11 நெருங்கினா(ள்)ல்


தன்னுடைய குட்டி மூளை சூடாக அவளும் பார்த்து பார்த்துதான் பல யோசனைகளை கையாண்டு தோற்றுப் போகிறாள்.  தோல்வி குண்டலகேசிக்கு ஒன்றும் புதிதல்ல.  ஆனால் அதனை அவளால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. இந்த பிரச்சனையில் அவள் மட்டுமே சிக்கியிருந்தால் ஒருவேளை சுலபமாக அவள் தப்பித்து சென்று இருக்கலாம்.  இல்லையேல் ஒரு வைராக்கியத்தில் தன்னையே அழித்துக்கொண்டு இருக்கலாம். எதுவுமே செய்ய இயலாத நிலையில் அவளது குடும்பம் மொத்தமும் அவனது பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது அவள் எது செய்தாலும் அது கண்டிப்பாக அவள் குடும்பத்திற்கு நேர் வினையாக சென்று சேர்ந்துவிடும். இப்பொழுதே அவளுடைய மாமன்மார்கள் ஆவுடையப்பனை ஆட்டுரலில் இட்லிக்கு மாவு ஆட்டுவது போல ஆட்டிக் கொண்டிருப்பார்கள். அக்காமார்கள் என்னதான் தன் கணவன்மார்களை அடக்கினாலும் அடங்கிப் போகிற ஜென்மமா அவர்கள்?இங்கே வந்து சரியாக ஒரு வாரமாகி விட்டது.இன்னும் இங்க இருந்து தப்பிக்கும் வழியை அவள் கண்டறிய முடியவில்லை. பார்வைக்கு வேண்டுமென்றால் வந்தியதேவன் வில்லனாக தெரியலாம். ஆனால் அவனிடம் ஏதோ ஒரு நல்ல குணம் இருக்கிறது.

அப்படி இல்லையென்றால் கடத்தி வந்தவளை உடனே கற்பழித்து நாசமாக்கி இருப்பானே? கல்யாணம் செய்துகொண்டு தனிச் சிறையில் அவளை வைத்திருந்தாலும் அவளை அவன் வதைக்கவில்லையே? சில நேரங்களில் அவள் அவனுடைய நேசத்தைப் பற்றி ஏதாவது கூறினால் மட்டுமே அவளுக்கு தண்டனை கொடுத்து  குண்டலகேசியின் வயிற்றெரிச்சலை பரிசாக வாங்கிக் கொள்கிறான். மற்றபடி அவன் இருக்கும் இடமே தெரியவில்லை.யோசித்து யோசித்து பைத்தியம் பிடிக்காத குறையாக அமர்ந்திருந்தாள் குண்டலகேசி.

இன்று அவளுக்கு கரிநாள் போல. காலையிலிருந்து எதுவுமே விளங்கவில்லை. இரவு அவனது அறையில் அவள் மட்டுமே மெத்தையில் படுத்து இருந்தாள். அவன் எங்கே சென்று தொலைந்தான் என்றும் தெரியவில்லை.இப்படியே யோசித்து யோசித்து நாட்களை வீணாக்க அதற்கு பதிலாக இந்த கோட்டைக்குள் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தால் என்ன என்று அவளின் உள் மனம் அவளை கேள்வி கேட்டது. கோட்டைக்குள் ரகசியத்தை பதுக்கி வைத்திருக்க இது என்ன சந்திரமுகி படமா?

பொழுது போகவில்லை. அதோடு இந்த கோட்டையை சுற்றி  மனதிற்குள்ளேயே பிளூபிரின்ட் ஒன்றை உருவாக்கிக் கொண்டால் நாளை பின்னே இங்கிருந்து தப்பித்துச் செல்ல வசதியாக இருக்கும் அல்லவா.. அதற்காகவே  அந்தக் கோட்டையை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள். அந்தக் கோட்டை முழுவதும்  விளக்கொளிகளால் பளிச்சென்று இருந்தது.எங்கேயும் பேய் கொட்டை போல அச்சம் பரவவில்லை.ஆனால் ஆள் இருப்பதற்கான அறிகுறி தென்படவில்லை. இங்கே வந்த இந்த ஏழு நாட்களில் கோட்டையை பல முறை சுற்றி வந்து விட்டாள். ஜன்னல்கள் அனைத்தும் திறந்து  இருந்த நிலையிலும் தன்னால் ஓட முடியாத கையாலாகாத தனத்தை எண்ணி நொந்து கொண்டாள்.

