4 நெருங்கினா(ள்)ல்?


"எப்பா சாமி என்னா நாத்தம்.. ஒரே பொண நாத்தம் அடிக்குது.." சுகமாக குப்புறப்படுத்துக் கொண்டு ஆழ்ந்த தூக்கத்தின் ஊடே திடீரென்று வீசிய கொடூர வாடையில் என்னவென்று யோசித்தாள் குண்டலகேசி. அதிகம் யோசிக்காதே மகளே அந்த நாத்தம் இதுதான் என்பது போல அவளின் ஆசன வாயிலிருந்து ஸ்ஸ்ஸ் என்று வெளியேறியது ஆசிட் வாயு ஒன்று..

"ஆஹா நம்ம குசு தான் நம்மள கொல்லப் பாக்குது.."என தலைவரை போர்த்திருந்த போர்வையை அவசரமாக ஒதுக்கியவள் அதன் பின்னே ஆசுவாசமாக மூச்சு விட்டாள்."இந்த அளவுக்கு நாறுறதுக்கு நேத்து என்னத்த திண்ணோம்.. மாதவி மொச்சக் கொட்டயும் பரங்கிகாயும் சேர்த்து கூட்டு செஞ்சா. அருமையா இருக்கேனு அள்ளி போட்டு தின்னது நம்ம உசுருக்கே வேட்டு வைக்குதே"திரும்பி படுத்து உறக்கத்தை தொடர அவள் மூளையில் மின்னி மின்னி மறைந்தது நேற்று நடந்த சம்பவங்கள்.

ஆவுடையப்பன்,சுந்தர்,இன்னும் இரண்டு நாட்களில் கல்யாணம், பேய் முகமூடி, இறுதியில் ஒரிஜினல் பேய்.. ஐயோ என்று அலறி அடித்து எழுந்தமர்ந்து விட்டாள் குண்டலகேசி.அரையடி அமுங்கி கொடுக்கும் பஞ்சு மெத்தையில் அவள் ஒய்யாரமாக படுத்திருந்தாள்.நேற்று நடந்த சம்பவங்கள் எல்லாம் அவள் நினைவுக்கு வேகமாக வந்து போனது.

" நான் காண்பது கனவா நிஜமா?  இறந்தவன் எப்படி உயிரோடு வர முடியும்? அப்படி வந்தவன் எதற்காக என்னை கடத்த வேண்டும்? இது உண்மைதானா? கில்லி பார்த்தாள் வலித்தது..உண்மைதான்.. அவன் எப்படி வந்தான்.. பேய் ஆளை தூக்கி வர முடியுமா..இதுவரை அவள் வாழ்வில் பார்த்த பேய் படங்கள் எல்லாம் அவளது நினைவுக்கு வந்தது.. சாதாரண பேய் என்றால் தூக்கி வர முடியாது. ஒருவேளை அருந்ததி போல் கொடூர பேயாக இருந்தால்? ஆத்தி பசுபதி பேய் போல காமக் கொடூரனாக இருந்தால் என் நிலை என்ன ஆவது..இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது.என்று நினைத்தவள் வேகமாக இறங்கி சில அடி தூரம் நடந்தாள்.  நேற்றிரவு அவள் அணிந்திருந்த நைட்டி வலது கால் ஓரமாக ஐந்து அங்குலம் கிழிந்திருந்தது.

இவள் பஞ்சுமெத்தையில் காலை பப்பரப்பா என்று பரப்பி தூங்கியதின் விளைவாக கிழிசல் மெல்ல டெவலப் ஆகி இப்பொழுது அவளது முக்கால் தொடைக்கு மேல் கிழிந்திருந்தது.அவள் நடக்கும் போது என்னைப் பார் என் அழகைப் பார் என்று அவளது ரம்பா தொடை வெளியே தெரிந்தது..அவசரத்துக்கு குத்த ஒரு ஊக்கு கூட இல்லையே..  ஒரு கையால் மறைத்துக் கொண்டு மெல்ல அறைகதவை திறந்து பார்த்தாள்..யாரையும் காணவில்லை. இந்த வழியாக வெளியே சென்றால் அவளை யாராவது பார்க்கக் கூடும் எனவே அறையில் இருந்த பெரிய ஜன்னலின் வழி கீழே குதித்து அப்படியே ஓடி விட வேண்டும்.

