?
" மேம் உங்கள பாஸ் உள்ள வரச் சொன்னாரு." என்றவன் அவளது குழம்பிய பார்வையை பார்த்து "ஐம் கிஷோர், பாஸ்ஸோட பிஏ" என்றான். பெரியநாயகி ஒரு வார்த்தை கூட பேசாமல் அவன் பின்னால் மௌனமாக நடக்க ஆரம்பித்தாள்.
"மிஸ் கீர்த்தகி, உங்களோட டிஸ்மிஸ் ஆர்டர் ரெடியா இருக்கு வந்து வாங்கிக்கோங்க " வரவேற்பாளினியை பார்த்து கிஷோர் சொல்ல, அந்தப் பெண் ஆடிப் போய்விட்டாள்.
" ஓ மை காட் சார் என்ன விளையாடுறீங்க? "
" நீ தாம்மா வேலை நேரத்துல விளையாடிட்டு இருந்திருக்க.. உன் வேலை என்ன ஆனா நீ செஞ்சது என்ன" கிஷோரின் பார்வை பெரியநாயகியை தொட்டு மீண்டது. கீர்த்தகிக்கு புரிந்து விட்டது.
" சார் ஸாரி சார்" தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டாள்.
" டூ லேட் கீர்த்தகி.. உங்களோட டிஸ்மிஸ் ஆர்டர், அண்ட் 3 மந்த்ஸ் சேலரி ரெடியா இருக்கு. நீங்க லேட் பண்ண பண்ண, அந்த 3 மந்த் சேலரி கட்டாக சான்ஸ் இருக்கு." கீர்த்தகிக்கு அனைத்தும் விளங்கியது. பிச்சைக்காரியை போல வந்திருக்கும் இந்த பெண் பாஸுக்கு மிகவும் நெருக்கமானவளாக இருக்க வேண்டும்.
இல்லையென்றால்,அவளது வரவை சிசிடிவி கேமராவில் கவனித்து உடனுக்குடன் தனக்கு தண்டனை கொடுத்திருக்க மாட்டார் என்பது புரிந்தது.கீர்த்தகி பார்வை குரூரமாக பெரியநாயகி மேல் விழுந்தது. அங்கே நடப்பது எதுவும் பாவம் பெரியநாயகிக்கு புரியவில்லை. வந்த உடனே என் வேலைக்கு வேட்டு வச்சிட்டா. இருடி ஒரு நாள் உன்னை கவனிச்சிக்கிறேன். கருவிக்கொண்டே தனது டிஸ்மிஸ் ஆர்டரை வாங்க சென்றாள் கீர்த்தகி.
" நீங்க வாங்க மேம்" மீண்டும் கிஷோர் பணிவண்பாக பெரியநாயகியை அழைத்து கொண்டு லிப்டில் ஏறினான். லிஃப்ட் பத்தாவது தளத்தில் சென்று நின்றது.
" திஸ் வே மேம்" கிஷோர் வழிகாட்ட பெரியநாயகி அவனைத் தொடர்ந்தாள். மனதில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது. சரியான நேரத்தில் காற்று மட்டும் அடிக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் பிணமாய் நடுவீட்டு உத்திரத்தில் தொங்கிக் கொண்டிருப்பாள்.
தெய்வச் செயலா அல்லது விதியா என்று தெரியாமலேயே காற்றடித்து, பணம் வேண்டுமானால் தொடர்பு கொள்ளவும் என்று தந்திருந்து விசிட்டிங் கார்ட் அவள் காலடியில் விழுந்தது. சாவுக்கு பதிலாக கடைசி முயற்சியாக இதை முயன்று பார்க்கலாமே என, மனதை திறப்படுத்தி விசிட்டிங் கார்டில் இருந்த நம்பருக்கு அழைத்தாள். அந்தப் பக்கம் உறுதியான ஆண் குரல் கேட்டது.
எப்படி பேச ஆரம்பிப்பது என தெரியாமல் பெரியநாயகி குழம்பி தவிக்க " பெரியநாயகி" அவளது பெயரை அழகாக உச்சரித்தான் அந்த பக்கம் இருந்தவன்.
" உங்களுக்கு பணம் வேணும்னா இந்த அட்ரஸ் வந்து பாருங்க. பயப்பட வேணாம் இது என்னோட ஆபீஸ் அட்ரஸ்"
" இல்ல சார் உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு பண தேவைன்னு"
" எதுவா இருந்தாலும் நேர்ல வந்து பேசுங்க" முகத்தில் அடிப்பது போல அழைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் பலனாய் இப்போது கிஷோரை பின்தொடர்ந்து கொண்டிருக்கிறாள் பெரியநாயகி.
