1 நெருங்கினா(ள்)ல்?


மத்திய சிறைச்சாலை சென்னை.. என்ற பெயர்ப் பலகையைப் பார்த்தவுடன் குண்டலகேசிக்கு வியர்வை ஆறாய்  ஊற்றியது. அவளது பரம்பரையில் இவள் ஒருவளே முதன்முதலாக சிறைச்சாலை வாசலை மிதிக்கிறாள் எனும் பெருமை மாண்புமிகு குண்டலகேசியையே சேரும். கண்களில் கலக்கத்தோடு அப்படியே நின்று கொண்டிருந்தாள் குண்டலகேசி. சிறையிலிருந்து வெளியே செல்பவர்கள் தெனாவட்டாகவும் உள்ளே காவலர்களால் இழுத்துச் செல்லப்படுவார்களில் சிலர் அலட்சியமாகவும் பலர் இது பழக்கப்பட்டது தானே என்பது போலவும் நடந்து கொள்ள இவற்றையெல்லாம் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்த குண்டலகேசிக்கு ஏன் தான் இந்த வேலைக்கு வந்தோமோ என்று வருத்தமாக இருந்தது.

ஜெர்னலிஸம் தான் படிப்பேன் என்று ஒற்றைக்காலில் நின்றதை நினைத்தால் எங்காவது பழைய செருப்பு ஒன்று கீழே கிடைக்கிறதா என்று தேட சொல்லி அவளின் மனம் ஏங்கியது.. கிடைத்தால் பொது இடம் என்று கூட பார்க்காமல் அந்த பழைய செருப்பை கொண்டு தன்னைத்தானே அடித்துக் கொள்ளும் ஆர்வம் அவளிடம் மேலோங்கி காணப்பட்டது.

இது அவளின் முதல் தொலைக்காட்சி அனுபவம்.. சொல்லப்போனால் இந்த முதல் அனுபவத்தை அவள் சரியாக செய்தால் மட்டுமே இந்த தொலைக்காட்சியில் அவள் நீடிக்க முடியும்.இல்லையென்றால் பொட்டி சட்டியை கட்டிக்கொண்டு வீட்டை பார்த்து செல்ல வேண்டியதுதான்.முதல் அனுபவமே அவளுக்கு இந்த மாதிரி அமைந்ததை என்னவென்று சொல்ல..

சிறைச்சாலை கைதிகளில் மிகவும் பயங்கரமான கைதிகளின் கதைகளை மையமாக கொண்டு இந்த தொடர் எடுக்கப்படுகிறது. அதாவது தூக்கு கைதிகள் ஆயுள் தண்டனை கைதிகள்..  கொடுமையான விஷயங்களை செய்து விட்டு உள்ளே வந்திருக்கும் கைதிகளின் கதைகளை எடுத்து சமுதாய சீர்திருத்த தொடர் ஒன்றினை இவர்கள் சேனல் செய்ய முடிவெடுத்திருந்தது.சொல்லப்போனால் இந்த ஐடியாவை கொடுத்ததே குண்டலகேசி தான்.

தான் கொடுத்த ஐடியா பூமராங் போல சுற்றி வந்து இவளையே தாக்கிவிட்டது. ஆண்கள் இருக்கும் சிறைச்சாலை கண்டிப்பாக ஒரு பெண்ணை பேட்டி எடுக்க உள்ளே விட மாட்டார்கள் என குருட்டு நம்பிக்கையில் இந்த ஐடியாவை கொடுத்தவளுக்கு ஈவு இரக்கமே இல்லாமல்

 "இவ்ளோ நல்ல ஐடியாவா சொல்லிருக்க..  இத மட்டும் நாம சரியா செஞ்சா டிஆர்பி பிச்சிக்கும்.. யாரு கிட்ட எப்படி பேசணும்னு எனக்கு தெரியும்.. நான் பேசி எல்லாம் ரெடி பண்றேன்.. கேசி நீதான் எல்லா கைதிகளையும் இன்டர்வியூ எடுக்க போற.."

