நெருங்கினா(ள்)ல்? 12


வந்தியதேவன் விருவிருவென குண்டலகேசி இருந்த அறைக்கு வந்து கொண்டிருந்தான்.. அவன் முகத்தில் ஏன் என்று காரணம் அறியாமலேயே அவ்வளவு கோபம் குடி கொண்டிருந்தது.அவன் தன்னைத் தேடி வருகிறான் என்பதை அறிந்து கொள்ளாத குண்டலகேசி தன்னுடைய கையில் வைத்திருந்த பூட்டை எவ்வாறு திறப்பது என யோசனை செய்து கொண்டிருந்தாள்.அவளது வலது கையின் நடுவிரல் வேறு விண் விண்ணென்று வலியை கிளப்பியது.அந்தக் கல் கொஞ்சம் அழுத்தமாகவே அவளது விரலை தாக்கியிருந்தது.

" என்ன இந்த பொட்டி ரத்த காவு வாங்குது.. இந்த பூட்டு உள்ள என்ன இருக்கு..பூட்டு இம்மாம் பெருசா இருக்கு.. சாவி போடுற ஓட்ட இத்தனூண்டு கொடுத்திருக்கான்.. எந்த அறிவு கெட்ட முண்டம் இத செஞ்சது.இந்தக் கோட்டைய பார்க்கும் போதே நினைச்சேன்.இதுல சந்திரமுகி மாதிரி என்னமோ பெரிய ரகசியம் இருக்கு. ஒருவேளை காஷ்மோரா மாதிரி என்னோட ராசி நட்சத்திரம் பொருந்தி போய் என்ன பலி கொடுக்க தூக்கிட்டு வந்துருக்கானோ..ஆத்தி விஷயம் தெரியாம இங்க உயிர் வாழ்ந்துட்டு இருக்கியே கேசி."அவள் பயத்தில் மிரண்டு கொண்டிருக்க அவள் உள்ளே வந்த கதவு வழியே இறங்கி வந்தான் வந்தியதேவன்.

அவன் வருவதைக் கூட உணராமல் அந்த பேழையை கையில் ஏந்தி யோசித்துக் கொண்டிருந்த அவளின் முதுகு பின்னால் வந்து நின்றவன்" எவ்ளோ தைரியம் இருந்தா இந்த ரூமுக்குள்ள வந்திருப்ப." திடீரென்று தனக்குப் பின்னால் இந்த அமானுஷ்ய இடத்தில் கேட்ட குரலால் அலறியடித்து திரும்பி பார்த்தாள்.

இதுவரை அவன் முகத்தில் இவ்வளவு கடுமையை அவள் பார்த்ததே கிடையாது. விட்டால் அறைந்தே கொன்று இருப்பான் போல. அவ்வளவு கோபம் எதனால் இப்படி?அவளை அறியாமலேயே அவள் கரங்கள் ஆட ஆரம்பித்தது.வந்தியதேவனின் கண்கள் அவள் முகத்திலிருந்து இறங்கி அவள் கையில் பிடித்துக் கொண்டிருந்த பேழையில் நிலைத்தது.வெடுக்கென்று அதனை அவளிடமிருந்து பிடுங்கி கொண்டான்.திறந்திருந்த பேழைக்குள் அந்தப் பூட்டை அழகாக வைத்து பேழையை மீண்டும் மூடி விட்டான்.

"ஐயோ மூடாதீங்க.. அது மூடினா தொறக்க சாவி இல்ல."

"நீ எப்டி தொறந்த"

"நான் எங்கத்த தொறக்குறது..தொறக்க ட்ரை பண்ணேன். இந்த எழவெடுத்த பொட்டி தொறக்கவே இல்ல.. சீ போனு கடுப்புல ஒரு தட்டு தட்டுனேன் படக்குனு தொறந்துருச்சு.."என்றாள் விரல் கடுக்க விரலை உதட்டருகே எடுத்துச் சென்று ஊதி விட்டாள்.

"ஏன் கையில என்னாச்சு"

"அதுவா தோ இந்த பொட்டி கீறி வெச்சிருச்சு"என்றதுதான் தாமதம் வேகமாக அவளின் விரலை இழுத்து பார்த்தான்.அதிலிருந்து ரத்தம் நிற்காமல் துளிர்த்துக் கொண்டிருந்தது.

"அறிவு இருக்கா உனக்கு உன்ன யாரு இந்த பொட்டிய எடுக்க சொன்னது.. ஏன்டி இதப்போய் தொட்ட.நான் சொல்ற பேச்ச எப்பயுமே கேட்க மாட்டியா.. பேராச பிடித்த என்ன விட்டுட்டு போறதுல உனக்கு அப்படி என்ன சந்தோஷம்.."

