5 நெருங்கினா(ள்)ல்?


வரிசையாக கீழே அமர்ந்திருந்த ஆறு மருமகன்களை பார்க்கையில் ஆவுடையப்பனுக்கு நினைவலைகள் இரண்டு நாட்களுக்கு பின் நொக்கி சென்றது. அன்று நடு ஜாமம் குண்டலகேசி கடத்தப்பட்ட செய்தி கேட்டு நெஞ்சை பிடித்து கொண்டு விழுந்த மனிதரை அங்கிருந்த முகமூடிகள் வெளியே நிறுத்திருந்த மினி வேனில் அள்ளிப் போட்டுக் கொண்டு எங்கேயோ சென்றனர். ஆவுடையப்பனை மட்டுமல்ல அவரின் ஆறு புதல்விகளையும் அவர்கள் பெற்ற வாலுகளையும் தான்.

ஒரு வில்லாவினுள் வேன் நுழைந்தது.ஆவுடையை மீண்டும் தூக்கி கொண்டு வில்லா உள்ளே செல்ல அங்கே ஒரு மருத்துவர் இவர்களை எதிர்பார்த்து தயாராக இருந்தார். ஆவுடைக்கு அவசரமாக சிகிச்சை செய்யப்பட்டது. நல்ல வேளை பெரிதாக ஒன்றுமில்லை. கொஞ்சம் இனிப்பு நிறைய அதிர்ச்சி.. இதெல்லாம் சேர்ந்து தான் அவரை இந்நிலைக்கு தள்ளி விட்டது..

முகமூடிகளில் ஒருவன் ஆறு பெண்களையும் பார்த்து"இந்தாங்கம்மா உங்க அப்பனுக்கு ஒன்னும் இல்ல.. ஆளு இப்ப போக மாட்டான்.. எல்லோரும் உள்ளார போயி தூங்குங்க.. "

"என்னது தூங்குறதா அண்ணே நாங்க என்ன கொடைக்கானல் டூரா வந்துருக்கம்..எங்கள கடத்திட்டு வந்துருக்கீங்க..எங்க தங்கச்சிய கடத்தி வெச்சிருக்கீங்க.. இதெல்லாம் எங்க புருசனுங்களுக்கு தெரிஞ்சா என்ன ஆவிங்க தெரியுமா"... மாதவி மிரட்ட.

"என்ன ஆவுதுனு நாளைக்கு பேசிக்கலாம் இப்ப போயி படுங்கம்மா"என இன்னோரு முகமூடி மென்மையாக பேசிக்கொண்டே கைதுப்பாக்கியை எடுத்து வன்மையாக நீட்ட ஆறு பெண்களும் குழந்தை குட்டிகளோடு அவர்கள் காட்டிய அறைக்குள் முடங்கி கொண்டனர். பயத்தில் யாருக்குமே உறக்கம் வரவில்லை. குழந்தைகள் மட்டும் உறங்க பொழுது விடிந்து விட்டது.

அறைக்கதவை திறந்து வெளியே செல்ல யாருக்கு தைரியம் இல்லை.  ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே அறுவரும் அமர்ந்திருக்க வெளியே ஐயோ அம்மா என்று ஒரே சத்தம்..

கண்ணகி"ஹேய் வளையாபதி உன் புருஷன் மாதிரி இருக்குடி.."

"ஐயோ ஆமாக்கா.. அந்தாளு எங்குட்டு இங்க வந்தான்.. ஒருவேளை நம்மள கடத்துன விஷயம் தெரிஞ்சு காப்பாத்த வந்துருப்பானோ"

மாதவி"காப்பாத்த வந்தவன் ஏன்டி ஐயோ அம்மானு அலறுறான்.. ஹேய் கேளுங்கடி கோபு புருஷன் சவுண்டு கேக்குது"

கோபு"ஹேய் வாங்கடி கதவ தொறந்து பாத்துரலாம்"என அறுவரும் ஒருவாறு தைரியத்தை திறட்டி கதவை திறக்க அங்கே அறுவரின் கணவன்மர்களும் சட்டை இல்லாமல் லாக் கப் குற்றவாளிகள் போல குத்தவைத்து கீழே வரிசையாக அமர்ந்திருந்தனர்.. ஆவுடை ஒரு ஓரமாக சோபாவில் சாய்ந்து கொண்டே இதனை தடுக்க வழியறியாது பார்த்திருந்தார்..

