9 நெருங்கினா(ள்)ல்?


உடல் நிலை அவ்வப்போது வேலையை காட்டுவதால் ud தாமதமாகி விட்டது.. 🙏🏻🙏🏻🙏🏻


"என்ன குடும்பமே சேத்துல உருளுற பன்னிங்க கணக்கா உருண்டுட்டு இருக்கீங்க.."என்றான் கோவலன்.

"அதானே வேளா வேளைக்கு எந்த வேலையத்த பொறம்போக்கோ இதுங்கள அள்ளிக்கிட்டு வந்து சோத்த போட்றான்ல, அதான் மூக்கு புடிக்க தின்னுட்டு உருண்டுட்டு இருக்குங்க"என்றான் வைரமுத்து.

"இந்தாடி மாது, கண்ணகி உங்க புருசனுங்க பேசுற பேச்ச பாத்து பேச சொல்லு.நாம என்ன ஆசப்பட்டாடி இங்குட்டு வந்து ஒக்காந்து இருக்கோம்.. எவனோ எடுபட்டவன் குண்டலகேசிய தூக்கிட்டு போய் வெச்சிருக்கேன். அந்த கட்டயில போறவன் எதுக்குடி அவளோட சேர்த்து நம்மளையும் அள்ளிக்கிட்டு வந்துருக்கான்"சிந்தாமணி நீட்டி முழங்க

"அவன் கடத்தலே கொஞ்சம் டிப்பிரண்டா இருக்குடி.. அவள யாராச்சும் தூக்க முடியமா.. ஆனா தூக்கிட்டான் பாரேன்"வளையாபதி அங்கலாய்த்தாள்.

"சீ சரியான பீட புடிச்ச குடும்பத்தில சம்பந்தம் பண்ணிகிட்டோம்.. பாரு மாமனார் எப்படி கால நீட்டி படுத்துருக்கானு.. ஐயோ என் வியாபாரம் என்ன ஆச்சோ ஏது ஆச்சோ.. நான் இருந்தாலே ஒழுங்காக கடை பையனுங்க வேல செய்ய மாட்டாங்க..  இப்ப கூத்தாடிப்பானுங்கx" சைதன்யன் பாதாம் கீரை குடித்துக்கொண்டே தன்னுடைய வியாபாரத்தைப் பற்றி கவலைப் பட்டான்.

 அவனை மேலும் கீழுமாக பார்த்த அவனுடைய மனைவி கோப்பெருந்தேவி"ஆமா பெரிய கப்பல் வியாபாரம் இவரோட..யாருமே வராத கடையில ஆத்தோ ஆத்துனு மவனும் ஆத்தாலும் டீ ஆத்துதுங்க.குடிக்க தான் ஒரு நாதிய காணோம். வாயில வைக்க விளங்கணும். என் மாமியாரு சோத்த தின்னா கூட கைய கழுவாம நக்கியே கைய சுத்தம் பண்ணும்..கேட்டா தண்ணிய சிக்கனம் பண்றங்களாம்.இந்த மொகறையா நாக்குக்கு ஒனக்கையா டீ போட போது" காபி ஷாப் ஐ தான் இவ்வளவு நேரம் டீக்கடை அளவில் பேசிக்கொண்டிருந்தாள் கோப்பெருந்தேவி.

 இந்த விஷயத்தில் அவள் சொல்லியது உண்மைதான். கை கழுவும் நேரத்தில் வீட்டை சுற்றிலும் நட்டு வைத்திருக்கும் கீரை பாத்திகளுக்கு தண்ணீர் விட்டால் அது வளர்ந்து நல்ல லாபம் தருமே. எனவே சாப்பிட்ட கையை கூட கழுவாமல் நக்கியே கையை சுத்தம் செய்து தனது சேலைத் தலைப்பில் நன்றாக துடைத்துக் கொள்பவர் துளியும் நேரத்தை செலவழிக்காமல் அடுத்த வேலையை பார்க்கச் சொல்வார் அதுவும் பணம் வரும் வேலையாக இருந்தால் மட்டும்.

