பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 26

நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்

மார்பக புற்றுநோய்க்கு ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லை. அடிப்படையாக உயிரணுக்களின் வளர்ச்சி மற்றும் இறப்பைக் கட்டுப்படுத்தும் மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்பட்டு புற்றுநோயாகத் தோன்றுகிறது.பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு ஏற்படும். மேற்கண்ட சில காரணங்களில் சிலவற்றை மாற்ற முடியாது என்றாலும், மார்பக புற்றுநோய்களில் மூன்றில் ஒரு பகுதியை உணவு மற்றும் ஒருசில நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மோசமான அபாயங்களை தடுக்க முடியும்.

பெண்கள் சிறுவயதிலேயே பூப்படைவது, 30 வயதுக்கு பிறகு நடக்கும் திருமணங்கள், அதன் தொடர்ச்சியாக நடக்கும் குழந்தைப்பேறின்மைக்கான தொடர் ஹார்மோன் சிகிச்சைகள், டெஸ்ட் டியூப் பேபி போன்ற செயற்கைக் கருத்தரிப்பு முறைகள் மற்றும் தாமதமாகும் மெனோபாஸ் போன்றவைதான் மார்பகப் புற்றுநோய் வர முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன..

"பெரியம்மா என்ன சொல்றிங்க.. பிரியாக்கா நல்லாத்தானே இருந்தா.." உச்சகட்ட அதிர்ச்சியில் வினவினாள் நிலா.

 பெரியம்மா செங்கமலம் பெருமூச்சு விட்டுக்கொண்டே"என்னத்தடி சொல்றது.. எல்லாம் நான் செஞ்ச பாவம் போல. இப்டி என் பொண்ணு வாழ்க்கைய போட்டு சீரழிக்குது..ரெண்டாவது ஸ்டேஜ்னு டாக்டரு சொல்றாரு. டிரீட்மென்ட் போய்ட்டு இருக்கு..  எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியல" சொல்லிக்கொண்டே அழுதார்.

"அழாதீங்க பெரியம்மா சரியாயிரும்"நிலா பெரியம்மாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு இந்த விஷயத்தை ராஜிடம் சொல்ல அறைக்கு சென்றாள்..ராஜ் நிலா கூறிய விஷயத்தை கேட்டு உண்மையில் அதிர்ச்சி அடைந்தான்.  வெண்ணிலா என்ன தெய்வப் பிறவியா?  அவளை யாரெல்லாம் கஷ்டப்படுத்தினார்களோ அவர்கள் வாழ்க்கையில் கிரகம் கட்டம் கட்டி அடிக்கிறதே.. இவள் விஷயத்தில் தெய்வம் படு வேகமாக வேலை செய்கிறது. முதலில் கங்கா அடுத்து பிரியா பிறகு சுஜி மற்றும் சுகி.. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக இருக்கிறது. இன்னும் கமலா சிந்து இருவர் மட்டுமே மீதம் உள்ளனர்.

 இதுவரைக்கும் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் வேதனையை பார்த்தால் இவர்கள் இருவரின் வேதனை எவ்வாறு இருக்கும் என சிந்தனையை அதில் செலுத்தினான் ராஜ். நிலா கைபேசியை வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்து பிரியாவிற்காக வேதனைப் பட்டாள். அந்நேரம் அவள் அறைக்கு வந்தான் விக்ரம்."என்னக்கா ப்ரியாக்காவ நெனச்சு பீல் பண்றியா" என்றவாறே அவள் அருகில் அமர்ந்தான்.

" ஆமாடா.. ப்ச் எவ்ளோ அழகா இருப்பா. இப்போ ட்ரீட்மென்ட் போய்கிட்டு இருக்கு அப்படினா கண்டிப்பா வெயிட் லாஸ் பண்ணி முடி எல்லாம் கொட்டி எப்படி இருப்பாளோ தெரியல.. " உண்மையாகவே பிரியாவிற்காக வேதனைப்படும் தன்னுடைய அக்காவை பார்க்கும் போது விக்ரமிற்கு ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பிரியா இவளின் வாழ்வை அழிக்க பார்த்தவள். ஒரே தாய்க்குப் பிறந்தால் மட்டும்தான் தங்கையா? சிற்றன்னைக்கு பிறந்தால் அவள் தங்கை இல்லையா?

