15 நெருங்கினா(ள்)ல்?


குண்டலகேசி வந்தியத்தேவனின் கோபம் தெரிந்தும் அவளின் அடக்கமுடியாத ஆர்வக் கோளாறினால் மிகப் பெரிய தவறு ஒன்றை இழைக்க தயாராகி விட்டாள். அவள் அந்த தவறை செய்யக்கூடாது என தன்னால் முடிந்தவரை தடுத்தான் வந்தியதேவன்.  ஆனால் விதி யாரை விட்டது?கமலியை இழுத்துக்கொண்டு அவள் சென்று விட இப்பொழுது வந்தியதேவன் அந்த மர்ம அறையின் முன் நின்று கொண்டிருந்தான்.

அன்று குண்டலகேசி பார்த்தது உண்மையான அறையை தான்.ஆனால் அந்த அறைக்கு மறுபடியும் அவள் காலடி எடுத்து வைப்பதை அவன் விரும்பவில்லை.எனவே இரவோடு இரவாக அவள் மயக்கத்தில் இருக்கும் போது இந்த ஏற்பாட்டினை செய்து முடித்திருந்தான். பார்க்கத்தான் அது பெரிய சுவர் போல் இருந்தது.. அந்த சுவரின் ஒரு மூலையில் சென்று வந்தியதேவன் கைகளால் எதையோ அளந்தான். பின் அளவு முடிவடையும் இடத்தில் ஓங்கி ஒரு குத்து குத்த அந்த இடம் வட்டமாக பெயர்ந்து வந்தது. இப்பொழுது காலியான அந்த இடத்திற்குள் ஒரு விசை இருந்தது. அந்த விசையை பிடித்து இழுக்கு சுவர் ஒரு பாதி உள்ளே போனது.

அன்று குண்டலகேசி உள்ளே சென்ற மர்ம அறை இப்பொழுது வெளியே தெரிந்தது.. கிணற்றை காணவில்லை என்று வடிவேலு திகைத்துப் போனது போல அறையை காணவில்லை என்று அவள் திகைத்து நின்றதை நினைக்க அவனுக்கு சிரிப்பு வந்தது.அந்த அறைக்குள் இருக்கும் மர்மத்தை அவள் அறிந்து கொள்ளவே கூடாது என்றுதான் அவன் இவ்வளவு பாடு படுகிறான்.இதெல்லாம் சொன்னால் அவள் புரிந்து கொள்வாளா.ஏற்கனவே அங்கு இருக்கும் பிரச்சனைகள் போதவில்லையா. ஆசைப்பட்டு மணந்து கொண்டவள் பேராசைப் பட்டால்?

தென்னந் தோப்பிற்கு பின்னால்  கானகத்தின் நடுவே அந்தக் குளத்தை குண்டலகேசிக்கு காட்ட ஆர்வமாக ஓடிக் கொண்டிருந்தாள் கமலி."அக்கா என்ன மெதுவா நடந்து வரிங்க.. சீக்கிரம் வாங்க.. என்ன மாதிரி ஓடி வாங்க"

" என்னாது ஓடி வரணுமா..இதுக்கே செத்துருவேன் போல.. தோ கிலோ மீட்டர் தோ கிலோ மீட்டர்ணு எவ்ளோ தூரம் தான் டி கூட்டிட்டு போவ..இதுக்கு மேல என்னால சத்தியமா நடக்க முடியாது..  அந்தக் குளம் இருந்தா என்ன வத்தி கருவாடா போனா என்ன.. எனக்கு வயிறு எல்லாம் ஒரு பக்கமா இழுக்குது.. காலு கண்ட்ரோல் இல்லாம நடுங்குது.. கண்ணு கிராஸ்ல போது.. ஒரு நிமிஷம் கூட இதுக்கு மேல முடியாதுடி செல்லம். நீ என்ன பண்ற இப்டியே உன் அண்ணே கிட்ட ஓடி என்ன அள்ளி போட்டு கொண்டு போவ ஜெசிபிய எடுத்துட்டு வர சொல்லுடா.. "என அப்படியே தரையில் சரிந்து விட்டாள் குண்டலகேசி. இதோ பக்கம்தான் இதோ பக்கம்தான் என்று கமலி தென்னந்தோப்பில் இருந்து அவளை ஆறு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கானகத்திற்கு அழைத்து வந்திருந்தாள்.

