4 காதல் காட்டுமிராண்டி


மேலும் ஒரு நாள் பெரியநாயகி வீட்டில் தங்கிருந்தான் திலீப்.. இரவு, இந்த ஒரு வார பிரிவிற்காக தன்னை எப்படி எல்லாம் நாட போகிறானோ என பயந்து கொண்டு இருந்த பெரியநாயகிக்கு விடுதலை வந்தது மணிமேகலை மூலம்..

அறைக்கு வெளியே நோய்வாய் பட்டிருந்த அப்பா, வாழா வெட்டியாக அக்கா, வேதனை மட்டுமே கண்டிருந்த தாய், இளமையில் வறுமை கொடியது என்பது போல காணப்பட்ட தங்கை, இவர்கள் அனைவரையும் வைத்துக்கொண்டு உள்ளறையில் சல்லாபத்தில் ஈடுபட பெரியநாயகிக்கு அவமானமாக இருந்தது. இரவு உணவு உண்ணும் போதே திலீப் அவளை பார்த்த பார்வையில் குளிர் பரவியது.

திலீப்புக்கு இரவு பால் குடித்தாக வேண்டும். அவனுக்கு பாலை, எடுத்துச் செல்ல" இந்தப் பால் யாருக்கு டி வேணும்.. எந்த பால் குடிக்க வேண்டிய நேரத்துல மூட் அவுட் பண்ணிட்டு இருக்க.. சீக்கிரம் வாடி"அடிக் குரலில் சீறினான்.

"ஏங்க அக்கா தங்கச்சி எல்லாம் இருக்காங்க. சத்தம் வெளியே கேட்கும். இப்போ வேணாங்க. அதான் நேத்து முழுக்க அங்க வீட்டில வச்சு செஞ்சிட்டிங்க தானே. ஒரே ஒரு வாரம் தாங்க. அங்க வந்துருவேன். கொஞ்சம் பொறுத்துக்கோங்க" தன்மையாக எடுத்துச் சொன்னாள் பெரியநாயகி.

அவளை தீ பார்வை பார்த்த திலீப், கையில் இருந்த பாலை அவள் முகத்தில் ஊற்றினான். சுட சுட இருந்த பால் அவளது அழகிய முகத்தை, முத்தமிட்டது. முகம் சிவந்து காணப்பட்டவளை கண்டவனின் இதயம் இளகவில்லை." உனக்கு இன்னும் பத்து நிமிஷம் தான் டைம். அதுக்குள்ள நீ வரல, நான் வந்து உன் முடிய பிடிச்சு இழுத்துட்டு வருவேன்.. "அவனது குரலே சொல்லியது அவன் அடுத்து அதை செய்வான் என.

என்னதான் மெல்லிய குரலில் பேசினாலும் அந்த சிறிய வீட்டில் அவர்கள் பேசுவது நன்றாக வெளியே இருப்பவர்கள் காதில் விழுந்தது. சிந்தாமணி கணவன் முக்கால்வாசி நான் குடித்துவிட்டு குப்புற படுத்து தூங்கி விடுவான். சிந்தாமணிக்கு வாழ்க்கையில் இருக்கும் ஒரே ஒரு ஆறுதல், அவளது கணவன் சேகர், திலீப் போல காம பிசாசாக இல்லாமல் இருந்தான்.

மீனாட்சிக்கு அழுகை பொங்கி வந்தது. தன் வீட்டிலேயே தன் மகளுக்கு நடக்கும் அத்துமீறல்களை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியாத நிலையை அவர் அறவே வெறுத்தார். தாயின் அழுகை, பெரிய அக்காவின் குமுறல், அனைத்தும் சேர்ந்து மணிமேகலை யோசிக்க வைத்தது. அறையை விட்டு மாற்றுப் புடவையோடு வெளியே வந்த பெரியநாயகி முகத்திலிருந்து சிவப்பு அவளை வெறியாக்கியது.

வேகமாக எழுந்து திலிப் இருந்த அறைக்குள் சென்றாள். பெரியநாயகியை எதிர்பார்த்து காத்திருந்த திலீப்புக்கு, கொழுந்தியால் உள்ளே வருவதை கண்டதும் கொண்டாட்டமாக இருந்தது.

