26 நெருங்கினா(ள்)ல்?



Do Support my channel🙏🏻❤️


தன்னுடைய பேத்தியின் வாழ்வு இனி நல்லபடியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் சுகந்தம்மை பாட்டி இயற்கை எய்தினார்.. ஒயிலழகி எதுவும் பேசாமல் சிறிது நேரம் பாட்டியின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.பின்பு எழுந்து திண்ணையில் சென்று அமர்ந்து விட்டாள். அவளின் இந்த அமைதி நந்தனுக்கு புரிந்தாலும் அதனைப் பற்றி யோசிக்க அவனுக்கு நேரம் இல்லாமல் போனது. யாருமே இல்லாத  அழகிக்கு இனி எல்லாம் அவன் தான். பாட்டிக்கு அவன் கொள்ளி போட  ஏற்பாடு ஆகியது.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அந்த ஊரில் அவர்களுக்கு தெரிந்தவர்கள் என மெல்ல கூட்டம் கூட ஆரம்பித்தது.  வீட்டின் முன்பு பாட்டியின் உடலை கிடத்தி அவரின் தலை மாட்டில் தேங்காய் உடைத்து இரு பக்கமும் வைத்து நடுவே விளக்கை வைக்க அதை அனைத்தையும் திண்ணையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் அழகி.

அவளை யாருமே எதுவும் சொல்லவில்லை.இது அவளுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும் என்பது மட்டும் அங்கிருந்த அனைவருக்கும் நன்றாக புரிந்தது.நந்தன் அனைத்தையும் கவனித்துக் கொண்டான்.பாட்டியின் உடலை எடுக்க நேரம் ஆகியதால் நந்தன் வேறு வழி இல்லாமல் அழகியின் அருகே சென்றான். திண்ணையின் சுவற்றில் சாய்ந்து கொண்டு அங்கே நடப்பதை வெறித்துக் கொண்டிருந்தாள் அழகி.

அவள் அருகே சென்று அவன் ஒரு நிமிடம் அவளை சற்று முன்னால் அவள் கழுத்தில் தான் கட்டிய மஞ்சள் கயிறும் மாறி மாறி பார்த்தான்.ஒரே சமயத்தில் இரண்டு அதிர்ச்சிக்கு ஆளாகி இருப்பது பெரிய கஷ்டம் தான். எச்சிலைக் கூட்டி விழுங்கி"மதுரம்"..

அவள் திரும்பி பார்க்கவில்லை. மீண்டும் ஒரு முறை" மதுரம்"என அழைத்தான். எந்த பிரதிபலிப்பும் அவள் முகத்தில் இல்லை. இந்த முறை அவள் தோளைத் தொட்டு உலுக்கினான். தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல கண் திறந்த நிலையிலேயே திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.. "வரும் குட்டி கடைசியா பாட்டிய நோக்காம்"

இறுதி முறையாக பாட்டியை பார்க்கலாம் என்று அவன் அழைக்க புரியாதவள் போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அழகி. அவன் பேசிய வார்த்தைகள் எதுவுமே அவள் செவியை எட்டவில்லை என்பது மட்டுமே உண்மை. திக் பிரமை பிடித்தவள் போல தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை காணும்போது அவன் இதயம் மௌனமாகக் கண்ணீர் வடித்தது. அவன் ஒரு வார்த்தை கூறினால் அவன் கூறுவது புரியாவிட்டாலும் அதற்கு ஏறுமாறாக எதையாவது கூறி சரிக்குச் சரியாக அவனிடம் வாயடித்த அழகி இப்போது அங்கே இல்லை.

இனி அவளை அழைத்து பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டவன் அவளின் கரம் பற்றி எழுப்பி மெல்ல நடத்தி பாட்டியின் உடலை கிடத்திய இடத்திற்கு வந்தான். இயந்திரப் பதுமை போல அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் சென்றாள் அழகி. பாட்டியின் உடல் அருகில் அமர வைக்கப்பட்டவள் அவரது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுதும் அவள் அழவில்லை. அவளது வெற்றுப் பார்வை மட்டும் பாட்டியின் முகத்தை மொய்த்துக் கொண்டிருந்தது.

