பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 27 இறுதி பாகம்


நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி

ராஜ் மித்ரன் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தான். காரில் வந்து கொண்டிருக்கும் போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் ஏதோ ஒரு கோளாறினால் திடீரென்று பிரேக்கடிக்க அதை கவனித்த ராஜ் அவனும் சற்றென்று பிரேக் வைத்தான். ஆனால் அவன் பின்னால் வந்து கொண்டிருந்த காரோ சாலை கட்டுப்பாட்டை மீறி அளவுக்கு அதிகமான வேகத்தில் வந்து பிரேக் வைக்க அப்பொழுதும் முடியாமல் ராஜ் காரின் பின் பக்கத்தை அடிக்க அவன் வண்டி முன்னால் இருந்த காரின் பின்பக்கத்தில் மோதியது.

மற்ற இரு வாகனத்தின் ஓட்டுநர்களுக்கும் அந்த அளவுக்கு காயங்கள் இல்லை. ஆனால் நடுவில் சிக்கிக் கொண்ட ராஜ் ரத்தவெள்ளத்தில் மீட்டெடுக்கப்பட்டான். ஆம்புலன்ஸ் வரவழைத்து சாலையில் சென்று கொண்டிருந்த இதர வாகன ஓட்டிகள் அவனை மருத்துவமனையில் சேர்ப்பிக்க உதவி செய்தார்கள்.  டிராபிக் போலீஸ் அவன் கைபேசியில் இருந்த எண்களை வைத்து முதலில் ரிஷிக்கு அழைத்து ராஜ் விபத்துக்குள்ளான விஷயத்தைக் கூறினார் அவனை தூக்கி சென்ற மருத்துவமனை பெயரையும் கூறினார்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு ரிஷி போட்டதை போட்டபடி கடையை விட்டு வேகமாக ஓடியவன் நேராக ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு சென்றான்.ராஜ் அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டிருக்க அறையின் முன்னால் சோர்ந்து போய் நின்று கொண்டிருந்தான் ரிஷி.  தன் நண்பன் வாழ்வில் மட்டும் ஏன் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கிறது?  ஒரு மனிதன் சந்தோஷமாகவே இருக்க கூடாதா?  அப்படி அவன் வாழ்க்கையில் ஓரிரண்டு சந்தோஷமான விஷயங்கள் வரிசையாக நடந்தால் ஏன் இந்த கடவுளுக்கு பொறுக்க முடியவில்லை?

 டீன் ஏஜ் பருவத்தில் இருந்து குடும்பத்திற்காக உழைப்பவன் ராஜ் மித்ரன். வேறு ஒரு பிள்ளைகளாக இருந்திருந்தால் அப்பா விட்டு சென்ற கொஞ்ச நஞ்ச சொத்தையும் விற்று ஊரை சுற்றி குடித்து அழித்திருப்பார்கள். ஆனால் ராஜ் அப்பா விட்டு சென்ற கடனை தானே ஏற்று கடையை திறம்பட நடத்தி மாடாக உழைத்து குடும்பத்தை கரை சேர்த்து விட்டான் கடனையும் அடைத்து விட்டான்..ஒரு கடையை இப்பொழுது மூன்றாக மாற்றி உள்ளான்.

அவன் வாழ்வில் அவன் ஆசைப்பட்ட ஒரே விஷயம் வெண்ணிலா.அந்தப் பெண்ணிடம் என்ன கண்டானோ அவள் புகைப்படத்தை கைபேசியில் பார்த்ததில் இருந்து அவன் முகத்தில் குடி கொண்ட அந்தக் கலையை என்னவென்று சொல்வது? ரிஷி கூட எத்தனையோ முறை கேட்டிருக்கிறான்.." அப்படி அந்த பொண்ணுகிட்ட என்ன தான்டா இருக்கு.."

"என்ன இல்ல சொல்லு.."

"மச்சான்.. அழகு முக்கியம் இல்ல மனசு தான் முக்கியம்னு இப்ப சொல்ல வசதியா இருக்கும். ஆனா நாள பின்ன அதுவே ஒரு பிரச்சனயா வரக் கூடாது. ஏன் நீயே எங்கயாச்சும் ஒரு இடத்துல அந்த பொண்ண விட்டு கொடுக்குற மாறி பேசிட்டா பாவம்டா அந்த பொண்ணு.. அவளால எப்டி தாங்க முடியும்.."

"அவளுக்கு இருக்குற ஸ்கின் ப்ரோப்லேம் பத்தி பேசுறேன்னு நெனைக்குறேன். மச்சான் அது சாதாரண ஸ்கின் ப்ரோப்லேம். இன்னைக்கு எனக்கும் உனக்கும் கூட வரலாம். உடனே நம்மள குஷ்டரோகிகன்னு சொல்லி ஓரங்கட்டிருவாங்களா..இல்ல நீ லவ் பண்றியே மிருதுளா அவளுக்கு இந்த பிரச்சனை வந்தா கொண்டு போயி சிக்னல்ல விட்டுட்டு இதான் உனக்கு சரியான இடம்னு சொல்லிட்டு வந்துருவியா"

"டேய் என்னிய என்ன சதைக்கு அலையரவன்னு சொல்றியா. அவளுக்கு என்ன பிரச்சனை வந்தாலும் கடைசி வர அவ கூடவே நின்னு அவள அதுல இருந்து மீட்க தான்டா பாப்பேன். பாதியா விட்டு வர பழக்கம் எனக்கு இல்ல"ரோசமாக பேசினான் ரிஷி.