 டைரக்டர் திடீரென்று இந்த குண்டை தூக்கி குண்டலகேசி தலையில்  போட" ஐயோ சார் நான் ஏதோ பேச்சு வாக்குல சும்மா அடிச்சு விட்டேன்..என்ன போயி இதுல கோத்து விடுறீங்க..நல்லா வீரமான ஆம்பள யாரையாச்சும் இன்டெர்வியூ எடுக்க சொல்லுங்க சார்.."

"நோ நோ... பால் வடியுற முகம் உன்னோட.. நீதான் இத செய்யுற.. இந்த இன்டர்வியூவ நீ சக்ஸஸ்ஸா செஞ்சு முடிச்சா சேனல்ல நீ பர்மனென்ட் ஆயிடுவ.. உன் சேலரி 25கே..ஸ்டார்ட்டிங்கல.. போகப்போக ஏறிட்டே போகும்.."

டைரக்டர் என்னதான் ஆசை வார்த்தைகள் கூறினாலும் அதை எல்லாம் கேட்கும் நிலையில் குண்டலகேசி இல்லை.ஆனால் அவள் கூறுவதை கேட்கும் நிலையிலும் அங்கிருப்பவர்கள் இல்லை.என்னமோ ஏதோ தெரியவில்லை டைரக்டருக்கு குண்டலகேசி தான் இந்த நிகழ்ச்சியை செய்ய வேண்டும் என பட்சி சொல்லி விட்டது. தன் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு வேறு வழி இல்லாமல் சூழ்நிலை கைதியாக மெய்யான கைதிகள் நிறைந்திருக்கும் சிறைச்சாலையின் முன்பு இப்பொழுது நின்று கொண்டிருக்கிறாள்.

"மனோ"

"சார்.. எல்லாம் ஓகே தானே.. ஜெயில் சூப்ரின்ட் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டியா."

"வாங்கியாச்சி சார்..ஆனா எல்லாரும் போக முடியாது. டீம்ல இருந்து ஒரு பத்து பேர் கிட்ட தான் சார் போக முடியும்.."

" ஏன் அதுக்கும் மேல போனா"

"பர்மிஷன் இல்ல சார்.."அசிஸ்டன்ட் டைரக்டர் மனோ திக்கி திணறி டைரக்டரிடம் இதனைக் கூற அன்று அவனின் நல்ல நேரம் வாங்கி கட்டாமல் தப்பித்து விட்டான்.

"மனோ ஷாட் ரெடி பண்ணு.. எல்லாம் ஓகே வா.. ரியசல் பார்த்தாச்சா..எங்க கேசி.."டைரக்டரின் பார்வை குண்டலகேசியை தேடியது. அங்கே அவள் திக் பிரமை பிடித்த மாதிரி நின்று கொண்டிருக்க"ஹேய் கேசி.. கேசி..  குண்டலகேசி"முழுப் பேரையும் ஏலம் விட்டுக்கொண்டிருந்தார் டைரக்டர். யாரோ தன்னை அழைப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தவள் டைரக்டர் தன்னை முறைப்பதைக் கண்டதும் வேகமாக அவரருகே சென்றாள்.

"வாங்க மேடம்..  இது உன்னோட பஸ்ட் இன்டர்வியூ. இதுல நீ ஒழுங்கா பர்ஃபோமன்ஸ் பண்ணா தான் பெர்மனெண்ட்டா இந்த சேனல்ல இருப்ப.. இல்லன்னா சீட்டக் கிழிச்சு அனுப்பிருவேன்.. சாப்பிட்டியா" டைரக்டர் இவ்விதம் கேட்டதும் என்ன ஒரு மனிதாபிமானம் என்ற ரீதியில் அவரைப் பார்த்தாள் குண்டலகேசி.

