9&10&11 பைத்தியத்தின் வைத்தியமே



டியர்ஸ் எனது கதைகளை ஆடியோ வடிவாக கேட்க Moon's talk channel ஐ கேட்கவும். அப்படியே முடிந்தால் subscribe செய்து ஆதரவு கொடுங்க டியர்ஸ்💛🧡

https://youtube.com/@moonstalk6914


அத்தியாயம் 9🧡

தோட்டத்து பொந்திலிருந்து வெளி வந்த எலி கூட இலக்கியன் கட்டிய தாலியை பார்த்ததும் மீண்டும் பொந்துக்குள் சென்று பதுங்கி விட்டது. அந்த வீட்டில் அவ்வப்போது  திருடித் தின்ன வரும் எலிக்கே அவ்வளவு அதிர்ச்சி இருக்கும் போது பைத்தியத்திற்கு ட்ரீட்மெண்ட் செய்ய வந்த பவள மல்லிக்கு தன் கழுத்தில் தொங்கும் தாலியை பார்த்து எவ்வளவு அதிர்ச்சி இருக்க வேண்டும்.

பாரதிராஜா படம் போல இலக்கியன்  திடீரென்று கட்டிய தாலியை பார்த்ததும் அரக்கப் பரக்க வந்து கொண்டிருந்த மணியண்ணா அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்காமல் ஒரு காலைத் தரையிலும் மற்றொரு காலை ஹேரிலும் வைத்தபடி நிற்க,  வலியில் முனகிக் கொண்டிருந்த டோலி வாயைத் திறந்து முட்டை கண்ணை விரித்து அந்த காட்சியை பார்க்க, நம் தன நம் தன நம் தன ஆ ஸ்லொவ் மோஷனில் 360 டிக்ரி கோணத்தில் இலக்கியன் பவள மல்லியை சுற்றி சுற்றி கதையும் சுற்றுகிறது.. கையில் ஓப்போ கைபேசியில் டைப் செய்தவாறு எழுத்தாளினியும் சுற்றி வருகிறார். அவரோடு அவரின் வாசகர்களும் சுற்றி வர,  மல்லி பிரமையில் இருந்து வெளி வந்து மெல்ல நடுங்கிய கரத்தோடு தன் கழுத்தில் இருக்கும் தாலியை தூக்கி பார்க்க இந்த இடத்தில் ஸ்லோ மோஷன் முடிவடைகிறது.

முதலில் ஓப்போ கைபேசியோடு அடுத்த சீன் எழுதுவதற்கு எடுத்தாளினி மறைந்து விடுகிறார்.  அடுத்து அவரின் வாசகர்களும் அடுத்த சீனை படிப்பதற்கு ஆவலாக மறைந்து விடுகிறார்கள்..மணியண்ணா அதிர்ச்சி நீங்கி மறு காலையும் புற்தரையில் வைக்கிறார்.டோலி ஆ என வயிறை பிடித்துக் கொள்கிறாள்.மல்லியின் இடது கண்ணிலிருந்து ஒரு சொட்டு  கண்ணீர் அவளது கன்னக் கதுப்புகளை தாண்டி கன்னத்தின் பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்ய ஏதுவாய் இருந்த நேரம் தனது வலது கை ஆள்காட்டி விரலினால் அம்மா என்ற மௌனக் கதறளோடு கீழே விழுந்த கண்ணீர் துளியை தாங்கிக் கொண்டான்  இலக்கியன்.

அந்தக் கண்ணீர் துளியை தன் இரு கண்களுக்கும் மத்தியில் பிடித்துக் கொண்டு"இலக்கியன் பொண்டாட்டி அழலாமா?.. எல்லோரும் குங்குமம் எடுத்து பொண்டாட்டி நெத்தி வகுடுல வைப்பாங்க.. ஆனா நான் பைத்தியக்காரன் தான.. எல்லாமே வித்தியாசமா தான் செய்வேன். உனக்கு குங்குமம் வைக்குறதுக்கு பதிலுக்கு என் நெத்தி வகுடுல என் பொண்டாட்டியோட கண்ணீர் துளிய வைக்க போறேன்.ஏன் தெரியுமா.. அவ கண்ணீர் கூட எனக்காக மட்டும் தான் இருக்கனும் அதான்".. என்ற இலக்கியன் அந்த ஒத்த சொட்டு கண்ணீரை தன்னுடைய நெற்றி வகுடில் வைத்தான்..

மணியண்ணா டோலியை பார்த்து"நோட் பண்ணுங்கடா நோட் பண்ணுங்கடா.. பின்றான் டா..பின்றான் டா ..பைத்தியம்னு சொல்லி சொல்லியே நம்மள லூசு பயலா சுத்த விட்ருவான் போல"..

"அண்ணா என்ன உங்க அய்யாவ மரியாதை இல்லாம பேசிடிங்க.."

"அதிர்ச்சிம்மா அதிர்ச்சி.. இத அய்யா கிட்ட போட்டு கொடுத்துறாத உனக்கு மட்டும் அப்றம் சிக்கன் கீமாவும் சப்பாத்தியும் செஞ்சு தரேன்.."

"பொழச்சு போங்க.. அங்க பாக்கலாம்".. இருவரும் அங்கே பார்த்தனர்.

மல்லி அவனை சகட்டு மேனிக்கு முறைத்து விட்டு உள்ளே சென்றாள் டோலியும் அவளுக்கு பின்னால் ஓட இலக்கியன்,மணியண்ணா அருகே வந்து"அண்ணா இன்னைக்கு நைட்டு நீங்க சமைக்காதீங்க.. வெளிய ஆர்டர் பண்ணிருக்கேன். இன்னும் கொஞ்சம் நேரத்துல கேட்டரிங்காரன் வந்துருவான். அப்றம் வீட்ட டெகரெட் பண்ணவும் ஆளு வருவாங்க.. கூட இருந்து பாத்துக்கோங்க.."

"அய்யா எப்படிய்யா.."

"எனக்கு தெரியும் மணியண்ணா.. இன்னைக்கு எனக்கு கல்யாணம்னு எனக்கு தெரியும்.. ஸ்கெட்ச் போட்டு அடிச்சது யாரு.."

"இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே.. சாமி நீங்க மஹான்".. மணியண்ணா புகழ அந்நேரம் ஏதோ கார் வந்து வாயிலில் நின்றது. இலக்கியன் கேட் திறக்க சொல்ல மணியண்ணா சென்று கேட்டை திறந்தார்.கார் உள்ளே வந்து நிற்க ஒரு பெண் இறங்கி பின்னால் கதவை திறந்து இரண்டு சூட் ஹெங்கரில் தொங்கிக் கொண்டிருந்த ஆடைகளை எடுத்து வந்து இலா முன் நின்றாள்.

"சார் நீங்க சூஸ் பண்ண டிரஸ்.. கொஞ்சம் ஆல்டர் பண்ணி எடுத்துட்டு வந்துருக்கேன்.. ட்ரயல் பாருங்க சார்.."

"இல்ல வேணா.. கரெக்ட்டா தான் இருக்கும்..தேங்க்ஸ்".. அந்த ஆடைகளை அவன் பெற்றுக் கொண்டதும் மேலும் அந்த பெண் காரிலிருந்து இரண்டு கவர்களை எடுத்து மணியண்ணா கையில் கொடுத்து விட்டு கிளம்பி விட


"அய்யா புது துணி மாறி இருக்கே"


"ஆமா மணியண்ணா.. அப்றம் பார்ட்டிக்கு பஞ்ச பரதேசி மாறியா இருப்பிங்க.. உங்களுக்கும் டோலிக்கும் டிரஸ் அதுல இருக்கு.. போயி ரெடி ஆகுங்க.. அதோ டெகரேஷன் பண்றவன் வந்துட்டான் போல.. அவன் பாத்துப்பான்.சீக்கிரம் சீக்கிரம்"மணியண்ணாவுக்கு அவனின் வேகம் ஆச்சர்யத்தையும் பிரமிப்பையும் கொடுத்தது.

அவர் உள்ளே சென்று டோலியை பார்க்க அவளோ மல்லி அறைந்து சாத்தி இருந்த அறைக்கதவை வெளியே நின்று தட்டிக் கொண்டிருந்தாள்."ஏம்மா அந்த பாப்பா இப்ப கதவு திறக்காது..அய்யா இன்னும் புதுசா ஏதாவது யோசிக்கறக்குள்ள சட்டு புட்டுன்னு குளிச்சிட்டு இந்தத் துணியை போட்டுக்கோ.."

"யோவ்.. என்னயா  பேசிட்டு இருக்க.. உள்ள என் ஃப்ரன்ட்டு என்ன நிலைமையில இருக்கானு தெரியல.. உனக்கு புது துணி போடணுமா"..