ஏதோ ஞாபகத்தில் கோட்டையை சுற்றிப் பார்த்து முடித்தவள் அவனுடைய அறைக்கு செல்லாமல் தன்னுடைய அறைக்கு சென்றாள். அங்கே அவனின் செல்ல மலைப்பாம்பு தொட்டியில் இருந்து வெளியே வந்து தரையில் புரண்டு கொண்டிருந்தது. அவனைப் பார்த்தவள் பயந்து மிரள அப்பொழுதுதான் அவளுக்கு மதியம் நடந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.  அந்த மலைப்பாம்பு க்கு பசித்ததோ என்னவோ தெரியவில்லை மெல்ல ஊர்ந்து இவளை நோக்கி வந்தது. அவ்வளவுதான் குண்டலகேசி பள்ளியில் கூட ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள மாட்டாள். ஆசிரியரின் இம்சையால் கலந்து கொண்டாலும் கண்டிப்பாக கடைசியில் தான் வருவாள். அப்படிப்பட்ட பெண் ஓடிய ஓட்டத்தை பார்த்தால் கண்டிப்பாக அவளை ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ள நாடு அளவில் சிபாரிசு செய்யப் பட்டிருக்கும்.

கண்மூடித்தனமாக அப்படி ஒரு ஓட்டம்.ஆனால் அவள் ஒன்று மறந்துவிட்டாள். சாதாரண பாம்பைப் போல அல்லாமல் மலைப்பாம்புகள் தனது உடல் எடையால் மெதுவாகத்தான் ஊர்ந்து வரும்.பயத்தில் எதைப் பற்றியும் யோசிக்காத குண்டலகேசி ஏதோ ஒரு அறைக்குள் சென்று கதவை இழுத்து மூடினாள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் போல என்பதற்கிணங்க எங்கே அந்த மலைப்பாம்பு கதவை உடைத்துக்கொண்டு அனாகொண்டா போல உள்ளே வந்து விடுமோ என்ற பயத்தில் பாய்ந்து சென்று கட்டிலுக்கு அடியில் படுத்து கொண்டாள்.

சில நிமிடங்கள் வியர்வையில் நனைந்து குளித்தவளுக்கு தன்னுடைய பயம் முற்றிலும் தேவையற்றது என்பது புரிந்தது. கண்டிப்பாக இவ்வளவு தூரம் மலை பாம்பால் வர முடியாது. வந்தாலும் பூட்டிய கதவை உடைக்க அது என்ன அனகோண்டாவா.தலையில் அடித்துக் கொண்டு கட்டிலை விட்டு வெளியே வரும்போதுதான் உணர்ந்தாள்,அவள் முதுகுப் புறம் எதுவோ ஒன்று தட்டுப்பட்டது.அது ஒரு தால் போல் இருந்தது. கார்பெட்டின் கீழ் தால் தட்டுப்பட மல்லாந்து படுத்திருந்த நிலையிலேயே ஒரு கையால் அதனை தட்டிப் பார்த்தாள்.

கதவைத் தட்டுவது போல ஓசை கேட்க விறுவிறுவென்று கட்டிலின் கீழிருந்து வெளியே வந்தவள் கஷ்டப்பட்டு அந்த கட்டிலை நகர்த்த முயற்சி செய்தாள்.அங்கே ரகசிய பாதை போல ஒரு கதவு இருப்பது அவளுக்கு தெரிந்துவிட்டது. என்ன ஏது என்று அதனை முழுவதும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கட்டிலை ஒரே ஆளாக இருந்து அப்படி இப்படி என நகர்த்தி ஒருவழியாக பாதி தூரம் நகர்த்தி விட்டாள். கட்டிலை நகர்த்தியது கீழே விரித்திருந்த கார்பெட்டினை சுருட்ட அவள் எதிர்பார்த்தது போல அங்கே மெய்யாலுமே ஒரு ரகசியக் கதவு இருந்தது. மற்ற இடங்களில் எல்லாம் மொசைக் கற்கள் பதித்து இருக்க இந்த இடத்திலும் அம்மாதிரி கற்கள் பதித்த தடயம் இருந்தது.

