21 நெருங்கினா(ள்)ல்?



ஒயிழலகி அந்த புரட்சியாளனை பற்றி மறந்தே போனாள். அவளுக்கு சீக்கிரம் காசு சேர்த்து செட்டியார் வீட்டம்மா அணிந்திருப்பதை போல காசு மாலை செய்ய வேண்டுமென அதிலேயே கண்ணாக இருந்தாள்.. வெள்ளையனுக்கும் இந்தியர்களுக்கும் புரட்சி ஆங்காங்கே பெரிதாக வெடித்துக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் போராட்டம் புரட்சி கூட்டம் கூடுதல் இப்படியாக ஆண்கள் பெண்கள் பாகுபாடின்றி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி கொண்டிருந்தனர்.

அழகிக்கும் ஆசை தான் அந்த மாதிரி புரட்சிப் படையில் சேர வேண்டும் என்று. ஆனால் அவளின் ஆச்சிக்கு அவள் ஒருவள் மட்டுமே இருக்கிறாள். புரட்சி போராட்டம் தேச சுதந்திரம் என்ற  சென்று விட்டால் நாளை வெள்ளையன் வயதான பெண்மணி என்று கூட பார்க்காமல் பாட்டி சுகந்தம்மையை சுருட்டி எடுத்து சென்று விடுவான். இப்போதெல்லாம் அழகிக்கு இன்னொரு கவலையும் சேர்ந்து கொண்டது. பாட்டிக்கு மிகவும் உடல்நிலை தேய்ந்து கொண்டே போவதால் சீக்கிரமாக அழகிக்கு ஒருவனைப் பார்த்து மணமுடிக்க சித்தம் கொண்டார்.

தங்கள் சமூக ஆட்களிடமும் இதைப் பற்றி கூறி அழகிக்கு தகுந்த மணவாளன் யாராவது இருந்தால் கூற சொல்லியிருந்தார். திருமணம் செய்து கொள்வதைப் பற்றி அழகிக்கு ஒன்றும் கிடையாது. ஆனால் அவளது திருமணமே அவள் குருவி சேர்ப்பது போல சேர்த்து வைத்திருந்த காசு மாலை வாங்கும் பணத்தில் தான் என்பதால் திருமணமே வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்தாள் அழகி.

"அடியே என்னடி நானும் பார்த்துட்டே இருக்கேன்..  எவனாச்சும் ஒரு நல்லவன் கையில உன்ன புடிச்சு கொடுத்துட்டு அக்கடான்னு போய் சேரலாம்னு பார்த்தா நீ கேட்கிறவன் எல்லாத்தயும் துரத்தியடிச்சிட்டு இருக்க..  எவனயாச்சும் நினைக்கிறியாடி.. நம்ம ஆளுங்களா இந்த வேத்தாளா.. அப்படி ஏதாச்சும் இருந்தா சொல்லிருடி..உனக்கு பாரம் வைக்காம நானே போய் சேர்ந்திடுவேன்..அப்பன் ஆத்தா இருந்தா அடக்கமா வளர்த்திருப்பாங்க... பாட்டிக்காரி வளர்த்து ஊர் மேய விட்டுட்டானு சாதிச் சனம் என் மூஞ்சிலேயே காரியத் துப்பும்.."

சுகதம்மை பெருங்குரலெடுத்து குடிசை முன்பு அமர்ந்து அழ ஆரம்பித்து விட்டார்.அவர் எப்பொழுதும் இப்படித்தான் தனது காரியம் செல்லுபடியாகவில்லை என்றால் உடனே அவரது ஆயுதத்தை எடுத்து விடுவார். எதையும் தாங்கும் இதயம் கொண்ட  பேத்திக்கு பாட்டியின் கண்ணீர் என்றால் மட்டும் பாகாய் உள்ளம் உருகி விடும்.. எனவே திருமணம் வேண்டாம் என்று கிட்டி முட்டி வரும் வரன்களை எல்லாம் அலற விட்டு துரத்தி விடும் பேத்தியை தனது கண்ணீரைக் காட்டி இன்று சூழ்நிலை கைதியாக நிற்க வைத்தார்..

"இப்ப எதுக்கு ஆச்சி நீ அழுது ஊர கூட்ற.. உன் ஒப்பாரி சத்தம் கேட்டு ஆளுங்க இந்த ஜில்லாவுலேயே அறுத பலசான நீ போய்டியோன்னு வந்துர போறாங்க மாலையோட.."