 எந்நேரமும் தங்களின் வீடுகளில் வேலை செய்தே சாவதற்கு எவனோ ஒரு புண்ணியவான் இங்கே அழைத்து வந்து முழு நேர ஓய்வு கொடுத்து மூக்கு பிடிக்க எந்நேரமும் சோறு பொங்கி போட்டு இவர்களுக்கு பெரிய சகாயம் செய்து கொண்டிருக்கிறான். ஆனால் அந்த சகாயத்திற்கு அவன் விலையாக கேட்டது அவர்களின் அன்புத் தங்கையையே. அதை நினைக்கும் போதே அனைவருக்கும் தொண்டையை அடைத்தது.

நேற்று தன்னுடைய ஆசை மகளின் திருமண வீடியோவை முகமூடிகளில் ஒன்று எடுத்து வந்து ஹாலில் அனைவரையும் ஆஜராக்கி போட்டு காண்மிக்க மாப்பிள்ளையை பார்த்ததும் ஆடி விட்டனர் அனைவரும். வந்தியதேவனின் தோற்றமே சொல்லியது அவனது பண செழுமையையும் பிடிவாத முரட்டு தனத்தையும்.

ஆவுடையப்பனுக்கு கண்கள் கலங்கி விட்டது.  குண்டலகேசியின் முகமே சொல்லியது அவளின் நிலையை. இவர்களை பணயக் கைதியாக்கி அவளை மணந்து கொண்டான். ஏழு பெண்களை பெற்றிருந்தாலும் எழுவரில் பெண்ணுக்கு பெண்ணாக ஆணுக்கு ஆணாக ஆவுடையப்பன் துவண்டு விழும் நேரம் எல்லாம் தாங்கி பிடித்தது குண்டலகேசி தான்.  அவளின் தைரியமும் அவளின் சமயோசித புத்தியும் எப்பொழுதுமே அவருக்கு பெரிய பலம்.

 அவர் உடல்நிலை சரியில்லாமல் மெத்தையில் படுத்த போது ஒரு தாயாக மாறி அவரின் கழிவுகளை கூட துடைத்து சுத்தம் செய்து இருக்கிறாள். மற்ற பெண்களை கணவன்மார்கள் அடித்து இம்சை செய்து பிறந்த வீட்டில் பணம் வாங்கிவா என்று துரத்தும் போதெல்லாம் ஆவுடையப்பன் தலையில் கை வைத்து அமர்ந்து விடுவார். அப்பொழுது எல்லாம் அவருக்கு தைரியம் கொடுத்து அங்கே இங்கே என்று பணத்தை திரட்டி அக்காக்களின்  கையில் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைப்பது குண்டலகேசி தான். சில நேரங்களில் பணம் திரட்ட முடியாமல் போனால் அக்காகள் கூடவே அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களது கணவன்மார்களை நாய் தண்ணீர் குடிக்காத கேள்வி கேட்டு விட்டு வருவாள்.

 சொல்லப்போனால் மிரட்டிவிட்டு வருவாள். இவள் ஒரு பொம்பள ரவுடி ஆச்சே என்று இவளை பார்த்தாலே அக்காங்களின் கணவன்மார்கள் அனைவரும் பதுங்கி விடுவார்கள். ஒரு ஆண்மகன் இல்லையே என்ற கவலை ஆவுடையப்பனின் வாழ்க்கையில் வந்ததே கிடையாது. ஆனால் ஆசை மகளின் திருமண வீடியோவை பார்க்கும்போது அந்த நிமிடம் அவருக்கு அந்தக் கவலை விஸ்வரூபமாக தலை எடுத்து ஆடியது. தனக்கு ஒரு ஆண்மகன் இருந்திருந்தால் தன்னுடைய சகோதரியை ஒருவன் கடத்திச்சென்று இருக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்ப்பானா?

