8 நெருங்கினா(ள்)ல்?

உடல் நலமில்லாத காரணத்தினால் அப்டேட் கொடுக்க தாமதமாகி விட்டது🙂

சமையலுக்கு மசாலாவை அம்மியில் வைத்து அரைத்துக் கொண்டிருந்தாள் குண்டலகேசி.அவள் கழுத்தில் நேற்று புத்தம் புதிதாக இடம் பிடித்திருந்த தாலி மார்புக்கும் காற்றுக்கும் இடையே உஞ்சலாடிக் கொண்டிருந்தது. அதனை சற்று நேரம் முறைத்து பார்த்து விட்டு எடுத்து ஆடையின் உள்ளே மறைத்து வைத்தாள்.என்ன மறைத்து என்ன தெய்வ சாட்சியாக வந்தியதேவனின் வாழ்க்கையின் பாதியாகி விட்டாளே.

அவளின் நினைவுகள் ஒரு நாளுக்கு பின்னோக்கி சென்றது. அன்று புதைகுழியில் தூக்கிப் போட்டு அவளுக்கு உயிர் பயத்தை காட்டியவனை ஒன்றும் செய்ய இயலாத தனது விதியை நொந்துக் கொண்டு அவள் கண்ணீருடன் படுத்து கொண்டிருக்க அம்மா எனும் குரல் கேட்டு படக்கென்று திரும்பி பார்த்தாள்.அங்கே பன்னிரண்டு வயது சிறுமி ஒருவள் உச்சியில் கொண்டையோடு நின்றிருந்தாள்.

இதுவரை அவனை தவிர வேறு யாரையும் இந்த கோட்டையில் அவள் பார்த்ததில்லை. புதிதாக இந்த குழந்தை வந்து நிற்கவும் அவளின் அழுகை மறைந்து விட்டது. வேகமாக எழுந்தவள்"பாப்பா யாரு நீயு. உன்னயும் தூக்கிட்டானா அவன்"

"என்ன யாரும் தூக்கலக்கா.. என் பேரு கமலி. இங்க சமையல் வேல செய்ற சுந்தரியோட பொண்ணு"அந்த சிறுமி தன்னை பற்றிய தகவலை சொல்ல, பாவம் கேசி எந்த சுந்தரியை அவள் அறிவாள்?ங்கே என அந்த சிறுமியை பார்த்திருந்தாள்.

"உங்களுக்கு ஒண்டியா இருக்க போர் அடிக்குதுனு தேவ் அண்ணே சொன்னாரு.அதான் உங்க கூட வெளாட வந்தேன்"

"எவன் அவன் தேவ்"புரியாமல் கேட்டாள் கேசி..

கண்களை அகல விரித்து"உங்கள கட்டிக்க போறாங்கள அந்த அண்ணன் தான் தேவ்.."அவன் தன் பெயர் வந்தியதேவன் என்று சொன்னது நியாபகம் வந்தது. வந்தியதேவனின் சுருக்கம் போலும் தேவ்.

"ஆமா என்ன எதுக்கு அம்மானு கூப்ட. அவன் மாடு மாறி இருக்கான் அவன அண்ணன் நொண்ணனு சொல்ற. நான் பாக்க உனக்கு ஆன்ட்டி மாறி இருந்தாலும் அக்கானு கூப்பிடனும் தெரியுமா"கேசி மிடுக்காக மிரட்ட கமலியோ

"அது என் அம்மா தான் உங்கள அம்மானு கூப்ட சொன்னாங்கம்மா"

"பார்டா திரும்ப அம்மா ஆத்தானு சொல்ற.. ஒழுங்கா அக்கானு சொல்லு இல்லனா உன் கூட சேர மாட்டேன்"..

