33 நெருங்கினாள்(ல்)?



ஆவுடையப்பன் மெல்ல கண் திறக்க கண்ணெதிரே நின்று கொண்டிருந்தான் வந்தியதேவன்.  அவனைக் கண்டதும் முதலில் மருத்துவர் என்று எண்ணி அலுப்பாக கண்ணை மூடிக் கொண்டவர் அவன் மருத்துவ உடை அணிய வில்லை என்று மூளைக்கு உறைக்க மீண்டும் கண்களைத் திறந்தார். பாகுபலியின் அண்ணன் பள்வாழ் தேவன் போல  தன் எதிரே நின்றுக் கொண்டிருந்தவனை கண்டு ஒரு நிமிடம் திடுக்கிட்டார்.

அவன் யார் என்று அவருக்குப் புரியவில்லை.. "யார்டாப்பா இவன்..ஆளு பாக்க பல்க்கா வேற இருக்கான்.. ஒருவேள கடன் கொடுத்தவனோ.. இல்லயே மாடசாமி கிட்ட தான வாங்குனோம். நம்மள தூக்குறதுக்கு முன்னாடியே மாடசாமிய ஊர்ல மாடு முட்டி கொடல சரிச்சு விட்ருச்சுனு கேள்விப் பட்டோமே.. ஒருவேளை அவன் மருமவனோ.. நம்மள தேடி கடைசியா இங்க வெச்சி புடிச்சிட்டான் போல.." அவருக்குள்ளேயே நினைத்தவர் வாய் திறந்து

" தம்பி நீங்க மாடசாமி மறுமவன் தான..தோ பாருப்பா தம்பி நான் உங்க பணத்த தூக்கிட்டு ஓடணும்னு நினைக்கல. எப்படியாச்சும் வட்டிக் கட்ட தான் நெனச்சேன். ஆனா என் கெரகம் நாலாவது மறுமவன் காச வாங்குன நாலாவது நாளே அத சீட்டு விளையாடி ஸ்வாஹா பண்ணிட்டாரு.தட்டிக் கேக்கப் போன என் பொண்ணு,பல்லத் தட்டி கையில கொடுத்துடாரு..

என்ன பண்றது தம்பி..பொட்டப் புள்ள பல்லு இல்லான பாக்க எப்படி இருக்கும்.. கையில பையோட எப்பயும் வர என் பொண்ணு அந்த வாட்டி பல்லோட வந்து ஒரே ஒப்பாரி.. திரும்பவும் உன் மாமனாரு கிட்ட கொஞ்சம் கைமாத்து வாங்கிட்டு என் பொண்ண கூட்டிட்டு டென்டிஸ்ட் கிட்ட போயி பல்ல கட்டுனேன்..

எல்லாத்தையும் கொடுக்கணும்னு நெனச்சிட்டே இருந்தேன், அதுக்குள்ள என் கடைசி பொண்ண காணோம். அத தேட போலாம்னு பாத்தா எங்களயும் தூக்கிட்டாங்க.. வெளி உலகத்தையே பாக்கல தம்பி..இப்ப தான் உன்ன பாக்குறேன்.. எப்படி இருக்க..மாடசாமி சௌக்கியமா? "

தன்னை பேசவிடாமல் கடகடவென பேசிக் கொண்டே செல்லும் ஆவுடையப்பனை ஆச்சரியமாக பார்த்தான் வந்தியதேவன். குண்டலகேசி ஏன் இப்படி இருக்கிறாள் என்பது அவனுக்கு அப்போது புரிந்தது.  'குடும்பமே லூசு போலயே' தன் மனைவியின் குடும்பத்திற்கு பைத்தியக்காரப் பட்டம் கொடுத்து விட்டு

"ம்ம் நான் வந்தியதேவன்.."

