7 நெருங்கினா(ள்)ல்?

"அப்பா என்னப்பா யோசிச்சுட்டே இருக்கீங்க..  தங்கச்சிய பத்தியா" மணிமேகலை ஆவுடையப்பனிடம் வினவ

"ஆமாம்மா.பாவம் அவ எங்க இருக்காளோ..  என்ன பன்றாளோ ஒரு எழவும் புரியல" அவர் மிகுந்த சோகத்தோடு சொல்லிக் கொண்டிருக்க மாதவியின் கணவன் கோவலன்

"மாமா நல்லா நடிக்குறிங்கயா குடும்பமே சேந்து.. அஞ்சு பவுன் போட்டு கூட கட்டிக் கொடுக்க முடியாத உங்களுக்கு திடீர்னு எப்படி உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ற ஐடியா வந்துச்சு.  ஊரக் கூட்டி கல்யாணம்னு சொல்லி பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்துக்கு ரெண்டே நாள் இருக்கும் போது எப்படி உங்க பொண்ணு காணாம போவா.. இதுல எங்கயோ இடிக்குது..  வயசுக்கு வந்த பொண்ண கட்டிக் கொடுக்க முடியாம சம்பாரிச்சு கொடுக்க கூடவே வச்சிருக்கான் பாருங்கனு ஊரே காரித்துப்பவும் இப்டி ட்ராமா பண்ணிங்களோ.."

"என்ன மாப்ள கூறுகெட்ட தனமா பேசிட்டு இருக்கீங்க.மத்த பொண்ணுங்களுக்கு செய்யாம விட்டுட்டேனா.. இல்ல நீங்கதான் புடுங்காம இருந்துட்டிங்களா..மனசாட்சியே இல்லாம உங்கப்பன் வீட்ல போய் அத வாங்கிட்டு வா இத வாங்கிட்டு வானு நீங்க விரட்டல.. நான் என்ன என் பொண்ணுங்கள வெறும் கையோடயா அனுப்பிவிட்டேன்..நாக்குல நரம்பில்லாம பேசாதீங்க.."ஆவுடையப்பன் பொங்கி விட்டார்.

"என்னடி மாது உங்கப்பன் பேச்ச கேட்டு ரசிக்குற போல.. உன் தங்கச்சிய எவன்டி கடந்தப்போறான்.அவ என்ன ரதி தேவியா.. உருட்டி விட்டா ஸ்லிண்டர் மாறி உருண்டுட்டே போகும்.. அத போய் ஒருத்தன் கடத்துறானோ"..

"வாய மூடுயா..உன் தலையில விடிஞ்ச பாவம் நமக்கு பல வருசமா புள்ளயே தங்கல.. அப்ப நீ குடிச்சிட்டு என்ன சொன்ன..உன்ன கட்டுணதுக்கு பதிலா உன் தங்கச்சி குண்டலகேசிய கட்டிருந்தா இந்நேரம் என் புள்ள வந்து உன்னோட மூஞ்சில மூத்திரம் பேஞ்சிருக்கும்னு நீ சொல்லல..அப்போ அவ சின்ன பிள்ள. அன்னிக்கு அப்படி சொல்லும்போது மட்டும் உனக்கு இனிச்சுதா.. இன்னிக்கு என் தங்கச்சி சிலிண்டர் மாதிரி இருக்காளா.. அக்கா தங்கச்சி இரண்டு பேரையும் கட்டணும்னு நெனச்ச பாவி தான நீயு"

"நல்லா கேளு மாது.. நாமலே அவளுக்கு என்னாச்சி ஏதாச்சுனு பதறிட்டு இருக்கோம்..உன் புருஷனுக்கு வாய பாத்தியா" கோப்பெருந்தேவி எடுத்துக் கொடுத்தாள்..

"ஓ குடும்பமா சேர்ந்து தான் நாடகம் ஆடிக்கிட்டு இருக்கீங்களா.. ஆடு ஆடுங்க எத்தன நாள் இந்த ஆட்டம்னு நானும் பார்க்கிறேன்."சைதன்யன் கோபமாகக் கூறினான். இப்படியே அனைவருக்கும் சண்டை வர கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் முகமூடி ஒருவன். வந்தவன் நேராக கைத்துப்பாக்கியை எடுத்து  சிந்தாமணியின் கணவன் ரஜினியின் நெற்றிப்பொட்டில் வைத்து அழுத்த அனைவரும் பதறி விட்டார்கள்.

