அதரா 2-3



அதரா - 2

அன்னிக்கு லவ்வு பண்ணிக்கினு உன்  கன்னத்த கில்லிக்குன்னு அடி எப்பயுமே கலர் மாறாம என் நெஞ்சுல ஜிவ்வ்வோன்னு இருக்குமே சாதி மல்லி பூவு கோல்ட்டு வெண்ணிலாவு ஆச தீரகண்டி பேசலாம் ஃப்ரஸ்ட்  நைட்டுக்கு மீனாம்மா...

"மச்சி சத்தியமா சொல்றேன் உன்னி கிருஷ்ணன் இல்ல கவர் சாங் பாடுன அரவிந்த் எவனாச்சும் கேட்டானு வெச்சிக்க நெஞ்சு வலியே வந்துரும்.. இன்னா மாறி பாட்டு மச்சி அத போய் இப்டி கொலயா கொல்றியே வீணாப்போனவனே வெளங்குவியா நீயூ"நதின் சங்கீத கடலில் முழு போதையில் பாடிக்கொண்டிருந்த வருணை பார்த்து சொல்ல

"ஏன் மச்சி என் பாட்டுக்கு இன்னா குற நல்லாதானே இருக்கு.. உன்னாலங்கான்டி பாதிலேயே வுட்டுடேன் எதுல வுட்டேன் ஆஹ் மீனாம்மா"

"அது மீனம்மா மச்சி மீனாம்மா இல்ல'

"மொத மீனா கூட இருந்தேனா அந்த ஞாபகம் மச்சி கண்டுக்காத கம்முனு இரு"

"மச்சி நீ மெய்யாலுமே மீனாவ லவ்ஸ்ஸு பண்றியா"

"யாரு அவள அட போ மச்சி.. அவலாம் வஞ்சன மாறி எப்பயாச்சும் துட்டு இருக்குறப்போ திங்குறதுக்கு.. நமக்கு எப்பயுமே கருவாடு தான் மச்சி புடிக்கும்.. வஞ்சன புடிக்கும் அது என்னிக்காச்சு கருவாடு ரொம்ப புடிக்கும் அது எப்பயுமே"

"அந்த கருவாடு யாரு மச்சி"

"தெரிலயே மச்சி..என் கருவாடு எங்க இந்த மாமன் வருவேன்னு காஞ்சு கெடக்குதோ தெரிலயே"..வருண் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சிப் சிப்பாக குடிக்க வேண்டிய வோட்காவை ராவாக உள்ளே இறக்க விட்டால் அவன் முழுதையும் காலி செய்திடுவான் என்று தெரிந்திருந்த நதின் அதை பிடுங்கி மொத்தையும் தன்னுடைய வயிற்குள் அனுப்பி காலி பாடில்லை கீழே உருட்டி விட்டான்..

"அடப்பாவி பக்கிபயலே கொஞ்சங்கூட மிச்சம் வைக்காம குடிச்சி புட்டியேடா"வருண் காலி பாட்டிலை எடுத்து எப்படியாவது ஒரு சொட்டு குடித்து விட முயற்சி செய்கிறான். எங்கே ஒரு சொட்டு கூட இல்லாம நதின் தான் உள்ளே இறக்கிட்டானே.. நதின் போதையில் சாப்பிடாமல் உறங்க அவன் முடியை பிடித்து ஆட்டி"மச்சி நதினு டேய் திங்க வோணாவா இந்தாடா திண்ணுட்டு படு"

நதின் கண் திறக்க முடியாமல் போதையில் பினாத்த பிரியாணி பொட்டலத்தை பிரித்து அவனுக்கு ஒரு வாய் தனக்கொரு வாயென்று ஒன்றும் பாதியுமாக வாயில் அடைத்து நதினுக்கு தண்ணீர் கொடுத்து அவன் வாயை துடைத்து படுக்க வைத்த வருண் எழுந்து சென்று கை கழுவியவன் தட்டு தடுமாறி வந்து நதின் மேலேயே விழுந்து உறங்கி போனான். இவர்களின் நட்பு ஏழை பணக்காரன், படித்தவன் பாமரன், தொழிலதிபர் மீனவன், என்று எதையும் பாராமல் வந்தது. நதினுக்கு நுனி நாக்கு ஆங்கிலத்தை விட வருண் பேசும் மொழியின் லயம் மிகவும் பிடிக்கும். வருணுடன் இருக்கும் போது வருணை போலவே பேசுவான்.

