3 நெருங்கினா(ள்)ல்?


" குண்டம்மா குண்டம்மா இங்க கொஞ்சம் வாடா".. ஆவுடையப்பன் தான் குண்டலகேசியை இவ்வளவு செல்லமாக அழைப்பது. அவர் மட்டுமல்ல அந்த வீட்டில் உள்ள அனைவருமே குண்டலகேசியை அப்படித்தான் அழைப்பார்கள். கேசி என்று நாகரிகமாக அழைக்க அறிவு வேலை செய்யவில்லை. வழக்கம்போல சற்று கடுப்புடனே ஆவுடையப்பன் முன்பு சென்று நின்றாள் குண்டலகேசி.

"ப்பா நானே கல்யாணம் ஆகி போக போறேன்.. இப்பயாச்சும் இப்படி கூப்பிடுறத நிப்பாட்டுங்க..சுந்தர் வீட்டில யாராச்சும் கேட்டா என்ன நினைப்பாங்க.."

" எவன் என்ன நெனச்சா எனக்கு என்னடா.. என் செல்லத்த நான் அப்படிதான் கூப்பிடுவேன்.. அம்மாடி அக்காங்களுக்கு செஞ்ச மாதிரி உனக்கு செய்ய முடியலனு அப்பா மேல வருத்தமா  இருக்காடா.."

அவரின் வாடிய முகம் கண்டு குண்டலகேசியின் மனம் இளகியது"ப்பா அந்த மாதிரி செஞ்சுருந்தாத்தான் நான் உன்மேல கடுப்பாயிருப்பேன்.."

" இல்லடா என்னதான் மாப்பிள வரதட்சணை வேணான்னு சொன்னாலும் ஒரு பொட்டு பவுனு கூட இல்லாம ஒன்ன அனுப்பி வைக்க என் மனசு வலிக்குது டா.."

" அப்ப ஒன்னு செய்யலாம் நம்ம வீட்டு பின்னால பொதச்சு வச்சிருக்கிற புதையல எடுத்து எனக்கு சீரு செஞ்சு அனுப்பிருங்கப்பா"சிரிக்காமல் பேசினாள் குண்டலகேசி. மகள் என்ன சொல்ல வருகிறாள் என்பது  ஆவடையப்பனுக்கு புரிந்தது..  பாபநாசம் படம் போல அவர்கள் வீட்டில் வளர்த்த மாடு இறந்து போய் விட்டது அந்த மாட்டை வீட்டு பின்னால்தான் புதைத்திருந்தார்கள். இந்நேரம் மாட்டின் எலும்பு தான் மீதமிருக்கும்.அதைத்தான் குண்டலகேசி புதையல் என்று கூறுகிறாள்.இவ்வளவுக்கும் அந்த மாடு ஒன்றும் இவர்கள் சொந்த மாடு கிடையாது. பக்கத்து வீட்டுக்காரர் கோபாலின் மாடு. கோபால் இறந்து போனதும் அவரது மனைவி கோபாலின் தம்பியோடு கம்பி நீட்டி விட்டார்.போகும்போது பெரிய மனதாக மாட்டை குண்டலகேசி குடும்பத்தாரிடம் ஒப்படைத்து விட்டு சென்று விட்டார்.

இவர்களுக்கே உணவில்லாத போது மாட்டுக்கு உணவு போட திண்டாடி போனார்கள் குண்டலகேசி வீட்டார். எப்படியோ மாட்டுக்கு தீவனம் வாங்கி போட்டு மாட்டிடம் கறந்து வரும் பாலை விற்று தினம் இரனூறு முன்னூறு சம்பாதித்து வந்தார்கள்.மாடும் மண்டையைப் போட்ட பின் அந்த பணத்துக்கும் வேட்டு வந்துவிட்டது.

சுந்தர் தன் வீட்டிற்கு தெரியாமல் ஆவுடையப்பனை சந்தித்து அவர் மரியாதைக்காக போடுவதாக கூறிய ஐந்து பவுன் நகைக்காக தனது சொந்தப் பணத்தை கொடுத்து விட்டுச் சென்றான். ஆவுடையப்பன் எவ்வளவோ வேண்டாம் என்று மறுத்து பார்த்தார்.ஆனால் சுந்தர் பிடிவாதமாக இருந்தான்.அவனுக்கு குண்டலகேசியை மிகவும் பிடித்துவிட்டது.மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி அளவிற்கு சென்று விட்டான். இல்லை இல்லை மணந்தால் குண்டலகேசி இல்லை என்றால் சன்யாசி என்ற நிலைக்கு வந்து விட்டான்.