"எனக்கும் அதே தான் மச்சான்.எனக்கு அவள பாத்ததும் ஏன் புடிச்சது தெரியுமா.. அவ யூனிக் மச்சான். பாரேன் நம்மள மாறி இல்ல அவ. டபுள் ஷேடோவ்ல எவ்ளோ அழகா இருக்கா. அவ நம்மள மாறி நார்மல்லா இருந்துருந்தா திரும்பி கூட பாத்துருக்க மாட்டேன்.பொண்ணு பாக்கும் போது என்ன அச்சு பாத்தா பாரு மச்சான் அப்டியே என்னால ரியாலாய்ஸ் பண்ண முடிஞ்சதுடா.. என் ஹார்ட்டு அப்டியே வழுக்கி தொபுகட்டீர்னு அவ காலடியில விழுந்துருச்சு.அவ என் உசுருக்குள்ள வந்து கலந்த பீல்.. அவ என் ஆளு மச்சான்.." இதனை கூறும் போது அவன் முகத்தில் அவள் மேல் வைத்திருக்கும் சொல்லிலடங்கா காதல் வெளிப்படும்.

அவசரப் பிரிவில் இருந்து மருத்துவர் வெளியே வந்தார்.ரிஷி அவரிடம் ஓடினான்."டாக்டர் என் ஃப்ரெண்டுக்கு இப்ப எப்படி இருக்கு..  உயிருக்கு ஒன்னும்"

"தேங்க் காட்.. பேஷன்ட் உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்ல. ஆனா அவரோட முகம் பூராவும் கண்ணாடி குத்தி கிழிஞ்சு போச்சு.தையல் போட்டுருக்கோம்.கை கால்ல எல்லாம் நல்ல அடி.. மத்தபடி ஒன்னும் இல்ல. அவருக்கு இன்னும் கான்சியஸ் வரல. நர்ஸ் வந்து சொல்லுவாங்க அப்ப நீங்க உள்ள போய் பார்க்கலாம்.."

போன உயிர் திரும்பி வந்தது போல உணர்ந்தான் ரிஷி. மருத்துவர் கையைப் பிடித்து" ரொம்ப நன்றி டாக்டர்"இதைக் கூறும்போது அவனுக்கு கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.அவன் தோளைத் தொட்டு இரண்டு தட்டு தட்டி விட்டு சென்றார் மருத்துவர். நண்பனைக் கூட பார்க்கவில்லை ரிஷி வேகமாக வெண்ணிலாவிற்கு அழைத்து ராஜிற்கு விபத்து இந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன் என கூறிய கையோடு அவனுக்கு ஒன்றும் இல்லையென கூறுவதற்குள் லைன் கட்டாகி விட்டது. மீண்டும் மீண்டும் முயற்சித்தான். என்ன இழவோ நெட்ஒர்க் பிரச்சனையோ ஏதோ ஒன்று சதி செய்ய இந்த அரைகுறை தகவலால் உருக்குலைந்து போனாள் வெண்ணிலா.

தாமரை தான் தினமும் தன் வீட்டில் வேலைகளை செய்து முடித்துவிட்டு மகளுக்கு ஏதாவது ஆக்கி எடுத்துக் கொண்டு காலையிலேயே இங்கே வந்து விடுவார்.  அவர் சில வேளைகளில் வர முடியாத சமயத்தில் ராஜ் கடையை விட்டு விட்டு வீட்டில் இருப்பான்.இன்று இது விதி என்று தான் சொல்ல வேண்டும்.ராஜ் கடையில் இருக்கவேண்டிய அவசியம்.

தாமரையும் இன்று காலையில் வீட்டிலிருந்து கிளம்பும் போது தவறுதலாக கால் வழுக்கி விழுந்து விட்டார்.பெரிதாக அடி ஒன்றும் இல்லைதான் ஆனால் கால் சுளுக்கிக் கொண்டது.ராஜிற்கு அழைத்து இன்று தான் வர முடியாது என்பதை அவர் கூறவும் தான் அவன் கடையை ரிஷியை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வரும் போது இந்த விபத்து நடந்து விட்டது. வெண்ணிலா  ஒரு தைரியசாலியான பெண். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அடித்துக்கொண்டு அழுந்து மூலையில் உட்காரவில்லை.

தன் தந்தைக்கு அழைத்து பார்த்தாள் அழைப்பு செல்லவில்லை.குமுதாவை கூப்பிடலாமா என்று யோசித்தாள். பாவம் அபியை வைத்துக்கொண்டு ஏன் அலைய வேண்டும் என எண்ணி தன்னுடைய பர்சை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தவளுக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் வழியும் கண்ணீரை சுண்டி எரிந்து விட்டு புறப்பட்டாள்.

காலையிலிருந்தே அவளுக்கு வலி ஆரம்பித்திருந்தது. வலி இன்னும் அதிகமாவதற்குள் ராஜ் வந்து விடுவான் என்று நினைத்திருந்தாள். ஆனால் நடந்தது வேறு.ஹாலுக்கு வந்தவளுக்கு படபடப்பாக இருந்தது. சற்று நேரம் அப்படியே நாற்காலியில் அமர்ந்துவிட்டாள். மூச்சு பலமாக வாங்கியது. ஏன் இப்படி எதனால் என்று சிந்திக்க அவள் மூளை செயல் படவில்லை. ராஜ் காலையில் அவள் நெற்றியில் முத்தமிட்டு வயிற்றுப் பிள்ளையை தொட்டு இன்னும் இரண்டு மூன்று நாட்களில் குழந்தை தன் கையில் இருக்கும் என எவ்வளவு சந்தோஷமாக கூறினான்.