 தந்தையின் முகத்தைப் பார்த்து அவரின் ஆறு மகள்களும் அவரை தேற்றினார்கள்

" அப்பா என்னப்பா நீங்க. எதுக்கு தங்கச்சியோட கல்யாண வீடியோவ பாத்து கண் கலங்குரீங்க. சொல்லப்போனா எங்களுக்கு என்னமோ அந்த ஆளு நல்லவன் போல தான் தெரியுது..  அவள கடத்திட்டு போய் சீரழிச்சு அவளோட வாழ்க்கைய நாசமாக்காம அழகா கல்யாணம் பண்ணிகிட்டான். நம்மளையும் கடத்திட்டு வந்து கொடுமப்படுத்தாம நல்லாதான் பாத்துக்கறான்.. ஏதாச்சும் காரணம் இருக்கும்ப்பா. காரணம் இல்லாம எதுவுமே நடக்காது.. இத எங்களுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்ததே நீங்கதான்.. எங்களுக்கு தான் தலைவிதி இப்படி ஒரு புருஷனுங்க வந்து வச்சிருக்கானுங்க.. அவளாவது நிம்மதியா இருக்கட்டும் அப்பா.."

 தன்னுடைய மற்ற பெண்கள் தங்கைக்கு அமைந்த வாழ்வை பற்றி பொறாமைப் படாமல் அவளாவது இந்த ஏழ்மையின் பிடியிலிருந்து தப்பிச் சென்றாளே என்று சந்தோஷப் படுவதை எண்ணி மன அமைதி அடைந்தார் ஆவுடையப்பன்.அவருக்கும் வந்தியதேவனை பார்க்கும்போது தப்பானவனவனாக தெரியவில்லை.ஏதோ ஒன்று இவர்களுக்குப் பின்னால் மறைந்து உள்ளது.ஒரு நாள் அந்த மர்மம் வெளியே வரும்.நல்லதாக இருந்தால் பரவாயில்லை ஆனால் கூ
கொடியதாக இருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள அனைவருக்கும் கடவுள் தான் தைரியம் தர வேண்டும் என்று உள்ளூர வேண்டிக்கொண்டார். எது எப்படி இருந்தாலும் நடந்தது அவருடைய மகளின் திருமணம். குண்டலகேசியும் அவளது கணவனும் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என அந்த தந்தையின் உள்ளம் இறைவனை பிரார்த்தித்து.

 யாருமே இல்லாமல் தன்னுடைய திருமணத்தை கடவுள் முன்பாக முடித்துக்கொண்ட வந்தியதேவன் தான் செட் செய்து வைத்திருந்த கேமராவில் திருமணத்தை பதிவு செய்ததை குண்டலகேசியிடம் தெரியப்படுத்தவில்லை. அவளாக ஏதாவது பேசுவாள் என்று எதிர்பார்த்தான். அதிலும் ஏமாற்றமே. எப்பொழுதும் காலி பானைக்குள்ளே கல்லை போட்டதுபோல கடாமுடா என்று எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருக்கும் குண்டலகேசி திருமணம் என்றதும் வாயை உலகத்திலேயே தரமான பூட்டு போட்டு பூட்டி கொண்டாள்.

 அவளது கழுத்தில் திருமாங்கல்யம் அணிந்து நெற்றியில் குங்குமம் வைத்து கீழே குனிந்து அவள் முன்பு ஒரு கால் மடக்கி அமர்ந்தவன் அவளது ஒரு காலை எடுத்து தன்னுடைய மடியில் வைத்து மெட்டி அணிந்து விட்டான். அவளின் காலை பிடித்து தூக்கவும் பதறியவள் அவனது தலையில் தன்னுடைய கையை வைத்துக் கொண்டாள். சொல்லப்போனால் பயத்தில் அவனின் தலைமுடியை கொத்தாகப் பிடித்துக் கொண்டாள். அவனோ தனக்குள் சிரித்துக் கொண்டு நிதானமாக அவளது இரண்டு கால்களிலும் மெட்டி போட்டான். பின்பு அவளை கையை பிடித்து அழைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு வந்துசேர்ந்தான்.