"அடியே திமிரெடுத்த கழுத.. வாய கொறடி மொத.. புருஷன் கட்டுன வேகத்துல காசிக்கு போய்ற போறான்"..

"அவன் காசிக்கு போனாலும் எனக்கு காசு மாலை வாங்கியாந்தா சரிதான்".

"அடியே காசு மாலை பெருசு இல்லடி,  என்னிக்கு இருந்தாலும் கட்டுனவன் தான் கட்டயில போற வர கூட இருப்பான்.."

"எங்க உன்னிய கட்டுனவர ஆள காணல.. வெரசா அனுப்பி வெச்சிட்ட போல"

"எங்க அந்த துடுப்பு.. மண்டைய பொளந்து புடுவேன்..என் மவராசன பத்தி வாய தொற.. சிண்டு மயிர அறுத்து புடுவேன்.. என்னமோ சொல்ல வந்து என்னதயோ சொல்றேன்.. அடி எழவு.. இந்தா பொண்ணு நான் உனக்கு பையன பாத்து வெச்சிட்டேன்.நோனி நொட்டனு சொல்லாம ஒழுங்காம அவனுக்கு கழுத்த நீட்டு.."

"என்ன கொடுக்குறனு சொல்லிருக்க.."கடுப்பாய் கேட்டாள் அழகி.

"என் பேத்தி இல்லாத அழகு இந்த சாதி சனத்துல யாருக்கு இருக்கு.. வரவன் உன் வனப்ப பாத்து கெரங்கி தான் புள்ள கட்டிக்க வரான்.முடிஞ்சத செய்ங்க.. பொண்ண கண் கலங்காம பாத்துக்குறேனு சொல்லுறான்..மவராசன் நல்லா இருக்கனும்.. இங்க பாருடி நா ஒரமா இருக்க சொல்லப்பவே உன்ன ஒருத்தன் கையில புடிச்சு கொடுத்துருறேன் தாயி.. என் கண்ணால உன் கண்ணாலத்த பாக்கணும் அதான் அந்த ஈஸ்வரன் கிட்ட நெதமும் வேண்டிக்குறேன்.. அப்பாடி ஐயோ"என சொல்ல வேண்டியதை பேத்தியிடம் சொல்லி முடித்தவர் முனங்கிக் கொண்டு எழுந்து குடிசைக்குள் சென்றார்.

 பாட்டி சொல்ல போவதை அப்படியே நம்ப அழகி ஒன்றும் முட்டாள் இல்லை. எப்படி இருந்தாலும் திருமண செலவிற்கு அவள் சேர்த்து வைத்திருக்கும் பணம் பறிப் போக போகிறது. அழகில் மயங்கி கட்டி கொள்வதாக பாட்டி இட்டுக்கட்டி பேசியதை எல்லாம் அழகி எந்த கணக்கிலும் சேர்க்கவில்லை.பெயருக்கு ஏற்றார் போல் அவள் அழகி தான். ஆனால் கொடி அழகி அல்ல.

கொழு கொழு அழகி.  பரிசலில் ஏறும் பலரும்"எம்மா அழகி பரிசல்ல உனக்கே எடம் சரியா இருக்கு.. கொடுக்குற கூலிக்கு நாங்க ஒருத்தன் மேல இன்னொருத்தன் ஏறி ஒக்காந்துட்டு வர்ரதா இருக்கு.. உடம்ப கொற புள்ள"  இலவச ஆலோசனை தருவார்கள் அவளது ரூபத்தை பார்த்து.

 எனவே அழகில் மயங்கி என பாட்டி சொல்லியது இதில் எடுத்துக்கொள்ள முடியாது. தனக்கு கல்யாணம் ஆக வேண்டும் என பாட்டி கதை கட்டுவது அவளுக்கு நன்றாக புரிந்தது. கால் காசு கூட வரதட்சனை வாங்காமல் கட்டிக்கொள்ளும் அற்புதன் இப்புவியில் இருக்கிறானா என்ன? அவள் பார்த்த நபர்களை வைத்து இப்படியாக கணித்தாள் அழகி.

