7 & 8 பைத்தியத்தின் வைத்தியமே


அத்தியாயம் 7❤️

"இலக்கியன் என்ன பண்ற.. பொருக்கி நாயே.. உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இப்டி பண்ணுவ.. உன்ன சாவடிச்சிட்டு தான் டா மொத வேல".. பவளமல்லி கட்டுக்கடங்காத கோபத்தோடு தன் இதழை அனுமதியின்றி சிறைப்பிடித்தவன் மேல் பாய்ந்தாள்.அவன் wwf ஹன்டர் டேக்கர் போல் அவளை மடக்கிப் பிடித்து மேலும் சில பல முத்தங்களை தாராள பிரபுவாக  வாரி வழங்க மல்லி சிறகொடிந்த கோழிக்குஞ்சென அவனை எதிர்க்க பலமில்லாமல் துவண்டு போனாள்.

ஒரு கட்டதில் மல்லி துவண்டு கால் மடிந்து அப்படியே அமர்ந்து விட்டாள் தரையில்..அதற்கு மேலும் அவளுக்கு முத்தச் சிகிச்சை கொடுக்க அவனுக்கு மனமில்லை. அவளுக்கு எதிரே மண்டி போட்டு அமர்ந்தவன்"கம் ஒன் மல்லி..கிஸ்ல என்ன வந்துச்சு.. இதுக்கு போய் இவ்ளோ சீன் போடுற.. நான் என்ன எனக்கு செம மூடா இருக்கு.. என் கூட வந்து படுத்துட்டு போன்னு சொன்னனா.. உன்ன கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்.. உன்கிட்ட மட்டும் தான் எனக்கு அப்படி ஒரு பீலிங் வருது. அத ஹோனஸ்ட்டா உன் கிட்ட வந்து சொன்னேன்.. அதுக்கு போய் ஏன் இப்படி"

வெறுப்பை உமிழும் கண்களோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் பவளமல்லி." நீ ப்ரொபோஸ் பண்ணது தப்பு இல்ல. அது உன்னோட இஷ்டம்.  ஆனா என் பர்மிஷன் இல்லாம எனக்கு கிஸ் கொடுத்தது தப்பு.என்ன தொட உனக்கு யார் உரிம கொடுத்தது? சரி வா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்னியே நாளைக்கே உன்னோட காணாம போன காதலி வந்தா  என்ன கழட்டி விட்டுட்டு போய்டுவ தான"

"ச்சே ச்சே கழட்டில்லாம் விட மாட்டேன்.. நீ என் பெட்டர் ஹாஃப்.. என்னோட பொண்டாட்டி. ஆனா அவ ஜஸ்ட் என்னோட காதலி.. அதனால உனக்கு தான் முதல் உரிம.. உனக்கு மாஸ்டர் பெட்ரூம்னா அவளுக்கு சிங்கிள் பெட்ரூம்.. உனக்கு பிஎம்டிபில்யூனா அவளுக்கு ஸ்போர்ட் கார். உனக்கு வைரம்னா அவளுக்கு பிளாத்தினம்.. "

"என்ன ரூம்ல வெச்சு செய்வ.. அவள தெருவுல வெச்சு செய்வியோ"

"மல்லி"

"வாய மூடு.. ஏன்டா உனக்கு எவ்ளோ திமிரு இருந்தா என் கிட்டயே இந்த ஆட்டம் ஆடுவ.. ஐயோ பாவம் பைத்தியமாச்சேன்னு உன் மேல பரிதாபப்பட்டு இங்க இருந்தா என் மண்டையில ஏறி நர்த்தனம் ஆடுறியோ.. என் டோலி சொன்னதுக்காக இங்க வந்தேன். காலையில இங்கேருந்து போயிருவேன்.. இனிமே உன்ன நான் என் வாழ்க்கையில பாக்கவே கூடாது. மீறி பாத்தேன்.." ஆள்காட்டி விரலை அவன் முன் நீட்டி எச்சரித்தவள் எழுந்து நின்று வெளியே செல் என்பது போல கதவை நோக்கி கை காட்டினாள்.