கோதுமை நிற தேகத்தில் ஆறடி உயரத்தில் அதற்குண்டான உடலமைப்பில் ட்ரிம் செய்யப்பட்ட மீசை தாடியோடு கேசத்தை இரு பக்கமும் சரித்து அதில் மூன்று கோடுகள் போட்டு இடது காதில் கருப்பு கடுக்கன் மாட்டி கழுத்தில் நெஞ்சு வரை உறவாடும் வகையில் பிளாட்டினம் சங்கிலி வலது கையில் தடிமனான சில்வர் ப்ரேஸ்லெட் இடது கையில் எப்போதும் அவனுடன் உறவு கொள்ளும் ஸ்போர்ட்ஸ் வாட்ச் ப்ரென்டட் ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து அதற்கு சற்றும் சம்மதமில்லாமல் வருணின் பத்துக்கு பத்து வீட்டில் கீழே குத்துக்காலிட்டு அமர்ந்து வருணுடன் ஒரே தட்டில் தோளிலிருந்து மணிக்கட்டு வரை டாட்டூ குத்திய வலது கையால் கருவாட்டு குழம்பை பிசைந்து  உண்ணும் நதின் சிறந்த தொழிலதிர்பர்களில் ஒருவன் என்றால் யார் நம்புவது..

வருணின் தந்தை மீன் பிடிக்க சென்று புயலில் சிக்கி பூலோகம் விட்டு மறைந்தார். தாய் பெயரே வாயில் நுழையாத வியாதியில் படுக்கையாய் கிடந்து மடிந்தார். அப்பொழுது பதினைந்து வயது வருணிற்கு. அரசு பள்ளியில் படித்து கொண்டிருந்தவன் படிப்பை பாதியில் நிறுத்தினான்.நதின் காலில் விழாத குறையாய் கெஞ்சியும் அவன் படிப்பை தொடரவில்லை. படிப்பே ஏறாமல் பள்ளிக்கு செல்வது விண்வெளிக்கே செல்வதை போல சாதனை வருணுக்கு. சொந்தம் என்று யாருமில்லா வருணுக்கு அனைத்தும் நதினே. நதினின் பெற்றோருக்கு கூட வருணை பிடிக்கும். அவனுடன் இருக்கும் நேரமே நதினின் முகம் சிரிப்பில் ஜொலிக்கும்.

வருணின் இடுப்பில் கால் வைத்து படுத்திருந்த நதினின் உதடுகள் உறக்கத்தில் அவன் அறியாமல் உளறியது.

அன்று காதல் பண்ணியது
உந்தன் கன்னம் கிள்ளியது
அடி இப்போதும் நிறம் மாறாமல்
இந்த நெஞ்சில் நிற்கிறது

ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே
ஆசை தீரவே பேசலாம்
முதல் நாள் இரவு 

மீனம்மா

என்ற பெயரை உதடுகளுக்கே வலிக்காமல் மென்மையாக முணுமுணுத்து அந்த பெயரை உச்சரித்த நாவின் உமிழ் நீரை கூட ரசித்து விழுங்கி கொண்டிருந்தான். மீனம்மா என்ற வார்த்தை முழு போதையிலும் அவனின் உள்ளதை ஆண்டது. விடுமுறை நாட்களில் வருண் கடலுக்கு செல்லாமல் இருந்தால் அவன் வீட்டிலே கும்மாளம் அடித்து குப்புற படுத்து உறங்குவது நதினின் வழக்கம். பொழுது விடிந்து மதியத்தை தொடும் வேளையில் நதினின் கைபேசி மீண்டும் சின்யோரிதா பாடியது.

அவன் எழாமல் புரண்டு படுக்க வருண் தான் தூக்கம் கலைந்து நதினை 
மிதித்து உருட்டி விட்டு கைபேசியை தேடி எடுத்து பார்க்க சுகன்யா அழைத்திருந்தார். முகத்தை அழுத்தி துடைத்து எழுந்து அமர்ந்தவன் அழைப்பை ஏற்று"ம்மா சொல்லுங்கம்மா மார்னிங்"

"இது மார்னிங் இல்லடா மத்தியானம்.. நேரங்கெட்ட நேரத்துல தூங்கி மத்தியானம் எது சாயங்காலம் எதுன்னு தெரியாம இருக்கீங்க.. எங்கடா அவன்"

"அந்த நாய் தூங்குது"

"ஓ காட்.. இன்னுமா தூங்குறான் வருண் அவன எழுப்பு ஈவினிங் அவங்க அப்பாவோட டாட்டர மீட் பண்ண சொல்லிருந்தேன்.. ரெண்டு பேரும் மீட் பண்ணி பேசி ஓகேன்னா மேரேஜ் பத்தி நெஸ்ட் ஸ்டேப் எடுத்து வைக்கலாம் பாரு.அவன எழுப்பி வீட்டுக்கு அனுப்பு ஏன் தான் இவன் இப்டி இருக்கானோ கடவுளே.. டேய் அவன் கூட நீயும் வந்து சேரு.. பொங்கலும் அதுவுமா இன்னிக்காச்சும் சாமி கும்பிடுங்க."..