 தன்னை விட படிப்பிலும் புத்திசாலித்தனத்திலும் உயர்ந்த இடத்தில் இருந்த வெண்ணிலாவை புறத்தோற்றத்தை வைத்து எவ்வளவு வேதனைப் படுத்தி இருப்பாள் பிரியா. இன்று அவளின் புறத்தோற்றம் எப்படி இருக்கும்.. புற்றுநோய் வந்ததற்காக அவள் கவலை பட மாட்டாள். புற்று நோயால் வரும் ஒரு மாற்றத்திற்காகவே அவள் கவலை பட்டிருப்பாள். அவளை சொல்லி என்ன செய்வது.. அவளுக்கு தூபம் போட்டது எல்லாம் சுஜி சுகி தானே.. அவர்கள் மட்டும் என்னத்தை வாழ்கிறார்கள்?

"விக்ரம்"

"என்னக்கா"

"நா கொஞ்சம் நேரம் பிரியாக்காவுக்கு பிரேய் பண்ணிட்டு வரேன்டா. அம்மா கிட்ட சொல்லிரு.." என்றதும் விக்ரம் எழுந்து வெளியே செல்ல கதவை சாத்திவிட்டு முழங்கால்படியிட்டு பிரியா குணமடைய பிரார்த்தனை பண்ண ஆரம்பித்தாள் வெண்ணிலா.

ராஜ் வந்துவிட்டான். மாமியார் வீட்டில் அன்று இரவு தங்கிவிட்டு மறுநாள் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்றான். செல்லும் வழியெல்லாம் நிலா பிரியாவின் நிலையைப்பற்றி கவலையோடு சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் அளவுக்கு ராஜ் கவலைப்படவில்லை. அவனைப் பொறுத்தவரை பிரியா செய்த தப்புக்கு கடவுள் கொடுத்த தண்டனை இது. அவரவர் செய்யும் பாவ புண்ணியங்களை  கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். கடவுள் கண்களை நாம் மறைத்து விட்டோம் என்று ஆணவமாக நாம் இருக்கிறோம். ஆனால் உண்மை அப்படி இல்லை அனைத்தையும் பேசாமல் வேடிக்கை மட்டும் பார்க்கும் கடவுள் அவ்வப்போது இம்மாதிரி விஷயங்களை செய்யும் போது தான் கடவுள் நம்மை கண்காணிக்கிறார் என்ற உண்மையை நமக்கு தெரிகிறது.

வெண்ணிலா பிரியாவை சென்று பார்க்க வேண்டும் என பிரியப்பட்டாள். ஆனால் ராஜ் அதற்கு அனுமதிக்கவில்லை. "இப்போ வேணா பாப்பா. அவ என்ன நிலைமையில இருப்பானு தெரியல.. உன்ன பாத்ததும் எப்படி ரியாக்ட் பண்ணுவானு தெரியல.. அவ சரியாயி வீட்டுக்கு வரட்டும்.. அப்புறம் போய் பார்க்கலாம்.. இப்போ நீ போய் பார்த்தா  கண்டிப்பா அவ அவமானமா பீல் பண்ணுவா. அவளோட நிலைமைய பார்த்து கேலி பண்ணி சிரிக்க தான் நீ வந்துருக்கனு சொல்லுவா.. எதுக்கு வயித்துல புள்ளய வச்சுக்கிட்டு அவகிட்ட பேச்சு வாங்கனும்.. நிதானமா போகலாம் சரியா அவளுக்கு ஒன்னும் ஆகாது"

 ராஜ் சொல்வதில் இருந்த உண்மை வெண்ணிலாவுக்கு புரிந்தது. வாயைத் திறந்தால் சாதாரணமாகவே சாபம் தான் வரும் அவளுக்கு. இந்நிலையில் பிரியாவை சென்று சந்தித்தால் கண்டிப்பாக அந்த சாபம் தன் குழந்தையை தாக்கிவிடும். தான் அனுபவிக்கும் வேதனைகள் பத்தாதா.. தன் குழந்தையும் இதில் பங்கு பெற வேண்டுமா.. வாயை இழுத்து மூடிக்கொண்டாள் வெண்ணிலா.