நேரம் ஆகியதால் பாட்டியின் உடலை எடுக்க வந்தனர். நந்தன் அவளை எழுப்பி அங்கே இருந்த பெண்களிடம் ஒப்படைத்தான். அதன் பிறகு பாட்டியின் உடல் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு இறுதி சாங்கியம் செய்து கொல்லி வைத்தான் நந்தன்.. மொட்டை அடித்து முகத்தில் இருந்த தாடி மீசை அனைத்தையும் சிரைத்து ஈர வேட்டியோடு வீட்டிற்கு வந்தவன் கண்டது என்னவோ திண்ணையில் வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்த அழகியை தான்.

பக்கத்து வீட்டுப் பெண்" தம்பி உன்ன நாங்க முன்ன பின்ன பார்த்ததே கிடையாது.. நீயா வந்த  என்னமோ சண்ட போட்ட.. கெழவி சாகர குள்ள இந்த புள்ள கழுத்துல ஒரு தாலியக் கட்டிட்ட.என்னமோ போ.. இனிமே அந்த புள்ளக்கு எல்லாமே நீ தான்.. அது சித்தம் கலங்கின மாதிரி ஒக்காந்து கெடக்கு.. அத குளிக்க வெச்சு கஞ்சி கொடு.. ".. அவரின் உத்தரவு இடுவது போலான பேச்சு அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.

அந்தப் பெண் பேசி முடித்ததும் செல்ல திரும்பியவரை சொடுக்கிட்டு அழைத்தவன்"இவட நோக்கு சேச்சி.. நீ எந்தா எனக்கு ஒத்தரவு போடுனு..அவ என்ட பொண்டாட்டி..எனக்கு அறியும் அவள எவட நோக்குன்னு.. நீ உண்ட ஜோலிய பாத்துண்டு போய்க்கோ.." முகத்தை சாதாரணமாக வைத்து அவன் பேசினாலும் நந்தன் பேசிய பாஷை ஓரளவுக்கு அந்தப் பெண்ணுக்கு புரியாமல் போனாலும் அவன் சொல்லிய வார்த்தையின் சாராம்சம் நன்றாக புரிந்தது. அதை விட அவனது குரலில் ஒளிந்திருந்த மிரட்டலும் அவளுக்கு மிக நன்றாக விளங்கியது.

சில நிமிடங்களில் கூட்டம் கலைந்து விட அழகி மட்டும் தன்னுடைய நிலை மாறாமல் இருந்தாள். அவளை எழுப்பி வீட்டின் பின்புறம் கூட்டி வந்தான்.. எப்பொழுதுமே அழகி ஆற்றில்  குளிப்பாள். அவளை இப்பொழுது இருக்கும் நிலைமையில்  அங்கே கூட்டி செல்வது ஆபத்தாகிவிடும்.

முதலில் குடம் எடுத்து சென்று தண்ணீர் எடுத்து வந்தவன் அங்கிருந்த அண்டாவில் தண்ணீர் ஊற்றி நிரப்பினான்.

சுற்றும் முற்றும் பார்த்தான் நந்தன். சற்று தொலைவில் ஆட்கள் நடமாடுவது தெரிந்தது. அவளை அங்கே நிற்க வைத்து கொடியில் காய்ந்து கொண்டிருந்த இரண்டு புடவைகளை எடுத்து விறகுக்காக அழகி எடுத்து வந்து போட்டிருந்த காய்ந்த மரக்கிளைகளில் நீளமாக இருந்ததை எடுத்து நான்கு பக்கமும் மண்ணில் அடித்து அதில் அந்தப் புடவையை நான்கு பக்கமும் சுற்றி அழகியை அந்தப் புடவை தடுப்பின் உள்ளே அழைத்து வந்து  அவனின் முத்தனையில் கை வைத்தான்.

அப்போது கூட அவள் எந்தவித உணர்ச்சியும் வெளிக்காட்டவில்லை.என்ன ஒரு சிலையாகவே அவள் நின்று கொண்டிருந்தாள். பெருமூச்சு விட்ட நந்தன் அவளது முந்தானையை கலைந்து ரவிக்கை பாவாடையை அவிழ்த்து கொடியில் காய்ந்து கொண்டிருந்த அவளின் இன்னொரு புடவையை எடுத்து நெஞ்சோடு முடிந்து அவளை அங்கிருந்த கல்லில் அமரவைத்து அவள் மேல் தண்ணீரை எடுத்து ஊற்ற திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தவள் தன் நிலைமையை பார்த்து அவனைப் பார்த்தாள்.