இந்த விஷயத்தை தந்தை மூலம் கேள்விப்பட்ட குண்டலகேசி சுந்தரை தொடர்பு கொண்டு"இந்த மாதிரி காசு கொடுத்து என்ன வாங்குற வேலையெல்லாம் வேணாம்.. எங்களுக்கு சமாளிக்க தெரியும். இன்னிக்கு யாருக்கும் தெரியாம கொடுக்குறீங்க நாள பின்ன யாருக்காச்சும் உண்மை தெரிஞ்சா என்ன பேசுவாங்க..  காச வாங்கிட்டு எங்க அப்பா என்ன கூட்டி கொடுத்தாருன்னு சொல்லமாட்டாங்க..வேணா சுந்தர் உங்க நல்ல மனசு எனக்கு புரியுது.இப்படியெல்லாம் செஞ்சுதான் நீங்க உங்கள புரிய வைக்கணும்னு அவசியமில்ல."முகத்தில் அடித்தது போல பேசி விட்டாள் குண்டலகேசி.

ஆனால் சுந்தர் கைப்பேசியில் எதுவும் கூறாமல் பேசாமல் இருந்து விட்டு நேராக குண்டலகேசி பணி புரியும் அலுவலகத்திற்குச் சென்று அவள் முன் ஈ என்று இளித்துக் கொண்டு நிற்கும்போது இவனிடம் ஐந்து பவுனுக்கு மட்டும் அல்ல ஐந்து தலைமுறைக்கு சொத்து இருந்தாலும் அதை சுலபமாக அடைந்து விடலாம் என்று தோன்றியது குண்டலகேசிக்கு. உண்மைதான் சுந்தர் ஒரு இளிச்சவாயன். அப்படித்தான் ஊரெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தது. அவன் ஒரு அப்பாவி. பெற்றோர்கள் அதிகமாக செல்லம் கொடுத்து  அவனை கைக்குள் வைத்து வளர்க்க ஒரு அம்மா பிள்ளையாக வளர்ந்து நிற்கிறான் சுந்தர்.

அப்படி இப்படி என்று திருமணத்திற்கு தன்னால் முடிந்த அளவிற்கு மகளுக்கு பட்டு சேலைகள் அவள் வாழப்போகும் வீட்டில் உபயோகப்படுத்துவதற்கு கட்டில் பீரோ வகைகளையும் வாங்க பணம் திரட்டிருந்தார் ஆவுடையப்பன். அவரின் ஆறு மருமகன்களும் திருமணத்திற்கு தங்களுக்கு பட்டு வேஷ்டி சட்டைகளும் தங்களுடைய மனைவிமார்களுக்கு காஞ்சி பட்டு சேலைகளும் இவர்கள் அனைவரும் பெற்று போட்டிருக்கும் மரகதமணிகளுக்கு புத்தாடைகள் என்று மட்டுமில்லாமல் சம்மந்திகளாகிய தங்கள் பெற்றோர்களுக்கும் புது ஆடைகள் வாங்கி தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  அப்படி வாங்கி தந்தால் தான் இந்த திருமணத்திற்கு அவர்கள் வருவார்களாம்.இல்லையென்றால் தங்கள் மனைவிமார்களை கூட இந்த திருமணத்தில் பங்கேற்க விடமாட்டார்களாம்.

குண்டலகேசிக்கு பற்றிக்கொண்டு எரிந்தது. அவளுடைய சம்பளப் பணம் சிறிதளவு வங்கியில் சேமிக்கப்பட்டு வந்தது.  அந்த சேமிப்பு பணத்தை எல்லாத்தையும் வழித்து துடைத்து இவர்கள் அனைவருக்கும் தள்ளுபடியில் புதுத் துணிகள் வாங்க இறுதியாக அவளுக்கு தள்ளுபடியின் பரிசாக  கிடைத்தது ஒரு மஞ்சள் நிற பூ போட்ட கைக்குட்டை தான்.அதை வாங்கி வியர்த்து வழிந்து கொண்டிருக்கும் தனது முகத்தை அழுத்தமாக துடைத்தாள் குண்டலகேசி. திருமணத்திற்கு ஐந்து நாட்கள் இருக்கும்போது அக்காமார்கள் அனைவரும் தத்தமது கணவன்மார்களிடம் வாயில் வந்ததையெல்லாம் அள்ளி விட்டுவிட்டு அப்பா வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள்.

