29 நெருங்கினா(ள்)ல்


நந்தன் அழகியின் கவனிப்பால் வேகமாக உடல் நலம் தேறினான்.அவளிடம் சகஜமாக பேச முயன்றான்.சொல்லப்போனால் அவளை சகஜமாகவே அவன் பேசினான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு இறுக்கத்தில் இருந்தாள் அழகி.தான் அடி வாங்கியதை கண்டு தான் அவள் பயந்து விட்டாள் என்று நினைத்தான் நந்தன்.அவனுக்குமே உள்ளூர ஒரு கேள்வி முண்டிக் கொண்டிருந்தது.

அவனின் புரட்சிப் படையில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் வெள்ளைக்காரரின் கையில் அகப்பட்டதுமே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்கள்.அப்படி இருக்க தன்னை மட்டும் எப்படி விடுதலை செய்தார்கள். அதுவும் ஊர் முழுக்க அவனை கழுவில் ஏற்றுவதை பற்றி தண்டோரா போட்டு அறிவித்தும் இந்த விடுதலை எப்படி கிட்டியது?

அவனை பார்க்க வந்த சில நண்பர்களிடம் நந்தன் அழகி  அறியாமல் விசாரித்தான்.அவர்கள் அனைவரும் எப்படி என தங்களுக்கு தெரியாது என்று சொல்லி விட்டனர். பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் விசாரித்தான். உன் மனைவி எந்நேரமும் சிறைச்சாலையே கதியெனக் கிடந்தாள். பின்பு என்ன நினைத்தாளோ அந்த துரை பங்களாவிற்கு தனியாக சென்றாள். அதன் பிறகு தான் உனக்கு விடுதலை கிட்டியது என்று அழகியின் நடத்தையே மறைமுகமாக அங்கே குத்திக் காட்டினார்கள்.

உண்மையை சொல்லப்போனால் தமிழனுக்கு தமிழனே தான் எதிரி. இதுவே நந்தன் இறந்து போயிருந்தால் அழகியின் தாலி பலமில்லாதது என்று சொல்லி இருப்பார்கள். அவள் துரையிடம் தன்னை பணயம் வைத்தே தன்னுடைய கணவனின் உயிரை காப்பாற்றினால் என்பதை அறிந்து கொள்ளாமல் அவள் வெள்ளைக்காரனோடு சோரம் போய் விட்டாள்.. அவளது உடல் சுகத்தை கொண்டு வெள்ளைக்காரனை மயக்கி கணவனை வெளியே கொண்டு வந்து விட்டாள் என நந்தன் காது படவே சிலர் பேசிக் கொண்டு திரிந்தார்கள்.

அதைக் கேட்டு நந்தன் அவர்களை  அடித்து துவம்சம் செய்ய வில்லை. அழகி, துரை வீட்டிற்குச் சென்று அவனிடம் மன்றாடி இருப்பாள். அதை தான் இவர்கள் இட்டுக்கட்டி பேசுகிறார்கள். அவளைப் பற்றி என்னைத் தவிர வேறு யாருக்கு தெரியும்.  தொட்டுத் தாலி கட்டிய கணவனாக இருந்தாலும் கூட அவள் மனதிற்கு நெருக்கமாகாத வரையில் அவனையே தள்ளி வைத்திருந்தவள் ஆயிற்றே.அப்படிப்பட்டவளை நாக்கில் நரம்பில்லாமல் என்ன வார்த்தை பேசுகிறார்கள்.

அழகிக்கும் அவர்கள் பேசும் வார்த்தை புரியாமல் இல்லை. பாதி அவர்கள் பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் யாரிடம் சென்று தனது கற்பை நிரூபிப்பது. வார்த்தை தவறினால் அந்த வெள்ளைக்காரன் ஈவு இரக்கமே இல்லாமல் தன்னுடைய கணவனின் உயிரை காவு வாங்கி விடுவான்.  நந்தனிடம் கூறினால் அந்த வெள்ளைக்காரனின் தலையை தனியாக துண்டித்து எறிந்து விடுவான்.  ஆனால் இதில் பிரச்சனை ஒரே ஒரு வெள்ளைக்காரன் மட்டுமா இருக்கிறான்..