அறைக் கதவை மூடி தாளிட்டு விட்டு வேகமாக ஜன்னலின் அருகே வந்தவள் அதனை சுலபமாக திறந்து அதன் வழியே வெளியே குதித்தாள். வெளியே ஒரே இருட்டு.. எப்படியும் அதிகாலை மணி மூன்றரை இருக்கும்.. மணி எத்தனையாக இருந்தால் நமக்கென்ன என்று பதுங்கிப் பதுங்கி நடந்தாள் குண்டலகேசி.. சற்று தொலைவில் வந்து தான் அந்த வீட்டைத் திரும்பிப் பார்த்தாள். அசல் அருந்ததி கோட்டையே தான்.

"ஆத்தி எம்மா பெரிய கோட்ட..நல்ல வேள கடத்தின  நாதாரி கீழ ரூம்ல அடைச்சு வெச்சிருந்தான்..இல்ல பல்லு பட்டாசு மாறி தெரிச்சிருக்கும்.. கேசி என்னடி செல்லம் யோசிக்குற.. இந்த ரம்பா தொடைய காட்டிக்கிட்டு எப்படி ஓடலாம்னா..உசுருக்கு முன்னாடி இந்த லெக் பீஸ்ல என்னடி இருக்கு.. ரம்பா தொட,ரோஜா வயிறு, நக்மா நெஞ்சு எது தெரிஞ்சாலும் ஓட்டத்த மட்டும் நிறுத்திராதடி என் சிங்கக்குட்டி..பேய் கடத்துணுச்சோ இல்ல பேப்பையன் எவனாச்சும் கடத்துனானோ நீ தப்பிச்சா சரி..இன்னும் என்ன நிக்குற ஓட்றி"என தனக்குத்தானே பேசியவாறு ஓட்டத்தை எடுத்திருந்தாள் குண்டலகேசி.நிலவொளி மட்டுமே அந்த இடத்தை சுற்றி ஆக்கிரமித்திருக்க இருட்டில் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தாள் குண்டலகேசி.

சுற்றிலும் தென்னை மரங்கள். தன் எங்கே ஓடுகிறோம் என்று இலக்கு தெரியாமலேயே ஓடிக்கொண்டிருந்தாள். ஓடி ஓடி ஓடி ஒரு கட்டத்தில் முடியாமல் மூச்சு வாங்கி ஒரு தென்னை மரத்தின் மீது சாய்ந்து நின்று விட்டாள்.

"பரவாயில்ல நான்ஸ் ஸ்டாப்பா இருவது நிமிஷம் ஓடிருக்க.. ஆனா என் கிட்ட இருந்து நீ தப்பிக்க இந்த ஓட்டம் எல்லாம் பத்தாது.." அந்த கடும் இருட்டில் திடீரென்று கேட்ட குரலின் பாதிப்பால் பீதி அடைந்தாள் குண்டலகேசி. சடாரென்று ஆங்காங்கே ஸ்பாட் லைட் ஒளிர தொடங்கியது. இப்பொழுது தான் அந்த இடத்தையே நன்றாக பார்த்தாள். சுற்றிலும் தென்னை மரங்கள்.

"நூறல்ல ஆயிரம் இல்ல.. ஆயிரம் ஏக்கர் தென்னை மர தோட்டம்.. இத தாண்டி போயிருவியா".. பார்வையை தென்னை மரத்திடமிருந்து பிடுங்கி அவன் மேல் செலுத்தினாள். அவனைப் பார்த்ததும் மிரண்டு போனாள். ஹாரிபாட்டரில் வரும் மூக்கு இல்லாத மொட்டை(voldemort) போல இவனின் கழுத்திலும் மஞ்சள் நிற மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது.மொட்டை கையில் கருப்பு நிற பாம்பு. இவனிடம் இருப்பதோ மஞ்சள் நிற பாம்பு அவ்வளவுதான் வித்தியாசம்.