இலக்கியன் எதுவும் சொல்லாமல் அவளை பார்த்துக் கொண்டே எழுந்து வெளியே செல்ல பின்னாடியே வந்து கதவை அறைந்து சாத்தி தாழ்ப்பாள் போட்டாள். மனம் பொறுக்கவில்லை அவளுக்கு. தன் கை ஓயும் மட்டும் சுவரை ஓங்கி ஓங்கி குத்தினாள். ஆத்திரம் அடங்கவில்லை. நேராக பாத்ரூம் சென்று ஷவரை திறந்து விட்டு ஆடையோடு அதன் அடியில் அமர்ந்து விட்டாள். எவ்வளவு நேரம் குளிர்ந்த தண்ணீரில் அந்த நள்ளிரவில் அமர்ந்து இருந்தாலோ தெரியவில்லை.

வெளியே கோழி கூவும் சத்தம் கேட்டு தான்  வெளியே வந்தாள். ஆடைகளை மாற்றி விட்டு தலையை துவட்டி கொண்டே  டோலிக்கு  அழைப்பு விடுத்தாள். அந்தப் பக்கம் டோலி இன்னும் எழுந்திருக்கவில்லை. லேசாக கண்களை சுருக்கி யார் அழைப்பது என்று பார்த்தவள் பின் அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

"சொல்லு மல்லி.."

"என்னத்தடி சொல்றது.. அந்த பைத்தியக்கார நாயி என்ன பண்ணுச்சு தெரியுமா"..

"என்னடி.ஏன் கத்துற"

"நான் வயித்து எரிச்சளோட சொல்றது உனக்கு கத்துற மாறி இருக்கோ.. அந்த பொறம்போக்கு பண்ணாட என்ன கிஸ் பண்ணிட்டான்டி.."

"ஐயோ"டோலியின் உறக்கம் ஹாலிவுட் தாண்டி சென்று விட்டது."என்னடி சொல்ற.. இலக்கியன் ஜென்டல்மேன்டி.."

"யாரு அந்த லூசு.. அவனாடி லூசு.. விட்டா எனக்கே கரும்புள்ளி செம்புள்ளி குத்திருவான்.. நேத்து என்ன செஞ்சான் தெரியுமா?" மல்லி நேற்று நடந்த அனைத்தையும் டோலியிடம் கொட்டி விட்டு

"அவனுக்கு ஒரு காதலி இருந்துருக்கா. சனியன் புடிச்சவ என்கிட்டு போயி தொலைஞ்சானு தெரியல.. இல்ல இவன் எழவு தாங்காம சொல்லாம கொள்ளாம தெறிச்சிட்டாப் போல. இவன் கூட மனுஷப் பய இருப்பானா சொல்லு.. எவ்ளோ தைரியம் இருந்தா அவள வெச்சிக்குவேன் உன்ன கட்டிக்குறேனு சொல்லுவான்.."

"சரிடி காலையிலேயே காண்டாவாத.. நீ கெளம்பி வரியா.. இல்ல நான் வரணுமா பிக்கப் பண்ண?"

"நீயே வந்து தொல.. எனக்கு இருக்குற கடுப்புல அவன கொன்னாலும் கொன்றுவேன்"

"ம்ம்ம் மல்லி நீ கெளம்பி ரெடியா இரு.. நான் இன்னும் ரெண்டு மணி நேரத்துல அங்க இருப்பேன். அதுக்கு முன்னாடி நீயே ஒருவாட்டி பூஜாவுக்கு அடிச்சு இப்படி பிரச்சனை ஆயிடுச்சி.. நான் வேலைய ரிசைன் பண்றேன்னு சொல்லிரு.அவ ஓவரா பேசுனா நீ எதுவும் பேசாத..  நான் பேசிக்கிறேன் அவகிட்ட"

"ம்ம்ம் சீக்கிரம் வா.." அழைப்பு துண்டிக்கப்பட்டதும் தன்னுடைய பொருட்களை எல்லாம் மூட்டை கட்டினாள் பவளமல்லி. மணி இன்னும் ஆறு கூட ஆகவில்லை காலை. எனவே பொருட்களையெல்லாம் பேக் செய்து ஓரமாக வைத்துவிட்டு சற்று நேரம் தூங்கலாம் என்று படுக்கையில் விழுந்தாள்.

