16 நெருங்கினா(ள்)ல்?





 அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. இந்த வருடம் உங்களுக்கு நிறைய மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்க நானும் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்🎉🎊🎀🎁✨️🎇🌟

கையில் கோடாரியோடு அமர்ந்திருப்பவனை காண்கையில் குண்டலகேசிக்கு அடி வயிற்றைக் கலக்கியது. ஏற்கனவே நீண்ட நேரம் தண்ணீரில் இருந்தது வேறு அவளுக்கு குளிரை கிளப்பியது. இதில் கமலியை சுமந்துகொண்டு நிற்பது  இன்னும் உடல் தள்ளாட்டத்தை  கொடுத்தது.. அவன் கொலைகாரன் என்று அவளுக்கு தெரியும். ஆனால் இப்பொழுது எதற்காக கையில் கோடாரியோடு அமர்ந்திருக்கிறான்..  இந்த ரகசிய அறைக்குள் வரத்தான் அவள் கமலியோடு குளக்கரைக்கு சென்றாள் என்று அவன் கண்டு பிடித்து விட்டானா..

 பேயை கண்டதுபோல தன்னை பார்த்து சுவரோடு சுவராக சாய்ந்து நின்ற மனைவியை ஈவு இரக்கமே இல்லாமல் முறைத்துக் கொண்டிருந்தான் வந்தியதேவன்." இந்த ரூம கண்டுபிடிக்க தான் நீ குளத்துக்கு போன.. அப்படித்தானே"(ஒன்று சொல்ல மறந்து விட்டேன். வந்தியதேவனை பற்றி நிறைய தகவலை கொடுத்த நான் முக்கியமான ஒரு தகவலை கொடுக்க மறந்து விட்டேன். அந்தத் தகவல் அவனின் குரல்  மிகவும் கடினமான குரல்.  அவன் ஹஸ்கி குரலில் பேசினாலும் கூட யாரையோ மிரட்டுவது போல் தான் இருக்கும்.)

 அப்படியிருக்கையில் அவன் உண்மையாகவே அவளை மிரட்ட குண்டலகேசிக்கு கொஞ்ச நஞ்சம் உடலில் ஒட்டிக்கொண்டு இருந்த தைரியமும் சுவரோடு சுவராக புதைந்து போனது.. " அப்படி தானே".. புதைந்துபோன தைரியம்  உள்ளே செங்கல்லின் மீது படுத்துக் கொண்டது. " அப்படி தானே" இம்முறை அவன் கத்திய கத்தலில் கையில் தாங்கிக் கொண்டு இருந்த கமலியை தரையில் அப்படியே தரையில் நழுவ விட்டாள். அதுவரை சாதாரணமாக முறைத்துக் கொண்டிருந்தவன் இப்பொழுது கர்ண கொடூரமாக அவளை பார்க்க செங்கல்லின் மீது படுத்துக் கொண்டிருந்த அவளது தைரியம் சிமெண்ட்டாக மாறி செங்கலை சுற்றியும் தன்னை இறுக்கிக் கொண்டது.

" அது அது வந்து.. நான் வேணும்னே இப்படி செய்யல.. சும்மா சுத்தி பாக்கலாம்னு.. "

"என்ன ஏமாத்திட்டு போயிருக்க.."

"இல்ல சத்தியமா இல்ல..  ஆமா நீ எதுக்கு கையில கோடாரியோட உட்கார்ந்து இருக்க." அவனை முதல் தடவை சிறையில் பார்த்த போது கூட அவள் குரல் இவ்வளவு நடுக்கத்தை வெளிக்காட்டவில்லை.

"இங்க வா.. "

"எதுக்கு.."

" இங்க வரச் சொன்னா வா"

"இல்ல வரமாட்டேன்.. தேவா தெரியாம செஞ்சுட்டேன்..ஏதோ ஒரு ஆர்வக் கோளாறுல..என்ன மன்னிச்சிடு.. என்ன போட்டு தள்ளிராதே..நா வாழவேண்டிய பொண்ணு..என்னால இந்த உலகத்துக்கு நடக்க வேண்டிய நல்லது நிறைய இருக்கு.ப்ளீஸ் என்ன கொன்னுராத.." அவள் தன்னிடம் வர மாட்டாள் என்று புரிந்துகொண்ட வந்தியதேவன் கையில் கோடாலியோடு எழுந்து நின்றான். அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க எங்கே தன்னைக் கொன்று விடுவானோ என்ற பயத்தில் வந்த வழியே திரும்ப ஓடினாள் குண்டலகேசி.எங்கு பார்த்தாலும் இப்போது சுவர்தான் தென்பட்டது.