ஆவுடையப்பன் குறுகுறுவென பார்க்க

"குண்டலகேசியோட கணவன்".. அவ்வளவு தான்.. ஆவுடையப்பன் துள்ளித் துடித்து படுக்கையில் இருந்து எழப் பார்க்க வந்தியதேவன் பயந்து அவரது கையை பிடித்து"எதுக்கு மாமா இப்ப எழ ட்ரை பண்றிங்க..ட்ரிப்ஸ் ஏறுது.. உங்க கோபம் புரியுது.ப்ளீஸ் கொஞ்சம் அமைதியா இருங்க"..

"கோபமா.. அதெல்லாம் இல்ல மாப்ள.. நீங்க தான் குண்டம்மாவ கட்டிருக்கீங்களா.. என் பொண்ணு எங்கய்யா.. அவ வந்துருக்காளா? என் கண்ணுக்குள்ள நிக்குறாய்யா.. இந்த கட்ட சாயுறக் குள்ள அவள கூட்டிட்டு வந்து ஒருக்கா காட்டிருய்யா".. வந்தியதேவனின் கரத்தைப் பற்றி தன் கண்ணில் ஒற்றிக் கொண்டு ஆவுடையப்பன் பேச வந்தியதேவனுக்கே மனம் சங்கடப் பட்டது.

"மாமா கொஞ்சம் அமைதியா இருங்க.. எதுக்கு இவ்ளோ எமோஷனல் ஆக்குறீங்க.. குண்டலகேசி நல்லா இருக்கா.. கூடிய சீக்கிரம் உங்கள அவக் கிட்ட கூட்டிட்டு போறேன்..மொத உங்க ஹெல்த் முக்கியம்"

"மாப்ள.. எதுக்கு என் பொண்ண கடத்திட்டு போனீங்க.. எங்களையும் கடத்தி வெச்சிருக்கீங்க. நீங்க நல்லவருனு எனக்கு தெரியுது. கடத்திட்டு போயி கிட்னிய லாவிராம ராஜ போகமா வாழ வைக்குறிங்க.எங்களையே இப்படி பாத்தா என் பொண்ண எப்படி பாத்துக்குவீங்க? ஆனா ஏன்? ஒரு வார்த்தை சொல்லிருந்தா நீங்களும் என் பொண்ணும் லவ் பண்றிங்கனு நானே கட்டி வெச்சிருப்பேனே?"

"நாங்க லவ் பண்ணல மாமா"

"பின்ன"அதிர்ச்சியில் விழித்தார் ஆவுடை.

"பாத்தேன் புடிச்சது தூக்கிட்டேன்.."அவன் அசால்ட்டாக சொல்ல தலையை சொரிந்தார் ஆவுடை..

"என் பொண்ணு நல்லா இருக்கால்ல"அச்சத்துடனே விசாரித்தார்.

"என் பொண்டாட்டி நல்லா இருக்கா.. தோ பாருங்க நடந்தது எல்லாமே நடந்து போச்சு.. இனி அதையெல்லாம் மாத்த முடியாது.. உங்க பேரப் பிள்ளைங்க அத்தன பேரும் ஊட்டி கான்வென்ட்ல படிக்கிறாங்க."

"என்னது"..ஊட்டி வரை உறவு படத்தை மட்டுமே தொலைக்காட்சியில் பார்த்து இருந்தவருக்கு அவரது பேரப்பிள்ளைகள் ஊட்டியில் அதும் கான்வென்டில் படிப்பதாக கூற மீண்டும் கண்ணைக் கட்டியது.பள்ளி கட்டணம் இறுதியாக தன் தலையில் தானே வந்து விழும்.

 அவரின் பார்வையில் இருந்தே அவரது மனதை படித்தவன்"மாமா அந்தப் புள்ளைங்க படிப்பு என்னோட பொறுப்பு. இனிமே உங்க குடும்பத்தை பத்தி நீங்க கவலைப்பட வேணாம். உங்களுக்கு ஒரு மகன் இருந்தா எப்படி இந்த குடும்பத்தை பார்த்துக்குவானோ இனிமே நான் அப்படி பாத்துக்குவேன்..