"என்னமா மரியாதை மங்கோலியா வரைக்கும் போது. எழவு போயி தொலையட்டும்..அய்யா வந்துர போறாரு மா.. அப்றம் ஏதாச்சும் எடக்கு மடக்கா நடக்கும்.. என்னமோ விருந்து எல்லாம் இருக்காம்..நமக்கும் துணி எடுத்துருக்காரு.. வாம்மா"டோலி கதவை தட்டுவதை நிறுத்தி விட்டு

"மணியண்ணா இவன் எப்படி இப்படி நடந்துக்குறான்.. என்னமோ பிளான் வெச்சிருக்கான்.. இல்லனா ஸ்கெட்ச் போட்டு இவ்வளவும் செய்ய மாட்டான்"..

"என்ன கன்றாவியோ.. இந்தா துணி போட்டுக்கோ.. வந்துர போறாரு.. நான் போறேன்"மணியண்ணா ஓடிட டோலி வேறு வழியில்லாமல் வேறு அறையில் குளிக்க சென்றாள்.

மல்லியின் மனம் உலைக்கலமாக கொதித்து கொண்டிருந்தது. எப்படி இப்படி நடந்தது? யார் இவன்? எதற்காக இப்படி செய்தான்? உயிருக்கு உயிராக ஒரு பெண்ணை காதலித்தான் என்று பூஜா சொன்னாள்?  அந்தப் பெண் காணாமல் போனதால் தான் அவன் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டான் என்று அவள் சொல்லில் இருந்ததே? அந்தப் பெண்ணுக்கு என்ன ஆயிற்று என்றே தெரியாத நிலையில் எப்படி அவனுக்கு வைத்தியம் பார்க்க வந்த என்னை திருமணம் செய்து கொண்டான்? அதும் எப்படி?

அவளிடம் காதல் வசனம் பேசியா? டோலியின் தந்தையை பணயக் கைதியாக்கி அனைத்தையும் செய்துவிட்டு நான் செய்யவில்லை நீ வேண்டுமானால் இப்பொழுதே இந்த வீட்டை விட்டுப் போய்விடு என்று சொல்பவன் எந்த அளவுக்கு மன நிலை சரியானவனாக இருப்பான்? இவன் பைத்தியம் இல்லை இவன் ஒரு சைக்கோ.

இது உண்மையில்  டோலிக்கு விரித்த வலையா?  இல்லை என்னைக் கண்டதும் கிடைத்து விட்டது ஒரு மாபெரும் அடிமை என்று உடனடியாக எடுத்த முடிவா? எது எப்படி இருந்தாலும் இப்படி திடீரென்று திருமண வாழ்க்கைக்கு அவள் தயாராக இருக்கவில்லை. அவள் மனம் முழுவதும் தனுஷ் செய்த துரோகம் வேராக படர்ந்திருந்தது.

இங்கே வேலைக்கு வரவில்லை என்றால் மேப்பில் ஏதாவது ஒரு ஊரை தொட்டு  அங்கே சென்று தனது புதிய வாழ்க்கையை தொடங்கி இருப்பாள். ஆனால் வேலையில் முழு கவனம் செலுத்தி இருப்பாளே தவிர இன்னொரு வாழ்கையை அவள் தேர்ந்தெடுத்திருக்க மாட்டாள்.. அப்படியிருக்க ஏன் அவளுக்கு இந்த மாதிரி ஆனது...இலக்கியன் அவனை நினைக்கும் போது ஆத்திரம் அவள் உடல் முழுவதும் பரவி நடுங்க வைத்தது..


அவனைப் பார்க்கவே கூடாது.. அறைக்கதவை அவன் கோடாரி கொண்டு பிளந்தாலும் கூட வெளியே செல்லக்கூடாது என்று அவள் நினைத்துக் கொண்டிருக்க அவனோ திடீரென்று அவள் கப்போர்ட் உள்ளே இருந்து வெளியே வந்தான்..அதிர்ச்சியில் மல்லி எழுந்து நின்று விட்டாள்.

" நீ எப்படி அலமாரி உள்ள இருந்து.."

"கூல் ஹனி.. உனக்கு ஒரு உண்மை தெரியுமா.. இப்போ நீ இருக்கிற ரூம்ல தான் முன்னாடி என்னோட லவ்வர் இருந்தா. சும்மா என்கூட சண்டை போட்டுக்கிட்டே இருப்பா.. சண்டையில ரூமுக்குள்ள போய்  கதவ சாத்திக்குவா. எவ்ளோ கெஞ்சினாலும் திறக்க மாட்டா.. அப்பதான் என் ரூமுக்கும் அவ ரூமுக்கும் சீக்ரெட் டோர் ரெடி பண்ற ஐடியா வந்துச்சு.. பாத்ரூம்ல இரண்டு பக்கம் கதவு வைக்கலாம்னு யோசிச்சேன்.. ஆனா அது ஓல்ட்.. யாருக்கும் தெரியாம என் ரூம் கப்போர்ட்ல இருந்து இந்த ரூம் கப்போர்ட் குள்ள வர சீக்ரெட் டோர் வெச்சிட்டேன்..

ஆனா இந்த டோர் குள்ள வந்து அவள ஒருவாட்டி கூட பாக்கல. அதுக்குள்ள அவ போயிட்டா.." இதை சொல்லும்போது  இலக்கியன் கண்களில் அப்படி ஒரு வலி. இத்தனை நாளில் அவன் கண்களில் இம்மாதிரி ஒரு வலியை மல்லி இப்போது தான் காண்கிறாள். காதலியை பற்றி சொல்லும் போதே அவன் கண்களில் மரண வலி தெரிகிறது.. அப்படியிருக்கும் போது எதனால் என்னை திருமணம் செய்தான்..

"உன் ஆள பத்தி பேசும்போது  இவ்ளோ பீல் பண்ற.. அப்புறம் எதுக்கு என்ன கல்யாணம் பண்ண.. திடீர்னு அந்த பொண்ணு வந்து கேட்டா என்ன சொல்லுவ.. உண்மையை சொல்லு உனக்கு என்ன தான் வேணும்.. நீ சைக்கோவா.  வேலைக்கு வர பொண்ணுங்கள கல்யாணம் செஞ்சி  அவங்கள கொண்ணு "

"ம்ம்ம் அப்புறம்.. அவங்கள கொண்ணு தோல உரிச்சு கண்ணு நொண்டி.. கிட்னிய புடிங்கி.. கொடல உருவி.. முடிய செரைச்சு.. ஹார்ட்ட கொத்தா வெளிய எடுத்து.. துண்டு துண்டா வெட்டி  நானே சூப் வெச்சு குடிச்சிருவேன்..என்னடி சைக்கோ கொலைகாரி மாதிரி பேசிட்டு இருக்க.. இதுக்குதான் சைக்கோ  த்ரில்லர் மூவி பாக்க கூடாதுன்னு சொல்றது.."

" இலக்கியன் பேச்ச மாத்தாத.. நீ பார்த்த மத்த பொண்ணுங்க மாதிரி நான் கிடையாது... தாலி கட்டிட்டா நீதான் என் புருஷனு நெனச்சு என்னால வாழ முடியாது.. டோலி அப்பாவ மொத ரிலீஸ் பண்ணு.. உனக்கு ஏதோ ஒரு மோட்டீவ் இருக்கு.. அது என்னன்னு எனக்கு தெரியல.. கண்டுபிடிக்கிறேன்.. அதுவரைக்கும் என் பக்கத்துல வந்த? "

இரண்டே எட்டில் அவளை நெருங்கி அவளின் கரங்களை அவளது முதுகு பின்னால் வளைத்து தனது ஒரே கரத்தால் பிடித்து, மற்றொரு கரத்தால் அவளது இடையை பிடித்து தன்னோடு நெருங்கியவன்" பக்கத்துல வந்துட்டேன்.. கல்யாணம் ஆயிருச்சு..  இப்ப உன்ன தொடலாம் அப்படின்னு ஒரு சிப் மென்டாலிட்டி என்கிட்ட கிடையாது.. சொல்லப் போனா நான் அவ்ளோ நல்லவன் இல்ல. இந்த அஞ்சு நாளுல உன்ன என்ன வேணும்னாலும் என்னால செஞ்சுருக்க முடியும்..

இது என் இடம்.. இந்தக் கல்யாணம் உனக்காக..என் காதலிய பத்தி கேட்டியே  உனக்கு ஒன்னு தெரியுமா.. அவ கூட எல்லாத்தையும் முடிச்சிட்டேன்.. " மல்லியின் செவி அருகே குனிந்து இறுதி வாக்கியத்தை காற்றோடு காற்றாக அவன் கூற மல்லி பேயறைந்தது போலானாள்.

தொடரும்..

