6 பைத்தியத்தின் வைத்தியமே


அத்தியாயம் 6❤️

மணி நள்ளிரவு மூன்று. பனியாய் இல்லை புகை மூட்டமாக என்று தெரியாத அளவிற்கு கண்கள் மிசு மிசுவென தெரிந்தது.. கூந்தலை அள்ளி கொண்டையாக உச்சியில் போட்டுக் கொண்டுச் சுடுகாட்டை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லி. அவள் பயப்படுவாள், மிரண்டு விழிப்பாள் என்று  இலக்கியன் எண்ணிருக்க அவளோ சாவகாசமாக அந்த இடத்தை சுற்றி பார்க்க இந்த பொண்ணு என்ன இப்படி இருக்கானு யோசிக்க வைத்தது.

"மல்லி உனக்கு பயமே இல்லையா.. ரொம்ப கேஷுவளா இருக்க"..

"என்ன பயம் இலா..என்னிகா இருந்தாலும் நம்மளும் இதுல ஒரு அங்கம் தான.. ஜ்யோதில ஐக்கியம் ஆகி தான ஆகணும்.. உங்களுக்கு தெரியுமா.. எனக்கு சின்ன வயசுல இருந்தே சுடுகாட்ல போய் மிட் நைட்ல ஒக்காரணும்னு ஆசை"

"ஏன்"

"இங்க இருக்குற அமைதி வேற எங்க இருக்கு.. அதுக்கு தான்.. ஆமா நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..மீட்டர் மாறி எதையோ கையில வெச்சிட்டு மானிட்டர்ல என்னத்த பாக்குறீங்க.."

"நம்மள சுத்தி எக்ஸ்ட்ரா எனர்ஜி ஏதாச்சும் இருந்தா இதுல தெரியும்.. அதான் பாத்துட்டு இருக்கேன்"

"ஏன் இலா... சுடுகாட்டுல கூட பேய்க்கு பஞ்சம் பாருங்களேன்"

"ம்ம்ம்.."அவன் கையில் பிடித்திருந்த மீட்டர் மூள் அங்கிட்டும் இங்கிட்டுமாக நகர்ந்தது.


இலக்கியனின் பார்வை கூர்மை பெற்றது.. அந்த முள் நகரும் விசையை நோக்கி நடந்தான்..இவ்வளவு நேரம் தைரியமாக இருந்த மல்லி கூட சற்று மிரண்டு விட்டாள்.  உண்மையாகவே பேய் இருக்கிறதா. ஏனென்றால் அவளுக்கு இந்த பேய் பூதம் இதன் மேலெல்லாம் நம்பிக்கை கிடையாது. சாமி என்று ஒன்று இருந்தால் தானே அதற்கு எதிர் விசை இருக்க முடியும்.. மல்லியை பொருத்தவரை கடவுளும் இல்லை பேயும் இல்லை. அந்த அளவிற்கு அவள் வாழ்வில் சிறு வயதிலிருந்தே  துன்பத்தை சந்தித்தவள்.

இலக்கியன் எங்கேயோ ஒரு இடத்தில் சென்று அசையாமல் நின்றான். தூரத்தில் ஒரு சிதை எரிந்து கொண்டிருந்தது.  இங்கே வரும் போது வெட்டியானிடம் கொஞ்சம் பணம் கொடுத்து அனுமதி வாங்கி இருந்தான்..வேகமாக கத்தினான்..

"மல்லி அந்த ரெகார்டர எடுத்துட்டு வா" மல்லி அவன் ரெகார்டர் என்றதும் மடக்கு மேசை மீது இலக்கியன் வைத்திருந்த ரெக்கார்டரை எடுத்துக்கொண்டு  அவனிடம் ஓடினான்..

" நீ இங்க புடிச்சுகிட்டு நில்லு"

ஓடிப்போய் அந்த மடக்கு மேஜை அருகே இருந்த மானிட்டரில் ரெக்கார்டரை கனெக்ட் செய்து அங்கே இருந்து கத்தினான்.

