37 நெருங்கினாள்(ல்)?



"என்னமா யோசிட்டு இருக்க"ஆவுடை கேட்க தன் சிந்தையில் இருந்து கலைந்தவள் லேசாக தலையை நிமிர்த்தி ஆவுடையை பார்த்தாள்.


"அப்பா"


"உன் அப்பன் தான்.. சொல்லு என்ன யோசன என் பொண்ணுக்கு. அதுவும் இந்த உலகத்துல இல்லாத அளவுக்கு.. நான் சொல்லட்டுமா"அவளின் நெற்றி சுருங்கி விரிந்தது.


"மாப்பிள்ளய பத்தி யோசிச்சிட்டு இருக்க".. ஆவுடை பளீரென சிரிக்க கேசி சலிப்பாக உச்சிக் கொட்டினாள்.


"அப்பா மனசு, கண்ணு இது ரெண்டுல யார் சொல்றத நாம கேக்கணும்"..


"ம்ம்ம்..ரெண்டு சொல்றதையும் கேக்கலாம் தப்பு இல்ல. ஆனா அது உண்மையா இருக்கனும்.கண்ணு ஆயிரம் பாக்கும். எல்லாத்துக்கும் சாட்சி வெச்சிக்கும். பாக்குறது எல்லாம் நமக்கு இல்லையேனு ஏங்க சொல்லும்.. இதுவே மனசுனா நமக்கு பிரியமானவங்க என்னதான் கொலை குத்தம் செஞ்சாலும் அவங்க பக்கம் இத்துனோண்டு நல்லது இருக்கானு தேடும். நியாயம் நீதி தர்மம் எதுவுமே மனசுக்கு தெரியாது. அதுக்கு தெரிஞ்சது எல்லாமே அன்பு தான்.அந்த அன்பு கெடைக்கலனா அத நெனச்சு ஏங்கி துடிக்க செய்யும்.


மனசுக்கு நல்லது கெட்டது தெரிஞ்சாலும் அது ஒரு கோழைம்மா. பாசத்துக்கு கட்டுப் பட்டது.. இப்படி முடிவெடுக்க முடியாம திண்டாடும் போது தான் கடவுள் மூளைய பயன்படுத்த சொல்றாரு..மூளை பாசத்த பாக்காது. அதுக்கு நெருக்கமானவங்க தெரியாது. ஒண்ணே ஒன்னு மட்டும் தெரியும். அது நாம செய்றது சரியா தப்பானு.. குண்டம்மா நீ அப்பா கிட்ட சொல்ல மாட்ற. ஆனா எனக்கு எல்லாமே தெரியும். மாப்ள அன்னிக்கு ஹாஸ்ப்பிதிரிக்கு வந்தாரு.


அவரு தான் நீ இங்க இருக்குறத சொன்னாரு. அதோட கூடு விட்டு கூடு பாஞ்ச கதையையும் சொன்னாரு.."அப்பா என்ற அலறலோடு அவர் மடியிலிருந்து பதறி எழுந்தாள் கேசி.


"ஆமா அன்னிக்கு வந்தாரு. எல்லாத்தையும் சொன்னாரு. என்னால நம்ப முடியல. நம்பாம இருக்க முடியல. கூடவே அந்த ஹேரியும் இருந்தான். நீயா அப்பா கிட்ட சொல்லுவேன்னு நெனச்சேன். ஆனா நீ வாயே தொறக்கல..எனக்கு யார் மாப்ளனே இன்னும் புரியல" அவர் நிதானமாக கூற


"அப்பா எப்படிப்பா இது இவ்ளோ ஈசியா எடுத்துக்கிட்ட." கேசி ஆச்சரியமாக கேட்க


"ஏனா நான் அதை நம்பவே இல்ல.. எனக்குத் தேவ என் மகள பாக்கணும். நீ சொன்னா மட்டும்தான் நான் நம்புவேன். கடவுளே வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.நீ சொல்லுமா ஹேரி நான் தான் அன்னிக்கு வந்தது. உங்கள் மகள கடத்தி கல்யாணம் பண்ணது..  எல்லாத்துக்கும் நான்தான் காரணம்னு சொல்லி என் காலுல விழறான். வந்தியதேவன் இப்பவும் நான் கேசிய விரும்புறேன் அவள என் கூட சேர்த்து வையுங்கன்னு சொன்னான்.. நீ சொல்லுடா இது உண்மையா.."