"ஐயோ இல்லக்கா, இனிமே அக்கானே சொல்றேன்.. சரியா.. ஆமா உங்க பேரு என்ன"

"அது வந்து சொல்றேன் சிரிக்காத..குண்டலகேசி.."சிறுமி சிரித்து விடுவாளோ என அவள் பார்க்க கமலியோ

"அக்கா உண்மையாவே குண்டலகேசியா.. ஸ்கூல்ல தமிழ் டீச்சர் சொல்லித் தந்த குண்டலகேசி கத தான் நியாபகம் வருது."எனச் சொல்லி ஆர்பாரித்தாள்.

 அவளை முறைத்துப் பார்த்த குண்டலகேசி"ஆமா நேத்து வரைக்கும் இந்த வீட்டுல மனுஷ பயலயே பாக்க முடியல. இன்னிக்கு எப்படி உன்ன பாக்க முடியுது..இத்தன நாள் எங்க இருந்த.."

" அக்கா நாங்க எல்லாரும் இங்கதான் இருந்தோம்.. உங்கள நான் எப்பவுமே பார்ப்பேன்.. ஆனா நாங்க யாரும் உங்க கண்ணுல படக்கூடாதுனு தேவ் அண்ணே சொல்லிட்டாரு.. அவரு பேச்ச எங்களால மீற முடியாது.. நீங்க குளிக்கப் போற டைம் இல்லனா தோட்டத்தில சுத்தற டைம் தேவ் அண்ணா எங்க கிட்ட சொல்லுவாரு. நாங்க அப்போ போய் உங்க ரூம சுத்தப்படுத்துவோம். நீங்க வர்றதுக்குள்ள நாங்க போயிடுவோம்.  நீங்க சில நேரம் இங்க யாராச்சும் இருக்காங்களான்னு தேடிகிட்டு வருவீங்க.. எங்களுக்கு உங்கள பாக்க பாவமா இருக்கும். ஆனா  தேவ் அண்ணே சொல்லாம நாங்க உங்கள பாக்க முடியாது..இன்னிக்கி என்ன ஆச்சுன்னு தெரியல..

அண்ணே என்ன கூப்ட்டு இனிமே நீதான் அந்த அக்கா கூடா இருக்கனும்.அவளுக்கு நீ தான் ஃப்ரன்ட்டு.. அப்படின்னு சொன்னாரு" கமலி ஒன்று விடாமல் அவளிடம் சொல்லி முடிக்க தனக்கு இவள் தோழியா என்று ஒரு நிமிடம் கமலியைப் பார்த்தாள் கேசி.பேச்சுத்துணைக்கு யாருமே இல்லாத போது இவளாவது இருக்காளே என்று மனதைத் தேற்றிக் கொண்டாள். கமலியை தன் அருகே அமர்த்தி அவளிடம் வள வளத்துக் கொண்டிருந்தாள்.

இங்கு வந்ததிலிருந்து பேசா மடந்தையாக இருந்ததற்கு இது எவ்வளவோ அமைதியை தந்தது மனதிற்கு..கோவிட் என்பதால் கமலிக்கு பள்ளி விடுமுறை. அதனால் அவள் சந்தோஷமாக விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருந்தாள். கமலி பேசிக்கொண்டே

" அக்கா உங்களுக்கும் தேவ் அண்ணனுக்கும் கல்யாணமா"

" யாரு சொன்னா"

"இங்க இருக்கிற எல்லாருக்கும் தெரியும்..  நாங்க எல்லோருமே முன்ன இங்கு இல்ல.. தேவ் அண்ணனோட தோப்புல வேல பார்த்துட்டு இருந்தோம். திடீர்னு ஒருநாள் எங்க எல்லாரையும் இங்க வர சொன்னாரு. வீட்டு வேல செய்ய ஆள் இல்லைன்னு.. வந்து பார்த்தா தான் தெரியுது அண்ணனுக்கு கல்யாணம்னு.. அக்கா சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க எங்க அண்ணன.. அப்பதான் எங்க எல்லோருக்கும் போனஸ் அப்றம் புது துணி கெடைக்கும்.."

