20 நெருங்கினா(ள்)ல்?



அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கி இந்த "தை" உங்களுக்கு இன்பத்தை வாரி வழங்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்..

பொங்கலோ 
பொங்கல்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

பேய் மழைக்கும் பலத்த காற்றிருக்கும் சவாலாக துடுப்பை போட்டுக் கொண்டிருந்த ஒயிலழகி தனது கரத்தை பற்றியது யாரென்று பார்த்தாள்.. புரட்சியாளனோடு முக்காடிட்டு வந்திருந்தவன் இப்பொழுது முக்காட்டை நீக்க முழு நிலவின் தயவால் அவனின் முழு உருவமும் அவளுக்கு தெரிந்தது. அவனைப் பார்த்த வேகத்தில் மிரண்டு விட்டாள் அழகி.

 அவன் ஒரு வெள்ளையன்.. இருந்தாலும் முகத்தில் மீசையும் தாடியும் வைத்திருந்தான். மற்ற வெள்ளையனை போல சுண்ணாம்பு வண்ணத்தில் இல்லாமல் வெயிலின் தயவால் அடர் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டான்.  புரட்சியாளனை ஏமாற்றி முக்காடு போட்டு வந்திருக்கிறான் வெள்ளைக்காரன் என்று பயந்து போனாள் அழகி.  அவளின் மிரண்ட கண்களை பார்த்தவன் அவளது கையிலிருந்து துடுப்பை தான் வாங்கிக் கொண்டு 

"எந்தா குட்டி அவ்வட நோக்குன்னு"
(என்ன பொண்ணு அப்டி பாக்குற)..  வெள்ளையன் சரளமாக மலையாளம் பேசியதில் மேலும் திகைத்துப் போனாள் அழகி. ஏனெனில் கேரளம் என்று ஒரு ஊர் இருக்கிறது என்று அவளுக்கு தெரியும். ஆனால் அந்த ஊர் மக்கள் என்ன பாஷை பேசுவார்கள் என்பது மட்டும் அவளுக்கு தெரியாது. அவள் கொஞ்சும் தமிழ் பேசுவதால் அனைவரும் அப்படியே பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

 அவ்வப்போது யாராவது ஒரு துரைமார்கள் தெருவில் சென்று கொண்டிருக்கும் அவளை நிறுத்தி விசாரிப்பார்கள். அவர்கள் பேசும் ஆங்கிலம் புரியாமல் ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு கூழைக் கும்பிடு போட்டு விட்டு அங்கிருந்து ஓடி வந்து விடுவாள்.  அப்படி இருக்க இப்போது இவன் மலையாளம் பேசுவதைக் கேட்க அது அவள் செவிகளில் புது வகை ஆங்கிலமாக இருந்தது.அவளருகே அமர்ந்து இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த புரட்சியாளன் அட்டகாசமாக சிரித்தான்... வயிற்றைக் கலக்கி கொண்டிருக்கும் போது அவனின் சிரிப்பு சகிக்கவில்லை அவளுக்கு.  ஆத்திரமாக அவனை நோக்கி

"யோவ் என்னயா இளிப்பு வேண்டி கெடக்கு உமக்கு.. அங்க பாருய்யா எவனோ துறை உன்ன ஏயிச்சுப் போட்டு பரிசல்ல ஏறிருக்கான். நீ கொடுத்த நகைக்கி ஆசை பட்டு உன் கூட நானும் மாட்டிக்கிட்டேன்.அந்த வெள்ளக்கார துறை நம்மள என்ன பண்ண போறானு நானே நடுங்கி போயி நிக்கேன்.. உமக்கு என்னய்யா சிரிப்பு வேண்டி இருக்கு".. படபடவென பொரிந்து கொட்டினாள் அழகி.

"இந்தா புள்ள இப்ப எதுக்கு நீ இப்டி பொரிஞ்சு கொட்ற..அந்த துறை என்ன நம்ம தலைய வாங்கிருவானா"

"அவன் துப்பாக்கி வெச்சிருப்பான்யா.. எடுத்து டொப்புனு சுட்டு ஆத்துல தள்ளி விட்டா நாளைக்கு பொணமா தான் கரை ஒதுங்குவ.. பயமே இல்லாம பேசுற" இவர்களின் உரையாடலை பார்த்துக் கொண்டே துடுப்பு போட்டு கொண்டிருந்தவன்

"ஹேய் குட்டி.."

"ஆங்"

"எந்தா அவன போட்டு இம்சிக்கனு"
(ஏன் அவன இம்ச பண்ற)

"நான் இடிக்கலைங்க துறை..பரிசல்ல அம்புட்டு தான் இடம் இருக்கு.. அதான் இடிச்சாப்புல ஒக்காந்துருக்கோம்"..வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான் அவன்.