 உங்களோட மத்த பொண்ணுங்க வாழ்க்கைய பத்தி நீங்க பயப்பட வேணா.  அவங்க என் பொண்டாட்டி கூட பொறந்தவங்களா இருந்தாலுமே எனக்கும் அக்கா மாதிரி தான்.அவங்களோட வாழ்க்க இனிமே என் பொறுப்பு. நீங்க கஷ்டப்பட்டது எல்லாமே போதும்..நான் இருக்கேன்"

இவ்வளவு ஆறுதலான வார்த்தைகளை இதற்கு முன் குண்டலகேசி தான் கூறி ஆவுடை கேட்டிருக்கிறார்.இப்பொழுது அவளது கணவன் கூற ஆவுடை கண்களில் கண்ணீர் வழிந்தது. கடத்திச் சென்று கல்யாணம் செய்தாலும் தங்களையே இவ்வளவு தூரம் நன்றாக பார்த்துக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பவன் தன்னுடைய மகளை எவ்வாறு பார்த்துக் கொண்டிருப்பான்? என்னுடைய குண்டலகேசி எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திப்பேன்.எப்போதும் பிரார்த்தனைகளை நிராகரிக்கும் கடவுள் இந்த ஒரு பிரார்த்தனையை மட்டும் எப்படியோ நிறைவேற்றி விட்டார்.

 மனம் நிறைந்து"பரவால்ல மாப்ள நீங்க சொன்னதே போதும்.. யாரு, யாரு எங்க இருக்குமோ  அங்க தான் இருக்கணும்..அதான் அவங்களுக்கு மரியாதை.. என்னிக்காவது ஒரு நாள் என் பொண்ணுங்களுக்கு வந்து நிக்க ஒரு இடம் வேணும்.  நான் உங்க கூட வந்துட்டா என் மத்த பொண்ணுங்க உங்க வீட்டுக்கு வந்து பிரச்சனைனு நிக்க சங்கோஜப் படுவாங்க.. நீங்க சீக்கிரம் என் பொண்ண கூட்டிட்டு வாங்க.. அது போதும் மாப்பிள்ள.."

தளர்ந்த வயதிலும் அவருடைய தன்மான பேச்சு வந்தியதேவனுக்கு ஆவுடையப்பன் மேல் மரியாதையை ஏற்படுத்தியது.குண்டலகேசி என் அப்பா என்று புராணம் பாடுவது எந்த அளவிற்கு நியாயமானது என்று அவனுக்கு தெரிந்தது. இந்த மாதிரி தந்தை தனக்கும் இருந்திருந்தால் என்று அவனால் எண்ணாமல் இருக்க முடியவில்லை?


அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு நாளை குண்டலகேசியை அழைத்து வருவதாகக் கூறி அங்கிருந்து கிளம்பினான். ஆவுடையப்பன் மனதில் இன்பச் சாரல் வீசியது. இவ்வளவு ஆறுதலாக அவரது ஆறு மறுமகன்களில் ஒருவன் கூட பேசியது கிடையாது.உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மரியாதை என்பதே அவர்கள் அகராதியில் கிடையாது.அப்படியிருக்கும்போது கடத்திச் சென்று கல்யாணம் செய்தாலும் இந்த அளவிற்கு தன் குடும்பத்தின் மீது அக்கறை செலுத்தும் ஒருவன் தன்னுடைய மகளுக்கு கிடைத்ததற்கு மீண்டும் ஒருமுறை கடவுளுக்கு நன்றி கூறினார் ஆவுடையப்பன்.

 அந்தப்பக்கம் பார்த்தோம் என்றால்"யோவ் சகல.. "வாசு கண்களைத் திறக்காமல் கையால் துழாவி கொண்டிருந்தான்.

"ஹான்"முனங்கினான் கோவலன்.

"இது பெரிய சகல சவுண்ட்டு மாறி இருக்கே.."வாசு..