ராஜ் வெண்ணிலாவை உள்ளங்கையில் வைத்து தங்கினான்.அவளின் விருப்பு வெறுப்புகளின் தன்னை முழுதாக ஈடுபடுத்திக் கொண்டான். அவளை கடைக்கு அழைத்துச் சென்று கடையின் நிலவரம் அனைத்தையும் அறியும் படி செய்தான். இப்பொழுதே வெண்ணிலாவால் ராஜ் இல்லாமலே முழுதாக கவனிக்க முடியும். மூன்று மாதத்தில் அவளுக்கு கடை பற்றிய அனைத்து நிர்வாகத்தையும் கற்றுக் கொடுத்திருந்தான். அவள் பல தடவை கேட்டிருக்கிறாள். "அதான் நீ இருக்கில்ல.. அப்புறம் எதுக்கு எனக்கு கடைய பத்தி சொல்ற."

" ஒருவேளை என் அப்பா மாதிரி எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா"மேலே அவனை பேச விடாமல் அவன் வாயை தன் இதழால் அடைத்திருப்பாள் நிலா..

"நீ ஒண்ணுமே சொல்ல வேணா. எதுக்கு இப்படி அபசகுனமா பேசுற.. அப்படி என்ன அவசரம் உனக்கு என்ன விட்டுட்டு போறதல.." கண்கலங்க அவனிடம் கேள்வி கேட்பாள்.அழும் அவளை இழுத்து தன் மடியில் சாய்த்துக் கொண்டு

"பாப்பா யாருக்கு எப்போ என்ன ஆகுதுன்னு தெரியாது.. குறுக்குல பேசாத.. நா சொல்ல வர்றது ஒழுங்கா சொல்லி முடிக்கிறேன். நாம எல்லாரும் மனுஷங்க. இந்த உயிர் எப்ப வேணும்னாலும் நம்மள விட்டு போயிடும்.. அப்போ நாம எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும். என் அப்பா திடீர்னு ஒருநாள் இப்படி போயிட்டாரு.. என்னோட அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாது.. எங்கப்பா எத்தனயோ தடவை கடைக்கு வந்து உட்காரு அப்படின்னு சொல்லி இருக்காரு.. அவங்களுக்கு இதெல்லாம் இன்டெரெஸ்ட் இல்ல. கங்காவும் அப்டி தான்.. அப்பா போனதும் மாமா எல்லாத்தையும் சுருட்ட பிளான் பண்ணாரு.. எனக்கு சின்ன வயசுல இருந்தே அப்பா வியாபாரத்தப் பத்தி சொல்லிக் கொடுத்திருந்தாரு.

பெரிய லாஸ் தான்.. ஆனா ரிஷி அவனோட அப்பா என்னோட உண்மையான லேபர்ஸ் இவங்களை வெச்சு எப்படியோ முன்னுக்கு வந்துட்டேன். என்னக் கேட்டா பொம்பளைங்களுக்கு எதையாச்சும் ஒரு தொழில் தெரிஞ்சுருக்கணும். யார் இருந்தாலும்  இல்லனாலும் அவங்களுக்கு அந்தத் தொழில் கைகொடுக்கும். நான் என் அப்பா இல்லாத போது எப்படி பைத்தியம் பிடிச்ச மாதிரி நின்னேனோ அப்படி ஒரு நிலைமையில நீ நிக்கவே கூடாது..

இது உனக்கு நான் சொல்லித் தர தொழில்..உனக்குன்னு ஒரு திறமை இருக்கும். அந்த திறமை என்னனு எனக்கு தெரியும்.. நீ அந்த திறமயில போ..அது உன்னோட பேஷன் அது. கடை உன் ப்ரோபேஷன்"

" என்ன திறமை ராஜ்.."தன் பெரிய விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்துக் கேட்டாள் வெண்ணிலா.

" சொல்றேன் இப்போ இல்ல உன் வளைகாப்பு அன்னைக்கு.. " அவளின் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான் ராஜ் மித்ரன்..

காளைப் பாண்டியன் குடும்பம் அன்று கங்கா காணாமல் போன செய்தி கேட்டு அப்படியே தலைமறைவாகி விட்டார்கள். பிறகு கங்கா கிடைத்த செய்தியை கமலா மூலம் அறிந்து கொண்டு நேராக சென்னை வீட்டிற்கு வந்தார்கள். காளைப் பாண்டியனுக்கும் காமதேனுவுக்கும் நடிக்கச் சொல்லியா தரவேண்டும்.. அவர்கள் நடித்த நடிப்பை பார்த்து கமலாவே வாயைப் பிளந்து விட்டார். சென்ற இடத்தில் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாகி ஒரேடியாக பரலோகம் போக நேரம் வந்துவிட்டது என மருத்துவர் கூறிவிட்டாராம். தங்கை தான் இல்லாமல் அனாதையாகி விடுவாள் என்ற ஒரே காரணத்தால் எமனிடம் போராடி  உயிரை காப்பாற்றி வைத்திருக்கிறாராம் காளைப் பாண்டியன்.