ஏழ்மையின் நிலையில் புது துணி கிடைப்பதால் அவனைப் பற்றி அறியாமல் அவனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டிருந்தாள் கமலி. அதனைப் பார்க்கும் போது தன்னுடைய பால்ய பருவம் நினைவுக்கு வந்தது குண்டலகேசிக்கு.அவளும் இப்படிதான் பக்கத்து வீட்டு தாத்தா ஒரு பலகார கடையில் வேலை செய்பவர். அவ்வப்போது  கடையில் மீந்து போகும் பலகாரங்களை வீட்டிற்கு எடுத்து வருவார்.  அப்படி எடுத்து வரும் போது பக்கத்து வீட்டுச் சிறுமியான கேசிக்கு கொஞ்சம் தருவார்.

 பலகாரத்தின் ருசியை இம்மாதிரி அவள் அறிந்ததுதான் ஞாபகம் உண்டு.  ஆவுடையப்பனின் சம்பளம் ஏழு பெண்களின் வயிற்றை நிரப்புவதற்கே சரியாக இருந்தது. இதில் எங்கிருந்து தினமும் பலகாரங்களை அவள் பார்ப்பது. பலகாரம் கொடுத்த தாத்தாவிடம் தினமும் தனக்கு இதே மாதிரி பலகாரம் தர முடியுமா என்று கேட்டாள். அதற்கு அவர் விளையாட்டாக என்னைக் கட்டிக் கொள் உனக்கு தினமும் பலகாரம் தருகிறேன் என்று சொல்லி விட்டார்.

 ஏழு வயது சிறுமியான கேசிக்கு கல்யாணம் என்றால் என்ன என்று முழுதாக புரிந்து கொள்ளாத வயது. உடனே தலையை ஆட்டியவள் வேகமாக வீட்டினுள் சென்று தன் சகோதரிகளிடம் தான் பக்கத்து வீட்டு தாத்தாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி விட்டாள். முதலில் தங்கை விளையாட்டாக சொல்கிறாள் என்று எண்ணிய சகோதரிகள் சிரித்து அவளை கேலி பண்ணினார்கள். ஆனால் அவள் பிடிவாதமாக அதையே சொல்ல கண்ணகி உடனே எழுந்து பக்கத்து வீட்டு தாத்தாவை அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்தாள்.

 தாத்தா தான் விளையாட்டாக சொன்னதை சொல்லியவுடன் இனி தனக்கு பலகாரம் கிடைக்காது என்பது மட்டும் குண்டலகேசிக்கு புரிந்தது. தான் கல்யாணம் பண்ணினால் தாத்தாவை தான் கல்யாணம் பண்ணுவேன் என்று அந்தத் தாத்தாவின் காலை பிடித்து கத்தி ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள். இறுதியில் தாத்தாவின் வேஷ்டி கழன்று விழுந்ததுதான் பாக்கி.

 அக்கம்பக்கத்தார் இவர்களைப் பார்த்து சிரிக்க கண்ணகி மூத்த அக்காவாக தங்கையை உரித்து எடுத்து விட்டாள். இறுதியில் ஆவுடையப்பன் வந்துதான் குண்டலகேசி காப்பாற்றப்பட்டாள். அல்ப தனமாக ஒரு பலகாரத்திற்கு போய் தாத்தாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப் பட்டதை நினைத்தால் இப்போதும் அவளுக்கு வெட்கக்கேடாக இருக்கும்.தன் வீட்டைப் பற்றி நினைக்கையில் அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

 அவளின் முகம் வாட அதைக்கண்ட கமலி"அக்கா என்னாச்சு.. ஏன் டல்லா ஆயிட்டிங்கக்கா"