மல்லி கண் விழிக்கும் போது அவளுக்கு எதிரே டோலி அமர்ந்திருந்தாள்.. கண்களை மெதுவாக கசக்கி பார்த்த மல்லி"ஹேய் வந்துட்டியாடி.. என்ன எழுப்பிருக்கலாம் தானே.. " என்று சொன்னபடியே எழுந்தமர்ந்து சோம்பல் முறித்து டோலி பக்கம் நன்றாக திரும்பி அமர்ந்தாள். டோலி ஒரு நாற்காலியில் கை கால்கள் கட்டப்பட்டு அமர்ந்திருந்தாள்.உறக்கம் முழுவதும் ஓடி விட தன் தோழியை நிலையைக் கண்டு பதறி எழுந்த மல்லி

"ஹேய் என்னடி ஆச்சு.. ஏன் இப்படி இருக்க"..

"அத நான் சொல்லவா ப..வ..ள.. ம.. ல்.. லி.." தாளம் போட்டான் இலக்கியன். அவனை அதிர்ச்சியாக திரும்பிப் பார்த்தாள் மல்லி. நிலைக் கதவில் சாய்ந்து ஸ்டைலாக நின்று கொண்டிருந்தவன்

" நேத்து அந்த பேச்சு பேசன நீ இன்னைக்கு கண்டிப்பா இந்த முடிவுக்கு வருவனு எனக்கு தெரியும்..நா ரூம விட்டு வெளிய போனேனே தவிர என்னோட ரூமூக்கு போகவே இல்ல. இந்த ரூமுக்கு வெளிய தான் ஒக்காந்து இருந்தேன். கொஞ்சம் நேரம் செவுற குத்துன.. ரொம்ப நேரம் பாத்ரூம்ல தண்ணி சத்தம் கேட்டுச்சு.

அப்றம் டோலிக்கு ஃபோன் பண்ணி எகுறுனது எல்லாமே வெளங்குச்சு.. என் கிட்ட இதோட ஸ்பெர் கி இருந்துச்சு. அன்னிக்கு பதற்றதுல மறந்து போய்ட்டேன்.நல்ல வேல இன்னைக்கு ஞாபகம் வந்துச்சு. எடுத்து வந்து உன் ரூம் கதவ சத்தம் இல்லாம தொறந்து உன் மூஞ்சில குளோரோஃபார்ம் அடிச்சு மயங்க வச்சுட்டேன்.. அப்றம் உன்ன தேடி வந்த ஃப்ரன்ட்ட புடிச்சு மடக்கி மண்டையில உருட்டுக் கட்டையால நாலு போட்டு இப்படி கட்டி வைக்குறது ஒன்னும் கஷ்டம் இல்லையே"..இலக்கியன் சாவகாசமாக அனைத்தையும் கூற மல்லி வெறி பிடித்தவள் போலானாள்.

ஓடி வந்து அவன் சட்டையைப் பிடித்து கை வலி எடுக்கும் வரை அவன் கன்னத்தில் மாறி மாறி அறைந்து தன்னுடைய நகத்தால் அவன் நெஞ்சில் பிராண்டி ஓங்கி ஓங்கி அவனின் மேனியில் குத்தி அவன் அனைத்துக்கும் இரும்பு போல நின்று கொண்டிருக்கும் கட்டிலில் கிடந்த மெத்தையை எடுத்து வந்து பஞ்சு பறக்கும் அளவிற்கு அவனை மாங்கு மாங்கென்று அடித்து ஒரு கட்டத்தில் ஓய்ந்து போனது என்னவோ மல்லி தான்..