 பாட்டி சொல்லியதை தட்ட முடியாமல் மறுநாள் பெண் பார்க்க வந்தவனை மனமே இல்லாமல் கட்டிக் கொள்ள சம்மதம் கூறினாள். அடுத்த பத்து நாட்களில் வரும் பௌர்ணமியில் அவர்களின் திருமணம் முடிவு செய்யப்பட்டது பெரியவர்களால்.. அழகி ஒரே போடாக போட்டு விட்டால் திருமணம் நடந்தாலும் தன்னுடைய பாட்டி தன்னுடன் இருக்க வேண்டும் என்று. மாப்பிள்ளை தரப்பில் இதற்காக பெரிய தர்க்கம் ஏற்பட்டது.

 பாட்டி சுகந்தம்மை அவர்களை சமாதானப்படுத்த பெரிதும் பாடுபட்டார். உன்னை இங்கே தவிக்க விட்டுவிட்டு நான் மட்டும் புகுந்த வீட்டில் நன்றாக வாழ வேண்டுமா.. அதெல்லாம் முடியாது, நீயும் என்னுடன் அங்கே வந்தால் இந்த திருமணம் நடக்கும். இல்லையென்றால் காலம் முழுவதும் உன் பேத்தியாக இப்படியே இருந்து விடுகிறேன் என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தாள் அழகி. சிறு வயதிலிருந்து சுயமரியாதையோடும் வாழ்ந்து வரும் தன் பேத்திக்கு அடுத்தவர் சொல்வதை கேட்பதில் அவ்வளவு லயிப்பு இருந்ததில்லை. இப்பொழுது மாப்பிள்ளையின் தாயாரை தனியாக கூப்பிட்டு பேத்தி முன்னால் அவள் சொல்லியதற்கு சரி என்று சொல்ல சொல்லியவர் திருமணம் முடிந்ததும் தான் காசிக்கு சென்று விடுவதாக வாக்களித்தார்.

அவருக்கு எப்படியாவது தன்னுடைய பேத்தியின் திருமணம் நன்றாக நடந்தால் போதும் என்று இருந்தது.மாப்பிள்ளையும் பார்க்க கண்ணுக்கு நன்றாக இருந்தான். வரும் ஆண்களில் பாதிப்பேர் உடல் எடையைப் பார்த்து வேண்டாம் என்று மறுத்தார்கள். அற்பமாக வரும் சிலரும் அழகியின் மிரட்டலினால் ஓடிப் போனார்கள். தன் காலத்திற்குப் பிறகு அவள் தனித்து போகக்கூடாது என்று மனதை கல்லாக்கி கொண்டு பாட்டி இந்த முடிவை கூறினார்.பாட்டி கூறியபடியே சபையில் கூறி அந்த நேரம் நிச்சயதார்த்தம் நல்லபடியாக முடிந்தது.

 திருமணம் முடிவானதும் அழகி பரிசல் ஓட்டக்கூடாது என்று மாப்பிள்ளை தரப்பு கூறியது. திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் இருக்கும் வேளையில் தன்னுடைய பரிசலை விட்டால் அக்கரைக்கு செல்ல வேறு மார்க்கமும் இல்லாத போது தான் இதனை செய்தால் என்ன என்று எதிர் கேள்வி கேட்டாள் அழகி. இந்த முறை மாப்பிள்ளை தரப்பு பிடிவாதமாக நிற்க இறுதியில் அழகி சரி என்று ஒத்துக் கொண்டாள் தன்னுடைய பாட்டிக்காக.

திருமண வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய அந்த வீட்டில் ஆண்கள் யார் இருக்கிறார்கள். பாட்டிதான் இந்த தள்ளாத வயதிலும் திருமண வேலைகளை செய்து கொண்டிருந்தார். அழகி சேர்த்து வைத்திருந்த காசு மாலை வாங்க வேண்டிய பணம் கல்யாணத்திற்காக காற்றாய் பறந்தது.

 மூன்று நாட்களாக பரிசல் ஓட்டாமல் அவசரத்திற்கு வந்து அக்கரைக்கு செல்ல வேண்டுமென்று கூறியவர்களிடம் எல்லாம் தனக்கு கல்யாணம் முடிவாகி இருக்கிறது அதனால் வீட்டில் இருக்கிறேன் என்று கூறி அனுப்பினாள் அழகி.. அவர்களும் நிதர்சனத்தை புரிந்து கொண்டு  பேசாமல் சென்றனர்.

 நான்காவது நாள்..