"சகல உனக்கு காது இன்னுமாயா கேக்குது" சைதன்யன் 90களின் புகழ்வாய்ந்த நாடகமான சின்ன பாப்பா பெரிய பாப்பா பட்டாபி மாதிரி ஒரு காதின் பின் கையை வைத்து கேட்க

"அது மட்டும் தான் சகல வேல செய்யுது.. உனக்கு எப்படி" ஆடாமல் அசையாமல் கைகளை மட்டும் ஆட்டிக் கொண்டு கேட்டான் வாசு..

"எனக்கு அத தவற மத்த எல்லாமே வேலை செய்யுது"சைத்தன்யன் பதில் கூறினான். மற்ற யாவரும் பதில் கூறும் நிலையில் இல்லை.மூன்று நாள் பட்டினி அவர்களை இந்த அளவிற்கு கொண்டு சென்றது.வாயிக்கு வக்கணையாக எவனோ ஒருவனின் பணத்தை தின்று கொண்டிருந்தவர்கள் இன்று ஒரு வாய் உணவுக்குக் கூட வக்கில்லாமல் வேளை தவறாமல் அடியோடு காலம் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனை நாட்களோ தெரியவில்லை அவர்கள் அங்கே இருக்கப் போவது.தினமும் வந்தியதேவன் வந்து இவர்களை தன் கையால் வேறு பொளந்து விட்டு போனான்..
ரொட்டியும் தண்ணீரும் அவர்கள் உயிரை பிடித்து வைத்திருந்தது.

குண்டலகேசி, வந்தியதேவன் முன்பு ஒரு மாதிரியாகவும் அவன் வெளியே சென்று விட்டால் ஒரு மாதிரியாகவும் இருந்தாள். கமலியோடு அவள் சிரித்து பேசினாலும் ஒருவித பயம் அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது.  அவனிடம் பூர்வஜென்ம நினைவு வந்த போதிலும் இவ்வளவுதானா என்று வாயடித்தவள்  உண்மையில் உள்ளுக்குள் ரொம்பவே பயந்து போய் இருந்தாள்.


நந்தன் மீது அவள் வைத்திருந்த பாசம்  இப்பொழுதும் துளி அளவு கூட மாறவில்லை. அன்று வேறு வழியில்லாமல் பைத்தியக்காரத்தனமாக முடிவெடுத்து விட்டாள். இன்று அந்த பைத்தியக்காரத்தனத்தின் விளைவை எண்ணி வேதனைப்பட்டு கொண்டிருக்கிறாள்.  இதெல்லாம் மூட நம்பிக்கை என்றும் விட்டுவிட முடியவில்லை.  நாங்கள் இருவரும் பிறந்து இருக்கும் போது அந்த துரை பிறக்காமல் எப்படி இருப்பான்?

 வந்தியதேவனிடம் இதைப்பற்றி பேசினால் அவன் இவளை தான் கலாய்த்து தள்ளினான். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.  அது என்ன முடிவு?

 வந்தியதேவன் வீட்டிற்கு வந்த வேகத்தில் குண்டலகேசியை அணைத்துக் கொண்டான். இம்மாதிரி எல்லாம் அவன் செய்ததே கிடையாது.  அவள் மேல் அளவுக்கதிகமான காதல் இருந்தாலும் அதை உணர்வுபூர்வமாகவோ அல்லது முகத்தின் உணர்ச்சி வெளிப்பாடாகவும் அவன் வெளிப்படுத்தியது கிடையாது.  அவனின் பார்வையில் ஒரு கடுமையும் அதிகாரமும் இருக்கும். மிஞ்சிப் போனால் அதில் ஒன்றுமே இருக்காது.உணர்ச்சியற்ற பார்வை மட்டும் கிடைக்கும்.

வெளியே சென்று வந்த நொடியே அவளை அணைத்துக் கொண்டான். வெளியே காய வைத்திருந்த துணிகளை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தவளை துணியோடு சேர்த்து கோழி அமுக்குவது போல அமுக்கியவனை ஆச்சரியமாக பார்த்தாள் குண்டலகேசி.