எப்படி இருந்தாலும் அவளுடைய கணவனின் மரணம் உறுதியாகி விடும். அன்று இரவு அவள் வெள்ளைக்காரன் மாளிகைக்குச் செல்ல வேண்டும்.  அவனுடைய ஆட்கள் தண்ணீர் எடுக்கச் சென்ற அழகியிடம் யாரும் அறியா வண்ணம் தகவல் சொல்லி விட்டுச் சென்றனர்.  சுற்றி காட்டுக்கு நடுவே இருந்த ஒரு பெரிய மாளிகையில் அந்த துரை இன்று இரவு அவளுக்காக காத்திருப்பான்.

ஏதாவது ஒன்றை கூறி அழகி நந்தனை அங்கே அழைத்துச் செல்ல வேண்டும். விதியின் விளையாட்டை என்ன சொல்ல.. என்னை ஒருவன் உன் கண்முன்னே கற்பழிக்க போகிறான்.  கையாலாகாத கணவனாக உன் மனைவியை வேறு ஒருவன் பெண்டாள போவதை கண்டு பொறுத்துக் கொள் என்று எப்படி அவள் கூறுவாள்?  எதுவுமே பேசாமல் யோசனையில் சுழன்றாள் அழகி.

நேரம் இரவை தொடும் முன் நந்தனும் அழகியும் சாப்பிட்டு விட"குட்டி நீ உறங்கு.. ஞான் கொறைச்சு வெளிய போயி"

"வேணா. என் கூட இரு"

"எந்தா பறைஞ்சி"அவள் கூறிய வார்த்தை அவனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இத்தனை நாட்களாக அவனுக்கு வேண்டியது அனைத்தையும் பார்த்து பார்த்து செய்த அழகி அப்பொழுதும் தனக்குத் தானே ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதற்குள் உழன்று கொண்டிருந்தாள்.  அவன் பேசும் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு பேசாமல் அமர்ந்திருப்பாள். அல்ல அவள் தேவை எதுவோ அதை மட்டும் அவனிடம் கூறுவாள்.  அப்படியிருக்க இன்று தான் வெளியே செல்வதாகக் கூற எதர்க்கு வேண்டாம் என்று மறுக்கிறாள்.அதைவிட பெரிய ஆச்சரியம் அவள் அருகில் இருக்க சொல்வது.

அவளது முகம் அவனுக்கு எதையோ உணர்த்த கதவைத் தாளிட்டு அவள் அருகே அமர்ந்தான்.அவன் அமர்ந்ததும் அவனது மடியில் தலை சாய்த்து கொண்டாள் அழகி.அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.ஏன் அழுகிறாள் எதற்காக அழுகிறாள் என்றெல்லாம் அவன் கேட்கவில்லை.அவள் ஏதோ ஒரு கலக்கத்தில் இருக்கிறாள். அதைத் தன்னிடம் சொல்ல முடியாமல் துடிக்கிறாள். அவளாக சொல்லும் வரை அதைத் தூண்டித் துருவி கேட்பதில் பயனில்லை.ஏனெனில் அழகி அழுத்தக்காரி.

அவளிடமிருந்து விஷயத்தை வாங்குவதற்கு பதிலாக கல்லிலிருந்து நார் உரித்து விடலாம். இதனை அனுபவ ரீதியாக புரிந்து வைத்திருந்தான் நந்தன். ஒன்றும் பேசாமல் அவளின் தலையை கோதி முதுகை நீவி செய்கையால் நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதை உணர்த்தினான். அவன் மடியில் இருந்து தன் தலையை எடுத்தவள் இப்பொழுது அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள்.