"என்னடா செல்லம் நீ இங்க".. மணிமேகலை அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், அறையின் ஒரு ஓரத்தில் கையோடு கொண்டு வந்திருந்த சாப்பாட்டு தட்டை வைத்தாள். அவளின் செய்கை புரியாமல்

"செல்லம் மாமா தான் சாப்பிட்டேனே.."

அவனை நிதானமாக திரும்பிப் பார்த்த மணிமேகலை, " இது உங்களுக்கில்ல மாமா.. இது வேற"

"வேறன்னா"

"ப்ச் என்னன்னு சொல்றது வீட்ல எல்லாரும் உங்ககிட்ட மறைக்கிறாங்க. எனக்கு உங்ககிட்ட சொல்லாம இருக்க முடியல. ஆனா சொன்னா அம்மா என்னை அடிப்பாங்க" மணிமேகலை பேச்சைக் கேட்டு அந்த விஷயம் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வம் எழுந்தது.

" யாரும் உன்ன அடிக்க மாட்டாங்க மாமா இருக்கேன். நீ சொல்லுடா"

" அது வந்து மாமா கொஞ்ச நாளாவே வீட்டுல ஒரு மாதிரி சேட்டை. நடமாட்டம் இருக்கு. பக்கத்து வீட்டு பொண்ணு தூக்கு மாட்டி செத்துப் போச்சுல அந்த பொண்ணும் நானும் க்ளோஸ் ஃப்ரெண்ட் மாமா. அந்த பொண்ணு உங்கள மாதிரியே அச்சு அசலா இருந்த ஒருத்தனை லவ் பண்ணுச்சு. பாவி பையன் அந்த பொண்ண நாசமாக்கிட்டு வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிட்டான். அந்த துரோகம் தாங்க முடியாம அவ சூசைட் பண்ணிக்கிட்டா.

அவ வீட்ல மட்டும் இல்லாம அப்பப்ப இங்கேயும் அவளோட நடமாட்டம் இருக்கும். உங்களுக்கு ஒன்னு தெரியுமா மாமா உங்களோட கல்யாண படத்த பாத்துட்டு எப்பவும் சொல்லுவா. உன் மாமாவ பாக்க என்னோட லவ்வர் மாதிரியே இருக்குடினு.. நீங்க வந்துருக்கீங்க, நம்பலனா பாருங்க இன்னைக்கு ராத்திரி உங்கள பாக்க கண்டிப்பா வருவா. வரும்போது அவளுக்கு சாப்பாடு வைக்கலைன்னா கோச்சுக்குவா. கோபம் வந்த கொரவளையில கால வச்சுருவா.

இதெல்லாம் என்னைக்கோ ஒரு நாள் வர உங்ககிட்ட சொல்ல கூடாதுன்னு அம்மா சொன்னாங்க. அவளோட ஆவி இந்த ரூம்ல தான், அப்பப்போ வந்துட்டு போகும். நீங்க கூட வேணும்னா, ஹேமமாலினினு கூப்பிட்டு பாருங்க. உங்க உடம்பு சிலுக்கும். அப்படின்னா அவ வந்துட்டான்னு அர்த்தம். " மணிமேகலை சொல்வதை சொல்லிவிட்டு வெளியேறி விட்டாள்.

பேயறைந்தது போல அமர்ந்திருந்தான் திலீப். அவனுக்கு அவள் சொல்லியதை நம்பாமல் இருக்க முடியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணும் இவளும் நெருங்கிய தோழிகள் என்பதை திலீப் அறிவான். ஏதோ ஒரு காரணத்தால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதும் அவனுக்கு தெரியும்.. ஆனால் இப்படி ஒரு காரணம் இருக்கிறது என்பது அவனுக்கு தெரியாமல் போய்விட்டது. மணிமேகலை சொல்லி சென்றது போல ஹேமமாலினி எனும் பெயரை உச்சரித்தான்.

பெயரின் தாக்கமோ என்னவோ தெரியவில்லை, அல்லது இவன் மனதில் எந்த ஹேமமாலினியை நினைத்துக் கொண்டான் என்பதும் புரியவில்லை. அவனது உடலில் சட்டென்று ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. உத்தரத்தில் ஓடிக்கொண்டிருந்த பல்லி அவன் நடு தலையில் விழுந்தது. அவ்வளவுதான் திலீப் அரண்டு விட்டான். அந்த நேரம் பார்த்து பெரியநாயகி அறைக்குள் வந்தாள். அவள் கதவை தாழ்ப்பாள் போடுவதை கண்டவன்,

"ஹேய் என்னடி பண்ற"

"ஏங்க"

" நாம இங்க படுக்க வேணா வா வெளியே போய் படுப்போம்.."