இது தான் சுகன்யா. கண்டிப்புடன் மேல் தட்டு பெண்மணியாக இருந்தாலும் மகனின் உண்மையான நட்பை மதிக்கும் பண்பு. வருண் நதினை அடித்து மிதித்து குலுக்கி எழுப்பி பார்க்க அவன் எழாமல் இருக்க ஒரு தம்ளர் தண்ணீரை எடுத்து வந்து நதின் முகத்தில் ஊற்றியவன் ஒரே ஓட்டமாக கதவைத் திறந்துகொண்டு வெளியே ஓடினான்.

தூக்கம் கலைந்து வெறியோடு நீர் சொட்டிய முகத்தை அழுத்தி கைகளால் துடைத்து கொண்டே வெளியே வந்த நதின் பல் விளக்க பற்பசையை கையிலெடுப்பதை கண்டான்.நதினை கண்டவன்"வேணா மச்சி எழுப்பி எழுப்பி பாத்தேன் தண்ணி லாரில அடிபட்டு நசுங்குண தேர கணக்கா படுத்துருந்த.. அதான் தண்ணி ஊத்துனேன்"

"தூங்குனா தூங்க விட வேண்டிதானே உன்ன தண்ணி ஊத்த சொன்னாங்களா"என்றவன் வருணை துரத்த அவன் ஓட இவன் பிடிக்க மண்ணில் உருண்டு புரண்டு பற்பசையை பிதுக்கி வருண் வாயில் திணிக்க அவனோ வருத்தப்படவில்லை வேதனை படவில்லை. இன்பமாக அந்த ஸ்ட்ராஃபெரி கலவை பற்பசையை தின்று விட்டு நக்கலாக சிரித்து சென்றான்.வருண் குளித்து வர ஃபோனை நொண்டி கொண்டிருந்த நதினை இழுத்து கொண்டு நதின் வீட்டுக்கு சென்றான்.

சுகன்யா வருணிடம் பேச நதின் குளிக்க சென்றான்.சுகன்யாவின் முகத்தில் தெரிந்த கவலை ரேகை வருணின் கண்களுக்கு தப்பவில்லை."இன்னாம்மா காட்டு பூனைக்கே டஃப் கொடுக்குற மாறி கடு கடுன்னு வெச்சிருக்கீங்க மூஞ்ச"

"செருப்பு பிஞ்சிரும் உனக்கு.. சும்மா ஏதாச்சும் சொல்லிக்கிட்டு இந்தா சக்கர பொங்கல் காலயில செஞ்சது அப்போவே வந்துருந்தா சூடா சாப்ட்ருக்கலாம் உங்களுக்கு தான் பொழுதே விடியாதே"

"வேணா வேணா என் நண்பன் வந்தோன உள்ள தள்றேன் அத அங்குட்டு ஓரமா வைங்க. என் கண்ணுல பட்ர மாறி வெச்சீராதீங்க"சுகன்யா அவனை முறைத்து கொண்டே பொங்கல் தட்டை எடுத்துச் சென்று வைத்துவிட்டு வருணின் அருகே அமர்ந்தார். அவர் தன்னிடம் ஏதோ ஒன்றை கூற அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் அதை அவரே சொல்லட்டும் என்று அவரின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

 வருணின் பார்வையை வைத்தே அவன் தான் சொல்லப் போவதை கேட்க தயாராக உள்ளான் என்பதை சுகன்யா உணர்ந்துகொண்டு" வருண் எனக்கு யாரு கிட்ட இத சொல்லணும்னு தெரியல. உன்னத் தவிர இத சொல்ல சரியான ஆளு கிடையாது. ஆனா நீ எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடு. இத பத்தி நீ யார்கிட்டயும் முக்கியமா நதின் கிட்ட நீ வாய தொறக்க கூடாது.சத்தியம் பண்ணி குடு"

"ம்மா மேட்டர் இன்னான்னு சொல்லுங்க மொத அது வுட்டுட்டு சும்மா நொய்யு நொய்யுன்னு.."

