நெருங்கினா(ள்)ல்? 6


காலை சூரியன் தன் பணியை செவ்வன செய்துக் கொண்டிருக்க உணவு மேஜையில் ஏகலைவன் வரவிற்காக காத்திருந்தாள் குண்டலகேசி. இன்றோடு மூன்றாவது நாள். இன்னும் நான்கே நாட்களில் அவனிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்ல வேண்டும். சட்டப் பூர்வமாக இறந்து போனதாக சான்றிதழ் வழங்கப்பட்ட ஒருவனை எப்படி திருமணம் செய்வது? பாவம் கல்யாண கனவுகளோடு மிதந்து கொண்டிருக்கும் சுந்தருக்கு எவ்வாறு துரோகம் இழைப்பது?

அவளுக்கு சுந்தரை பிடிக்கவில்லை தான், அதற்காக நம்பவைத்து ஏமாற்றலாமா? தாய் இல்லாமல் தானே பெண்களை வளர்த்த போதிலும் ஆவுடையப்பன் ஏழு பெண்களையும் முன்னே அமர்த்தி சிறுவயதிலிருந்தே யாரையும் ஏமாற்றக் கூடாது.. நாம் ஏமாந்து போனாலும் கூட அந்த வலியை இன்னொருவர் மேல் சுமத்த கூடாது.. நான் ஏமாந்து போனேன் அதேபோல் அடுத்தவரை ஏமாற்றுவேன் என்று கிளம்ப கூடாது..என்பார்.

 இதனாலேயே ஏப்ரல் ஃபுல் அன்று கூட கேசி யாரையும் ஏமாற்றியது கிடையாது. அப்படிப்பட்டவள் திருமணத்திற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும்போது கல்யாண கனவுகளோடு மிதக்கும் சுந்தரை எப்படி ஏமாற்றுவாள்?  மூளை இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும் போது மனமும்"நீ எங்கடி செல்லம் ஏமாத்துன.. நீயே அடிமை பெண் மாதிரி தான் அடப்பட்டு கெடக்க.. இதுல அடுத்தவனுக்கு பாவம் பாக்குற.. "என்றது.இப்பொழுது அவன் வரட்டும் அவன் உணவில் கைவைக்கும் முன்னாடியே அவனிடம் அவள் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்க வேண்டும்.

 ஏனென்றால் அவன் உணவில் கை வைக்க ஆரம்பித்து விட்டால் சுற்றி நடக்கும் எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டான். அதாவது  அவன் கருத்தில் பதிந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டான். இதை வந்த அன்றே கண்டுகொண்டாள் குண்டலகேசி. வந்த அன்று அவள் குளித்துவிட்டு வரும்போது அவளுக்காக உணவறையில் காத்திருந்தான் ஏகலைவன்.

 அவள் வந்ததும் உணவு வகைகள் பரிமாறப்பட்டது. அவன் ஒரு வாய் எடுத்து உண்ண செல்லும்போது"நீங்க செய்றது உங்களுக்கே நியாயமா.. தல மாறி சோறு போட்டு அடிச்சாலும் பரவால்ல.. சோறு போட்டு கல்யாணம் பண்ண சொல்றிங்க.. என் மனச பத்தி உங்களுக்கு அக்கற இல்லையா"..

அவன் உண்பதை நிறுத்தமால் தொடர

"உங்களுக்கு எப்படி அக்கற இருக்கும்.. ஆனா என் மனச பத்தி எனக்கு அக்கற இருக்கே.அந்த மனசுல நீங்க எட்டி கூட பாக்கல மிரு சார் ப்ளீஸ் என்ன ரிலீஸ் பண்ணிருங்க"

இப்பொழுது எட்டி சிக்கன் கிரேவியை ஒரு கரண்டி அள்ளி எடுத்து தன் தட்டில் வைத்தவன் அதனை ரசித்து ருசித்து உண்ண தொடங்கினான்.

கேசிக்கு கோபம் சுள்ளேன்று ஏறியது.தட்டை தள்ளி வைத்து விட்டு எழுந்துக் கொண்டாள். அப்பொழுது தான் அவள் புறம் தன் முகத்தை திருப்பினான் ஏகலைவன்.