நேரம் நள்ளிரவை தாண்டி இருக்கும்.அழகியின் வீட்டு கதவை யாரோ வேகமாக தட்டினார்கள். என்ன ஏது என்று கதவை திறந்தாள் அழகி. அங்கே நிறைமாத கர்ப்பிணிப் பெண் அழுதுக் கொண்டு நின்றிருந்தாள். அவள் பக்கத்தில் அவளது கணவன் போல.. நிற்க முடியாமல் தரையில் அமர்ந்திருந்தான்..  சிம்னி விளக்கின் மூலம் அவனைக் கூர்ந்து பார்த்தாள் அழகி. ஆணின் உடல் முழுவதும் ஒத்த காயமாக இருந்தது.

கதவைத் தட்டியது சாட்சாத் நமது நந்தன் தான்."யோவ் வெள்ளை நீயாய்யா?"

"ஹேய் குட்டி ஞான் அன்னிக்கே பரஞ்சி இவ்விதம் என்ன விளிக்க வேணான்னு.."

"என்னய்யா சொல்ற.. வாயாலயே பரிசல் ஓட்ற"

"ஞான் அன்னிக்கு சொன்னேன் தான.. என்ன அப்டி விளிக்காதனு"

"அட கெரகமே.. சரிய்யா ஆமா யாருய்யா இவங்க.. இங்க கூடியாந்துருக்க.. அக்கறைக்கு போணுமா.. என்னால முடியாதுய்யா..எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிருச்சு.. நிறைமாசகாரிய இந்நேரத்துல இழுத்துட்டு ஏன்யா வந்திங்க"..

"இந்தா குட்டி.. இப்ப இவங்க அவசரமா அக்கறை போயே ஆகணும். ஆ பெண் குட்டியும் அ செக்கனும்(பையனும்) பிராணன் போற அவசரத்துல உண்டு"

"என்னய்யா சொல்ற.. யோவ் உங்க பிரச்சனையில என்னிய இழுத்து விட்றாதீங்கய்யா.. மொத இடத்த விட்டு போங்க"அவர்கள் அந்த இடத்தைவிட்டு போகிறார்களோ இல்லையோ அவள் குடிசைக்குள் வந்து கதவை அடைக்க பார்த்தாள். அவளோடு நின்றிருந்த அவளின் பாட்டிக்கு அந்த நிறைமாத பெண்ணையும் அங்கே ரத்த காயத்தோடு அமர்ந்திருந்த ஆளையும் பார்க்க பாவமாக இருந்தது. அதனை பேத்தியிடம் எடுத்து சொல்வதற்குள் அவள் பாட்டியையும் உள்ளே இழுத்து போட்டு  கதவை சாத்த முயன்றாள்.

 அந்தக் கதவை ஒரே அடியாக அடித்து தள்ளினான் நந்தன். அழகிக்கு கோபம் வந்துவிட்டது.."தோ பாருய்யா மறுவாதையா ஓடிரு.. சத்தம் போட்டு ஊர கூட்டி புடுவேன் பாத்துக்கோ.."

"நன்னாயிண்டு சத்தம் போடு.. யாரு வேணாம்னு பரஞ்சி.. அதுக்கு முன்ன ஞான் பறையுரத கொறைச்சி கேக்காம்.. அந்த பெண் குட்டிய ஆ நாசமா போற துறை சீரளிச்சிட்டான்.."நந்தன் இவ்வாறு கூறியதும் பாட்டி பேத்தி இருவரும் அதிர்ந்தார்கள்.

"ஆ செக்கன் இந்த பெண்ணோட புருஷன்..அவன்ட சம்சாரத்த காக்க அவன் போராடுனான். அவன செமத்தியா அடிச்சு.. இந்த பெண் குட்டிய நாசமாக்கி அங்கேயே கட்டி வெச்சிருக்கான். எப்டியோ செக்கன் தப்பிச்சு அவன் சம்சாரத்தையும் கூட்டிட்டு ஓடி வன்னு..இவங்க ரெண்டு பேரும் இவட இருந்தா ஆ துறை கொன்னு கழியும்.. நீயானோ இவங்களுக்கு சகாயம் செய்யணும்"

 நிறைமாத கர்ப்பிணியை கூட விட்டு வைக்காமல் மிருகம் போல நடந்து கொண்டவர்களை எண்ணி மனம் கசந்து போனது அழகிக்கு.. பாட்டி ஓடிச் சென்று பச்சிலையை அரைத்து அங்கு ரத்த காயத்தோடு இருந்த ஆடவனுக்கு சிகிச்சை அளித்தார். அந்தப் பெண்ணுக்கும் அவசரமாக கேப்பைக் களி கிண்டி உண்ணக் கொடுத்தார். இரவில் பரிசல் ஓட்ட கூடாது என்று விதிமுறை போடும் பாட்டியே இப்பொழுது அவர்களை அக்கறைக்கு கூட்டிச் செல்லுமாறு பேத்தியிடம் கூறினார்.