அவள் விழி விரித்து இவனை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவளை நோக்கி அடி எடுத்து வைத்தான் ஏகலைவன்.  அவனைப் பார்த்து மிரண்டு போனாளோ இல்லையோ மலைப் பாம்பை பார்த்து அவளுக்கு மயக்கமே வந்து விட்டது. அய்யய்யோ என்று கத்திக்கொண்டே வந்த வழியே திரும்ப ஓடினாள் குண்டலகேசி. இப்பொழுது அவள் ஓட ஓட அவள் போகும் வழிக்கு ஸ்பாட்லைட் தானாக டக் டக் டக் என்று ஒளிர்ந்தது. விளக்குகள் வழிகாட்ட எங்கிருந்து வந்தாளோ மீண்டும் அதே  கோட்டைக்கு திரும்ப வந்து முதலில் அவளை அடைத்து வைத்திருந்த அறையின் ஜன்னல் தேடி ஓடினாள்.

நல்ல வேலை முதலில் வரும் போதே கோட்டையின் வெளிச்சத்தில் அந்த அறையை அடையாளம் கண்டு வைத்திருந்தாள். அவள் திறந்து போட்டிருந்த ஜன்னல் இன்னும் திறந்து கொண்டு தான் இருந்தது. ஒரே எகிராக அந்த ஜன்னலில் உள்ளே எகிறி குதித்து ஜன்னலை இழுத்து மூடிக்கொண்டு கட்டிலில் தாவி ஏறி அமர்ந்து கொண்டாள்.

பயத்தில் நெஞ்சம் நடுங்கியது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஏற்கனவே ரம்பா தொடையை வெளிச்சம் போட்டு காட்டிய நைட்டி இப்போது திறந்தவெளி கொள்கையோடு முற்றும் துறந்த முனிவராக காட்சி அளித்தது. அவசரமாக போர்வையை எடுத்து தன் மேல் போட்டாள்.  அவள் எதிர்பார்த்து காத்திருந்தது போல அடுத்த சில வினாடிகளில் அவள் அறைக் கதவு திறக்க முயற்சி செய்யப்பட்டது.  இவள்தான் உள்பக்கமாக பூட்டி இருந்தாளே.இப்பொழுது சாவியை போட்டு யாரோ அந்த அறை கதவை திறப்பது இவளுக்கு நன்றாக கேட்டது.

மலைப்பாம்புடன் உள்ளே வந்து விடுவானோ என்று அவள் பயத்தோடு பார்த்துக்கொண்டிருக்க நல்ல வேலை மலைப்பாம்பை விடுத்து அவன் மட்டுமே உள்ளே வந்திருந்தான். கைகளில் ஏதோ ட்ரேய் ஒன்றை ஏந்தி வந்திருந்தான். கொண்டு வந்த ட்ரேயை கட்டிலை ஒட்டிருந்த மேஜையில் வைத்துவிட்டு அவளுக்கு நேராக வந்து கைகட்டி நின்றான்.

"வெறுங்காலோட ஓடி வந்தியே ஏதாச்சும் கல்லு குத்திருக்கா"

"கல்லு குத்தல.. கட்டையில போற நீதான் என்ன கடத்திட்டு வந்துருக்க..தோ பாரு நான் ஒன்னும் அருந்ததி அனுஷ்கா இல்ல.. ஆயுதம் வெச்சு உன்ன கொல்ல. சாதாரண தமிழ் வாத்தி பொண்ணு.. போனது போகட்டும் ஒரு ஹாஃப்பும் கோழி பிரியாணியும் வாங்கி வெச்சு படையல் போடுறேன் தின்னுட்டு ஓடிரு.."

"நா என்ன பேயா"

"அப்றம்.. நீதான் மண்டைய போட்டுட்டேன்னு அந்த சூப்ரிண்ட் சூடம் அடிக்காத குறையா சத்தியம் பண்ணானே.. அப்போ அதெல்லாம் பொய்யா கோபால்"..

அவள் பேசுவதை கேட்டு எட்டிப்பார்த்த புன்னகையை அடக்கிக்கொண்டான் ஏகலைவன்."நான் சாகல..அதெல்லாம் செட்டப்.."