"சாப்பிடலைன்னா ஒழுங்கா சாப்டுரு..  அங்க வந்து மயக்கம் போட்டு விழுந்த கொன்றுவேன் உன்ன..அவனுங்க எல்லாம் என்ன பிசினஸ் மேனா.. கொலக்கார பாவிங்க..எந்த நேரம் எப்படிப் பேசுவானுங்கனு நமக்கு தெரியாது..பாத்து பத்திரமா இரு.. நான் எழுதித் தந்த கேள்விய மட்டும் தான் கேக்கணும்..அத விட்டுட்டு எக்ஸ்ட்ரா பிட்டு போட்ட"

"இல்ல சார்..நீங்க எழுதிக் கொடுத்த கேள்விய மனப்பாடம் பண்ணிட்டேன்..  அதையே கேட்க்குறேன் சார்.."

"ம்ம்.. எல்லா ரெடியா.. ஷாட் ரெடியாக போது.."

"ரெடி சார்".. அங்கிருந்து நகர்ந்தவள் நிழல் குடையில் கீழே அமர்ந்து  வட்ட கண்ணாடியைக் கையில் எடுத்து வழிந்து கொண்டிருந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டாள். கைதிகளின் கண்ணோட்டம் எப்படி இருக்கும் என்பது தெரியாது.  அதனால் சேலை கட்டிச் சென்றால் எங்கே நூலிழையில் தெரியும் இடையை கண்டு எவனும் வெறிகொண்டு விடுவானோ என்ற பயத்தில் உடலின் பாகம் ஒரு இன்ச் கூட தெரியாத அளவிற்கு லாங் குர்த்தி ஒன்றை அணிந்து வந்திருந்தாள்..

தூரத்தில் டைரக்டரின் கர்ஜனை குரல் கேட்டது." இந்த கம்முனாட்டிக்கு கண்டபடி ஐடியா கொடுக்க போயி கிரகம் என்ன கம்பிக்கு அந்த பக்கம் இருக்குறவன பேட்டி எடுக்க வைக்குது.. " பெருமூச்சு ஒன்றினை வெளியிட்ட குண்டலகேசியை அழைத்தான் மனோ..

சிறைச்சாலையின் உள்ளே ஜெயில் சூப்பரின்ட் இவர்களுக்காக காத்திருந்தார்.சோதனைகள் அனைத்தும் முடிந்து அருகே வந்த ஜெயில் சூப்பிரண்ட் குண்டலகேசியை பார்த்து"ஏம்மா நீதான் இன்டர்வியூ எடுக்க போறியா.. எதுக்கு உடம்போட ஒட்டுன மாதிரி சட்ட போட்டு வந்துருக்க..  நல்லா தொள தொளன்னு பெரிய சட்ட ஒன்னும் இல்லையா உன்கிட்ட.."

"நல்லா பாருங்க சார்..இதுவே காத்துல தான் பறந்துட்டு இருக்கு.. இதுக்கும் மேல தொள தொளன்னா என் அப்பாவோட சட்ட தான் சார் இருக்கு"

"ம்க்கும்.. இவனுங்க எல்லாம் மொள்ளமாரி முடிச்சவிக்கிக்கிங்க..  ஆம்பள போனாலே குறு குறுன்னு பாப்பானுங்க..நீ பொண்ணு..என்ன ஆகப்போகுதோ.." ஏற்கனவே இருக்கும் இம்சை பத்தாது என்று இவர் வேறு வயிற்றைக் கலக்கி விட அரை மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டாள் குண்டலகேசி. ஒரு காலியான சிறையினுள்ளே மிதமான லைட்டிங்கில் ஒவ்வொரு கைதியாக அழைத்து வந்தனர் காவலர்கள்.

ஒரு சிலர் அவளைப் பார்த்ததும் கோணலாக சிரித்தார்கள்.ஒரு சிலர் அவளைக் கண்டதும் எரிந்து விழுந்தார்கள்.ஒரு சிலர் அவளைக் கண்டதும் கதறி கதறி அழுதார்கள்.சிலர் வாயைத் திறக்கவில்லை.

"இன்னா பொண்ணு நீதான் பேட்டி எடுக்கறியா.. என்ன பேட்டி எடுக்குற அளவுக்கு பிஸ்தா நீ"மார்க் முகம் ஒன்று உறுமியது.

