27 நெருங்கினா(ள்)ல்?


ஹாய் டியரிஸ்.. உயிர் அலையுதடி ராவன் பனியை மறந்திருக்க மாட்டிங்க.. அவங்க இப்ப ஆடியோவா வராங்க.. என் youtube channel ல subscribe பண்ணி சப்போர்ட் பண்ணி அப்டியே ராவன் பனியை பாத்துட்டு வாங்க..

Moon's talk 


அப்டியே என் குட்டி குட்டி குக்கிங் சேனலையும் subscribe பண்ணா புண்ணியமா போகும் 🙏🏻❤️🤣



ஒயிலழகி என்ன கனவா கண்டால் அவள் வாழ்வில் இப்படி ஒரு திருப்பம் நிகழும் என்று? பாட்டியின் திடீர் மறைவு..அவளின் திடீர் கல்யாணம்.திருமணம் முடிந்த கையோடு அவளை எட்டியும் பாராத உறவுகள். பிரமை பிடித்தவள் போல சுற்றிக் கொண்டிருந்தவளை காஞ்சிபுரம் அழைத்து வந்து ஒரு பெண்ணாக மாற்றினான் நந்தன்.

என்னதான் அவன் கணவனாக இருந்தாலும் அவளது மனதில் அவனுக்கான இடம் என்னவோ காலியாகத்தான் இருந்தது.அதில் குடி வர அவனும் எந்தவொரு வித்தையையும் செய்யவில்லை. அவளும் அப்படி ஒரு வித்தையை அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. நடப்பது எதுவாக இருந்தாலும் அது தானாக நடக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நந்தன் அவள் இயல்பாக மாறினால் போதும் என்று இருந்து விட்டான்.

கண் முன்னே அவன் இருக்க அவளுக்கு ஏற்படாத ரசாயன மாற்றம் ஒருநாள் வெள்ளைக்காரர்கள் அவனை பிடித்துக் கொண்டு சென்று சிறையில் அடைத்து விட்டார்கள் என்று அவனுடைய கூட்டாளியான போராளி ஒருவன் ஓடி வந்த தகவல் சொல்ல அப்போதுதான் அவளுக்கு மாதவிடாய் வந்த சமயம்.  பழைய வேஷ்டிகளை எடுத்து அதை கோமணம் போல இடைச் சுற்றி கட்டி கொண்டவள் அவள் பெண்மையை அதனால் மறைத்தாள்.

இம்மாதிரி சமயங்களில் பாட்டி அவளை பரிசலை கூட தொட விட மாட்டார்.அந்த அளவிற்கு உடல் உபாதைகளால் சுருண்டு விடுவாள் அழகி. இன்றும் நிற்கவே முடியாமல் ஒருக்களித்து படுத்திருந்தவளை இந்த செய்தி முயலை விட வேகமாக ஓட வைத்தது.

"ஹேய் புள்ள நில்லுடி.. அந்த தொறமாருங்க அம்புட்டு பேரும் பொம்பளய கண்டா பாஞ்சி புடுவானுங்க.. நீ வேற கம்மங்கெழங்கு மாறி இருக்க..செயிலுக்கு ஒத்தையா ஓடுற.. இருடி என் புருஷனயும் இன்னும் ரெண்டு ஊரு பெருசயும் கூட்டிட்டு போ" பக்கத்து வீட்டு பவளம் கத்தியது காற்றாய் கேட்டது ஓடிக் கொண்டிருந்த அவள் செவியில்.

அவள் எப்படி நிதானமாக ஆட்களைத் திரட்டிக் கொண்டு செல்வாள்.. நந்தன் அங்கே என்ன செய்கிறானோ? அவனை அந்த துரைமார்கள் என்ன பாடு படுத்துகிறார்களோ? அவனைப் பார்த்தால் வெள்ளைக்கார சாயல் தெரிகின்றதே ஒருவேளை அவர்களின் ரத்தம் அவன் உடம்பில் பாதி ஓடுகிறது என்று அவனையும் அவர்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று விடுவார்களோ?  அப்படி என்றால் என்னுடைய நிலை? இல்லை போராட்டம் செய்து கலகம் ஏற்படுத்த முயற்சி செய்தான் என்ற காரணத்தினால் அவனுக்கு மரண தண்டனை விதித்து விடுவார்களோ? கடவுளே..  தாலியை ஒரு கையால் இருக்க பற்றிக் கொண்டவள் சிறைச்சாலை இருக்கும் இடத்தை நோக்கி ஓடினாள்..