மாதவி" இவனுங்கள எப்படிடீ தூக்கினாங்க.."

சிந்தாமணி"நம்மள எப்படியோ அப்படித்தான்.."

கண்ணகி" ஆனா குடும்பத்தயே தூக்கி என்ன பண்ண போறானுங்க.. "யாருக்கும் பதில் தெரியவில்லை..

 தங்களுடைய மனைவிமார்கள் தங்களை பார்பதை கண்டதும் மாதவியின் கணவன் கோவலன் மனைவி முன்பு வீராப்பை காட்ட வாங்கிய அடியை மறந்து  மீண்டும் எழுந்து அந்த முகமூடிகளை பார்த்து சவுண்ட் விட்டான்.

"இன்னாடா எம்மாம் அடிச்சாலும் கெண்டை மீனு மாறி துள்ளுற.. உன் மிஸ்ஸஸ் கையில சீன் போடுறியா அடிங்கோ" பல்க்காக இருந்த முகமூடி ஒருவன் கோவலனின் காதை சேர்த்து ஒரு அப்பு அப்ப,

'செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.'

"அப்படினு வள்ளுவர் சொல்லிருக்காரு தம்பி.. காது மேலயே அப்புறியே என் மருமவனுக்கு ஸ்பீக்கர் அவுட்டான அதுக்கும் என் மண்டயில தான் மொளகா அரைப்பாரு ஆபரேஷன் செய்ய.. ஏழைப்பட்ட தமிழ் வாத்தியார் தம்பி.. கொஞ்சம் பாத்து பக்குவமா செய்ங்க.."..

தன் சகலை அடிவாங்கியதை கண்டு ரத்தம் சூடாகி"என் சகலைய எப்டிடா நீ அடிக்கலாம்"என்ற கோபுவின் கணவன் 
சைத்தன்யன் பாய்ந்து வர அவனுக்கு வலது பக்க கண்ணில் ஒரு குத்து.

உடனே ஆவுடை...

'கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.'

"அய்யோ தம்பி என் மருமவனுக்கு ஆந்தை கண்ணா இருந்தாலும் அது மட்டும் தான் உருப்படியா இருக்கு.. அதும் நொள்ளையாச்சுன்னா என் கண்ண புடிங்கிருவாருப்பா"...

" பெருசு அத விடு இப்ப பாரு".. என கண்ணகியின் கணவன் வைரமுத்துவை தூக்கி பிடித்து வாயிலேயே ஒரு குத்து விட

'நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.'

என்று இந்த முறை குத்தியவனே கூற வாத்தி குஷியாகி விட்டார்..

"தம்பி உங்களுக்கு திருக்குறள் எல்லாம் தெரியுமா.. இந்த கால பசங்களுக்கு எங்க இதெல்லாம் மண்டயில ஏறுது. டிக் டோக்ல ஏதாச்சும் பொண்ணு குலுக்கி குலுக்கி ஆடுனா வாய பொளந்துட்டு பாக்குதுங்க..".. வாத்தி கண்ணில் ஆர்வத்தை கண்டதும் சிந்தாமணி கணவன் ரஜினி அடுத்த பலியாடாக சிக்கினான்.அவன் வயிற்றில் குத்து வாங்க 

'ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.'

என்று கூறினான்.

அடுத்து வளையாபதியின் கணவன் வாசு சிக்க அவன் கையை பிடித்து முறுக்கினான் ஒருவன்.. இம்முறை உடனே வாத்தி

'வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.'