"இவட நோக்கு பெண் குட்டி..நீ சட்ட விரோதமா இ ஆளுக்கு சகாயம் செய்ஞ்சி.. இதுக்கு எந்தா தண்டனை அறியோ"..
(இங்க பாரு பொண்ணு.. நீ சட்ட விரோதமா இந்த ஆளுக்கு உதவி பண்ணிருக்க.. இதுக்கு என்ன தண்டன தெரியுமா)

"ஹரியா.. நாங்க சிவன கும்புடுறவங்க துறை.. நிக்க வெச்சு நாமம் போட்ருப்பாங்களே அவங்க தான் ஹரிய கும்புடுவாங்க. நாங்க படுக்க வெச்சு போடுவாங்கள்ள பட்ட அந்த சாமிய கும்புடுரவுங்க." துடுப்பைப் போட்டுக் கொண்டே அவன் புரட்சியாளனை பார்க்க

"தே புள்ள.. அவன் அத கேக்கல.. எனக்கு உதவி பண்றியே இதுக்கு என்ன தண்டனை தெரியுமான்னு கேக்குறான்..எனக்கு உதவி பண்ண வந்து மாட்டிகிட்டியே புள்ள"..

"எதே யோவ்.. உன்ன அண்ணன் மாறி நெனச்சு உதவி செஞ்சா என் கழுத்துக்கு கயிறு சுருக்க பாக்குற.. அடப்பாவி அநியாயமா என்ன காவு கொடுக்க பாக்கறியேய்யா வெளங்குவ நீயு.. இங்க பாருங்க துறை..இந்த ஆளு காசு கொடுத்தான். நான் உதவி செஞ்சேன். மத்தபடி இந்தாளுக்கும் எனக்கும் ஒரு சம்மதமும் கெடையாது.."

"புள்ள நான் உனக்கு அண்ணன் மாறி"

"அடச்சீ வாய மூடுயா.. துறை நான் அப்பாவி.. என்ன தூக்குல போட்றாதீங்க.. அது என்ன என்னவோ ஒரு எடத்துல அடைச்சு வெப்பீங்களே.. என்ன எழவு வாயிலேயே வரல இந்த நேரத்துல, யோவ் அது என்னயா இடம்"

"அதுவா ஜெயிலு"

"ஆங் அதான் செயிலு, செயிலு.. துறை என்ன செயிலுல போட்றாதீங்க.. கையெடுத்து கும்புடுறேன்.. நான் ஏதோ வயித்து பொழப்புக்கு பரிசல் ஓட்டிக்கிட்டு என் ஆச்சியோட கஞ்சி குடிக்குறேன்..மத்தபடி நீங்க நெனைக்குற மாறி சமூகம் பெரிய இடமெல்லாம் கெடையாது"...மழை நீர் வேறு அவளை பேச விடாமல் அடித்து வாங்க  அதையும் மீறி தான் சொல்ல வந்த விஷயத்தை கூறி முடித்தாள் அழகி.

 அவள் வார்த்தைகளை முடித்தவுடன் அங்கே பேய் மழையை கிழித்துக் கொண்டு ஆண்கள் இருவரின் சிரிப்பு சத்தமும் பேரிரைச்சலாக கேட்டது. அழகி திடுக்கிட்டு அவர்களை பார்க்க

"ஹேய் புள்ள நீ அவன யாருனு நெனச்ச பேசிக்கிட்டு இருக்க..துறைன்னா.."

" அப்புறம் மொச புடிக்கிற நாய் மூஞ்ச பாத்தா தெரியாது.. அவன் துறைனு மூஞ்சில எழுதி ஒட்டிருக்கே.."

" அவன் பாதி துறை"

"அப்டினா"

"அவன் அம்மா மலையாளி புள்ள..அப்பன் வெள்ளைக்காரன்.. கேரளா இருக்குல்ல அங்க இருந்த வெள்ளைக்காரன் வீட்டு வேலைக்கு வந்த பொண்ண கெடுத்த புள்ளய கொடுத்துப்புட்டான்.. அவன யாரு எதிர்த்து கேள்வி கேட்க.. அந்த பொண்ணுக்கு பொறந்தவன் தான் இவன்.." புரட்சியாளன் சாதாரணமாக துடுப்பு போடுபவனின் வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்க அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவன் தன் பிறப்பை பற்றிய விவரம் அலசப்படுவதை கண்டு இறுகி போனான்.

 புரட்சியாளன் தன்னோடு வந்தவனை பற்றிய விவரங்களை அழகிக்கு சொல்ல அதனை ஆச்சரியமாக கேட்டுக்கொண்டிருந்தாள் அழகி. பெற்ற தாய் சீரழிக்கப் பட்டு தன்னுடைய பிறப்பு நிகழ்ந்ததை கேட்க அவனின் மனம் என்ன பாடு படும் என அவளுக்கு புரிந்தது.இப்பொழுது அவனை பார்க்க பயமாக இருந்தாலும் கூடவே பரிதாபமும் சேர்ந்து கொண்டது.

"அண்ணே ஆக மொத்தம் இவன் வெள்ளைக்காரன் இல்ல தானே" பேச்சை மாற்றும் பொருட்டு அவ்வாறு கேட்டாள் அழகி.

