38 நெருங்கினாள்(ல்)?



குண்டலகேசி அந்த அப்பார்ட்மெண்டின் பால்கனியில் நின்று துபாயின் பொன் மாலை வேளையை ரசித்துக் கொண்டிருந்தாள். அவளது கரங்கள் ஆசையாக அடி வயிறை தொட்டது.அங்கே அவளது குழந்தை ஒன்பது மாத கருவாக உறங்கிக் கொண்டிருக்கிறது. குண்டலகேசியின் எண்ணங்கள் பின்னோக்கி சென்றது.

சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவள் சென்னை வீட்டிலிருந்து காணாமல் போய் விட்டாள். வந்தியதேவன் ஹேரி இவர்கள் இருவரிடமும் இருந்து தப்பித்து இந்த ஆறு மாதமாக  அவள் நிம்மதியாக இருக்கிறாள். ஆவுடை என்ன செய்வாரோ என்று அவளுக்கு பயம் இல்லை. ஏனென்றால் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து விட்டு தான் இங்கே வந்து இருக்கிறாள். தனியாக இருக்கும் தந்தைக்கு  உதவியாக தினம் வீட்டிற்கு வந்து வேலை செய்து சமைத்து வைத்து விட்டு செல்ல நம்பிக்கையான பெண் ஒருவரையும் ஏற்பாடு செய்திருந்தாள்.

அவள் அங்கிருந்து கிளம்பியது அவளது சகோதரிகளுக்கு கூட தெரியாது.யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் மாயமாய் மறைந்து விட தான் நினைத்தாள். ஆனால் மனம் கேட்கவில்லை அதனால் தன்னுடைய தந்தைக்கு இன்னொரு தடவை ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் அவரிடம் மட்டும் தான் எங்கே செல்ல போகிறேன் என்பதை தெரிவித்தாள்.  மகளை  தடுத்து நிறுத்தி அவளின் புண்பட்ட இதயம் மேலும் நொறுங்க ஆவுடை விரும்பவில்லை. அவளால் தனியாக சமாளித்துக் கொள்ள முடியுமா என்று மட்டும்தான் கேட்டார்.

அவள் முடியும் என்று சத்தியம் செய்த பிறகுதான் அவருக்கு நம்பிக்கை வந்தது. இப்பொழுதும் தினமும் இரவு அவரிடம் மட்டும் தொலைபேசியில் பேசி விடுவாள். அவருக்கு கூட அவளின் கர்ப்பத்தைப் பற்றி மூச்சு விடவில்லை. தெரிந்தால் தன்னை தனியாக இருக்க அனுமதிக்க மாட்டார் என்பது தெரியும்.

குண்டலகேசி இப்பொழுது துபாயில் இருக்கிறாள். அவளின் நெருங்கிய தோழி வேலை விஷயமாக அவளது கணவனோடு நியூ ஸியலாந்து சென்று விட அந்தக் கணவனின் வயதான பெற்றோரை பார்த்துக்கொள்ள ஒரு பொறுப்பான பெண் தேடிக் கொண்டிருந்தாள். அதைத் தங்கள் நண்பர்கள் வாட்ஸ்அப் குழுவில் தெரிவித்தும் இருந்தாள்.. அந்த குறுஞ்செய்தி குண்டலகேசி கண்ணில் பட்டது.  ஹேரியிடம் பத்து லட்சம் வாங்கி தன் தந்தையின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒதுக்கி வைத்தவள் சிறிது காலம் யார் கண்ணிலும் படாமல் தனித்து வாழ ஆசைப்பட்டாள்.

எங்கே செல்வது என்று யோசிக்கும் போதுதான் இந்த குறுஞ்செய்தி கண்ணில் பட உடனே அந்த தோழிக்கு அழைத்து விவரங்களை சேகரித்தாள். தோழியின் கணவன் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து துபாய் குடி பெயர்ந்தவர்கள். அவர்களது வியாபாரம் அங்கேயே இருக்க அப்படியே செட்டில் ஆகி விட்டார்கள். இரண்டு பெண் பிள்ளைகள் வளர்ந்து திருமணமாகி வெளிநாட்டிற்குச் சென்று விட தனது பெற்றோர்களை பார்த்துக் கொண்டு இருந்த கணவனுக்கும் வேலை மாற்றம் வர இப்பொழுது வயதான பெற்றோரை எப்படி தனியே விட்டுச் செல்வது என்ற யோசனை.