" சொல்றேண்டா அதுக்கு முன்னுக்கு ப்ராமிஸ் பண்ணு" அவரிடம் சத்தியம் வாங்காமல் விஷயத்தை கிரகிக்க முடியாது என புரிந்து கொண்டவன் சுகன்யாவின் கையில் தன் கையை வைத்து அழுத்தி சத்தியம் செய்து கொடுத்தான். அதன்பிறகே சுகன்யா வாயை திறந்தார். "வருண் இன்னும் ஒரு மாசத்துல நதினுக்கு டுவெண்ட்டி செவன்த் பர்த்டே வரப்போகுது"

"அதலாம் மெர்சல் ஆகவுதிங்கம்மா.. சும்மா தெறிக்க விட்ரலாம்"

"ஐயோ சொல்றத கேளுடா.. அவனோட ஜாதகப்படி இருபத்தேழாவது வயசுல இந்த உலகத்த விட்டு போயிருவானு இருக்கு.என்னால நம்பாம இருக்க முடியாது வருண் ஏன்னா அவரு எங்க பேமிலி ஜோசியர்.நதின தவிர வீட்ல எல்லோருக்கும் தெரியும்.ஜோசியர் கிட்ட பரிகாரம் கேட்டதுக்கு முன்னாடி இல்லவே இல்லன்னு சொன்னாரு.. திடிர்னு ஒருநாள் ஃபோன் பண்ணி அவன் இருபத்தேழு வயசுக்குள்ள யாரயாச்சும் கல்யாணம் பண்ணா அவனுக்கு எதுவும் ஆகாதுன்னு சொல்லுறாரு.. அதனால தா அவங்க அப்பாவோட பாட்னர் பொண்ண நதினுக்கு கேட்டோம்..

அந்த பொண்ணு பேசி பாத்து தா ஓகே சொல்லுவேன்னு சொல்றா.. வருண் அவன் உயிர் உன்கையில இருக்கு. நீயும் அவன் கூட போ.. எப்படியாச்சும் இந்த பொண்ண ஓகே பண்ண வெச்சிரு.இல்லனா வேற பொண்ணு இன்னும் ஒரு மாசத்துல எப்டிடா"

வருணுக்கு சுகன்யா சொல்லியது அதிர்ச்சியே. நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் திணறி கொண்டிருக்கும் போது நதின் இறங்கி வந்தான்.சுகன்யா கண் ஜாடை காட்ட வருண் முகத்தை இயல்பாக்கி கொள்ள"இன்னடா பேயறைஞ்ச மாறி ஒக்காந்துருக்க.. வா சாப்டலாம்.. "

"இல்ல வேணா மச்சி.."

"மச்சி நீயா வேணா சொல்ற..இன்னைக்கு மாம் ஸ்பெஷலா குக் பண்ணிருக்காங்க வாடா.."என்று வருணை இழுத்து செல்ல சுகன்யாவே பரிமாற நதின் நன்றாக உண்ண வருண் ஒன்றும் பாதியுமாக உண்ண ஒருவழியாக உண்டு விட்டு இருவரும் வெளியே சென்றனர். சுகன்யாவின் வார்த்தைகள் வருணின் செவியில் ஒளித்து கொண்டே இருந்தது.

"மச்சி என்னாச்சு இன்னாடா ஒரு மாறி இருக்க.."

"இல்லடா ஒன்னும் இல்ல"

"சொல்லு சொல்லு"

"மச்சி இன்னிக்கு ஒரு பிகுர பாக்க போறியே அத உஷார் பண்ணிடு மச்சி"

நதின் வருணை திரும்பி ஏளனமாக பார்த்து விட்டு சாலையில் கவனம் செலுத்தினான்.."இன்னா மச்சி பிகுர் மடிக்குறத பத்தி பேசுற..உனக்கு இதெல்லாம் சப்ப மேட்டராச்சே வேணும்னா அந்த பொண்ண நீயே"

"டேய் மூஞ்ச ஒடச்சிருவேன் பாத்து பேசு.. உனக்கும் வயசாவுது மச்சி கட்டிக்க வேணாமா"

"யாரு வேணான்னு சொன்னா நா வெறப்பா நிக்குறேன் எல்லா பொண்ணுகளயும் லைன்ல வந்து என்ன கட்டிக்க சொல்லு"