ஒரு பெரிய வாக்கு வாதத்திற்கு தயாராக்கியவன் போல அவன் நின்று கொண்டிருக்க அவளோ எதுவும் பேசாமல் மீண்டும் பேசாமடந்தை ஆகிவிட்டாள். அதன்பின் அவனை குளிப்பாட்டி அவளுக்கு புடவை மாற்றி அவளுக்கு உணவு ஊட்டி இப்படி அனைத்துமே அவனை செய்தான். பாட்டியின் காரியங்கள் முடியும் வரை அழகி வாயிலிருந்து ஒரு வார்த்தைகூட உதிரவில்லை.

இயற்கை உபாதை வந்தால் மட்டும் அவளாக தன் வேலையை செய்தவள் மற்ற அனைத்து நேரமும் பசி தூக்கம் மறந்து எங்கேயோ வெறித்துக் கொண்டிருந்தாள். அனைத்துக் காரியங்களும் முடிந்த நிலையில் இங்கிருந்தால் அழகி பாட்டி நினைவில் பைத்தியம் ஆகி விடுவாள் என பயந்த நந்தன் அவளை அழைத்துக்கொண்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தான்.

அங்கே அவனுக்கு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். திடீரென்று ஒரு பெண்ணோடு வந்து நின்ற நண்பனைக் கண்டதும் என்ன ஏதென்று விசாரித்தவர்கள் அழகியின் நிலையைக் கண்டு வருந்தி இருவரும் தங்க குடிசை ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள். அந்த நண்பர்களின் வீட்டுப் பெண்களும் அழகியை  இயல்பாக சலசலத்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் பேசுவதை பார்த்தாளே தவிர அழகி ஒன்றும் பேசவில்லை.

அன்று இரவு வழக்கம் போல அவளுக்கு உணவை ஊட்டி விட்டவன் பாய்விரித்து அவளைப் படுக்க வைத்து அவள் பக்கத்தில் அவன் படுத்து கொண்டான். இத்தனை நாள் அவள் வேறு இடத்தில் அவன் வேறு இடத்தில் படுத்து இருந்தார்கள். இன்று முதல் முறையாக அவளின் அருகே படுத்து அவளை இழுத்து தன் நெஞ்சின் மேல் சாய்த்துக் கொண்டான்.

அவளிடம் எந்தவித பிரதிபலிப்பும் இல்லாமல் போய்விட அவளை பாயில் சரித்து முத்தமிட ஆரம்பித்தவன் அவள் முகத்தில் ஏதாவது சினுங்கள் தெரிகிறதா என்று ஆராய்ந்தான்.ஒன்றும் இல்லை..மேலும் தொடர்ந்தான். அவள் புடவையின் மேலே அவளது பெண்மையில் முகம் புதைக்க சட்டென்று அவனை தள்ளி விட்டாள். தாங்கொண்ணாத வெறுப்பில் அவனை பார்த்தாள்.

அவனும் விழுந்த வாக்கில் பார்க்கடலில் பள்ளிக் கொண்ட பெருமாள் போசில் கையை தலைக்கு முட்டுக் கொடுத்து ஒருக்களித்து படுத்து அவளை நோக்க"நீ எவ்ளோ பெரிய கேடுக் கெட்டவனா இருப்பன்னு நெனைச்சு கூட பாக்கல.. என்ன என்னய்யா பண்ண பாத்த?ஆமா எதுக்கு எனக்கு தாலி கட்டுன நீயு"

"குட்டி.. யான் பறையின ஏதும் உனக்கு புரியாது..யான் தமிழ்ல பறைய முயற்சி செய்யும்.. ம்க்கும் இவட நோக்கு.. அன்னிக்கு நின்ட பாட்டி பிராணன் போறதுக்குள்ள உண்ட விவாகத்த நோக்கணும்னு ஆச பட்டு.. அதான் யான் நின்ட பாட்டி ஆசைய நிறைவேத்தி வெச்சு.. இத்தன நாள் நானாக்கும் நின்ட குளிக்க வெச்சு.. சோறு ஊட்டி.. உடுப்பு போட்டு தட்டி உறங்க வெச்சு எல்லாம்.. அது மட்டும் முடியும்..இது முடியாதா எந்தா நியாயம் குட்டி"

"என்ன குட்டி கிட்டின்ன பல்ல ஒடச்சிருவேன்..இந்த தாலி என் கழுத்துல தொங்கரனால தான இவ்ளோ பேசுற.. என்னோட நெலமைக்கு காரணமே நீதான்ய்யா.. நான் அன்னிக்கு வெல்லக்காரன் காலுல விழுந்துருந்தா இந்நேரம் என்ன மன்னிச்சு விட்ருப்பான். என் ஆச்சி உசுரோட இருந்துருக்கும்.. பெரிய மசுராட்டம் என்ன புடிச்சு இழுத்துட்டு போய்ட்ட..