"மாப்ள சத்தியமா உலகம்  என்ன மன்னிக்காது..இந்தக் குரல் என்ன சொல்லுது தெரியுமா.. அடுத்தவங்களுக்கு கொடுக்கறது தான் ஈகை குணம் அப்படின்னு சொல்லுது.. உங்களுக்கு அடுத்தவங்க கிட்ட இருந்து கறக்க தானே தெரியும்.. கொடுக்க எப்படி மாப்ள தெரியும்"

வலி தாங்க முடியாமல் வளையாபதியின் கணவன் சுருண்டு விழ இறுதியாக நடுங்கிக்கொண்டிருந்தான் மணிமேகலையின் கணவன். அவனை முகமூடி பிடித்து தூக்கி அதற்குள் அவனே"ண்ணே என்ன விட்ருங்கண்ணே.. வீக் பாடி... என் பொண்டாட்டி அடிச்சாலே நான் தாங்க மாட்டேன்.. இதுல பீம் பாய் மாதிரி இருக்கிற நீங்க அடிச்சா நான் செத்தே போயிடுவேன்.. அடியே மணிமேகல கொஞ்சம் சொல்லுடி"மனைவியை துணைக்கு அழைத்தான் அவன்..

 தன்னால் முடியாத ஒன்றை யாரோ பெற்ற பிள்ளை நிறைவேற்றும் போது அதை தடுத்தால் உலகம் அவளை நாளை பழிக்காது? எனவே  ஒரு நிமிடத்திற்கு கேட்கும் சக்தியை விருப்பப்பட்டே இழந்தாள் மணிமேகலை. மற்றவர்கள் போல இவனுக்கு கண்ணு காது வாய் என்று இல்லாமல் தரும அடி விழுந்தது..

'பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.'

 என்ற திருக்குறளை சொல்லி முடித்த ஆவுடை மருமகனை பார்த்து" மாப்பிள ஆண்மை அப்படின்றது எதிரிய அடிக்கிற வீரத்துல இருக்கு.. ஆனா அதவிட ஆண்மை எதுல இருக்கு தெரியுமா அந்த எதிரிக்கும் கஷ்டம் வரும்போது உதவி செய்றதுல.. நீங்க எச்சி கையில கூட காக்கா ஓட்ட மாட்டீங்க..  ஆபத்துனு யாராச்சும் உங்க கால புடிச்சா வேட்டிய அவுத்து விட்டுட்டு ஓடி வருவீங்க.. இனிமே யாருக்காச்சும் உதவி வேணும்னா முடிஞ்சத செய்யுங்க மாப்ள..இது ஒரு பொதுநல அறிவிப்பு தான்.. நாளப் பின்ன ஏன் பொண்ண குனியவச்சு குத்திடாதீங்க மாப்ள"

 அனைவரும் வலியில் உருண்டு புரண்டு கொண்டிருக்க மாதவியின் கணவன் கோவலன் மனைவி என்று நினைத்து கண்ணகியைப் பார்த்து"அடியே மூதேவி மனுஷன் வலியில துடிச்சுகிட்டு இருக்கான்.. உனக்கு என்னடி அங்குட்டு வேடிக்க.. நீ வீட்டுக்கு வா உன் சிண்ட அறுக்குறேன்..தரித்திர புடிச்சப் பய வீட்ல பொண்ணு எடுத்ததுக்கு நல்லா வேணும்டி எனக்கு"

"யோவ் கொழுந்தனாச்சேன்னு பாக்குறேன்.. இல்ல வெளக்கமாறு பிஞ்சிரும் ஆமா.. அங்குட்டு நிக்கிறாயா உன் பொண்டாட்டி..கோபு புருசனுக்கு தான கண்ணு நொள்ளையாச்சு.. உனக்கு காது தான அட்டாக் ஆச்சு..கண்ணு போன அந்தாளே கரெக்ட்டா பொண்டாட்டிய பாத்து நவுந்து போறான். உனக்கு என்ன கேடு வந்துச்சு.. அந்த கால கண்ணகியோட புருஷன் கோவலனு உன்ன நெனச்சிட்டியோ.. பொளந்துருவேன் பாத்துக்கோ"கோவலன் ஒரு பக்க காதை உள்ளங்கையால் மூடிக் கொண்டு மறு பக்க காதிடம் கையை நெருக்கி வைத்தும் கண்ணகி சொன்னது பாதி கேட்கவில்லை.. ங்கே.. என அவன் சத்தம் கொடுக்க

"ஐயோக்கா என் புருஷன் கிட்ட உருப்படியா இருந்ததே சவுண்ட் சிஸ்டெம் தான். அதும் போச்சா.. அப்பா ஒரு செவுட்டு மிஷின் வாங்க பணத்த பொறடுங்கப்பா"..