வருணிற்கு ஆத்திரம் தாள இயலாமல் ஓங்கி ஒன்னு ஒன்று வைத்தான் தலையில்.மண்டையை சுற்றி சிட்டு குருவி சிறகடிக்க தலையை தடவி கொண்டான் நதின். கடுமையாய் முறைத்தவனிடம்"டேய் நதினு நீ என்ன பண்றியோ ஏது பண்றியோ இந்த பிகுர் உஷார் பண்ற இதயே கட்டிக்குற புரியுதா'

"ஏன்டா இதுலயே குறியா இருக்க..நானாடா பிகுர் உஷார் பண்ண மாட்டேன்னு சொல்றேன்.. ஒரு பிகருக்கு மெசேஜ் அனுப்பி அது நம்ம மூஞ்ச பாத்து அக்ஸ்ப்ட் பண்ணி அதுகூட கேவலமா வழிஞ்சு மெசேஜ் பண்ணி மொக்கதனமா பல்பு வாங்கி கடசியா கரெக்ட் பண்ணி மடக்கலாம்னு நெனப்பேன் ஒருத்தியோட குரல் மச்சி. நா இந்த
உலகத்துலயே இருக்க மாட்டேன்"

"வேற உடுப்புல முதுகு வரைக்கும் முடி வெச்சிட்டு இருப்ப ஒரு பொண்ணோட குரலு கேக்கும்.. எனை கல்லாய் சமைய வைத்து விட்டு உனக்கு சல்லாபம் கேட்கிறதோ இப்டினு தானே எத்தன வருஷம் டா இதயே சொல்லுவ.. கேட்டு கேட்டு காதுல ரத்தமே வந்துருச்சு"

"என்ன நல்லா புரிஞ்சிக்கிட்ட நீயே இப்டி சொன்னா நா இன்னாடா பண்ணுவேன்.. அந்த குரல்ல இன்னா இருக்குனே தெரில மச்சி என்ன கட்டி போட்ருது.."வருணிற்கு புரிந்தது நண்பனின் மன குமுறல். அந்த குரல் மங்கையின் மீது கொலைவெறியே வந்தது. ஆனால் என்ன செய்ய..

"சரிடா அதெல்லாம் ஓரங்கட்டு நீ இன்னா பண்ணுவியோ ஏது பண்ணுவியோ இந்த பொண்ண வுட்றாம கட்டிக்குற.."அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அந்த உயர்தர உணவகம் வர இருவரும் இறங்கி உள்ளே சென்றார். வருண் நதினை கவனிப்பதற்கு ஏதுவாய் ஓரிடத்தில் அமர்ந்து கொள்ள அங்கே அந்த பெண் கரிஷ்மா அமர்ந்திருந்தாள்.

அவள் அருகில் சென்ற நிதின்"ஹாய் ஆர் யூ கரிஷ்மா?"

"யப் ஓ ஹாய் ஆர் யூ நதின் ரைட்?'

"எஸ்".. என்றதும் அந்த பெண் எழுந்து நாகரிகமாக அணைத்து

"க்ளாட் டு மீட் யூ நதின்".. என்றதும் நதின் சிரித்து கொண்டே அமர சாக்லேட் மில்க் ஷாக் ஆர்டர் செய்து விட்டு பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போதே நதினின் கண்கள் கரிஷ்மாவை அளவிட்டது. சிவந்த முகத்தில் அரை அடி உயரத்திற்கு அவள் செய்திருந்த முக பூச்சு அவனிடம் அலட்சிய பார்வைவை பரிசாக பெற்றது. அவன் ஒன்றும் பெண்கள் அலங்காரம் செய்யவே கூடாதென்று கூறுபவன் அல்ல. அதற்காக அநியாயத்துக்கு கிரீம் பூசினால் பொங்கி விடுவான். லேஸ் வைத்து லைனரில் ஜொலித்த கண்களும் பிங்க் நிற லிப்ஸ்டிக்கில் சுண்டி இழுத்த இதழ்களும் அவன் மனதை கொள்ளை கொண்டன.

சிக்கென உடல் வாகில் சிட்டு குருவியாய் தலைசரித்து அவள் பேச இவன் மொத்தமும் மயங்கி விட்டிருந்தான்.கரிஷ்மா வளவளக்காமல் கல்யாணத்தை பற்றி தனது விருப்பத்தை கூற இவனுக்கும் அவளை பிடித்து போனதால் எனக்கும் அவ்வளவு தான் கூறிருப்பான்.