ஆவுடை நிதானமாக கேட்க குண்டலகேசி நடந்த அனைத்தையும் கூறினாள்.  இதைக் கேட்ட அந்த அன்பான தந்தைக்கு அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் இனி ஒன்றும் செய்ய முடியாது நிலைமை கைமீறிப் போய் விட்டது.இருவருமே குண்டலகேசி மீது சரிசமமான பாசத்தை வைத்திருக்கிறார்கள்.அன்று மருத்துவமனையில் இருவரையும் பார்க்கும் போதே அவர்கள் கண்ணிலிருந்து வெளிப்பட்ட உணர்வு போராட்டத்தை அவர் கண்டிருந்தார்.


இதில் அவர்கள் முடிவெடுக்க எதுவும் இல்லை என் மகள் ஏமாற்றப்பட்டிருக்கிறாள்.அவள் வாழ்வில் சதி நடந்து இருக்கிறது. அந்த சதியை செய்த இருவருக்கும் மகள் என்ன தண்டனை தர இருக்கிறாள் அல்லது மன்னித்து கடந்து விடுவாளோ? எது வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் முடிவு அவளுடையது.


" குண்டம்மா..  நீ ஏன்டா தலை குனிஞ்சு உட்கார்ந்து இருக்க..உன் மேல என்ன தப்பு இருக்கு. இங்க நீ ஏமாத்தப்பட்டு இருக்க. சொல்லப் போனா கண்கட்டி வித்த காட்டிருக்காங்க..  ஊர் உலகம் என்ன சொல்லும் அப்படின்னு நீ யோசிக்காத.. உனக்கு என்ன தோணுதோ அத சொல்லு அது செய். நீ என்ன முடிவு எடுத்தாலும் அப்பா உன் கூட இருப்பேன்.  யார் ஒன்ன வேணான்னு வெறுத்தாலும் நான் என் பொண்ணு தப்பு செய்ய மாட்டானு நம்புவேன்..


ஹேரி செஞ்சது மன்னிக்க முடியாத துரோகம்.ஆனா அதுவும் ஒருவித காதல் தான். வந்தியதேவன் ஒரு தப்பும் பண்ணல. ஆனா போன ஜென்மத்த அதோட முடிக்காம அவனோட மாந்திரீக வித்தைய வெச்சு இந்த ஜென்மத்தயும் கேட்டு வாங்கி இருக்கான்.அதனால வந்த வினை தான் இவ்ளோவும்.. உனக்கு யார் கூட வாழனும்னு தோனுது.."


" தெரியலப்பா. சத்தியமா தெரியல.  நா ரொம்ப குழப்பமா இருக்கேன். எனக்கு தனியா யோசிக்கணும்.  அப்பா நான் கொஞ்ச நேரம் கோயில் போய்ட்டு வரேன்"குண்டலகேசி எழுந்து கோவிலுக்குத் கிழம்பிச் சென்றாள்.கோவில் இல்லாமல் தனியாக யோசித்தாலும் அவளின் குழப்பம் தீர வழி இல்லை.ஆனால் ஒரே ஒரு வழி மட்டும் தெரிந்தது. தனிமையை விட ஒரு மருந்து இந்த உலகத்தில் கிடையாது. நம்மை சுற்றி உறவுகளும் நட்புகளும் இருக்கும் வரையில்தான் நமக்கு பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். சொல்லப்போனால்  உரிமைப் போராட்டங்களும் உணர்வின் வலிகளும் அங்கே ஏராளம்.


அனைத்திலிருந்தும் விலகிச் செல்லலாம் என்று பார்த்தால் சத்தியமாக நம்மால் முடியாது. ஆனால் சிறிது நாள் நாமே தனிமையை விரும்பி எடுத்துக் கொள்ள வேண்டும். தனிமை சொல்லாத பாடத்தையா மற்றவர்கள் சொல்ல போகிறார்கள்? அப்படி ஒரு தனிமை அவளுக்கு கிடைக்குமா?  குழம்பி அமர்ந்திருந்தவள் அருகே வந்து நின்றான் ஹேரி. அவளைக் கண்காணிப்பது அவனுடைய வேலையாக இருக்கும் போது அவன் எங்கே சென்றாலும் பின் தொடர்வது அவனுக்கு சுலபமாக இருந்தது.