"அதெப்படி நான் தான் உன் டெத் சர்டுவிகேட் பாத்தேனே"

"நீங்க பாக்குற எதுவும் உண்மையும் இல்ல.. பாக்காத எதுவும் பொய்யும் இல்ல" அப்பொழுதும் அவள் சந்தேகமாக பார்க்க தன் பாக்கெட்டில் கை விட்டு சிறிய பேனா கத்தி ஒன்றை வெளியே எடுத்து பட்டென்று தன் மறு கையை கீறி கொண்டான்.அவன் அப்படி செய்ததின் விளைவால் ரத்தம் சொட்டியது. அய்யோ ரத்தம் என்று அவள் பதறாமல் அப்பாடி ரத்தம் வந்திருச்சு அப்ப இவன் பேய் இல்லை. இப்பொழுது சட்டமாக அவன் முன் அமர்ந்து கொண்டவள்

"நீ பெரிய பிஸ்துனு எனக்கு தெரியும்..தோ பாரும்மா இந்த உதார் வுட்டு பேஜார் காட்டாம ஒழுங்கா என்னிய ரிலீஸ் பண்ணு.. இப்ப எதுக்காண்டி என்னிய தூக்கினு வந்து வெச்சிருக்க நீயு.. நீ அடிச்சி கேட்டாலும் கடிச்சு கேட்டாலும் என் நைனா ஆவுடை கிட்ட அஞ்சு காசு கெடையாது. அண்டர்வேர் வேணும்னா இருக்கும். அதுலயும் பல ஓட்ட இருக்கும் இது பொது நல அறிவிப்பு.. சொம்மா என் கையில ரவுசு காட்டாம ஒழுங்கா ஒரு வண்டி வாகனத்த புடிச்சி என்ன அனுப்பி விடு.. நான் என் தாய் பிள்ள கூட்டத்தோடு சேந்துக்குறேன்.."பெண்கள் சிறைசாலையில் பேட்டி எடுக்க சொல்லும்போது அங்கே சென்னை பெண் கைதியான ஒரு பெண் பேசியது போலவே இவனிடம் பேசி காட்டினாள் குண்டலகேசி.

இது என்ன மாதிரி தருணம் வேறு பெண்ணாக இருந்திருந்தால் இந்நேரம் எப்படி நடந்து கொண்டிருப்பாள்?ஆனால் இவளோ என்ன இப்படி இருக்கிறாள்? முதன் முறையாக அவளுடைய மூளையின் மீது சந்தேகம் வந்தது ஏகலைவனுக்கு.. ஆனால் அந்த சந்தேகம் அவசியமற்றது. குண்டலகேசி இப்படிதான். உயிர் போகின்ற சூழ்நிலை வந்தாலும் கூட அதனை ஹியூமர்சென்ஸோடு கையாளுவாள் அவள்.

"ஒன்ன அனுப்பிச்சி விட்ற ஐடியாவோட இங்க தூக்கிட்டு வரல."

"பின்ன"

"நீ இனிமே என்ன விட்டுப் போகவே முடியாது.. நான் இருந்தாலும் செத்தாலும் உன் வாழ்க்கை என் கூட தான்.."..  அவன் இதுவரை பேசிக்கொண்டிருந்த மென்மையான குரலை விடுத்து தனது இயல்பான குரலில் இறுக்கமாக கூற அதுவரை ஒருவித அசால்டாக இருந்த குண்டலகேசிக்கு இப்பொழுது உண்மையாகவே பயம் வந்துவிட்டது. அவளின் பயம் ஆவுடையப்பன். இந்நேரம் தான் காணாமல் போன செய்தி அனைவருக்கும் பரவியிருக்கும். கல்யாணப் பெண் ஓடிவிட்டாள் என்று சுந்தர் வீட்டினர் என்ன ஆட்டம் போடுகிறார்களோ..  அக்காமார்களின் கணவன்கள் அனைவரும் ஓடுகாலி பெண்ணை பெற்றதால் ஆவுடையப்பனை என்ன பாடு படுத்துகிறார்களோ? அப்பா தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்?

மகள் ஓடிவிட்டாள் என்று தவறாக எண்ணியிருப்பாரோ? அவரின் உடல்நிலை இது எப்படி ஏற்றுக்கொள்ளும்? தந்தையை பற்றிய நினைப்பு வந்ததும் முதன்முறையாக அவன் முன் அழுதாள் குண்டலகேசி.

"தோ பாரு.. நீயே அரசாங்கத்தை ஏமாத்துற ஒரு அக்யூஸ்ட்.. ஒன்ன கட்டிக் கிட்டு நாளைக்கு ஜெயில் கம்பிக்கு அந்தாண்ட தான் நான் புள்ள பெக்கனும்.. எனக்கு என்ன தலையெழுத்தா.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா. உன்னோட முகர கட்டைக்கு நான் கேக்குதா? என்ன விட்ரு ப்ளீஸ்.. என் அப்பா ஆவுடை கெட்டுப் போன பாலாடை மாறி இந்நேரம் ஆயிருப்பாரு.. என்ன பாத்தா தான் அவருக்கு ஆவியே வரும்.."..