"விவாகத்திற்கு சம்மதம் மொழிய தயாராக உள்ளீரோ எனை மறந்து விட்டீர் அல்லவா கற்சிலையான காரிகை இவள் தங்களது சிந்தையில் காலம் கடந்து இருந்தால் தான் அதிசயம்.. உங்கள் மனம் கவர்ந்த  அந்த நங்கையை மணந்து கொள்ளுங்கள் இனி என் குரல் கூட உங்களை தீண்டாது.."

எப்பொழுதும் கணீர் குரலில் கட்டலை இடும் குரல் இன்று உலகின் மொத்த வேதனையையும் குத்தகைக்கு எடுத்தது ஏன்..கரிஷ்மா நதினின் பதிலுக்கு காத்திருக்க அவனின் முக மாற்றத்தை உணர்ந்த வருண் உடனே வந்து நதினின் தோளில் அழுத்தி கைவைத்து அழைக்க நதின் விழித்து கொண்டே காணும் கனவிலிருந்து விழித்தான். அவன் ஏதோ கூற வர வருணின் கை அழுத்தம் அதை சொல்ல விடாமல் தடுக்க"ஸாரி கரிஷ்மா எனக்கு திடிர்னு தலைவலியா இருக்கு நாம அப்றம் பேசலாமே"

"இட்ஸ் ஓகே நதின் டேக் கேர்"என கூறியதும் நதின் வேகமாக வெளியேற அவன் பின்னோடே ஓடிய வருண் காரை உயிர்பித்தான்.நதின் ஏதும் பேச விரும்பாமல் சீட்டில் சாய்ந்து கொள்ள கார் வீட்டை நோக்கி சென்றது. அவன் மனமோ அந்த குரலை சுற்றி வந்தது.

அங்கே கற்சிலையான மச்சக்கன்னியின் கண்கள் கண்ணீரை கொட்டியது. கற்சிலைக்குள் கல்லாகி போன இதயம் மரண அடி பட்டது. வேதனையை வாய் விட்டு கதற இயலா தன் நிலைக்கு காரணமான அவனை நினைக்கையில் இன்னும் வன்மம் கூடியது கூடவே அவனின் வலி உணர்ந்து காதலும் பெருகியது..

அதரா - 3


மனம் கனக்க அதன் தாக்கம் முகத்தில் மோத என்னவென்றே தெரியாத உணர்வு பந்தாய் நெஞ்சத்தை அடைக்க நதின் அலைபாய்ந்து கொண்டிருந்தான்.இன்னும் சரியாக இருபத்து நான்கு மணி நேரத்தில் நதினுக்கும் கரிஷ்மாவிற்கும் திருமணம். அன்று அவளை பார்த்து பேசிவிட்டு வந்த பிறகு சுகன்யா ஆவலே வடிவாக என்னாயிற்று என வினவ நதினின் முகமே சொல்லியது விஷயத்தை.

எப்பொழுதும் போல தோளை குலுக்கி விட்டு விடவில்லை சுகன்யா. கரிஷ்மாவின் வீட்டில் பேசி,அவளிடமும் பேசி பேசியே மனதை கரைந்து,ஆருஷ் மற்றும் கணவனை தன் அன்பால் கட்டி போட்டவர் நதினிடம் மட்டும் கண்ணீரையும் உண்ணாவிரதத்தையும் வைத்தே காரியம் சாதித்து கொண்டார். வேண்டா வெறுப்பாக புள்ளைய பெத்து காண்டா மிருகம்னு பேரு வெச்சாங்களாம் அதே மாதிரி நதினும் தாயின் இம்சை தாங்க இயலாமல் வேண்டா வெறுப்பாக திருமணத்திற்கு சம்மதம் அளித்தான். அவனுக்கு கரிஷ்மா மேல் கொலைவெறியே உண்டாயிற்று. அவள் எதை வைத்து இவனை திருமணம் செய்ய சம்மதம் சொன்னால் அதனால் தானே அம்மா ஒரே மாதத்தில் திருமணம் வரைக்கும் வந்து நிற்கிறார்கள்.

அந்த குரல் பெண்ணை வேறு ஆளையே காணவில்லை..யாருடைய குரல் எதற்கு அந்த குரல் நம்மை இவ்வளவு பாதிக்கிறது என்றெல்லாம் யோசித்து குழம்பி தத்தளித்து தவித்து கொண்டிருந்த மனதிற்கு புகையையும் வறண்ட தொண்டைக்கு ஸ்காட்ச் கொடுத்து தவிப்பை அடக்க முயல்கிறான் முடியவில்லை. எதையோ இழந்த வலி தொண்டையில் அடைத்து கொண்டு அழவும் விடாமல் சிரிக்கவும் விடாமல் படுத்தும் துன்பம் எதனால்.