"அப்பாவுக்கு ஒரே மயக்கமா வருதும்மா காது சரியா கேக்கல"என சாய்ந்து விட்டார் ஆவுடை.

"ஹேய் கோபு அங்க பாருடி உன் புருஷன் தவழ்ந்து வரான்.."என்றாள் சிந்தாமணி.. அவள் சொல்லியபடியே தவழ்ந்து வந்த சைதன்யன் தன்னுடைய மனைவி கோப்பெருந்தேவிக்கு பதிலாக மணிமேகலையின் காலைப் பிடித்துக் கொண்டான். அப்படியே மேலே ஏற பார்க்க அவள் சேலையை இறுக்கமாக பற்றிக்கொண்டான்..

"ஐயோ கோபு உன் புருஷன் என் சேலைய உருவுறான்டி.. அடேய் சைத்தான் உன் பொண்டாட்டி அங்க இருக்காடா.. விட்றா என் சேலைய.. யோவ் உன் கண்ணு முன்னாடியே உன் பொண்டாட்டி சேலைய புடிச்சி ஒருத்தன் உருவுறான்.. பாத்துட்டு சும்மா படுத்து கெடக்க."

 அங்கே சகட்டுமேனிக்கு அடிவாங்கி வலியில் உருண்டு கொண்டிருந்த பாபு"யாரு என் பொண்டாட்டி மணிமேகல குரல் மாதிரி கேக்குது.. "

"நான் தான்யா"

"ஓ நீதானா.. ஏன்டி அவன் சேலைய உருவுனா ஓங்கி நாலு மிதி மிதிடி.. அத விட்டுட்டு என்கிட்ட சொல்ற.. வெக்கமா இல்ல உனக்கு..சகட்டு மேனிக்கு அவன் என்ன வெச்சு சாத்துறான் ஒய்யாரமா நின்னு வேடிக்க பாத்தவ தானடி நீயு.. இருடி பாடி பழையபடி ஆகட்டும்.. மிதிக்குற மிதியில நாலு அடி குள்ளமானாலும் பரவால்ல.. அடேய் எவன்டா அது என் பொண்டாட்டி சேலைய புடிச்சு உறவுறது..நான் உருவியே வருஷகணக்கா ஆகுதுடா.. நாதாரி எந்திரிச்சு வந்தேன்"..

"ஐயோ ஸாரி சகல.. உன் பொண்டாட்டியா தெரியாம புடிச்சிட்டேன்.. ஹேய் கோபு எங்கடி இருக்க"என்றவன் கைகளால் துலாவ அவனை தலையில் அடித்துக்கொண்டு பிடித்து தூக்கி நிறுத்தினாள் கோப்பெருந்தேவி.. அவளைப் போலவே அவளின் சகோதரிகள் அனைவரும் அடிப்பட்டு கிடந்த தங்கள் கணவன்மார்களை தூக்கி ஒரு ஓரமாக அமரவைத்து முதலுதவி செய்து கொண்டிருந்தனர்.

 உள்ளுக்குள் அவர்களுக்கு ஒரே சந்தோஷம் தான் இவர்கள் அனைவரும் ஆடிய ஆட்டத்திற்கு யாரோ ஒருவன் தண்டனை கொடுக்கிறான்.  ஆனால் எதற்காக இப்படி வில்லாவுக்கு கூட்டி வந்து அடித்து துன்புறுத்த வேண்டும். கடத்திச் செல்லப்பட்ட  தங்கை என்ன ஆனாள் என்றே தெரியவில்லை..தந்தையின் நெஞ்சுவலிக்கு இவர்கள் ஏன் சிகிச்சை அளிக்க வேண்டும்.. ஒன்றுமே புரியாமல் விழித்துக் கொண்டிருந்த சகோதரிகளிடம் அந்த முகமூடிகளில் ஒன்று