" என்னங்க வெளியே போய் படுத்தா எப்படி" அவனது மூர்க்கத்தனத்தை நினைத்து பயந்தாள் பெரியநாயகி.

" என்ன பாக்க அதுக்கு அலையிறவன் மாதிரி தெரியுதா.. அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. மூடிக்கிட்டு கதவை திறடி. " தலகாணியை எடுத்துக் கொண்டு ஹாலில் சென்று படுத்து விட்டான். பிறர் இருக்கும் போது அவனின் லீலைகள் தொடராது என்பதால், தங்கையை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவன் பக்கத்தில் சற்று இடைவெளி விட்டு படுத்துக் கொண்டாள் பெரியநாயகி.

மணிமேகலை வாய் பொத்தி சிரிக்க, சிந்தாமணிக்கும் சிரிப்பு. அன்று மணிமேகலை தயவால் பெரியநாயகி தப்பித்து விட்டாள்.மறுநாள் இரவு, பெரியநாயகியை ஏக்கமாக பார்த்துக் கொண்டே ரயில் ஏறினான் திலீப்..

அவன் சென்ற மறுநாளே தந்தையை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று விட்டாள் பெரியநாயகி.

"நாயகி,எப்டிடி உன்கிட்ட காசு இருக்கு." சிந்தாமணி கேட்டாள்.

" அத்தைக்கு தெரியாம மாமா எனக்கு காசு கொடுப்பாருக்கா. அவரோட கடைக்கு நான் தானே பாத்திரம் அண்டா குண்டா எல்லாம் கழுவி தரேன். அப்புறம் வியாபாரத்துக்கு கூட நான் தான் சமைச்சு கொடுப்பேன். அத்தை ஒரு காசு கொடுக்க மாட்டாங்க. மாமா தண்ணிய போட்டு பைத்தியம் மாதிரி நடந்துக்கிட்டாலும் அவரு நல்ல மனுஷன்.

அவரு தான் அத்தைக்கு தெரியாம காசு கொடுப்பாரு. அதெல்லாம் சேர்த்து வச்சு தான் எடுத்துட்டு வந்து இருக்கேன்"

" மாமா நல்லவரு தான்டி.. பாவம் அவரோட தலையெழுத்து அத்தை கிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாரு.." தனியார் மருத்துவமனையில், தந்தையை கொண்டு சேர்த்தாள் பெரியநாயகி. மருத்துவர் தங்கவேலுவை முழுவதுமாக பரிசோதித்தார்.

முதுகெலும்பில் செய்த ஆபரேஷன், காரணமாக தங்கவேலு இப்போது எல்லாம் எழுந்து நடக்கிறதே கிடையாது. படுத்த படுக்கையாக இருப்பதால் அவரது முதுகிலும் சூட்டின் காரணமாக புண் வர ஆரம்பித்து விட்டது. வியர்வையின் தாக்கத்தால் புண்கள் பெரிதாகி சலம்  பிடிக்கும் அளவுக்கு சென்று விட்டது. மஞ்சள்,தேங்காய் எண்ணெய், போன்ற களிம்புகளை தடவி இதுவரை அவரது புண்ணை  பெரிதாகாமல் பார்த்துக் கொண்டார் மீனாட்சி.

தங்கவேலுக்கு இரண்டு கிட்னிகளும் பழுதடைந்து விட்டது. உடனடியாக கிட்னி மாற்று சிகிச்சை செய்ய வேண்டும். அதற்கு முதலாக இரண்டு கிட்னிகளையும் டயாலிசிஸ் பண்ண வேண்டும் என மருத்துவர் கூறினார். டயாலிசிஸ்.. பரம்பரை பணக்காரனை கூட பிச்சைக்காரனாகி விடும்  நோய் இது. டயாலிசிஸ் செய்யும் அளவு அவர்கள் யாரிடமும் பணம் இல்லை.

மீனாட்சி வேலை செய்யும் மருத்துவர் வீட்டில் கேட்டு பார்த்தார். அவர் தனக்குத் தெரிந்த மருத்துவமனைக்கு சிபாரிசு கடிதம் எழுதி அனுப்பினார். அங்கே சென்று பார்த்தாலும் பாதிக்கு பாதி மட்டுமே காசை குறைத்தார்கள். திலீப் வீட்டில் அனைவரும் டூர் சென்று விட்டார்கள். அவர்களிடம் காசை பற்றி வாய் திறந்தால் சரோஜா ஆடி தீர்த்து விடுவார்.