" இன்னொரு தடவ இந்த ரூம் குள்ள இருந்து சத்தம் வந்துச்சு.. இவன ஒரே போடு.. "

"ஐயோ அப்படி எல்லாம் பண்ணிராதிங்க..  என் புருஷன் வாயில்லாத ஜீவன் அப்புராணி.. அந்தாளு வாயவே தொறக்களங்க.. வாய தொறந்து இப்டிலாம் பேசினது எல்லாம் அந்தா நிக்கிற என் மாமனும் கொழுந்தனும் தானுங்க.. சுடுறதா இருந்தா அவங்கள சுடுங்க.."

"அடியே மாது நாங்க என்ன பணியாரமாடி எங்கள சுட.உன் தங்கச்சி என் உசுருக்கு வேட்டு வைக்குறா.. நீ கம்முனு இருக்க"

"உன் ஆட்டதுக்கு கம்முனு நிக்காம குத்தாட்டம் ஆட சொல்றியா. என்ன பேச்சு பேசுன.. ஒருபக்க ஸ்பீக்கர் அவுட்டாயே இந்த பேச்சு பேசுறியே. காது மட்டும் சரியா இருந்தா என்ன பேச்சு பேசுவ"

"ஐயோ தலைவரே என்ன நீங்க இவளுங்க பேச்ச கேட்டு துப்பாக்கிய இந்த சைடு திருப்புரீங்க.. நீங்க அந்தாளு மண்டையில துப்பாக்கி வெச்சதுக்கே என் சகல சைத்தான் வேஷ்டியில வெளிக்கு போய்டான். இதுல துப்பாக்கி எங்கள நோக்கி வந்தா ஏரியா நாஸ்தி ஆயிரும் பாத்துக்கோங்க" கோவலன் கதற

"து ஆம்பளைங்களாடா நீங்களாம்.. துப்பாக்கிய பார்த்ததுக்கே வெளிக்கு போய்ட்டிங்களே.எங்க அண்ணன் எல்லாம் துப்பாக்கி கூடவே வாழ்ந்துட்டு இருக்காரு. அவர நேரா பாத்தா என்னடா ஆவிங்க.ஏம்மா எப்டிம்மா இவனுங்கள கட்டி புள்ள குட்டிங்கள பெத்தீங்க" பெரிதாக காரியை குழைத்து துப்பிவிட்டு அந்த முகமூடி அறையைவிட்டு வெளியே போக ஆவுடையப்பன் தன்னுடைய மாப்பிள்ளைகளை பார்த்து காரி துப்பிவிட்டு தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்று முடங்க கோபு தலையில் அடித்துக் கொண்டே அவள் புருஷன் அசிங்கப்படுத்திய வேஷ்டியை துவைக்க எடுத்துச் செல்ல மற்றவர்கள் தங்கள் கணவன்மார்களை கரித்துக்கொண்ட தொடங்கினார்கள்.

"டேய் சுந்தரு.. உன் பொண்டாட்டி எவ்ளோ நேரம்டா காத்திருப்பா.. வேகமா வாயேன்.." சுந்தரின் அம்மா அறைக்கதவை தட்டி அவனை அழைத்துக் கொண்டிருந்தார்.ஆம் சுந்தருக்கு திருமணமாகி விட்டது. குண்டலகேசி காணாமல் போன செய்தியை தொடர்ந்து அவள் குடும்பமும் தலைமறைவானதும் சுந்தரின் அம்மாவுக்கு வசதியாகிவிட்டது.

அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே குண்டலகேசியை பிடிக்கவில்லை. வரதட்சணை குறைவாக கொடுப்பது ஒன்று அவளின் உடல் எடை அதிகமாக இருப்பது ஒன்று.ஐம்பத்தெட்டு கிலோவில் இருக்கும் தன்னுடைய மகன் எம்பத்து ஐந்து கிலோவில் இருக்கும் குண்டலகேசியை எப்படி தூக்குவான்.. தூக்க வேண்டிய அவசியம் வந்தால் அவளை தூக்குவதற்குள் இவனுக்கு மாரடைப்பு வந்து விடுமே.