உடனே குண்டலகேசி தான் வந்து அவர்களைப் பார்த்துக் கொள்வதாகக் கூறினாள்.. "ஹேய் என்னடி சொல்ற.. நீ எப்படி.. ஆமா உனக்கு கல்யாணம் நின்னுப் போச்சுன்னு வேற கேள்விப் பட்டேன். சில பேரு கல்யாணம் ஆயிருச்சுனு சொல்றாங்க.சிலரு ஆகலனு சொல்றாங்க எதுடி உண்மை"

"எனக்கு வீட்ல ஏற்பாடு செஞ்ச கல்யாணம் நின்னுப் போச்சி.. ஆனா எதிர்பாராத விதமா வேற ஒருத்தன கல்யாணம் பண்ணிட்டேன். இப்ப ஒத்து வரல. அவன் கண்ணுல இருந்து தப்பிக்க தான் இந்த வேலைய கேக்குறேன். ரேவதி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு. காசு பணத்துகாக இந்த வேலை வேணும்னு கேக்கல. ஆனா கொஞ்ச நாள் தனிமை வேணும். அதுக்கு தான். அப்றம் இன்னொரு விஷயம் இத நான் யார்கிட்டயும் சொல்லல. உன்ன நம்பி சொல்றேன்.. நான் இப்ப ஒரு மாசம்"

"அடியே கேசி என்னடி சொல்ற. வயித்துல புள்ளயோட எதுக்கு துபாய் உனக்கு.. புருஷன் வேணாம்னா விடு.. அதுக்கு எதுக்குடி ஊர விட்டு மறைய பாக்குற. டெலிவரி டைம்ல யாரும் இல்லாம எப்டி மெயிண்டண்டன்ட் பண்ணுவ. குழந்தை பெத்துக்கறது சாதாரண விஷயமா.. எவன்டி உன் புருஷன்.. அவன் நம்பர் கொடு.. என்ன கேக்க ஆளில்லனு நெனச்சானா?நான் இருக்கேன்டி.. கேக்குற கேள்வியில செத்துருவான்..."ரேவதி படபடவென பொறிய

"ஒன்னும் வேணாடி.. கொஞ்சம் நாள் யாருக்கும் தெரியாம இருக்கணும்னு நெனைக்குறேன். பரவாயில்ல நான் பாத்துக்குறேன்" மொட்டையாக முடித்துக்கொண்டு படக்கென்று அழைப்பைத் துண்டித்தாள் குண்டலகேசி.ரேவதிக்கு மனமே சரியில்லை. பள்ளிப் பருவத்திலிருந்து குண்டலகேசியை அவளுக்கு நன்றாக தெரியும். யாரிடமும் உதவி என்று வாய் திறந்து கேட்க மாட்டாள்.தன்னால் முடிந்தவரை எவ்வளவு கஷ்டம் என்றாலும் சமாளித்து கொள்வாள்.

 அப்படிப்பட்டவள் மேலோட்டமாக தனது நிலையை கூறி உதவி கேட்க அதைப் போய் மறுத்து விட்டோமே என்று ரேவதி மனம் குடைய ஆரம்பித்தது.  அடுத்த சில நிமிடங்கள் நன்றாக யோசித்த ரேவதி உடனே குண்டலகேசிக்கு அழைத்து எப்பொழுது வேலையில் சேர போகிறாய் என்று கேட்டாள்.

"டிக்கெட் எடுக்கணும் விசா கிடைக்கணும்.ஒரு ஒன்னு இல்ல ரெண்டு மாசம் எடுக்கும்னு நெனைக்குறேன்.எல்லாம் ரெடி ஆனதும் வரேன்.  அதுவரைக்கும் யார்கிட்டயும் நீ இத பத்தி சொல்ல கூடாது".

"சொல்லலடி.. நீ பாத்துக்கோ"அதன் பிறகு தன்னுடைய மாமனார் மாமியாரை பற்றியும் அவர்களை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் சில தகவல்களை மீண்டுமொரு முறை சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தாள் ரேவதி. அடுத்த நாளே குண்டலகேசி டிக்கெட் விசா அனைத்தையும் ஏற்பாடு செய்யத் தொடங்கினாள்.  அவள் எண்ணியதற்கு மிக விரைவாகவே அனைத்தும் கிடைத்து விட அவளது பயணம் வயிற்றில் இரண்டரை மாத கற்பதோடு துபாய் நோக்கி சென்றது.