"இந்தம்மா இது ஒங்க வீடு மாதிரி.. நேரா நேரத்துக்கு சமைச்சுப் போட ஆள் இருக்கு.. கை கால வச்சிக்கிட்டு சும்மா இருந்தா அக்கடான்னு இருக்கலாம்.. உங்க புருஷனுங்க எல்லாருக்கும் சொந்த வியாபாரம் தானே.அதனால எத்தன நாள் இங்கு இருந்தாலும் பிரச்சன இல்ல..என்ன வியாபாரம் போயிரும்னு பார்க்கிறீங்களா.நாங்க சொல்ற வரைக்கும் நீங்க இங்கேயே இருக்கணும்..  அப்படி இருந்தா உங்க வாழ்க்கை பூரா சம்பாரிச்சா எவ்ளோ சம்பாதிப்பிங்களோ அத ஒரே நாளுல கையில கொடுப்போம். தப்பிக்க பிளான் பண்ணாதீங்க..அது வேஸ்ட்..இப்ப எல்லாருக்கும் சாப்பாடு ரெடி ஆயிடுச்சு..  போய் சாப்பிடுங்க"

என்று சொன்னதும் குழப்பமாக இருந்தாலும் அவர்கள் கையில் இருக்கும் கைத்துப்பாக்கி இவர்களை மேலே யோசிக்க விடாமல் அவர்கள் சொன்னதை செய்ய வைத்தது. பெண்கள் அனைவரும் தமது கணவன்மார்களுக்கு தட்டில் உணவு பரிமாறி அவர்களே ஊட்டி விட ஆவுடையப்பனுக்கு உணவு உள்ளே இறங்க மறுத்தது.. குண்டலகேசி நினைவு அவரைப் போட்டு வாட்டியது.

 அருகே நின்ற முகமூடி ஒருவனிடம்"தம்பி உன்ன மகனா நான் நினைச்சு கேட்கிறேன்..தயவு செஞ்சு என் பொண்ணுக்கு என்ன ஆச்சு அத மட்டும் சொல்லு..அவ நல்லா இருக்கால்ல.."

" பெரியவரே உங்க பொண்ணு இனிமே தான் அதோட வாழ்க்கையில சந்தோஷமா இருக்க போது.. நீங்களே இங்க பாக்குறீங்கல்ல..  உங்களுக்கே இவ்ளோ பந்து பஸ்த்தா இருக்குனா உங்க பொண்ணுக்கு எப்படி இருக்கும்..உங்க பொண்ணு மகாராணி மாதிரி இருப்பாங்க.. நீங்க பாக்க ரொம்ப பாவமா இருக்கீங்க அதனால ஒன்னு சொல்றேன்.. உங்க பொண்ண கடத்திட்டு போனது கெடுக்க இல்ல..  கல்யாணம் கட்டிக்கிட்டு கூடவே வெச்சு வாழ.. கூடிய சீக்கிரம் பொண்ணும் மாப்பிள்ளையும் உங்கள பார்க்க வருவாங்க..அது வரைக்கும் நீங்க இங்க நிம்மதியா இருங்க..இது மட்டும் தான் என்னால சொல்ல முடிஞ்சது.. "

 ஆவுடையப்பனுக்கு இன்னும் பல விஷயங்கள் தெளிவில்லாமல் இருந்தாலும் அவன் கூறிய ஒன்று மண்டைக்குள் உரைத்தது.  இவர்களுக்கே இவ்வளவு பார்த்து பார்த்து செய்தால் கண்டிப்பாக இப்படி செய்தவன் தன் மகளுக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டான்..  என் மகள் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாதவள் கடவுளே .. அவள் இந்த உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அவளுக்கு வேண்டிய தைரியத்தையும் திடத்தையும் கொடு.அவள் நிழலை ஒருவன் தப்பாக தொட முயன்றாலும் அவன் நாசமாக போய் விடுவான்.என்று அவளுக்காக மானசீகமாக வேண்டிக் கொண்டார் ஆவுடையப்பன்.இது நடந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது.

 இந்த இரண்டு நாட்களில் குண்டலகேசி இங்கிருந்து தப்பி செல்லும் வழியை யோசித்து,முயற்சி செய்து, இறுதியில் அவனிடம் மாட்டிக் பேய் முழி முழித்து,அவள் தப்பித்து செல்லும் முயற்சியை இனிமே யோசிக்கவே கூடாது அளவுக்கு அவன் தண்டனை கொடுத்து,அதனால் வெடவெடத்து போயிருந்தாள்.