அத்தியாயம் 10💙

என் முன்னாள் காதலியோடு கட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டதன தன் மனைவியிடம் கூறி தீராத யுத்தத்தை ஆரம்பித்து வைத்தான் இலக்கியன்.  எந்த ஒரு பெண்ணால் தன்னுடைய கணவன், தன் காதலன் வேறு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டதை ஜீரணிக்க முடியும்? ஒருவேளை இந்த நவநாகரீக நாசமாய் போன காலத்தில் லிவ்விங் டு கெதர் என டேக் இட் ஈஸி ஊர்வசி பாலிசி வைத்திருப்பவர்களால் இது ஒரு சாதாரண விஷயம் என்று தாண்டி செல்ல முடியும்..  ஆனால் என்னதான் உலகம் இந்த  நவ நாகரீகத்துக்குள் மூழ்கி முத்தெடுக்க சென்றாலும் காதல் என்று வந்து விட்டால் அவர்கள் தங்களுக்கு நேர்மையானவர்களாகவும் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என நினைப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நேர்மை உண்மை மட்டும் பத்தாது.. அவர்களின் உயிரில் ஆரம்பித்து உடல் வரை  அனைத்தும் ஒருவருக்கேச் சொந்தம். பவளமல்லி நிர்ப்பந்தத்தின் பெயரில் வேண்டுமானால் இலாவை திருமணம் செய்திருக்கலாம்.  ஆனால் அவளும் ஒரு பெண்தானே.அதுm ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு பிறவியிலிருந்து அவள் ரத்தத்தில் ஊறி இருக்கிறது.. தாலிக்கட்டி அரை மணி நேரம் கூட ஆகாத இந்த நிலையில் கணவன் வேறு பெண்ணுடன் உடலுறவு வைத்திருந்ததை கூறினால் அவளால் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

கண்கள் விரிய சிவப்புக் கோடுகள் கண் முழுவதும் நிறைய கண்ணீர் இப்பவோ அப்பவோ என்று அவளது கண்களில் தேங்கி நின்றது.  சட்டென அவளை இழுத்து தன் மார்போடு அனைத்துக் கொண்டான் இலக்கியன்.. எதுவும் செய்யத் தோன்றாமல் குறைந்தபட்சம் தன்னுடைய மறுப்பை கூட வெளிப்படுத்த இயலாத நிலையில் சிலையாக நின்றாள் மல்லி.

"ஓய் உன்ன ஹர்ட் பண்ண இப்படி சொல்லல.. நான் உண்மைய மட்டும் தான் சொல்லுவேன்.நாளப் பின்ன உனக்கு இந்த உண்மை தெரிஞ்சு நீ பீல் பண்ணக்கூடாது.. அதுக்குதான் இப்பவே இந்த உண்மைய சொன்னேன்..அது எல்லாம் என் மனசுக்குள்ள பத்திரமான ஒரு பொக்கிஷமா இருக்கும்.. சரி நீ ரெடி ஆகு..உன்னோட ட்ரஸ் கொண்டு வந்திருக்கேன்..கிளம்பி கீழே வா.."அவன் பாட்டில் சொல்லிக்கொண்டே சென்றான்.

மல்லிக்கு செயலிழந்து நின்றிருந்த ஹார்மோன்கள் வேலை செய்ய ஆரம்பித்து அவன் கூறிய வார்த்தைகள் மூளைக்கு உறைக்க அவனைப் பிடித்து தள்ளி விட்டாள். அவளை விடுவித்தானே தவிர அவன் ஒன்றும் கீழே விழவில்லை, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு அவள் எய்ய வார்த்தை அம்பு மழையில் நனைய தயாராக இருந்தான்.

"பொருக்கி.. ஒன்னா நம்பர் பொம்பள பொருக்கி.. எவ்ளோ தைரியம் இருந்தா என் கிட்ட வந்து இத சொல்லுவ..என்ன பாத்தா உனக்கு அவ்ளோ கேவலமா இருக்கா..உன் எக்ஸ் கூட எல்லாம் முடிச்சிட்டேன்னு சொன்னத கூட நான் மன்னிச்சிருவேன். ஆனா அது எல்லாம் பொக்கிஷமா மனசுல இருக்கும்னு சொன்ன பத்தியா அத தான் டா என்னால மன்னிக்க முடியாது.. நான் உன்கிட்ட தெரியாம கேட்கிறேன்.. இல்ல தெரிஞ்சே கேட்கிறேன்.. உன் அப்பா அவரோட முன்னாள் காதலி கூட நெருக்கமா இருந்தத உன்னோட அம்மா கிட்டே சொல்லிருந்தா அவங்க மனசு எவ்ளோ வேதனைப் பட்டிருக்கும்.."

"இப்ப எதுக்கு என் அப்பா அம்மாவ இழுக்குற"

"ஓ அடேங்கப்பா.. உன் ஆத்தா அப்பன பத்தி பேசுனா எரியுது. யாரோ பெத்த பொண்ணு பவளமல்லின்னா குளு குளுன்னு இருக்கோ..சுயநலம்.. உடம்பு பூரா சுயநலம்.. ச்சீ..டேய் கல்யாணம் பண்ணனும்னு சொன்ன.. பண்ணிட்டேன். ஒழுங்கு மரியாதையா டோலியோட அப்பாவ வெளிய விட்றா..".. மல்லி ஆவேசமாக கத்தினாள்..

ஆனால் அதற்குக் கொஞ்சமும் எதிர்வினை செய்யாமல்"டிரஸ் வெச்சிருக்கேன்.. அளவு சரியா இருக்கும்.. ஏன்னா மாமா கண்ணாலயே கணக்கு பண்ணிட்டேன்.. நீ என்ன பண்ற இத போட்டுட்டு அழகா மேக்கப் பண்ணிட்டு கீழ வந்துரு.. இல்ல வேணா மாமா வந்து கூட்டிட்டு போறேன்.. அப்றம் பிச்சைக்காரன் வாந்தி எடுக்குற மாறி மேக்கப் அப்பிராம அழகா கியூட்டா பண்ணு.. அச்சோ பாரு கேக்க மறந்துட்டேன்.. டோலி அப்பா சாயங்காலம் ஏழு மணிக்கெல்லாம் என்னவோ மாத்திரை போடுவாராமே. அது என்ன எழவு பேரே வாயில வரல..சட்டுனு அத டோலி கிட்ட கேட்டு சொல்லு.. அத போடலனா அவருக்கு வியர்த்து கொட்டி ஹார்ட் பீட் எகிறி சொல்ல முடியல போனாலும் போயிருவாராம்.. ஒரு உயிர் போக நீ காரணமா இருக்கலாமா மல்லி குட்டி..

உன்மேல கொலைக்கார பட்டம் வந்தா மாமா தாங்குவனா சொல்லு.. அவர ரிலீஸ் பண்ண சொன்ன தான.. உடனே பண்ணிருறேன் பேபிம்மா. ஆனா அவரு மாத்திரை இல்லாம கையில காசும் இல்லாம அத்துவான காட்டுக்குள்ள மயங்கி கெடக்காராம். ஐயோ பாவம்ல.. ராத்திரி ஆச்சின்னா காட்டு மிருகங்க ஏதாச்சும் வந்து புடிங்கி வெச்சிருங்க.. நான் ஈரக் கொலைய சொன்னேன்.. பேசிட்டே இருக்கேன் பாரு.. இரு ஃபோன் போடுறேன்.. என் செல்ல பொண்டாட்டி சொல்லி செய்யாம இருப்பேனா".. இலக்கியன் தனது கைப்பேசியை எடுத்து யாருக்கும் அழைத்து லவுட் ஸ்பீக்கரில் போட்டான்..

" தம்பி அந்தப் பெரியவர ரிலீஸ் பண்ணிடுங்க.."

"பாஸ் நாங்க கொண்டு போய் வீட்ல விடனுமா.."

" இல்ல அதெல்லாம் வேணா.. அவர அப்படியே ஒரு பத்தடி தள்ளி பெரிய மரத்து கீழ விட்டுட்டு நீங்க கிளம்பி வாங்க.. ஒரு நிமிஷம் இருங்க என் பொண்டாட்டி என்கிட்ட என்னமோ சொல்ல வரா..என்னமா என்ன வேணும் என் செல்லதுக்கு"..

மல்லி பதற்றத்தோடு" ப்ளீஸ் இலக்கியன் இப்படி பண்ணாத.. அவருக்கு உன்னோட அப்பா வயசு இருக்கும். அவரால நடக்க கூட முடியாது. அவரக் கொண்டு போய் காட்டுக்குள்ள வச்சிருக்க.. அவருக்கு ஒன்னுனா  நான் டோலிக்கு என்ன பதில் சொல்லுவேன்.. அவர விட சொன்னேன் அவங்க வீட்டில.. இப்படி காட்டுல இல்ல.."

"ஓகே டார்லிங்.. டேய்"

"பாஸ்.."

"பெரியவர அவங்க வீட்டு பரண் மேல தூக்கி போட்டுட்டு அந்த வீட்டு கதவு இருக்குல்ல அத உடைசிட்டு சிமெண்ட் போடுங்கடா. அந்த வீட்டுக்கு வழியே இருக்க கூடாது.. டேய் இருங்கடா திரும்பவும் என் பொண்டாட்டி என்னவோ சொல்ல வரா.. என்ன செல்லம்.. பேசும் போது இப்படி டிஸ்டர்ப் பண்ணலாமா.. மாமா வேலை கெட்டு போதா இல்லயா.."..