 உண்மையில் ரேவதி குண்டலகேசிக்கு உதவி செய்ய தான் அவளை இங்கே வரவழைத்திருந்தாள். தன்னுடைய மாமனார் மாமியாரிடம் என் தோழி ஒருத்தி மிகவும் நல்லவள்.சிறு வயதிலிருந்தே கஷ்டத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவள்.இப்பொழுது என்ன பிரச்சனையோ தெரியவில்லை வயிற்றில் குழந்தையோடு கணவனைப் பிரிந்து இருக்கிறாள். கணவனுக்கும் மற்ற யாருக்கும் தெரியக்கூடாது என இங்கே வேலை பார்க்க வருகிறாள்.அவளை நீங்கள் உங்கள் சொந்த மகளை போல கவனித்துக் கொள்ளுங்கள்.

 மற்றவர்களைப் போல அவளும் கணவன் குழந்தை என்று நன்றாக வாழவேண்டும் என ரேவதி விரும்பினாள்.குண்டலகேசியை பார்த்ததும் ரேவதியின் மாமனார் மாமியாருக்கு பிடித்து விட்டது. ரேவதியும் ஒரு வாரம் தோழியுடன் இருந்து அவர்கள் வீட்டு பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து குண்டலகேசி சோர்வாக இருக்கும்போது அவளுக்கு ஆறுதல் கூறி தன்னுடைய கணவனோடு நியூசிலாந்து சென்று விட்டாள்.

 குண்டலகேசிக்கு தோழி தனக்காக அனைத்தையும் பார்த்து பார்த்து செய்வது புரிந்தது. அதைவிட ரேவதியின் மாமனார் மாமியார் குண்டலகேசியை நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இவள் அவர்களைப் பார்த்துக்கொள்ள வந்தாளா அல்லது அவர்கள் இவளை பார்த்துக்கொள்ள இருக்கிறார்களா என்று தெரியாத அளவிற்கு குழம்பிப் போனாள் குண்டலகேசி. அந்த அளவிற்கு அவர்கள் இருவரும் பெற்ற மகளை போல குண்டலகேசியை பார்த்துக் கொண்டனர்.

 அவர்கள் பெற்ற இரண்டு பெண் குழந்தைகளும் வேறு வேறு நாட்டில் இருப்பதால் அபலை பெண்ணாக்கிய குண்டலகேசி மீது தனிப்பிரியம் அந்தப் பெரியவர்களுக்கு. ஆனாலும் நாகரீகம் தெரிந்த அவர்கள் இதுவரை அவளிடம் உன் வாழ்வில் என்ன நடந்தது ஏன் இந்த முடிவுக்கு வந்தாய் என்று கேட்கவில்லை.இது குண்டலகேசி வாழ்க்கை.அதை பற்றி வெளியில் கூற அவளுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது.அப்படியிருக்கையில் அவளது சொந்த வாழ்க்கையைப்பற்றி தூண்டித் துருவுவதில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது.

ஒரு விதத்தில் அது குண்டலகேசிக்கு மிகவும் நன்மையாக போய் விட்டது.தன்னால் முடிந்தவரை அவர்களுக்கு வாய்க்கு ருசியாக சமைத்து கொடுத்தாள்.அவர்கள் பழைய கதைகளைக் கூற அதை பொறுமையாக கேட்டு அவர்களுக்கு ஆதரவு அளித்தாள். தினம் மாலை அந்த பெரியவர்கள் இருவரையும் பக்கத்தில் இருக்கும் பார்க்குக்கு வாக்கிங் அழைத்துச் செல்வாள். வெளியே சென்று ஏதாவது வாங்கி வரவேண்டும் என்றால் அதையும் அவள் தான் செய்தாள்.