 வந்த வழியே மறந்து விட்டதடா சொக்கநாதா என்று வடிவேலு சொன்னது போல குண்டலகேசிக்கு அவள் வந்த வழி மறந்து விட்டது. எப்படியோ தட்டுத்தடுமாறி ஓடிப் போய் பார்த்தால் அந்தப் பக்கம் வந்திய தேவன் நின்று கொண்டிருந்தான். மீண்டும் அலறிக்கொண்டே திரும்ப ஓடினால் இந்தப் பக்கம் வந்திய தேவன் நின்று கொண்டிருந்தான். எந்த பக்கம் ஓடினாலும் அவனே நிற்க அப்பொழுது தான் அவள் மண்டைக்கு ஒன்று புரிந்தது அந்த அறை வட்ட வடிவில் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. எங்கே ஓடினாலும் அவனிடம் தான் வந்தாக வேண்டும்.

 கையில் கோடாரியோடு அவன் நெருங்க மிரண்ட பார்வை அவள் பார்க்க பக்கத்தில் ஒரு சிறிய சந்து தெரிந்தது.  இந்த சந்து வழியாக உள்ளே சென்றால் ஒருவேளை தப்பித்து விடலாமோ என்ற ஒரு குருட்டு நம்பிக்கையில் சற்றென்று அந்த சந்துக்குள் தாவி விட்டாள் குண்டலகேசி. அந்தோ பரிதாபம். அவளது நெஞ்சு வரைக்கும் தான் அந்த சந்துக்குள் சென்றது. பாதியுடன் குறிப்பாக அவளது தொப்பை சந்துக்கு வெளியே மாட்டிக்கொண்டது.. உள்ளேயும் செல்ல முடியாமல் வெளியில் வர முடியாமல் அவள் விழி பிதுங்கி முழித்துக் கொண்டிருக்க வந்தியதேவன் அவளது இடையை பிடித்து இழுத்து வெளியே போட்டான்..

 தரையில் விழுந்த வேகத்தில் அவளது புட்டத்தில் பலமாக அடி விழ ஐயோ அம்மா என்று அதனை தேய்த்துக்கொண்டே நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்களில் மெய்யான மரண பீதி. ஏனென்றால் அவன் கையில் கோடாரியை ஓங்கி கொண்டு நின்றான். ஓங்கியவன் அதனை அவளை நோக்கி இறக்க இன்றோடு தன் கதை முடிந்தது என்று எண்ணிய குண்டலகேசி முகத்தை இரு கைகளாலும் இறுக்க மூடிக் கொண்டாள். கோடாரி அவள் பாதத்தின் அருகே டாங் என்று தரையில் அடித்தது. வெட்டு தன் மீது விழ வில்லையா என்று பயத்தோடு கைகளை விலக்கி பார்க்க அவள் வலது பாதத்தில் இருந்து ஒரு இரும்பு சங்கிலி துண்டு பட்டு கிடந்தது.

 அவள் பாதத்தில் இருந்து அந்த சங்கிலி நீண்டு எங்கேயோ போனது. தனக்கே தெரியாமல் தன் காலில் இந்த சங்கிலி எப்பொழுது பூட்டப்பட்டிருக்கும். யார் பூட்டியது.. எப்படி பூட்டப்பட்டிருக்கும்.. அவள் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்த சங்கிலி மாயமாய் மறைந்து போனது..

"இது.. இந்த சங்கிலி"

"அது அடிமை சங்கிலி.. உன்ன யாராலயும் அடிமை படுத்த முடியாது நான் உயிரோட இருக்குற வரைக்கும்.. இந்த கோடாரி உனக்கு நியாபகம் இருக்கா"..கோடரியை அவள் கையில் கொடுத்தான். அவளால் அதனை தூக்கக் கூட முடியவில்லை. அமர்ந்த நிலையில் இருந்ததால்  கோடாரியை இரு கைகளிலும் குழந்தைபோல வாங்கி மடியில் வைத்துக்கொண்டாள்.. அவளது மடியே வலித்தது.. அவ்வளவு பாரம்.. கோடாரியின் பிடி உலோகத்தால் ஆனது போல. அதில் ஏதேதோ கிறுக்கி இருந்தது.. கோடாரி தயாரித்து பல காலம் இருக்க வேண்டும். ஆனால் அதன் கூர்மை சற்றும் மழுங்காமல் காணப்பட்டது..

"நியாபகம் இருக்கா" அவன் மீண்டும் கேட்க

" இல்ல ஞாபகம் வரல.. " அவள் அவ்வாறு கூறியதும் சட்டெனக் குனிந்து அதனை கையில் எடுத்துக் கொண்டான்.. அவளை திரும்பியும் பாராமல் எங்கேயோ சென்றான். பின் மீண்டும் திரும்பி வந்தான். அவள் அமர்ந்த நிலையிலேயே இன்னும் அமர்ந்திருந்தாள். அவளுக்கு புரியாத இந்த புதிர்களில் இருந்து விடை தெரிய வேண்டும். தெரியாமல் இந்த இடத்தை விட்டு வெளியேறப் போவதில்லை என்று பிடிவாதமாக அமர்ந்திருந்தாள்.