சிறையினுள்ளே தலைகீழாக தொங்க போட்டு நந்தனை ஒட்டுத்துணி கூட இல்லாமல் பிரம்பால் அடித்து இருந்தார்கள் வெள்ளையர்கள். அவன் உடல் முழுவதும் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.அடையாளமே தெரியாத அளவில் மாறிப் போயிருந்தது தோற்றம். மற்றவர்களாக இருந்திருந்தால் இவ்வளவு அடி வாங்கியதற்கு அந்த கணமே இறந்து போயிருப்பார்கள்.  ஆனால் நந்தன் மன வைராக்கியத்தோடு அவர்கள் அடித்த அடிகளை எல்லாம் திருப்பிக் கொடுப்பதற்காக காத்திருந்தான்.

சிறை வாசலில் நின்றிருந்த வெள்ளையர்களை கண்ட அழகி ஓடிச் சென்று அவர்கள் அருகே மூச்சுவாங்க நின்றாள்

"தொரை..ஐயா சாமி என் புருஷன் உள்ளாரா இருக்காருய்யா. அவரு எந்த குத்தமும் பண்ணிருக்க மாட்டாருங்கய்யா.. உங்க ஆளுங்க அவர தப்பா நெனச்சு புடிச்சிட்டு வந்துட்டாங்கய்யா.. உங்கள கும்பிட்டு கேக்குறேன் சாமி என் புருஷன விட்ருங்கய்யா"..வார்த்தைக்கு வார்த்தை என் புருஷன் என் புருஷன் என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதுதான் அவளுக்கே ஒரு விஷயம் அந்த நேரத்தில் உரைத்தது.

அவளின் மனம் நந்தனை அவளின் கணவனாக ஏற்றுக் கொண்டது.பாவி மகள் அதனை இந்த இடத்தில் வைத்தா அறிந்து கொள்ள வேண்டும்.அந்த வெள்ளையர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"ஹேய் கேர்ள்.. யாரு உன் ஹஸ்பண்ட்.. அவன் பேரு என்ன"

"அவரு பேரு நந்தனுங்க ஐயா"

"ஹூஸ் நந்தன்.." பக்கத்தில் நின்றிருந்த இன்னொரு வெள்ளையனை பார்த்து கேள்வி எழுப்ப சற்று நேரத்திற்கு முன் புரட்சியாளன் ஒருவனை கூட்டி வந்து கட்டி வைத்து அடிப்பதை அவன் எடுத்துக் கூறினான்..

"ஓ யா ஐ காட் இட்.. தட் ப்ளடி மதர் ஃகர்..".. அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது அங்கே கண்ணீரோடு நின்று கொண்டிருந்த அழகிக்கு புரியவில்லை.புரிந்திருந்தால் அவள் கணவனை நாராசமான வார்த்தையில் கூறியதற்கு அவனின் கடவாய்ப் பல்லை உடைத்து இருப்பாள்.

"ஹேய் யூ கம் வித் மீ"என்றவன் அவளை பார்த்து கையை காட்டி தன் பின்னால் வர சொல்லிவிட்டு சிறைச்சாலைக்குள் சென்றான்.அவன் பேசியது புரியாவிட்டாலும் அவனின் சைகையை புரிந்து கொண்டு அவள் மனம் திக் திக் என்று அடித்து கொள்ள சிறைக்குள் காலடி எடுத்து வைத்தாள்.நரகமே நன்றாக இருக்கும் போல அந்த அளவிற்கு சிறைச்சாலை உள்ளே காலடி எடுத்து வைத்த மறுகணமே ஐயோ அம்மா என்று அலறும் ஓசைதான் கேட்டது.

கும்மிருட்டாக இருந்த சிறைக்குள் மஞ்சள் விளக்குகள் தான் ஆங்காங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன. புரட்சி செய்கிறார்கள் கலகம் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை உயிரை மட்டும் விட்டு வைத்து விட்டு வேதனைத் தீயில் போட்டு வேகவைத்து  கொண்டிருந்தார்கள் வெள்ளைக்காரர்கள்.