மல்லி அவன் முன் பரிதவித்து" அவரு எங்கேயும் போக வேணாம்.. உன் கிட்டயே இருக்கட்டும்.. ப்ளீஸ் அவர  ஒன்னும் பண்ணிடாத.. நேரத்துக்கு மருந்து மட்டும் கொடு.. நீ சொல்ற மாதிரி எல்லாம் நான் செய்றேன்"..

"இது என் முடிவு இல்ல செல்லம்.. நீ எத ஆசைப்பட்டு கேக்குறியா அத நான் கண்டிப்பா செஞ்சு தருவேன்.. இப்ப கூட பாரு அவர ரிலீஸ் பண்ண சொன்ன. அப்புறம் நீயே வேணாம்னு சொல்ற.. ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுற.. நீ நோர்மல் தானே..  எதுக்கும் ஒரு நாளைக்கு ஒரு தடவ நல்ல சைகைட்டரிஸ்டா பாக்கலாம்..டேய் தம்பி பெரியவர் பத்திரம் டா"

"ஓகே பாஸ்" அங்கே அழைப்பு துண்டிக்கப்பட இங்கே மல்லி அதிர்ந்து நின்றாள். அவள் வாயாலேயே தான் நினைத்ததை சொல்ல வைத்து விட்டான்.  மேலும் அவளுக்கே பைத்தியக்காரப் பட்டம் கட்டி விட்டான்.. யார் இவன்.. எதற்கு இதையெல்லாம் செய்கிறான்.. ஒருவேளை அவன் செக்ஸ் அடிமையா?

"இலக்கியன் நீ ஏன் இப்படி பண்ற.. எனக்கு சத்தியமா புரியல. என் வாழ்க்கையில உன்ன இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே கிடையாது.  நீ பழி வாங்குற அளவுக்கு நான் யாருக்கும் எந்த தப்பும் செய்யல.  அப்புறம் எதுக்கு இந்த மாதிரி.. ஒருவேளை நீ செக்ஸ் எடிக்ட்டா.. என்ன மென்டல் டார்ச்சர் பண்ணி  செக்ஸ் பண்ண பாக்கறியா..  என் உடம்பு தான் உனக்கு வேணுமா..  அப்படின்னா இந்த மாதிரி என்னை டார்ச்சர் பண்ணாத.உனக்கு என் உடம்பு தானே வேணும். அத நீ எடுத்துக்கோ..

நிராயுதபாணியான நேரத்துல என் உடம்பே எனக்கு  தப்பிக்க உதவி பண்ணலன்னா வேற எது எனக்கு உதவி பண்ண போது" விரக்தியாக சொன்னவள் அவன் சுதாரிக்கும் முன் தனது மேல் சட்டையை கழட்டி உள்ளாடையோடு அவன் முன் நின்றாள்.

எல்லாமே இழந்தாகி விட்டது. கற்பு மட்டும்தான் பாக்கி இருக்கிறது. இந்தப் பைத்தியக்காரனிடம் இருந்து தப்பிக்க அதை பணயம் வைக்க வேண்டும் என்றால் அதற்கும் அவள் தயார் தான். இலக்கியன் மிகவும் நிதானமாக அவளை நோக்கி தனது அடிகளை எடுத்து வைத்தான். அவனது கண்கள் அவளின் முகத்தில் பதிந்து,  கழுத்தில் இறங்கி, விம்மும் மார்புகளில் படர்ந்து, வயிற்றில் வளைய வந்து, இறுதியில்  பெண்மையின் சங்கமத்தில் நிலைகுத்தி நின்றது.

மேலாடையை மட்டும் தான் நீக்கி இருந்தாள் மல்லி. கீழாடை அப்படியே இருந்தது. ஆடைக்குள் பதுங்கிருக்கும் சொர்க்கத்தையே வெறி கொண்டு பார்த்திருந்தவன் அவளருகே வந்து சட்டென அவளது உள்ளாடையை பிடித்து இழுத்தான். அது கொக்கிகள் அறுபட்டு அவன் கையோடு வந்தது.  மல்லி பதறி தனது கைகளால் மார்புக்கு அணை கட்ட வில்லை. அவள் கண்களில் அப்படி ஒரு வெறி.தெரிந்தே ஒரு கற்பழிப்புக்கு தயாராக நின்றாள்.. இரண்டு கருப்பு பொட்டுகளுடைய  மார்புகளுக்கு மத்தியில் தொங்கிக் கொண்டிருந்தது அவன் கட்டிய தாலி.

தாலியை தனது வலது கையில் தூக்கி பார்த்தவன் மெல்ல தன் முகத்தை மார்புக்கு நடுவே கொண்டு சென்று நச்சன இச் வைத்தான். மல்லியின் உடல் இரும்பென இருந்தது.. ஆனால் அவன் முத்தத்தின் ஈரத்தை அவளால் இதயத்திற்கு மேலும் உள்ளும் உணர முடிந்தது.. சில வினாடிகள் கழித்து தன் உதடை அங்கிருந்து எடுத்தவன்

" எனக்கு தேவை உள்ள துடிச்சுட்டு இருக்கே அந்த இதயம் தான்.. அதுக்குள்ள நான் இருக்கனும். அதோட ஒவ்வொரு துடிப்பும் என்ன காதலிக்கணும். அதுக்காக நீ வேணாம்னு சொல்ல மாட்டேன். அந்த இதய துடிப்போட சத்தம் எப்ப நான் வேணும்னு சொல்லுதோ அப்ப உன்ன எடுத்துப்பேன். நல்லா ஞாபகம் வெச்சிக்கோ.. இப்படி என் முன்னாடி நின்னா நான் பதறி போயி போர்த்தி எல்லாம் விட மாட்டேன். ஏன்னா எல்லாமே என்னோடது. அத ஏன் நான் போர்த்தி மறைக்கணும்..

டைம் ஆகுது போ.. போயி கெளம்பு".. இலக்கியன் திரும்பவும் அலமாரி உள் நுழைந்து தன் அறைக்குச் சென்று விட மல்லி அப்படியே தரையில் அமர்ந்தாள்.  ஐந்து நாளுக்குள் அவள் ஆயுள் அடங்கி விடுமா?என்ன நடந்தது எப்படி என்று அவள் யோசித்துக் யோசித்து இருக்கும் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அவன் கூறிய நேரத்துக்கு கிளம்ப வில்லை என்றால் திரும்பவும் ஏதாவது ஏழரையை கூட்டி விடுவான் என்று பயந்து வேகமாக குளித்து கிளம்பினாள்.

அவன் எடுத்து வந்த உடையை அணிந்து கண்ணாடியில் பார்க்கும் போது உண்மையில் அந்த உடை அவர் தைத்ததை போல அவள் உடலுக்கு கன கச்சிதமாக பொருந்தியது.எப்படி இது சாத்தியம் என்று அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.ஆனால் அவன் தான் இதற்கும் ஒரு மட்டமான பதிலை சொல்லிருந்தானே.. அவன் கூறியதைப் போலவே கிளம்பியவள் கட்டிலில் அமர அடுத்த ஐந்து நிமிடத்தில் அறைக் கதவைத் தட்டினான் இலக்கியன்.

இப்பொழுது முரண்டு பிடிக்காமல் கதவைத் திறந்தாள் மல்லி. அவளை ஒரு முழு நிமிடம் தன் கண்களுக்குள் நிறைந்தவன்"என் ராசாத்தி"என நெட்டி முறித்தான். பின் அவன் கைகளைப் பிடித்து படியிறங்கி கீழே வந்தான்.  அங்கே டோலியும் மணியண்ணாவும் இவர்களுக்காக காத்திருந்தார்கள்.  படியில் இருந்த இறங்கும் இருவரை கண்டதும் அவர்களுக்கு இவர்களைத் தவிர சரியான ஜோடி வேறு யாருமில்லை என்று தோன்றியது.

வெளியே சென்று தோட்டத்தை பார்க்க டெக்கரேசன் பண்ணும் நபர்கள் இலக்கியன் சொன்ன நேரத்துக்குள் அழகாக வண்ண விளக்குகள் போட்டு,இரண்டு மேஜைகள், பூ அலங்காரம் என அமர்க்களப்படுத்தி இருந்தார்கள்.  அந்தப்பக்கம் கேட்டரிங் ஆட்கள் உணவுகளை பஃபே முறையில் அடுக்கி வைத்திருந்தார்கள். டீஜே இல்லாமல் செட் செய்திருந்த படி பாடல்கள் ஒலிக்க தொடங்கியது. எங்கிருந்தோ பப்பல்ஸ் ஆட்டோமேட்டிக் செட் செய்யப்பட்டு ஊதப் பட்டுக் கொண்டிருந்தது.