"இல்ல டா.. சும்மா மலரும் நினைவுகள்.."என்றவளிடம்

"அக்கா சொல்ல மறந்துட்டேன். தேவ் அண்ணே உங்கள கூட்டிட்டு வர சொன்னாரு.."சற்று முன்பு சென்று வந்த மரண பாதை வயிறை கலக்கி விட

"செல்லம் அக்காவுக்கு கக்கா வருது நான் கக்கூஸ்க்கு போறேன்.. நீ போய் உன் அண்ணன் கிட்ட சொல்லிரு.. இப்ப வர முடியாதுனு"என்றவள் ஓடி சென்று கழிவறைக்குள் புகுந்து கொண்டாள். கமலி வந்தியதேவனிடம் வந்து

"அண்ணா அக்காவுக்கு வயித்த கலக்குதுன்னு பாத்ரூம் போய்டாங்க..ஏன் அவங்க அலறாங்க.. அவங்கள நீங்க என்ன பண்ணீங்க"தன்னுடைய வயிறு வரையே இருந்த கமலி அவனை சந்தேகமாக முறைத்தப்படி கேட்க இதனை எங்கிருந்தோ கேட்டுக் கொண்டிருந்த சுந்தரி ஓடி வந்தாள்..

தேவ் முன்பு பணிவன்புடன் நின்றவள் மகளின் கேள்விக்கு அவனிடம் மன்னிப்பு கேட்டாள்"தம்பி தப்பா எடுத்துக்காதீங்க. சின்ன புள்ள ஏதோ தெரியாம.. ஹேய் இங்க வாடி.. வாய் துடுக்கெடுத்த கழுத.. தம்பி கிட்ட போய் கேள்வி கேக்குற தைரியம் எங்கேருந்துடி வந்துச்சு"சுந்தரியின் அதட்டலில் கமலியின் முகம் விழுந்து விட்டது. அதனை பார்த்துக் கொண்டிருந்த வந்தியதேவன்

கமலியை தன்னருகே அழைத்தான். தாயை பார்த்துக் கொண்டே அவனருகே வந்து நின்ற கமலியின் முன் முட்டிப் போட்டு அமர்ந்தவன் அவளது கரங்களை பிடித்துக் கொண்டு"என்ன இவ்ளோ உரிமையா கேள்வி கேக்குற உரிம இருக்குற ஆளுங்கள்ள கமலி குட்டியும் அடக்கம்.."என்றதும் கமலி முகத்தில் அப்படி ஒரு புன்னகை.

சுந்தரி ஏதோ சொல்ல வர அவன் பார்த்த பார்வையிலேயே அவளது வாய் மூடிக் கொண்டது.. தனது பாக்கேட்டில் இருந்து ஏதோ ஒரு விலையுயர்ந்த சாக்லேட்டை எடுத்து கமலியிடம் கொடுத்தவன்"போய் படிப் போ.. இங்க ஆடிகிட்டு இருந்த அடி விழும். அந்த அக்கா கிட்ட நீயா போய் பேசக் கூடாது. வீட்ல நடக்குற எதையும் அவங்க கிட்ட சொல்லக் கூடாது.நான் போய் பேச சொன்னாதான் பேசணும். புரியுதா".. அவன் மென்மையாக சொல்ல வேகமாக தலையை ஆட்டினாள் கமலி.

சிறுக் குழந்தையில் இருந்தே அவனுக்கு கமலியை தெரியும்.. யாரையோ கதையை முடித்து விட்டு போலீஸ் துரத்த ஓடி வந்தவன் சுந்தரியின் ரோட்டு கடையின் முன் தான் நின்றான்.. பசியில் கண் இருள சுந்தரியிடம் இட்லி வாங்கி நின்றுக் கொண்டே உண்ணும் போது தான் தளிர் நடைப்போட்டு ஒரு வயது கமலி அவன் காலை கட்டி கொண்டு தன் பொக்கை வாய் மலர சிரித்தாள்.அந்த குழந்தையை அலட்சியப்படுத்த முடியாமல் கொலை செய்த கைகளில் அவளை தூக்கிக் கொண்டான்.