கணவனிடம் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிப் பார்த்தார்.அவர் திருமணத்திற்கு பிறகு குண்டலகேசிக்கு வரும் சம்பளத்தை கணக்கிட்டு இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் என கூறிவிட்டார். சுந்தரிடம் காட்டு கத்தாக கத்தி பார்த்தார்.அவன் குண்டலகேசி மேல் உள்ள மயக்கத்தில் அம்மாவின் பேச்சை கண்டு கொள்வதாக இல்லை. இறுதியில் குண்டலகேசி காணாமல் போன விஷயம் அவன் காதுக்கு எட்டியவுடன் முதலில் அவன் நம்பவேயில்லை.

இதில் ஏதோ சதி இருக்கிறது அவள் இந்த மாதிரி செய்ய மாட்டாள் என்று அடித்துக் கூறினான்.  காவல் நிலையத்தில் புகார் அளிப்பதாக கூறினான். ஆனால் அவனுடைய அம்மாவிற்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிட மனமில்லை.  குண்டலகேசி ஒரு ஓடுகாலி அவள் குடும்பமே பித்தலாட்டக்கார குடும்பம் என்று பழியை போட்டு இந்த அவமானம் தாங்க முடியாமல் தான் தூக்கில் தொங்க போவதாக அனைவருக்கும் அறிவித்து விட்டு ஒரு அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டார்.

 சுந்தரரும் மற்ற உறவினர்களும் அவன் அம்மா தாழிட்ட கதவை தட்டி கொண்டிருக்க அவர் உள்ளே சுத்தாத மின்விசிறியில் தன்னுடைய புடவையை போட்டு முடிச்சு போட்டுக் கொண்டிருந்தார் நிதானமாக.. அவர் முடிச்சு போட்டு முடிப்பதற்குள் சுந்தர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து தற்கொலை செய்ய முனைந்த தன் அம்மாவை காப்பாற்றி விட்டான்.

 உடனே சுந்தரின் அம்மா அழுதுகொண்டே திருமணத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வந்துவிட்ட தன்னுடைய தம்பியை அழைத்து நைசாக பேசி அவர் மகளை சுந்தரிடம் வாதாடி திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்த தம்பி ஏற்கனவே சுந்தரின் அம்மாவிடம் தன் மகளை சுந்தருக்கு மணம் முடிக்க விரும்புவதாக கூறி இருந்தார்.ஆனால் இவரால் வரதச்சனை அதிகம் தர முடியாது என்பதால் இந்த சம்பந்தத்தை சுந்தரின் அம்மா ஏற்கவில்லை. குண்டலகேசியை பார்க்கவும் இந்த சம்பந்தம் ரொம்பவே அதிகம்.

 எங்கே ஓடிப் போன குண்டலகேசி திரும்பி வந்து விடப் போகிறாள் என்ற பயத்தில் எதுவும் இல்லாதது இதுவே மேல் என தம்பி மகளை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார் சுந்தரின் அம்மா.சுந்தருக்கு இதில் கடுகளவும் விருப்பமில்லை. ஆனால் திருமணம் முடிந்து முதலிரவன்று அவனுடைய மனைவி ஷோபன அறைக்குள் வந்து அவனருகே அமர்ந்தவுடன் அவனுக்கு எல்லாம் மறந்து விட்டது.

விடிந்து எழுந்த போது தான் அவனுக்கு ஒரு விஷயம் நன்றாகப் புரிந்தது அதாவது அவன் நினைத்தது போல் அவனுக்கு குண்டலகேசியின் மேல் காதல் இல்லை.அந்த வயதில் வரும் ஒரு வித ஈர்ப்பு. காதல் என்றால் நேற்று தன் மனைவியை அவன் அணைத்திருப்பானா?  ஒரு விதத்தில் இந்த திருமணம் நடக்காதது கூட நல்லது என்று தோன்றியது சுந்தருக்கு. புது மனைவியை மீண்டும் அணைத்து உறங்கிவிட்டான். மாமியார் வீட்டிற்கு விருந்துக்குச் செல்லதான் அவனை அழைத்துக் கொண்டிருந்தார் அவனது அம்மா.