தன்னுடைய இடையே கட்டிக் கொண்டு கண்ணீர் விடும் மனைவியை என்ன சொல்லி சமாதானப் படுத்துவது. இதற்கு மேலும் தான் பேசாமல் இருப்பது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டவன்"இந்தா குட்டி எதுக்கு கரையுனு.. இவட நோக்கு என்ன நடந்தாலும் ஞான் உண்டு உனக்கு. மனசில்ல அறியோ.."அவன் சொல்ல வேண்டியதை சொல்லியாயிற்று.

அழகி இப்பொழுது அழுவதை நிறுத்தி விட்டு அவனுடைய மார்பில் தன்னுடைய இதழ்களைப் பதித்தாள். நந்தன் அதிர்ந்து போனான்.அவளின் முகம் பற்றி நிமிர்த்தி தன் முகத்தை காண செய்தான். அகல் விளக்கின் ஒளியில் அவள் முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது. ஆச்சரியமும் சந்தோஷமும் போட்டிபோட இத்தனை நாள் மனதில் தேக்கி வைத்திருந்த காதலை அவள் உயிர் நீராக செலுத்தினான் நந்தன். இருவரும் தங்களின் தேடல் முடிந்து எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

நேரம் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. அழகி உறங்குவது போல் பாசாங்கு செய்தாள்.  அவள் உறங்கி விட்டாள் என்று நம்பிய நந்தன் அவளை இருக்கமாக கட்டிக் கொண்டான்.நேரம் நள்ளிரவை தொட்டது.அழகி கண்விழித்தாள். மெல்ல தன்னை அணைத்திருந்த கணவனின் கையை விலக்கி உடை அணிந்து பின்னால் மறைப்புக்கு சென்று முகம் கழுவி தன்னுடைய கண்ணீரையும் சேர்த்து கழுவினாள்.  பின் சத்தம் செய்யாமல் சேலையால் முக்காடு போட்டு அந்த துரை கூறியிருந்த காட்டு மாளிகைக்கு சென்றாள்.

அழகி சத்தம் செய்யாமல் எழுந்ததும் நந்தனும் விழித்து விட்டான்.இயற்கை உபாதையை கழித்து விட்டு அவள் வருவாள் என்று இவன் எதிர் பார்க்க அவள் வருவதற்கு தாமதமாக இவன் சென்று என்னவென்று பார்க்கும் நேரம் தான் அழகி முக்காடு போட்டுக் கொண்டு நடந்து செல்வது தெரிந்தது.இந்நேரத்தில் இவள் எங்கே செல்கிறாள் என்று அவனும் பின்னாலேயே சென்றான்.

அவளது கலக்கம் என்று அவள் நடந்து கொண்ட முறை இப்படி எல்லாமே அவனுக்கு விசித்திரமாக இருந்தது.நடந்து கொண்டே இருந்தாள் அழகி. வெள்ளைக்காரனின் காட்டு மாளிகைக்குள் அவள் வந்ததும் அங்கு இருந்த காவலாளிகள் அவளை உள்ளே அனுமதித்தார்கள். அவள் உள்ளே சென்று சிறிது நேரத்தில் பதுங்கிப் பதுங்கி வந்த  நந்தனை கண்டுகொண்ட காவலாளிகள் அவனை அமுக்கி பிடித்து உள்ளே இழுத்துச் சென்றனர். துரை உயர் ரக மது அருந்தி மாமிசம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் உடல் நடுங்கியது அழகிக்கு.

"குட் கேர்ள்.. சொன்ன மாறியே வந்துட்ட.. எங்க உன் ஹஸ்பண்ட்" அவன் கேட்கும்போதே காவலாளிகள்  நந்தனை தரதரவென்று இழுத்துக் கொண்டு உள்ளே வந்தார்கள். எப்படியாவது வெள்ளைக்காரன் காலில் விழுந்தாவது தன்னை அனுபவித்து  யாருக்கும் தெரியாமல் விட்டுவிடும்படி கேட்கத்தான் அழகி வந்தாள். அவளைப் பொறுத்தவரை கற்பு என்பது அவள்  நந்தன் மேல் கொண்ட காதலை விட பெரியது அல்ல.

ஒரு சாமானிய பெண் அவள். இன்னும் எத்தனை காலத்திற்கு கற்பு கற்பு என்று கண்ணுக்குத் தெரியாத ஒழுக்கத்தை பிடித்துக் கொண்டு தொங்குவது. அவள் என்ன தவறு செய்தாள்.  கணவனோடு குழந்தைகளோடு வாழ வேண்டிய வாழ்க்கையை ஒருவன் அவளது கற்பை பணையம் வைத்து விலை பேசினால் கற்பு போய் விட்டதே என்று தற்கொலை செய்து கொள்வாளோ?

கற்புக்கு பதில் உயிர் காக்கும் அமிர்தம் இருந்திருந்தால் கூட கணவன் உயிரை காக்க அதனை தாரை வார்த்திருப்பாள்.ஆனால் கையில இப்பொழுது இருப்பது அவளது கற்பு. அதனை யாருக்கும் தெரியாமல் தானம் செய்து விட்டு தலையோடு குளிர்ந்த தண்ணீரில் குளித்து உடலை சுத்தம் செய்து கணவன் குழந்தைகள் என்று வாழலாம் என முடிவு செய்திருந்தாள்.

தெரியாமல் சகதி பட்டு விட்டால் காலைக் கழுவது இல்லையா..வேறு வழியில்லாமல் சகதியில் இறங்கி நல்ல சாலையில் செல்ல வேண்டி இருக்கிறது.சகதி பட்டு விட்டதே என்று தீக்குளிக்க முடியுமா? இப்படி அழகி நினைத்து தான் இவ்வளவு தூரம் வந்தது.ஆனால் நந்தன் பின்னால் வருவான் என்று அவள் எதிர் பார்க்கவில்லை.நந்தனை கண்ட வெள்ளையன்

"வாவ்.. நீயும் கரெக்ட்டா வந்துட்ட.. உனக்கு தெரியுமா மேன். உன் வைஃப் உன் உயிருக்கா அவள பணயம் வெச்சிருக்கா".  வெள்ளைக்காரன் வாயால் இதனைக் கேட்டதும் நந்தன் அதிர்ந்து அவளை பார்த்தான்.அழகி கலங்கிய விழிகளோடு அவனை நிமிர்ந்து ஏறிட்டாள். அதில் குற்ற உணர்ச்சி கடுகளவும் இல்லை.  நிமிர்ந்த பார்வை மட்டுமே இருந்தது..

"எந்தா இதெல்லாம் அழகி"

"யோவ் நீ என்ன வேசினு கூட நெனச்சிக்கோ. இல்ல இவன் கூட சோரம் போய்ட்டேனு நெனச்சிக்கோ. ஆனா என் மனசுல உன்ன தவிர யாருக்கும் இடமில்ல. உன்ன காப்பாத்த எனக்கு வேற வழி இல்லயா.. என்கிட்ட இருக்குறது இது தான். அத பணயம் வெச்சேன் உன்ன காப்பாத்துனேன். ஒருவேளை என் உசுர கேட்ருந்தா கூட உனக்காக சந்தோசமா கொடுத்துருப்பேன்ய்யா.. ஆனா கேட்டது என் மானத்த..

யாருக்கும் தெரியாம அத கொடுத்துட்டு உன்கூட கடைசி வர வாழணும்னு நெனச்சேன். எல்லாம் போச்சு.. என்னயா அப்டி பாக்குற.. இந்த ஊரு ஒலகம் விஷயம் தெரிஞ்சா என்ன தேவடியானு சொல்லும்னா.. இந்த மசுரு ஊரு ஒலகத்த பத்தி எனக்கு கவல இல்ல.. நான் முண்டச்சியா நின்னுருந்தா வீட்ல பொண்டாட்டி கூட படுத்து எந்திருச்சு நடு சாமத்துல முக்காடு போட்டுட்டு என் கொல்ல கதவ தட்டுற ஒலகம்.எனக்கு நீதான்யா முக்கியம்"அழகி சொல்லி விட்டு அழுந்தாள்..

"தப்பு குட்டி.. கண்ணகி சீவக சிந்தாமணி பொறந்த நாட்டுல பொறந்தவ.. இப்படி செய்யலாமா"ஆதங்கத்துடன் கேட்டான் நந்தன். அவனால் அழகி பேசியதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை.. அதே சமயம் அதை அவள் மனநிலையில் இருந்து பார்க்கவும் அவன் தவரவில்லை.

ஆனால் தன் மனைவியை இன்னொருவன் பெண்டாள விட்டு கொடுத்து தான் உயிருடன் இருக்க வேண்டுமா.. அவன் தலையை வெட்டி வீசி அவனது உதிரத்தை அள்ளி அழகியின் பாதத்தில் பூசினால் தானே அவன் ஆண் பிள்ளை.. இதை எப்படி அழகி இவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொண்டாள்?ஒருவேளை தான் அவளை பின் தொடராமல் இருந்திருந்தால் இந்த விஷயம் தெரியாமல் காலம் முழுக்க அவளோடு வாழ்ந்திருப்பானே..

என்றாவது ஒரு நாள் உண்மை தெரிய வந்திருந்தால்?

அழகி என்னவோ கூற வர அதற்குள் வெள்ளையன் ஆணையிட நந்தன் பின்னிருந்த காவலாளி அவனை துப்பாக்கியால் பின் மண்டையில் தாக்க நந்தன் தடுமாறி விழுந்தான். அவனை சராமாரியாக அடிக்க அழகி அவர்கள் காலில் விழுந்து கதறினாள்.

பின் நந்தனை அவர்கள் அனைவரும் அமுக்கி பிடிக்க அழுது துடித்துக் கொண்டிருந்த அழகியை பிடித்து இழுத்து கட்டிலில் தள்ளி அவள் முந்தானையை உருவி ரவிக்கையை கிழித்து அரை நிர்வாணமாக்கி அன்று நந்தன் முன் அவளை நாசப்படுத்துவேன் என்று கூறியதை நிறைவேற்ற முன்னேறினான்.

தன் கண் முன்னே அழகி கதறி துடிப்பதை காண இயலாமல் அதே சமயம் தடுக்க முடியாமல் போராடினான் நந்தன். யாருக்காக தன் மானத்தை இழக்க துணிந்தாளோ இன்று அவன் கண் முன்னாடியே தன் அவல நிலையை எண்ணி வெடித்தாள் அழகி.

சுயநலம் தான். கணவன் குழந்தை என காலம் முழுக்க உண்மையை மறைத்து வாழ ஆசைப்பட்டாள். எல்லாமே நாசமாய் போய் விட்டது. நந்தன் போராடி கொண்டிருந்தான். அழகி அவனை பார்த்தாள். அவன் வாழ்வே தன்னால் வேதனைக்குள்ளாகியதை கண்டு துடித்தாள்.

தன்னை வெறிப்பிடித்த வேங்கையாக மாறி கற்பழிக்க முயன்றவனை ஆவேசம் கொண்டவளாக பிடித்து இழுத்து அணைத்துக் கொண்டாள். வெள்ளைக்காரனுக்கே அதிர்ச்சி என்றால் நந்தன் நிலை.. வெள்ளைக்காரன் அதிர்ந்து நின்ற சமயம் அவனை ஆண் குறியில் ஓங்கி மிதிக்க அவன் வலியில் தடுமாற அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மேலாடை இன்றி அங்கிருந்து ஓடினாள் அழகி.