" உனக்கு என்ன வாழை இலை போட்டு சோறு போடறாங்களா.. இங்கேயே உட்கார்ந்து இருக்க.. வேகமா எந்திரிச்சு வா"

"எனக்கு நீ உண்மைய சொல்லியே ஆகணும்..இது என்ன இடம்.அன்னைக்கு நான் இந்த ரூம் குள்ள தான வந்தேன். ஆனா மறு நாள் பார்க்கும் போது இந்த ரூமா காணோம்.. இப்போ பார்த்தா நீ எனக்கு முன்னாடி இங்க வந்து உட்கார்ந்து இருக்க.. எங்கேயோ இருக்கிற ஒரு குளத்துல குதிச்சா  அது இங்க வந்து சேக்குத்து.. என் கண்ணுக்குத் தெரியாத சங்கிலி எப்படி உன் கண்ணுக்கு தெரியுது.. தயவுசெஞ்சு உண்மைய சொல்லு தேவா.. என்னால முடியல பைத்தியம் பிடிச்சிடும் போல.. ப்ளீஸ்"

அவள் முன்பு மண்டியிட்டு கலைந்த கண்டபடி கிடந்த அவளின் கூந்தலை ஒரு விரல் கொண்டு காது மடலில் சொருகி விட்டு அவளது கன்னத்தை பிடித்தபடி

" உனக்கே தெரியாம நீ இதுக்குள்ள வந்துட்ட.. அப்பவும் சரி,இப்பவும் சரி, எப்பவும் சரி... நீ எது செஞ்சாலும் உன்ன நா விட்டு தர மாட்டேன். உன் மேல நான் வெச்சிருக்கிற அன்புக்கு இந்த உலகத்துல எதுவுமே ஈடாகாது. உனக்கு சீக்கிரம் உண்மை தெரியவரும்.. அதை நீ தாங்கிக்கனும்.."

"என்ன உண்மை.."

" அதான் சொன்னேனே உனக்கே சீக்கிரத்துல தெரியவரும்.. நீயாவே தெரிஞ்சுக்குவ.. அது வரைக்கும் தயவு செஞ்சு கொஞ்சம் அமைதியா இரு.. கொஞ்ச நாளைக்கு இத பத்தி எல்லாம் யோசிக்காதே.. " மகுடிக்கு மயங்கிய பாம்பாக அவனது குரல் அவளை மயக்க சட்டென்று அவளது நெற்றியில் குத்தினான் வந்தியதேவன்.  மயங்கி விழுந்தாள் குண்டலகேசி. அவளை தூக்கி தோளில் போட்டவன் கமலி அருகே சென்று அவளை தூக்கி இன்னொரு தோளில் போட்டான்.. இருவரையும் தூக்கி கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.

 நெடுநேரம் கழித்தே குண்டலகேசி கண் திறந்தாள். அதுவும் அவளது லட்டு அவள் காதருகே குரைத்துக் கொண்டிருந்தது. மயக்கம் தெளிந்து எழுந்தவளுக்கு எல்லாமே தெள்ளத் தெளிவாக இப்பொழுது புரிந்தது.  தன்னைச் சுற்றி ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது.  அது வந்தியதேவனுக்கு தெரிந்து இருக்கிறது..  ஆனால் அதனை சொல்ல மாட்டேன் என்கிறான். இதனை எவ்வாறு கண்டுபிடிப்பது.. இங்கிருந்து எப்படி தப்பிச் செல்வது.  ஆவுடையப்பனின் மடியில் படுத்து கண்ணீர் விட்டு அழ வேண்டும் என அவள் நெஞ்சம் அடித்துக்கொண்டது.

 தனது ஆறு மருமகன்களும் சில்வர் தட்டு கீறல் விழும் அளவிற்கு தயிரை ஊற்றி நக்குவதை பார்க்கும்போது ஆவுடையப்பனுக்கு குமட்டிக் கொண்டு வந்தது..

" ஏன் மாப்ள.. தெரியாம தான் கேக்குறேன்.. யாராச்சு ராத்திரி நேரத்துல தயிர் ஊத்தி சாப்பிடுவாங்களா.."

" என்ன மாமா இப்படி கேட்டுட்டீங்க.. இந்த தயிர நீங்க சாப்பிட்டு பாருங்க.. அடடா என்ன ருசி என்ன ருசி.. அப்படியே சல்லுனு இறங்குது.."