"ஹேய் பொண்ணு பேட்டி கீட்டின்னு இன்னோரு தபா உன்ன பாத்தேன் உன் கிட்னிய உருவிருவேன்"கிட்னி திருடன் சிறையில் இருந்தாலும் தன் சேவையை செய்ய தயாராக இருந்தான்.

"குட்டி ஷோக்கா இருக்கே.. உன் பேரு என்னம்மா"வழிந்தான் காம கொடூரன் ஒருவன்.

"அம்மா உன்னிய பாத்தா என் பொண்டாட்டி மாறியே இருக்கும்மா.. ஐயோ அவள என் அண்ணன நம்பி உட்டுட்டுட் வந்துருக்கேன்.. என்ன பன்றானோ பாவி..ஏம்மா நீ வெளிய போயி என் பொண்டாட்டி கிட்ட உஷாரா இருக்க சொல்லும்மா..ஆயுள் தண்டன கைதியா இருந்தாலும் ஆயுசுக்கும் அவள மட்டும் தான் நெனச்சிட்டு இருப்பேன்னு சொல்லும்மா"அவன் விட்ட கண்ணீரில் மிதக்காமல் தப்பித்தாள் கேசி.

"என்ன கேள்வி கேட்ட ஒருவன போட்டுட்டு தான் இங்க வந்துருக்கேன்.. நீயும் கேள்வி கேக்குற எப்டி"சுகர் பேஷண்ட்டு டா நானு,அப்படி கத்த வேண்டும் போல இருந்தது குண்டலகேசிக்கு..

 அப்படி இப்படி என்று ஒரு வழியாக அனைவரையும் பேட்டி எடுத்து முடிக்க டைரக்டர் சூப்பரின்ட்டை பார்த்து" என்ன சார் ஒருத்தன் இன்னும் வரலையே"

"சார்.. பேட்டி எடுத்த வரைக்கும் போதும்.. கெளம்புங்க.."

"என்ன சார்.. எல்லாம் பார்மாலிட்டியும் செஞ்சிட்டு தான வந்தோம்..  இந்த லிஸ்ட்ல இருக்குற கைதிங்க அத்தன பேர் கிட்டயும் நாங்க இன்டெர்வியூ எடுத்தே ஆகணும்.." டைரக்டர் பிடிவாதமாக சொல்ல சூப்பரின்டர் எவ்வளவு எடுத்துக்கூறியும் இந்த வழக்கு முடியாமல் இழுத்துக் கொண்டே சென்றது.

 ஒரு கட்டத்தில் கடுப்பான டைரக்டர் தனது அண்ணனான அமைச்சருக்கு போன் பண்ண அமைச்சர் சூப்பரின்டுக்கு போட்ட போட்டில்"சார்.. அவன் ரொம்ப மோசமானவன்.. தூக்கு தண்டனை கைதி.. அவனே வந்து பாக்கணும்ன்னு சொன்னா தான் நாம போய் அவன பாக்க முடியும்..அவன் பெரிய கை சார்.."அவர் அவனின் பின்னணியைச் சொல்ல டைரக்டரின் கண்கள் மின்னியது.

"இந்த மாதிரி ஒருத்தனோட வாழ்க்க வரலாற நாம சேனல்ல போட்டா தான் நம்மளோட சேனல் டிஆர்பி எகிரும்"டைரக்டர் மனோவிடம் பேசிக்கொண்டிருக்க இங்கே குண்டலகேசி மனதிற்குள்

"அட பைத்தியமே.. அந்தாளு என்ன சொல்லிட்டு இருக்கான்.. நீ என்ன பேசிட்டு இருக்க.. அவன் கொலக்காரனுக்கே தலைவனாம் டா வெண்ண.. நீ என்னமோ தலப்பா கட்டு கடக்காரன் போல அவன நெனச்சு பேசிட்டு இருக்க.. அய்யோ"..வெளியே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு டைரக்டரை பார்த்து கொண்டிருந்தாள் குண்டலகேசி.