மீட்டிங் ரூம் போல இருந்த ஒரு போல் ரூமுக்குள் அவளை அழைத்துச் சென்றான் கிஷோர். நீண்ட மேஜை. குறைந்தது அதில் முப்பது பேர் அமரலாம். மேஜையின் இந்த மூலையில் அவளை அமர வைத்து கிஷோர், அவள் அருந்துவதற்கு பழச்சாறு எடுத்து வந்து கொடுத்தான். ஏசியை உயிர்பித்து விட்டு" சார் இப்ப வந்துருவாரு மேம்.. நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க" என்றவன் கதவை சாத்தி விட்டு சென்று விட்டான்.
இதயம் படபடக்க காத்திருக்க ஆரம்பித்தாள் பெரியநாயகி. அந்த பெரிய அறை அவளது பயத்தை அதிகரித்தது. போன் விடாமல் சிணுங்கியது. யார் என்று பார்த்தாள் திலீப். வாட்ஸ்அப் அலறியது. நோட்டிபிகேஷன் இன் திலிப் அனுப்பிய குறுஞ்செய்திகள் அவளைப் பார்த்து பல் இளித்தது.
மேலும் அரை மணி நேரம் காத்திருந்தாள் அமர்ந்த இடத்திலேயே. அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதே அவளுக்கே புரியவில்லை. இந்த பண தேவை பொல்லாதது. அந்த நிமிடத்தில் நமது குறிக்கோள் அனைத்தும் பணத்தின் மேலேயே இருக்கும். ஒருவனை அடியோடு திருப்பி போட இந்த பணத்தால் மட்டுமே முடிகிறது. துணிந்து வந்து விட்டோம், என்னதான் நடக்கிறது என்பதை பார்த்து விடலாம் என குருட்டு தைரியத்தில் அமர்ந்து இருந்தாள் பெரியநாயகி.
மீண்டும் அலை பேசி அலறியது. மணிமேகலை அழைத்தாள்.
"ஹெலோ மணி"
" அக்கா யார்கிட்டயும் காசு வாங்க போறேன்னு சொல்லிட்டு போன.. என்னாச்சு அக்கா அவங்கள பாத்தியா. காசு கொடுத்தாங்களா"
" அவங்களுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நானே கூப்பிடுறேன்.. அம்மாவ பாத்துக்கோ" மீண்டும் அமைதி. இப்படியாக 45 நிமிடங்கள் கழிந்த நிலையில் அந்த அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஒருவன். பதற்றத்தில் பெரியநாயகி எழுந்து நிற்க, அவனது பின்பக்கத்தை தான் பார்க்க முடிந்தது. அவ்வளவு வேகமாக நடந்து மேஜையின் எதிர்ப்புறம் சென்றான்.
நெடு நெடு என உயரத்தில், சாம்பல் கோர்ட்டை கழட்டி மேஜையில் தூக்கி போட்டான். வெள்ளை வெள்ளேரென உள்ளே ஃபார்மல் ஷர்ட் அணிந்திருந்தான். சாம்பல் நிற பேண்ட். கழுத்தில் அணிந்திருந்த சாம்பல் நிற டையை தளர்த்தி விட்டு, நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவன் அங்கிருந்தே பெரியநாயகியை அமருமாறு செய்கை செய்தான். அதுவரை வாயை லேசாகத் திறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்த பெரியநாயகி, பட்டென்று நாற்காலியில் அமர்ந்தாள்.
" சொல்லுங்க பெரியநாயகி" அவனே பேச்சை ஆரம்பித்தான்.
" சார் அது வந்து.. " பெரியநாயகியின் கைபேசி விடாமல் அலறியது. காலை கட் செய்துவிட்டு
" சார் அன்னைக்கு ரோட்ல போகும்போது ஒரு பொண்ணு வந்து இந்த விசிட்டிங் கார்டு கொடுத்தாங்க. எனக்கும் பண தேவை இருக்கு. அதான் ஒரு தடவை ட்ரை பண்ணலாம்னு"
" இது என்ன மாதிரி இடம் தெரியுமா"
" தெரியல சார்.. ஒருவேளை நீங்க வட்டிக்கு பணம் கொடுக்கிறவரா இருந்தா, கொஞ்சம் குறைஞ்ச வட்டிக்கு கொடுங்க சார்.கண்டிப்பா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்க பணத்தை நாங்க திருப்பி கொடுக்க ட்ரை பண்றோம்"
" உங்க பேரு பெரியநாயகி." என்று ஆரம்பித்தவன் அவளது வாழ்க்கை வரலாற்றையே சொல்லி முடித்தான். அதற்குள் தன் இருக்கையில் இருந்து எழுந்து மெல்ல நடந்து பெரியநாயகியை நெருங்கி விட்டிருந்தான்.
அவனுக்கு எப்படி தன்னைப் பற்றி விவரங்கள் தெரியும் என வாயை திறந்து அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தாள் பெரியநாயகி.