 அந்த கண்களில் தான் எத்தனை கனவுகள். அத்தனையும் நொடிப்பொழுதில் நெருங்கி விடுமா. நான் என்ன ஆசைப்பட்டா இந்த நோயை பரிசாக வாங்கிக் கொண்டேன்.இம்மாதிரி சரும பிரச்சனை இருக்கும் பெண்கள் அனைவரும் மனிதப் பிறவிகளே கிடையாதா.. அவர்களும் சாதாரண மனிதப் பிறவிகள்தான் அவர்களுக்கும் மற்றவர்களை போல ஆசாபாசம் அனைத்தும் இருக்கும் தான். இதை ஏன் மற்றவர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

புரிந்து கொள்ள முடியாமல் இல்லை அவர்கள் புரிந்து கொண்டதால்தான் இம்மாதிரி உள்ளவர்களை வேதனைப் படுத்துகிறார்கள்.தான் இவ்வளவு அழகாக இருக்கிறோம் தனக்கு கிடைக்காத வாழ்க்கை தன் வசீகரத்திற்கு கிடைக்காத ஒரு நிம்மதி இம்மாதிரி அழகில்லாமல் காட்சியளிக்கும் இவர்களுக்கு கிடைக்கிறதே என்ற வயிற்று எரிச்சல். அழகும் வனப்பும் மட்டும் தான் வாழ்க்கை என்று எண்ணும் இம்மாதிரி மானிடப்பிறவிகளுக்கு மெய்யான அன்பே ஒரு சிறந்த வாழ்க்கையின் அடித்தளம் என்பது புரியாமல் போய்விட்டதை யார் தப்பு என்று சொல்வது.

 பிரியாவில் ஆரம்பித்து கங்கா வரை அவள் வாழ்வில் கட்டம் கட்டி விளையாடுவது அனைத்தும் பெண்களே.  எல்லாம் எதற்காக அவர்கள் பார்த்தது எல்லாம் வெண்ணிலாவும் நம்மைப்போல் ஒரு பெண் என்று இல்லாமல் அவள் தொத்து வியாதிக்காரி என அவர்கள் பார்த்த கண்ணோட்டமே அனைத்திற்கும் காரணமாகிப் போனது.ஒவ்வொரு முறையும் எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தாள். திருமணத்திற்கு முன் நடந்த பிரச்சனைகள் அனைத்தையும் கடந்து வந்தவளால் திருமணத்திற்குப் பின் வந்த பிரச்சனைகளில் முழுதாக மனதை அடக்க முடியவில்லை.அப்பொழுது எல்லாம் அவளுக்கு தூணாக நின்று அவளின் ஒவ்வொரு பிரச்சனைகளையும் கடக்க எவ்வளவு உதவி செய்தான் ராஜ்.

எல்லாமே இப்பொழுது வீணாகி விடுமோ.. என் குழந்தை பிறக்கும்போது என்னவனை காணாமல் போய்விடுமோ. ராஜ் மாதிரி ஒரு நல்லவனின் கைகளில் தவழாமல் என் குழந்தை வாழ்க்கை தொடங்கிவிடுமோ..இப்படிப் பல பயங்கள் வெண்ணிலாவை போட்டு ஆட்டின. உட்கார்ந்து யோசிக்க நேரமில்லை ஆண்டவரே என் ராஜை காப்பாற்றுங்க.. உயிர் வேண்டுமானால் என் உயிரை எடுத்து கொள்ளுங்கள். தயவு செய்து என்னவனை பிழைக்க வையுங்கள்.. தன் பிரியமான ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டவள் நாற்காலியிலிருந்து எழுந்தாள்.

மீண்டும் அதே வலி.. இப்பொழுது வலி குறையாமல் அதிகமாக வலிக்க மூச்சு விடவே சிரமப்பட்டாள் வெண்ணிலா. இப்படியே விட்டால் சரியாகாது என தானே தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு ரிஷி கூறிய மருத்துவமனைக்கு சென்றாள்.பிள்ளை வலி இடுப்பை வயிறை சுற்றி வலித்தது. அந்த ட்ராபிக்கில் பல்லைக் கடித்து கொண்டு வண்டி ஓட்டி எப்படியோ மருத்துவனைக்கு வந்து விட்டாள். ரிஷி அவளுக்காக லாபியில் காத்திருந்தான். அவள் ஸ்கூட்டியில் வந்து இறங்க பதறி விட்டான்.

"என்னம்மா நீ வண்டி ஒட்டிட்டு வர.."

"அண்ணா அவருக்கு எப்டி இருக்கு"

"அவன் நல்லா இருக்கான் ம்மா.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. இன்னும் கான்சியஸ் வரல.. ஆமா ஏன் இப்டி இருக்க.. என்னம்மா வேர்த்து ஊத்துது.. என்ன பண்ணுது"வெண்ணிலாவால் நிற்க முடியவில்லை. இருந்தாலும்

"அண்ணா அவர பாக்கணும் ப்ளீஸ்"அவள் மூச்சு விடவும் சிரமப்பட்டு பேச  அதற்குமேல் என்னமோ ஏதோ என்று பயந்த ரிஷி அவளை உடனே ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த அவசரப் பிரிவு அறைக்கு அழைத்துச் சென்றான். உள்ளே சென்று தன்னவனை பார்த்த நிலாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அவனின் அழகான முகம் முழுவதும் கண்ணாடி துண்டுகளால் கிழிக்கப்பட்டு தையல் போட்டு  அதன்மேல் பஞ்சு வைத்து பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இரண்டு புருவங்களும் மிகவும் அடர்த்தியாக  அழகாக இருக்கும் அவனுக்கு. அதில் ஒன்றில் இப்பொழுது கண்ணாடி கிழிக்கப்பட்டு ஒரு புருவம் இருந்த இடமே தெரியவில்லை.

 கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்க பார்க்கவே பரிதாபமான நிலையில் கிடந்தான் ராஜ் மித்ரன். நிலா அழுகையோடு அவன் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு "ராஜ்" என மெல்ல அழைத்தாள்..

அவன் எழவில்லை.மீண்டும் மீண்டும் அழைத்தாள்.இப்பொழுது மெல்ல கண் திறந்து பார்த்தான். அங்கே அவனைப் பார்த்து அழுது கொண்டே நின்று கொண்டிருந்தாள் நிலா. அவன் கண்களைத் திறந்ததும் இதழும் கண்களும் ஒருங்கே சிரித்தது அவளுக்கு."பாப்பா" என சன்னமாக அழைத்தான் அவளை.

"பயந்துட்டேன்.. உனக்கு என்னமோன்னு...ஆஆ.. ம்ம்" நிலா அவன் கையைப் பிடித்து அழுத்திய அழுத்தத்தில் ராஜ் புரிந்து கொண்டான் எதுவோ சரியில்லை என.

"ஹேய் என்னடா என்னாச்சு" ராஜ் பதர நிலா இடுப்பை பிடித்துக்கொண்டு அவன் கட்டிலில் விரிப்பை பிடித்து வலியைப் பொறுத்துக் கொள்ள முயல அந்த இடத்திலேயே பனிக்குடம் உடைந்து விட்டது. மெரூன் வர்ண ப்ரெக்னன்ட்  கவுன் அணிந்திருந்ததின் பலன் பனிக்குடம் உடைந்த ஈரம் அப்பட்டமாக வெளியே தெரிந்தது. அப்படியே ராஜ் படுக்கையில் அமர்ந்து விட்டாள்.  ராஜ் தன் அருகே இருந்த பட்டனை அழுத்தினான்..  மெல்ல எழுந்து அமர்ந்தவன் அவள் கையைப் பிடித்து "ஒன்னும் இல்லடா பயப்படாதே ஒன்னும் இல்ல.."தாதி ஒருவர் உள்ளே வர நிலாவின் நிலைமையைக் கண்டு உடனே மருத்துவரை அழைக்கச் சென்றார்.

 அந்தத் தாதி மருத்துவர் வாட் பாய் ஒரு ஸ்ட்ரக்சர் சகிதம் உள்ளே வர நிலாவை அதில் படுக்க வைத்து அவசரமாக பிரசவ அறைக்கு அழைத்துச் சென்றார்கள். வெளியே நின்றிருந்த ரிஷி இதனை பார்த்து உள்ளே வந்தான். அவன் உதவியோடு வீல்சேரில் அமர்ந்து நிலா அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வெளியே பிரார்த்தனையோடு அமர்ந்திருந்தான் ராஜ்.  இந்த கூத்துகள் நடந்துகொண்டிருக்க அதற்குள் நெட்வொர்க் ப்ராப்ளம் சரியாகி விட்டது. ரிஷி மாறனுக்கு அழைத்து இங்கே நடந்த அனைத்தையும் கூற கால் சுளுக்கை கூட பின்னால் தள்ளிவிட்டு தன் கணவரோடு மருத்துவமனைக்கு ஓடி வந்துவிட்டார் தாமரை.

 ஒரு பக்கம் மருமகன் இருந்த நிலையைக் கண்டு வேதனை அடைந்த இருவரும் மகளின் நிலை என்ன ஆகுமோ என்று பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தனர். விக்ரம் கமலாவிடம் தகவல் சொல்ல சென்றிருந்தான். திரும்பி வரும்போது அவன் மட்டும் தனியாக வருவான் என்று எதிர் பார்த்திருக்க அவனோ கமலாவோட மருத்துவமனைக்கு வந்தான்.தன் மகன் விபத்துக்குள்ளான செய்தி கமலாவை உலுக்கிவிட்டது. வேகமாக வந்தவர்  ராஜை கட்டியணைத்து கதறி விட்டார். அவர் அழுத அழுகையை பார்த்து  ராஜ் தான் அவரைத் தேற்றும்படி ஆயிற்று.

 அதோ இதோ என்று அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ராஜ் மித்ரன் வெண்ணிலா இருவரின் குமாரத்தி பிறந்தாள். குழந்தையை முதலில் ராஜ் தான் சென்று பார்த்தான். என்னவென்று சொல்வது குழந்தை அவ்வளவு அழகாக இருந்தாள்.  ஜாடையில் வேண்டுமென்றால் அவள் அம்மாவை உரித்து வைத்து இருக்கலாம். ஆனால் அந்த அடர்ந்த புருவங்களும் இடுக்கிய கண்களும் அசல் ராஜ் தான்.

 அதன் பிறகு ஒவ்வொருவராக வந்து குழந்தையை பார்க்க இறுதியாக வந்தார் கமலா. நிலா அவரை பார்த்துக் கொண்டிருக்க குழந்தையை கையில் தூக்கிய கமலா எவ்வளவு முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கதறி விட்டார்.. எந்த மருமகளை அவளின் சரும குறைபாட்டை ஒரு சாபமாக எண்ணி துச்சமாக மதித்த அந்த மருமகளின் குழந்தை தங்க விக்கிரகமாக ஜொலித்தது. அழகுக்கே பேர்போன கங்காவின் குழந்தை பர்த் மார்க்கோடு பிறந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது  யாருக்கு எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். நாம் செய்யும் கர்மவினைகளே பிற்காலத்தில் நமக்கு அதன் பலனை திரும்பக் கொடுக்கிறது. வெண்ணிலா அனைவருக்கும் நல்லதே நினைத்தாள் அவளுக்கு நல்லதே நடந்தது. கங்கா அனைவருக்கும் கெட்டது நினைத்தாள் அந்த கேட்டது அவள் குழந்தையை பாதித்து விட்டது.