"மிரு சார் என்ன ஆச்சு உங்களுக்கு.. எதுக்கு கோழி அமுக்குர மாதிரி என்ன அமுக்கி வெச்சிருக்க.."

"உனக்கு எப்பவும் திங்குறதுல தான் புத்தி போகுமா"

"யா.. எனக்கு அதான் சாமி முக்கியம்"..அவள் பேசும் போதே அவளது உச்சியில் இதழ் பதித்தவன் உள்ளத் துடிப்பு வேகமாக இருந்தது..அவன் உண்மையில்  பதற்றத்தில் இருக்கிறான் என்பது அவளுக்குப் புரிந்தது. விளையாட்டுத் தனத்தை மூட்டை கட்டி வைத்தவள்

"தேவா உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்டி இருக்க.."..

"என்ன விட்டு போயிருவியா பேபி"..

"என்னது பேபியா"இப்படி கூட அவன் பேசுவானா?

"ஆமா.. கேட்டதுக்கு பதில் சொல்லு.."

"போக தான் விட மாட்ரியே"

"விட்டா போயிருவியா"

"இல்ல.. இப்படி கட்டி புடிச்சிக்குவேன்.. ஸாரி கையில காஞ்ச துணி டிஸ்டர்ப் பண்ணுது.. ஒரு செகண்ட் என்ன ரிலீஸ் பண்ணீங்கனா துணிய ரூம்ல போட்டுட்டு வந்து கட்டிக்குவேன்"

"ப்ச் விளையாடாத.. உண்மைய சொல்லு"..

"மொத நீ என்ன விடு.. மூச்சு கூட விட முடியல.."அவள் திமிர தன்னுடைய அணைப்பில் இருந்து அவளுக்கு விடுதலை கொடுத்தான்.

 விலகி நின்றவள் அவனது நிதானம் இல்லாத முகத்தை பார்க்க"இப்ப என்ன ஆச்சு உனக்கு.. சரி இங்க வா இப்படி இந்த சோபால உட்காரு"அவனை சோபாவில் அமர்த்தி தானும் அருகே அமர்ந்து கொண்டாள்..

"ம்ம்ம் இப்ப சொல்லு வெளியே போகும்போது நல்லாதானே இருந்த.. திரும்பி வீட்டுக்கு வரும்போது என்ன ஆச்சு.. முனி ஏதாச்சும் அடிச்சிருச்சா?"

"உன் மொக்கைக்கு முனி அடியே பரவால்ல.."

"அப்றம் என்ன" அவளை அப்படியே தூக்கி தன் மடியில் அமரவைத்தவன்

" எனக்கு தெரியல. அதை எப்படி சொல்றதுன்னு புரியல. மனசுக்குள்ள என்னமோ பண்ணுது..  நீ என்ன விட்டு போயிருவியோனு பயமா இருக்கு..  என்ன நடந்தாலும் என்ன விட்டு போக மாட்டேன்னு சொல்லு"அவனது தவிப்பு அவளுக்கு புதியதாக இருந்தது.

"ஒரு தடவை பிரிஞ்சது பத்தாதா.திரும்பவும் பிரியனுமா? இப்ப என்ன உன்ன விட்டு போக மாட்டேன்னு சொல்லணும்.. சொல்லிட்டா போச்சு..என்ன நடந்தாலும் உன்ன விட்டு போக மாட்டேன்.."

" சத்தியமா"

"அட இன்னாடா உன்னோட பேஜாராக்கிது.. ஆ, த்து சத்தியமா"உள்ளங்கையில் காரித்துப்பி அவன் உச்சந்தலையில் சத்தியம் செய்தாள் குண்டலகேசி. அவளை பொய்யாய் முறைத்தாலும் அந்த சத்தியம் அவனுக்கு அப்பொழுது அவசியமாக பட்டது.