"நான் என்ன நாயா? குரைச்சிட்டு போகட்டும்னு நீங்க சும்மா இருக்கீங்களோ? இப்படி மாங்கு மாங்குன்னு கொட்டிக்கிறீரியே.. உனக்கு மனசாட்சி இல்ல.. என் அப்பா அங்க எப்டி இருக்காரோ என்னவோ.. பாவம் ஏற்கனவே உடம்பு சரியில்லாத மனுஷன்.. என்னாச்சோ ஏதாச்சோ.அவருக்கு நேரத்துக்கு சோறு கொடுக்குறாங்களோ இல்லையோ.. இதெல்லாம் தெரியாம நா அல்லாடிகிட்டு கெடக்கேன். நீ கோழி குழம்ப ரசிச்சு ருசிச்சி திங்குற.."

"இப்ப நீ ஒக்காந்து சாப்பிடுற.. எனக்கு சாப்பிடுறப்போ பேசுனா புடிக்காது. இந்த சோத்துக்கு நீ என்ன பண்ணிருப்ப. மிஞ்சு போனா வேல செஞ்சிருப்ப. ஆனா நான் இந்த சோத்துக்காக கொலை பண்ணிருக்கேன்.. பசியோட வலி தெரியாம பேசாத. இப்ப ஒழுங்கு மரியாதையா நீ ஒக்காந்து சாப்பிடுற.. இல்ல அங்க உங்கப்பன் தர்மடி வாங்குவான்"என்றவன் தன் உணவில் கவனம் செலுத்த சமத்து பெண்ணாக அமர்ந்து தள்ளி வைத்த தட்டை எடுத்து கண்ணீரின் ஊடே கஷ்டப்பட்டு சாப்பிட அவளின் கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் தட்டில் விழுந்து உணவை இன்னும் உப்பாக மாற்றியது.

 அதனை அவன் கவனித்தாலும் எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவள் கஷ்டப்பட்டு உணவை விழுங்க முடியாமல் தண்ணீர் குடித்து விழுங்கி ஒரு வழியாக உண்டு முடித்து எழுந்து கொள்ள அவளை எழ விடாமல் அமர சொன்னவன் இன்னும் ஒரு தடவை அவள் தட்டை உணவுகளால் நிரப்பினான். அவள் கலங்கிய கண்களோடு அவனைப் பார்க்க"இனிமே சாப்பாடு நேரத்துல இப்படி கண்டபடி பேச கூடாது நீ. அதுக்கு தண்டன.. சாப்டு முடிக்குற.. இல்லனா உங்கப்பன்"

அவன் வார்த்தையை முடிக்கக் கூடயில்லை. அதற்குள் அவனை பார்த்து முறைத்துக் கொண்டே வேண்டுமென்றே அந்த உணவை அதிகமாக கறி ஊற்றி பிசைந்து மனிதன் பார்க்கவே கூடாத அளவுக்கு கஞ்சியாக்கி பெரிய பெரிய கவலமாக கையிலெடுத்து வாயிக்குள் அடைத்து முழுங்கினாள் கேசி.

அன்றைய நினைவு இன்று வந்து அவள் தொண்டையை அடைத்தது.அதனால் முன்னெச்சரிக்கையாக அவன் உணவில் கை வைக்கும் முன்னரே தான் நினைக்கும் விஷயத்தை பேசி முடித்தாக வேண்டும்.இல்லையென்றால் யார் அதிகப்படியான உணவை உண்பது.. அவள் அவனிடம் எவ்வாறு பேச வேண்டும் என்பதை தனக்குத்தானே ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க அவளுக்கு பின்னால் வந்து நின்றான் ஏகலைவன்.

 அவள் பாட்டில் இசையமைப்பாளர் போல இரு கைகளையும் ஆட்டி ஆட்டி தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்க அவளின் அங்க அசைவுகளைக் கண்டு தனக்குள் மெலிதாக புன்னகைத்துக் கொண்டிருந்தான் அவன். இதுவரை அவளை அவன் குண்டலகேசி என்று பெயர் சொல்லி அழைக்கவே இல்லை. ஏய் வா போ என்று ஒருமையில் தான் அவளை விழித்துக் கொண்டிருக்கிறான்..