 ஒவ்வொரு ஆட்களின் அலறல்களையும் கதறல்களையும் கேட்கும்போது அழகியின் உடல் சிலிர்த்து அடங்கியது. இப்படி பாலாய் போன தேசப்பற்றை வைத்துக்கொண்டு அடிவாங்கி சாவதற்கு பதில் வெள்ளையனிடம் அடங்கி விடலாம் என்று அவளின் மனம்  வாதாடியது.  இதனை மட்டும் நந்தன் கேட்டிருந்தால் அவளது கன்னம் பழுத்திருக்கும்.  இம்மாதிரி தானே அவளது கணவனையும் அடைத்து சித்திரவதை செய்வார்கள் என்று பயத்தோடு அந்த வெள்ளையனை பின்தொடர அவன் நந்தனை அடைத்திருந்த அறையின் முன் வந்து நின்றான்.

 அவனைக் கண்டதும் அங்கே பணிபுரியும் காவலாளிகள் ஓடிவர வெள்ளையனின் கண் அசைவை கொண்டு சிறை அறையின் கதவை திறந்தார்கள். உள்ளே மங்கலான மஞ்சள் ஒளி. ஒருவன் தலைகீழாக தொங்கிக் கொண்டிருப்பது மட்டும் வடிவத்தை வைத்து தெரிந்தது. அழகி வாயில் முந்தானையை அடைத்துக்கொண்டு வெள்ளையனை பார்க்க அவன் தலையை அசைத்து அவளை உள்ளே செல்ல சொன்னான்.

 பயத்தோடு உள்ளே சென்ற அவளுக்கு அது அவளது கணவன் தான் என்று சத்தியமாக நம்ப முடியவில்லை. அவனது வெள்ளை தேகம் பயங்கர அடியின் காரணமாக ஆங்காங்கே சதை பிளந்து உடல் கன்றி உதிரத்தின் துளிகளால் நிறைந்து  கர்ண கொடூரமாக காணப்பட்டது. பார்வையை கூர்மையாக்கிய அழகி கீழே குனிந்து அவன் முகத்தைப் பிடித்து தன் பக்கமாக திருப்ப சரியாக அந்த நேரம் உள்ளே வந்த வெள்ளையன் அங்கே தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் விளக்கை பிடித்திழுத்து நந்தனின் முகத்தருகே காட்டினான்.

இப்பொழுது அவளுக்கு அடையாளம் தெரிந்தது.ஐயோ என்று அவளின் கதறல் அந்த சிறையை தாண்டி வெளியே கேட்டது."என் சாமி.. உன்ன இப்படியா பாக்கணும்.. கடவுளே ஆத்தா மாரியம்மா உனக்கு கண்ணு அவிஞ்சு போச்சாடி.. நாளு கிழம தவறாம உன்ன கும்பிட்டு வந்தேனே.. என் பூவு பொட்டுக்கு ஒல வைக்குறியேடி.. அய்யா என் சாமி..என்ன பாருய்யா.. உன் குட்டி வந்துருக்கேன்.. என்ன பாரு சாமி.. ஒரு தடவ எந்தா குட்டினு சொல்லய்யா.என்ன பாரு.. கண்ண தொறய்யா"அவளின் கதறல் நந்தனின் செவியில் பாய்ந்து அவனது கண்களை திறக்க முயன்றது.

 ஆனால் முடியவில்லை. இமைகள் வீங்கி கண்ணை திறக்க முடியாத நிலையில் இருந்தான் அவன். வாய் உதடுகள் அனைத்து கிழிந்து  இரண்டு மூன்று பற்கள் வேறு உடைக்கப்பட்ட நிலையில் வாய் திறந்தும் அவனால் பேச முடியவில்லை. இருந்தாலும் தரையில் அமர்ந்து அவன் முகத்தை தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு கண்ணீரால் அவன் வதனத்தை அர்ச்சனை செய்து கொண்டிருப்பவனை ஆறுதல் படுத்த அவன் மனம் துடியாய் துடித்தது.