 அவளால் முடியாத சில நேரத்தில் கால்கள் வீங்கி இருக்கும் பொழுதெல்லாம் சங்கரன் அவர்தான் ரேவதியின் மாமனார்.  சங்கரனே வெளியே செல்லும் வேலைகளை பார்த்துக் கொள்வார். அவரது மனைவி புவனா கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ணக் கூடிய சத்தான உணவுகளை சமைத்து குண்டலகேசிக்கு ஊட்டி விடுவார்.  தன் அம்மா இருந்திருந்தால் இப்படி தான் இருந்திருப்பார் என்று அவரைப் பார்த்துதான் குண்டலகேசி அறிந்து கொண்டாள். இதைப்பற்றி எல்லாம் ஆவுடையப்பனிடம் பேசும்போது குண்டலகேசி தெரிவிப்பாள்.ஆனால் குழந்தை பற்றி மூச்..

தன் மகள் யாருக்கும் தீங்கு செய்யாத குணத்திற்கு தான் அவள் எங்கே சென்றாலும் அவளுக்கு ஒரு உதவி கிடைக்கிறது என்று ஆவுடையப்பன் அந்த கடவுளுக்கு நன்றி கூறினார். இது இப்படியே ஒரு பக்கமிருக்க குண்டலகேசி மாயமாய் மறைந்த மறுநாளே ஹேரியும் வந்தியத்தேவனும் ஒருவருக்குப் பின் ஒருவராக வந்து அவள் எங்கே என்று கேட்டு ஆவுடையப்பனை நச்சரித்தனர்..அவர்களே குழம்பிப் போகும் அளவுக்கு அழகாக காய் நகர்த்தி அவர்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தாள் குண்டலகேசி.

" சொல்லுங்க குண்டலகேசி எங்கே"

" என் பொண்டாட்டி எங்க"

" என் குட்டி எங்க.. அவ எங்க போனா.."

"என்னோட பேபிக்கு என்ன ஆச்சு.உங்களுக்கு தெரியாம அவ எங்கேயும் போகமாட்டா"

"ஒழுங்கா என் குட்டி எங்க இருக்கான்னு சொல்லுங்க.. இல்லன்னா அதோட விளைவு படுமோசமா இருக்கும்"

" என்னால என் பேபி இல்லாம இருக்க முடியாது.நான் இவ்ளோ செஞ்சது அவளுக்காக தான்.. அவ அத புரிஞ்சுக்கவே இல்ல"

"டேய் என்னடா சும்மா பேபி பேபின்னு சொல்லிக்கிட்டு இருக்க.உன்னால வந்த வினைதான் எல்லாம்.  போன ஜென்மத்துலயும் சரி இந்த ஜென்மத்துலயும் சரி.  ஏன்டா எங்கள வாழ விடாம தாலிய அறுக்குற"..

"டேய் லவ்வுல எதுவுமே தப்பு இல்ல. போன ஜென்மத்துல நீ வரலைனா அவ என் கோட்டைக்கே ராணி..அப்பவும் வந்து கெடுத்த. இப்பவும் வந்து கெடுத்த.."

"ஆமாடா நீ என் உருவத்துல போயி நான் தான் வந்தியதேவன்னு சொல்லி அவ கூட குடும்பம் நடத்துவ..அவ கடைசி வரைக்கும் உண்மை தெரியாம உன் கூட இருந்து செத்துப் போகனும்.  அதானே உன் ஆசை"

"உன் கூட எனக்கு என்னடா பேச்சு.அதான் இப்ப எல்லாம் தெளிவா ஆயிடுச்சுல்ல..இத்தன மாசத்துல நான் எத்தன விஷயத்தை இழந்து இருக்கேன் தெரியுமா.. என் தம்பிய நீ கடத்தி வெச்சு கொடுமை பண்ண..அதுக்கப்ரம் என் தொழில் எதிரிங்க என்னோட தம்பி கொன்னுட்டாங்க.தொழில்ல ஆயிரம் பிரச்சன. எல்லாம் யாரால உன்னால..இதுக்கு பின்னாடி நீ தான் இருக்கிறனு எனக்கு தெரியாதா என்ன..

 ஆனா நான் ஏன் உன்ன இன்னும் விட்டு வெச்சிருக்கேன் தெரியுமா..  இந்த உருவம் தான் நான் என் பேபி கூட வாழ எனக்கு உதவி பண்ணுச்சி. ஒருவேளை குண்டலகேசி எனக்கு வந்தியதேவன் தான் வேணும் அப்படின்னு சொல்லிட்டா இதுக்கு மேலயும் அவள அழ வைக்க என்னால முடியாது.அந்த ஒரே ஒரு காரணம் தான்."