டோலியும் மணியண்ணாவும் ஆச்சரியப்பட்டு வாய் பிளந்து போதும் மல்லி தன் உணர்வுகள் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தாள். அனைத்தையும் செய்பவனுக்கு இந்த விருந்தை நொடிப்பொழுதில் ஏற்பாடு செய்வதா கம்ப சூத்திரம்?டோலி மணியண்ணா ஒரு மேஜையில் அமர்ந்து விட அதற்கு அருகில் அலங்கரிக்கப்பட்ட மேஜையில் இலக்கியன் மல்லியை அமர வைத்து விட்டு தானும் அருகே அமர்ந்தான்..

"மணியண்ணா அங்க வித விதமா சரக்கு இருக்கும் என்ஜோய் பண்ணுங்க.. டான்ஸ் ஆடுங்க..டோலி நீயும் தான்.. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன கிபிட் என் செல்லத்துக்கு"என்றவன் எழுந்து நின்று மல்லியை பார்த்து கரம் நீட்டினான். மல்லி எழ அவள் விரலில் அழகிய சிவப்பு கள் பதித்த மோதிரத்தை போட்டு விட்டான்.

"செல்லம்.. அந்த கள்ள உள்ள உத்து பாரு..".. என மல்லி உற்று நோக்கினாள். சத்தியமாக தெரியவில்லை. சிரித்து கொண்டே தன் பாக்கெட்டில் கை விட்டு சிறிய வட்ட வடிவ பூதக் கண்ணாடியை எடுத்து அவளிடம் கொடுக்க அதை வாங்கி மோதிரத்தின் மேல் வைத்து பார்த்தவள் சரிதான் என நினைத்தாள்.

கல்லில் இலா❤️மல்லி

என செதுக்கப்படிருந்தது.. பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்தது.  ஆனால் மல்லி மனதிற்குள் எப்படி சிவப்பு கல்லுக்குள்ளே இலா மல்லி எழுத்துக்கள் இருக்கிறதோ அதேபோல் அவர்களைச் சுற்றிலும் ஏதோ ஒரு மர்மம் பின்னிப் பிணைய பட்டிருப்பதை எண்ணினாள்.

இலக்கியன் மல்லியை கைபிடித்து அழைத்து சென்று அலங்காரம் செய்யப்பட்டிருந்த இடத்தில் நிற்க கேமராவோடு ஒருவனும் லைட்டோடு ஒருவரும் வீடியோ கவரேஜ் எடுக்கும் ஒருவனும் வந்து விதவிதமாக அவர்களை படம் எடுத்து தள்ளினர்.

மணியண்ணா டோலி இருவரும் சென்று உணவை தட்டில் போட்டு எடுத்து வர இலா அவனுக்கும் மல்லிக்கும் சேர்த்து உணவு எடுத்து வந்தான். அவன் கொடுத்த உணவை மல்லி உண்டாள். அவன் ஆட அவளை அழைத்தான் அவள் ஆடினாள்..  அவன் சாவி கொடுத்த பொம்மை போல மல்லி நடந்து கொண்டாள். டோலியால் மல்லியிடம் தனித்துப் பேச முடியவில்லை.  அதற்கு இலக்கியன் இடம் கொடுக்கவும் இல்லை.


இரவு பத்து மணியை நெருங்க ஒரு கார் வீட்டின் உள்ளே வந்து நின்றது.  அதுவரை சுற்றிலும் என்ன நடக்கிறது என்று உணராமல் எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்த மல்லியை பார்த்தான் இலக்கியன். டோலியை பார்த்து"டோலி நீ கெளம்பு..நான் பாத்துக்குறேன்.. "

"இல்ல என் அப்பா"

"அப்பாவா.." அவன் ஒரு மாதிரி இழுக்கவும் மல்லி பதறி

"இல்ல நீ கெளம்புடி.. அப்பா பத்திரமா இருப்பாரு.. வந்துருவாரு.. நீ போ.."

தோழி கண்களால் கூற வருவதை படித்து விட்டாள் டோலி.அவளாலும் இவனை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை.  மணியண்ணா ஒரு பக்கம் மட்டையாகி கிடந்தார். டோலி ஒரு தலையசைவோடு வந்த காரில் ஏறிச் சென்று விட


"ஓகே செல்லம் நம்ம ஃப்ரஸ்ட் நைட்.. வா போலாம்"என அவளை தூக்கிக் கொண்டு தன் அறைக்குச் சென்றான் இலக்கியன்.

தொடரும்...

அத்தியாயம் 11❤️

இலக்கியன் வீட்டில் ஊறும் எறும்புகளுக்கு கூட மல்லியை தெரிந்திருந்தது.  பவளமல்லிக்கும் அந்த வீட்டிலிருக்கும் எரும்பு புற்று சிலந்தி வலைகள்.. குளவிக் கூடுகள்.. தோட்டத்தில் இருக்கும் எலி பொந்துகள்.. மின்சார வேலியை தாண்டி தோட்டத்தின் மரங்களில் இளைப்பாற பறந்துவரும்  பறவைகளின் கூடு  இப்படி எல்லாமே தெரிந்திருந்தது இந்த ஒரு வாரத்தில்.

வீட்டின் மூலை முடுக்குகளை கூட விட்டு வைக்காமல்  தேடோ தேடென்று தேடி விட்டாள்.. ஏதாவது ஒன்று சிக்குமா என்று. மல்லியை பொருத்தவரை ஒரு விஷயம் மட்டும் உறுதி. ஏதோ ஒருவிதத்தில் எப்படியோ அவளுக்கும் இலக்கியனுக்கும் தொடர்பு இருக்கிறது. இல்லையென்றால் பாரத்து  ஐந்தே நாட்கள் ஆன நிலையில் ஒரு பெண்ணை அனைத்து பக்கங்களிலும் ஆக்டோபஸ் போல சுற்றி வளைத்து நிர்பந்தத்தில் நிறுத்தி திருமணம் செய்திருக்க மாட்டான்.

இதனை அவனிடம் கேட்டால்"செல்லம் நான் உன்ன போக தான சொன்ன.. உன்ன கல்யாணம் பண்ண சொல்லவே இல்லையே..உன் பேச்சுக்கு நான் எப்பவாவது மறுப்பு சொல்லுவேனா" என்பான்.. அவன் சொல்வது உண்மைதான். ஆனால் அனைத்தையுமே செய்துவிட்டு அதன்பின் நடக்கும் விபரீதங்களை பற்றியும் விவரித்து விட்டு நீ வேண்டுமானால் இங்கிருந்து போய் விடு எனச் சொன்னால் அவள் என்னதான் செய்வாள்?

ஹாலில் டைல்ஸ் தரையில் விட்டத்தை பார்த்தவாறு படுத்து விட்டாள் மல்லி.. மணியண்ணா அவளுக்கு மாதுளை ஜூஸ் கொஞ்சம் குளிர்ச்சியாக எடுத்து வந்து மேஜையில் வைத்து விட்டு தரையில் அமர்ந்தார் காலை நீட்டி..

"பாப்பா இந்தா ஜூஸை குடி.. அப்பாதான் உன்னால தெம்பா தேட முடியும்.. இந்த ஒரு வாரத்துல உன்னால தான் நான் ரொம்ப ரெஸ்ட்ல இருக்கேன்.. யாரு பெத்த புள்ளையோ..  மூலை முடுக்கு எல்லாம் இப்படி பார்த்து பார்த்து சுத்தம் பண்ற" அவரை கடுமையாய் முறைத்த மல்லி

"அண்ணே என் வாயில நல்லா வந்துடும் சொல்லிட்டேன்.. என்ன பாக்க உங்களுக்கு வீட்டு வேலை செய்யற மாதிரி இருக்கா.. நானே ஏதாச்சும்  அவன பத்தன க்ளூ கிடைக்குமான்னு  தேடிகிட்டு இருக்கேன்... உங்களுக்கு என்ன பாக்க கிண்டலா இருக்கு.."

"ம்ம்ம்.. அப்படி இல்ல பாப்பா.. அப்படி நினைச்சிருந்தா உனக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வந்துருப்பேனா.. எனக்கு என்னவோ நீ அனாவசியமா பயப்படுற மாதிரி தோணுது. ஐயாவுக்கு பார்த்தோன உன்ன புடிச்சு போச்சு.. நார்மலா நம்மள மாதிரி இருந்தா பரவால்ல..  ஓவரா படிச்சு படிச்சு அறிவு தழும்பி கீழ ஊத்துது.. அதான் இப்டி போல.. ஐயா எல்லாத்தையும் ஒரு டைப்பா தான் செய்றாரு."