 இவர்களின் உணர்வு போராட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வெள்ளையன் பக்கத்தில் இருந்த காவலாளியிடம் கண் அசைக்க அவன் கட்டளையை புரிந்து கொண்டு நந்தனின் கட்டை விடுவித்து கீழே இறக்கினான்..வெட்டிய வாழைமரமாக சாய்ந்தான் நந்தன்.

அவனை மடியில் கிடத்திக் கொண்டு ஒப்பாரி வைத்தாள் அழகி."கு.. ட்டி.. ஏ.. ன்.. இவ.. ட... வ.. ன்.. னு" மிகுந்த சிரமத்துடன் எப்படியோ தான் கேட்க நினைத்த கேள்வியை கேட்டு விட்டான்.

"வராம உன்ன இவனுங்க புடிச்சிட்டு போயிடானுங்கனு செய்தி கேட்டதும் உசுர கையில புடிசிட்டு ஓடி வரேன்.. ஏன்ய்யா உனக்கு இந்த வேல.. நாடு நாசமா போட்டும். ராமன் ஆண்டா என்ன ராவணன் ஆண்டா என்ன.. நீயா மந்திரியா இருக்க போற.. பேசாம இனிமே இப்டி செய்ய மாட்டனு அந்த தொற கிட்ட சொல்லுய்யா..".. அவளின் கண்ணீர் அவன் முகத்தில் விழுந்தது. அவள் கூறியதைக் கேட்டதின் அடையாளமாக அவனின் தலை இடம் வலமாக மெதுவாய் ஆடியது.

"இந்த நாடு எக்கேடு கெட்டு போவட்டும்.. உனக்கு நான் வேணுமா வேணுமா.. யோவ் உனக்கு எப்டியோ எனக்கு உசுரே நீதான்ய்யா.. உன்ன விட்டா எனக்கு யாருமே இல்லய்யா.. உன்னயே நாதினு நெனச்சிட்டு இருக்கேன். என்ன நாதியத்த முண்டயா வுட்டு போகாதய்யா.. இந்த ஊரே வேணா நமக்கு.. தண்ணி கப்பலு ஏறி வேற கண் காணாத நாட்டுக்கு போயிரலாம் சாமி..உன்ன இழந்துட்டு என்னால வாழ முடியாது சாமி.." இத்தனை நாள் அவள் கண் முன்னே அவன் நடமாடிக் கொண்டிருக்க அப்போதெல்லாம் அவளது வாய் மொழியாத வார்த்தை இன்று வெள்ளையனின் சிறைச்சாலையில் அடைபட்டு கிடக்கும் போது அவன் கேட்க நேர்கிறது.

 அவள் கூறிய வார்த்தையின் மொழியைக் கேட்டு சந்தோஷப்படுவதா இல்லை அவள் கூறிய வார்த்தையின் அர்த்தத்தை கேட்டு கோபப்படுவதா என்று புரியாமல் அவனின் உடல் துவண்டு கிடந்தது. அவர்களின் அழுகை நாடகத்தை ஒரு பார்வையாளனாக இருந்து பார்த்துக் கொண்டிருந்த வெள்ளையன் இப்பொழுது காவலாளியை பார்க்க அவன் அழகியை பிடித்து இழுத்தான்.அழகி மிரண்டு பார்க்கும்போது அவளை பிடித்து தரதரவென இழுத்து வெளியே தள்ளினான்.

 அந்த நிலையிலும் தன் மனைவியை இன்னொருவன் கைபிடித்து இழுக்க அவனை அடிக்க எழ முயற்சி செய்தான் நந்தன்... பக்கத்தில் கிடந்த பிரம்பை எடுத்து எழ முயற்சி செய்து கொண்டிருந்த அவனை சரமாரியாக தாக்கினான் வெள்ளைக்காரன். ஐயோ அடிக்காதீங்க என்று சிறைக் கம்பிகள் வெளியே முட்டி போட்டு அமர்ந்து கதறினாள் அழகி.அவள் முகத்தில் அறைந்து கொண்டு அழ அதை கோடாய் தெரிந்த கண்களின் வழியே பார்த்தான் நந்தன்.