இவை அனைத்தையும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தார் மணியண்ணா. மல்லியின் பார்வை அவரிடம் சென்று நின்றது.என்னால் ஒன்றுமே செய்ய முடியாது.. நான் இங்கு வேலை செய்பவன். முதலாளியை எதிர்க்கும் துணிவு அவருக்கு கிடையாது. ஆனால் தனது கண்களால் அவளிடம் மன்னிப்பு வேண்டினார். பாவம் அவரும்தான் என்ன செய்வார்.  எல்லாம் என் தலை எழுத்து என்று மல்லி அவனை வெறிக்க

"லுக் மல்லி.. நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம். உன் டோலியோட அப்பாவுக்கு அறுவது நாளுக்குள்ள சாகுற மாறி ஒரு இன்ஜெக்ஷன போட்டு அதுக்கு மாத்து மருந்த கையிலேயே வெச்சிக்கிட்டு அத அந்த மனுஷனுக்கு போட்டு உசுர காப்பாத்தாம அவர பணயமா வெச்சு உன்ன கட்டிக்க போறேன்னு நீ நெனச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது.. உன் டோலிக்கு இருக்கும் ஒரே உறவு..உனக்கும் சொந்த அப்பா மாதிரி தான. என்ன பண்ண எந்த வெட்டுக்கிலி கண்ணுப் பட்டுச்சோ அந்த மனுஷனுக்கு இந்த கதி..

மெய் பீ மருந்து பேலன்ஸ் இருந்து அத உன் டோலிக்கு போட்டு அவளும் சாகாம செத்தாலும் ஆச்சரியம் இல்ல பாரு.. இதெல்லாம் நான் தான் செய்றேன்னு நீ ப்ளீஸ் நெனச்சிராத மல்லி.. அந்த அளவுக்கு நான் கேடு கெட்டவன் இல்ல பேபி. உன்ன புடிச்சிருந்துச்சு.

கட்டிக்க கேட்டேன். நீ மாட்டேனுட்ட என்ன பண்ண.. மூட்ட முடிச்சோடு ரெடியா இருக்கப் போல. கெளம்பு மல்லி..எப்படி போற. ஓலா புக் பண்ணவா.. இல்ல வேணா வா நானே உங்க ரெண்டு பேரையும் ட்ரோப் பண்றேன்"மல்லி அயர்ந்து போய் அவனைப் பார்த்தாள்.

அவள் மூளையில் அப்பொழுது மின்னியது" இவன் பைத்தியம் அல்ல.. சைக்கோ.. "..

தொடரும்..

அத்தியாயம் 8❤️


"டோலி என் நிலைமைய பாத்தியா" மல்லி பரிதாபமாக தோட்டத்தில் நடந்து கொண்டு டோலியை பார்த்து கேட்டாள்.

"மொத திரும்பி என் நிலைமைய பாரு.." மல்லி அவளைத் திரும்பிப் பார்க்க கையில் விலங்கோடு அமர்ந்திருந்தாள் டோலி..  தோழியை கையில் சிறை கைதி போல விலங்கோடு பார்க்கையில் மனதில் சுருக்கென்று வலித்தது.  ஆனால் என்ன செய்ய முடியும்..அக் கை விலங்கின் சாவி அந்தப் பைத்தியத்திடம் அல்லவா இருக்கிறது? பைத்தியமா யாரு அவனா? எந்த கோவிலில் வேண்டுமானாலும் மல்லி சூடம் அடித்து சத்தியம் செய்வாள். அதையும் நம்பவில்லை என்றால்  அம்மன் பட சவுந்தர்யா போல தீ மிதிக்கவும் தயாராக இருந்தாள். அவன் பைத்தியம் இல்லை என்று நிரூபிக்க.

" உனக்கு இது தேவைடி.. என்ன ஏதுன்னு நீ விசாரிக்க மாட்டியா..  நீ ஒழுங்கா விசாரிச்சு இருந்தா இந்த நிலைமை உனக்கு வந்திருக்குமா..இல்ல எனக்குதான் வந்திருக்குமா?"பொறிந்துக் கொட்டினாள் மல்லி..

"ஹேய் சும்மா இருடி.. என் வேலைய தானே நா செஞ்சேன். இத ஒரு சேவையா நெனச்சு தான் இந்த வேலைக்கே வந்தேன்.. இப்படி எனக்கே ஆப்பா வரும்னு கனவா கண்டேன்"கை விலங்கை கடுப்பாய் பார்த்தாள் டோலி..