" இல்லன்னா புடுங்கிருப்ப.. எச்சக்கள நாயே என் உருவத்துல என் இடத்துல இருந்து அவள அனுபவச்சிட்டு உத்தமன் மாறி சீன் போடுறியா..உன் சித்து விளையாட்ட வெச்சு என்ன கடத்தி என் வாயாலயே என் லைப் ஸ்டைல், எனக்கு வேண்டியவங்க, என் தொழில் இப்படி எல்லாத்தையும் தெரிஞ்சிகிட்டு நீ நானாவே மாற ரெடியா இருந்த. ஒருவேளை நான் வரலைனா கடைசி வர என் குட்டிக்கு உண்மை தெரிஞ்சிருக்காது"

"ஆமா என் பேபி சந்தோசமா இருந்துருப்பா. இன்னைக்கு எல்லாத்தையும் இழந்து அவளயும் இழந்து நிக்குறேன்.. உன்ன சும்மா விட மாட்டேன்டா"நடுவீட்டில் ஆவுடையப்பன் கண் முன்னால் இரண்டு பேரும் அடித்துக் கொண்டு கட்டி உருண்டனர்.  அவர்களை ஒரு வழியாக ஒதுக்கி விட்டு

"ஏம்பா உங்க இம்சையே வேணான்னு தானே என் பொண்ணு எங்கயோ போயிட்டா. அவள இப்ப கூட விட மாட்டிங்களா.. அவ நல்லா இருந்தா உங்க கண்ணு உருத்துமோ? போதும்பா உங்க கிட்ட என் பொண்ணு பட்டதெல்லாம் போதும். அவள வாழ விடுங்க. அவ எங்க இருக்கானு எனக்கு தெரியும். ஆனா சொல்ல மாட்டேன். என் பொண்ணு கோழை இல்ல. அவளுக்கு இப்ப தேவை தனிமை. அது இங்க இருந்தா கிடைக்காது.

போன அவளுக்கு வர தெரியும். ரெண்டு பேரும் அடிச்சிக்குறத நிறுத்துங்க. இந்த கண் கட்டி வித்தை.. பிளாக் மேஜிக்.. போன ஜென்மம்.. காசு பணம் அந்தஸ்து.. இதெல்லாம் ஒரு மூளையில கெடக்கட்டும். என் பொண்ணு உசுருள்ள மனுஷிய்யா. அவ என்ன பொம்மையா.. எனக்கு உனக்குன்னு அடிச்சிக்குறீங்க..அவ போன ஜென்மத்துல யாரோ.. யாருக்கு பொண்டாட்டியோ..

ஆனா இப்ப இந்த ஜென்மத்துல இந்த ஆவுடையப்பனோடு பொண்ணு அவ.. உங்கள கையெடுத்து கும்பிட்டு கேக்குறேன். உங்க அளவுக்கு பண பலம். ஆள் அம்பு இதெல்லாம் என்கிட்ட இல்லப்பா.. என்னால முடிஞ்சது ஒன்னு தான்"ஆவுடை சட்டென்று அவர்கள் இருவர் முன்பும் மண்டியிட்டு கையெடுத்து கும்பிட இருவருமே ஆடி விட்டனர்..

"என் பொண்ணு எனக்காகவும் இந்த குடும்பத்துக்காகவும் ஓடா தேஞ்சிருக்கா.. எங்கள ஒரு அம்மா மாதிரி பாத்துருக்கா.. அவளுக்காக இது என்ன உங்க காலுல கூட விழுவுவேன். தயவு செஞ்சு என் பொண்ண தேடுறத விட்ருங்க. அவ முன்னாடி போயி நிக்காதீங்க. அவள வாழ விடுங்க. அவ வருவா.. தீர்க்கமான ஒரு முடிவெடுத்து ஒரு நாள் அவ வருவ.. அதுவர அவள நிம்மதியா இருக்க விடுங்க.. உங்க கிட்ட கையேந்தி பிச்ச கேக்குறேன். என் பொண்ணுக்கு நிம்மதி பிச்சை போடுங்க.."ஹேரி வந்தியதேவன் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து வெளியேறினர்.