அன்றிலிருந்து அந்த குழந்தையை பார்ப்பதற்காக்கே அங்கே சென்றான். அப்பொழுது எல்லாம் சுந்தரியின் கணவன் உயிரோடு இருந்தான்.வந்தியதேவனிடம் அவன் நன்றாக பேசுவான். இப்படியே மூன்று வருடங்கள் ஓட வந்தியதேவன் வேற லெவெலுக்கு செல்ல அந்நேரம் சுந்தரியின் கணவன் வாயலேயே நுழையாத நோயின் காரணமாக இறந்து போக கைம் பெண்ணாய் குழந்தையோடு நின்ற சுந்தரியை மொய்தது வக்கிரம் பிடித்த ஆண்களின் கண்கள்.

அவர்களிடம் இருந்து சுந்தரியை காப்பாற்றி தான் புதிதாய் வாங்கிய மாம்பழ தோப்பில் ஒரு வேலை போட்டு கொடுத்து இருக்க வீடு கட்டி கொடுத்தான். அவன் மனதில் சுந்தரி அவனின் அக்கா. அப்படித்தான் அழைப்பான். அவனிடம் வேலை செய்யும் அனைவருக்கும் இப்படியொரு பிளாஷ்பேக் இருக்கும்.

வந்தியதேவனுக்கு கேசி மீது கோபமாக வந்தது. அவளுக்கு மரண பயத்தை காட்ட வேண்டுமென்று நினைத்தானே தவிர அவளை கண்ணீர் விட வைக்க அவனுக்கு மனமில்லை. இங்கே வந்ததிலிருந்து எத்தனை தடவை அவள் அழுது 
விட்டாள்.. அவளை அழ வைத்ததே அவன் தான் என்பதை மறந்து விட்டான்.

அவளது அறைக்குள் அவன் வந்ததும் பாத்ரூம் உள்ளே தண்ணீர் சத்தம் கேட்டது. பாத்ரூம் கதவை தட்டி"ஹேய்"என்றான்.உள்ளிருந்து சத்தமே வரவில்லை. கதவின் மீது சாய்ந்து ஒய்யாரமாக நின்று கொண்டிருந்தாள் குண்டலகேசி. அவன் பலமுறை கதவை தட்டோ தட்டென்று தட்ட அவள் திறக்கவே இல்லை. எந்த சத்தமும் கொடுக்கவும் இல்லை. தண்ணீர் சத்தம் மட்டும்தான் அங்கே கேட்டுக்கொண்டிருந்தது. உள்பக்கமாக பூட்டி ஆயிற்று. அவனால் எப்படி திறக்க முடியும் என்று அவள்  அவனை கதற விட நினைக்க அவனோ தனது இன்னொரு பாக்கெட்டிலிருந்து பேனா கத்தியை வெளியே எடுத்து அதை லாவகமாக அந்த கதவின் ஊடாக தெரிந்த சிறிய கோட்டில் உள்ளே நுழைத்து  அவள் மாட்டியிருந்த லாக்கை எடுத்து விட்டான்.

 விஷயம் அறியாமல் கதவின் மேலேயே சாய்ந்து நின்று கொண்டிருந்த குண்டலகேசி படக்கென்று கதவு திறந்ததும் அவன் மேலே விழுந்தாள்.அவளை கைகளில் தாங்கி கொண்டவன்"இவ்ளோ நேரம் வேணும்னே தான் கதவ தொறக்காம இருந்தியா".. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவளுக்கு என்ன ஆகிவிட்டதோ என்று அவன் பயந்து போய் விட்டான். அந்த பயம் அவள் வேண்டும் என்றே செய்த காரியத்தால் கோபமாக மாறிவிட்டது.