அதனால்தான் குண்டலகேசிக்கு இந்த நாக்கு தள்ளிய நிலைமை. கமலி சிறுமி என்பதால் அவளுக்கு குளத்தை காட்டும் ஆர்வத்தில் இந்த தூரம் தெரியவில்லை.மேலும் இந்த வனத்திற்கு அவள் எப்பொழுதும் வந்தியதேவனோடு விளையாட வருவாள். அந்த குளத்தின் அருகே சென்றுவிட்டால் பிரம்மை பிடித்தவன் போல அப்படியே நின்று கொண்டிருப்பான். அவன் கண்களில் சொல்லொண்ணா வேதனை வெளிப்படும்.  கமலி பல தடவை அவனிடம் "ஏன் அண்ணா இவ்ளோ சோகமா இருக்கீங்க" எனக் கேட்டிருக்கிறாள்.

அப்பொழுது எல்லாம் சிரித்து மழுப்பிய அவளுக்கு அங்கிருக்கும் அரிய வகைத் தாவரங்களைப் பற்றி விளக்கி குளத்தில் கையோடு கொண்டு வந்திருந்த தூண்டில் வலை வீசி மீன் பிடித்து சிறுமியை மகிழ்வித்து மீண்டும் கோட்டைக்கு அழைத்து வருவான்.எப்படி இரண்டு பெண்களை இவ்வளவு தூரம் அவன் நம்பி அனுப்பி இருக்கிறான் என்றால் அந்த இடம் முழுமையும் வந்தியதேவனுக்கு மட்டுமே சொந்தம். வெறுமையாக இருக்கும் இடங்களில் எல்லாம் சிசிடிவி கேமராக்களை மறைத்து வைத்திருக்கிறான். வேற்று ஆட்கள் இந்த கானகத்தின் உள்ளும்  தென்னந்தோப்பின் உள்ளேயும் வர இயலாது.

"அக்கா இப்படி ஒக்காந்தா நீங்க எப்படி அந்த குளத்த பார்ப்பீங்க.இன்னும் கொஞ்சம் தூரம் தான்.என் அம்மா சத்தியமா ஒரு அரை மணி நேரத்துல போயிரலாம். எந்திரிச்சி வாங்க..  இல்லன்னா நீங்க ஒரு பெரிய சோம்பேறினு தேவ் அண்ணன் கிட்டே சொல்லிடுவேன்.."கமலி மிரட்ட அவளை முறைத்துக் கொண்டே எழுந்தாள் குண்டலகேசி.

"அரை மணி நேரத்துக்கும் மேல ஆனா இந்த குண்டலகேசி உடம்புல இருந்து ஒரு அணுவும் அசையாது சொல்லிட்டேன்."மிகவும் கடுமையான நிபந்தனைகளை விதித்து விட்டு கடுப்போடு கமலி பின்னால் சென்றால் குண்டலகேசி.குளத்தைப் பார்க்கும் ஆர்வம் கூட இப்பொழுது அவளுக்கு இல்லை.விதியே என்று நடந்து கொண்டிருந்தாள். அவளின் சோர்வைக் கண்ட கமலி ஆங்காங்கே காய்த்துக் குலுங்கிய மாங்கனிகள் கொய்யா பழம் காட்டுச் செர்ரி என கொரிக்க பழங்களை எடுத்து வந்து கொடுத்தாள்.

குண்டலகேசி ஆச்சரியமாக எப்படி மரம் ஏறத் தெரியும் என்று வினவ அதையும் வந்தியதேவன் தான் கற்றுக் கொடுத்தான் என்று கூறினாள். பழத்தை சாப்பிட்டு ஓரளவு தன்னுடைய உடலில் சக்தியை ஏற்றுக்கொண்டவர் கமலி பின்னால் இப்பொழுது ஓரளவு புத்துணர்ச்சியோடு நடந்தாள்.கமலி கூறியதைப் போல அடுத்த அரை மணி நேரத்தில் அந்தக் குளம் வந்து விட்டது. தூரத்தில் இருந்தே அந்த குளத்தை அடையாளம் கண்டுகொண்டாள் குண்டலகேசி.என்னமோ தெரியவில்லை அந்த குளத்தை கண்ணால் கண்ட நிமிடமும் தொட்டு அவள் உடலில் ஏதோ ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வு.