ஆவுடையப்பன் இந்த நிகழ்வைப் பற்றி குண்டலகேசியிடம் கூறவில்லை. ஒருவேளை அவரும் பணம் காசு இருந்து இருந்தால் அல்லது எதிர்த்துப் போராட உடம்பில் வலு இருந்தால் வேறு வழியில் இதனை அனுகியிருப்பார்.  இரண்டும் இல்லாமல்  விதியின்படி வாழும் அவர் வேறு என்னதான் செய்வார்?  அவரைப் பொறுத்தவரை ஹேரி மற்றும் வந்தியதேவன் இருவருமே கெட்டவர்கள் கிடையாது.

 தன் பெண்ணின் மீது உயிரையே வைத்திருக் கிறார்கள்.  ஆனால் இது குண்டலகேசியின் வாழ்க்கை.மரண அடி பட்டது அவளுக்கு.அவள் தான் இதற்கு ஒரு முடிவை சொல்லியாக வேண்டும். ஹேரி வந்தியதேவனோடு சேர்ந்து அவள் கூறப்போகும் முடிவிற்காக ஆவுடையப்பனும் காத்திருந்தார். தன்னுடைய மற்ற பெண்களிடம் கூட குண்டலகேசி பற்றி வாய் திறக்கவில்லை அவர். போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என்று கூறியவர்களிடம்  அவள் வந்து விடுவாள் என்பதை மட்டும் அழுத்தி கூறினார்.


ஹேரியும் வந்தியத்தேவனும் குண்டலகேசி காணாமல் போன மறுநாளே அவள் எங்கே இருக்கிறாள் என்பதை கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் அவளைத் தேடிச் சென்று அவன் முன் இருவரும் நிற்கவில்லை. ஆவுடையப்பன் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் அவர்கள் இருவரின் செவிகளுக்கும் முட்டி மோதியது.குண்டலகேசி இப்பொழுது தனிமையை தேடி சென்றிருக்கிறாள். அவள் வாழ்க்கையில் தாங்கள் செய்த அநீதி அவளை இந்த முடிவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

கண்டிப்பாக என்றாவது ஒருநாள் அவள் திரும்பி வருவாள்.அந்த நம்பிக்கையில் காத்திருக்க ஆரம்பித்தார்கள் இரண்டு ஆடவர்களும்.  வந்தியதேவன் அந்த மாளிகையை வேறு ஒருவனுக்கு விற்று விட்டு மும்பை சென்று விட்டான். ஹேரி உருவ மாற்று செய்து குண்டலகேசியோடு வாழ்ந்த இடத்தில் தான் வாழ விரும்பவில்லை.

அக்கா எங்க அண்ணா என கேட்ட கமலிக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவன் அவர்களுக்கு வேறு வீடு வேலை ஏற்பாடு செய்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.வந்தியதேவன் வேறு ஒருவனுக்கு விற்ற மாளிகையை இரண்டு பங்கு பணம் அதிகம் கொடுத்து தானே வாங்கிக் கொண்டான் ஹேரி.

ஒருவேளை அவள் வந்தியதேவன் வேண்டும் என்றால் அவள் நினைப்பாக இந்த மாளிகையாவது இருக்கட்டுமே என்று தான். அவளுடன் வாழ்ந்த ஞாபகம் அவன் இதயத்தை குத்தி கிழித்தது. அவள் நின்று பேசிய இடங்கள், குடுக்குடுவென ஓடிய பாதைகள்.. எகிறி குதித்து விளையாடிய டன்லோப் ஸ்ப்ரிங் மெத்தை, கண்களை விரித்து பார்த்த பிரமாண்ட அறைகள், தன் உடலை அங்கிட்டும் இங்கிட்டும் வளைத்து பார்த்த கண்ணாடி, அவனை கருவிக் கொண்டே சமைத்த சமையலறை,அவனோட காதலாய் தன்னை கொடுத்த பஞ்சு மெத்தை, அந்த மெத்தையில் படுத்து கண் மூடினான்.

ஆனால் இவ்வளவும் வந்தியதேவனாக அவள் மனதில் பதிந்த உருவத்திடம்.. அவள் மனதை வென்றது அந்த உருவம் தானா? என் மனமும் காதலும் இல்லையா"இந்த கேள்வியோடு காத்திருப்பை தொடர்ந்தான் ஹேரி.