 அங்கே தயாராக பால் பழம் இருந்தது. வாழைப்பழத்தை உரித்து பாலில் நனைத்து தனக்கு ஒரு வாய் உண்டவன் அவள் வாயருகே பழத்தை எடுத்துச் சென்றான். வேண்டுமென்றே பழத்தை கடிப்பது போல் வாயை அகலத் திறந்து அவனது விரலை  கடித்து வைத்தாள் குண்டலகேசி. அவன் சலனமற்று அவளைப் பார்க்க அவள் இதுதான் உனக்கு ஆரம்பம் என்ற ரீதியில் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 அடுத்து பாலை எடுத்து பருக போனவனின் கையை பிடித்து தடுத்து அவள் அந்தப் பாலை கடகடவென குடித்து முடித்தாள். "அச்சோ பால் முடிஞ்சிடுத்தா அம்பி.. இப்ப என்ன பண்றது.. நேக்கும் கொஞ்சம் கொடேண்டி பட்டுனு ஒரு வார்த்தை சொல்லப்படாதோ" வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றினாள் குண்டலகேசி.. அவளின் திட்டம் அவனுக்கு சொல்லாமலேயே புரிந்தது. குண்டலகேசி அடி முட்டாள் அல்ல சொல்லப்போனால் அவள் பயங்கரமான புத்திசாலி.

 தன்னை ஒருவன் கடத்தி வந்துள்ளான். தன்னுடைய குடும்பத்தையும் கடத்தி வைத்துள்ளான். இவள் நிலையில் வேறு பெண்ணாக இருந்திருந்தால் இந்நேரம் தற்கொலை செய்து கொண்டு இருப்பாள். இல்லையென்றால் அழுகையில் கரைந்து இருப்பாள். ஆனால் குண்டலகேசி வேறுவிதமாக இருந்தாள். அவனிடம் வாய் பேசி எப்படியாவது தப்பிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தாள். அது முடியாத பட்சத்தில் கடத்தி வந்தவன் எதிர்பார்த்த கல்யாணத்தை செய்து கொண்டு இங்கிருந்து தப்பிக்க அடுத்த முயற்சியில் இறங்கி விட்டாள்.

 ஆசையாகத் தான் செய்து கொண்டு திருமணம் இனிக்கும் பாயாசம் அல்ல கசக்கும் பாகற்காய் என்று தனக்குப் பாடம் கற்பிக்கவே அவள் தயாராக இருப்பது அவளுக்கு நன்றாக புரிந்தது. ஆனால் அவனும் ஒன்றும் முட்டாள் அல்லவே? பாலைக் குடித்துவிட்டு தெனாவட்டாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளின் உதட்டோரம் ஒரு சிறு துளி பால் ஒட்டிக்கொண்டிருந்தது. அதனை அவள் புறங்கையால் துடைக்கும் முன்பே அவளது கரத்தை வளைத்து பிடித்து அந்த சிறு துளி பாலை தனது நாவால் ஸ்பரிசித்து எடுத்துக் கொண்டான்.

 இந்த எதிர்பாராத தாக்குதலில் குண்டலகேசி பதறி விட்டாள். தான் பொழப்புக்கு ரவுடி அவன் பிறந்ததிலிருந்து ரவுடி என்பதை எப்படி மறந்து போனாள்.. "தோ பாருங்க மிரு சார்.."

"பாக்குறது இருக்கட்டும்.. இனிமே ஒழுங்கா என்ன பேரு சொல்லி கூப்டு.."

"இப்பவும் அப்படித்தான கூப்பிட்டு தொலையுறேன்."