 குழந்தையின் நெற்றியில் முத்தமிட்ட கமலா"என் ராசாத்தி.. இந்த பாட்டிய பாருடி தங்கம்.. என்ன மன்னிச்சிடுடா கண்ணு.. நீ உன் அம்மா வயித்துலயே கரைஞ்சு போய்டணும்னு எப்டிலாம் சாபம் விட்டேன்.. பாவிடி நானு.. தங்கம் எது தகரம் எதுன்னு புரிஞ்சிக்க தெரியாத பாவி.."நிலா பக்கம் திரும்பிய கமலா

"என்ன மன்னிச்சிரும்மா.. உன் மூஞ்சில முளிக்கக் கூட எனக்கு தகுதி இல்ல.வயசுல சின்னவளா இருந்தாலும் மனசுல நீ பெரியவ. என் என் பையன் எப்பவும் எங்கிட்ட சொல்லுவான்.. நீங்க எதிர்பார்க்கிற அழகு வேணும்னா என் நிலா கிட்ட இல்லாமலிருக்கலாம்.. ஆனா உங்க அழக விட  ஆயிரம் மடங்கு அவ மனசு அழகுனு சொல்லுவான்.. அது எவ்ளோ உண்மனு இப்போ எனக்கு புரியுது..வேற என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலம்மா.. என்ன மன்னிச்சிருடா.." கமலாவின் கண்ணீர் வெண்ணிலாவுக்கு வேதனையை அளித்தது.

"என்னத்த நீங்க.. பெரிய வார்த்தயெல்லாம் பேசிட்டு விடுங்க எல்லாம் சரியாச்சு.. இனிமே யாரும் பழச பத்தி பேசாம சந்தோசமா இருக்கலாம்.."பெரிதாக எதையும் பேசாமல் சுருக்கமாக நடந்ததை மறந்து விட்டாள் வெண்ணிலா.

மறுநாளே டிஸ்சார்ஜ் ஆகி தாய் வீட்டிற்கு சென்று விட்டாள் வெண்ணிலா.  இம்முறை ராஜ் தடுக்கவில்லை.தடுப்பது அவனுக்கே சங்கடமாக இருந்தது.ஆயிரம் இருந்தாலும் வெண்ணிலா தாமரையின் மகள்.பெற்ற மகளை சீராட்ட அவருக்கும் ஆசை இருக்காதா.மருமகன் அனுமதித்ததே போதும் என மகளைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்கள் தாமரையும் மாறனும். கமலா மகனை கவனிக்க அவன் வீட்டிற்கே வந்துவிட்டார்.

 அம்மாவின் மனமாற்றமும் அவரின் அன்பான கவனிப்பும் மூன்றே நாட்களில் உடல் தேறி விட்டான். குழந்தை பிறந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட குணா கங்கா இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி.  இப்பொழுது ஆபீஸில் வேலை அதிகமாக இருப்பதால் குழந்தைக்கு பெயர் சூட்டும் போது கண்டிப்பாக வருவதாக கூறினார்கள்.தினமும் மாமியார் வீட்டிற்கு சென்று தன் மனைவி மகளை பார்த்து விட்டு வருவான் ராஜ்.  கமலா தான் இருந்த பெரிய வீட்டிற்குச் செல்ல விருப்பமின்றி அந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு ராஜ் வீட்டிற்கே வந்துவிட்டார்.

அந்த வீட்டில் வேலை பார்த்த வேலையாட்கள் இப்பொழுது இந்த வீட்டில் வேலை செய்கிறார்கள்.தாமரையும் மாறனும் பேத்தியை கொஞ்சுவதிலேயே நேரத்தை செலவிட்டார்கள் . விக்ரம் அக்கா மகளை கீழே இறக்கவே மாட்டேன் என்று எப்பொழுதும் கையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறான்.தாயின் கவனிப்பிலும் அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விட்ட நிம்மதியிலும் முன்னைவிட இப்போது நிலா பேரழகியாக இருக்கிறாள்.பெரியம்மா செங்கமலமும் சித்தி செல்வியும் வந்து வெண்ணிலாவை பார்த்துவிட்டு சென்றனர்.செங்கமலம் வெண்ணிலாவையும் அவள் குழந்தையும் பார்த்து சந்தோஷப்பட்டார்.ஆனால் செல்வி எப்பொழுதும் போல பொறாமை பட்டார்.

 முப்பது நாள் முடிந்து குழந்தைக்கு பெயர் சூட்ட வீட்டில் சின்ன விழாவை ஏற்பாடு செய்திருந்தார் மாறன். ராஜ் நிலாவின் அழைப்பை ஏற்று அனைவரும் வந்திருந்தார்கள். பிரியா சுகி சுஜி இவர்கள் மூவர் மட்டும் வரவில்லை. அதைப் பற்றி அங்கே யாருக்கும் கவலையும் இல்லை. ஸ்வீட்டி தன் கணவன் பிள்ளையோடு வந்திருந்தாள். குமுதா அவளும் குடும்பத்தோடு வந்திருந்தாள். ரிஷி தன்னுடைய வருங்கால மனைவியாக போகும் மிருதுளாவோடு வந்திருந்தான்.பெங்களூரிலிருந்து கங்கா குணா இருவரும் இருதயாவோடு வந்து விட்டார்கள்.செங்கமலம் அவர் கணவர், செல்வி அவர் கணவர் மற்றும் அக்கம் பக்கத்தார் என சிறு கூட்டமே இருந்தது.