 உண்மையில் அவளை என்னவென்று அழைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை.  சில நிமிடங்கள் அவளுக்கு பின்னால் நின்று கொண்டு இருந்தவன் பின்பு லேசாக தொண்டையை செருமிக் கொண்டே அவளுக்கு எதிரேயான நாற்காலியில் வந்து அமர்ந்தான்.அவன் அமர்ந்ததும் தனக்கு முன்பு தயாராக வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை ஒரு முறை கண்களால் அலசினான்.  பின் தனக்கு முன்பாக கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தட்டை அவன் நிமிர்த்தி வைத்துவிட்டு உணவை அள்ள கரண்டியை கையில் எடுக்க அதுவரை அவனது செய்கையை மட்டுமே கண்டு கொண்டிருந்தவள் இப்போது அவனது கையைப் பிடித்து நிறுத்தினாள்.

அவள் தொடுகையை எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஏகலைவன்."அது நான் முக்கியமா ஒன்னு சொல்லனும் இல்ல இல்ல பேசணும்.. ப்ளீஸ் கேளுங்க. அப்றமா உருண்ட புடிச்சு உள்ள தள்ளுங்க.. இல்லனா சொல்லுங்க நானே யானைக்கு கொடுக்குற மாதிரி அண்டா பெரிய கவலமா உருட்டி தரேன் உள்ளே தள்ளிருங்க"

"என்ன சொல்லனும்"

"பேசணும்"

"சரி பேசணும்"

"தோ பாருங்க.நான் ஒன்னும் ரதிதேவி கெடையாது..எம்பத்து அஞ்சு கிலோல இருக்கேன்.. சொத்து பத்துனு நையா பைசா என் நைனா கிட்ட இல்ல. வெரி ரெஸ்பெக்ட் ஃயூல் பேமிலி பட் வெரி புவர்.இப்ப பாத்திங்கன்னா ஓட்டு வீட்டுல ஒண்டிகிட்டு இருக்குற என் மாமனுங்களே வரதட்சனனு எங்கப்பன் ஆவுடைய ஆட்டு உரல்னு நெனச்சு ஆட்டிக்கிட்டு இருக்கானுங்க. இதுல இவ்ளோ பெரிய கோட்ட ஓனர்னா வரதட்சன கொடுக்க கம்பெனிக்கு கட்டுபடியாகாது..சல்லி பைசா கிடைக்காது.."

"என்னப் பார்த்தா வரதட்சணைக்கு கல்யாணம் பண்ற மாதிரி இருக்கா.."

"இல்ல சொல்றது கம்பெனி பொறுப்பு பாருங்க.."

" எனக்கு வரதட்சனை வேணாம்"

"என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க.. நாளப் பின்ன வரதட்சண கேட்டு கொடும பண்ணா நான் எங்க போய் நிக்க.. இப்படிதான் என் அக்காங்க புருஷனுங்க  வரதச்சனை வேணா உங்க பொண்ண மட்டும் கொடுங்கனு கல்யாணம் பண்ணிட்டு போனானுங்க..போயி ஒருவாரம் கூட ஆகல. அதுக்குள்ள வரதட்சணை கேட்டு  என் அக்காங்க பல்ல ஒடச்சிட்டானுங்க."அவளின் முயற்சி அவனுக்கு நன்றாக புரிந்தது.வரதட்சனையை காரணம் காட்டி இந்த திருமணத்தை நிறுத்த பார்க்கிறாள்.

இவ்வளவுதான் அவளது புத்திசாலித்தனமா என்று அவனுக்கு சிரிப்பாய் வந்தது. அதனை உள்ளேயே அடக்கிக் கொண்டு"நான் உன்கிட்ட ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. இந்த சோத்துக்காக நான் கொலை கூட பண்ணிருக்கேன். எனக்கு சோறு அவ்ளோ முக்கியம். அந்த சோத்து மேல சத்தியமா எனக்கு வரதட்சணைனு ஒத்த காசு வேணா"ஒரே போடாக போட்டு விட்டான் ஏகலைவன்.குண்டலகேசி அயர்ந்து விட்டாள்.அவளது முதல் ஆயுதமே புஷ்வானமாகிவிட்டது.