 டைரக்டரின் இம்சை தாங்க முடியாமல் ஜெயில் சூப்பரிண்ட் அந்த மோசமானவனின் செல்லை நொக்கி சென்றார்.செல் உள்ளே எந்த வெளிச்சமும் இல்லை. அவனுக்கு வெளிச்சம் என்றால் பிடிக்காது.  மற்ற கைதிகளின் செல்லை எல்லாம் லத்தியால் தட்டியவர் இவனை மட்டும் மிகவும் பவ்வியமாக அழைத்தார்"தம்பி.. தம்பி"

"ம்ம்ம்"

"உங்கள இன்டெர்வியூ பண்ண மீடியால இருந்து வந்துருக்காங்க."

......

"நீங்க சரின்னு சொன்னா இங்கயே வந்து ரெண்டே ரெண்டு கேள்விய மட்டும்"

"ம்ம்ம்"உறுமல்..

"இல்ல சும்மா உங்கள பாத்துட்டு மட்டும் போக சொல்லுவேன்.. மினிஸ்டர் லெவல் பிரஷர்.. நான் புள்ள குட்டிக்காரன் தம்பி..  எனக்காக"..

" இன்டர்வியூ எடுக்க யாரு வந்துருக்கா"

"ஒரு பத்து பேரு தம்பி.."

" இன்டர்வியூ எடுக்கறது யாரு"

" ஒரு பொண்ணு தம்பி"

"பொண்ணா.. பேரு என்ன"

"குண்டலகேசி"

"வயசு"

"தெரியாது"

"அந்த பொண்ணயும் கூட ஒருத்தன மட்டும் வர சொல்லுங்க"

" அது எப்படி தம்பி அவங்க ஒரு டீமா"

"யோவ்"

"சரி தம்பி டென்ஷன் ஆகாதீங்க".. அங்கிருந்து சுவரில் அடித்த பந்தாக திரும்பி வந்தவர் டைரக்டரிடம் அவன் கூறியதை கூறினார்.. வேறு வழியே இல்லாததால் குண்டலகேசியையும் கேமராமேனையும் சூப்பரிண்டருடன் அனுப்பு முடிவு செய்தார் டைரக்டர்.

"டேய் கிஷோர்.. செல்லுக்குள்ள போனதுல இருந்து ரெக்கார்ட் பண்ண ஸ்டார்ட் பண்ணு..மறக்காம ஒரு மெழுவர்த்திய கொளுத்தி வெச்சு அந்த வெளிச்சத்துல எடு..எனக்கு அங்க நடக்குற எல்லா விஷயமும் தெரியனும்" கேமராமேனிடம் கூறினார் டைரக்டர்.

 தன் விதியை எண்ணி நொந்து கொண்டே கேமராமேன் பின்னே பம்மி நடந்தாள் குண்டலகேசி.இருபக்கமும் செல்கள். அவளைப் பார்த்ததும் செல் உள்ளே இருந்த கைதிகள் ஏய் பொண்ணு ஆய் ஊய் என்று கத்தி கூச்சலிட்டு அவளைத் தொட கையை நீட்ட பயந்துபோன அவள் கேமராமேனின் பின்பக்க சட்டையை இறுக்கிப் பிடித்து கொண்டு கண்ணை மூடியப்படி நடந்தாள்.

அவளின் கற்பனை விருமாண்டி படத்திற்கு சென்றது.. அந்த கொலைகாரனும் இவளின் உள்ளாடை அளவை கேட்டு விட்டால் என்ன செய்வது.. கடவுளே இந்த கொரில்லா செல்லுல  இருக்கிறவன பேட்டி எடுத்தே ஆகணும்னு அடம் பிடிக்கிற அந்த டைரக்டருக்கு ஒருவாரம் வைத்தால நிக்காம புடுங்கனும்.. எப்படியோ ஒரு வழியாக நடந்து இறுதியாக  இரு பக்கத்துக்கும் நடுவே இருந்த அந்த செல்லுக்கு வந்து விட்டனர்..