வருணிடம் மட்டுமே தன் துயர் கூறினான்"மச்சி இந்த வயசுல கொரலு கேக்கலனாதா தப்பு.. எனக்கும் கூட தா இந்த மாறி கொரலு கேக்கும். அத்தெல்லாம் மனசுல போட்டு கொலம்பிக்கினு இருக்காத பிரீயா வுடு..நாளிக்கு ப்ரஸ்ட் நைட்டு அதுல ஏதாக்கண்டி டவுட்டுன்னா வெக்கமே படாத மச்சி எந்த இடத்துல சாவிய போட்டு எப்போ க்ளச்ச பிரீ பண்ணி எத்தனாவது கியர்ல வைச்சு வண்டிய ஓட்டணும்னு உனக்கு சரியா தெரிஞ்சிருக்காது பாரு ஆனா நா எக்ஸ்பிரியன் கை பாத்துக்கோ.. ஏதாகண்டி டவுட்டு இருக்கு? "

அவனை கொடூரமாய் முறைத்த நதின் தன் கரத்தில் காற்றில் படம் வரைய அதை பார்த்து கொண்டிருந்த வருண் அந்தரத்தில் தலைகீழாக தொங்கினான். "ஐயோ டேய் நாசமா போனவனே எதுக்கு டா என்னிய அந்தரதுல தொங்க வுட்ருக்க மருவாதயா இறக்கி வுட்ரு நதினு இல்லாங்கண்டி"

"இல்லாங்கண்டி இன்னா பண்ணிருவ.. நானே என் கஷ்டத்த பொலம்பிக்கினு கெடக்கேன் நீ இன்னனா என்னியே ஓட்ற.. இப்டி தொங்கி சாவுடா"

"நதினு டேய் மச்சி ஏதோ தெரியாம லூஸ் டாக் வுட்டுடேன் மச்சி பேஜார் பண்ணமே இறக்கி வுட்றா டேய்".. ஒரு பத்து நிமிடம் வருணை கதற விட்டு அதன் பின்னே இறக்கி விட்டான். நதினின் வேதனை ததும்பிய முகம் வருணின் மனதை பிசைந்தது. அந்த குரல் அவனுக்கு மட்டும் ஏன் கேட்க வேண்டும் எதனால் தன் நண்பனின் வாழ்வில் இம்மாதிரி மர்மங்கள் நிகழ வேண்டும்.. கேள்விகள் ஏராளம் விடைதான் கிடைத்த பாடில்லை.

அவனுக்கும் தெரியும் நதினுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என ஆனால் என்ன செய்வது அவனின் உயிர் வருணுக்கு அவசியமே அதனால் தன் உயிரையும் துறக்க வேண்டுமானால் அதற்கு சித்தமாக உள்ளான்.வேறு வழியில்லை ஆதலால் நதின் மறுக்க மறுக்க இந்த கல்யாணம் அவனுக்கு நடந்தே தீரவேண்டும். அதோ இதோ என்று திருமண நாளும் விடிந்தது.முதல் நாள் இரவே அனைவரும் விடுதிக்கு சென்றிருந்தனர்.ஆடம்பர ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் முக்கிய பிரமுகர்களும் தொழிலதிபர்களும் நிரம்பி வழிய வைரமும் தங்கமும் பிளாட்டினம் போட்டிபோட மின்னும் தேர் போல் பெண்கள் யாவரும் பவனிவர பிரமாண்ட ஆடம்பரத்தில் அந்த விடுதியின் ஹால் திக்குமுக்காடி போனது.

சுகன்யாவும் மகேந்திரனும் வந்தவர்களை வரவேற்று அமர வைத்துக் கொண்டிருக்க ஆருஷ் தம்பியின் திருமணத்திற்கு பரபரப்பாக ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான். தனக்கு முன்பாக தன் தம்பியின் திருமணம் என அவன் எந்த ஒரு பொறாமையும் கொள்ளவில்லை.