" வெள்ளைக்காரன் இல்ல.ஆனா வெள்ளைக்காரனுக்கு பொறந்தவன்.. ஒரு வெள்ளைக்காரனால அவனோட அம்மாவுக்கு நடந்த கொடூரம் அவனோட மனச பாதிச்சிருச்சு.. வயித்துல புள்ளையோட ஒரு பொம்பள தனியா இருக்கறது என்ன அவ்ளோ சுலபமா.. தனியாளா இருந்து இவனோட அம்மா இவன பெத்து  வளர்த்து ஆளாக்கி நம்ம தேசத்துக்கு சுதந்திரம் கிடைக்க போராட சொல்லி கொடுத்திருக்கு.

 ஆளு பாக்க வெள்ளைக்காரன் மாதிரி இருந்தாலும் உள்ள ஓடுறது நம்மளோட ரத்தம்.. தேச சுதந்திரத்துக்காக போராடிக்கிட்டு இருக்கான்.. அவன் ஊரு கேரளமா இருந்தாலும் இங்க அடிக்கடி வருவான் செய்தியோட.. நம்மளோட பெரிய ஆயுத கெடங்கு அங்க தான இருக்கு..இவன யாருனு நெனச்ச..புரட்சிப் படையோட தளபதி இவன்.. சும்மா ஒன்ன மிரட்டிப் பாத்தான் புள்ள.. கொஞ்ச நாளைக்கு இங்க தான் இருப்பான்.அவனப் பார்த்து வெள்ளகாரனு நினச்சு உளறிக் கொட்டாத.."

"யோவ் இவ்ளோ வக்கணையா பேசுறியே..இத ஏன் நீ முன்னாடியே என்கிட்ட சொல்லல.. ஆளும் மூஞ்சியும் பாரு.. சிரிக்காதய்யா அப்டியே புடிச்சு ஆத்துல தள்ளிற போறேன்." இவர்கள் சம்பாஷணையை காதில் வாங்காமல் அவன் பாட்டுக்கு துடுப்பு போட்டு அக்கறையை நெருங்க

"யோவ் வெள்ள.." சீறும் பாம்பை போல அவளை திரும்பிப் பார்த்தவன்

"ஹேய் குட்டி என்ன அப்டி விளிகானாம்"

"எங்கயா முழிச்சு பாக்க முடியுது.. மழ தண்ணி வானம் பொத்துகிட்ட மாறில ஊத்துது"

"என்ட குருவாயூரப்பா..என்ன அப்டி கூப்பிடாத..குட்டி"

"ஆங் ஆளு பாக்க வெள்ளக்காரானாட்டம் இருக்க.. வேற எப்டி கூப்டுறதாம்"

"நந்தன் என் நாமம்.. அப்டியே விளிக்காம்.."

"நான் விளிக்கிறது கெடக்கட்டும். அது என்ன குட்டி கிட்டினு..துடுப்பு புடிச்சு காப்பு காய்ச்ச கை இது.. ஒன்னுப் போட்டேன்.. பல்லு மொத்தமும் எகிறிரும்"

"வேற எப்டி உன்ன விளிக்காம்"

"ஒயிலழகி"..

"அழகி உனக்கு ஏத்த நாமம் தான்".. இதை அவன் கூறுவதற்கும் கரை வருவதற்கும் சரியாக இருந்தது. பாதி வழியே ஆற்றில் குதித்தவன்  பரிசலை இழுத்துக் கொண்டு கரை வந்தான். புரட்சியாளன் அழகியிடம் விடைபெற்று முன்னால் நடக்க

"மதுரம் இந்த வெல்லத்துல(தண்ணி)
போயிருவியா"

"இதெல்லாம் ஒரு வெள்ளமா..மழை பெய்ஞ்சி ஆத்துல தண்ணி ஏறிருச்சியா.. இன்னும் வெள்ளம் வரல.. நீ போ.. நான் பொழுத்தோட அக்கறைக்கு போறேன்.. ஆமா அது என்னய்யா மதுரம்.. மதுரைக்கு போணுமா"..

"இல்ல.."

"அப்றம்..."

"நோக்கி போ மதுரம்" என்று அவளைப் பார்த்து கூறியவன் புரட்சியாளன் சென்ற வழியே சென்றான். செல்லும் அவன் முதுகையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அழகி பரிசலை செலுத்திக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்.

தொடரும் 

Comments

  1. Nice going sis.. 😍😍 kutty ah potrukinga paravala next update big ah podungs

    ReplyDelete
  2. Interesting ud sis nice konja nerathula azhagi ah alara vachitinga nandhan ne mattum avala kutty nu kupdalama super ud sis

    ReplyDelete
  3. Semaaaa semaaaa interesting ❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥

    ReplyDelete
  4. 𝚂𝚞𝚙𝚎𝚛 𝚜𝚒𝚜

    ReplyDelete
  5. Waiting for d suspense revealing 🤩🤩

    ReplyDelete
  6. ரொம்பவே சூப்பரா இருந்தது நிலா🤣🤣🤣🤣🤣🤣

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்