 வழக்கம் போல அவரது நடிப்பை நம்பி ஏமாந்த கமலா குணாவும் கங்காவும் ஒன்று சேர்ந்த விஷயத்தை கூறி அங்கு நடந்த அனைத்தையும் கூறி முடித்தார். விஷயத்தை கேட்டுக்கொண்டிருந்த காளைப் பாண்டியனுக்கு  என்ன சொல்வதென்று தெரியவில்லை. தன் கைப் பாவைகளாகிய கமலாவும் கங்காவும் என்றுமே தன்னுடைய பேச்சை கேட்டு ஆட்டம் ஆடுவார்கள் அவர்களை வைத்து தனக்கு வேண்டிய சொத்தை முழுதாக ஆட்டையை போட்டு விடலாம் என்று மனக்கணக்கு போட்டுக்கொண்டிருந்தார் காளைப் பாண்டியன்.

 அத்தனை மனக்கணக்கும் மணல் கணக்காக போய்விட்டது. இரண்டு கைப் பாவைகளில் இப்பொழுது ஒன்று மட்டுமே அவரது கையில் இருக்கிறது.அந்த ஒன்றும் தவறி விட்டால் அவரின் நிலை நடுத்தெரு தான். மகள் சிந்து மட்டுமே அவரது ஒரே நம்பிக்கை. அவளும் இன்னும் சுற்றுப்பயணம் முடிந்து வந்த பாடில்லை. காலாகாலத்தில்  மித்ரனை மயக்கி கையிக்குள் போட்டுக் கொள்ள வக்கில்லை. ஆனால் வேளாவேளைக்கு முகத்திற்கு ஐந்தாறு கிலோ மேக்கப்பை அப்பிக்கொண்டு ஊர்சுற்றுவத்தில் ஒன்றும் குறையில்லை..

 அந்த கடுப்போடு மனைவியை அறைக்கு அழைத்து சென்று நான்கு கும்மாங்குத்து குத்தினார் காளைப் பாண்டியன். மகளுக்கு அழைத்தால் அவள் அழைப்பை ஏற்கவில்லை. இப்படியும் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே மேலும் இரண்டு மாதம் கழிந்தது. அவ்வப்போது அழைப்பை ஏற்று எனக்கு வர தெரியும் முகத்தில் அடித்தது போலக் கூறி விட்டு அழைப்பை துண்டித்து விடுவாள்.

 இந்தப் பெண் செய்வது எதுவும் சரியில்லை என்று காளைப் பாண்டியனும் காமதேனுவும் மண்டையைப் பிய்த்துக் கொண்டு அமர்ந்திருக்க ஒருநாள் சிந்து வந்து சேர்ந்தாள். அவளோடு அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு தாத்தா வந்திருந்தார். அந்தத் தாத்தாவின் கையில் பிடித்து உள்ளே அழைத்து வந்தவர் அவரோடு சோபாவில் அமர்ந்துகொண்டு"அம்மா அப்பா இவர்தான் உங்க மாப்ள..டார்லிங் மீட் மை பேரெண்ட்ஸ் அண்ட் திஸ் இஸ் மை ஆன்ட்".. என அந்த தாத்தாவிடம் இவர்களை அவள் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க இதனை வேடிக்கை பார்த்தபடி சிலையாக நின்றனர் மற்ற மூவரும்.

"ஹேய் என்னடி தாத்தா மாதிரி இருக்கான்.. அவன போயி எங்களுக்கு மாப்ளனு சொல்ற. உங்கப்பன விட வயசு ஜாஸ்தியா இருக்கும் போலயே.. என்னடி இதெல்லாம்"..காமதேனு அலற

"அம்மா இவருக்கு வயசு கூட தான். ஆனா எனக்கு இவர தான் புடிச்சிருக்கு. அண்ட் இவருகிட்ட கோடி கோடியா காசு இருக்கு.. எனக்கு அது போதும். வயசானவர்னு நீ பீல் பண்ணாத.நா இப்ப பிரேக்னன்டா இருக்கேன்.மூனு வாரம் கரு.. என் வயத்துல".. அவள் வெட்கமே இல்லாமல் இவ்வாறு கூறிக் கொண்டிருக்க முதலில் சுதாகரித்து காளைப் பாண்டியன் மகளை பாய்ந்து அடிப்பதற்குள் எழுந்து நின்ற சிந்து அவரைப் பிடித்து தள்ளினாள்.