 அங்கே வந்த அவள் ஒரு நாள் கழிந்த பின்னும் அவனைப் பார்க்கவில்லை. அங்கிருந்த வேலையாட்கள் யாருமே அவள் கண்களுக்கு தெரியவில்லை.எப்பொழுது சுத்தம் செய்கிறார்கள்? எப்பொழுது சமைக்கிறார்கள்? என்று எதுவுமே அவளுக்கு தெரியவில்லை.அது வீடு என்பதை விட ஒரு பெரிய கோட்டை எனலாம். சமையலறையிலிருந்து கம கம என்று வாசம் வந்தது, அங்கே யார் இருக்கிறார்கள் என்று வந்த வாசத்தை இழுத்துக் கொண்டே சமையலறைக்குச் சென்று பார்த்தால் அங்கே ஒரு ஈ காக்கா கிடையாது..

சாம்பிராணி வாசம் அந்த கோட்டை முழுவதும் அடித்து தூக்கியது. பூஜையறையை தேடிப் பிடித்துப் போய் பார்த்தால் அங்கே சாமி படங்கள் தான் வரிசைகட்டி சுவரில் தொங்கியது. எவ்வளவு நேரம் தான் அவளும் அறையில் முடங்கிக் கிடப்பாள்.  ஒவ்வொரு அறையாக சென்று அவனையாவது சந்தித்துப் பேசலாம் என்று பார்த்தால் எந்த அறையிலும் அவன் இல்லை. மதியம் உணவு உண்ணும் போது தான் அவனை இறுதியாக பார்த்தது.

 நிறைய புத்தகங்கள் தொலைக்காட்சி இவ்வளவு ஏன் வைபை wifi கனெக்சன் கூட அவளது அறையில் இருந்தது..  எவ்வளவு நேரம் தான் அறைக்குள் இருப்பாள் கோட்டையை விட்டு வெளியேறி தோட்டத்தில் நடக்க தொடங்கினாள். அப்படி நடந்து கொண்டிருக்கும் போது இந்த வீட்டுல யாருமே இல்ல.. நாம ஏன் அப்படியே தப்பிச்சு ஓட கூடாது..கேசி.. அறிவு இருக்கா உனக்கு..அவன் என்ன சொன்னான்,,ஆயிரம் ஏக்கர் அப்படின்னு சொன்னான்.நீ என்ன வண்டியா வச்சிருக்க.. கால வச்சு எவ்ளோ தூரம் தான் நடப்ப.. காலே உடைஞ்சாலும் சரி.. இந்த மாறி சான்ஸ் எப்ப கிடைக்குமோ தெரியாது.பேசாம ஓடிட வேண்டியதுதான்..

 அவளுக்கும் அவள் மனசாட்சிக்கும் தர்க்கம் நடந்து இறுதியில் குண்டலகேசி வென்றாள். அவன் அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கேளாமல் அந்த அடர்ந்த காட்டை விட்டு வெளியேற முயற்சி மட்டுமே செய்தாள்.  அந்தக் கோட்டை வாயிலை அவள் நெருங்கும் போது

"ஹேய்"என்று குரல் அவளைத் தேக்கியது..சட்டென்று திரும்பி பார்த்தாள் ஏகலைவன் நின்று கொண்டிருந்தான்.ஆத்தி எப்ப வந்தான்..இவ்ளோ நேரம் வீட்டுக்குள்ள தான தேடுனேன்..

பொம்மை போல நடந்து அவனருகே சென்றாள் குண்டலகேசி.."அது வந்து உங்கள வீட்டுக்குள்ள தேடுனேன்..நீங்க காணும்.. ஒருவேள வெளிய போய் வழி தெரியாம மாட்டிக் கிட்டு இருப்பிங்களோன்னு உங்கள தேடி தான் கெளம்புனேன் பாத்தா நீங்களே வந்து நிக்குறீங்க மிரு சார்.."