 மூடிய இமைக்குள் இருந்தும் அவனுக்கு கண்ணீர் சிந்தியது. அவளை தரதரவென இழுத்து வந்து சிறைச்சாலையின் வெளியே வீசினார்கள். அவ்வளவுதான் அத்தோடு அவளை சிறையின் நந்தனை பார்க்க அனுமதிக்கவில்லை. அவளும் சோறு தண்ணி இல்லாமல் அங்கேயே கிடந்தாள். ஒரு பிச்சைக்காரியை போல அங்கே வரப்போகும் இருக்கும் வெள்ளைக்காரர்களின் காலில் எல்லாம் விழுந்து நந்தனை விடுதலை செய்யுமாறு கதறினாள்.

அவளின் கதறலை அவர்கள் ரசித்தார்களே தவிர யாருமே அவளுக்காக மனம் இரங்கவில்லை. இந்த செய்தி முன்பு அவள் இருந்த ஊரில் அவளை வெறித்தனமாக தேடிக்கொண்டிருந்த வெள்ளைக்காரனின் காதில் விழுந்தது. அவனால் அன்று அவனை ஏமாற்றி சென்ற அழகியை மன்னித்து விட முடியவில்லை. எனவே அவளைத் தேடி ஊர் பூராவும் தனது ஆட்களை அனுப்பி இருந்தான். அப்படி தேடி வந்த ஆட்களின் கண்களில் தான் அழகி விழுந்தாள்.

அவளின் நிலை அந்த கொடுங்கோல் வெள்ளைக்காரனுக்கு அறிவிக்கப்பட்டது.அவன் வேகமாக கிளம்பி காஞ்சிபுரம் வந்தான்..அழகியின் நிலையைக் கண்டு வருந்துவது போல நடித்தான்.அவனைக் கண்ட அழகி பேயை கண்டது போல பயந்து நடுங்கினாள்.. ஒருநாள் என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள் உன் கணவனை விடுதலை செய்கிறேன் என்று அவளிடம் ஈவு இரக்கமே இல்லாமல் பேசினான்.

 ஒரு பெண்ணாக அவளின் தன்மான அங்கே அடிப்பட அவனைக் காரி உமிழ்ந்தது மீண்டும் சிறைச்சாலையின் வாயிலில் தன் கணவனுக்காக தவம் கிடக்க ஆரம்பித்தாள்.  தன் மேல் காறி உமிழ்ந்த அழகியை பழிவாங்க இன்னும் நந்தனுக்கு கடுமையான தண்டனைகளை தர ஏற்பாடு செய்தான் அந்த வெள்ளைக்காரன்.

உள்ளே அவர்களுக்காக பணிபுரிந்த சில தமிழ் காவலாளிகள் வெளியே வந்து அழகியிடம் நந்தனுக்கு கிடைக்கும் கடுமையான தண்டனைகளை பற்றிக் கூறினார்கள். அவளும் தான் வேறு என்ன செய்வாள்?யாருமே அவளுக்கு உதவிக்கு வராத நிலையில் அங்கு இருக்கும் அனைத்து வெள்ளைக்காரளிடமும் கெஞ்சி மன்றாடினார். அவளது கண்ணீருக்கு இறங்காத அவர்கள் அவளின் கனிந்த மார்புகள் இறங்கினார்கள்.

மாராப்பு விலகிய மார்பை கண்டு அதனை கிள்ளிவிட ஒரு வெள்ளைக்கார காவலாளியின் மண்டையை கருங்கல் எடுத்து உடைத்தாள் அழகி.இதனால் கோபம் கொண்ட வெள்ளைக்காரர்கள் நந்தனை பொது மக்கள் முன்னிலையில் கழுவேற்ற போவதாக அறிவித்தார்கள்.

தொடரும் 

Comments

  1. Achooooooo pavam nandha and azhagi no words to say ponnungana avlo killiukeerai ah ninachitanga

    ReplyDelete
  2. Romba kastama iruku sis,,,solla varthai illai

    ReplyDelete
  3. 😭😭😭😭🥺🥺🥺🥺

    ReplyDelete
  4. அச்சச்சோ அவளையும் நந்தனையும் எப்படி காப்பது😭😭😭😭😭😭🥺🥺🥺🥺😔😔😔😔😔😔👌👌👌👌👌👌நிலா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்