அவர்கள் பெற்ற வானரங்கள் அந்த குட்டி வீடு முழுவதையும் துவம்சம் செய்தார்கள். ஒருவழியாக ஆவுடையப்பனின் வீடு கல்யாண களை கட்டி விட்டது.. குண்டலகேசிக்கு தந்தையை தனியாக விட்டுச் செல்வது வேதனையை தந்தது. ஆனால் தினமும் அவரை வந்து பார்த்துச் செல்லும் தூரம்தான் அவளின் புகுந்த வீடு இருக்கப் போகிறது. சுந்தரிடம் இப்போதே சொல்லி விட்டாள் அவளின் சம்பளத்தில் ஒரு பகுதியை தன் தந்தைக்கு கண்டிப்பாக அவள் கொடுப்பாள் என்று. அவள் மேலிருந்த மயக்கத்தில் அவனும் பல்லைக் காட்டினான்.

அதோ இதோ என்று நலுங்குக்கு ஏற்பாடு செய்தார்கள். திருமணத்திற்கு மூன்றுநாள் இருக்கும்போது நலுங்கு சுத்தலாம் என்று அக்காமார்கள் அனைவரும் ஏற்பாடு செய்ய அக்கம் பக்கத்தில் இருந்த முக்கியமான அண்டை வீட்டார்களை மட்டும் அழைத்து  சாயங்காலம் நலுங்கு சுற்றினார்கள். பழைய சேலை ஒன்றை கட்டி அமர்ந்திருந்த குண்டலகேசியை சந்தனத்தால் அபிஷேகம் செய்தார்கள் பெண்கள் அனைவரும். வீடே நீண்ட நாளுக்கு பிறகு சிரிப்பு சத்தத்தால் நிறைந்திருந்தது. தன் ஏழு பெண்களும் சிரித்த முகமாக இருப்பதைப் பார்த்த ஆவுடையப்பனுக்கு அப்படி ஒரு மன நிம்மதி.

அந்த நிம்மதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அன்று இரவே அந்த நிம்மதிக்கு முடிவு சாசனம் எழுதி ஆகிவிட்டது ஒருவனால். இரவு எட்டு மணிக்கெல்லாம் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து ஒன்பது மணி போல குடும்பமே சாய்ந்துவிட்டது. பத்து நாட்களில் கல்யாணம் என்பதால் ஒரே வேலைதான். சரியாக பன்னிரண்டு மணிக்கு கடிகாரம் பன்னிரண்டு முறை அடித்து நிறுத்த பாத்ரூம் செல்வதற்காக எழுந்தாள் கோப்பெருந்தேவி.. மங்கிய அரை வெளிச்சத்தில்  யாரோ தனக்கு எதிராக நிற்பது போல தெரிந்தது. கண்களை கசக்கி விட்டு நன்றாகப் பார்த்தாள்.

யாரோ அல்ல ஒரு பத்து பேர் அங்கே நின்று இருந்தார்கள் முகமூடி போட்டுக் கொண்டு.கோப்பெருந்தேவியின் கண்கள் விரிந்தது.திருடனுங்க. திருமண வீட்டில் நகையும் பணமும் கொட்டிக் கிடக்கும் என்று புகுந்து விட்டார்கள் போல. ஆனால் இங்கே கழுத்து காதில் அணிந்து இருப்பது  கல்யாணி கவரிங் என்பது அவர்களுக்கு எப்படி தெரியும். பயத்தில் உடல் நடுநடுங்க தன்னருகே படுத்திருந்த கண்ணகியின் காலை ஓங்கி மிதித்தாள் கோப்பெருந்தேவி. வலியில் எரிச்சலோடு கண் திறந்த கண்ணகி கோப்பெருந்தேவியை பார்த்து பெருங்குரலெடுத்து கத்தினாள்.