ஆனால் யாரோ அடிக்கடி இந்த கதவை உபயோகிப்பதால் அந்த மோசைக் கற்களை எடுத்து வைத்திருப்பார்கள் போல. முதலில் ஏளனமாக சந்திரமுகி படமா என்று எண்ணமிட்டது இப்பொழுது நினைவுக்கு வந்தது. இவ்வளவு பெரிய கோட்டை கண்டிப்பாக இந்த காலத்தில் இதனை கட்டியிருக்க முடியாது. ஏதாவது ஒரு ராஜாவின் கோட்டையாக தான் இது இருந்திருக்க வேண்டும். ராஜா காலக் கோட்டை என்றால் கண்டிப்பாக இதிலிருந்து வெளியேற ஏதாவது ஒரு சுரங்கப்பாதை நிச்சயம் இருக்கும்.

இவை அனைத்தையும் விட குண்டலகேசி பரபரப்பானது இந்த சுரங்கப் பாதையின் உள்ளே சென்றால் என்ன இருக்கும் என்பதுதான்.ஆனால் அவள் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.. விதி யாரை விட்டது?  மெல்ல அந்த தாலை நீக்கி தரையில் இருந்த அந்தக் கதவை திறந்தாள். உள்ளே ஒரே கும்மிருட்டாக இருந்தது.அறையில் இருந்த அலமாரியில் மெழுகுவத்தி அல்லது டார்ச்லைட் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தாள். அவளின் நல்ல நேரம் ஒரு டார்ச்லைட் அங்கே இருந்தது. அதனை எடுத்துக் கொண்டு வேலை செய்கிறதா என்று பார்த்துவிட்டு வேகமாக அந்த படிக்கட்டுகளில் இறங்க ஆரம்பித்தாள்.

யாரோ அடிக்கடி இங்கே வந்து போகிறார்கள் போல ஏனென்றால் உள்ளே பாழடைந்து கிடக்காமல் புத்தம் புதிதாக இருந்தது அந்த கிடங்கு. ஆம் அது பழைய பொருட்கள் போட்டு வைக்கும் ஒரு கிடங்கு தான். ஆனால் அங்கிருந்த பழைய பொருட்கள் யாவும் சாமானிய பொருட்கள் கிடையாது. அவை அனைத்தும் பண்டைய காலங்களில் பயன்படுத்திய பொக்கிஷமான பொருட்கள். இந்த காலத்தில் வெள்ளைக்காரன் பார்த்தால் உடனே எடுத்துச் சென்று மியூசியத்தில் வைத்து விடுவான். ராஜா காலத்தில் பயன்படுத்திய நீண்ட வாள்கள் கேடயங்கள்  தங்கக் காசுகள் நவரத்தின கற்கள் இவை யாவும் அங்கே அட்டைப் பெட்டிகளில் ஒவ்வொன்றாக குவித்து வைக்கப்பட்டிருந்தன.

இவை அனைத்தையும் பார்க்கும் போது குண்டலகேசியின் மூளைக்கு வந்தியதேவன் பெரிய தப்பு செய்பவன் என்று மட்டும் புரிந்தது. இல்லையென்றால் அரசாங்கத்திற்கு சேரவேண்டிய தங்கக் காசுகளையும் நவரத்தின கற்களையும் இவன் எதற்காக மறைத்து வைத்துள்ளான். மண்ணின் கீழ் கிடைக்கும் பொக்கிஷங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு தான் உரியவை என்று சட்டம் உள்ளது அல்லவா. பேசாமல் அந்த தங்கக் காசுகளில் சிலதை அமுக்கி விடலாமா என்று கூட யோசித்தாள். ஆனால் அவளின் தந்தை பாட்டாக பாடிய

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

களவு செய்து பெருகிடும் செல்வம் எவ்வளவு பெருகினாலும் அவளது செல்வமும் வந்தது போலவே திரும்பவும் சென்று விடும் என்பதை அவளது தந்தை ஒரு பாடலாகவே தினமும் பாடிக்கொண்டிருப்பார் தன்னுடைய பிள்ளைகளுக்கு. அந்தக் குரல் இப்பொழுதும் குண்டலகேசியின் செவியில் ஒலித்தது. இந்த மானங்கெட்ட மனசாட்சியை கொன்றால் என்ன?வறுமையில் ஈரத் துணியை வயிற்றில் போட்டு படுத்திருக்கும் போது எந்த திருக்குறள் வந்து அவள் வயிற்றை நிரப்பியது?இப்படியெல்லாம் மூளை எடுத்துச் சொன்னாலும் திருடி எடுத்துச் சொல்லும் அளவிற்கு அவளின் மனம் இடம் கொடுக்கவில்லை.