 ஆனால் அவளோ அவன் மேலிருந்து எழுந்து"ஆமா.. வேணும்னே தான் கதவ தொறக்கல. தொறக்க புடிக்கல. இந்த மொகறைய பாக்க புடிக்கல. இங்க இருக்க புடிக்கல. இந்த உலகத்துல வாழவே புடிக்கல. ஏன் தான் ஏழை குடும்பத்துல பொறந்தேனோ..எனக்குன்னு பேக் ரவுண்டு இருந்திருந்தா இப்டி கண்ட பரதேசி எல்லாம் என்ன தூக்கிட்டு வருமா.. இல்ல சாக கூட முடியாம எங்கப்பன நெனச்சு கவலப் பட்ருப்பேனா.. ஓ மை கருப்புசாமி"என்று அவள் வசனம் பேசிக் கொண்டிருக்க அவனுக்கு உள்ளே திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது.

 அவளிடம் மன்னிப்பு கேட்க வந்தவன் அவளை பிடித்து தன்னருகே இழுத்து"உனக்கு புடிக்குதோ இல்லயோ என்ன கட்டிக்குற.. அவ்ளோ தான்"என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.அங்கேயே இருந்தால் அவள் வேறு ஏதாவது சொல்லக் கூடும். உணர்ச்சி வேகத்தில் கைநீட்டி விட்டால் என்ன செய்வது. அவன் சென்றதும் மெத்தையில் வந்து அமர்ந்தவளுக்கு தன்னுடைய நிலை மீண்டும் நினைவுக்கு வந்தது. தப்பிக்க வேறு வழியே கிடையாது.

 அப்படி இருக்கும் பட்சத்தில் எதற்காக நாட்களை தள்ளிப்போட வேண்டும். எனவே இரவு அவன் உணவு உண்ணும் போது நாளையே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாள். அவளை ஆச்சர்யமாக பார்த்தவனிடம்

"தோ பாரு தம்பி.. எனக்கு உன் மேல லவ் கெடையாது.வராது. எப்டி வரும் காட்டு முனிக்கு நேர்ந்து விட்ட மாறி என்ன கன்றாவி முடி இது.. நீயும் உன் தாடியும் மீசையும்.. சகிக்கல.. மனுஷ குட்டி உன்ன பாக்குமா..இன்னொரு முக்கியமான விஷயம் கல்யாணத்துக்கு அப்ரம் அது நடக்கும்னு எனக்கு தெரியும்.

விதி.. ஆனா உணர்ச்சி வசப்பட்டு நான் உன் மேல படுக்க போய் உன் எலும்பு ஒடஞ்சா அதுக்கு கம்பெனி பொறுப்பாகாது.. இன்னோரு அதி முக்கிய விஷயம் ஏதோ தொள தொளன்னு சட்ட போட்டதால நான் எலும்பா தெரியலாம். ஆனா விதோட் டிரஸ் பயந்துருவ. மாமிச மல மாறி இருப்பேன். நீ நெஞ்சடைச்சு போயிடன்னா அதும் எனக்கு தெரியாது. எல்லாம் உன் நலன் கருதி சொல்றேன். யோசி நல்லா" என்றவள் தனது உணவில் கவனம் செலுத்த அவன் எதுவும் பேசாமல் உணவில் கவனம் செலுத்தினான்.

மறுநாள் அவள் சொன்னது போலவே அவர்களின் திருமணம் நடந்தது.யாரோ ஒரு பெண் வந்தாள் இவளுக்கு அலங்காரம் செய்ய. இவளும் எப்பொழுதும் போல வாய் ஓயாமல் அவளிடம் பேசி பார்த்தாள். அந்தப்பெண் வாயை திறக்கவில்லை. வந்த வேலையை முடித்து கொண்டு அவள் சென்றுவிட்டாள். திருமண கோலத்தில் தன்னை கண்ணாடி முன் நின்று பார்த்தாள் குண்டலகேசி. இளஞ்சிவப்பு நிற பட்டுச்சேலையில் அந்தப் பெண் மிதமான அலங்காரங்கள் செய்து விட்டிருக்க அழகாக இருந்தாள்.