அவன் பின்னாடியே வந்து நின்றான் வந்தியதேவன். அவன் மட்டும் என்ன? அவனும் வந்தான் குண்டலகேசி மேல்  தன்னுடைய இரு கண்களையும் பதித்து வைத்திருக்கிறானே.. இரண்டு ஆடவர்கள் தன் முன் நிற்பதை கண்ட குண்டலகேசி.  கோபம் கொள்ளவில்லை நிதானமாக அவர்களை ஏறிட்டாள்.  அவளின் கோப முகத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த இரு ஆடவர்களுக்கும் இந்த நிதானமான முகம் பயத்தை ஏற்படுத்தியது.


"குட்டி".. வந்தியதேவன் அழைத்தான். அவன் கண்களை குண்டலகேசி நேருக்கு நேராகச் சந்திக்க அவனால் அதற்கு மேல் பேச இயலவில்லை. குற்ற உணர்ச்சி தொண்டையை அடைத்தது. எந்தப் பெண்ணுமே செய்ய துணியாத ஒரு செயலை தனக்காக செய்ய துணிந்தவள் இந்தப்பெண். இன்னொரு வாழ்க்கை அவளுக்கு வரமாக கொடுப்பதாக எண்ணி பெரும் சாபத்தில் தள்ளி விட்டது அவனின் முட்டாள்தனம் தானே.. வந்தியதேவன்  அழைத்ததோடு சரி. மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் திக்கித் திணறினான்.


இங்கே ஹேரி வாயை வைத்து சும்மா இல்லாமல்"பேபி".. என்று அவளை அழைக்க இப்பொழுது அவனின் நீல விழிகளை கண்ணிமைக்காமல் பார்த்தாள் குண்டலகேசி. சாமி படங்களில் அம்மன் கண்களில் இருந்து தீப்பொறி கிளம்பும் கிராபிக்ஸ் மூலம். ஆனால் குண்டலகேசி விழிகளில் இருந்து கிராபிக்ஸ் இல்லாமலேயே தீப்பொறி கிளம்பியது. அது நேராக வந்து தன்னை சுட்டுப் பொசுக்குவதைப் போல உணர்ந்தான் ஹேரி.


இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் அவன் தானே.  ஆனால் இரண்டு ஆடவர்களுக்குமே அவளை விட மனமில்லை. இருவருக்கும் அவர்கள் நியாயம் பெரிதாகப் பட்டது.ஒரு பெண்ணின் மனம் அவர்களுக்குப் புரியவில்லை.அல்லது புரிந்து கொள்ள அவர்கள் முயற்சி செய்யவில்லை. புலவர்களும் கவிஞர்களும் பெண்ணின் மனம் இலவம் பஞ்சை விட மென்மையானது. அதை கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாளுவது போல மென்மையாக கையாள வேண்டும். அப்படி இப்படி என வாய்க்கு வந்த அனைத்தையும் அடித்து வைத்திருக்கிறார்கள்.


உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பெண்ணின் மனம் எரிமலைக் குழம்பை விட அழுத்தமானது. காற்றை விட வலிமை மிக்கது. பூமியை விட பொறுமை கொண்டது. ஆகாயத்தை விட தன் மேல் அன்பு கொண்டவர்களை அரவணைப்பதில் பரந்து விரிந்தது.. கருங் கடலை விட ஆழமானது.. அதில் மென்மை கண்டிப்பாக இருக்கும்..  எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதற்கு கண்டிப்பாக ஒரு எதிர்வினை உண்டு அல்லவா?


பெண்ணின் மென்மையை ஆண்கள் தவறாக புரிந்து கொள்கிறார்கள். நாய்க்குட்டி போல அவர்கள் காலை சுற்றி வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தன்னை புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்கள் ஏன் அந்த பெண்ணை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.  பெண் பலவீனமானவர்கள் என்று அவர்களுக்கு யார் சொன்னது?  கண்டிப்பாக அது அவர்களின் தாயாக தான் இருக்க வேண்டும்?  பெரியவனானதும் அக்கா தங்கையை பார்த்துக் கொள் என்று கூறும் தாய்க்கு உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் எக்காரணம் கொண்டும் தம்பி என்றாலுமே கூட அவனை எந்த விதத்திலும் சார்ந்த நிற்கக்கூடாது என்று ஏன் சொல்லி வளர்க்க தெரியவில்லை.