"அப்பா எதுக்கு என்ன அடிக்குறிங்க. இந்த அடிக்குற வேலயெல்லாம் என்கிட்ட வேணா.போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணி உள்ள வெச்சிருவேன்." கை நீட்டி அவரை மிரட்டினாள்.

"என்னடி இதெல்லாம்.இப்டி ஒரு காரியத்த பண்ணிட்டியேடி இனிமே எப்டி வெளிய தல காட்டுவேன் நான்..உன்ன செல்லம் கொடுத்து படிக்க வெச்சி உன் ஆட்டத்துக்கு சேந்து ஆடுனதுக்கு நல்ல கைமாறு கொடுத்துட்ட.." உண்மையான வேதனையோடு பேசினார் காளைப் பாண்டியன்.

"ஓ ஷீட்.. அப்பா என்னமோ உத்தமன் மாதிரி பேசுறீங்க.. அத்தையோட பூரா சொத்தை ஆட்டைய போட நீங்க பிளான் பண்ணலாம்..  அதுக்குதானே மித்ரன கட்டிக்க சொல்லி என்ன போர்ஸ் பண்ணிங்க.அவன் சரியான பேகான்.. என்னோட அருமை அவனுக்கு புரியல.. எப்போ பாரு அவனோட வெந்த மூஞ்சி பொண்டாட்டிய தூக்கி வெச்சே பேசுறான். அவளும் அவ மூஞ்சும். அவன் யெல்லாம் எனக்கு செட் ஆக மாட்டான்..இது என் லைப்.. நான் தான் முடிவு பண்ணுவேன். ஒழுங்கா சீர் பணத்த என் அக்கௌன்ட்ல போடுங்க.டார்லிங் கம் லெட்ஸ் கோ"சிந்தும் அவள் கணவனோடு சென்று விட்டாள். நல்ல வேளையாக அவன் வடக்கத்தியன் போல. இவர்கள் பேசிய சம்பாஷணை ஒன்றும் அவனுக்கு புரியவில்லை. இளம் வயதுக்காரி மனைவியாக கிடைத்த குஷியில்  அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தான் அவன்.

சிந்து சென்ற பிறகுதான் அவள் பேசிப் போன வார்த்தைகள் அனைத்தும் கமலா காதில் ஒலித்தன. ஆக இந்த சொத்துக்காக தான் தன்னுடைய அண்ணன் இத்தனை வருடங்களாக தன்னுடன் இருக்கிறார். தன்னை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி எத்தனை விதத்தில் தன்னை ஏமாற்றி இருக்கிறார்.

தானும் அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து எவ்வளவு பெரிய தப்பு செய்துவிட்டேன்.  என் மகன் அன்று சொன்னானே மாமாவை நம்பாதீர்கள் என்று அதை ஒரு நிமிடம் காது கொடுத்து கேட்டேனா.. அவர் என்னை விட்டுச் சென்றதிலிருந்து இந்த குடும்பத்தை தூணாக நின்று தாங்குபவன் என் மகன் தானே.. அவன் பேச்சை உதாசீனப்படுத்திவிட்டு என்னை படுகுழியில் தள்ள நினைக்கும் என் அண்ணனோடு சேர்ந்து அவனை எவ்வளவு துன்பப்படுத்தி விட்டேன்..

 கமலாவின் கண்களில் கண்ணீர் வேகமாக வழிந்தோடியது. அப்படியே தரையில் அமர்ந்து விட்டார். வாயைத் திறந்து ஒரு சொல் தன் அண்ணனை சொல்லவில்லை. காளைப் பாண்டியனை கமலா பார்த்த பார்வையிலேயே  ஏன் என்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்தாய் என வாய்விட்டு கேட்காமல் கேட்பது போல இருந்தது.