 பாவம் இதையெல்லாம் அறியாமல் குண்டலகேசி தான் சுந்தருக்கு துரோகம் செய்து விட்டதாக எண்ணி உள்ளம் குமைந்தாள். இன்னும் மூன்றே நாட்கள் தான் இருந்தது. அசோகவன சீதை போல அவள் தனியாக இருந்தாள் அந்த கோட்டையில்.  சீதைக்கு கூட காவலுக்கு ஆங்காங்கே அரக்கர்கள் நின்று கொண்டிருந்தார்கள். இவளுக்கு அது கூட கிடையாது.

 சாப்பிடும் நேரங்களில் சரியாக அவளது அறையில் இருக்கும் அலைபேசிக்கு அழைத்து அவளை உணவு மேஜைக்கு வரச் சொல்லுவான் வந்தியதேவன். அந்த அலைபேசியில் வேறு எண்ணிற்கு அழைக்க முடியாதபடி செட் செய்திருந்தான். உணவு உண்ணும் வேளைகளை தவிர அவனைப் பார்க்கவே முடியவில்லை.. நாள் பூராவும் சுற்றி திரிந்தவளுக்கு இந்த தனிமை கொடுமையாக இருந்தது.

 அவன் அந்த கோட்டையில் இருக்கிறானா வெளியே சென்று இருக்கிறானா என்று எதுவும் அவளுக்கு தெரியவில்லை.  இங்க இருந்து தப்பிக்கவும் அவள் முயற்சி செய்யவில்லை. எதற்கு வீண் வம்பு. மற்ற பெண்களை போல தன் விதி இப்படி ஆகிவிட்டதே என்று குண்டலகேசி கண்ணீர் வடிக்கவில்லை.  மாறாக இதிலிருந்து எப்படி தப்புவது என்று அவள் சிந்தித்துக்கொண்டிருந்தாள்.

 அன்று ஹாலில் அவள் நடந்து கொண்டிருக்கும்போது அவளின் பின்னால் வந்து நின்றான் வந்தியதேவன். " என்ன யோசிக்கிற.. " அவனது குரல் கேட்டு திரும்பி பார்த்தவள் வேகமாக சென்று அவனின் கரத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

"தோ பாருங்க மிரு சார். நான் ஒரு சாதாரண மனுஷி. குண்டலகேசி டாட்டர் ஒப் ஆவுடையப்பன்.. இதான் என்னோட அடையாளம்.  நீங்க என்ன சீதைனு நெனச்சு இந்த அசோகவனத்தில சிறை வெச்சிருக்கீங்க. அப்படியெல்லாம் சத்தியமா இல்ல. இந்த வீட்ல மனுஷ பையன் இருக்குற அடையாளமே காணோம். வேளா வேளைக்கு சோறு வருது. அத யாரு சமைக்குறா. இங்க மனுசங்க இருக்காங்களா இல்ல பேய் தான் இருக்கா.. எனக்கு பைத்தியமே புடிச்சிடும் போல..

நீங்களாச்சும் கடத்திட்டு வந்துட்டு கூடவே கொரங்கு குட்டி போல வெச்சிருப்பிங்கனு பாத்தா உங்கள ஆளையே காணோம். என்ன பைத்தியக்காரியாக்கி தாய்லாந்துல விக்க பிளான்னா"...

"இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ இப்படி கத்துற.. உனக்கு போரடிக்குதா.. மனுசங்கள பாக்கணும்னு ஆசையா இருக்கா.."

" ஆமா.. இன்னும் மூணு நாள்ல கல்யாணம்.. கல்யாணம் பண்ணியும் இப்படியே தான் இருக்குமா. இதுக்கு தான் கல்யாணமா. நான் வேணும்னா ஒன்னு சொல்லட்டா.. கல்யாணம் பண்ணாம இந்த மூனு நாளும் உங்க கூட சேர்ந்து வாழ நான் தயாரா இருக்கேன். உங்களுக்கு எப்படி வேணுமோ அப்படி என்ன யூஸ் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் என்ன விட்டுருங்க. நான் என் குடும்பத்தோட போறேன்.. நீங்க இருக்கிற திச பக்குட்டு கூட நான் வரமாட்டேன்." ஒருவேளை தன் உடல் மீது  அவனுக்கு ஆசை வந்து இம்மாதிரி கடத்தி வைத்துள்ளானோ என்ற ஒரு சந்தேகத்தில் அவள் இப்படிச் சொன்னாள்.