நாம்தான் நின்று விட்டோமே பிறகு ஏன் பூமி அதிர்கிறது என்று கண்களை திறந்து பார்த்தாள்,பூமி அதிர வில்லை அவளது கைகள் தான் அதிர்ந்துகொண்டிருந்தது.கேமராமேன் நின்ற இடத்திலேயே பிரேக் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான்.அடப்பாவி உன்ன நம்பியா இவ்ளோ தூரம் நடந்து வந்தேன்.. என்பதைப் போல அவனைப் பார்த்தாள் குண்டலகேசி.

ஜெயில் சூப்பரின்ட் செல்லை திறக்க கேமராமேன் தட்டுத் தடுமாறி உள்ளே செல்ல அங்கே கவிழ்ந்து படுத்திருந்தான் ஒருவன்.  கேமரா மேன் சூப்பரின்டை பார்க்க அவர் வேகமாக தலையைசைத்தார். உடனே படுத்திருந்தவன் அருகே ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றினான்  கேமராமேன்..மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவனின்  இருப்பக்கப் புஜங்களிலும் குத்தப்பட்டிருந்த பச்சையை(tatoo) பார்த்ததும் எச்சிலை விழுங்கி கொண்டான் கிஷோர்.கை விரல்களில் இருந்து முதுகு வரை நீண்டது அந்த டாட்டூஸ்..

"சார்"என படுத்திருந்தவனை மெல்ல அழைத்தான். அவன் வேண்டுமென்றே அசையாமல் படுத்திருக்க மீண்டும் மீண்டும் மெல்லமாக அழைந்தான்.


இறுதியாக எழுந்தமர்ந்தவன் முகம் சரியாகத் தெரியவில்லை..முதுகு  வரை முடியும் முகமே மறையும் அளவிற்கு மீசை தாடியும் அவனை அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றிருந்தது.கேமராமேன் கேமராவை ரோல் செய்ய ஆரம்பித்தான்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவன் முன்பு தயக்கத்தோடு வந்து நின்றாள் குண்டலகேசி."யோவ் அந்த பொண்ண ஒக்கார சொல்லு"

"ம்மா தம்பி முன்னாடி முட்டி போட்டு ஒக்காரும்மா"..

"என்ன சார்"

"ஒன்னும் பேசிறாதம்மா கம்முனு ஒக்காரு"சூப்பரிண்ட் அவள் காதில் மெல்லமாக முணுமுணுக்க குர்த்தி கிழியாமல் அமர்ந்தாள் குண்டலகேசி.அவன் ஒரு மேடையின் மேல் அமர்ந்திருக்க அவன் முன்பு முட்டி போட்டு அமர்ந்திருந்தாள் குண்டலகேசி.

 மெழுகுவர்த்தியின் அரைகுறை வெளிச்சத்தில் அவனின் முகம் பார்க்க முடிகிறதா என பார்த்தாள். முடியவில்லை. கேமராமேன் அவளை பேச சொல்ல"சார்"என மெல்ல அழைத்தாள் குண்டலகேசி.அவன் அசையாமல் இருக்க

"ஏகலைவன்"..

 என அவன் பெயர் சொல்லி அழைக்க சட்டென்று நிமிர்ந்து பார்த்தான். ஐஸ்வர்யா ராய் போல பச்சை நிற விழிகள் அவனுக்கு. வளர்ந்திருந்த சிகைகள் அப்பொழுதும் அவன் முகத்தை மறைத்திருக்க அடர்ந்த சிகையின் இடையே அவன் முன்பு மண்டியிட்டு அமர்ந்திருந்த குண்டலகேசியின் முகத்தை பார்த்தவன் ஒரு நிமிடம் கண்மூடி திறந்தான்.

"சார்"

"சார்.. கேள்வி கேக்குறேன். உங்களுக்கு ஓகேனா பதில் சொல்லுங்க இல்லாட்டி வேற கேள்வி கேட்கிறேன்."அவன் அசையவே இல்லை.