இனிமேலும் இங்கே இருக்க முடியாது என கணவனும் மனைவியும் அந்த நிமிடமே தங்களுடைய உடமைகளை எடுத்துக்கொண்டு ஊருக்கு கிளம்பி விட்டார்கள். உண்மையில் அவர்களுக்குமே இது பெரிய அடியாக விழுந்தது. சிந்து இப்படி செய்வாள் என்று அவர்கள் எண்ணவில்லை. குணாவிற்கு அழைத்து சிந்து  செய்த விஷயத்தை பற்றி சொல்ல அவனும் அவன் எப்பொழுதோ இம்மாதிரி ஓடிருப்பாள் என்று எண்ணியிருந்தேன் ஏன் இவ்வளவு தாமதமாக செய்திருக்கிறாள்..

 மகளைக் கூட்டி கொடுத்து அதன் மூலமாக வரும் சொத்தை அடைய கேவலமாக இவர்கள் செய்த விஷயங்களை எல்லாம் சொல்லி காரித்துப்பி அழைப்பை துண்டித்து விட்டான் குணா.காளைப் பாண்டியன் மன வேதனையில் படுத்தவர் தான் மறுநாள் எழவே இல்லை. படுக்கையிலேயே அவரின் உயிர் சென்றுவிட்டது.கணவனின் நிலையை கண்ட காமதேனுவுக்கு புத்தி பிரண்டு ஒருபக்கம் கை கால்கள் இழுத்து விட்டது.

ராஜ் குணா வெண்ணிலா கங்கா கமலா அனைவரும் வந்து காலை பாண்டியனுக்கு செய்ய வேண்டிய இறுதிக் காரியங்களை செய்து விட்டுச் சென்றனர். சிந்து விஷயத்தை கேள்விபட்டதும் எப்பொழுது தன் சீர்வரிசை கொடுக்கப் போகிறீர்கள் என்று தான் குணாவிடம் கேட்டாள். அவலை வாயில் வழங்க முடியாத வார்த்தைகள் கொண்டு அர்ச்சித்த குணா  கைபேசியை அணைத்து விட்டான். குணா கண்களில் துளியும் கண்ணீர் வரவில்லை. சொல்லப்போனால் யார் கண்களிலும் கண்ணீர் வரவே இல்லை.

 அங்கே வீரிட்டு தனது தாத்தாவின் இறுதிப் பயணத்திற்கு அழுந்தது இருதயா மட்டுமே.. எந்தக் குழந்தையைக் கொல்ல காளைப் பாண்டியன் யோசித்துக் கொண்டிருந்தார் அந்த குழந்தை தான் அவரது இறுதி காரியத்தின் போது தனது கண்ணீரை விட்டு வழியனுப்பியது.

காமதேனுவை பெங்களூரில் இருந்த மனவாழ்வு சிகிச்சை மையத்தில் சேர்த்த குணா வாரத்தில் ஒரு நாள் தன் தாய் என்று பார்த்து வருவான். பெற்ற கடனுக்காக அதை அவன் செய்து கொண்டிருந்தான். கமலா இப்பொழுது அந்த வீட்டில் தனி மரமாக இருக்கிறார். வீட்டில் நடந்த அனைத்தையும் வேலையாட்கள் மூலம் கேட்டறிந்தான் ராஜ். நிலா எவ்வளவோ வற்புறுத்தியும் அவள் சென்று தனது தாயை தன்னுடன் அழைத்து வரவில்லை. இன்னும் கமலா வாயைத் திறந்து ஒரு வார்த்தை யாரிடமும் பேசவில்லை.

வாரத்தில் ஒருநாள் கட்டாயமாக தன் வீட்டிற்கு சென்று தன் தாயிடம் என்ன வேண்டும் என்று வினவுவான் ராஜ்.கமலா எதையும் சொல்லமாட்டார் வெறுமனே அவன் முகத்தை பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பார். இப்படியே நாட்கள் செல்ல ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் ராஜ் அவன் தாயை கையை பிடித்து"ம்மா என்ன நடந்தாலும் நான் இருக்கேன்.. நீ எதையும் போட்டு பீல் பண்ணாத. எப்ப உனக்கு என் வீட்டுக்கு வரணுமோ வா.. இல்ல நா நிலாவோட இங்க வரணும்னா சொல்லு வரேன்"என்றான்.

 கமலா அவன் பேசியதை காதில் வாங்கிக் கொண்டாரே தவிர பதில் ஏதும் சொல்லவில்லை.. அவர் பார்த்த பார்வையிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது அவரால் இன்னும் வெண்ணிலாவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த ஒரே காரணத்தினால் தான் வெண்ணிலா எத்தனை முறை அவனை நச்சரித்தாலும் அவன் பேசாமல் இருந்தான் ஒருமுறைகூட வெண்ணிலாவை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லவில்லை. தன் அனுமதியில்லாமல் அவளும் செல்ல கூடாது என்று சத்தியம் வாங்கியிருந்தான்.