"ஹெலோ மிரு சார் இக்கட ச்சூடு..நீங்க என் ரூம்ல பாம்பு விட்டிங்க..நான் மறந்து போய் என்னோட ரூமுக்கு போயிட்டேன். அங்கு அந்த சனியன பார்த்து பயந்து போய் ஓட ஆரம்பிச்ச இந்த ரூமுக்குள்ள வந்துட்டேன்.  கட்டிலுக்கு அடியில் மறைஞ்சிருந்தேன். அப்போதான் முதுகுல இந்த காதவோட தாப்பா தட்டு பட்டுச்சு.  உடனே என்ன இருக்குன்னு பாக்கணும் ஆர்வத்துல ஒத்த ஆளா அந்த கட்டில நவுத்தி இந்த அறைக்கதவ கண்டுபுடிச்சு உள்ள வந்து பார்த்தா இந்த பொட்டி இருக்கு. அப்படி இப்படின்னு பொட்டியைத் திறந்து பார்த்தா பொட்டி குள்ள ஒரு பூட்டு இருக்கு.ஆனா சாவி எங்க இருக்குன்னு தெரியலையே கோபால்.."

"ஒரு கன்றாவியும் உனக்கு தெரிய வேணா.. இன்னொரு வாட்டி இந்த ரூம் குள்ள வந்த உங்க அப்பா அக்காங்க அவங்க புருஷனுங்க அக்கா புள்ளைங்க எல்லாருமே பரலோகத்துக்கு போயிருவாங்க.." என்று கடுமையாகச் சொன்னவன் அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்.  நேராக தங்கள் அறைக்கு வந்து சேர்ந்தவன் அவளை பாத்ரூமிற்க்கு அழைத்துச் சென்று அவளது விரலை தண்ணீரில் காட்டினான். ரத்தம் நிற்பதற்கு பதிலாக சொட்டுச் சொட்டாக வந்து கொண்டே இருந்தது.அவளுக்குமே ஆச்சரியமாக இருந்தது.ஆழமாக குத்திருந்தால் கூட ஒரு கட்டத்தில் ரத்தம் வருவது நின்று போகும்.ஆனால் இவ்வளவு நேரமாகியும் ஏன் ரத்தம் வருவது நிற்கவில்லை.

"ப்ச் மிரு சார் ஒரு விதத்துல நான் உங்களுக்கு பெருசா கடமை பட்டுருக்கேன். ஒரு வாட்டி என் பிரண்டுக்கு அடிபட்ருசின்னு ரத்தம் கொடுக்க போனேன்.  என்னோட ரத்தம் ரொம்ப தண்ணியா இருக்குனு சொல்லி எடுக்கவே இல்ல. ஒழுங்கான சாப்பாடு இருந்தா தானே ரத்தம் கூட ஒழுங்கா இருக்கும். ஆனா இப்ப பாருங்க. என்னோட ரத்தம் எவ்ளோ கெட்டியா இருக்குன்னு."

"இப்ப அதுவாடி முக்கியம்..ரத்தம் நிற்கவே மாட்டுது.." அவளை கூட்டி சென்று மெத்தையில் அமர்த்தியவன் ஓடிப் போய் டின்ஞர் எடுத்து வந்தான்..  பஞ்சில் டின்ஞர் தொட்டு அவள் விரலில் ஒத்தி எடுத்து பிளாஸ்டர் போட்டுவிட்டான். அவளுக்கு அவனைப் பார்க்க சிரிப்பாக இருந்தது. அவன் ஒரு கொலைகாரன். தூக்கு தண்டனை கைதி. எத்தனை பேரை அவன் வாழ்வில் கொன்று புதைத்திருப்பானோ தெரியவில்லை. அப்படிப்பட்டவன் தன்னுடைய விரலின் அடிபட்டதற்கு இவ்வளவு தூரம் பதறுவது அவளுக்கு வேடிக்கையாகத்தானே இருக்கும்?