என் ஆச்சி சாவுக்கு நீதான்ய்யா காரணம்.. நீ கட்டுன தாலி என் கழுத்துல இருக்கவே கூடாது"என தாலியை அறுக்கப் போனவளை நொடிப் பொழுதில் எழுந்து வந்து தடுத்து விட்டான் இரண்டு அறை..

"யான் மரிச்சு போன அப்றம் இத அறு"என்றவன் மேலே சொருகி வைத்திருந்த அருவாளை எடுத்து தன் கழுத்தை வெட்டப் போனான். அவன் கையை அழுத்தி பிடித்த அழகி

"உன்ன எனக்கு புடிக்கல. ஆனா நீ என் முன்னாடி சாவுறத பாக்குற சக்தி எனக்கில்லய்யா"என்றபடி மண்டியிட்டு அழுதவளை பார்த்து ஒன்றும் கூறாமல் வெளியே சென்றான்.  அதன்பிறகு வந்த நாட்களில் அந்த ஊரில் கிடைத்த வேலைகளை செய்து கொண்டிருந்தான் நந்தன். உடனே அவளைத் தன்னுடன் கேரளத்திற்கு அனைத்து செல்ல அவன் விரும்பவில்லை. சிறிது நாள்  அவள் சகஜ நிலைமைக்கு வந்த பிறகு அழைத்து செல்லலாம் என்று நினைத்தான்.

 அன்றைய சம்பவத்திற்கு பிறகு இருவரும் பேசிக் கொள்வது இல்லை. அழகியை வேலைக்கு செல்லக்கூடாது வீட்டில் இருந்து ஓய்வு எடு என்று கண்டிப்பாக கூறியிருந்தான் நந்தன்.அந்த வார்த்தையை தவிர அவன் மறுவார்த்தை பேசாமல் இருப்பது அவள் மனதை என்னவோ செய்ய அவளும் வீட்டிலேயே இருந்தாள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் பக்கத்து வீட்டுப் பெண்மணிகள் உடன் சேர்ந்து வீட்டு அருகே சிறிய தோட்டம் ஒன்றை போட்டாள்.

நந்தன் அவ்வப்போது அவளை விட்டு தனியாக கேரளத்திற்கு சென்று வந்தான். அவனின் புரட்சி வேலையும் நடந்து கொண்டிருந்தது. அப்படி ஒரு நாள் தான் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆயுதங்களை எடுத்து வரும்போது நந்தன் வெள்ளைக்காரனிடம் மாட்டிக்கொண்டான். அவன் மட்டுமல்ல அவரது சகாக்கள் சிலரும் மாட்டிக் கொள்ள அவர்களை அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றான் வெள்ளைக்காரன்.  ஏனென்று தெரியவில்லை வெள்ளைக்கார படையை தனியாக இருந்து எதிர்த்து சண்டை போட்டு அவர்களை மண்ணை கவ்வ வைத்த நந்தனை மட்டும் சூழ்ச்சியால் பிடித்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்தார்கள்.

 இதனைக் கேள்விப்பட்ட அழகி துடித்துப் போனாள். அவனை அடித்து வைத்திருந்த சிறைச்சாலையின் முன்பு பிச்சைக்காரி போல போய் நின்றாள். அப்பொழுதும் அங்கிருந்து வெள்ளைக்காரர் கூட்டத்திற்கு அவளைப் பார்த்து மனம் இரங்கவில்லை. மாறாக அவளது மாராப்பு விலகி மார்பை தொட்டு கிள்ள ஆவேசம் கொண்டவள் கருங்கல் எடுத்து காவலாளியின் தலையை உடைத்திருந்தாள்.

Comments

  1. Semaaaa semaaaa interesting 👌👌👌😤😤😤😡😡

    ReplyDelete
  2. Interesting ud sis azhagi ivlo nal unna evlo pasama pathukitan adhukuda unakku purila la enna pechu pesura

    ReplyDelete
  3. பாவம் அழகி, ஆனா அவனோட சூழ்நிலையை சொன்னா கொஞ்சம் கூட புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை இப்போ கதறி என்ன செய்ய முடியும் 😡😡😡😡😡😡👌👌👌👌

    ReplyDelete
  4. ☹️☹️☹️☹️☹️pavam nandhan than

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்