மாலா எட்டியும் பார்க்கவில்லை. மீனாட்சிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்கு சுற்றினாலும் இடி இடியாக விழுந்தது. வீட்டில் தனியாக அமர்ந்து யோசிக்க பயந்த பெரியநாயகி அருகில் இருந்த கோயிலுக்கு சென்றாள். இங்கிருக்கும் போதெல்லாம் மனது வேதனையாக இருந்தால் இப்படித்தான் கோயிலில் வந்து அமர்ந்திருப்பாள்.

அம்பாளை பார்க்கும் போதெல்லாம், எப்படியாவது தன் குடும்ப கஷ்டத்திற்கு விடிவு வந்து விடாதா என நினைத்து ஏங்குவாள். கால் பாட்டிற்கு நடந்து கோவிலை அடைந்தது. உண்மையை சொன்னால் அவள் சாமி கும்பிட இப்போது வரவில்லை. தனியாக அமர்ந்து சற்று நேரம் யோசிக்க அவளுக்கு ஒரு இடம் தேவை. அவள் சன்னிதானத்திற்குள் சென்று அமரும்போது, அம்பாளுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது.

கோயிலுக்கு வந்திருந்தவர்கள் நேர்த்திக் கடன்களை செலுத்திக் கொண்டும், கண்ணீர் வழிய அம்பாளை தரிசித்துக் கொண்டும் இருந்தார்கள். அமர்ந்த இடத்திலிருந்து அந்த அன்னையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தாள் பெரியநாயகி. வாய் திறந்து ஒரு வார்த்தை அவள் பிரார்த்தனை செய்யவில்லை. கடவுளுக்கு தெரியும் நமக்கு என்ன வேண்டும் என்று. அப்படி இருக்கும்போது எதற்காக வாய் திறந்து, கத்தி கதற வேண்டும்? ஒரு மனிதன் எவ்வளவுதான் கத்திக் கதறுவது?

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். பேயே இறங்கும்போது, உலகைப் படைத்த  இறைவன் இறங்க மாட்டானா? எவ்வளவுதான் ஒரு மனிதன் கடவுளிடம் தனது பிரார்த்தனையை சொல்வது?அளவுக்கு மீறிய அன்பும் பிரார்த்தனையும் கூட ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தி விடும்.

அன்று காலையில் பக்கத்து வீட்டு டீவியில் ஒலித்த பாடல் வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தது.

ஆயிரம் கை உண்டென்றால்
நீ ஒரு கை தர கூடாதா
ஈராயிரம் கண் கொண்டாய்
உன் ஒரு கண் என்னை பாராதா
உன்னில் சரண் அடைந்தேன்
இனி நீ கதியே!

பெரியநாயகியின் கண்கள், அவள் வாய்விட்டு கூறாத வார்த்தைகளை கண்ணீரின் மூலம் அம்பாளுக்கு சொல்லிக் கொண்டிருந்தது.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ, சிந்தாமணி அவளுக்கு அழைக்க, அதன் பிறகே எழுந்து வீட்டிற்கு நடக்க ஆரம்பித்தாள். இப்போது அவளை உரசியபடி சர்ரென்று ஒரு கார் வந்து நின்றது.

அதிலிருந்து இளம் பெண்ணொருத்தி இறங்கினாள். பெரியநாயகி யார் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது" நீங்க தானே மிஸ் பெரியநாயகி.. ஓகே உங்களுக்கு பண தேவை இருக்குனு எங்களுக்கு தெரியும். உங்களுக்கு எவ்வளவு பணம் வேணுமோ அவ்வளவு பணத்தை எங்க பாஸ் கொடுப்பாரு. இதான் அவரோட அட்ரஸ். உங்களுக்கு வேணும்னா இவர காண்டாக்ட் பண்ணுங்க" இப்படி தலையும் புரியாமல் காலும் புரியாமல் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு விட்டு அந்த நங்கை பறந்து விட்டாள்.

அவள் கொடுத்த விசிட்டிங் கார்டு பெரியநாயகியை பார்த்து சிரித்தது.


Comments

Popular posts from this blog

5 காதல் காட்டுமிராண்டி

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி