24 நெருங்கினா(ள்)ல்?


ஒயிலழகியை தூக்கிக் கொண்டு நந்தன் தன்னால் முடிந்தவரை வேகமாக ஓடினான். அவனின் தேக்கு மர தேகம் பூங்கொடியவளின் உடல் எடையை தூசியென தாங்கிக் கொண்டது. பின்னால் அவர்களை துரத்தி வந்த வெள்ளையனின் ஆட்கொள்ளும் சலிக்காமல் ஓடி வர எங்கேயும் நிற்காமல் ஓடிய நந்தன் மலை உச்சியை சென்றடைந்தான்.

அதுவரை வேதாளம் போல் அவன் கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டு பயணம் செய்தவள் என்னவோ அவளே கால் வலிக்க ஓடி வந்த மாதிரி ஐயோ அம்மா என்று அவள் மேலிருந்து இறங்கி மூச்சு வாங்கினாள்..

"ஓய் குட்டி முதுகு நோக நான் நின்ன தூக்கி வன்னு.. என்னமோ நீயே ஏறி வந்த மாறி நன்னாயின்டு நடிக்காம்"

"யாருய்யா நடிக்குறா.. உனக்கென்ன ஒய்யாரமா தூக்கிட்டு வந்து சேத்துட்ட பருத்தி மூட்ட மாறி.. எனக்கு தான்யா தொங்கி கிட்டே வந்தது உடம்பு வலியா இருக்கு.."

"இறங்கி நடக்க வேண்டியதல்லோ"

"எதுக்கு இருட்டுல எங்கயாச்சும் கால வெச்சு பாம்பு போட்டு தள்ளவா.. யோவ் ஆளு ஒரு மார்க்கமா தான்யா திரியுற.. ஆமா இப்ப மல உச்சியில இருக்கோமே எப்பய்யா கீழ போவோம்"

"இவட ஒரு நம்பூதிரி உண்டு குட்டி.. வரும் அவர நோக்கி வராம்.."

"யோவ் பொழுதே விடிய போதுய்யா.. இங்க எங்க நம்பூதிரி இருக்காரு.. கொஞ்சம் நேரத்துல அந்த வெள்ளக்காரனோட ஆளுங்க நம்மள அலேக்கா தூக்க போறானுங்க"..

"இன்னொரு வாட்டி இப்படி பற உன்ன கொன்னு கழியும்..வாய மூடிக்கோ.. மூச்.. என்ட முன்னே நடக்காம் ம்ம்.. ஹேய் என்ன மொறைச்சு மொறைச்சு நோக்குனு பட்டுனு நட குட்டி"அழகி வெள்ளைக்காரனுக்கு பயந்து நடுங்குவது நந்தனுக்கு பெரும் எரிச்சலை கொடுத்தது.இருள்,காட்டு விலங்குகளுக்கும் பயந்தால் கூட அதில் நியாயம் இருப்பதாக நினைத்திருப்பான்.ஆனால் அந்த வெள்ளைக்காரனுக்கு அவள் பயந்து நடுங்குவதை காணும் போது அவனின் பாரத ரத்தம் கொதித்துக் கொண்டிருந்தது.

எங்கே தன்னையும் மீறி அவளை மீண்டும் காயப்படுத்தி விடுவோமோ என்ற பயத்தில் அழகியை மிரட்டி தனக்கு முன்னால் நடக்க பணிந்தான் நந்தன்.இவ்வளவு நேரம் தன்னை பத்திரமாக சுமந்து வந்தவள் திடீரென்று மிரட்டவும் என்ன ஏது என்று பயந்து போனாள் அழகி.அவனைப் பார்த்து அவளுக்கு பயம் இல்லை ஆனால் பின்னால் துரத்தி வருபவர்களை நினைத்தாலே அவளுக்கு ஈரக்குலை நடுங்கியது. எதனால் அவன் திடீரென்று தன்னிடம் முகம் காட்டுகிறேன் என்று புரியாமல் அவனின் கோபம் முகத்தை மட்டுமே கண்டு அவன் சொல்லுக்கு அடிப்பணிந்தாள்.