ராஜ் வெண்ணிலா ஜோடியை சேர்த்து வைத்த சித்தப்பா அமுதனும் வந்திருக்க வீடே சத்தமாக இருந்தது. கமலாவை கண்டு முகம் திருப்பிக் கொண்டு போன கங்காவிடமும் குணாவிடம் வழியே சென்று மன்னிப்பை வேண்டினர் கமலா. வயதில் பெரியவரான அவரே வந்து தங்களிடம் மன்னிப்பை வேண்டும்போது சிறியவர்களான அவர்களும் அங்கே பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள். குழந்தைக்கு ராஜ் நிலா இருவரும் சேர்ந்து "இனியாழி" எனப் பெயரிட்டார்கள். இனிமையான யாழை போல் இன்புற்று வாழவே அந்த பெயரை வைத்தார்கள்.பிறகு வெண்ணிலாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்து விட்டான் ராஜ்.

 குழந்தையை எந்நேரமும் கொஞ்சி மகிழ்வதையே தன்னுடைய வேலையாக வைத்திருந்தார் கமலா. வெண்ணிலாவை அவர் படுத்திய பாட்டிற்க்கு இப்பொழுது மருமகளை தாங்கு தாங்கென்று தாங்கிக் கொண்டு இருக்கிறார்.வீட்டில் வெண்ணிலா செய்வதற்கு எந்த வேலையும் இருக்கவில்லை.குழந்தைக்கு பால் கொடுத்து விட்டால் மற்ற நேரங்களில் எல்லாம் கமலாவே வைத்துக் கொண்டிருப்பார்.மாதத்தில் ஒரு வாரம் கங்கா வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டு வருவார். அங்கே சென்றாலும் இருதயாவை தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சி மகிழ்வதையே முழு நேர வேலையாக செய்து கொண்டிருப்பார்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் தாமரையும் மாறனும் மகள் வீட்டிற்கு வந்து பேத்தியை பார்த்து விட்டு செல்வார்கள்.வாரத்தில் ஒருநாள் கட்டாயமாக ராஜ் நிலாவையும் பாப்பாவையும் அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்று வருவான். இதனிடையே ரிஷிக்கும் மிருதுளாவிற்கும் திருமணம் நடந்தது.குமுதா கூட ஆச்சர்யப்பட்டு போனாள். கமலாவின் மாற்றம் கண்டு. குடும்பமே சந்தோசத்தில் நிம்மதியாக இருந்தது.

வீட்டில் எந்த வேலையும் இல்லாததால் வெண்ணிலா ராஜோடு கடைக்கு சென்று பார்த்துக் கொண்டாள். கடைக்கு செல்லாத வேளையில் அவளின் எழுத்து பயணத்தை தொடர்ந்தாள்..அவள் எழுத்து வாசகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது..தனக்கென்று சொந்தமாக ஒரு எழுத்து தளத்தை உருவாக்கி கொண்டாள். அதில் தன்னுடைய எழுத்துக்கு பணம் வருவதை பார்த்த வெண்ணிலா நன்றாக எழுத்தியும் அவர்களின் எழுத்துகளுக்கு சரியான வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் எழுத்தாளினிகளுக்கும் பகுதி நேரமாக வீட்டையும் கவனித்து எழுதும் இல்லத்தரசிகளான எழுத்தாளினிகளுக்கும் தன்னுடைய தளத்தில் எழுத வாய்ப்பு கொடுத்தாள்.

அதோடு அவர்கள் எழுதுவதற்கு அவள் தளத்திற்கு வரும் பணத்தை அனைவருக்கும் பங்கிட்டு கொடுத்தாள்.. அவளுடைய எழுத்தை மென்மேலும் வளர்த்துக் கொண்டாள். தொழிலும் கணவனுக்கு பக்கத் துணையாக இருந்தாள். நாட்கள் நகர்ந்தது. இனியாழிக்கு ஒன்றரை வயது ஆகி விட்டது.வாழ்க்கை இவ்வளவு சந்தோஷமாக இருக்குமா என்று இப்பொழுதுதான் வாழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ராஜும் நிலாவும். எவ்வளவு கஷ்டங்கள், எவ்வளவு அவமானம், எவ்வளவு வேதனைகள்,எவ்வளவு சூழ்ச்சிகள், எவ்வளவு கண்ணீர் எவ்வளவு காதல்,எவ்வளவு நேசம்..

 அனைத்தையும் கடந்து இன்று தங்களின் காதலில் வெற்றியும் பெற்று வாழ்விலும் வெற்றியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும். அன்று இரவு குழந்தை கமலாவோடு உறங்கிவிட்டது. ராஜ் கட்டிலில் படுத்துக்கொண்டு தன்னவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். வெண்ணிலா தரையில் முழங்கால்படியிட்டு  தனது உள்ளங்கையை அவளின் வெண் புள்ளிகள் இருந்த முகத்தில் வைத்து ஜெபித்துக் கொண்டிருந்தாள்.