 வேக மூச்சை எடுத்து விட்டவள்"சார் நீங்க எதனால இங்க வந்துருக்கீங்க "

....

" உங்க குடும்பத்த பத்தி சொல்ல முடியுமா"

......

" உங்களுக்கு கல்யாணம் ஆச்சா"

......

" நீங்க ஏன் இந்த தொழிலுக்கு வந்தீங்க"

......

" மரண தண்டனை கைதியான உங்களுக்கு இதைப் பார்க்கிற இளைஞர்களுக்கு ஏதாச்சும் சொல்லனும்னு தோணுதா"

......

"சார் ப்ளீஸ் ஏதாச்சும் சொல்லுங்க.. உங்களோட வாழ்க்கை தப்பான வழியில போற இளைஞனோட வாழ்க்கைய மாத்தும்.. இப்படி நீங்க அமைதியா இருந்தா என்ன சொல்ல..  ப்ளீஸ் ஏதாச்சும் பேசுங்க.. இல்லன்னா உங்களுக்கு ஏதாச்சும் யார்கிட்டயாச்சும் சொல்லணும்னு தோணுதா "

 அவள் கேமராமேன் முகத்தையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்க ம்ம்ம் என்று தலையாட்டினான் ஏகலைவன்.

"சொல்லுங்க சார் யாருக்கிட்ட என்ன சொல்ல போறீங்க".. மைக்கை அவன் முன்பு நீட்டினாள் குண்டலகேசி. அவளை நிமிர்ந்து பார்த்தவன்

"நான் உன்ன காதலிக்கிறேன்..கடவுள் நம்பிக்க இருந்தா வேண்டிக்க..கண்டிப்பா எனக்கு தூக்கு தான்..  ஆனா நான் வெளிய  வந்தேன் இந்த உலகத்துல நீ எங்க இருந்தாலும் எத்தன பிள்ளைக்கு அம்மாவா இருந்தாலும் பல்லு போன பாட்டியா இருந்தாலும் உன்ன தூக்கிட்டு போயிருவேன்..  நீ போலாம்"...

அவன் மீண்டும் தலை குனிந்து அமர்ந்திருக்க குண்டலகேசி ஸ்தம்பித்து விட்டாள். அவள் மட்டுமல்ல கேமராமேனும் ஜெயில் சூப்பரிண்ட்டரும் கூட அதிர்ந்து விட்டனர்.  கேமராமேன் குண்டலகேசி கையைப் பற்றி இழுக்க சுவாதீனமே இல்லாமல் வெளிறிய முகத்தோடு அவனை ஒட்டிக் கொண்டு அந்த செல்லை விட்டு வெளியேறினாள்.

 அவள் திரும்பி செல்லும்போது இருபக்க  செல்களில் இருந்த கைதிகள் அவளைப் பார்த்து கூச்சலிட மெல்ல எழுந்த ஏகலைவன் கம்பிக் கதவின் பிடிகளுக்குள் கையை நுழைத்து தொங்க விட்டுக் கொண்டு"ஏய்"என ஒரு சத்தம் போட்டான்.. இதுவரைக்கும் கத்திக் கொண்டிருந்த அந்த கூச்சல் மெல்ல அடங்கியது.  அவனின் ஏய் என்ற குரல் கேட்டு பயத்தோடு அவனைத் திரும்பிப் பார்த்த குண்டலகேசியை இழுத்துக் கொண்டு சென்றான் கேமராமேன் கிஷோர்.

தொடரும்..