"என்ன தேடி கெளம்புனியா.. அப்டியே கப்ஸா உட்டுட்டு ஓடிரலாம்னு நெனச்சியா"

"ஐயோ கப்ஸா உடுறதா.. குசு வேணும்னா சொல்லுங்க உடுவேன்.. கப்ஸாலாம் எனக்கு உட தெரியாது மிரு சார்" அவள் இவ்வாறு கூறியதும் இப்பொழுது அவன் முகத்தில் வெளிப்படையாகவே ஒரு புன்னகையின் சாயல் தெரிந்தது.இருந்தும் அதனை காட்டாமல் மறைத்து

"கொஞ்சம் உள்ள வா.. உன்கிட்ட பேசணும்"

"ஹான்"என்று எதார்த்தமாக உள்ளே வந்தவளின் பின்னால் வந்து நின்று அவன் வளர்க்கும் மலைப் பாம்பை அவள் கழுத்தில் போட பாம்பு நெளிய ஐயோ அம்மா என்ற அலறலோடு பாம்பை தூக்கி கீழே போட்டு விட்டு நின்ற இடத்திலேயே அந்த குதி குதித்தாள் கேசி..

"நாசமா போறவனே நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டடா..கொல்லையில போறவனே கொழவி கொட்டி கொப்பளிச்சு தான்டா சாவ"என்று இதுவரை பம்மிக்கொண்டிருந்தவள் அவனுக்கு சாபமாய் அளித்தாள்.

"நாசமா நாண்டுக்கிட்டு போறேனோ கொழவி கொட்டி கொடி புடிச்சிட்டு போறேனோ நான் எங்க போனாலும் நீயும் என் கூட வரணும்"

"நீ கக்கூசுக்கு போனாலுமா"

"வந்து பாக்கறியா"

"ஏன் ஏதாச்சும் அதிசயம் உன் கக்கால வருதா அந்த கருமத்த வந்து பாக்க.. உனக்கு என்ன தைரியம் இருந்தா பாம்ப மேல போடுவ படுபாவி.."என்றவள் ஓடி சென்று குளித்தாள். அவள் குளித்து துண்டு கட்டியப்படி வெளியே வர அங்கே நாற்காலியில் அவளரையில் கால் மேல் கால் போட்டப்படி அமர்ந்திருந்தான் ஏகலைவன்.

"ஹேய் பன்னி அறிவு இல்ல.. பொட்டப் புள்ள இருக்குற ரூமுக்குள்ள வந்து ஜம்பமா ஒக்காந்து இருக்க.. எந்த நேரத்துல எப்படி இருப்பாங்கனு அறிவு இல்ல.. வெளிய போடா".. கோபமாக அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு நின்றாள் கேசி.அது அவனுக்கு வாட்டமாக போய் விட்டது. நீர் சொட்டிக் கொண்டிருந்த கூந்தலால் அவள் நின்று கொண்டிருந்த இடத்தில் துளித் துளியாய் தண்ணீர் தேங்கியது.

ஆகாய நீல நிறத் துண்டு அவள் மேனியில் படிந்திருந்த நீரின் உபயத்தால் அடர் நீலமாகி கொண்டிருக்க பார்வையை சட்டமாக அவள் முதுகில் பதித்து

"எனக்கு மட்டும் தான் இந்த ரூமுக்குள்ள கேக்காம வர உரிம இருக்கு புரியுதா.. இன்னொரு வாட்டி தப்பிக்கலாம்னு பாத்த என்ன பண்ணுவேன் தெரியுமா" என்றவன் சடாரென்று எழுந்து அவளை அப்படியே இரு கரங்களில் தூக்கினான் குழந்தை போல..

"ஹேய் ஐயோ விட்றா விடு"அவனிடம் போராடி வழியில் யாராவது பார்த்து விடுவார்களோ என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்.

"என் அனுமதி இல்லாம உன்ன பாக்க கூட முடியாது"என்றவனின் நடை எங்கேயோ ஒரு இடத்தில் வந்து நின்றது. அங்கே அவன் கண் போன இடத்தை பார்த்தவள் எட்டி அவன் கழுத்தை கட்டிக் கொண்டு

"இனிமே செத்தாலும் இப்படி செய்ய மாட்டேன்.. ப்ளீஸ் இங்கேருந்து போ சீக்கிரம்"என்று விசும்பினாள். அவளின் முதல் ஸ்பரிசம். அப்படியே சிலையாகி நின்றான் ஏகலைவன்."அப்றம் நிதானமா பீல் பண்ணுடா வெண்ண.. சீக்கிரம் போய் தொல"என்று அவள் கதற அவளை அவளது அறையில் இறக்கி விட்டவன்

"இனிமே தப்பிக்கணும்னு நெனச்ச அதுக்குள்ள தூக்கி போட்ருவேன்"என்றவன் மறுமுறை வந்து பார்க்கும் போது குளிர் காய்ச்சளில் நடுங்கி கொண்டிருந்தாள் கேசி.