 அவளிடம் ஆவுடையப்பனை பற்றி ஒன்றுமே கூறாமல் அமைதி காத்தான் வந்தியதேவன். திடீரென்று அவளை அழைத்துச் சென்று அவர் முன்பு நிறுத்த நினைத்தான்.  அதனால் அவரைப் பற்றி அவன் எதுவும் கூறாமல் அன்றைய நாள் ஊடலும் காதலுமாக கழிய நடு ராத்திரி இருக்கும்.

ஒரு உருவம் வந்தியதேவன் குண்டலகேசி இருவரும் கட்டியணைத்து பிறந்த மேனியாக போர்வைக்குள் இருப்பதை வெறித்துக் கொண்டிருந்தது.. ஒவ்வொரு கணமும் அவர்கள் இருவரை பார்க்கும் போதும் அந்த உருவத்திற்கு அப்படி ஒரு வெறி ஏறியது.  அந்த உருவத்தின் நீலக் கண்கள் முழுவதும் ரௌத்திரம்.

 கையிலிருந்த கோடாரியை ஓங்கி வந்தியதேவன் தலையை வெட்ட அந்த உருவம் முற்படும் போது சட்டென்று கண்விழித்தான் வந்தியதேவன். அடுத்த நொடியே சுதாரித்தவன் கோடாரி தன் கழுத்தில் நெருங்க இருந்த வினாடி அந்த உருவத்தை பிடித்து அப்படியே தள்ளி விட்டான். அந்த உருவம் பொத்தென்று கீழே விழும் சத்தம் கேட்டு கண் விழித்தாள் குண்டலகேசி.முதலில் ஒன்றும் புரியாமல் விழித்தவள் பெட் லைட் வெளிச்சத்தில் தங்கள் பெட்ரூம் உள்ளே யாரோ ஒருவன் விழுந்து கிடப்பதை கண்டு அலறினாள்.

அவளைக் கட்டி அணைத்துக் கொண்டான் வந்தியதேவன்." நீ பாத்ரூம் போய் சட்டைய போடு" என்றவன் கீழே கிடந்த தன்னுடைய லுங்கியை எடுத்துக் கட்டிக் கொண்டான்.

 குண்டலகேசி அவன் கூறியது போல போர்வையை தன்னோடு சுற்றி எடுத்து கொண்டு பாத்ரூம் உள்ளே சென்றாள்.  வெளியே சுருண்டு கிடந்த உருவத்திற்கும் வந்தியதேவனுக்கும் கடுமையான சண்டை நடந்தது.  அதற்குள் குண்டலகேசி உடை மாற்றி வெளியே வர அச்சத்தில் என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை.


 நடு ராத்திரியில் கையில் கோடாரியோட ரத்தக் காவு கேட்க்கும் இவன் யார்? ஒரு மூலையில் முடங்கி இவர்கள் சண்டையை பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் கவனித்தால் அந்த உருவத்தின் கண்கள் நீல வண்ணத்தில் இருப்பதை. இந்த கண்களை அவளுக்கு எங்கேயோ பார்த்த நினைவு.  கண்களில் குளம் கட்டி விட கால்கள் வெட வெடக்கு ஒரு சுவற்றைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.

தொடரும்

Comments

  1. Interesting ud sis andha lusu vandhudicha achooooo kesi deva pirinjirama irukanum kesi appa evlo kastapattalum ponnungaluku evlo seiranga semmmmma apppa deva andha durai ah epdiyavadhu un vazhila irundhu clear pannidu

    ReplyDelete
  2. Ada velangatha payalae bedroom ke vandhuttiya.. athu sari un butthi ipdi thane irukum 🤨🤨

    ReplyDelete
  3. Semaaaa semaaaa super super super super 👌👌👌👌

    ReplyDelete
  4. அச்சச்சோ யாரு அவன் ,கேசி அந்த துரையா 😳😳😳😳😳😳👌👌👌👌 இன்டர் ஸ்டிங்கா போகுது சிஸ்டர் சூப்பர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்