அங்கே தேவா போனா ஜென்மத்தை அசைபோட்டுக் கொண்டிருந்தான். அவனை யோவ் வெள்ளை என அழைத்த அழகி.. அவனின் கேலிக்கு முறைத்து தள்ளிய அழகி. அவனோடு வாயாடிய அழகி. அவனை மிரண்டு பார்த்த அழகி. பாட்டியை பறிகொடுத்த அழகி. அவனின் தாலியை அதிர்ச்சியோடு பார்த்த அழகி. அவனுக்காக தன்னை இழக்க நினைத்த அழகி. தன்னவனுக்கு தன்னை முழுதாக கொடுத்த அழகி... இறுதியில் அவன் முகத்தில் விழிக்க முடியாமல் உயிரை விட்ட அழகி.. இப்படி அவள் தான் அவன் நினைவில்..

உருவம் என்னுடையதாய் இருந்தாலும் மனம்? என் அன்பு காதல் அவளுக்கு புரியாமல் எப்படி போனது. எனக்கு வந்த உணர்வும் தவிப்பும் அவளுக்கு இல்லையா? அவள் ஒருவேளை அவனை ஏற்றுக் கொண்டால்? இப்படியாக அவனது நாட்கள் ஓடியது.

குண்டலகேசி ஏற்கனவே பருமன் என்பதால் அவள் கர்ப்ப காலத்தில் கூட அவளது வயிறு அவ்வளவாக வெளியே தெரியவில்லை. பொதுவாக ஆண் குழந்தைக்கு வயிறு சிறியதாக இருக்கும். பெண் குழந்தைக்கு வயிறு பெரியதாக இருக்கும் என்று கூறுவார்கள். அதன்படியே குண்டலகேசி அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். ஹேரி மற்றும் வந்தியதேவன் இருவருமே அவள் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டதோடு சரி.. அவளைப்பற்றி எந்த ஒரு விவரத்தையும் அவர்கள் திரட்ட முற்படவில்லை. அதற்கும் ஒரு காரணம் இருந்தது. வினாடிக்கு வினாடி அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களை பேயாய் அலைக்கழிக்க இதில் அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தால் உடனே சென்று நின்று விடுவார்கள்.

 அவளுக்கு செய்த அநீதி அவர்களை பாடாய் படுத்த இந்த ஒரு விஷயத்தில் அவனுக்கு நல்லது செய்ய நினைத்து செய்து கொண்டும் இருந்தனர். சங்கரன் புவனா இருவரும்தான் முழுக்க முழுக்க குண்டலகேசியை பார்த்துக் கொண்டது.குழந்தை பிறக்கும் போது கூட அவர்கள் தான் கூடவே இருந்து அனைத்தையும் கவனித்தார்கள்.குழந்தை பிறந்த பிறகும்கூட அவனை குளிப்பாட்டுவது குழந்தையை எப்படி பராமரிப்பது என அனைத்தையும் ஒரு தாயாக இருந்து புவனா சொல்லிக் கொடுத்தார். ஆனால் அந்த பெரியவர்களை இருவருக்கும் மனம் பொறுக்காமல்"இப்படியே புருஷன் கிட்ட கோச்சிகிட்டு இருந்தா எப்படிம்மா.. புள்ள பொறந்ததயாச்சும் அவர்கிட்ட சொன்னியா? "

 அவர்கள் சொன்ன பின்பு தான் குண்டலகேசிக்கு புரிந்தது.என்றைக்காவது ஒருநாள் மீண்டும் தன் பிறந்த இடத்துக்கு செல்ல வேண்டும் என்பது.இத்தனை நாள் குழந்தை பிறப்பு பற்றியும் அதை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைப் பற்றியே அவளது சிந்தனை இருந்தது.சங்கரனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் சற்று தடுமாறினாள் குண்டலகேசி.அவளின் தடுமாற்றம் அந்த வயது அனுபவம் மிக்க தம்பதிகளுக்கு புரிந்தது.

ரேவதி தோழிக்கு வாழ்த்து கூறி குழந்தைக்கு பரிசுப் பொருட்களை நியூசிலாந்தில் இருந்து அனுப்பி வைத்தாள். ஆவுடையப்பனுக்கு தெரிவிக்க குண்டலகேசி நினைத்தாலும் அவளால் சொல்ல முடியவில்லை. நேரில் சென்று அப்பா இது உங்கள் பேரப் பிள்ளை என்று காட்டிக் கொள்ளலாம் என்று இருந்தாள்.