"ஹேய் இப்ப வரைக்கும் உன் அப்பனையும் அக்காங்க எல்லாரையும்  உயிரோட விட்டு வச்சுருக்கேன்.நீ ஒழுங்கா நான் சொல்றத கேட்டனா அவங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.. இல்லனா விபரீதம் வேற மாதிரி இருக்கும்..சாப்பாடு வெச்சிருக்கேன் சாப்பிட்டு தூங்கு".. என்றவன் அங்கே நில்லாமல் சென்றுவிட்டான்..

" அட கட்டைல போறவனே கடுப்பா இருக்கிற நேரத்துல கால பசியாற கேட்குதாடா உனக்கு.. நோ குண்டலகேசி நீ இதுக்கெல்லாம் மசியக் கூடாது..இந்த பன்னாட கிட்ட இருந்து தப்பிக்கனும்.. அதுக்கு மொத நீ மனச ஒரு நிலைப்படுத்து.. " பத்மாசனம்  போட்டுக்கொண்டு அமர்ந்தவள் இரு கண்களையும் மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு  தன் மனதை ஒருநிலைப் படுத்த முயற்சி செய்தாள்..

இத்துனுண்டு
முத்தத்தில இஷ்டம்
இருக்கா இல்ல இங்கிலிஷு
முத்தத்தில கஷ்டம் இருக்கா..

 பட்டென்று கண் திறந்தாள் குண்டலகேசி. "ஆத்தி இந்த சிட்டுவேஷன்ல வர பாட்டா இது.. ச்சீ.. விட்றாத கேசி.. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு"மீண்டும் கண்களை மூடினாள்.

குலுக்கி வெச்ச கோக்கோ கோலா
போல
சாயங்கால வேள
பொங்கி வந்தாளே ஓஓ

 மனதை ஒருநிலைப்படுத்தலாம் என்று பார்த்தால் தானாகவே மனதில் பாடல்கள் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்தது. என்ன கருமம்டா இது  என யோசித்தவள் பசி வயிற்றைக் கிள்ள பக்கத்தில் அவன் வைத்து சென்றிருந்த ட்ரெய்யை கையில் எடுத்தாள். ஒரு தட்டு இருந்தது. கூடவே இரண்டு குண்டு பாத்திரத்தில் எதையோ மூடி வைத்து எடுத்து வந்திருந்தான்.என்ன இருக்கிறது அந்த பாத்திரத்தில் என்று திறந்து பார்த்தாள்.ஒன்றில் பத்து இட்டிலிகளும் இன்னொன்றில் சுட சுட சாம்பாரும் இருந்தது..

"பத்து இட்டிலி வச்சிருக்கான் அவன மாதிரி நான் பேய் தீனி தின்னுவேன்னு நினைச்சானோ"அடுத்த இருபது நிமிடத்தில் அந்த பத்து இட்டிலிகளை உண்டு முடித்திருந்தால் குண்டலகேசி.. உண்டு முடித்த தெம்போடு எவ்வளவு யோசித்தாலும் அவளால் வேறு வழி கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் மனதை ஒருநிலைப்படுத்தலாமென்று விஷப் பரிட்சையில் ஈடுபட அப்படியே உறங்கி விட்டாள்.

அடுத்து அவள் கண் திறக்கும் போது சூரியன் உச்சிக்கு வந்திருந்தது. எழுந்து சென்று அறையோடு ஒட்டியிருந்த குளியலறையில் முகம் கழுவியவள் இப்பொழுது அந்த அறையை சுற்றி பார்த்தாள். அவளின் வீட்டை மூன்றாக சேர்த்தால் இந்த அறை. குண்டலகேசி என்னதான் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அவள் ஒன்றும் முட்டாளில்லை. அன்று சிறைச்சாலையில் ஏகலைவன் பேசிய பேச்சில் இருந்த உறுதி அவளை நிலைகுலைய வைத்திருந்தது. அதனால் தான் பலமுறை சிறைச்சாலைக்குச் சென்று அவன் இறந்து விடுவானா என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.  அவன் இறந்த இறப்பு சான்றிதழை பார்த்த பிறகுதான் அவள் முழுதாக நம்பினாள்.