"கண்ணு தெரியாத முண்டம்..கக்கூசுக்கு போறதுக்கு உனக்கு இந்த அளப்பறையா" கடுப்போடு  மொழிந்தவள் தங்கை பேயறைந்தது போல் நிற்பதை பார்த்து விட்டு அவளும் நன்றாக கண்ணை திறந்து பார்த்தாள்.அங்கே பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள் முகமூடியோடு.அவ்வளவுதான் கண்ணகி போட்ட கூச்சலில் அனைவரும் எழுந்து விட்டார்கள்.. ஆவுடையப்பன் தனது பெண்கள் அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு  நடுக்கத்தோடு அவர்கள் அருகே மெல்ல சென்று

"தம்பி நீங்க எல்லாம் திருடனுங்கனு எங்களுக்கு தெரியும்.. கல்யாண வீடு நகையும் பணமும் கொட்டிக்கிடக்கும்னு தப்பான தகவல்ல நீங்க இந்த வீட்டுக்கு வந்துட்டீங்க. செத்துப்போன என் பொண்டாட்டி பாப்பாத்தி மேல சத்தியமா சொல்றேன் நானே மாப்பிள்ளை கொடுத்த காச வெச்சு தான் என் பொண்ணுக்கு ஊரு பாக்க அஞ்சி பவுனு போட்டு கட்டி கொடுக்கிறேன். மத்தபடி எங்க கிட்ட வேற எந்த காசு கிடையாது. என் மத்த பொண்ணுங்க காதுல கழுத்தில போட்டிருக்கிறத வைச்சி எடை போட்ராதீங்க. இதுங்களோட புருஷனுங்க அத்தனையும் வித்து குடிச்சிட்டானுங்க.ஊர் முன்னாடி வெறும் கழுத்தோட இருந்தா மானம் போயிடும் அதனால கவரிங் நகைய வாங்கி அடிக்கிட்டு நிக்குதுங்க..

சொல்றதுக்கு கேவலமா தான் இருக்கு.நீங்க திருடுற அளவுக்கு எங்க வீட்டுல எதுவுமே இல்ல தம்பி. நாலு நெளிஞ்சு போன பானயும் பத்து ஓட்ட பாயும் தான் இருக்கு."ஆவுடையப்பன் கல்லும் உருகும் வண்ணம் தன் குடும்ப சூழ்நிலைகளை சொல்ல அதனை கேட்ட அங்கு நின்ற பத்து முகமூடிகளும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள அதில் ஒரு முகமூடி

"இந்தா பெருசு.. நிறுத்து நிறுத்து.. என்னத்துக்கு இப்ப ஒப்பாரி வைக்குற.. எங்க தல உன் பொண்ண தூக்கிருச்சு.."என அசால்ட்டாக அவன் சொல்ல அப்பொழுது தான் ஆவுடையப்பன் பதறி தன் பெண்களை பார்த்தார். மற்றவர்களும் யார் கடத்தப்பட்டாள் என வேகமாக பார்க்க குண்டலகேசியை காணவில்லை. திருமணப்பெண் கடத்தப்படுள்ளாள். அவ்வளவு தான்.. மற்ற பெண்கள் அனைவரும்

"அப்பா தங்கச்சிய காணோம் ப்பா"என கதறி அழ ஆவுடையப்பன் நெஞ்சை பிடித்து கொண்டு விழ அவர் விழும் முன்னே தாங்கி கொண்டான் இன்னொரு முகமூடி.. பேசவே முடியாமல் பிரயாசையுடன்

"தம்பி என் பொண்ணுக்கு இன்னும் ரெண்டு நாளுல கல்யாணம் தம்பி.. அவள என்ன பண்ணீங்க. யாரு தூக்கிட்டு போனா என் பொண்ண.. உங்க காலுல விழறேன்.. என் பொண்ண என் கிட்ட கொடுத்துருங்க.."கையெடுத்து கும்பிட்டார் ஆவுடையப்பன்.

"பெரியவரே உங்க பொண்ணு பத்திரமா இருக்கு.. அவ்ளோ தான் நா சொல்ல முடியும்.. பொண்ணு ஓடிப்போச்சு ஊரே காரித்துப்பும் அப்படின்னு நீங்க பீல் பண்ண வேணாம்..  நாங்க இருக்கோம். எவன் என்ன பேசினாலும் ஒரே போடு.."

"தம்பி" ஆவுடை அவசரமாக ஏதோ பேச வர அவரின் நெஞ்சுவலி அவரைப் பேச விடவில்லை. மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தவரின் செவியில் அவரது மற்ற மகள்களின் அப்பா என்ற கதறல் சத்தம் மட்டும் தேய்ந்து ஒலித்தது.