அவள் முன்னே நடக்க அவள் பின்னே யாராவது வருகிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே நடந்தான் நந்தன்.  மலை உச்சியில் பாறைகளை குடைந்தது போல ஒரு இடம் சென்றது. அதனுள்ளே அழகியை போகச் சொல்லியவன் தானும் அவளுக்குப் பின்னால் சென்றான்.அழகிக்கு ஒரே பயமாக இருந்தது.குகையின் உள்ளே கும்மிருட்டு.அவள் கால் வைத்து மிதிக்கும் போது காய்ந்த சருகுகளின் ஓசை மயான அமைதியை கிழித்துக் கொண்டு கொடூரமாக ஒலித்தது.

அவள் திரும்பி பாவமாக நந்தனை பார்த்தாள்.. "யோவ் என்னய்யா என்னமோ பேய் வீடு மாதிரி இருக்கு.. இதுக்குள்ள போயே ஆகணுமா.. உனக்கு மனசாட்சி இருக்கா..  உள்ள மனுச பைய எவனாச்சும் வாழுவானாய்யா..வெளிய நடு காட்டுல இருந்தப்போ  கூட இவ்ளோ பயமா இல்ல..இப்ப ரொம்ப பயமாயிருக்கு..வாயா வெளிய போயிறலாம்.." அழகி சற்று முன் அவன் தன்னிடம் கடுமையாக பேசியதை கூட மறந்து சென்ற பாதையில் வேகமாக திரும்பி வந்து அவன் கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.

அவளின் கரம் நடுக்கத்திலேயே அவளது பயத்தை அவன் புரிந்து கொண்டான்."பேடிக்கன்டா குட்டி. ஞான் நின்ன கூட இருக்கையில என்ன பயம்.. "அவன் என்னவோ அவனிடம் பணிவாக பேச தான் முயற்சி செய்கிறான்.ஆனால் சிலரது தோற்றத்தைப் போல அவர்களது குரலும் கரடுமுரடாக தான் இருக்கும் போல..  நந்தனின் சிடு முகத்தை போலவே அவனது வார்த்தைகளும் சற்று கடினமாகவே வந்து விழுந்தன. அது அந்த அந்தகார இருட்டில் கர்ண கொடூரமாக அழகியின் செவியில் விழுந்தது..

"யோவ் இதுக்கு மேல நீ அடிச்சு க் கூப்பிடாலும் நா உள்ள வர மாட்டேன்.. வயசு பொண்ண எதுக்குயா தனியா கூட்டிட்டு வந்த.. உன்ன நம்பி இவ்ளோ தூரம் வந்தேன் பாரு என்ன சொல்லணும்..இதுக்கு அந்த வெள்ளைக்காரனே மேல.. நவுருய்யா நான் வெளியே போறேன்" அவள் அவன் கரத்தை விட்டு வெளியே செல்ல முயல அவளைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு அந்த குகையில் தவம் பண்ணிக் கொண்டிருக்கும் சாமியாரை பார்க்க இழுத்து சென்றான்.

சாமியாரின் முன் நின்றவன் அப்போதும் கூட அவளின் கரத்தை விடவில்லை. அவள் இன்னொரு மனுஷன் உள்ளே இருப்பதை கண்டதும் தான் கொஞ்சம் தைரியமானாள்.. உக்கிரமாக நந்தனை முறைத்தாள்..  அவள் முறைப்புக்கெல்லாம் பயப்படுபவனா நந்தன்..

தவம் செய்து கொண்டிருந்தவர் சற்று நேரத்தில் கண் திறந்தார். அவர் கண் திறக்கவும் அழகியின் கரத்தை விடுவித்தான் நந்தன்."வேணா சாமி.. அந்த பொண்ணோட கைய கெட்டியா புடிச்சிக்கோ.. நீ விட்டா பல விபரீதம் நடக்க வாய்ப்பு இருக்கு.. கெட்டியா புடிச்சிக்கோ காலம் பூரா".. உறக்கத்திலிருந்து கண்விழித்தவர் போல தோன்றியவர் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க அழகி அவரின் பேச்சில் இடை வெட்டினாள்.

"சாமி என்ன சொல்லுறீங்க.. இந்தாளு எப்டி என் கைய புடிக்கலாம். எனக்கு கண்ணாலம் முடிவாச்சு.."