மரண ஓலங்களும் சொல்லமுடியாத வேதனைகளும் அவளை சூழ்ந்து கொண்டது போல பெருமை.. என்ன இது ஏன் தனக்கு மட்டும் எப்படி தோன்றுகிறது. திரும்பி கமலியை பார்த்தாள்.கமலி அந்த குளத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள். அவளுக்கு வித்தியாசமாக எதுவுமே தோன்றவில்லை. அவள் ஏதேதோ கூறிக் கொண்டு ஓடுகிறாள்.கேசிக்கு எதுவும் விளங்கவில்லை.ஓ என்ற இரைச்சலை தவிர அவள் செவிகளுக்குள் எந்த ஒரு வார்த்தைகளும் விழவில்லை. கால்களை எடுத்து வைப்பதே சிரமமாக இருந்தது.

கமலி குளத்தை அடைந்து அந்த தண்ணீரில் கைகளை நனைத்து விளையாடினாள். குளத்தின் மிக அருகே வந்து விட்ட குண்டலகேசிக்கு கால்கள் அப்படியே வேறொன்றி போயின.கண் முன் சில பிம்பங்கள் புகையாக தெரிந்தன.


"என்ட மான்குட்டி சுகம் தானோ"..


( என் மான்குட்டி நலம்தானே)


"ஏந்தா குட்டி என்ன அவட நோக்குன்னு.. ஞான் உன்ட உள்ளம் களவாடும் கள்ளனாக்கும்"


(என்ன பெண்ணே என்னை அப்படி பார்க்கிறாய்.. நான் உன் உள்ளத்தை களவாடும் கள்வன் ஆவேன்)


உருவமே தெரியாத குரல் ஒன்று அவள் செவியில் விழுந்தது. ஆனால் அந்த குரல் மிகவும் பழக்கப்பட்ட ஒரு குரல். அது யாருடைய குரலில். திடீரென்று அந்த இடத்தில் பூதக் காற்று வீசியது.கருமேகங்கள் அவர்கள் இருந்த இடத்தை சுற்றி கொண்டன.  அதுவரை தண்ணீரில் விளையாடி கொண்டிருந்த கமலி ட்டப்பகலில் இவ்வளவு இருளை காணவும் பயந்து குண்டலகேசி அருகே வந்து அவள் இடையை கட்டிக்கொண்டாள்."அக்கா என்னாச்சு. மழை வர போகுதா.  மணி இப்ப மூனு இருக்கும்.. ஆனா பாக்க ராத்திரி எட்டு மாறி இருக்கு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. அம்மா சொல்லும் உச்சி நேரத்துல வெளிய போனா பேய் வரும்னு.. அதான் வந்துருச்சு போல. அக்கா வாக்கா ஓடிறலாம்.. "


கமலி பயத்தில் அழ அவளை இருக்கமாக தனுக்குள் புதைத்து கொண்டாள் கேசி. சுற்றிலும் கரும் புகை எங்கிலும் சூழ்ந்துக் கொள்ள எந்த திக்கிலும் ஓட முடியாத நிலை.. அப்பொழுது குளத்தின் நடுவே தண்ணீர் சல சலத்து சுழல் வந்ததை போல அப்படியே சுற்றியது. சுழலுக்கு நடுவே ஒரு பெரிய ரோஜா மலர் மிதந்தது.

"ஏன் அங்கே நிற்கிறாய்.. என்னுள் வந்து விடு.. அன்று செய்த தவறை இன்றும் செய்யாதே. வந்து விடு..மானு.. விரைந்து வா"அந்த குரலுக்கு கட்டுப்பட்டதை போல குண்டலகேசி கமலியை கட்டி பிடித்து கொண்டு குளத்தை நோக்கி ஓடி கமலி கதற கதற குளத்திற்குள் பாய்ந்து விட்டாள்.சூழ்ந்து வந்து கருமேகங்கள் மந்திரம் போட்டதை போல விலகி சென்றன. மீண்டும் வெயில் பல்லை காட்டியது..

குலத்தில் தண்ணீரின் சூழலில் சிக்கிக் கொண்டு சுழல துவங்கினர் கமலி கேசி இருவரும். கேசி கமலியின் கையை விடவே இல்லை. பாவம் கமலி பயத்திலும் மூச்சு விட முடியாமலும் மூழ்கி விட்டாள். ஆனால் நீச்சலே தெரியாத குண்டலகேசி தண்ணீரில் நீந்திக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கே இது பெரிய ஆச்சரியம்தான். அவளால் தண்ணீரில் மூச்சை அடக்கவும் முடிந்தது.. அந்த ரோஜா பூ இப்பொழுது ஒரு இடத்தில் மிதந்து கொண்டிருந்தது.என்ன நினைத்தாளோ அந்த ரோஜா மிதந்து கொண்டிருந்த இடத்திற்கு நீந்திச் சென்றாள்.