பெண், தாய் தந்தை உடன் பிறப்புகள் உறவுகள் நட்புகள் என அனைவரிடமும் அன்பு செலுத்துகிறாள். ஆனால் ஒருவனிடம் மட்டும் தான் அந்த அன்பை எதிர் பார்க்கிறாள். அந்த ஒருவனுக்கு அன்பை பெற தான் தெரியுமே தவிர அதனை அவளுக்குக் கொடுக்க தெரியவில்லை. உண்மையைச் சொன்னால் அவன் அதை உணரவில்லை.அவனது வேலை அவனது எதிர்காலம் இப்படி அனைத்தும் அவனை இந்த நிலைக்கு ஆளாக்கியது என்று சொல்லலாம். ஆனால் இது எப்படி நியாயம் ஆகும்?


அந்தப் பெண் மட்டும் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறாளா?  அவள் வேலையில் இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் அவளது சிந்தனை முழுவதும் தன் மேல் பாசம் காட்டுபவன் மேல்.சாப்பிட்டாயா என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் அந்த கணம் எந்த வேலையாக இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்து விட்டு நீ சாப்பிட்டாயா என்று மறு கேள்வி கேட்டு பதில் அனுப்புவாளே? இதில் கூட அவனுக்கு புரியவில்லையா.


சாதாரண விஷயமே தெரியாமல் பெண்கள் என்றால் மென்மை இப்படிக் கூறிக் கூறியே பெண்களை அடிமைப்படுத்தி அடக்கி ஆண்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த இரண்டு ஆடவர்களைப் பார்க்கும்போது குண்டலகேசி மனதில் சற்று நேரத்தில் வந்து போன வார்த்தைகள் இவைகள் யாவும். அவர்கள் இருவரும் வாயைத் திறக்கும் முன்பே"ஹேரி உன் கிட்ட நான் பேசணும்.. நீயும் இருக்கலாம்"ஹேரியிடம் தொடங்கி வந்தியதேவனிடம் முடித்தாள்.


இருவரும் குழப்பத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டிருக்க அவள் எழுந்து அவர்கள் முன் நின்று"ஹேரி எனக்கு யோசிக்கணும்.என்னோட இந்த நிலைமைக்கு மெய்ன் ரீசன் நீதான்.. அதனால உன்கிட்ட கேக்குறது தான் சரி. எனக்கு பத்து லட்ச்சம் வேணும்"


அவள் வேறு எதுவோ கேட்கப் போகிறாள் என்று இருவரும் பார்த்து கொண்டிருக்க அவள் பத்து லட்ச்சத்தை கேட்டதும் அவர்கள் அதிர்ந்து விழித்தனர்.


"என்னடா திடிர்னு காசு கேக்குறாலேன்னு பாக்கறியா.. நீ என்ன ஏமாத்தி என் கூட ப.. ச் இருந்து இன்னும் என்னென்னவோ பண்ண. இதுக்கெல்லாம் விலை வேணாமா. அதுக்கு தான் பத்து லட்ச்சம். என் உடம்பு என்ன ஓசினு நேந்து விட்ருக்கா.. அதுக்கு பத்து லட்ச்சம் பெருசுதான். ஆனா என் வாழ்க்கை உன் பத்து லட்ச்சத்த விட பெருசு. உன் கூட ப.. ஐயோ கோவிலா போச்சு.. உன் கூட இருந்ததுக்கு சர்வீஸ் சார்ஜ்னு எடுத்துக்கோ..பத்து லட்ச்சம் உனக்கு பெருசில்லயே.


அப்றம் ரெண்டு பேருக்கும் சொல்றேன். எனக்கு யோசிக்க டைம் வேணும். சும்மா போற இடத்துக்கு நாயி மாறி பின்னால வர வேல எல்லாம் வேணா.ஹேரி நாளைக்கு ரெடி பண்ணி என் அக்கௌன்ட்ல போட்று"குண்டலகேசியை தான் பேச வேண்டியதை பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.