"என் சொந்த பேர சொன்னேன்"

"எது வந்தியதேவனா.. கல்கி மட்டும் உசுரோட இருந்திருந்தா உங்க மூஞ்சில சாணி அடிச்சிருப்பாரு. பார்த்து பார்த்து செதுக்குன கேரக்டர்யா அது. வந்தியதேவன் என்ன ஒரு அழகு, என்ன ஒரு வீரம், என்ன ஒரு அறிவு, ம்ம்ம் நீங்களும் இருக்கீங்களே ரெண்டு கையிலயும் மலைபாம்பு பச்சை குத்திக்கிட்டு ஒரிஜினல் மலைபாம்பை எடுத்து மேல போட்டுகிட்டு சீ..த்து"..

"உனக்கு மலை பாம்பு கூட ஒரே பாத் டப்ல குளிக்கணும்னு ஆசை போலயே"அந்த குரல் அடுத்து நிகழப்போகும் அனர்த்தத்தை அவளுக்கு எடுத்துச் சொல்லியது.. இப்பொழுது அவள் அவனின் பெயரை சொல்லி அழைக்கா விட்டால் கண்டிப்பாக மலைப்பாம்புடன் மஞ்சள் தேய்த்து குளிக்க நேரிடும்.. தேவையா அவளுக்கு இதெல்லாம்..

"வந்தியதேவன எப்டி சுருக்கி கூப்ட.. வாந்தின்னா"கடுப்பாக கேட்டாள் குண்டலகேசி.

"தேவானு கூப்டு.."

"தேவாங்கு வேணும்னா கூப்பிடலாம்"

"இல்லனா மாமானு கூப்டு"

"அப்றம் தேவா சௌக்கியமா.. வூட்ல அல்லாரும் எப்டி இருக்குதுங்க".. செந்தமிழ் பேசிக் கொண்டிருந்தவள் சென்னை தமிழில் அவனை கலாய்க்க நொடிக்கு நொடி அவனை பேசியே வீழ்த்தும் அவளது இதழ்களில் அவனது கவனம் பதிந்தது. என்ன மாதிரிப் பெண் இவள்? இவளது வாய் எப்பொழுது அடங்கும். அது இந்த ஜென்மத்தில் அடங்காது கட்டைக்குப் போகும் வரை காற்று வாங்கிக் கொண்டு கூடவே இருக்கும் என்பதை நிரூபித்தாள் குண்டலகேசி.

" தோ பாரு.. நீ ரொம்ப பேசுற மொத உன் வாய குறை..பேசாத வாய மூடு.. இன்னும் ஒரு வார்த்த பேசின மலைப்பாம்பு கூட தான் குளிக்கணும்.."குறுக்கே பேச முயன்ற அவள் அப்படியே வாய்மூடி நின்றுவிட்டாள்.

" மொத நான் பேசும்போது குறுக்க பேசறத நிப்பாட்டு.. நான் சொல்ல வர்றது கவனமா கேளு.. இனிமே நான் உன் புருஷன்.. நீ என் பொண்டாட்டி. அது இந்தக் கோட்டைக்கு மட்டுமில்ல இந்தக் கோட்டைக்கு வெளிய இருக்கிறவங்களுக்கும் தெரியும்.. சீக்கிரமா என்ன விட்டு தப்பிச்சி போகலாம்னு நீ நினைக்காத.. அது உன்னால முடியாது.. ஒருவேள என்ன விட்டு நீ போயிட்டனா அது ஒரேடியா உன்னோட சாவுனு நீ தெரிஞ்சுக்கணும்..