அவளை அழைத்துச் செல்ல அவனே வந்தான். ஒரு நிமிடம் அவளைப் பார்த்ததும் ஸ்தம்பித்து நின்றவன் மறுநிமிடம் எதுவும் பேசாமல் அவளின் கரம் பற்றி அழைத்து சென்றான். அவளை நேராக அழைத்துச் சென்று பூஜை அறையில் நிறுத்தியவன்  தெய்வ விக்கிரகங்களின் கீழ் ரோஜா இதழ்களின் மேல் வைக்கப்பட்டிருந்த பொன் தாலி கொடுக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிற்றை எடுத்து அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்.

"உண்மையாவே என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா".. வேண்டாம் என்று சொன்னால் விடவா போகிறான்.. எனவே சம்மதம் என்று தலையாட்டினாள் குண்டலகேசி. அங்கே அவர்களைத் தவிர வேறு யாருமே கிடையாது. தெய்வங்கள் மட்டுமே சாட்சியாக அங்கே நின்று கொண்டிருக்க குண்டலகேசியின் கழுத்தில்  மூன்று முடிச்சுகள் போட்டு தன்னுடைய மனைவியாக்கிக் கொண்டான் வந்தியதேவன்.

தொடரும்.





Comments

  1. Interesting ud sis nce semmmma kesi ipdiya pesuva ne super mrg mudinjudha semmma super

    ReplyDelete
  2. Semma moving.. evvalavu pattalum indha vaai koraiyutha paarunga 🤭🤭

    ReplyDelete
  3. Yen kesi oda appa and akka va kupata la .....

    ReplyDelete
  4. ஆஹா கல்யாணம் முடிஞ்சிடிச்சு 💐💐💐💐👌👌👌👌👌👌👏👏👏👏👏👏

    ReplyDelete
  5. Ippadi oru kalyanatha paathathu illa pa

    ReplyDelete
  6. Kesi ma konjam vaaya kuraiyum... illa venam ithu tan nalla iruku... ippadiye pesu... Dev evlo nallavan la ka... super super super super super super super super super

    ReplyDelete
  7. Ippadiya pannuva pavam da ava innum enna Panna porano

    ReplyDelete
  8. எந்த டேமேஜ் கு கம்பெனி பொறுப்பு ஆகாது வாவ் சூப்பரோ சூப்பர்

    ReplyDelete
  9. கல்யாணம் முடிஞ்ச தா 😳😳😳😳😳,கேசி முடிந்தது ஜோலி,நீ இனிமே வாயை குறைக்க பார்ம்மா, super 👌👌👌 sister

    ReplyDelete
  10. தேனும்மா கல்யாணத்துக்கும் கூப்பிடல சோறும் போட மாட்டீங்களா.அடேய் எவ்ளோ வசதியா இருக்க.இப்புடி யாருமே இல்லாம கல்யாணம் பண்ற.கேசி இனி உனக்கு இவன்தான்.இன்னும் என்னவெல்லாம் பண்ண போறானோ.👍🏻👍🏻👌👌👌🏼🤝👏💜💖🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. Covid darlu.. Enna pannunga moi kasa acc le podrunga🤣💕

      Delete
  11. Marriage ku enna kupadhillaya

    ReplyDelete
  12. கதை செமயா இருக்கு சூப்பர் சூப்பர்

    ReplyDelete
  13. நல்லா படியா கல்யாணம் முடிஞ்சுடிச்சு

    ReplyDelete
  14. ஆனாலும் இந்த கேசி சரியான வாயாடி ப்பா. என்னா பேச்சு பேசுது.. நல்லபடியா மேரேஜ் முடிஞ்சு போச்சு. எனக்கு என்னவோ கேசி ya விட நம்ம வந்திய தேவன் தான் பாவம் போல தோணுது..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்