"கெட்ச் தே கேர்ள் யூ டம்மிட்"

வெள்ளைக்காரன் ஆண் குறியை பற்றிக் கொண்டு கர்ஜிக்க அதே சமயம் நந்தன் தன் பலத்தை திரட்டி அருகே இருந்த காவலாளி துப்பாக்கியை பிடிங்கி அங்கிருந்தவர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் டப் டப் என்று சுட்டு வீழ்த்தினான். அனைவரையும் சுட்டு தள்ளி துப்பாக்கியை தூர வீசியவன் தன் இடுப்பில் எப்போதும் சொருகி வைத்திருக்கும் குறுவாளை எடுத்து கொண்டு அங்கே எங்கே இருந்து தப்பிக்கலாம் என்று ஓடிக் கொண்டிருந்த வெள்ளையன் பின்னால் ஓடி அவனை அடி பின்னி அவன் ஆண்குறியை அறுத்து எடுத்து அவனது தலையை கோழி தலையை அறுப்பது போல் கரகரவென அறுத்து வீசினான்.

வெறி கொண்ட வேங்கையாக மாறியவன் தன்னுடைய மனைவியைத் தேடி ஓடினான். அழகி அந்த மாளிகையை விட்டு சற்றுத் தள்ளியிருந்த ஒரு குளத்தின் முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவளால் இந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. இனி எப்படி அவன் முகத்தில் முழிப்பது.  அந்த தகுதியை இழந்து விட்டதாக நினைத்தாள் அழகி.

இனி தன் மேல் அவனுக்கு நம்பிக்கை வருமா என அவள் மனமே அவனை கேள்வி கேட்டது.  எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாளோ பின்னால் ஓடி வரும் ஓசை கேட்க உடனே எழுந்தவள் திரும்பி பார்த்தாள். நந்தன் ஓடி வர அருகே கிடந்த கூறிய கல்லை எடுத்து கையில் வைத்தவள்

"வராத.. அங்கயே நில்லு."என கானகம் அதிர கத்தினாள். நந்தன் அப்படியே நின்றான்..

"ஹேய் குட்டி வேணா.. ஞான் பறையுரத கேளு"..

"ஒன்னும் வேணா.. ஒன்னுமே வேணா.. எல்லாமே என் முட்டாள் தனம்.. சுயநலம்.. இனி ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.. உனக்கு விதி மேல நம்பிக்கை இருக்கானு தெரியல. ஆனா எனக்கு இருக்கு..ஒருவேள அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா கூட நான் உன்ன பாக்க கூடாது.. இத தான் நான் வேண்டிக்குறேன்"என்றவள் அந்த கல்லை கொண்டு தன் கழுத்தில் குத்திக் கொள்ள அப்படியே ஆற்றில் விழுந்தாள்..

குட்டி என்ற கதறலோடு நந்தன் ஓடி வர அங்கே தீப்பந்தங்கள் தெரிந்தது.. அதனை பார்த்துக் கொண்டே வேகமாக ஓடிய நந்தன் ஆற்றில் குதித்தான்.  அழகியின் உடல் எங்கே மிதந்து கொண்டிருக்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை கண் பார்வையை கூர்மையாக்கும் அந்த இருட்டில் நிலா வெளிச்சத்தில் பிரதிபலிப்பை உள்வாங்கி அழகியை தேடியவன் அமல் ஆற்றின் உள் ஆழத்தில் விழுந்து கிடப்பதை கண்டு அங்கே நீந்திச் சென்றான்.

 அவளை பிடித்து இழுக்க அவள் விழுந்து கிடந்தது அந்த சுரங்கப் பாதையின் திறவு வழியின் மேல். மேலே சென்றால் எப்படியும் வெள்ளைக்காரர்கள் பிடித்து விடுவார்கள் என்று உணர்ந்த நந்தன் என்ன என்று யோசிக்காமல் அந்த  திருகை பிடித்து இழுத்து அழகியின் உடலை பற்றிய படியே உள்ளே புக அடித்து பிடித்து அவன் வந்து விழுந்தது ரகசியம் கிடங்கின் உள்ளே..