"அண்ணே.. போதும் உங்க ஐயா புராணத்த மூடுங்க..அந்த ஜூஸ் இங்கே எடுத்துக் குடுங்க.."மணியண்ணா ஜூஸ் எடுத்து நீட்ட எழுந்து அமர்ந்தவள் கிளாசை வாங்கி ஒரு மிடறு அருந்த உதட்டருகே எடுத்துச் செல்ல

"பவளப்பையா'

என்று குரல் தேகியது..மணியண்ணாவை சலிப்பாக பார்த்த மல்லி" அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல.. மத்த நேரமெல்லாம் பைத்தியக்காரன் படுத்தி எடுக்கிறான்.. சரி அவன்கிட்ட போராட எதையாச்சும் வயித்துக்குள்ள போடலாம்னு பார்த்தா எப்படிதான் கழுகுக்கு மூக்கு வேர்குற மாதிரி சரியா கூப்பிடுறானோ தெரியல.."

" என்ன அவசரமோ என்னவோ.. நீ போ பாப்பா.. போறதுக்கு முன்னாடி அந்த ஜூஸ இங்கே கொடுத்துட்டு போ"

"ஆஆ த்து".. கிளாஸ் உள்ளே காரித் துப்பியவள்" இத அங்க வச்சிருங்க மணியண்ணா. வந்து குடிக்கிறேன்"

மணி அண்ணா அவளை ஒரு டைப்பாக பார்த்துக்கொண்டே" என்ன இவ்ளோ கேவலப் படுத்தி இருக்க வேணா நீ.."

"என்ன பண்ண உங்கள எல்லாம் நம்ப முடியலையே.. திரும்பி வரும்போது கிளாஸ் மட்டும் தான் இருக்கும்.. அதான் பாதுகாப்பு முக்கியம் அமைச்சரே"

"மன்னா மேல மாமன்னர் தங்களை அழைத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் தங்களின் பாதுகாப்பு உணர்வு என்ன கூறுகிறது என பாக்கலாம்"..

"அவன் மாமன்னன் இல்ல மாங்கா மடையன்"

"பவளப்பையா" மீண்டும் அந்தக் குரல்..

"மாங்கா மடையன் காலிங்.. என்னன்னு கேட்டுட்டு வரேன்.." பவளமல்லி கடுப்போடு மாடிக்கு சென்றாள்.. அங்கே லேப்டாப்பில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தான் இலக்கியன்..

சத்தமில்லாமல் வந்து நின்றவள் அவனை அழைக்க வில்லை. லேப்டாப்பில் முழு கவனத்தையும் வைத்திருந்தவன் அவள் வரவை உணர்ந்து விட்டான்."பவளப்பையா அங்கேயே நிற்கிற.. இங்க வா"

"என்னானு சீக்கிரம் சொல்லுங்க.. எனக்கு வேல இருக்கு.."

" நீ இங்க வந்து நில்லு அப்பதான் சொல்லுவேன்"கடவுளே இம்சைகள் இங்கே விற்பனையென போர்ட் போட்டு விடலாமா இப்படியான யோசனையோடு அவன் சொன்ன இடத்தில் வந்து நின்றாள் மல்லி.

"பவளப்பையா.. கிஸ் மீ"..

"வாட்"

"கம் ஒன்.. கிவ் மீ எ கிஸ்.."

"நோ வே"

"ஏன்"

"முடியாது.."

"அதான் நான் உன் புருஷன் தானே"

"அப்டினு நீயா சொன்னா நான் பதில் பேச முடியாது.."இலா மல்லியின் முகத்தைப் பார்த்தான். ஒரு கைப்பிடி கடுகை எடுத்து அவள் முகத்தில் போட்டால்  வெடித்து சிதறிவிடும். அந்த அளவிற்கு கடுகடுவென இருந்தது  அவளின் முகம்.. அவள் முன்பு எழுந்து நின்று கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டவன்

" பவளப்பையா.." என்றான். அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் மல்லி.எந்த ஒரு சலனமும் இல்லாத முகம். ஆனால் கண்களில் அவள் மேலிருக்கும் அளவு கடந்த காதல். எப்படி இது சாத்தியம்? ஐந்து நாளில் சந்தித்த ஒரு பெண்ணை, நிர்பந்தத்தில் மணந்துகொண்டவளை இந்த அளவிற்கு ஒருவனால் காதலிக்க முடியுமா? அவன் கண்களில் தெரிந்த காதல் பொய்யில்லை. அது முழுக்க முழுக்க அவளுக்கான நேசம். ஆனால் அவளால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பைத்தியம் பிடிப்பது போல இருந்தது. அவனைத் தாண்டி செல்ல முயன்றாள்.

"பவளப்பையா.. எங்க போற இவ்ளோ அவசரமா.."

"நான் எங்க போனா உங்களுக்கு என்ன"

" சரி நான் உனக்கு ஒரு கிப்ட் தரேன்னு நேத்து சொன்னனே ஞாபகம் இருக்கா"..

"எனக்கு ஒன்னும் வேணா.. நீங்க ஏன் இப்படி பண்றிங்கனு ப்ளீஸ் உண்மைய சொல்லுங்க.."

"உன்ன பாத்தேன்.. பாத்துட்டு இருந்தேன். பாத்துட்டே இருந்தேன்..பாக்க பாக்க புடிச்சது.. பாக்க பாக்க புடிக்குது.. பாக்க பாக்க இனி புடிக்கும்.. அதனால தான் கட்டிக்குட்டேன்.."

வாய் வார்த்தையில் அவனை அடித்துக் கொள்ளவே முடியாது. அவன் பைத்தியம் என்று  அவனை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் கூறுகையில்  மல்லிக்கு மட்டும் வந்த நாளே அப்படி தோன்றவில்லை. அவனிடம் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. ஒரு பைத்தியத்தின் கண்களில் இவ்வளவு தீட்சண்யம் தெரியுமா.. அவன் கண்களில் அப்படி ஒரு அறிவுச்சுடர். வந்த அன்று சில கணங்கள் மின்னல்போல் அவன் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அப்பொழுது அதை பெரிதாக மல்லி எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது அந்த மின்னலின் செய்தி அவளுக்கு புரிந்து போனது.

புரிந்த செய்தி அவளுக்கு உவப்பாய் இல்லை. இன்னும் இன்னும் குழப்பம். அளவுக்கு அதிகமான பயம். டோலி பற்றிய வேதனை. டோலி அப்பா பற்றிய பதற்றம்.. தன் வாழ்வை பற்றிய இழி உணர்வு.. இப்படி இந்த ஒரு வாரமாக மல்லி அலைக்களிக்க பட்டாள். அளவுக்கு மீறிய மனப் போராட்டத்தில் இருந்தாள்.

அன்று பார்ட்டி முடிந்து இன்று நமக்கு முதலிரவு என கூறியவன் அவளை தூக்கி கொண்டு தங்களது அறைக்கு வந்தான். இதயம் தடதடத்து ஓடியது அவளுக்கு. திருமணம் வேண்டுமானால்  டோலியின் தந்தையை பனையம் வைத்து நடந்திருக்கலாம்.  ஆனால் முதல் இரவு? ஒருவரை பணையம் வைத்து தன்னுடைய உடலை அவனுக்கு தாரை வார்க்க முடியுமா?

மெத்தையில் அவனை அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்த  மல்லியை" செல்லம் இன்னும் எவ்ளோ நேரம் நீ என்ன இப்படி பார்க்க போற.. போய் பிரஷ் பண்ணிட்டு வேற டிரஸ் போட்டுட்டு வா.. உன்னோட திங்க்ஸ் எல்லாம் பக்கத்துல இருக்கு நாளைக்கு இங்கே ஷிப்ட் பண்ணிக்கலாம்.. இப்போ நீ இந்த அலமாரி குள்ள போ.. சீக்கிரம் குளிச்சிட்டு வா.. உனக்காக நான் வெயிட் பண்ணுவேன்.. "

விட்டால் போதும் என்று அங்கிருந்து தன்னுடைய அறைக்கு வந்தவள் வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளவே அவளுக்கு அதிக நேரம் பிடித்தது. அடுத்து என்ன நடக்கும் என்று புரியாத பயம்? மல்லியின் தைரியம் அவளை விட்டு சென்று பல மணித்துளிகள் கடந்து விட்டது.  பயம் பயம் பயம் இந்த ஒரு வார்த்தையே அவளை முழுதாக ஆக்கிரமித்தது. சீக்கிரமாக வர கூறினானே ஒருவேளை தாமதமானால் இங்கேயே வந்து விடுவானோ..  மீண்டும் டோலியின் தந்தையை பணையம் வைத்து தன்னிடம்  உறவு வைத்துக் கொள்வானோ? இப்படியான பயத்தில் வேக வேகமாக குளித்து உடைமாற்றி தலையைக் கூட துவட்டாமல் அவன் அறைக்குள் வர அவளை அந்தக் கோலத்தில் பார்த்தவன் வேகமாக எழுந்தான்.