இயேசுவின் பரிசுத்த ரத்தத்தில் இந்த சரும நோய் சுகமாக வேண்டுமென அவள் ஜெபித்துக் கொண்டிருந்தாள். ஜெபத்தை முடித்து ஆமீன் என்று சிலுவை போட்டு எழுந்தவள் தன்னவனைப் பார்த்து சிரித்தாள் வெண்ணிலா. இரண்டு வருடங்களுக்கு முன் அவள் முகத்தில் இருந்த அந்த வெண்புள்ளிகள் இப்பொழுது பெரும்பாலும் மறைந்து விட்டது. அவள் முகத்தில் இருந்த அந்த சரும பிரச்சனை இப்பொழுது முக்கால்வாசி குணமாகிவிட்டது.

இது எப்படி சாத்தியம்..ஆம் இது சாத்தியம். சின்ன வயதில் இருந்தே கர்த்தரைத் தன் பிரிய கடவுளாக ஏற்றுக் கொண்டவள் வெண்ணிலா. அப்போதெல்லாம் அவள் தனது இந்த பிரச்சனைக்காக ஜெபிக்க மாட்டாள். ஒருவகையில் அவளுக்கே இதில் நம்பிக்கை இல்லை என்றே வைத்துக் கொள்ளலாம். இது நிறக் குறைபாடு பிரச்சனை. உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். இதற்கு கடவுளிடம் எப்படி மன்றாட முடியும். என நினைத்துக் கொண்டிருந்தவளை ஒருநாள் கேள்வி கேட்டான்  ராஜ்..

"பாப்பா நான் கேக்குறேன்னு தப்பா நெனைக்காத.. நீயே சொல்லிருக்க ஜீசஸ் எது கேட்டாலும் கொடுப்பாருனு.அப்டி இருக்க நீ ஏன் உன் ஸ்கின் ப்ரோப்லேம்க்கு கேக்க கூடாது.."

"ராஜ் என்ன பேசுற.. இது என்ன மாறி மேட்டர்னு உனக்கே தெரியும். இதெல்லாம் நார்மல். இதுக்கு போயி ஏன் ஜீசஸ் கிட்ட கேக்கணும்"அவளை தன் மடியில் இறுத்தி

"தப்பு செல்லம்.. நீயே தான சொல்லிருக்க. பாப்பா அவரு கடவுள்.. கேக்குறது உன் இஷ்டம்.கொடுக்குறது அவரோடு இஷ்டம்.

கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்

இப்படி அவரு தான சொன்னாரு.. நீ கேளு பாப்பா.. நம்பிக்கையோட கேளு. கேட்டா கிடைக்கும்னு உனக்குள்ள ஒரு நம்பிக்கை இருக்கனும்.. எங்க கிடைக்கபோதுனு ஒரு நிமிஷம் கூட நெனச்சிராத.. கிடைக்கும் கிடைச்சே தீரும்.. அப்படினு மட்டும் நினைச்சு பிரேய் பண்ணு"ராஜ் சொல்லச் சொல்ல வெண்ணிலா தன் தவறை உணர்ந்தாள்.

அன்றிலிருந்து ஜெபிக்க தொடங்கினாள். அவளின் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது. அவளின் குறையும் தீர்ந்தது. ராஜ் அவளை பார்த்துக் கொண்டு மனதில் நினைத்தான். கடவுள் குணமாக்கினாரா இல்லை அவளின் நம்பிக்கை குணமாக்கியதா என்ற தெரியவில்லை. நம்பிக்கை மிகப் பெரிய பலம். அது நமக்கு கண்டிப்பாக பலன் தரும். நாம் ஒரு விஷயத்தை ஆணிதாரமாக நம்பும் போது அது கண்டிப்பாக நடந்தே தீரும். சந்தேகமோ அவசரமோ இல்லாமல் முழு மனதோடு நம்பிக்கை இருந்தால் கடவுளின் கிருபையோடு அது நடந்தே தீரும்.

வெண்ணிலா வந்து ராஜ் நெஞ்சில் படுத்துக் கொண்டாள்."என்ன ராஜ் அப்படி பாக்குற.."அவன் தாடியை பிடித்து இழுத்துக் கொண்டே கேட்டாள்.

"ம்ம்.. இல்லடா இன்னைக்கு தான் ஒரு விஷயத்தை கண்டுப் புடிச்சேன்.."

"என்ன"

"உன் பேரு வெண்ணிலா."

"ம்ம்ம்"

"என் பேரு"

"ராஜ் மித்ரன்"

"மித்ரன் அப்டின்னா சூரியனோட பேரு தெரியுமா"

"அதுக்கு."

"ப்ச் இல்லடி.. உன் பேரு வெண்ணிலா.. நிலா.. என் பேரு மித்ரன்..சூரியன்..நான் சூரியன் நீ நிலா.. எப்படி"

"எப்படி ராஜ் இப்படி ஒரு அறிவு"

"அதெல்லாம் அப்படி தான்.."

"ம்ம்ம் ராஜ் நீ எனக்கு கெடச்சது ஒரு வரம்.. உன்ன நெனச்சு நான் ரொம்ப பெருமை படுறேன்.. ஐ லவ் யூ ராஜ்"

"உன்ன மாதிரி சொல்லாம மாமா கவிதையா சொல்றேன் பாரு.."

"இந்த வெண்ணிலாவின்
வெளிச்சத்தில்
குளிர் காயும்
சூரியன் நான்"

காதலோடு ராஜ் கவிதை சொல்ல அவன் இதழில் தனக்கு விருப்பமான கவிதையை வரைய தொடங்கினாள் ராஜ் மித்ரனின் வெண்ணிலா..

முற்றும்..