 அந்த காட்டு மாளிகையில் ரகசியம் கிடங்கு வெள்ளைக்காரனின் உத்தரவின்படி கட்டப்பட்டிருந்தது.  அங்கே போய் விழுந்ததும் தான் அவளை கட்டிப் பிடித்து கதறினான் நந்தன்..அவனுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தது. அவளாகவே ஒரு முடிவை எடுத்து அவளாகவே அவளின் முடிவை தேடிக் கொண்டாள்..

 அதிலும் அடுத்த ஜென்மத்தில் கூட அவன் முகத்தில் விழிக்க கூடாது என சுயநலமாக ஒரு முடிவு வேறு.. இது எதையும் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.இப்பொழுது இவர்கள் இருவரை தேடியும் ஆட்கள் அனைத்து திசையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்பதை அவன் அறிவான். அழகி உடலுக்கு ஈமச்சடங்கு செய்தே ஆக வேண்டும் என்று அவன் நினைத்தான். ஆனால் இப்படியே வெளியே செல்ல முடியாது.

 அழகியின் உடலைத் தூக்கிக்கொண்டு  தரையில் கிடத்தியவன் அருகே அமர்ந்து  அந்த வேலையை செய்யத் தொடங்கினான். அது அவனுக்கும் மாந்திரீகம் தெரியும். அவனது நண்பர்கள் சிலர் மாந்திரீகத்தை பணத்திற்காக  கற்றுக்கொள்ள நந்தன் அதனை பொழுதுபோக்காக கற்று வைத்திருந்தான்.

 இன்று அதை வைத்தே இருந்து தப்பிக்க முடிவு செய்தான். இது ரகசிய அறை என்பதால் இங்கிருந்து வெளியேற அவனுக்கு வழி தெரியவில்லை. அதேசமயம்  இங்கே அந்த வெள்ளைக்காரனை தேடிவந்த காவலாளி அனைவரும் இறந்து கிடப்பதை கண்டு மற்றவர்களுக்கும் தகவல் தர மாளிகை முழுவதும் ஆட்கள் வந்து இறங்கினார்கள். குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்த ஒரு காவலாளி அனைத்தையும் சொல்லிவிட்டு தன் உயிரை நிறுத்தினான்.

 அவன் வாய் வார்த்தையின்படி நந்தன் அழகி இருவரையும் வெள்ளைக்காரன் படை தேட ஆரம்பித்தது. அதேசமயம் இங்கே நந்தன் தனது மாந்திரீகத்தை பயன்படுத்தி மாளிகை முழுவதும் காவலுக்கு நின்ற வெள்ளைக்கார கூட்டத்தை பயம் கொள்ள செய்து விரட்டியடித்தது. அதோடு மட்டுமில்லாமல் அந்த ஊர் முழுவதுமே ஒரு விஷ காய்ச்சல் போல வந்து மக்கள் நின்ற இடத்திலேயே விழுந்தார்கள். 


 அமானுஷ்ய பயமும் விஷ காய்ச்சலும் சேர்ந்து அடுத்து வந்த ஏழு நாட்களில் அந்த ஊரே முழு ஊரடங்கில் பதுங்கி விட்டது. வெள்ளைக்கார கூட்டம் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தங்கள் வீடுகளில் தலைமறைவாகி விட்டார்கள்.இந்த ஏழு நாட்களும் நந்தன் அழகியின் அழுகிப்போன உடலோடு சோறு தண்ணீர் இல்லாமல் அந்த மாளிகையை சுற்றி வந்தான்.

 அவனது மாந்திரீக சக்தியின் உதவியோடு ரகசிய அறையில் இருந்து வெளியே வரும் பாதையை தெரிந்து கொண்டான். வெளியே வந்து பார்க்க அவனால் கொல்லப்பட்ட வெள்ளைக்காரர்கள் உடலைக் காணவில்லை. அப்புறப் படுத்தி விட்டார்கள் போல. விக்ரமாதித்தன் வேதாளத்தை கட்டி சுமப்பது போல அழகியை தூக்கி கொண்டே சுற்றினான் நந்தன்.