" உன்ன சீக்கிரமா வர சொன்னேன்.. ஆனா ஏன் இப்படி.. தலைய கூட துவட்டாம.." அவளருகே வந்து  தன்னுடைய துண்டை எடுத்து அவளின் தலையை மிகவும் மிருதுவாக துவட்டி விட்டான்.. துவட்டும் போது அவனின் கை விரல்கள் அவ்வப்போது அவளது  கழுத்தை தொட்டு சென்றது.குறுகுறுப்பு தோன்ற அவனிடமிருந்து விலக முற்பட்டாள்.

அவளது நோக்கம் புரிந்தவன் வேகமாக அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.." எங்க போற பவளப்பையா? என் கிட்ட இருந்து நீ  எங்கேயும் போக முடியாது.. நீ எங்க போனாலும் உன்ன அப்படியே போனு விட்டுற முடியாது.. உன்ன தேடி வருவேன்.. நீ எனக்கானவ." இத்தனை ஆழமான குரலில் அவனால் பேச முடியுமா.. அந்தக் குரல் அவளை ஏதோ செய்தது..

ஆனாலும் அவனுள் ஒன்றிப்போக முடியவில்லை.அவன் செய்த காரியம் அப்படி.. அவன் மேல் இன்னும் ஆத்திரம் வந்தது

" என்ன விடு இலக்கியன்.. எதுக்கு இப்படி பிடிச்சுட்டு இருக்க.. நான்தான் உன்னை விட்டு எங்கேயும் போக முடியாதபடி செஞ்சிட்ட தானே. அப்புறம் எதுக்கு இந்த வெட்டி சீன்.. நீ ஒரு அக்டோபஸ்..  என்ன சுத்தி இருக்கிற அத்தன கதவையும் அடச்சிட்ட.. இந்த உலகத்துல  நான் நேசிக்கிற,  என்ன நேசிக்கிற ஒரே ஆள் டோலி.. அவளுக்காக தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். மத்தபடி நமக்குள்ள வேற எதுவும் கிடையாது.. "

"ஓ மை காட்.. பவளப்பையா.. உன் இடத்துல வேற ஒரு பொண்ணா இருந்திருந்தா இந்நேரம் ஒன்னு எனக்கு பயந்து  அடிபணிஞ்சு போயிருப்பா.. இல்ல என்ன போட்டு தள்ளிட்டு போயிருப்பா..ஆனா நீ வேற.. உன்னால என்ன விட்டு போக முடியாது.. காரணம் என்னனு சொல்லட்டா.." அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்

" உனக்கு என்ன பத்தின சீக்ரெட் தெரியணும்.. நான் ஏன் இப்படி இருக்கேன்.. எதனால இப்படி செய்யறேன்.. நான் யார்.. இப்படி என்ன பத்தின டீடெயில்ஸ் உனக்கு தெரியணும்.. உனக்கு ஒன்னு தெரியுமா நான் உன்ன பத்தின ஒரு ரகசியத்த கண்டு பிடிச்சிட்டேன்.. என்னால சொல்லவா..  நீ டோலிக்காவ மட்டும் என்ன கல்யாணம் பண்ணிக்கல..எல்லோரும் சொல்ற மாதிரி இவன் பைத்தியம் கிடையாது.. இவன்கிட்ட என்னமோ ஒரு சீக்ரெட் இருக்கு. அந்த சீக்ரெட் இவன் வழியில போனா தான் கண்டுபிடிக்க முடியும்.  அப்படின்னு நீ நெனைக்கிற. அதனாலதான்  என் கூடவே இருந்து என் சீக்ரெட்ட கண்டுபிடிக்க நீ என்ன கல்யாணம் பண்ணிருக்க.. சரிதானே செல்ல குட்டி"

அவன் பேச பேச ஆடி போய் விட்டாள் பவளமல்லி. அவன் சொல்வதை அவளால் அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏற்றுக் கொள்ளாமல் இருக்கவும் முடியவில்லை. காரணம் உண்மை அதுவாக இருப்பின். இருந்தாலும் அவனிடம் தோற்றுப் போவதா? அவன் கைகளை விலக்கிப் பிரித்து விட்டு தள்ளி நின்றாள் மல்லி..

"என்ன விட்டு தள்ளித் தள்ளி போகாத பவளப்பையா" 

"அது என்ன பவளப்பையா.. என் பேரு பவளமல்லி.."

" எனக்கு உன்ன அப்படி தான் கூப்பிட தோணுது..  செல்லம்மா... க்யூட்டா.. ஸ்வீட்டா..  அப்படி கூப்பிடும் போது உனக்கு கடுப்பாகுதுல்ல.. நான் அப்படி உன்னை கூப்பிடும்போது  உனக்கு என்ன தோணுது பவளப்பையா"

" எனக்குத் தலை வலிக்குது..  இலக்கியன் நீ உன்னை பத்தின டீடெயில்ஸ் சொல்ல மாட்ட.. பரவால்ல நான் கண்டுபிடிக்கிறேன்..ஆனா உன்கிட்ட ஒன்னே ஒன்னு கேக்குறேன்.. நான் கேக்குறது குடுப்பியா" அவன் விழிகளை பார்த்து கேட்டாள் மல்லி.

" நான் கொடுக்கணும்னு அவசியம் இல்ல.. நீ என்னோட பொண்டாட்டி. இது போதும் எனக்கு. என் பவளப்பையா என்னோட ரூம்ல, என்னோட பெட்ல, என் பக்கத்துல,
என்னோட நெஞ்சில சாஞ்சு தூங்க போறா.. அவளோட மூச்சு சத்தத்த கேட்க முடியும். அவளோட உதடு ரெண்டு லேசா ஓபன் ஆகி எச்சி உதடு சைட்ல வழிஞ்சு அப்டியே என் நெஞ்சுல படும். அவளோட முடி என் முகத்துல படும்.. அவளோட கை என் வயித்து மேல இருக்கும். அவளோட கால் என் இடுப்புல இருக்கும்.. இந்த சந்தோசம் போதும் பவளப்பையா..நீ தூங்கு.. " என்றவன் அவள் அருகே வந்து அவளை பிடித்து இழுத்து தன் நெஞ்சில் போட்டுக்கொண்டு உறங்கிவிட்டான்.

அவன் பேசிய வார்த்தைகள்  மல்லியின் மனதை லேசாக அசைத்து பார்த்தது.. இருந்தாலும் தூக்கம் கண்களை சொக்க உறங்கிப் போனாள்.  மறுநாள் காலையில் எழுந்ததில் இருந்து இதோ இந்த நொடி வரை அவன் யாரென்று அந்த பின்னணியை அறிய அந்த வீட்டை சல்லடை போட்டு தேடி விட்டாள். டோலி தினமும் அழைத்து மல்லியிடம் பேசினாள்.

தந்தையை நினைத்து வெகுவாக கலங்கினாள். மல்லி இலக்கியனிடம் டோலியின் தந்தையை விட்டு விடுமாறு கேட்டு பார்த்தாள். அவன் பார்த்த பார்வையில் அவளது வாய் தானாக மூடிக் கொண்டது. மீண்டும் ஏதாவது ஒரு வில்லங்கத்தை இழுத்து விடுவானோ என்ற பயம். பகல் முழுவதும் அவளைக் கேள்வி கேட்டு தனக்கு தெரிந்த விஷயங்களை அவள் காதில் ரத்தம் வராத அளவிற்கு பகிர்ந்து, பல நேரம் கட்டிப்பிடித்து சில நேரம் முத்தம் வைத்து, இரவில் அவளை அணைத்துக் கொண்டு தூங்கி போனான் இலக்கியன்.

இந்த ஒரு வாரம் முழுவதும் இது மட்டும் தான் நடந்தது. ஆனால் மல்லி வெளியே சாதாரணமாக இருந்தாலும் அளவுக்கு அதிகமான மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டாள். இலா ஒருவேளை அவனது காதலியை பற்றி கூறாமல் இருந்தால் அவள் சாதாரணமாக இருப்பாளோ என்னவோ? அவன் காதலி பற்றிய பேச்சை எடுத்தாலே அவள் வந்தால் என்ன.. அவள் வரவிற்காக தான் காத்திருக்கிறேன்.. அவள் வந்தால் அவள் இந்தப் பக்கம் படுத்துக் கொள்ளட்டும் நீ அந்தப் பக்கம் படுத்துக்கொள் நடுவில் நான் படுத்துக் கொள்வேன்  என்று சொல்பவனிடம் எதை எதிர்பார்ப்பது.

இதையெல்லாம் நினைத்துக் கொண்டு மல்லி நிற்க அவள் இரு பக்க தோளிலும் கையை போட்டுக் கொண்டு"இன்னிக்கு நாம ரெண்டு பேர் மட்டும் காட்டுக்கு போறோம்"

"ஏன்.. காட்லயே வெச்சு என் கழுத்தருக்கவா"சூடாக கேட்டாள். அவனின் முகம் மாறியது. ஆனால் நொடியில் இயல்பு நிலைக்கு திரும்பியது.