 பரிசலில் கணவன் மனைவி இருவரும் அமர நந்தனும் அவர்களுக்கு பாதுகாப்பாக வந்தான். பரிசலில் இடம் போதாமல் அவனுடைய வலது கால் முழுவதும்  அழகியின் கால் மேல் தான் இருந்தது.அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அழகி இல்லை. தன்னால் எவ்வளவு வேகமாக துடுப்புப் போட முடியுமோ அவ்வளவு வேகமாக துடுப்புப் போட்டாள்.நந்தன் தானே துடுப்பு போடுவதாக கேட்டும் அவள் கொடுக்கவில்லை. அந்த இருவரையும் விரைவாகவே அக்கறையில் சேர்த்து விட்டாள்.

 இருவரும் கண்ணீர் மல்க அழகிக்கு நன்றி கூறி விட்டு சென்றனர்.பின் நந்தனும் அழகியும் அக்கரைக்கு வந்து கொண்டிருக்க இருவருமே தனிமையில் பேசவில்லை.நந்தனுக்கு தன் தேச பெண்களுடைய மானம் வரமுறையற்று பறிபோவதில் அவ்வளவு கோபம். வெள்ளைக்காரர்களை அடித்துக் கொல்லவேண்டும் என்று அத்தனை ஆத்திரம். அவனால் சாதாரணமாகப் பேச முடியவில்லை.

 அழகிக்கு கர்ப்பிணி என்றும் பாராமல் இப்படி செய்து விட்டார்களே என்று மனம் வேதனையில் துவண்டது. அந்தப் பெண் கெட்ட கனவாக மறந்து தன் கணவன் குழந்தைகளுடன் நலமாக வாழ வேண்டும் என்று மனம் பிரார்த்தனை செய்தது. பாதி தூரம் வந்திருப்பார்கள். ஆற்றின் நடுவே இருந்து பார்த்தால்  அழகி குடிசையின் முன்பு எரிந்து கொண்டிருக்கும் சிம்னி விளக்கு மின்மினி பூச்சி போல தெரிந்தது.

 ஆனால் சற்று தொலைவில் தீப்பந்தங்கள் வரிசையாக தெரிய நந்தனுக்கு புரிந்து விட்டது. வெள்ளையனின் ஆட்கள் ஓடியவர்களை தேடி வந்து விட்டார்கள் என்று. அழகி கையிலிருந்த துடுப்பை வாங்கி வேக வேகமாக துடுப்பு போட்டான்.அழகி என்னவென்று கேட்க அவளிடம் காரணத்தைக் கூறினான். அவ்வளவுதான் அந்த கர்ப்பிணிப் பெண் பற்றிய கவலை அவளுக்கு அடியோடு மறந்து விட்டது.

 வெள்ளையனிடம் மாட்டினால் தன்னுடைய கதி என்ன ஆகும் என்று பயம் பிடித்துக் கொண்டது. சீக்கிரம் சீக்கிரம் என்று அவனை துரித படுத்தினாள். முடிந்தவரை வேகமாக துடுப்புப் போட்டவன் ஒருகட்டத்தில் துடுப்பை அவளிடம் வீசிவிட்டு ஆற்றில் குதித்தான். அவள் மிரண்டு பார்த்துக் கொண்டிருக்கும்போதே பரிசலை ஒரு கையால் பிடித்தவன் மறுகையால் வேகமாக நீந்தி அக்கரைக்குச் சென்றான்.