"இல்லம்மா பொண்ணு.. அவன மனுசங்க உனக்கு துணையா முடிவு பண்ணாங்க.. இந்த சாமிய அந்த ஆண்டவன் உனக்கு துணையா முடிவு பண்ணிருக்கான்..கொஞ்சம் புத்தியோட நடந்துக்கோ. எது நடந்தாலும் என்ன ஆனாலும் இந்த சாமியோட கைய விட்றாத..விட்டா அதோட தாக்கம் ரொம்ப பெருசா இருக்கும் போய்ட்டு வாங்க.."

"சாமி வெளிய எங்கள தொரத்தின்னு ஒரு கூட்டமே உண்டு.. இப்படி இங்கருந்து வெளிய போனு"

"வடக்கு திசையில போங்க".. என்று கூறியவர் மீண்டும் கண்களை மூடிக் கொண்டார். அவர் பாதத்தை தொட்டு வணங்கிய நந்தன் அழகியை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்..

"யாருய்யா அந்தாளு.. உனக்கு எப்டி பழக்கம்.. அந்தாளு வாயிக்கு வந்த மாறி பேசுது".. படபடவென பொரிந்து கொட்டினாள் அழகி... கேரளாவில் இருந்து அவ்வபோது தமிழ்நாட்டிற்கு வந்து ரகசியமாக புரட்சி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நந்தனுக்கு இம்மாதிரி காட்டில் மலைமேட்டில் உள்ள குகையில் வாழும் சாமியார்கள் பல பேரை தெரியும்.

அவர்களது குகைகளில் தான் இவர்கள் புரட்சி செய்ய ஏதுவான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்படும். வேறு எங்கு ஆயுதங்களை மறைத்து வைத்தாலும் வெள்ளைக்காரன் மோப்பம் பிடித்து வந்து விடுவான். அதற்காகதான் இந்த யோசனையை பின்பற்றுகிறார்கள்.

 ஆயுதங்களை கையாளும் வேலை முழுதும் நந்தனின் பொறுப்பு. அப்படியே அவன் அடர்ந்த காடுகளின் மேலே உள்ள குகைகளை தேடி அலையும் போது தான் இந்த குகையை பற்றி அன்று நந்தனோடு வந்த புரட்சியாளன் கூறியிருந்தான்.. அதோடு நில்லாமல் இந்த குகையில் தவம் பண்ணனும் சாமியார் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று அவரின் ஆசி பெற்றால் அனைத்தும் கூடும் என நந்தனோடு வந்தவன்  அவனை இந்த சாமியாரிடம் அழைத்து வந்தான்.

 அன்றே நந்தனை பார்த்த சாமியார் உன் வாழ்க்கையை மாற்றிப் போடும் பெண்ணை மிக விரைவில் சந்திப்பாய். அவளது வாழ்வு ஓடத்தில் ஆரம்பித்து  ஓடைக் கரையில் முடியும் என்று கூறியிருந்தார் சாமியார். கேரளத்தில் அவன் பார்க்காத நம்பூதிரிகளா.. இதில் எல்லாம் அவனுக்கு துளியும் நம்பிக்கை இல்லை. அவரிடம் சொல்லி ஆயுதங்களை அங்கு பதுக்கி வைத்ததோடு கிளம்பி விட்டான்.  அதன் பிறகு மீண்டும் ஒருமுறை கேரளா சென்று சில நாட்கள் அங்கே வேலையில் ஈடுபட்டு மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்த போது தான் அவன் அழகியை சந்தித்தான்.

 இருந்தும் அவனுக்கு நம்பிக்கை வர மறுத்தது இது அனைத்தும் தற்செயலாக இருக்கும் என அவன் நினைத்தான்.வெள்ளையனின் ஆட்கள் கண்களில் படாமல் மலை உச்சிக்கு வந்தவன் எதற்கும் இருக்கட்டுமென்று சாமியாரிடம் அவளை அழைத்து சென்றான்.அவனது நம்பிக்கை இன்மை அவரின் பேச்சில் அடியோடு அழிந்து போனது.அழகியை கண்டத்தில் இருந்து அவன் மனதில் நெருடி கொண்டிருந்த ஒன்று மறைந்து போனது. ஆம் அவன் கன்னிகையை கண்டதுமே காதலித்து விட்டான். அதை அவனிடமே மறைத்தே இனி என்ன பயன்.. இருந்தும் வேறு ஒருவனின் மனைவியாக போகிறவளை நினைப்பது மாபெரும் தவறு என்று நிதர்சனம் புரிய கண்டவன் தனது மனதை அவளிடம் மறைத்தான்.