ஆனால் இப்பொழுது அதுவே பொய்யாக போய்விட தன் நிலைமை அவளுக்கு வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. இவன் ஒரு மிருகம் இவனிடம் இருந்து தப்பிப்பது அவ்வளவு சுலபமில்லை. இந்நேரம் அவள் தந்தையும் குடும்பமும் என்ன பாடுபடுகிறார்கள் என்று தெரியவில்லை. வீணாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்து  நிலமையை இன்னும் மோசமாக்காமல் இங்கிருந்து தப்பித்துச் செல்ல வேண்டும்.  ஒரு முடிவுக்கு வந்தவளாக துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு அறையைத் திறந்து வெளியே சென்றாள்.

 நேற்று இரவு வெளியே பார்த்தே அசந்து போனவள் இப்பொழுது கோட்டையினுள் தோற்றத்தைப் பார்த்து வியந்து நின்றாள்.  அப்படியே நடந்து ஒவ்வொரு பொருளாக அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே"உன் டிரஸ் எல்லாம் உன்னோட ரூம்ல கப்போர்ட்ல இருக்கும்"என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தாள். வெளிச்சத்தில் நன்றாக தெரிந்தது அவன் முகம்.தாடி மீசையை ட்ரிம் செய்து தலைமுடியை கரைத்து வெட்டி இருந்தான்..

"ரவுடி கருப்பா தான இருப்பான்.. இவன் என்ன தமன்னா கலர்ல இருக்கான்.."தனக்குள் எண்ணிக் கொண்டாள் குண்டலகேசி.. அவன் அவளை கேள்வியாக பார்க்க

"ம்க்கும் அதாவது மிரு சார்"

"என்ன மிரு சாரா"

"ஆமா ஒரு பொண்ண தூங்கிட்டு இருக்கும்போது தூக்கிட்டு வந்துட்டு அவள அடைச்சு வெச்சு பிளாக்மெயில் பண்றது எல்லாம் ஒரு மனுஷன் செய்ற வேலையா.. நீங்க என்னதான் ஒரு மனுஷன் மாதிரி இருந்தாலும் உங்க மூஞ்சில ஒரு மிருகத்தோதோடு சாயல் தெரியுது.. அது எப்படி ஒரு மட்டு மரியாத இல்லாம உங்கள மிருகம்னு கூப்பிட முடியும்.. அதான் சுருக்கி மிரு சார்னு கூப்பிடுறேன்.."அவன் எந்தவித உணர்ச்சியையும் வெளியே காட்டவில்லை.

 அவள் தொடர்ந்து பேசினாள்"மிரு சார்.. உங்களுக்கு என்ன நான் உங்கள கல்யாணம் பண்ணிக்கணும் அதானே.. சரி கல்யாணம் பண்ணிக்கிறேன் எனக்கு ஒரு மாசம் டைம் கொடுங்க.. நான் யோசிக்கணும்.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து பழகணும்"

" இன்னும் ஒரு மணி நேரத்துல நமக்கு கல்யாணம்"

 "ஐயோ மிரு சார் ஒரு ரெண்டு வாரமாச்சும் டைம் கொடுங்க"

"நாளைக்கு கல்யாணம்"

"ஒரு வாரம் மிரு சார்.. ப்ளீஸ் மீ பாவம்.."

"ஒரு வாரம்.. ம்ம்ம்.. போயி குளிச்சிட்டு வா.."என்றவன் அங்கிருந்து சென்றுவிட்டான்.  சூழ்நிலைக் கைதியாக மாட்டிக்கொண்ட குண்டலகேசி அவன் பேச்சைக் கேட்ட படி குளிக்கச் சென்றாள்.

தொடரும்.

Comments

  1. Nalruku stry padika padika Jolya interestng ah pothu bab nxt epi sekram podu apdiye antha chitu Sri stry potalum hpy tha

    ReplyDelete
  2. Kesi un thairiyame thairiyam... Sema po...