"உங்க சீப் டாக்டர் கிட்ட சொல்லி ஏதாச்சும் பண்ண முடியாதா"

"காலையில இருந்து இதுக்கு பதில் சொல்லிட்டேன்.. இலக்கியன் யாருனு நெனச்ச.. அவன் ஸ்டேட்டஸ் என்ன.. அவனோட பவர் என்ன.. அவன போயி எங்க சீப் என்ன பண்ணிட போறாரு..அவருக்கு மனநிலை சரியில்ல ப்ளீஸ் கோப்பரெட் பண்ணுடி தங்கம்னு சொல்லுவாரு.. ஹேய் மல்லி.. அந்த பிறவி பைத்தியத்த கூப்ட்டு கை விலங்க ரிமோவ் பண்ண சொல்லுடி.. எழவு காலையில இருந்து கைதி மாறி சுத்திட்டு இருக்கேன். அவசரத்துக்கு கண்ட எடத்துல அரிக்குது சொரிய கூட முடியல."

அனைத்தையும் தான் செய்துவிட்டு தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இலக்கியன் காலையில் தெனாவட்டாக சொல்ல பவளமல்லிக்கு பீபி ஏகத்துக்கும் ஏறியது..

"போடா லூசு பயல.. நீ லூசு இல்லடா.. சைக்கோ.. உங்கிட்ட வந்து மாட்டிக்கிட்டது என்னோட தப்பு.. மரியாதையா எங்கள போக விடு.. சொசைடியில உனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு.. அதை நீயே கெடுத்துக்காதே..லுக் மிஸ்டர் இலக்கியன் எனக்கு உன் மேல எந்த இன்டெரெஸ்ட்டும் கிடையாது..  நீ டோலியோட அப்பாவ பணயம் வெச்சாலும் சரி தான்.. உன்ன கட்டிக்க மாட்டேன்.."

"அப்டியா ஓகே மல்லி.. யுவர் விஷ்..நான் டோலியோட கட்ட அவுத்து விடுறேன்"..என்றவன் டோலி அருகே சென்று அவளது கை கட்டை அவிழ்க்க அடுத்த நிமிடம் பின் இடுப்பில் சொருகி வைத்திருந்த கை விலங்கை எடுத்து டோலி கரங்களில் பூட்டி விட்டான். டோலியும் மல்லியும் அவனை அதிர்ந்து பார்க்க

" டைட்டானிக் படத்துல வர மாதிரி கோடாரி வச்சி இத ஒடைக்க பாக்காத.. கோடாரி கத்தி இப்படி எதாலையும் இத ஒடைக்க முடியாது..ஏன்னா இதோட சாவியத் தவிர எதாலயும் இத தொறக்க முடியாது..ஸ்பெஷல்லா மேட் பண்ணது..என்ன கல்யாணம் பண்ணலைனா பரவால்ல விடு.. நீ உனக்கு புடிச்ச யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இரு மல்லி.. போய்ட்டு வா.. மணியண்ணா எனக்கு டிப்பன் மூனு நெய் தோசை.. ரெண்டு முட்ட தோசை போட்டு எடுத்துட்டு ரூமுக்கு கொண்டு வாங்க".. அவன் சென்று விட இங்கே பெண்கள் இருவரும் செய்வதறியாமல் தவித்தனர்.

மணியண்ணா மல்லி அருகே வந்து"என்ன மன்னிச்சிடு பாப்பா.. என்னால ஒண்ணுமே செய்ய முடியல.  ஐயாவ எதுத்து பேசுற தகுதி எனக்கு இல்ல.. பேசாம நீ ஐயா சொல்ற மாதிரி கேளு.. "

"அண்ணே என்ன அந்த பைத்தியத்த கட்டிக்க சொல்றிங்களா"..