" யார் நீங்க.. எதுக்கு என்ன பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க " எழுந்து நின்று கொண்டவள் அவனை விட்டு தள்ளி நின்றாள்.
" சுத்தி வளச்சு பேச எனக்கு இஷ்டம் இல்ல. எனக்கு நீ வேணும். ஒரு வருஷம் அக்ரிமெண்ட் போட்டுக்கலாம். உனக்கு எவ்வளவு பணம் வேணுமோ கேளு. "
"எதுக்கு ஒரு வருஷம் அக்ரிமென்ட் போடணும்" கவனமாக கேட்டாள் பெரியநாயகி.
" உன் மூலமா எனக்கு குழந்தை வேணும். எனக்கு ஒரு பிள்ளைய பெத்து கொடுத்துட்டு நீ போய்கிட்டே இருக்கணும்" பெரியநாயகிக்கு தன் காதுகளையே தன்னால் நம்ப முடியவில்லை. திருமணமாகிய பெண்ணிடம் காவாலி பயனைப் போல அவன் பேசுவது வியப்பாய் இருந்தது.
" எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. என் புருஷனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா"
மேஜையில் விடாமல் அழைத்துக் கொண்டிருந்த பெரியநாயகி கைப்பேசியை கையில் எடுத்தான். பெரியநாயகி அதனை பிடுங்க அருகே வருவதற்குள் வாட்ஸ் அப்பை திறந்து விட்டான். அதில் திலீப் அனுப்பிய நிர்வாண புகைப்படங்கள். அவனது ஆண் குறி ஆரம்ப கட்டத்தில் ஆரம்பித்து, உயிர் நீரை கக்கி விட்டு, மரவட்டை போல சுருண்டு கிடக்கும் நிலை வரையில் விதவிதமாக படங்களாக எடுத்து தள்ளி விட்டிருந்தான்.
ஆபாசமான, வார்த்தையாடல்கள் வேறு. அதனை பெரியநாயகி முகத்திற்கு நேராக நீட்டியவன்" இப்படிப்பட்ட புருஷனுக்காக தவம் கிடக்க போறியா.. இல்ல உன் அப்பா உயிரை காப்பாத்த போறியா?" பெரியநாயகிக்கு அவமானமாக இருந்தது. அதே சமயம் அவளது கைபேசியை, உரிமை இல்லாதவன் எடுத்து இவ்வளவு தூரம் பார்த்தது ஆத்திரத்தை வரவழைத்தது.
அவளைப் பொறுத்தவரை அவன் ஒரு காமுகன்.அவளை எங்கோ பார்த்திருக்கிறான். மஞ்சமிடும் ஆசையோடு அவளை பற்றி தெரிந்து கொண்டு அவளது பணத்தேவையை புரிந்து கொண்டு, அவளை படுக்கைக்கு அழைக்கிறான். கடைசி முயற்சி தோற்று குடும்பமே தற்கொலை செய்து கொண்டாலும் பரவாயில்லை, தன்னை விற்று தன் தந்தையை காக்க அவள் துணியவில்லை.
தந்தை செத்தாலும் பரவாயில்லை. அவரைக் காப்பாற்ற முடியாத பாவத்திற்கு தற்கொலை செய்து அவளும் மாண்டு விடலாம். ஆனால் இது அவள் மானத்தைப் பற்றியது. இந்த காமுக முதலாளியை பகைத்துக் கொண்டு இங்கிருந்து அவளால் முழுதாய் செல்ல முடியுமா என்று தெரியவில்லை. இப்பொழுது அவள் மூளை வலியுறுத்தியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
அமைதியாக இங்கிருந்து சென்று விடு பெரியநாயகி.
அந்த காமுகனை வெறுப்போடு பார்த்த பெரியநாயகி அங்கிருந்து வெளியேற முயன்றாள்.
" இப்படிப்பட்ட புருஷனுக்கு பத்தினியா இருக்கிறதை விட, பத்து பேருக்கு" அவன் வார்த்தைகளை முடிக்கவில்லை. இதற்கு மேலும் அமைதியாக செல்ல பெரியநாயகிக்கு மனம் வரவில்லை.
" பத்து பேர் கூட படுக்கறதுக்கு நான் ஒன்னும் தே.... இல்ல.." சூடாக பதில் கொடுத்தாள்.
" அப்படியா உன் புருஷனுக்கு நீ யாரு" மேஜை மேல் சாய்ந்து கொண்டு சர்வ சாதாரணமாக அவன் கேட்ட கேள்வி பெரியநாயகி, மனம் நொறுங்கி விட்டது. பதிலே சொல்லாமல் அங்கிருந்து வேகமாக வெளியேறி, சாலைக்கு வந்த ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு சென்றாள்.
தொடரும்..
Comments
Post a Comment