"மல்லி நீ பேசு.. அங்க யாராச்சும் இருக்காங்களான்னு கேளு.. அவங்கள பத்தி டீடெயில்ஸ் கேளு"

"அட லூசு பயல.. பேய் கூட என்னத்துக்குடா பேச்சு வார்த்தை..ம்ம்ம்.. ஹெலோ.. இங்க யாராச்சும் இருக்கீங்களா.. ஹலோ"கையில் வைத்திருந்த மீட்டர் இடம் வலமாக வேகமாக நகர்ந்து ஒரு இடத்தில் நிலை குத்தி நின்றது. மல்லி அந்தப்பக்கம் ரெக்கார்டரை நீட்டி அதே கேள்வியை மீண்டும் கேட்டாள். இங்கே மானிட்டரில் அந்த ரெகார்டரில் எதுவோ ரெக்கார்ட் ஆவது நன்றாக தெரிந்தது.ஒரு ஐந்து நிமிடம் கூட இருக்காது.. அங்கே நிசப்தம் நிலவியது.  உடனே இலக்கியன் மல்லியை வரச் சொன்னான் அவள் வருவதற்குள் அனைத்தையும் எடுத்து பேக்கில் வைத்து விட்டு மேஜையை மடக்கி கையில் எடுத்துக் கொண்டான்.

"மல்லி இதுக்கு மேல இங்க நாம நிற்கிறது ஆபத்து.  வா போய்டலாம்" இருவரும் அங்கிருந்து கிளம்பினார்கள். வீட்டிற்கு வெளியே வந்ததும் அவர்களுக்காகக் காத்திருந்த மணியண்ணா இருவரையும் காலை கழுவி விட்டு உள்ளே வர சொன்னார்.

தலைக்கு குளிக்க சொல்லி இருவருக்கும் பூஜை அறையில் இருந்து விபூதி எடுத்து வந்து பூசி விட்டார். இதுவே அவரால் செய்ய முடிந்தது. இலக்கியன் சென்று தனது அறைக்குள் புகுந்து கொண்டான். அவனது தலை மறைந்ததும்

" ஏன் பாப்பா ஐயாவுக்கு தான் பைத்தியம் புடிச்சிருக்கு. உனக்கு என்ன.. நீ தெளிவா தானே இருக்க. பொட்டப்புள்ள இந்த ராத்திரிக்கு சுடுகாட்டுக்கு போலாமா.. அந்தாளு கூப்பிட்டா வர மாட்டேன்னு சொல்றது தானே.. எதுக்கு நீ அந்த ஆளு கூட போன.. வயசு புள்ள. நாளப் பின்ன கல்யாணம் பண்ணிட்டு புருஷன் வீட்டில வாழப்போறவ.. இப்படி காத்து கருப்பு சுத்துற இடத்துக்கு போய் ஏதாவது ஆச்சுன்னா என்ன ஆகிறது.. "

" மணியண்ணா மனுசன விட பேய் ஒன்னும் கொடூரமானது இல்ல..  உண்மைய சொல்லனும்னா எனக்கு இந்த பேய் நம்பிக்கை எல்லாம் கிடையாது. நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி இலக்கியன் பைத்தியம் இல்ல. அவருக்கு வேற பிரச்சனை இருக்கு..அவரு எதுக்கோ இந்த மாதிரி ஆராய்ச்சியெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காரு..  அவரோட முகத்தில இருந்து என்னால ஒன்னே ஒன்னு மட்டும் கண்டுபிடிக்க முடியுது.."

" என்ன பாப்பா"

"நான் கண்டுபிடிச்சது உண்மையானு கன்பிர்ம் பண்ணிட்டு உங்க கிட்ட சொல்றேன்.. இப்போ போய் தூங்குங்க மணி ஆகுது."

என்றவள் தானும் தூங்க மாடி அறைக்கு வந்தாள். அவளது அறைக்குள் இலக்கியன் அமர்ந்திருந்தான்.  அவனைக் கண்டதும் புருவம் சுருக்கி

"என்னாச்சு இலா.. ஏன் இங்க இருக்கீங்க"

"மல்லி நீ எப்படி நான் பைத்தியம் இல்லனு சொல்ற.. எல்லோரும் நான் பைத்தியம்னு பட்டம் கட்டும் போது நீ எப்படி என்ன நம்புற.."

"இலா. நீங்க ஜீனியஸ்.அது எனக்கு புரியுது. ஓவர் படிப்ஸ்.. அதனால இப்படி அடுத்தவங்க கிட்ட இருந்து தனிச்சு தெரியலாம்.. உங்களுக்கு தூக்கம் வரலியா.. மணி என்ன தெரியுமா"

"மனசு ஒரு மாறி இருக்கு.. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.."