"ஆமா.. சரி முறைக்காத..  அப்படி இல்லன்னா உடனே பூஜா பாப்பாக்கு ஃபோன் போடு.." இது நல்ல யோசனையாக இருக்க மல்லி உடனே பூஜாவுக்கு அழைத்தாள். மல்லி கூறிய விஷயங்களை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த பூஜா

"வாவ் மல்லி நீங்க சொல்றது உண்மை தான.. என் அண்ணே உங்கள கல்யாணம் பண்ண கேட்டானா..நம்பவே முடியல என்னால.அவன் அந்த பொண்ண எவ்ளோ லவ் பண்ணினான் தெரியுமா..அவ காணா போனதும் அவன் லைப் முடிஞ்சு போச்சுன்னு நினைச்சோம்.. ஆனா உங்கள பாத்ததும் இவ்ளோ சீக்கிரம் மனசு மாறி கல்யாணம் பண்ணிக்க கேப்பானு நினைச்சு கூட பாக்கல..சாரி மல்லி.உங்க கல்யாணத்துக்கு என்னால வர முடியாது. நான் என் புருஷன் ஊர்ல இருக்கேன்...

இங்க தலைக்கு மேல வேலை..பட் சீக்கிரம் எல்லாத்தையும் சரி பண்ணிட்டு நான் அங்க வந்து உங்கள பார்க்கிறேன்..வரும்போது கண்டிப்பா உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் இருக்கு..  என் அண்ணன நல்லா பார்த்துக்கோங்க.  உங்கள நம்பித்தான் என் அண்ணன விட்டுட்டு வந்தேன்.  அவருக்கு ஏதாச்சும் ஒன்னுனா உங்கள தான் கேட்டேன்..  ஓகே மல்லி எனக்கு டைம் ஆகுது..பெஸ்ட் ஒப் லக் போர் யுவர் வெட்டிங்.. பாய்"

ஆஹா குடும்பமே பைத்தியம் போல..  மல்லி கூற வருவதை கூட காதில் போட்டுக் கொள்ளாமல் பூஜா அவளே பேசி அவளே தொடர்பை துண்டித்து விட்டாள்.இடையிடையே மல்லி மறுத்து பேசியது எதுவும் அவள் காதில் விழுந்த பாடில்லை. மல்லி  மணியண்ணாவை பார்க்க"எல்லாமே முடிஞ்சு போச்சு.எனக்கே இங்கே என்ன நடக்குதுன்னு புரியல.. ஆனா ஒன்னே ஒன்னு மட்டும் புரியுது.  பாப்பா ஐயா உன்ன பார்த்து உன்ன ரொம்ப கேவலமா விழுந்துட்டாரு..விழுந்தவருக்கு குறுக்குல அடி பட்டிருக்கும் போல.. அதான் எழ முடியாம அங்கேயே படுத்து கிடக்கிறாரு..பேசாம அவரு எழ நீ கை குடேன்.."

"கை என்ன மணியண்ணா.. நான் வேணும்னா ஜேசிபி கொண்டு வந்து விழுந்து கிடக்கிற அவர அள்ளி எடுத்துட்டு போய் எறிச்சிடடுமா"அடக்க முடியா ஆத்திரத்தில் கேட்டாள் மல்லி.

"அடப் போமா..  போற போக்க பாத்தா ஐயா பைத்தியம் முத்தி இன்னும் என்னென்னவெல்லாம் ஆட போறாரோ தெரியல.. நெனச்சு பாக்கவே வயித்த கலக்குது.. நீ அந்த பொண்ணு கையில இருக்கிற விலங்க உடைக்க பாரு..  நான் போய் தோசை சுட்டு கொடுத்துட்டு வர்றேன்.."மணியண்ணா அங்கிருந்து நகர்ந்து விட மல்லி எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தாள்.

கை விலங்கை கழட்ட முடியவில்லை. வெட்கத்தை விட்டு இலக்கியன் அறைக் கதவைத் தட்டினாள்..உள்ளிருந்து குரல் கொடுத்தான் இலா.."கல்யாணம் பண்ணிக்குறேனு சொல்லு.. நான் வெளியே வந்து உன் மூஞ்ச பாப்பேன்..  இல்லன்னா ஓயாம உன் மூஞ்ச பாக்க நீ ஒன்னும் உலக அழகி கிடையாது.. நீதான் என்ன கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்ட தானே.. பின்ன எதுக்கு இங்க இருக்க.. நீயும் அந்த பொண்ணும் சீக்கிரம் என் வீட்ட விட்டுப் போங்க.. அந்தப் பொண்ணோட அப்பா மத்தியானம் என்ன சாப்பிடுவாருனு  மட்டும் கேட்டு சொல்லு"