 என்ன பாக்குற.. ஆமா உன்னோட சாவுதான்.. ஆனா அந்த சாவுல கூட நீ என்ன பிரிய முடியாது.. உன் உயிர் போறதுக்கு ஒரு நிமிஷம் முன்னாடி என் உயிர் போயிரும்.. உனக்காக என்னோட உயிர் காத்திருக்கும்.. நீ இருந்தாலும் என்ன விட்டு பிரிய முடியாது.. நீ செத்தாலும் என்ன விட்டு போக முடியாது.. அது எப்பவுமே உன் மண்டயில இருக்கணும். இன்னொரு முக்கியமான விஷயம். உன்னோட குடும்பம் இன்னும் என்கிட்ட தான் இருக்காங்க. நீ நடந்துக்கிற விதம் தான் அவங்கள எப்படி நான் நடத்துறதுனு என்ன யோசிக்க வைக்கும்.. பாத்து பக்குவமா நடந்துக்கோ.. கமலி சின்னபொண்ணு. அவகிட்ட எதையாச்சும் பேசி வைக்காத. இப்ப நீ பேசு"

"ம்க்கும் என்னத்த பேசுறது..அதான் எல்லாத்தையும் நீயே பேசிட்டியா..நான் தெரியாம கேட்குறேன்.. உன்ன ஜெயில்ல வந்து பேட்டி எடுத்தது ஒரு குத்தமா.. இல்ல ஏகலைவன் அப்படின்னு உன்னோட நாசமா போற பேரச்சொல்லி கூப்பிட்டது ஒரு குத்தமா.. அந்தப் பேர நான் சொல்ல போய் தான் நல்ல பாம்பு முட்டய நிமிந்து பார்க்கிற மாதிரி நீ என்ன பார்த்த.. அன்னைக்கு மட்டும் நான் வராம இருந்திருந்தா அந்த டைரக்டரு கக்கூஸ் வாயென் மட்டும் என்னோடு ஐடியாவ வாங்கிகிட்டு என்னய பேட்டி எடுக்க போடலைன்னா இந்த பிரச்சனயே வந்திருக்காது இல்ல.."

" விதிய யாராலயும் மாத்த முடியாது.. இனிமே இதுதான் உன்னோட வீடு.. கூடிய சீக்கிரம் உன்னோட குடும்பத்த நான் ரிலீஸ் பண்ணிடுவேன்.. நாமளும் இங்க இருக்க மாட்டோம். "

" எங்க போயிருவோம். என்னைய கல்யாணம் பண்ணி சோனாகாஜி மாதிரி வித்துருவியா.. எங்க அப்பா ஒன்னும் கமல்ஹாசன் இல்ல.. அடியும் உதையும் வாங்கி தேடி கண்டுபிடிச்சு என்ன காப்பாத்த "

 அவ்வாறு கூறியதும் அவனுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. அவன் கோபத்தின் விளைவு குண்டலகேசி உதடுகள் வீங்கி கண்கள் சிவந்து ஐஸ் கட்டிகளால் தனது உதடுகளை ஒத்தடம் கொடுத்தபடி அமர்ந்திருந்தாள். காரணம் வேறொன்றுமில்லை அவன் அடித்து விட்டான். பளார் என்று அறைந்தானா.. இல்லை ஓங்கி அவளின் வாயில் குத்தி விட்டானா.. இப்படி நீங்கள் நினைத்தால் அது தவறு. அவள் இம்மாதிரி வார்த்தைகளை சொல்லிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவர்களது அறையில்  மிகவும் மோசமான காரத்தை கொண்டுள்ள ஊசி மிளகாய்கள் கொண்டுவந்து வைக்கப்பட்டன..

 அந்த மிளகாயோடு ஒரு பெரிய ஜக் தண்ணீரும் கொண்டு வந்து வைக்கப்பட்டது. குண்டலகேசி அந்த மிளகாயை மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருக்க" இப்போ நீ இந்த மொளகாய ஒன்னு கூட மிச்சம் இல்லாம சாப்ட்டு முடிக்கணும்.. இல்லன்னு வச்சுக்கோ இன்னிக்கி நீ மலைப்பாம்பு  கூட தான் தூங்குவ" என்றவன் அந்த தண்ணீர் ஜக்கை எடுத்து கையில் வைத்துக் கொண்டான். அவனின் முகத்தின் தீவிரமே சொன்னது அவன் சொன்னதை கண்டிப்பாக செய்வான் என்று.