"இல்ல. அங்க போனா தெரியும்... இன்னிக்கு நைட்டு பத்து மணிக்கு கெளம்பிரு.."..

"அன்னிக்கு சுடுகாடு.. இன்னைக்கு காடு.. ஒருநாள் மலை உச்சியில் இருந்து தள்ளி விடப்போற.  அது மட்டும் நிஜம்"மல்லி கடுப்பாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டாள். இலா தோளை குலுக்கியவன் தன் வேலையை தொடர்ந்தான்.

இரவு பத்து மணியை நெருங்கும் முன்பே இலக்கியனோடு தலைவிதியே என உணவருந்தினாள் மல்லி. சரியாகப் பத்து மணியை தொட்டவுடன் மல்லியை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பி விட்டான்.எங்கே போகிறோம் என்று மல்லி கேட்டாள் பதில் இல்லை.

கார் பயணம் அவளை ஆழ்ந்த உறக்கத்துக்குள் தள்ளியது. கண்விழித்து பார்க்கும்போது ஒரே இருட்டாக இருந்தது. கண்களை நன்றாக கசக்கி பார்த்தாள்  மரங்களின் ஊடே  நிலாவின் வெளிச்சம் அவள் மேல் பட்டது. வேகமாக எழுந்து அமர்ந்து சுற்றி பார்த்தாள்.  அவளுக்குப் பின் இலக்கியன் அமர்ந்திருந்தான். தரையில்  துணி விரித்து அவளை அதில் படுக்க வைத்திருந்தான். அத்துவான காட்டுக்குள் ஆளில்லாமல் அவனோடு மாட்டிக்கொண்ட உணர்வு..

என்ன செய்வான் என கணிக்க முடியாமல் எச்சிலைக் கூட்டி விழுங்கினாள் மல்லி. இலக்கியன் அவளை நோக்கி வந்தான். காய்ந்த சருகுகள் அவன் காலடி பட்டு பெரும் சத்தத்தை உண்டாக்கியது அந்த நள்ளிரவில். அவன் தன்னை நெருங்க பயத்தில் எழுந்து நின்று விட்டாள் மல்லி. அவன் ஏதாவது செய்தால் அவனை தாக்க கூரான கற்கள் பெரிய மரக்கட்டை ஏதேனும் கீழே கிடைக்கிறதா என்று அவளது கண்கள் ஆராய்ந்தது.

அதற்குள் அவள் அருகே வந்து விட்ட இலக்கியன்" என்ன அடிக்க ஆயுதம் தேடுறியா பவளப்பையா.. அதுக்கு எதுக்கு கல்லு கட்ட எல்லாம், உன் கண்ணே போதுமே.என்ன கட்டி வெச்சு அடிக்க.. "எந்த படத்துல இருந்து சுட்டானு தெரியலையே எனும் ரீதியில் மல்லி அவனை பார்த்து வைத்தாள்.

" உண்மைதான் நான் சொன்னது..என் மனசுல இருந்து சொன்னேன். பவளப்பையா சுத்தியும் காடு,  அந்தகார இருட்டு, மேல மேகமே இல்லாத தெளிந்த வானம்..அதுல பௌர்ணமி நிலா..மணி நடுராத்திரி மூனு பத்து.." அவளின் நெருக்கத்தில் வந்து மல்லியின் முகத்தை கையில் ஏந்தி அவன் பார்த்த பார்வையில் மல்லி முழுதாக தொலைந்து போனாள்.

அந்தப்பார்வை..தனுஷ் அவளை இம்மாதிரி பார்த்ததே கிடையாது.. உயிரை தொடும் அந்தப்பார்வை. அதைத்தாண்டி அவளால் யோசிக்க முடியவில்லை.  என்ன பார்வை இது? பைத்தியக்காரனுக்கு பதில் சொல்ல முடிந்த அவளால்  இந்தப் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் திக்கி திணறினாள்.

"பவளப்பையா" அவன் பேசினானா.. இல்லை உதடுகள் மட்டும் அசைந்ததா? ஆனால் அவளுக்கு அவன் அழைக்கும் சத்தம் கேட்டது.. இலக்கியன் பார்த்த பார்வையில் மொத்தமாய்  தன்னைத் தொலைத்து அவள் நிற்க அவளது கருவிழிக்குள் தன்னுடைய விழிகளை செலுத்தி, இதயத்துக்குள் அந்த நிமிடம் தன்னை நிரப்பி,  அவள் இதழ்களில் தன் உயிரை தூது அனுப்பினான் இலக்கியன்.

எவ்வளவு நேரமோ தெரியவில்லை அவனாகவே அவளை தன்னிடமிருந்து விலக்கினான். "இந்த க்ளைமேட் நல்லா இருக்கு தானே.. என் காதலிக்கு இந்த மாதிரி நடு காட்டுல பௌர்ணமி அன்னிக்கு  என்ன கிஸ் பண்ணனும்னு ரொம்ப ஆசை.. ஆனா முடியாம போயிருச்சு.. என்ன விட்டு அவ போய்ட்டா.. திரும்பி வந்துடுவானு நம்பிக்கை இப்பவும் என்கிட்ட இருக்கு."

அவன் பேசி முடிக்க கூட இல்லை அதற்குள் கன்னம் பழுக்க ஒரு அறை வாங்கினான்.. மல்லி அவன் முன்பு ஆவேசமாக நின்றிருந்தாள். தன் மீதே அவள் கொண்ட கோபம் அது.அதனை அவன் மீது காட்டினாள்..

"என்னடா நெனச்சிட்டு இருக்க.. அவ தான் வேணும்னா என்ன ஏன் கல்யாணம் பண்ண.. என் வாழ்க்கைய எதுக்கு கெடுத்த.. நான் உன்ன இதுக்கு முன்னாடி பார்த்தது கூட இல்லையே.. ஒருவேளை என்னோட அப்பா அம்மா எனக்கே தெரியாம ஏதாச்சும்  தப்பு செஞ்சதுக்கு என்ன பழி வாங்க பாக்குறியா?  இப்படி சொல்லி சொல்லியே எனக்கு மெண்டல் பிரஷர் கொடுத்துட்டு இருக்க.. என்னால முடியல பைத்தியமே பிடிகுது.. நீ யாரு.. உனக்கு என்னதான் வேணும்.. என்ன விட்று இலக்கியன்..என்னால முடியல.. என்னால முடியல.. " அப்படியே தரையில் மண்டி போட்டு அமர்ந்து முகத்தில் அறைந்து கொண்டு அழுதாள் பவளமல்லி..

அவள் அழுவதைப்  சமாதானம் செய்யாமல் நின்று பார்த்தான்.மல்லியின் அழுகை ஓயவில்லை. சில நிமிடங்களில் அவள் முகத்தில் ஒளிவெள்ளம் பாய்ந்தது. நிமிர்ந்து பார்த்தாள்  இலக்கியன் காரின் இரு விளக்குகளையும் திறந்து விட்டிருந்தான். காரின்  முன்பு ஏறி அமர்ந்தான்.தனது பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தான்.

அவன் செய்வதெல்லாம் பார்க்க உயிர் கூடு காலியானது பவளமல்லிக்கு.. நிதானமாக இழுத்து புகையை வெளியே விட்டவன்

"பவளப்பையா  உனக்கு ஒரு கதை சொல்லவா"இதுவரை அவன் கண்களில் தென்பட்ட காதலை காணவில்லை.. உணர்சி துடைத்த முகம்.. அப்படியென்றால் இதுவரை அவன் பார்த்த பார்வை பொய்யா?மல்லியின் இதயம் எதையோ அவளுக்கு எடுத்துரைத்தது. ஒரு பெரும் இடி அவள் மனதில் விழப் போகிறது..இதயமே துடிப்பதை நிறுத்தி விடாதே.. கடவுளே இந்த அரக்கனிடம் மாட்டிக் கொண்டேன். என்னை காப்பாற்று.

சுற்றிலும் காட்டு மரங்கள். அந்தகார இருட்டு.. வான் மேகம் கூட அவளுக்குத் துணை இல்லை..தனிமை.. பயம்.. மண்டி போட்டு அமர்ந்து இருந்தவள் அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள். அவளை பார்த்துக்கொண்டே நிதானமாகச் சொல்ல தொடங்கினான் இலக்கியன்.

என் காதலி பேரு.. சற்று நிறுத்தி அவள் பேரை தனக்குள் சுவாசித்தவன் போல நிதானித்தான். அவளது பெயரை சொல்வதற்கே அவனது முகத்தில் அப்படி ஒரு வெளிச்சம். புருவ நெரிப்பில் பரவசம். இதழ்களின் ஓரம் மென் சிரிப்பு.. உடலில் லேசான அதிர்வு. வலது கையால் தலை முடியை கோதி விட்டு காற்றுக்கும் வலிக்காத குரலில் கூறினான்.

"கண்ணம்மா"

தொடரும்..




Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்