 இப்படியே மூன்று மாதங்கள் சென்றுவிட்டது.. வெண்ணிலாவுக்கு வளைகாப்பு. ஒரே பெண் என்று மாறனும் தாமரையும் எவ்வளவோ கேட்டுப் பார்த்தார்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல. ஆனால் ராஜ் மறுத்து விட்டான். "வேணா மாமா.. ஏற்கனவே பிரியாவுக்கு உடம்பு முடியல. நிலாவுக்கு முன்னுக்கு கல்யாணம் பண்ண சுஜி சுகிக்கும் இன்னும் புள்ள பொறக்கல. இப்ப இருக்குற நெலமயில நீங்க கிராண்ட்டா செஞ்சா அவங்க மனசு கஷ்டப்படாத"

தன் உடன் பிறந்தவர்களின் மனம் வேதனை படக்கூடாது என என்னும் மருமகனின் உயர்ந்த மனதை எண்ணி உவகை கொண்டார் தாமரை. ராஜ் கேட்டுக் கொண்டதன் படி வெண்ணிலாவின் வளைகாப்பு அவன் வீட்டிலேயே அடக்கமாக நடந்தது. அவளின் திறமை என்ன என்பதை வளைகாப்பு முடிந்ததும் ஒரு சிறிய  பெட்டியின் உள்ளே வைத்துக் கொடுத்தான் ராஜ். வெண்ணிலா ஆர்வமாக அதனை திறந்து பார்த்தாள். உள்ளே "இந்த நொடி போதுமே" என்று அவள் முதன் முதலில் எழுதி டைரியில் மறைத்து வைத்திருந்த அவளின் கதை புத்தகமாக வெளி வந்திருந்தது.

 கண்களில் கண்ணீரோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்"விக்ரம் தான் சொன்னான்.உனக்கு கதை எழுதப் புடிக்கும்னு.. ஏன் என்கிட்ட சொல்லல..இதான் உன் பேஷன் பாப்பா. நீ ஒரு எழுத்தாளினி.. உன்னோட பேஷன் ரைட்டிங்.."குனிந்து அவள் நெற்றியில் இதழ் பதித்தான் ராஜ் மித்ரன்.

இப்படி சந்தோசமாகவே இருந்தால் விதிக்கு பிடிக்காதே. வெண்ணிலா பட்ட கஷ்டங்கள் போதாதென்று பெரிய அடியாக விழுந்தது ராஜ் மித்ரன் பலத்த காயங்களோடு உயிருக்கு மருத்துவமனையில் போராடி கொண்டிருக்கிறான் என்ற செய்தி.. வெண்ணிலா அடித்து பிடித்து மருத்துவமனைக்கு சென்று சேர்வதற்குள்?


Comments

  1. Raj eduvum aaga koodathu sis ok 😡😡😡😡

    ReplyDelete
  2. Servatharkul......????? Enna ipadi solluringa onnum aga kudathu solliten.....plz sis ethum thappa yosikathinga raj and nila nala valamum papa kuta plz plz raj ku onnum aga kudathu plz........

    ReplyDelete
  3. Please story sada kondu pogathinga

    ReplyDelete
  4. Sis idhu true story ahhh🙄

    ReplyDelete
  5. Deiyame pathu eluthunga unga kaila than raj irukan 😡😡😡😡😡😡😡😡👌👌👌

    ReplyDelete
  6. Interesting ud sis nice achoooo raj ku onnum aga kudadhu sis achoooo

    ReplyDelete
  7. Yanapa ipadi panringa vennila pavam rajku yathuvm akaga kudathu

    ReplyDelete
  8. So nice ppa 👌
    Sockinga முடிச்சிட்டிங்க
    Rai நிலா வின் காதல்லால்
    பிழைப்பான்👌💞💐💐💐💐

    ReplyDelete
  9. Unna kolla poran antha pilla pattathu pothatha innama nenachchiitu suththara mithran seththa ne avlo🏹🏹

    ReplyDelete
  10. Raj ku onnum aga koodathu akka 😪😪

    ReplyDelete
  11. நல்லா தானே போச்சு அதுக்குள்ள என்ன இப்பிடி பண்ணிட்டிங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்