 யாகாவராயினும் நா காக்க எனும் திருக்குறளை சிறுவயதிலிருந்தே சொல்லிக்கொடுத்து வளர்த்திருந்தார் ஆவுடையப்பன். பல தடவை அவர் மகளை எச்சரித்தும் இருந்தார். வாயை குறை என்று.. ஆனால் பாவம் அவளால் அது முடியவில்லை. அதன் விளைவு இப்போது நன்றாக அனுபவிக்க போகிறாள்.வேறு வழியில்லை என்பதைப் புரிந்துகொண்டவள் அவனிடம் பேசவே இல்லை. ஒரு வீம்புக்காக நேராக சென்று மிளகாயை கையில் எடுத்தவள் கண்ணை மூடிக் கொண்டு வேகமாக சாப்பிட ஆரம்பித்தாள்.

 எண்ணி அதில் ஐந்து மிளகாய்கள் தான் இருந்தது. ஆனால் ஒன்றை அவள் கடித்து முழுங்குவதற்குள் அவளது கண்கள் கண்ணீரைச் சொரிய ஆரம்பித்துவிட்டது.அவள் கேட்காவிட்டாலும் அவளது வாய் தண்ணீருக்காக தவித்தது.ஆனால் அவனும் இரக்கமே இல்லாமல் தண்ணீர் ஜக்கை கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான். அவளின் கண்ணீரும் அவளது தவிப்பும் அவனில் இரக்கத்தை வர வைக்கவில்லை.

 ஒரு முடிவுக்கு வந்த குண்டலகேசி கண்களை இறுக்க மூடிக்கொண்டு விறுவிறுவென்று மீதி நான்கு மிளகாய்களையும் கடித்து மென்று முழுங்கி விட்டாள். மிளகாய்களின் காரம் அவளது உச்சி மண்டையில் போய் நின்றது. மூளை சூடாகி  அவளால் தாங்கவே முடியவில்லை..  வாயைத் திறந்து தண்ணீர் கேட்காத அவளின் முகத்தை பார்த்து வந்தியத்தேவனே வியந்து விட்டான்.வேகமாகச் சென்று அவள் முன் தண்ணீர் ஜக்கை நீட்டி அதனை வாங்கி மடக் மடக் என்று குடித்தவள் தண்ணீர் முழுவதையும் குடித்து முடித்து விட்டாள்.

 இருந்தும் அவளின் தவிப்பு அடங்கவில்லை.வேகமாக ஓடிச்சென்று பாத்ரூமில் நாக்கை கோல்கேட் போட்டு நன்றாக தேய்த்தாள். அவள் பாத்ரூம் பைப்பை பிடித்து கொண்டு ஆவென்று அலறுவது அவனுக்கு நன்றாக கேட்டது.கதவைத் திறந்து அவளை கையை பிடித்து வெளியே இழுத்தவன் அங்கே தயாராக வைக்கப்பட்டிருந்த ஐஸ் கட்டிகளை எடுத்து அவளின் வாயை பிளந்து வாய்க்குள் போட்டான்.