 இருந்தும் மனம் தளராமல்"ரைட்டு.. இப்ப நீ ஜெயில்ல இருந்து தப்பிச்சிருக்க.. உன்னோட பொய்யான டெத் சர்டிபிகேட்ட நானே பாத்தேன்.. நாளப் பின்ன நமக்கு கல்யாணம் ஆயிருச்சுனா செத்துப்போனதா சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட உன்னோட பேர நான் எப்படி போட்டுக்குவேன்.. நீதான் என் புருஷனு எப்படி வெளிய சொல்லுவேன்.. ஸ்கூல்ல பிள்ளைங்களுக்கு டீடைல்ஸ் கேப்பாங்க.. செத்துப்போன உன்னோட சர்டிபிகேட்ட எப்படி கொடுக்கறது.."

அவள் பேச பேச அவனின் முகம் கருத்தது."ஏகலைவன் அப்படின்ற ஒரு பேருதான் செத்துப்போச்சு.. அந்தப் பேர என் அப்பா அம்மா வைக்கல.."

" அப்புறம் யாரு வச்சா"பேச வந்ததை மறந்து விட்டு ஆர்வமாக கதை கேட்டால் குண்டலகேசி.

"அத இன்னொரு நாள் சொல்றேன்..  இதுதான உன் பிரச்சனைன்னா இப்போ சாப்பிடு.. இன்னும் அரை மணி நேரத்துல ஒரு பிரச்சனைய சால்வ் பண்றேன்..."என்றவன் அவ்வளவு தானா என்பது போல அவளைப் பார்த்து விட்டு தனக்கு உணவு பரிமாறி அவளைப் பார்த்தான். அவனின் பார்வையை உணர்ந்தவள் தனக்கும் தட்டு வைத்து வேகவேகமாக அதில் உணவை அள்ளி வைத்து உண்ணத் தொடங்கினாள்.

 சாப்பிட்டு முடித்து அவள் அவன் சொல்லப்போகும் பதிலுக்காக காத்திருக்க அவளை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றான் ஏகலைவன். இதுவரை இந்த கோட்டையை முழுதாக சுற்றிப் பார்த்தருந்தாள் குண்டலகேசி.ஆனால் எந்த அறைக்குள்ளும் சென்றதில்லை.அறைக்கு வெளியே இருந்து பார்ப்பதோடு சரி.இந்த வீட்டுக்குள் ஆட்கள் இருக்கிறார்களா அல்லது ரோபோ ஏதாவது மறைமுகமாக வந்து வேலை செய்கிறதா என்பது அவளின் பெருத்த சந்தேகம்.. அந்த அளவுக்கு அங்கே ஒரு ஈ காக்கையை கூட அவள் கண்டதில்லை. அவ்வளவு பெரிய கோட்டையில் அவனும் அவளும் மட்டுமாகவா இருக்கிறார்கள்..

அவள் அறையில் இருந்தது போல அவ்வளவு ஆர்ப்பாட்டமான அலங்காரங்கள் எதுவும் அவனது அறையில் இல்லை. சாதாரண பெரிய கட்டில். பஞ்சு மெத்தை. ஒரு பக்கமாக சுவரோடு சுவராக  செய்யப்பட்டிருக்கும் உடை அலங்கார அலமாரி. ஆளுயர கண்ணாடி. அதற்கு கீழே ஆண்கள் பயன்படுத்தும் லோஷன் கிரீம்  இதர வகையறாக்கள்.. அவன் அந்த உடை அலங்கார அலமாரியைத் திறந்து ஏதோ ஒரு பைலை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தான்.