    ReplyDelete
  3. Vera level 🔥😍😍 super ah poguthu story miru sir 😂😂😍😍super name....eagerly waiting for next

    ReplyDelete
  4. ஏழு பெண்களை பெற்றும் அவர்களை சுமையாக எண்ணாமல் அவர்களுக்கு தன் எண்ணத்திற்கு ஏற்ப தமிழ் பெயர் வைத்தது அருமை.பெற்ற ஏழு பெண்களுக்கும் தன்னால் இயன்றவரை செய்து அவர்களை கரை சேர்த்துவிட்டார் இந்த தமிழாசிரியர்.என்ன ஒரு மருமகன்கூட உருப்படியா இல்லை.இந்த கேசி பொண்ணு என்ன ரொம்ப பயந்த புள்ளை மாதிரி இருக்கு.ஏம்மா பேட்டி எடுக்க ஐடியா குடுத்துட்டு இப்படி நீயே மாட்டிகிட்டியே.டேய் ஏகலைவா உன்னோட ஒத்த வார்த்தைக்கு இம்புட்டு பேரும் பயப்படுறாங்க.நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கராடா.டேய் அவளை இப்பதான் முதல்ல பாக்குற அதுக்குள்ள அவகிட்ட இப்புடடி டயலாக் பேசுறியே பாரு புள்ளை பயந்துட்டா. மந்திரிச்சாதான் சரியாவா போல.ஏம்மா அவன் செத்துட்டான்னு தெரிஞ்சிக்க வந்து பாத்தியே அவனோட பிணத்தை பாத்தியா.வெறும் பேப்பரை மட்டும் வச்சி எப்புடி நம்புன.இந்த சுந்தர் வேற உன்றை லவ்வா பாத்துட்டு சுத்துறான்.டேய் அந்த அரக்கன்கிட்ட நீ சிக்குன அம்புட்டுதான்.அடேய் எதுக்குடா இப்ப அவளை கடத்துன.ஏம்மா தப்பிச்சி ஓடி திரும்ப வந்து மாட்டிக்கிட்டியே.டேய் இந்த கேசி புள்ள மேல இம்புட்டு லவ்வா.படிச்சிருக்கியே கொஞ்சமாவது யோசிம்மா. பேதையிவளின் மனதில் என்ன உள்து என்று அறியாமல் ஆடவன் எடுக்கும் முடிவு அவனுக்கு வரமாகுமா இல்லை சாபமாகுமா. பெண்ணவளின் மனதை வெல்லாமல் அவளை மணம்புரிவது எந்த விதத்தில் நியாயம்.ஆடவனின் இந்த கட்டாய திருமணம் பெண்ணவளின் மனதில் பூகம்பத்தை ஏற்படுத்த போகின்றது.காலத்தின் கையில் அடுத்த என்ன பார்ப்போம்.👍🏻👌👌👌🏼🤝👏👌👏👌🏼👌🏼👏👌👏👌👏💖👏💜💜👏👌👏👌ஏம்மா யோக பண்ண உக்காந்துட்டு இப்படி பாட்டு நினைக்குறியே. ரணகளத்துலயும் ஒரு கிலுகிலுப்பு உனக்கு.👍🏻👌🏼🤝👏👌👌🏼👍🏻👌🏼👌👏👌🏼👏

    ReplyDelete
  5. Interesting sis nice ud ipdi nalla mattikitiye kundamma

    ReplyDelete
  6. அடேய் அந்த புள்ளைக்கு கொஞ்சம் டைம் குடுடா 😂😂😂😂👌👌👌👌👌👌

    ReplyDelete
  7. Semma epi akka..athuvum kesi da dialogue delivery ellam vera level🤣🤣😍😍😍😍👌👌👌

    ReplyDelete
  8. Haiyyoo Aegaa.. iva unna rmbaaaa damage panra da..🤣🤣 but ivloooo.. porumaisaliya neeyu athan knjm idikuthu..🧐🧐

    ReplyDelete
  9. Super arumai Yasuda Ivan pavam kesi enna sonnalum kekka patturan Ivana samalikka oru Thani mula venu kesi unakku

    ReplyDelete
  10. Semma super. Eagerly waiting for her marriage 😁

    ReplyDelete
  11. Super 👌👌👌👌 sister 🤣🤣🤣🤣

    ReplyDelete
  12. Story padikka padikka sema jolly ya pogudhu sisy seekirama next ud podunga plsss....

    ReplyDelete
  13. வேற லெவல் 🤩

    ReplyDelete
  14. செம்ம செம்ம 🤩

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்