ரோஜா கற்களின் மத்தியில் குத்திக்கொண்டு நிற்க அந்த கற்களை ஒற்றை கையில் விலக்கினாள். சிரமமாக இருந்தாலும் அவளால் அது முடிந்தது. கற்கள் அனைத்தும் கலைந்த நிலையில் ரோஜா எதன் மீதோ வந்து மீண்டும் குத்திட்டு நின்றது.  ரோஜாவை கைகளில் விலக்கி அது குத்தி நின்ற தொட்டுப் பார்த்தாள். அதன் மேல் செடிகள் வளர்ந்து பாசிகள் படிந்திருந்தது.  விருவிருவென பாசிகளை முடிந்த அளவு பிடுங்கி எறிந்தாள்.

அங்கே வளையம் போல ஒன்று பாசி பிடித்து காணப்பட்டது.  என்ன நினைத்தாளோ அதை பிடித்து ஒரே இழு.. சடாரென்று சக்கரம் போல ஒன்று திறக்க அதனுள் முதலில் தான் நுழைந்து கொண்டு கமலியின் காலை பிடித்து உள்ளே இழுத்தாள் குண்டலகேசி. அவ்வளவுதான் அவர்களிருவரும் அதோடு ஏதோ ஒரு பைப்பிள் வழுக்கி கொண்டு வருவது போல்  ஆங்காங்கே அடிபட்டு இடிபட்டு வழுக்கி வந்து ஒரு இடத்தில் விழுந்தார்கள்.கமலி இப்பொழுது முழு மயக்கத்தில் இருந்தாள்.அவளைப் பிடித்து தன் மேல் சாய்த்துக் கொண்டு மெல்ல எழுந்தாள் குண்டலகேசி.

இதுவும் என்ன இடம் என்றே தெரியவில்லை. எப்படியும் இங்கே வந்து விட்டார்கள். மெல்ல கமலியை தன் மேல் சாய்த்துக் கொண்டு நடந்தாள். அது அன்று அவள் வந்த மர்ம அறையில் ஒரு பகுதி..  சில அடிகளில் விளக்கு வெளிச்சத்தை பார்த்தவள் அங்கே செல்ல அவர்களின் வரவிற்காக அங்கு காத்திருந்தான் வந்தியதேவன் கையில் கோடாரியோடு.

தொடரும்.


Comments

  1. Achooo indha kesi adangudha paren pochi pochi deva kola kandula irukan waiting for nxt ud sis

    ReplyDelete
  2. Atchoo🤔🤔intha kesi ponnu ipdi poi matikitaleyyy🤔🤔koodavey kamaliya la kootitu poi erukka🤔🤔🤔atcho potchu intha deva paiyan enna panna poranooo🤔🤔papom

    ReplyDelete
  3. Super arumai poochu inime kulaththukku pova nee ponathum illama antha pachcha pillaiyaiyum kootittu poirukka anga oruththan kodari vachchurukaan enna Panna poraan

    ReplyDelete
  4. Enna da nadakuthu 🤔🤔👌👌👌👌👌❤❤❤❤❤

    ReplyDelete
  5. Iyo ipadi pandriya kesi dava kovam rompa kodurama irukapoguthu

    ReplyDelete
  6. அங்க எப்படி வந்தியா தேவன் வந்தா

    ReplyDelete
  7. Sambavam sirappaga ullathu anniyare...

    ReplyDelete
  8. Acho kesi yen intha vela..dev summave aduvan ippa enna seiya porano😱😱😱😳😳😳

    ReplyDelete
  9. Ava pogumbothe ithellam nadakkumnu therinjudhan anupinaya VD...😪😪 kaila kodaari ellam vechurukka.. Enna aagumo??? 🙄🙄🙄

    ReplyDelete
  10. இப்படி தான் நடக்கும் என்று எதிர்பார்த்து தான்,காத்திருந்தான் போல, செம்ம சூப்பர் சிஸ்டர் 👌👌👌👌😳😳😳😳😳

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்