அதை திறந்து பார்த்தவள் கண்கள் அகல விரிந்தது.அது அவனின் உண்மையான பர்த் சர்டிபிகேட்."அப்படின்னா உன்னோட பேரு"

"வந்தியதேவன்".. அவனின் உண்மையான பெயரை கேட்டு ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள் குண்டலகேசி.. கனவில் எழுப்பி அவளை கேட்டால் கூட அவளது முதல் க்ரஷ் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் என்று தவறாமல் கூறுவாள். அந்தக் கதையின் நாயகன் ராஜராஜ சோழனை விட வந்திய தேவன் மேல் ஒருவித மயக்கம் குண்டலகேசிக்கு.  காலச்சக்கரம் என்ற ஒன்று உண்மை என்றால் அதில் ராஜராஜ சோழனின் காலத்திற்கு சென்று வந்திய தேவனை மணம் புரிவது என தன்னுடைய இளமைக் காலங்களில் நினைத்துக் கொண்டிருந்தாள் குண்டலகேசி.. அவளின் தோழிகள் கூட கேலி செய்வார்கள் "நீ அப்படி டைம் டிராவல் செஞ்சி போனா குந்தவ உன்ன ஒரே போடாக போட்டு தள்ளிருவா."என்று.

 அந்த அளவுக்கு வந்தியதேவன் மேல் மயக்கமோ மயக்கம் குண்டலகேசிக்கு."அப்ப ஏகலைவன்"

"ஏழு வயசுல கொலை பண்ணேன்..அம்மா ஒரு பைத்தியக்காரி. மார்க்கெட்டுல பைத்தியம் பிடிச்சு சுத்திக்கிட்டு இருந்தா. நம்ம ஊர்லதான் பைத்தியத்த கூட விட்டு வைக்க மாட்டாங்களே.அப்படித்தான் நான் பொறந்தேன்.நா மட்டும் இல்ல எனக்கு முன்னாடி நாலஞ்சு பிள்ளைங்க பொறந்ததுனு சொன்னாங்க அங்க வியாபாரம் பண்றவங்க.. அதுங்கள திருட்டு கும்பல் ஒன்னு தூக்கிட்டு போய் கண்ண நோண்டி கால ஒடச்சு கைய ஒடச்சி பிச்ச எடுக்க வெச்சாங்கனு சொல்லிகிட்டாங்க.

நான் பொறந்ததும் என் அம்மா என்ன நெனச்சதோ தெரியல அங்க மீன் வியாபாரம் செய்ற ஆயா கிட்ட போட்டுட்டு ஓடி போய் சரக்கு லாரியில அதுவே விழுந்து செத்து போச்சாம். ஆயா வீட்ல ஏற்கனவே ஊர்பட்ட புள்ளைங்க.எதுவுமே வேல வெட்டிக்கு போகாதுங்க.இருந்தாலும் என்ன எடுபுடி மாறி வெச்சு வளத்துச்சு. எனக்கு நாலு வயசு இருக்கும் போது அதும் மண்டய போட்ருச்சு.அதுக்கு அப்றம் எனக்கு அந்த வீட்ல இடம் இல்ல. மார்க்கெட்ல அந்த வயசுல எடுபுடி வேல செஞ்சு அடி வாங்கி மிதி வாங்கி அவனுங்க தின்னுட்டு வீசுறத தின்னுட்டு இருந்தேன்.

ஒரு நாள் ரொம்ப பசி. எவனுமே சோறு போடல.வேல மட்டும் வாங்குனானுங்க. பசி பொறுக்க முடியாம சோறு கேட்டேன் மிதிச்சானுங்க. அப்ப ஒரு பொண்ணு அவ அந்த மாதிரி தொழில் பண்றவ.. அவ கிட்ட போய் துட்டு கேட்டேன்..பாவம் அத எவனோ கூட்டிக்கினு போய் அடிச்சுருக்கானுங்க. காசு கொடுக்காம டபாய்சிருக்கானுங்க.அவனுங்கள்ல ஒருத்தன் அந்த பொண்ண அடிச்சு அடிச்சு கெடுத்து அந்த எடத்துல பண்ணி விடுன்னு சொல்லி தெரியாம பல்லு பட்டதுக்கு கண்ணுல குத்திருக்கான்.

அவன் மேல கொல காண்டு அந்த பொண்ணுக்கு.. உடனே என்கிட்ட நைனா உனக்கு துட்டு தான வேணும். நான் தரேன். அதோட உனக்கு வேலயும் வாங்கி தரேன்.. நான் சொல்றத செய்வியானு கேட்டுச்சு. சொல்லுன்னு சொன்னேன். அத அந்த மாதிரி செஞ்சவன போட சொன்னுச்சு.. அந்த வயசுல பசியோடு கொடுமைல துண்டு ப்ளேட்ட எடுத்துட்டு போய் அங்க சரகடிச்சு கவுந்து படுத்திருந்தவன் கழுத்துல ஓரே கோடு.. அவன போட்டு தள்ளிட்டு அந்த பொண்ணு கிட்ட வந்து அது கொடுத்த துட்ட வாங்குனப்ப போலீஸ் வந்துருச்சு.