அவனது பதற்றமும் அவளது சிரிப்பும் அந்த நேரத்தில் இரண்டர ஒன்றாக கலந்துவிட்டது.தன்னுடைய பதற்றத்தையும் தவிப்பையும் கண்டு அவள் சிரிப்பது அவனுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. என்ன செய்கிறோம் என்று அறிவிலிருந்து அவளின் குரல் வளையில் கையை வைத்து


"என் வேதன எப்பவும் உனக்கு புரியாது..  அது புரிஞ்சுக்க நீ எந்த முயற்சியும் எடுக்கவே மாட்ற.. ஏன் இப்படி இருக்க.இவ்ளோ சுயநலம் உனக்கு எங்கிருந்து வந்துச்சு.எப்போதான் நீ மாற போற.. இல்ல நீ மாற மாட்ட..  நீ மாறுவேனு காத்திருக்கிற நான் தான் பைத்தியக்காரன்".. என அவளைத் தள்ளி  விட்டு வெளியே சென்றான்.


தான் எதற்காக மாற வேண்டும்.. சுயநலமா அதுவும் தனக்கா? யாரை பார்த்து அவன் இந்த வார்த்தைகளைக் கூறி சென்றான். காத்திருந்தானா எனக்காக ஏன் இவன் காத்திருக்க வேண்டும்? இப்படியான கேள்விகள் குண்டலகேசியின் உள்ளே சுழன்றன.கேட்பதற்குள் அவன் தான் சென்று விட்டானே.. ரத்தம் வேறு நிற்காமல் வழிந்தது ப்ளாஸ்டரை மீறி. அதனை ஆராய மனமில்லாமல் அப்படியே படுக்கையில் சாய்ந்தாள். சிறிது நேரத்தில் விரலில் எரிச்சல் தோன்ற கண்விழித்து பார்த்தாள்.

அவன் தான் எதையோ அரைத்து கிண்ணத்தில் எடுத்து வந்திருந்தான். அவளின் கரத்தை பற்றி ரத்தம் வழியாமல் இருக்க அந்த பச்சலையை வைத்து கட்டினான். அப்பொழுது விடாமல் ரத்தம் வர ஆரம்பிக்க வேறு வழியில்லாதவன் போல் அவள் முகம் நோக்கினான்.

"வேற வழியில்ல.. நீ பொறுத்து தான் ஆகணும்"

"நீ என்ன சொல்ற. ரத்தம் என்ன பிச்சிக்கிட்டா ஊத்துது. அது பாட்டுக்கு நின்னுரும்.. அதுக்கு ஏன் இவ்ளோ சீன்"

"உனக்கு எதுவுமே நியாபகம் வரலையா"பாவமாக கேட்டான்.

"என்ன நியாபகம் வரணும்.. எனக்கு தான் எல்லாமே நியாபகம் இருக்கே. எதையும் மறக்கலையே"

"இல்ல ஒண்ணுமில்ல இரு வரேன்.."என்றவன் திரும்பவும் எங்கேயோ சென்று இம்முறை மலைப்பாம்புடன் உள்ளே வந்தான். கண்மூடி படுத்திருந்தவளின் அருகே சென்றவன் அவள் தெறித்து ஓடிவிடாத அளவுக்கு சடாரென்று அவளை இறுக்கமாக அணைத்து தூக்க அவள் கண்விழிக்க எதிரில் பாம்பு. பாவம் கேசி அலறி கத்தி கதறி துடிக்க எதற்கும் மனம் இரங்கவில்லை வந்தியதேவன். அந்த மலைப்பாம்பு மெல்ல அவளருகே வந்து அவன் விரித்தபடி பிடித்திருந்த அவளின் காயப்பட்ட விரலில் தன் நீண்ட நாவை கொண்டு ஸ்பரிசிக்க மயங்கி விழுந்தாள் கேசி.

மீண்டும் அவள் கண் விழிக்கும்போது காலை சூரியன் உச்சிக்கு ஏறி இருந்தது.நேற்று நடந்தது அனைத்தும் அவனுக்கு என்ன நினைவுக்கு வந்தது.வேகமாக தன்னுடைய காயம்பட்ட விரலை பார்த்தாள்.என்ன ஆச்சரியம் நேற்று விடாமல் ரத்தம் கசிந்து கொண்டிருந்த விரல் என்று எப்பொழுதும் போல இயல்பாக இருந்தது.

என்ன விந்தை இது.. நேற்று பாம்பு வந்ததே.. அதன் நாவு என்னை நொக்கி நீண்டதே.. பிறகு என்ன ஆயிற்று. இது எப்படி சாத்தியம்..அந்த பேழை. அதில் என்னவோ மர்மம் இருக்கிறது. உடனே அந்த அறைக்கு ஓடினாள் கேசி. அந்தோ பரிதாபம் விழுந்தடித்து கொண்டு அவள் ஓடி வர அங்கே அந்த அறை இருந்த சுவடே தெரியவில்லை. வெறும் சுவர் தான் இருந்தது. ஆஆ என்ற அலறலோடு தலையை பிடித்து கொண்டாள் குண்டலகேசி.