"என்ன விஷயம்"

"என்ன கல்யாணம் பண்ணிக்குறியா"

"என்ன"

"ம்ம்ம்.. பாத்து அஞ்சு நாள் கூட ஆகல.. ஆனா என்னானு தெரியல. உன்ன பாத்ததும் என்னால.. எப்படி சொல்றதுன்னு கூட தெரியல. பட் மல்லி ஐ நீட் யூ..உன்ன கம்பல் பண்ணல. என் மனசுல இருந்தத சொன்னேன்.நான் ரொம்ப லோன்லியா பீல் பண்றேன் மல்லி.. என்னால முடியல. உண்மையாவே பைத்தியம் புடிச்சிரும் போல.. நான் ஏதோ ஒரு பழைய புக்ல படிச்சேன். நம்மளோட வாழ்க்கை இவங்கதான்னு பார்த்த செகண்ட் உள்ள ஒன்னு சொல்லுமாம். அதுதான் நம்மோட இன்னர் பீலிங்ஸ்.

ஆனா அடுத்த செகண்ட் நம்மளோடு மூளை ஆக்ட்டிவெட் ஆயிரும். அதுக்கு பீலிங்ஸ் இல்ல. அது அவங்களோடு தோற்றம்.. உடை நடை சுபாவம் இதையெல்லாம் பாக்கும். அதுக்கு திருப்தியாகுற  அளவுக்கு இல்லனா இது நமக்கு செட் ஆகாதுனு மனச நம்ப வெச்சிடும்.அப்றம் நாம எதிர்பார்ப்புக்கு தகுந்த மாறி ஒரு துணைய கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்க்கை ஓடும். அந்த வாழ்க்கை முழு திருப்தியா இருக்கானு கேட்டா
சத்தியமா இருக்காது. ஆனா பொண்டாட்டி புருஷன் புள்ளைங்க இப்படியே வாழ்க்கை ஓடிரும்..

இதுவே அந்த பாத்த செகண்ட் மனசு சொன்னுச்சே அவங்கள எந்த எதிர்பார்ப்பும் இல்லாம ஏத்துக்கிட்டா கண்டிப்பா நம்ம லைப் நல்லா இருக்கும்.. எதுக்குடா இவ்ளோ பெரிய தியோரினு பாக்கறியா.. உனக்கு புரியனும்ல அதான். மல்லி பாத்த செகண்ட் என் மனசு சொன்ன பொண்ணு நீதான்.. அதான் டிலே பண்ணாம கேட்டேன்"

மல்லி நிதானமாக"அப்ப உங்க லவ்வர என்ன பண்ண.. "

"லவ்வரா..யாரு அது.. நான் சிங்கிள் மல்லி"

"ஆனா உங்க தங்கச்சி சொன்னாங்களே.. உங்களுக்கு லவ்வர் இருந்தா. காணாம போய்ட்டா.அவள கண்டுப் புடிக்க முடியல. அதான் நீங்க இப்படி ஆயிடிங்கனு"..

"ஓ ஆமா ஆமா..இருந்தா ஒரு பஜாரி.. என்ன விட்டு போகவே மாட்டேன்னு என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணா. ஆனா இப்ப ஆளையே காணோம். வரட்டும் அவ கால ஒடைக்குறேன்"..

"என்னாது வரட்டுமா.. அவ எங்க இருக்கானு உங்களுக்கு தெரியுமா.."

"இல்லயே"

"ஐயோ ஏன் என்ன குழப்புறீங்க..அவ எங்கன்னு தெரியல. ஆனா வருவானு சொல்றிங்க.. இந்த பக்கம் என்ன கல்யாணம் பண்ணிக்க கேக்குறீங்க.. என்னதான் நடக்குது.. இலா உண்மைய சொல்லு.. நீ யாரு.. உனக்கு உண்மையாவே பைத்தியமா"

"ஆமா.. உன் மேல"மல்லி விதிர் விதிர்த்து நிற்க அவளை இரண்டெட்டில் நெருங்கி இதலோடு இதழ் பதித்தான் இலக்கியன்.

தொடரும்.


Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்