அங்கெருந்து தப்பிச்சு ஓடி திருட்டு ரயில் ஏறி"சொல்லிக்கொண்டே வந்தவன் திறந்த வாய் மூடாமல் தன்னை பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டதும் வாயை மூடினான். மெய்மறந்து பீதியோடு அவனின் கதையை கேட்டுக் கொண்டிருந்தவள் அவன் சொல்வதை நிறுத்தியதும்"அப்றம் என்னாச்சு"என அவன் கையை பற்றிக் கொண்டு கேட்க அவளை ஒரு நொடி பார்த்தவன் அடுத்த நொடி அவளிதழில் ஆழ முத்தம் ஒன்றை பதித்து விட்டு திக்பிரமை பிடித்தவள் போல் நின்றிருந்தவளின் கன்னத்தை தட்டி

"நீ என்ன சொன்னாலும் செஞ்சாலும் இன்னும் நாலு நாளுல நமக்கு கல்யாணம் ம்ம்ம்".. என சென்றவனின் முதுகை இலக்கில்லாமல் வெறித்தாள் குண்டலகேசி.

தொடரும்..




Comments

  1. Apram ena Achu sis super ud sis

    ReplyDelete
  2. Ne sarila ma daily intha stey venum atleast 1day 2 tyms ah thu podu avlo intrest ah iruku nxt epi ku waitng

    ReplyDelete
  3. Super nice flash back solla porenu paththa sappunu mudichutaan yenma kesi nee evvo urundalum onnum Panna mudiyathu Panna Vida mattan

    ReplyDelete
  4. Super sis...apparam enna marathon irukum

    ReplyDelete
  5. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

    ReplyDelete
  6. Romba interested ah move aghudhu sis

    ReplyDelete
  7. Kesi.. nalla reasons solli samalikkara po..🐒🤣 Enakum same dbt sagi aprm enna aachu...😪😪

    Aegaa sry Vandhiyatthevan oru puriyatha puthirunga..😌

    ReplyDelete
  8. Very Very interesting epi akka😍😍😍 aduthu enna achu🤔🤔🤔

    ReplyDelete
  9. Excuse me.... enna miru sir ippadi sattunu kiss adichutinga??? Nangalum aarvama kadhai kettutu irunthom... ippadi stop panitingale... Semaiya irunthuchu inaiku...

    ReplyDelete
  10. Super sis next episode ku waiting pls 1day ku 2episode podunga pls

    ReplyDelete
  11. Ipdi oru flash back kekkuradhukke kastama irukku

    ReplyDelete
  12. Super ud sis kesi mari dha kadai kettutu irundhen ipdi posukkunu thodarum potinga

    ReplyDelete
  13. இப்போ எதுக்கு டா கதை கேட்ட பொண்ணை கடிச்சி வச்சிட்டு போன😳😳😳😳😳,ஆன அவனோட fb ரொம்ப வருத்தமாக இருக்கிறது சிஸ்டர் 😔😔😔😔😔👌👌👌👌

    ReplyDelete
  14. Apram yennachi nila waiting next ud dr💞

    ReplyDelete
  15. Semaaaaa super pavam namba vanthiya devan ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

    ReplyDelete
  16. Verithanam ah pochu story vera level ud 😍😍😍eagerly waiting for next 😍

    ReplyDelete
  17. அப்புறம் என்ன ஆச்சு சொல்லவே இல்லையே

    ReplyDelete
  18. அப்புறம் என்ன ஆச்சு 🙈🙈

    ReplyDelete
  19. Ayo செம்ம.. Nice going..

    ReplyDelete
  20. Pavum la hero
    Chinna vayasula evlo kasta pattu irrukan

    ReplyDelete
  21. வந்தியதேவன் ஆஆஆஆஆ 🥰🥰🤤🤤🤤🤩😁🤤🥰🤩🤩🤩🤩

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்