புதிய தொடர் தொடங்கியாச்சு.. Horor கதை எழுதலாம்னு இருந்தேன். ஆனா என்னால முடியாம போச்சு.. வேறு திகில் கதைய சீக்கிரம் எழுதுறேன். இது ஆன்டி ஹீரோ கதை.ஆதரவை கொடுங்க டியரிஸ்😘😘😘

Comments

  1. Wow super starting sister hero name and heroine name selection super 💜💜 eagerly waiting for next ud ❤❤❤❤

    ReplyDelete
  2. Wow sis super semmmmma starts sis name selection eppavum pola super sis nice

    ReplyDelete
  3. Nice writing
    Kuntalakechi vaaya vachchukikittu summaa
    Erunthurukkaalam
    Ayyo paavan🙁👌💐💐

    ReplyDelete
  4. Iyoo super akka..sema strt.. just lovable

    ReplyDelete
  5. Sooper Akka... Starting eh semma... Names um alaga iruku 😇😇😍😍👍🏻👍🏻

    ReplyDelete
  6. ஆரம்பமே செமயா இருக்கு

    ReplyDelete
  7. Sema starting ma raavanakarnan mathri ah illa ravanakarnan 2.0 va bt epdio semaya iruku

    ReplyDelete
  8. Vera leval 👌👌👌👌👌👏👏👏👏👏👏👏😘😘🤩🤩🤩🤩🤩🤩

    ReplyDelete
  9. Different ah yosika ungalala matum than mudium sister. Suprrrrrr

    ReplyDelete
  10. Arambamey amarkalam........ hero heroine Name rendum super uh irukku sis 👍👌💐

    ReplyDelete
  11. Nila story epavume arambam mudhal mudivu varai interesting ah dhan irukum super nila ma

    ReplyDelete
  12. Wow.. Kundalageai..❤️Aegalaivan..🔥 Enna oru peyar poruttham..🤩🤩 Enna oru villathanam.. ketta kelviku ennama ans sollirukan..🔥🔥

    Wait fr Aegaas Blast..💥💥

    ReplyDelete
  13. Nice sis dailyum ud podunga sis

    ReplyDelete
  14. நல்ல தொடக்கம் நன்று.....

    ReplyDelete
  15. Merativitutinga akka😉😉 semmaya iruku😅🤩🤩🤩

    ReplyDelete
  16. Wowwww 😍😍😍😍😍super sagi😍😍😍interesting😍😍😍😍

    ReplyDelete
  17. Starting vera level 😍😍😍 waiting nxt ud dr💞

    ReplyDelete
  18. செம்ம தேனுமா சூப்பரா இருக்கு. வெயிட்டிக் பார் நெக்ஸ்ட் எபி ❤️❤️❤️

    ReplyDelete
  19. 😳😳😳😳
    ஒரு கேள்வி போனது ஒரு குத்தமா... கடைசி ல வச்சுட்டானே டா ஆப்பு 😲😲😲

    அடேய் இடி விழுந்த டேரக்டர் மண்டை. உன் மண்டை ல இடி விழ...
    போச்சா சோன முத்தா போச்சா 😂

    செம்ம ஸ்டார்ட் அக்கா

    ReplyDelete
  20. Wow 💕 Interesting start sis.. 😍😍😍 kundalakesi sema..😘😘😘 Egalaivan kundalakesi name selection super ♥️♥️♥️

    ReplyDelete
  21. Vera level starting sis 😍😍 semma interesting starting eh 🔥 eagerly waiting for next epi 😍

    ReplyDelete
  22. ஆரம்பமே சூப்பர் சிஸ் ஏகலைவன் பெயர் நல்லா இருக்கு அந்த பெயரின் அர்த்தம் என்ன சகி

    ReplyDelete
  23. 😂😂😂😂aiyoo kesi romba pavam😂😂😂

    ReplyDelete
  24. Ravanana vida bayangarama irukkum polaye.... 🤔🤔🤔

    ReplyDelete
  25. Semma starting sis...... Ayyo kesi paavam..... Avan velila varuvanu ninaikren...... Hero name soooooper

    ReplyDelete
  26. Supersema sis kesi unna kesariyakka poran ekalaivan Sema selection posukkunu sollitan

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. Antihero journer ah. Starting ae different ah iruku. Started to read today alone. But i like ur stories. Keep going. Wish this story also make a different one.

    ReplyDelete
  29. Super super super super super super epi sis

    Starting kae amazing

    Ada paavi interview eduka vanthathu oru kutthamw

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்