குண்டலகேசி அரை மயக்கத்தில் கண் திறந்து பார்த்தாள். யாரோ ஒருவன் பேய்போல முகமூடி அணிந்து கொண்டு அவள் படுத்திருந்த கட்டிலின் அருகே அமர்ந்து இருந்தான்.  கொடூரமான முகமூடி அது. அதை பார்த்து அவள் பயப்படவே இல்லை. " டேய் யாருடா நீ.  எதுக்குடா என்ன தூக்குன.. நான் யாரு தெரியுமா.. என் மேல கை வச்சா ஒட்டுமொத்த மீடியாவே அதிரும்..."அந்த மயக்க நிலையிலும் இந்த கடைசி வார்த்தையை சொல்லும் போது அவளின் மனம் அவளைக் காறித் துப்பியது.

இருந்தாலும் தைரியத்தோடு உளறிக்கொண்டு இருந்தவளை பார்த்தவன் மெல்ல தன் முகமூடியை அகற்றினான். பேய் முகமூடியை கண்டு அதிராதவள் அவனின் உண்மையான முகம் கண்டு ஐயோ பேய் என்று  அலறி மயங்கி விட்டாள். அங்கே அமர்ந்து அவளின் அலறலை மென்னகையோடு பார்த்துக்கொண்டிருந்தான் ஏகலைவன்.

Comments

  1. Right uh... Akka ivlo serious aah na episode la nan than sirichu irupan pola.... illa ellarume sirichangala nu therila 😂😂😂😂😂😂 Nijamave thamasa iruku....

    ReplyDelete
  2. சூப்பர் சூப்பர்

    ReplyDelete
  3. Ayyo Nainaa.. nalla pesuna po..🤣🤣 adhane setthuttaanu nenachavan Kannu munnaadi irundha Yaaru dhan bayapadamaattanga 😝😝

    Aegaa..🔥🤩🤣

    ReplyDelete
  4. Superrrrr sagi 👌👌👌👌

    ReplyDelete
  5. 😂😂 Oru kadaththal scene naye ipidi thamasa solliteenga.. Sema ponga... M aditha epiku waiting

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. Haha hero entry agitara semma epi akka 🥰🥰

    ReplyDelete
  8. Wow sis what a ud super super semmma sis egalaivan kadathitana super mugamudi pathu bayapadama munji pathu bayapududhu 😂😂😂😂😂 interesting

    ReplyDelete
  9. Apadi podu semaaaaa semaaaaa super 👌👌👌👌👏👏👏👏👏❤❤❤❤

    ReplyDelete
  10. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

    ReplyDelete
  11. ஹாஹா செம்ம போங்ககோ ஆனா ஆவுடையப்பன் போல எத்தனையோ அப்பாக்கள் இன்னும் கஷ்டபடதான் செய்றாங்க ...

    ReplyDelete
  12. 😍😄😄😄😄😄🌷👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻waiting nxt ud dr💞💞💞💞quick potturuga nila💞

    ReplyDelete
  13. Super arumai Sema Sema Emma Kevin thukkitu vantavankittaiyum theiriyama irukka paru

    ReplyDelete
  14. பேய் 👻 முகமூடி பார்த்து பயப்படாத பெண்னை இப்படி மயங்க வெச்சுட்டாங்களே👌👏👏👏👏👏

    ReplyDelete
  15. Wow.. sema ud sis.. 🧡🧡🧡 avudai sogatha pizhinchalum sirippu than varuthu.. 😂😂😂😂😂 super Egalaivan vanthachu 🥰🥰🥰 waiting for next ud 😍😍😍

    ReplyDelete
  16. செம்ம நேஜமா சிரிப்பு தான் வந்தது,pls Nila அதுக்கு நீங்க தான் காரணம்,

    ReplyDelete
  17. Suuuuuuupppppppppeeeeeeeeeerrrrrrrrrrr nila aaaaaa masala kadhai soodu pidichirukku

    ReplyDelete
  18. Semma super sock
    🙂👌👌🌹🌹🌹

    ReplyDelete
  19. இவன்தான் செத்துட்டாட்டானே

    ReplyDelete
  20. 😂😂😂
    மயக்கத்துல கூட வாய் நீளம் 🤭🤭

    ReplyDelete
  21. இது உண்மையிலே சீரியஸ் ஆன எபிசொட் தான் ஆனால் எனக்கு தான் சிரிப்பா அடக்கவே முடியல..
    ஆனாலும் நம்ம குண்டலகேசி க்கு ரொம்ப வாய் அதிகம்...

    ReplyDelete
  22. Super super super super super super super super super super super epi
    Acho ithu serious aana epi thana ennaku yen siripu varuthu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்