ஹேரி.. அவன் என்ன நினைப்பான்.. இது அவனுடைய குழந்தை.  வந்தியதேவன் உருவத்தில் ஹேரி குண்டலகேசியோடு கலந்து உருவான குழந்தை.குழந்தையைப் பார்க்கும்போது எல்லாம் வந்தியதேவனின் ஜாடை தெரியும்.. ஆனால் அதனுடைய நீலக் கண்கள் அப்படியே ஹேரியை நினைவு படுத்தியது.இது எப்படி சாத்தியம்?புரியவில்லை அவளுக்கு..ஹேரியை ஞாபகப்படுத்த கூடவே அவன் செய்த மாபெரும் நம்பிக்கைத் துரோகத்தையும்.

வந்தியதேவன்...தன் மேல் இத்தனை காதலா அவனுக்கு.போன ஜென்மத்தில் கூட அவனுக்கு நல்ல மனைவியாக தான் இருந்ததே கிடையாது. அப்படியிருக்க என்மேல் எப்படி இந்த அளவிற்கு காதல் வைக்க முடியும். அந்த காதல் தானே மறுபிறவிக் கேட்கிறேன் கத்தரிக்காய் கேட்கிறேன் என இந்த நிலைக்கு என்னை ஆளாக்கியது?

மாற்றி மாற்றி யோசித்து கொண்டிருந்த குண்டலகேசி கவனத்தை தன் பிஞ்சு கால்கள் கொண்டு எட்டி மிதித்து கலைத்தது அந்த வாண்டு.உதய் சரண் எனும் நாமம் கொண்ட வாண்டு நீல கண்களை உருட்டி என்னை தூக்கேன் என்றது. குழந்தையை வாரி எடுத்தவள் இனி வாழ்வில் என்ன செய்வது என புரியாமல் விழித்தாள்.

வந்தியதேவன் ஹேரி.. ஹேரி வந்தியதேவன் இருவரில் யார்?..யோசித்து யோசித்து ஒரு தீர்க்கமான முடிவோடு ஆவுடைக்கு அழைத்து உதய் பற்றி கூறி அதை சொல்லாமல் மறைத்ததற்கு மன்னிப்பு கேட்டு அழுது கிளம்பி வர துடித்து தகப்பனை அடக்கி ஆறுதல் கூறி தான் எடுத்த முடிவை பற்றி கூறி முடியவே முடியாதென மறுத்தவரை சம்மதிக்க வைத்து அதன் பின் நிம்மதியாக கண்ணயர்ந்தாள்..

ஆனால் உறக்கத்தில் கூட இரண்டு ஆண்களும் வந்து காதல் பிச்சை கேட்க வந்து தூக்கம் ஓடியே விட்டது.ஒரு பக்கம் பேபியும் ஒரு பக்கம் குட்டியும் அவள் மனதை குழப்பி பைத்தியம் பிடிக்க செய்தது.

பேபியா குட்டியா?

ஹேரியா வந்தியதேவனா?

அடுத்த பதில் கதை முடியும். பதிலும் கிடைக்கும்.

Comments

  1. Wait panrom ka.. next ud kku ,sewkaramae pottudunga

    ReplyDelete
  2. Interesting waiting for nxt

    ReplyDelete
  3. Manasu thikinu iruke 😰😰 enna mudiu edupa yarume vendanu solliduvala 🙄🙄👌👌👌👌

    ReplyDelete
  4. Yana mudiuv yaduka poranu thariyalaya

    ReplyDelete
  5. Thalaiye sutthuthu.. Kesi enna pannuvanu ninaicha 😵😵

    ReplyDelete
  6. Interesting ud sis nice enna mudivu edukka poralo kesi

    ReplyDelete
  7. Vaethiya devan kuda sernthu vaika

    ReplyDelete
  8. ஏதோ ஒரு புதுமையான முடிவாக தான் இருக்கும்,ரெண்டு பேரும் என்ன செ்யப்போகிறார்கள்,அவள் முடிவை ஏற்பார்களா😳😳😳😳😳😳😔😔😔😔😔😔👌👌👌👌👌👌நிலா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்