ஆனால் அதுவே அவளுக்கு எமனாக முடிந்தது.. குண்டலகேசி இப்படிச் சொன்னதும் அவனால் அதனை சகித்துக் கொள்ள முடியவில்லை.  அதற்காக அவளை அடித்தோ மிரட்டியோ அச்சுறுத்த அவனுக்கு மனமில்லை. அவளை சில வினாடிகள் உணர்ச்சியற்று பார்த்தவன் பிறகு என்ன நினைத்தானோ அவளது கையை பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு அந்தக் கோட்டையை விட்டு வெளியேறினான்.

 கரடுமுரடான காட்டுப்பாதையில் அவன் சுலபமாக நடந்து செல்ல அவளுக்குத்தான் கால்களில் கற்கள் குத்தி கிழித்தது. ஐயோ அம்மா என்னால முடியல என்று அவள் கத்தும் சத்தம்  கேட்டு அவளை தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டு நடந்தான் வந்தியதேவன். தனது எடையை ஒரு பொருட்டாக மதிக்காமல்  வெங்காயம் மூட்டையை தோளில் சுமப்பது போல் சுமந்து செல்பவனை ஆச்சரியமாக பார்த்தாள் குண்டலகேசி.

 அரைமணிநேரம் நடந்து சென்றவன் ஓரிடத்தில் அவளை இறக்கி விட்டான். என்ன இடம் என்று அவள் பார்ப்பதற்குள் அவளை பிடித்து தள்ளினான். பொத்தென்று அந்த சேற்று நிலத்தில் விழுந்தாள் குண்டலகேசி. அதன் உள்ளே விழுந்ததும் அவளுக்கு தெரிந்தது அது சேற்று நிலம் அல்ல அது ஒரு புதைகுழி என்று.புதைகுழியில் இருந்து வெளியே வர அவள் எவ்வளவோ முயன்றாள் ஆனால் முடியவில்லை. அவளின் கதறல் அந்தக் கானகம் முழுவதும் ஒலித்தது.

மெல்ல திறந்தது கதவு அமலா மாதிரி எங்கே தானும் புதைக்குழியில் புதைந்து இறந்து விடுவோமோ எனும் பயம் வந்தது அவளுக்கு.

 அவளுடைய கதறலை கைகட்டி பேசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான் வந்தியதேவன். அவளைக் காப்பாற்ற அவன் ஒரு முயற்சியும் செய்யவில்லை.அவளால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை சாக போகிறேன் என்பதை உறுதியாக நம்பினாள்.அவனிடம் உதவி கேட்டு கெஞ்சி கதறினாள். நெஞ்சு வரை அவள் புதைந்த போது" இனிமே கனவுல கூட நீ இப்படிப் பேசக்கூடாது.. உன் உடம்பு மேல இருக்குற ஆசைல உன்ன தூக்கிட்டு வந்தேன்னு நினைச்சியா.. உன்னப் பார்த்ததும் புடிச்சு போச்சு.. வாழ்ந்தா உன் கூடதானு ஏதோ ஒன்னு உள்ள சொன்னுச்சு.. அதுக்குதான் உன்ன தூக்கிட்டு வந்தேன்.. ஆனா நீ எவ்ளோ தைரியம் இருந்தா என் காதல கேவலப்படுத்துவ.. இனிமே இப்படி செய்வியா"

"ஐயோ சத்தியமா இப்படி செய்ய மாட்டேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் என்னதான் உணர்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுனாலும் சிலுக்கு மாறி காம பார்வ பாத்து உன்ன கெளப்பி விட மாட்டேன்.. உடம்புனு ஒரு விஷயம் இல்லவே இல்ல போதுமா ப்ளீஸ் என்ன மன்னிச்சிரு.." என்று அவள் கதற தன் ஜீன்ஸில் இருந்து இடைவாரை உருவினான் வந்தியதேவன். அதை தூக்கி அவளின் அருகே வீச ஒரு முனை அவளிடமும் இன்னொரு முனை அவனிடமும் இருந்தது.  அவன் அந்த இடைவாரை பிடித்து இழுக்க மெல்ல புதைகுழியில் இருந்து வெளியே வந்தாள் குண்டலகேசி.