 அவனுக்கு அழகி மேல் கோபம் கொப்பளித்தது. தான் வணங்கும் காளிதேவியை மனதார நினைத்து தன்னுடைய மாந்திரீக சக்திகள் அனைத்தையும் தாரை வார்த்து அடுத்த ஜென்மத்தில் இதே மாளிகையில்  தன்னை மறு ஜென்மம் எடுத்தாலும் கூட காணக்கூடாது என்று வேண்டிய அழகியை திருமணம் செய்ய வேண்டும் என மனதார வேண்டி தன்னுடைய மாந்திரீக சக்தியை தாரை வார்த்தான்.

 அதற்கு முன்னே அழகி அடுத்த ஜென்மம் என்று ஒன்று எடுத்தால் அவளுக்கு பழையதை அனைத்தும் நினைவுக்கு வர அவன் உருவாக்கியது தான் அந்த பேழை. ஏழு நாட்களில் ஊரே முழு ஊரடங்கில் கிடக்க அழகியை தூக்கி தோள் மேல் போட்டுக்கொண்டு அந்த மாளிகையில் இருந்து வெளியே வந்தான் நந்தன். நீராக அழகி விழுந்து இறந்த ஆற்றின் அருகே வந்தான். அவளுக்கு மிகவும் பிடித்த ரோஜா மலரைத் தூக்கி உள்ளங்கையில் வைத்துக் கசக்கி

"ஒரு நாள் என் குட்டி இங்க வருவா.. அவளுக்கு ஆபத்து வரும்போது  நீ அவளுக்கு உதவி செய்.. உன்னோட பிம்பம் எப்பவுமே அழியக் கூடாது" எனக்கூறி தூக்கி வீசினான் ஆற்றில். பின்  அழகி உடலோடு கானகத்தின் உள்ளே புகுந்து நெடுநேரம் நடந்தான்.  அங்கே தெரிந்த ஒரு உயரமான மலை உச்சியில் ஏறி அழகியின் உடலுக்கு ஈமக் காரியம் செய்து கொள்ளி வைத்து எரியும் நெருப்பில்  அவனே அவனை எரித்துக் கொண்டான்..

தொடரும்.

Comments

  1. Super story ka. Adutha epi kku eagerly waiting

    ReplyDelete
  2. Iyyo sis ninaikkum podhe nenjallam padharudhu,ivanga mudhiva nenachu,,,superrrrrrrrrrrrr

    ReplyDelete
  3. Nandhan u r great semaaaa semaaaa love 😭😭😭😭😭👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

    ReplyDelete
  4. 😭😭😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  5. Sooooo sad azhagi ah nandhan purinjikitan ana azhagi nandhan ah purinjikave ilaye achooooo rendu perume irandhutanga sooo sad ud

    ReplyDelete
  6. Sema..

    Bandhan Love is Great Great...

    ReplyDelete
  7. 😭😭😭😭😭sweet love

    ReplyDelete
  8. True love never dies.....nanthu I lyk u ssssoooooo much......

    ReplyDelete
  9. Sema super arumai pavam kutti nanthan ellathaiyum sollitaan ippo kesari enna seiya poraanu theriyala

    ReplyDelete
  10. Romba different ana dwist than.. Nan expect panala ipdila nadandhirukum nu

    ReplyDelete
  11. அச்சச்சோ அழகி ,அவன் உன்னை நம்பலைன்னு எப்படி நீ முடிவு செய்த,நந்தன் மட்டும் என்ன செய்வான்,😳😳😳😳😳😰😰😰😰😭😭😭😭😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  12. Sister semma rombaa emotional aa iruku nan azhuthuten super sister 💐❤️❤️😍😍😍😍

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்