கைநிறைய தங்கக் காசுகளையும் நவரத்தின கற்களையும் எடுத்துப் பார்த்தவள் மீண்டும் அதனை அதன்  அட்டை பெட்டியில் போட்டு விட்டு அந்த இடத்தை சுற்றி வந்தாள்.. அங்கிருந்த வாழ்க்கையை கையிலெடுத்து பார்க்க அதன் கனம் தாங்க முடியாமல் கீழே போட்டு விட்டாள். வாள் எவ்வளவு பாரமாக இருந்திருந்தால் கீழே போட்ட வேகத்திற்கு "தடாங்" என்று அந்த இடம் முழுவதும் சத்தம் பரவியது. எங்கே வந்தியதேவன் வந்து விடுவானோ என்ற பதட்டத்தில் அந்த வாளை தூக்க முடியாமல் தூக்கி எடுத்த இடத்திலேயே பவ்யமாக வைத்து விட்டாள்..

அவளுக்கு இந்த இடம் சகல வசதிகளை கொண்டுள்ள அவளது படுக்கை அறையை விட மிகவும் பிடித்து இருந்தது. தூசி துரும்பு இல்லாமல் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது இந்த இடம்.  அங்கே சுவர்களில் ஆங்காங்கே கைப்பிடிகள் இருக்க அருகே சென்று அதில் ஒரு கைப்பிடியை பிடித்து இழுத்தாள். பழைய ஓலைச்சுவடிகள் போல நிறைய செல்லரித்த கிடந்தன.  பிறகு மற்றவர்களை பிடித்து இழுத்துப் பார்த்தாள். தடிமனான நகைகள், பட்டு வஸ்திரங்கள், உருக்காத பொன், இரும்பிலான கலைப்பொருட்கள் இப்படி நிறைய கிடந்தன. இறுதியாக இருந்த கைப்பிடியை அவள் பிடித்து இழுக்க  உள்ளே ஒரு சிறிய பேழை இருந்தது.

அந்த வேலையை ஆர்வமாக எடுத்து பார்க்க அது பூட்டி இருந்தது. பூட்டும் கண்ணுக்கு தெரியவில்லை. எப்படி எப்படியோ அவளும் முயற்சி செய்து பார்த்தாள் முடியவே இல்லை. வட்ட வட்ட குட்டி கண்ணாடிகளை அந்தப் பேழை முழுவதும் படித்திருக்க ஆங்காங்கே சிவப்பு நிற கற்கள் ஜொலித்துக்கொண்டிருந்தன. கற்களின் கூர்மை  தெரியாமல் அந்தப் பேழையை யாராவது தொட்டு விட்டால் கண்டிப்பாக கையை கிழித்து விடும் அளவிற்கு இருந்தது. குண்டலகேசி பத்திரமாக தான் அதனைத் திறக்க முயற்சி செய்தாள்.  என்ன செய்தும் முடியாமல் போக கோபத்தில் கற்களை மறந்து போய் அந்த பெட்டி மேலேயே அடிக்க அவளின் கையில் கூறான கற்கள் குத்த ரத்தம் வெளியாகியது. அவளது சொட்டு ரத்தம் பெட்டியில் சிந்த பெட்டி "டக்" என்ற ஓசையோடு திறந்து கொண்டது.

உள்ளே மிகவும் பாதுகாப்பாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தங்கத்திலான பூட்டு ஒன்று.. பூட்டு உள்ளே இருக்கும்போது இந்தப் பேழை எப்படி பூட்டப்பட்டிருக்கும்.. பூட்டு இங்கிருந்தால் சாவி எங்கே இருக்கும்.. பூட்டை காதின் அருகே எடுத்துச் சென்று ஆட்டிப் பார்த்தாள். பூட்டின் அடிப்பகுதியில் எதுவோ உள்ளே இருப்பது போன்று சத்தம் கேட்டது. அவளின் உள்ளங்கை அளவே இருந்த பூட்டின் சாவித் துவாரம் மிக மிகச் சிறியதாக இருந்தது. உள்ளே அப்படி என்ன இருக்கிறது? அதனை எப்படி தெரிந்து கொள்வது?