" ஓசியில கிடைச்சா அப்படிதான் மாப்ள சல்லுனு இறங்கும்.." ஆவுடையப்பன் சொல்லியதை காதில் வாங்காமல் வைரமுத்து முழங்கை வரை நக்க மற்ற மாப்பிள்ளைகளும் தயிரை நக்கி முடித்து இன்னொரு ரவுண்ட் கறி ரசம் தயிர் என இறங்கி விட்டார்கள்.. பிறவியிலேயே அவர்கள் அனைவரின் உடலிலும் சோம்பேறி ரத்தம் ஓட ஏதோ குடும்பம் பிள்ளைகள் என்று ஆகிவிட்டது. சமுதாயத்தின் முன் தானும் நல்ல நிலையில் இருப்பதற்காக உழைத்தார்கள்.

 இப்பொழுது யாரோ ஒரு புண்ணியவான் உட்கார வைத்து கட்டாய ஓய்வு கொடுத்து வாய்க்கு வக்கணையாக சமைத்தும் போடவும் அதனை ஒரு கட்டு கட்டாமல் விட்டு வைக்க அவர்கள் என்ன இளிச்சவாயன்களா? சொல்லப்போனால் இந்த சுகத்திற்கு அவர்கள் உடல் பழகி விட்டது. வெளி உலகத்தைப் பற்றியோ தங்கள் மனைவிகளை பற்றியோ குழந்தைகளை பற்றியோ அவர்கள் யாரும் கவலைப்படவில்லை. அனைவருக்கும் ஒவ்வொரு அறை அந்த வீட்டில் கொடுக்கப்பட்டிருந்தது. ஒரு குழம்பு ஒரு கூட்டு என்று தங்கள் வீட்டில் சாப்பிட்டவர்களுக்கு மேசை முழுக்க உணவுகளை கண்டதும் கணக்கில்லாமல் சாப்பிட்டு உடலில் உஷ்ணத்தை ஏற்றிக் கொள்வார்கள்.  இரவில் உஷ்ணத்தை தணிக்க மனைவி அருகில் சென்றால்

" என் தங்கச்சிய எவனோ ஒருத்தன் கடத்திட்டு போய் இருக்கான். அவன கண்டுபுடிச்சு என் தங்கச்சிய காப்பாத்தி இங்க இருந்து எல்லாரும் தப்பிச்சி போலாம்னு பார்த்தா நீங்க எல்லாரும் திண்ணு கிட்டு இருக்கீங்க.. வெட்கமா இல்ல உங்களுக்கு.. நீங்க எல்லாம் ஆம்பளையா.. "

" யார பார்த்து நீ ஆம்பளையான்னு கேட்ட" என்று கணவன்மார்கள் குண்டலகேசியின் சகோதரிகளை அடிக்க வர இப்பொழுது முன்போல் அவர்களுக்கு பயந்து கொண்டு இல்லாமல் தைரியமாக அவர்களின் கையை பிடித்து முறுக்கினார்கள் பெண்கள்.

" அவனுங்க கும்மாங்குத்து குத்துறானுங்க.. அப்ப எல்லாம் மூடிட்டு வாங்கிகிட்டு இருக்கீங்க.. நாங்க ஏதாச்சு சொல்லிட்டா எங்ககிட்ட பாஞ்சுட்டு வரீங்க.. எங்கள பார்த்தா அவளோ எளக்காரமா இருக்கு உனக்கு..எட்டி மிதிச்சா எமனுக்கு பக்கத்துல ஒக்காந்துருவ பாக்கறியா.. பாக்கறியா.." என்று சகோதரிகள் அனைவரும் ஆளாளுக்கு ஏற்றது போல வசனத்தை மாற்றி கணவன்மார்களை மிரட்ட பதுங்கி போனார்கள் அவர்களின் பிராணநாதன்கள்..

 குண்டலகேசியின் சகோதரிகளுக்கும் ஆவுடையப்பனுக்கும் மட்டும் தான் இது எங்கே சென்று முடியுமோ என்று பயமாக இருந்தது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குண்டலகேசியை சந்திக்க கடவுளை வேண்டிக் கொண்டனர்.

தொடரும்...

Comments

  1. Nice ud akka happy new year ♥️💫

    ReplyDelete
  2. Super akka👌👌👌👌👌happy new year💐💐💐💐

    ReplyDelete
  3. Happy New year Sister


    Nice story

    ReplyDelete
  4. Super 👌👌👌👌👌 sister romba நல்லா இருக்கு நிலா, Happy New year ,😊😊😊

    ReplyDelete
  5. Knjm nerathula allu vutruchchu leii VD 🥴🥴

    ReplyDelete
  6. Interesting ud sis super super semmma sis ipavum solave ila deva enna dha marmam iruku

    ReplyDelete
  7. Semaaaaa semaaaaa 👌👌👌👌👌👌👌

    ReplyDelete
  8. Super Sema pochu summave iva kannula vilakkennai vittu theduva ini enna Panna poranu theriyala

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்