 அவர்கள் அக்கறையை நெருங்கும் சமயம் தீபத்தின் ஒளி மிக அருகே வந்து விட்டது. பரிசலை இருந்த இடத்தில் கட்டி விட்டு அழகியை குடிசைக்குள் அனுப்ப நேரமில்லாமல் போனது. தீப்பந்தத்தோடு வரும் ஆட்கள் இந்நேரத்தில் அழகியை பார்த்தால்  அவள்தான் நிச்சயம் அவர்கள் இருவரும் தப்பியோட உதவி செய்திருக்கிறாள் என்று தெரிந்து விடும்.அழகி குடிசைக்குள் நுழைவதற்குள் தீப்பந்தங்கள் மிக மிக அருகே வந்து விட்டது. வேறு வழியில்லாமல் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு குடிசையை சுற்றி பின்னால் ஓடினான் நந்தன்.

 வந்தவர்கள் பரிசல் அங்கே இருப்பதை பார்த்து எதற்கும் விசாரித்து விடலாம் என்று அழகியின் குடிசை கதவைத் தட்டினார்கள். சுகந்தமை பாட்டி அழகி தான் வந்து விட்டாள் என்று கதவை திறந்தார். அங்கே தீப்பந்தங்களோடு நின்று இருந்தவர்களை பார்த்ததும் பாட்டி சுதாகரித்து விட்டார். கண்களை வேகமாக கரைக்கு ஓட விட்டார்.அங்கே பேத்தியின் பரிசல் இருந்தது. ஆனால் பேத்தி இன்னும் வீட்டிற்கு வரவில்லை.

 அவருடைய வயதின் அனுபவம் அவருக்கு நடந்ததைக் கூறியது.. பேத்தி பரிசலை போட்டுவிட்டு வீட்டிற்கு வருவதற்குள் இவர்கள் நெருங்கி இருக்க வேண்டும் அதனால் அவள் ஒளிந்து கொண்டு இருப்பாள் என்று அவரின் அனுபவம் கூறியது. வந்தவர்கள் அழகி எங்கே என்று கேட்க அவள் இரண்டு நாட்கள் முன்னமே அவளுடைய மாமா வீட்டிற்கு காஞ்சிபுரம் சென்று விட்டாள் என்று பொய் சொல்லி மழுப்பினார்.

 ஆனாலும் வெள்ளையர்கள் என்ன முட்டாளா பாட்டியின் கண்களை வைத்தே அவர் பொய் சொல்கிறார் என்பதை புரிந்து கொண்டார்கள்.. பரிசல் இங்கே இருக்கிறது என்றால் இந்நேரம் கண்டிப்பாக அழகி அவர்களை அக்கறை கொண்டு சென்றிருக்க வேண்டும். திரும்பி வந்தவள் இவர்கள் வருவதை கண்டு பரிசலை போட்டு விட்டு தலைமறைவாகி விட்டாள்.

"யூ ப்ளடி ஓல்ட் ஓமன்..ஹொவ் டேர் யூ லை டு ஹெஸ்.. கோ.. சர்ச் ஹேர்".. (You bloody old women.. How dare you lie to us..go..search her..) என்று வெள்ளையன் ஒருவன் தன்னோடு வந்தவர்களை உத்தரவிட்டு அனுப்ப அவர்கள் ஆளுக்கொரு மூலையாக அந்த இடத்தை சுற்றி அழகியை தேடினார்கள். ஆனால் அவர்கள் பேச ஆரம்பித்த போதே நந்தன் அழகியை பிடித்து இழுத்துக் கொண்டு அருகில் இருந்த காட்டில் மாயமாகி விட்டான்..

Comments

  1. Interesting ud sis nice azhagi nandhan epdiyo thapichitanga super andha patti ku onnum aga kudadhu

    ReplyDelete
  2. Very interesting epi akka 👌👌😊🥰

    ReplyDelete
  3. Semmmma sis,,,next enna aghumonnu iruku...

    ReplyDelete
  4. Epdi ellam pannirukan velangathavan 🥺 Es aagiru daww kaipulla 🚶‍♀️

    ReplyDelete
  5. சுதந்திரத்திற்கு முன் பட்ட கஷ்டங்கள் ஒரு பக்கம் எனில் கொடுமைகள் எவ்வளவு,இப்போ மட்டும் என்ன வாழுதாம் முன்ன ஆகிலேயன் இப்போ நம்ம நாட்டு காரனே நம்மை இப்படித்தான் நடத்துறான்🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  6. Super arumai pochu alaghiya kolam porangala

    ReplyDelete
  7. 😭😭👌👌👌👌👌👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்