அவன் பேசியதில் இருந்து டோலியின் தந்தை அவன் பிடிக்கும் வந்தாயிற்று என்பது அவளுக்குப் புரிந்தது. டோலியிடம் இதனை சொல்ல அவளுக்கு வேறு வழி தெரிய வில்லை. இருவர் கைகளிலும் தொலைபேசி இருந்தது. காவல்துறையினருக்கு அழைத்து உதவி கேட்கலாம். ஆனால் அந்த யோசனை அவர்களுக்கு சரியாக படவில்லை.  எப்படியோ ஏதோ ஒரு காரணம் திட்டம் போட்டு காய் நகர்த்தி இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளான் இலக்கியன்.

அப்படி என்றால் அனைத்து பக்கங்களிலும் சாதுரியமாக இருக்கும் ஓட்டைகளை அவன் அடைத்து விட்டிருப்பான்.. அனாவசியமாக காவல்துறைக்கு செல்வது டோலியின் தந்தை உயிருக்கு ஆபத்தாக முடியலாம். என்ன செய்வது என்று இரு பெண்களும் மண்டையைப் போட்டு குடைந்து கொண்டிருந்தனர். மதியம் நெருங்க பசி வயிற்றைக் கிள்ளியது. பசித்த வயிற்றோடு இருந்தால் யோசிக்க முடியாது.  எனவே டோலிக்கு உணவை அள்ளிக் கொடுத்துவிட்டு தானும் கொரித்து விட்டு மீண்டும் யோசனையை தொடர்ந்தாள் மல்லி.

மாலை நெருங்கியதும்.டோலி அடி வயிற்றில் கை வைத்து முனங்கினாள். அவளுக்கு மாதாந்திர வலி வந்து விட்டது."மல்லி எனக்கு பிரியேட் வந்துருச்சு..பேண்டில பட்ருச்சி பீல் ஆகுது. ப்ளீஸ் அவன் கிட்ட சொல்லி கை விலங்கை அவுக்க சொல்லு"

மல்லி வேகமாக ஓடி இலக்கியன் அறைக்கதவை தட்டினாள்.டோலியின் நிலையை முடிந்தவரை நாசுக்காக எடுத்துக் கூறினாள். உள்ளிருந்து கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா? இல்ல ஓடிப்போயி கல்யாணம் தான் கட்டிக்கலாமா? என்ற பாடல் ஓடியது. மல்லிக்கு அப்போதுதான் நிலைமையின் தீவிரம் உரைத்தது. இது வரைக்கும் எப்படியாவது இங்கிருந்து தப்பி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். அந்த எண்ணத்திற்கு முழுதாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டாள்.

இது அவளுக்காக பின்ன பட்டிருக்கும் சிலந்தி வலை.சாதாரண சிலந்தியாக இருந்தால் அந்த வலையைக் கிழித்துக்கொண்டு அவள் வெளியே வந்து விடுவாள்.ஆனால் இதுவோ ராட்சத சிலந்தி. இதிலிருந்து மல்லி தப்பித்து வருவதற்கு பதிலாக சிலந்திக்கு இரையாக்கி விட வாய்ப்பு அதிகம்.  எனவே வேறு வழியின்றி  மல்லி மீண்டும் ஒருமுறை இலக்கியன் அறைக் கதவைத் தட்டி

"ஹேய் லூசு.. சாவிய கொடுத்து தொல.. உன்ன கட்டிக்குறேன்"என்றதும் அறைக் கதவு படாரென்று திறந்தது.மல்லியை பிடித்து இழுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தான் இலா. அங்கே ஏற்கனவே வலியில் சுருண்டு படுத்திருந்த டோலி திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க மணியண்ணா என்ன ஏதென ஓடி வர இலக்கியன் நிதானமாக பேண்ட் பாக்கேட்டில் இருந்து தாலி கயிறை எடுத்து அதிர்ச்சியில் விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்த பவள மல்லி கழுத்தில் கட்டினான்.

தொடரும்..


Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்