ஐஸ் கட்டிகளின் ஜில்லப்பு காரத்தை சற்று மட்டுப்படுத்தியது. இன்னும் இன்னும் நிறைய ஐஸ் கட்டிகளை வாயில் போட்டு ஒரு வாராக தனது தவிப்பை அடக்கினாள் குண்டலகேசி.இருந்தும் அவளது இதழ்கள் வீங்கிவிட்டது. அங்கே அமர்ந்து தனது லேப்டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தவனை கடுமையாக முறைத்து கொண்டே தனது இதழ்களுக்கு ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

 வாய் தவறி சொன்ன வார்த்தைக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? அவன் செய்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தும் என்ன செய்வது.. பகலிலே இப்படி என்றால் இன்று இரவு என்ன நடக்கப் போகுதோ என்ற பயம் அவள் நெஞ்சில் பந்தாக அடைத்தது. ஆனால் அவள் பயந்த மாதிரி முதலிரவு இன்று எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் அங்கே நடக்கவில்லை. மிளகாய் சம்பவத்திற்கு பிறகு அன்று முழுவதும் அவன் அவளிடம் பேச கூட கிடையாது. பேசினாலும் பதில் பேசும் நிலையில் அவள் இல்லை.

 எப்பொழுதும் போல இரவு உண்டுவிட்டு அவள் அவளுடைய அறைக்கு உறங்க போக ஒரே ஒரு மாற்றம் அவளை தடுத்து நிறுத்தி தன்னுடைய அறைக்கு அழைத்து வந்தான் வந்தியதேவன்.மிரண்டு விழித்தவள் வேறு எதுவும் சொல்லாமல் கட்டிலின் ஒரு ஓரம் போய் படுத்துக் கொள்ள  அவனும் மறு பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டான். திருமணமான முதல் நாளே அவளின் வாயிக்கு வேட்டு வைத்து விட்டான் வந்தியதேவன்.

 மறுநாள் காலையில் அவள் எழுந்து கடன்களை முடித்து வருகையில்"இனிமே நீதான் மார்னிங் காபி கொடுக்கணும். மத்தியான சாப்பாடு, ஈவினிங் ஸ்னாக்ஸ், டின்னெர் எல்லாமே எனக்கு நீதான் பண்ணனும்.."

"ஏன் அப்டியே பல்ல வெளக்கி குளிப்பாட்டி ஆயி கழுவி விடவா".. கடுப்பாக கேட்டாள் குண்டலகேசி..

"அதெல்லாம் ஒன்னும் வேணா.. மத்தியானம் எனக்கு நண்டு கறி வேணும். அதுக்கு மசாலா அம்மியில அரைக்கணும். அரைச்சு சமைச்சிடு.எனக்கு கொஞ்சம் வேல இருக்கு போய்ட்டு வரேன்.."என அவன் கிளம்பி விட ஆத்திரத்தில் பொங்கி விட்டாலும் மறுத்து பேச வாய்ப்பில்லாமல் சமையல் கட்டுக்கு சென்றாள் குண்டலகேசி.


Comments

  1. Good moving story. Eagerly waiting for the next update

    ReplyDelete
  2. Wow sema stry waiting for nxt epi

    ReplyDelete
  3. Kundalakesi ah ve oruthan adaki irukana... wow... Sema Sema... super episode...

    ReplyDelete
  4. Take care of health anniyare

    ReplyDelete
  5. Vera level ah poguthu story ....eagerly waiting for next 😍😍😍❤️

    ReplyDelete
  6. Interesting sis nice ud deva va rmba damage panra kesi achooo ana pavam kesi milagai sapda vachitane super ud sis

    ReplyDelete
  7. வாய் வாய் கொஞ்ச நஞ்ச பேசுனா அதான் தேவையா 😁😁👌👌👌👌❤❤❤❤❤❤

    ReplyDelete
  8. Kesi ku vaila than sani😂😂😂 interesting epi akka 😍😍🤩🥰🥰 take care of your health akka😊😊

    ReplyDelete
  9. Thevaiya ithu vaaya koduthu punnaakkikkitta.. ennatha solla paathu irundhukkama Kesiiiiiii..😏

    ReplyDelete
  10. Sema pa. Waiting for next ud.

    ReplyDelete
  11. Super 👌👏👍😍😂🤣

    ReplyDelete
  12. Super 👌👌👌👌👌 நிலா,

    ReplyDelete
  13. Madam next udya epo varum..


    I am waiting

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்