அவள் பேசியதைக் கேட்டு பேச்சை கேட்டு அதிர்ந்து நின்றது அவர்கள் இருவரும் தான். பத்து லட்சத்தை வைத்துக் கொண்டு அவள் என்ன செய்ய போகிறாள்.  கேட்க முடியவில்லை.  ஆனால் அவள் கேட்டது போலவே ஹேரி மறுநாள் பத்து இலட்சத்தை அவள் அக்கௌன்டில் போட்டான். மனம் பொறுக்காமல் ஆவுடையப்பனிடம் மட்டும் அழைத்து விஷயத்தைக் கூறினான்.


அவுடை தன்னால் இப்போது எதுவும் செய்ய இயலாது.  நீங்கள் விளையாடியது என் மகளின் வாழ்க்கையில். எந்த முடிவாக இருந்தாலும் அவள்தான் எடுக்கவேண்டும் என்று அழைப்பை துண்டித்து விட்டார்.குண்டலகேசி நன்றாக யோசித்து தான் இந்த முடிவுக்கு வந்தாள். அவளுக்கு தேவை பணம். ஏனென்றால் அவளுக்கு தனிமை வேண்டும் அவள் எங்கே இருக்கிறாள் என்பது கூட யாருக்கும் தெரியக்கூடாது. அப்படியிருக்கையில் ஆவுடையப்பன் உடல்நிலை பாதிப்பால் எந்த வேலைக்கு செல்வார்? அவரது தேவை அவரது செலவுகள் என்ன ஆகும்?


யாரிடம் சென்று அவள் பணம் கேட்பாள். சுந்தரை திருமணம் செய்திருந்தால் கூட இந்நேரம் அவள் பாட்டிற்கு வேலைக்குச் சென்று தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை தந்தைக்கு கொடுத்து கொண்டிருந்திருப்பாள். அதுவும் கெட்டு விட்டது. தன்னுடைய நிலைக்கு காரணமானவன் தான் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்று குண்டலகேசி நினைத்தாள். அதனால் தான் அவனிடம் பணம் கேட்டாள்.


அந்தப் பணத்தை வைத்து தந்தை பெயரில் டெபாசிட் செய்தாள்.நாட்கள் கடந்தது. சகோதரிகள் அவர்கள் கணவன்மார்கள் உடன் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து சென்றார்கள்.ஹேரி கூறியதைப் போலவே தன் ஆட்கள் மூலம் அவர்களுக்கு உதவி செய்திருந்தான். அதைப்பற்றி அவர்கள் பெருமையாகச் சொல்லி விட்டுச் செல்ல இன்னும் இந்த ஆள்மாறாட்ட விஷயம் அவர்கள் கணவன்மார்களுக்கு தெரியவில்லை. ஏனென்றால் அவர்கள் பார்த்தது வந்தியதேவன் உடலில் இருந்த ஹேரி. இந்த கூடு விட்டு கூடு பாயும் கதையெல்லாம் நம்ப அவர்களால் முடியாது.


நாட்கள் மாதங்கள் ஆனது. குண்டலகேசி தன் பிடியில் இருந்து இறங்கி வரவில்லை. ஹேரி மற்றும் வந்தியதேவன் இருவருமே எட்டி நின்று அவளைப் பார்த்து மருகினார்களே தவிர  நெருங்கி அவளிடம் பேச பயந்தனர். இப்படியாக மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் குண்டலகேசி  யாருக்கும் தெரியாமல் மாயமாய் மறைந்து விட்டாள். ஒரே ஒருவரைத் தவிர அது அவளது தந்தை ஆவுடையப்பன்.

தொடரும்.


Comments

  1. Interesting ud sis deva udambula irundhutu enna vela pathu vachi irukan indha neelakannan pavam kesi ipa andha neelakannan kuda irundha ava character pathi thappa pesamattanga deva kuda irundha mattum dha ava life la ketta per varama irukum

    ReplyDelete
  2. Super arumai enna yochichchu irukka ivalum kooda vittu kooda payira velaiya seiya poraala

    ReplyDelete
  3. Akka paavam ka kundamma.. y ka ivolo Periya twist

    ReplyDelete
  4. Super sis,,,nejama vea rendhu perlla orutharra mudivu pannaradhu kastham,,,but am eagerly waiting for kundallakesi's decision.....

    ReplyDelete
  5. கேசி மட்டும் என்ன தான் செய்வா,ரொம்ப வருத்தமாக இருக்கிறது சிஸ்டர் 😳😳😳😳😳😔😔😔😔😔😔😔😔😔😔👌👌👌👌👌👌👌நிலா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்