 மரணத்தை அருகில் பார்த்த பயம் அவளுக்கு. அவனிடம் எதுவும் சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை. அவன் முன்னே நடக்க பேசாமல் அவன் பின்னே நடந்தாள். வீட்டிற்கு சென்று குளித்து வந்தவள் மெத்தையில் குப்புற படுத்து அழத் தொடங்கினாள். அப்பொழுது அவளுக்கு பின்னால் அம்மா என்று குரல் கேட்க சட்டென்று திரும்பிப் பார்த்தாள் குண்டலகேசி.

Comments

  1. Very nice epi akka🥰🥰🥰 kesi un vaiye unnaku emanagi pochu😬😬🤣

    ReplyDelete
  2. Wow interesting putha kuli treatment ah puthusu puthusa panran ya Ivan....yaru antha amma nu kooptathu 🙄eagerly waiting for next

    ReplyDelete
  3. Arumai semaaaaa en ma vaya vachikitu summa illama deivaya ithu kesi 👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤👏👏👏👏👏👏😍😍😍😍😍😍

    ReplyDelete
  4. super super super super super super super super super super super super super super super super super super super super super supersuper super super super super super super super super super super super super super super super super super super super super supersuper super super super super super super super super super super super super super super super super super super super super supersuper super super super super super super super super super super super super super super super super super super super super super

    ReplyDelete
  5. Semma ud sis kesi mamanunga vaila sudunga mugamudi super ud sis kesi vaya vachikitu summa irukama thevaya unakku over vai pesyna apdi dha

    ReplyDelete
  6. பாவம் பா நம்ம கேசி

    ReplyDelete
  7. அடேய் யார்டா நீ.உம்பேரை கேட்ட உடனே பயபுள்ளை ஜெர்க் ஆகிடுச்சி.அவ உன்னை லவ் பண்ணல தம்பி உன் பேரைதான் விரும்புறேன்னு சொன்னா.ஆனாலும் பாவம்டா இம்மாம் பெரிய கோட்டைல ஆள் இருக்கா இல்லையான்னு தெரியாமலே அவ பைத்தியமாகிடுவா போல.டேய் நீ பண்ற பாத்தா அவளை ரொம்ப லவ் பண்ற போல.நடத்துடா.ஆமா இந்த சுந்தரோட அம்மா அவளை எம்பத்தஞ்சு கிலோன்னு சொன்னாங்க.ஆனா நீ அசால்ட்டா தோள்ல தூக்கி போட்டுட்டு அரைமணிநேரம் நடந்திருக்க.அப்போ நீ எவ்ளோ பல்க்கா இருப்படா.மிஸ்டர் ஆவுடை உங்களுக்கு வாச்ச மருமகன் ஒருத்தனும் சரி இல்லை.என்னா பேச்சு பேசுறானுங்க.ஆனாலும் இவங்ஙளுக்கு இன்னும் நல்லா நாலு அடி குடுக்கனும்.அப்பவாவது திருந்துவானுங்களா பார்ப்போம்.ஏம்மா கேசி இனி வாயை திறந்து ஏதாவது பேசுவ.எப்படி தப்பிக்கபோற நீ.💜💖👍🏻👌👌🏼👌🏼👌👍🏻💖💜👌🏼👌🏼👏🤝👌👍🏻💖💜👌🏼👏👌👍🏻

    ReplyDelete
  8. Dei ennada antha Pillai puthaikuliyila Thalita pavam da antha pilla

    ReplyDelete
  9. அய்யோ பாவம்
    கேசி வாய் கொடுத்து
    வாங்கி கட்டிக்ச்சி😋😋😋

    ReplyDelete
  10. Super Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super

    ReplyDelete
  11. Super 👌👌👌 sister,kesi யொட sister's இருக்கும் போது சிரிப்புக்கு அளவு இல்லை,ஆனால் நீ கொஞ்சம் நல்லவன் தான் வந்திய தேவா👌👌👌👍👍👍

    ReplyDelete
  12. Thevaiya ithu kudumbame vaai koduthu vambula sikkikkuveenga polaye..🤣🤣 ye Kesi ini nee vaaya thirappa 🤭🤭

    ReplyDelete
  13. Very interesting 🥰🥰🥰

    ReplyDelete
  14. எது அம்மாவா யாரு அது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்