சும்மா இருந்தவளை தூக்கி சென்று ஒரு பெரிய மீன் தொட்டியில் நெளிந்து கொண்டிருந்த இரண்டு மலைப் பாம்புகளை காட்டியதால் வந்த காய்ச்சல் இது. எங்கிருந்தோ ஒரு மருத்துவர் அவனுடன் அறைக்குள் வந்து மருந்து கொடுத்து விட்டு சென்றது கேசியின் மூளைக்குள் பதிவானது. அதன் பிறகு அவன் கேசி படுத்திருந்த கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்திருந்து இரவில் சின்னச் சின்னதாய் வெட்டி போடப்பட்டிருந்த கோழி கஞ்சியை அவளுக்கு ஊட்டி விட்டு மருந்து கொடுத்து இரவில் அவளருகே படுத்து அவளை நெஞ்சில் சுமந்து தூங்கி போனான்.

இது எல்லாமே அவளுக்கு தெரிந்தும் காய்ச்சளின் வீரியம் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இரண்டு நாளும் இப்படியே அவன் பார்த்துக் கொள்ள மூன்றாவது நாள் குணமானாள் கேசி.

அதுவரை இருந்த விளையாட்டு தனத்தை ஒதுக்கி விட்டு யோசித்தவளுக்கு ஒன்று நன்றாக புரிந்தது. இந்த மிருகத்திடமிருந்து அழகி குண்டலகேசி தப்பிக்கவே முடியாது என்பது.

தொடரும் 

Comments

  1. Semma akka...athuvum thirukural vaichu adi vilunthathu vera level😂😂😂😂😍😍😍😍😍

    ReplyDelete
  2. Super interesting ud 😍😍 eagerly waiting for next

    ReplyDelete
  3. Hayo sirichu sirichu mudila da samyyy... So supr sis

    ReplyDelete
  4. Super ஆன ஏன் இவளை கடத்திட்டு வந்து இருக்கான்,ரொம்ப நேரம் சிரிக்க கூடாதுன்னு இருந்தேன் முடியலை,🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😂😆😆😆😆

    ReplyDelete
  5. Enna adi semaaaaa super 😂😂😂😂😂kesi ye payanthuta 👌👌👌👌❤❤❤❤❤❤

    ReplyDelete
  6. Super sis unga story ellame sema 😊

    ReplyDelete
  7. Super sis 😍😍 atha thirukural semma 😂🤣🤣🤣

    ReplyDelete
  8. Semaiya poguthu ka... takkara iruku... Athuvum oru oru adikum kural sonnathu 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
  9. வேற லெவல் சகி 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    ReplyDelete
  10. Room pottu sirichen sis mudiyala hahaha ha semàaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  11. Malaipamapa???? Aiyoo pavam kesi, mappilainga ellarumkkum innum adhigama kodudhurukkanum😂😂😂😂😂😂😂😂👌

    ReplyDelete
  12. சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

    ReplyDelete
  13. Super sis ur all story's r awesome

    ReplyDelete
  14. Haiyoo.. I can't control 🤣🤣 Tamil Vaatthi mappillaisku kettathuku adhigamave koduthuttanga pola🙊🙊 Aegaa nd kesi convo lit.🔥😂😂 Ippovathu purinjuthe athu varaikum sandhosam kesi 🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
  15. 6 mappillagallum vangana adhikku,Thirukural vecchu comedy sonnadhu arumai sis,,,,semmma sirichu sirichu vayiru valliye vandhirchu

    ReplyDelete
  16. Thirukural vachi adichathu sooper uh!!.. Engalukum athu useful ah irunthuchi!! Waiting for the next ud!! 🌟🌟

    ReplyDelete
  17. ஹையோ ஹையோ என்னால சிரிப்ப அடக்க முடியல. மாப்ளகாரன்களுக்கு இன்னும் நல்லா வேணும் 🤣🤣🤣

    ReplyDelete
  18. I cant control my laugh. Oh my god. Unbelievable lines. Adum andha mapilaikala adi velukura scene semma...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்