பூட்டு அவளிடமிருந்தால் சாவியாரிடம் இருக்கும்?

அதே நேரம் அவளைத் தேடி தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் வந்தியதேவன். அங்கே அவளைக் காணாமல் தன்னுடைய லேப்டாப்பை உயிர்ப்பிக்க ஆங்காங்கே அவன் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களின் மூலம் அவள் சென்றிருந்த அறையைக் கண்டுபிடித்து விட்டான். ஆனால் கூடவே அவள் அந்த ரகசியக் கதவு வழி உள்ளே சென்றதை பார்த்தவனுக்கு கண்கள் கோவைப்பழமாக சிவக்க தொடங்கியது.. அவனது கரம் தானாக உயர்ந்து அவன் கழுத்தில் அணிந்திருந்த புலி நக பதக்கத்தை தடவி பார்த்தது. அந்தப் பழக்கம் சிறியதாக இருந்தாலும் அது விசேஷமாக அவனுக்காக செய்யப்பட்டது. புலி நகத்தின் மேல்பகுதியை திறக்க முடியும். அதனுள்ளே ஒரு குட்டி சாவி இருந்தது.

சாவி இவனிடம், பூட்டு அவளிடம் இனி என்ன நடக்கும்?

தொடரும் 

Comments

  1. Woooowwwwwww.... Sema interesting ah iruku ka ipothan... Thennila akka stories than Unmaiyave expect the unexpected 🤩🤩🤩🤩🤩🤩❤❤❤❤❤ Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

    ReplyDelete
  2. Pochu da Ivan vera Kovama irukan enna panna porano 🙄

    ReplyDelete
  3. Ayyo enna panna porano antha pullaiya 😤😤👌👌👌👌👌semaaaaa ❤❤❤❤❤

    ReplyDelete
  4. என்ன மாதிரி கதை நிலா,இப்போ கொஞ்சம் பயமாக இருக்கிறது,ஏதாவது ராஜா கதையா,இல்ல பேய் கதையா,😳😳😳😳😳😳😱😱😱

    ReplyDelete
  5. Super super super super super super super super super super super sis 😍😍😍😍😍😍

    ReplyDelete
  6. செம இன்ரஸ்டா இருக்கு சூப்பர் 👌

    ReplyDelete
  7. Thriller story ya munjenma story ya sis ...... Sema interesting

    ReplyDelete
  8. தேனும்மா மண்டை காயுது.இந்த பக்கி பயபுள்ளை ஏன் ஜெயிலுக்கு போனான்.எப்படி திரும்பி வந்தான்.இந்த கேசிபுள்ள மேல ஏன் இம்புட்டு லவ் அவனுக்கு.இவ வேற அவன் குணம் தெரிஞ்சும் அங்க போயிருக்கா.அந்த பெட்டி எப்படி திறந்துச்சு.சாவி ஏன் அவன் இவ்ளோ பத்திரமா வச்சூருகான்.அந்த ரூம்ல கேமரா வேற இருக்கு.அவ் இன்னும் என்ன பண்ணி மாட்டிக்க போறாளோ.டேய் அந்த மலைப்பாம்பை எங்காவது கொண்டு போய் விடுங்கடா.படிக்கும்போதே பயமா இருக்கு.👌👏👏🏻👏👌🏼👍🏻👍🏻👌🏼👍🏻👍🏻👌🏼💜💖👏🏻👌👌👏🏻👏👌🏼👏

    ReplyDelete
  9. Aiyo akka.....sema interesting ah iruku..🥰🥰nalaiku oru naal vera gap ah...my god😒vera vera level...ultimate....Ella appreciation words um ungalukku than💌👏👏seekirama podunga akka....✨✨👍story mariye illa ponga....nijamave nadakura Mari irukku incidents lam🥳🥳super kaa....

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. Super arumai enna oru twist super pochu ini unna enna seivani theriyathu

    ReplyDelete
  12. Semma sissy.nwxt enna nadakumoooo

    ReplyDelete
  13. Intresting story..


    Waiting your next turning...

    ReplyDelete
  14. Interesting ud sis nice deva ku theriyama poita achooo avan vera kandu pidichitane kesi mandaila irundha kondai ah marundhutiye

    ReplyDelete
  15. Semma epi... Enna irukum anthu lock kulla..... Antha egalaivan yaaaru???????? Rombo rombo eagerly a na wait panren......

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்