இந்த கதையை வெற்றிகரமாக முடிக்க எனக்கு ஆதரவும் ஊக்கமும் கொடுத்த வாசக நண்பர்களுக்கு நன்றிகள் பல. நான் எந்த மத கொள்கைகளையும் பரப்பவில்லை.சொல்ல போனால் இந்த கதை முழுக்க கற்பனை ஆனால் ராஜ் நிலா மட்டும் உண்மை. நிலாவின் நிறக் குறைபாடும் உண்மை. அது குணமடைந்த வழியும் உண்மை.. அந்த நிலா நான் தான். ஆம் எனக்கும் சின்ன வயதில் இருந்தே நிறக் குறைபாடு இருந்தது. இப்பொழுது இல்லை.கதையில் கூறியது போல் இது உங்கள் நம்பிக்கை தான். நம்பிக்கையோடு ஒன்றை கேட்க்கும் போது கண்டிப்பாக நல்லதே நடக்கும்..எனக்கு நடந்த மேஜிக் உங்களுக்கும் நடக்க நானும் ஜெபித்துக் கொள்கிறேன் நன்றி டியரிஸ்.. 😘😘😘😘

Comments

  1. அருமையான சுபமான முடிவு.காதல் என்ற மந்திரசொல் ஒரு மனிதனை எந்தளவு மாற்றுகின்றது என்பதற்கு மித்ரன் உதாரணம்.எத்துணை காதல் தன்னவள் மீது.அவளின் குறையை பெரிதாக எண்ணாமல் தன் குடும்ப ஆட்கள் அவளை பண்ணிய கொடுமைக்கு அனைத்து நேரங்களிலும் உறுதுணையாக இருந்தது அருமை.கங்கா கமலா போன்ற சிலர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.நல்லதையே நினைப்பவர்களுக்கு ஆரம்பத்தில் கஷ்டம் வந்தாலும் பின்னாளில் அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதற்கு வெண்ணிலா உதாரணம்.நல்ல புரிந்து கொள்ளும் துணை கிடைப்பது வரம்.ஆனாலும் இது தேனும்மா கதையா நம்ப முடியலையே.ஹீரோ ஹீரோயின வச்சு செய்வாங்களே.இதுல அந்தளவு கொடூரம் இல்லைப்பா.ஆனாலும் உங்க ஒவ்வொரு கதையும் தனித்துவம் தேனும்மா.உங்க நாவல் இந்த நொடி போதுமே இதுவரை முழுசா பத்து தடவை படிச்சிட்டேன்.ஒவ்வொரு தடவையும் சலிக்காம படிக்கிறேன்.உங்க எழுத்து நடை வேற விதம்.யாரு என்ன சொன்னா என்ன.எனக்கு தோணுணத நான் எழுதுவேன்னு உங்க முடிவுல உறுதியா இருப்பீங்க பாருங்க செம்ம.👌👌👏👌🏼👌🏼🤝🤝👍🏻🤝🤝🤝👌👏🤝👏🤝👏🤝👏இவன் பிறை தோல் தாங்கவில்லை அந்த பிறையையே தாங்கிய தாயுமானவன்.👍🏻👍🏻👌🤝👏👏👌🏼👍🏻👌🤝👏குறை இல்லாத மனிதனே இந்த பிரபஞ்சத்தில் கிடையாது.வெளியே தெரியாத பல குறைகள் பலரிடத்தில் உள்ளது.👍🏻👍🏻👌🤝👏💜💖💖💜💖💖💜💖💜

    ReplyDelete
  2. Sis 😊 Super 👍 keep rocking 💐

    ReplyDelete
  3. Wow....super ka...Sema....takkara irunthuchu

    ReplyDelete
  4. Wow semma akka..romba beautiful a story mudichitinga..🥰🥰🥰 nila such a sweet personality and mithran romba romba nice character 🤗🤗🤗 .. and ithu unga real story nu sollitinga naan name a vaiche starting laye guess pannen😌😉😉😉😅
    Neenga innum strong and healthy a irunthu ithu pola innum neraya stories tharanum💜💜🥰🥰 i love you so much akka and may god bless you💐💜💜💜💜🤗🤗🤗😘😘

    ReplyDelete
  5. Really amazing lovely storu sis

    ReplyDelete
  6. Super stry sis semmma ah irundhuchu nila nengala achooo unga hubby soo supportive ah sis super semmmmma. Stry sis raj mari oru hubby kidaicha enna vena nadakkum life la super ud sis nce

    ReplyDelete
  7. ரொம்ப ரொம்ப அருமையான காதல் கதை ❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🤔👏👏

    ReplyDelete
  8. Nice ending.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    ReplyDelete
  9. Semayana story... Kadhal oru manushahukku yalla seium athu sariyana all mela varlana vatchi saium nu super ah solli irukkinga...

    ReplyDelete
  10. Super end
    நிறை குறை பார்ப்பவர்
    கண்ணை பொருத்தது
    அருமையான கருத்து
    Super sis 👍😊💐

    ReplyDelete
  11. Superrr sis avunga senja tapuku sariyana tandanai ending super sis 😊

    ReplyDelete
  12. அருமை அற்புதம் சூப்பரான படைப்பு

    ReplyDelete
  13. சூப்பர். வெண்ணிலா பிரச்னை சரி ஆனது ஓகே ஆனால் யா மித்ரனுக்கு இப்பிடி பண்ணீங்க. மத்தவங்க எல்லாம் பண்ண பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கிறாங்க ஆனால் மித்ரன் எவ்ளோ நல்லவன் அவனுக்கு யா இப்பிடி

    ReplyDelete
  14. Super அருமையான கதை நிலா, ,👌👌👌👌👏👏👏👏💐💐💐💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்