உண்மை அறிய துடிக்காதே
பெண்ணே
அறிந்த பின்
புழுவாய் துடிப்பாய்
என் பேச்சை
கேள்..

தொடரும்.

Comments

  1. super super super super super supersuper super super super super supersuper super super super super supersuper super super super super supersuper super super super super super

    ReplyDelete
  2. வேற லெவல் ல போகுது. ..
    அடுத்து என்ன அடுத்து என்ன னு இன்ட்ரெஸ்டா இருக்கு 🤩

    ReplyDelete
  3. Then nila endral twist endru artham 😎😎😎😎😎😎🔥🔥🔥🔥🔥

    ReplyDelete
  4. Aioo.. Ithu enna orey vinothama iruku... 🤣🤣... Vitta enaku BP vanthurum pola... 😂 😂... Waiting for the next ud saki 🌟🌟

    ReplyDelete
  5. Oooo Sumthng Sumthng enavoo iruku ivangalukulla sekram solu ma

    ReplyDelete
  6. Wow akka ennavo iruku flashback😍😍😍 very nice epi akka 🥰🥰🥰❤

    ReplyDelete
  7. ரொம்ப இன்ரஸ்டா இருக்கு சஸ்பென்ஸ் இருக்கும் போல

    ReplyDelete
  8. Sema Sema ennapa kathai viththiyasama moving irukku arumai

    ReplyDelete
  9. தேனும்மா எம்புட்டு டுவிஸ்ட்டு வைக்குறீங்க.அதுதான் உங்க பாணியே.நாங்க ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடக்கும்.இவங்க பேரே வித்தியாசமா இருக்கு.ஒருவேளை பூர்வ ஜென்ம பந்தம் ஏதாவது இருக்குமா.ஏன் ரத்தம் நிக்காம வந்தது.பாம்பு நாக்கு பட்ட உடனே நின்னு போச்சு.அந்த ரூம் எப்படி மாயமா மறைஞ்சது.ஆனாலும் கேசி உனக்கு உன் வாய் தான் வில்லன் போல.அதால நீ நல்லா இவன்ட்ட பாடுபட போற.👌👌🏼👍🏻👏🏻👏👌👌🏼👍🏻💖👏👌👌🏼பேதையிவள் அறிந்து கொள்ள துடிக்கும் ரகசியம் என்னவோ.இதனால் இவளின் வாழ்வில் ஏற்படபோகும் மாற்றம் என்னவோ.👏👌👌👌🏼👏🏻👏🏻💜💖💜👍🏻💖👍🏻👏👍🏻👏🏻👌👌👍🏻

    ReplyDelete
  10. Verithanam aduthu ena aduthu ena nu yosika vaikuthu super story 😍

    ReplyDelete
  11. Semaaaaa semaaaaa super vera level 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤👏👏👏👏👏👏

    ReplyDelete
  12. எப்படி ரூம் காணாம போச்சு.. கேசி மட்டும் இல்ல நாமலும் கொளம்பிடுவோம் போல.. ஆனால் எப்படி வந்தியதேவன் இப்படி ஆனான். கேசி ya லவ் ஏதும் பண்றானா

    ReplyDelete
  13. Interesting ud sis semmmmma semmmma super ah pogudhu stry ennavo marmam iruku rendu perukum amdha room epdi wall ah marichu super super

    ReplyDelete
  14. Omg.. ennangadaww vitthai ellam kaatreenga..🙄🙄 Deiii VD nee yaaru leii.. maayavi ahhh neeyuuu 😱😱😂😂 enna nyabagam varanum avaluku.. pona jenmatthu saabam ethuvum irukumo 🤔🤔 Inna Kesi ithellam 😩😩

    ReplyDelete
  15. Epd ipd twist twist vakirenga... Chanceless

    ReplyDelete
  16. Ithuku pinnala etho periya twist irukunu ninaikren.... sekiram open pannunga sister......

    ReplyDelete
  17. Romba interesting ah move panringa sis,,, am waiting

    ReplyDelete
  18. செம்ம நிலா வேற ஏதோ மறுஜென்மம் போல இருக்கு,அது கொஞ்சம் கடிமையானதாக இருக்கும்ன்னு தோணுது👌👌👌👌👌👌

    ReplyDelete
  19. Etho paeriya ragasiyam irruku pa

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்