அழகி தன் போக்கில் அவனை வாயில் வந்தது போல பேசி அவனிடம் கோபம் முகம் காட்டிக் கொண்டிருந்தாள் நடந்து சென்றாள்.அவரின் சிறுபிள்ளைத்தனமான கோபத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தது.அதனை அவளிடம் காட்டாமல் அடக்கிக் கொண்டான்.பொழுது பளப் பளவென விடிந்தது.மலை உச்சியில் இயற்கையாக ஏற்பட்டிருந்த நீர் ஊற்றுக்கு அவனை அழைத்து வந்தான்.

 முகம் கை கால் கழுவி சற்று தண்ணீர் குடித்ததும் தான் அவளுக்கு தெம்பே வந்தது. சீக்கிரமாக வீட்டிற்க்கு சொல்ல வேண்டும் என்று அவனை பாடாய் படுத்தினாள். வேறு வழியாக அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய நந்தன் அவர்கள் வந்த பாதையை விடுத்து சாமியார் சொன்ன திசையில் அவளை அழைத்துச் செல்ல ஆரம்பித்தான்.

 வழியில் அவள் உண்ண நல்ல பழ மரமாக தேடி பழங்களை பறித்து கொடுத்தான்.. அப்பொழுதும் அவள் பசி என்று அவனை நச்சரிக்க முயலை வேட்டையாடி சுட்டு தருகிறேன் என்று அவன் கூற பசியால் இறந்தாலும் பரவாயில்லை இம்மாதிரி செய்யாது என்று அவனிடம் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தாள். அவர்கள் வந்த வழி வேறு இப்பொழுது இறங்கிக் கொண்டிருக்கும் வழி வேறு. இது சுற்று வழி. இந்த வழியில் சென்றால்  மறுநாள் காலையில்தான் அழகியின் வீட்டிற்கு செல்ல முடியும்.

 நடக்கும் கலைப்பில் அழகியும் நந்தனும் அவ்வப்போது மரங்களின் நிழலில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டு பயணத்தை தொடர்ந்தார்கள். இரவு நெருங்கும் வேளை அவள் இனி பசி தாங்க மாட்டாள் என்று அவனுக்கு புரிந்தது. அவனுக்குமே நல்ல பசி.. காட்டின் மத்தியில் சிறிய ஓடை ஓடிக்கொண்டிருந்தது. அழகியின்  தாவணியை கழற்றச் சொல்லியவன் அவள் முறைக்கவும் அவனேப் பிடித்து இழுத்தான். அவள் அவனை அடிக்க வர அவனது வேஷ்டியை கழட்டி அவளிடம் கொடுத்தான்.

 அவன் கோலத்தை கண்டு தலையில் அடித்துக் கொண்டே வேஷ்டியால் தன்னை மூடிக் கொண்டாள். நந்தன் அவளின் தாவனியை கொண்டு ஓடையில் சில மீன்களை பிடித்தான். காய்ந்த சருகுகள் மரக்கிளைகளை கொண்டு ஓடையில் பிடித்த மீன்களை சுத்தம் செய்து நெருப்பில் வாட்டி அவளுக்கு சாப்பிட கொடுத்தான். இரவானதும் இனி பயணத்தை தொடர வேண்டாம் என்று கூறியவன் அவளை ஒரு பெரிய மரத்தின் வேரில் சாய்ந்து படுத்துக் கொள்ள சொல்லிவிட்டு இரவு முழுவதும் தூங்காமல் அவளுக்கு காவல் காத்துக் கொண்டிருந்தான்.

விடிந்தது மீண்டும் அவர்கள் பயணம் தொடங்கியது.மதியத்திற்குள் வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும். அங்கே அவர்கள் கண்ட காட்சி அழகி வேகமாக ஓடி சென்று மாப்பிள்ளை வீட்டாரின் காலில் விழுந்து மன்றாடி கொண்டிருந்த சுகந்தம்மை பாட்டியை பிடித்து இழுத்தாள்..

Comments

  1. Interesting ud sis nice super

    ReplyDelete
  2. அச்சச்சோ என்ன இருந்தாலும் பாட்டி நீங்க அவங்க காலில் விழுந்து இருக்க கூடாது,😡😡😡😡😡😡👌👌👌👌👌👌நிலா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்