சொல்லப்போனால் அந்த திருமணத்தின் முக்கியத்துவம் உணர்ந்து அவனுக்குமே இந்த ஏற்பாட்டில் பூரண திருப்தி. உறவுகளின் சிலரும் நட்பில் சிலரும் ஏன் பெரியவனுக்கு பண்ணாம சின்னவனுக்கு பண்றீங்க என்று ஊர் வம்புக்கு நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலைய இவை எதற்குமே செவிசாய்க்காமல் தான் உண்டு தன் வேலையுண்டு என ஓடிக் கொண்டிருந்தான் ஆருஷ்.

கரிஷ்மாவின் தோழி"ஏன் பேப் உனக்கு இவன் தான் கெடச்சானா.. நானே இவன் கூட டேட் போயிருக்கேன். வெக்கத்த விட்டு ப்ரொபோஸ் கூட பண்ணியிருக்கேன். ஆளய முழுங்கற மாதிரி பாத்துட்டு இருப்பான் சரி நம்மள பாத்து விழுந்துட்டான் கண்டிப்பாக ப்ரொபோஸ் பண்ணா அக்ஸ்சப்ட் பண்ணிக்குவான் அப்படின்னு நம்பி சொன்னா பாவி பையன் எனக்கு அப்படி ஒன்னும் தாட் இல்லன்னு சொல்லிட்டு போயிடுவான்..வெளியே என்ன பேசிக்கிராங்க இவனுக்கும் பொண்ணுங்களுக்கும் ரொம்ப தூரம்ன்னு.அவனுக்கு ஏதோ ப்ராப்ளம் இருக்கு இல்லன்னா இந்த சொத்துக்கும் இவ்வளவு அழகுக்கும் இன்னும் எவளும் வராமயா இருந்திருப்பா.. கேர்ஃபுல்லா இரு பேப்"

 சும்மா இருப்பவர்களை சுரண்டி விடுவதற்கு என்றே ஒரு கூட்டம் சுத்தும் அப்படிப்பட்ட கூட்டத்தில் ஒருவள் தான் கரிஷ்மாவிடம் வேதம் ஓதிக் கொண்டிருந்த தோழி.. இம்மாதிரி சாத்தான்களை நாம் கூட வைத்திருக்கிறது நமக்கே பேராபத்தில் முடியும்.. ஆனால் இது கரிஷ்மாவிர்க்கு புரியவில்லையே.சொல்லப்போனால் அவளுக்கும் நதினை பிடிக்கவில்லை. அவள் மனம் கவர்ந்தது நதினின் தமயன் ஆருஷ். தந்தையின் தொழிலில் இறங்கிய அவளும் சிலபல முக்கிய மீட்டிங்கில் ஆருஷை சந்தித்திருக்கிறாள்.அவனின் புத்திசாலித்தனத்தை கண்டு வியந்தும் இருக்கிறாள்.

 தந்தை முதலில் மகேந்திரனின் மகன் என்றதும் அவள் ஆருஷை தான் எண்ணினாள்.பின்பு அங்கே சென்று பார்த்தபோதுதான் அது ஆருஷின் தம்பி நதின் என தெரிந்தது.நதினை பார்த்த பின்பு அவனின் தோற்றப் பொழிவில் அவளின் மனம் லேசாக சலனபட அவனை மணக்க சுகன்யா கேட்டதும் சம்மதம் தெரிவித்தாள். ஆனால் அது மிகப் பெரிய தப்பு என இப்பொழுது எண்ணிக் கொண்டிருக்கிறாள். இந்த ஒரு மாதத்தில் நிச்சயம் பரிசம் என அவனை பார்க்காமல் இல்லை. எப்படி இருக்க கரிஷ்மா இந்த ட்ரெஸ் உனக்கு நல்லா இருக்கு நீ ரொம்ப அழகா இருக்க இப்படி எதுவும் அவன் சொல்லாமல் இருந்தால் கூட பரவாயில்லை..

 சின்னதாக ஒரு சிரிப்பு அதுவே பெரிது என ஒரே ஒரு பார்வை இதற்கு கூட முடியாது என்றால் அவள் என்ன சொல்வாள். தந்தையிடம் இதைப்பற்றி கூறினால் "அவனுக்கு இப்போ கல்யாணத்தில் இன்ட்ரஸ்ட் இல்ல அதான் இப்படி இருக்கான் மேரேஜ் முடியட்டும் அப்புறம் பாரு உன்னயே சுத்தி சுத்தி வருவான்"இப்படி சொல்லி அவள் வாயை அடைத்து விடுவார் அவளின் தந்தை. இன்னும் சில நிமிட துளிகளில் அவள் நதினின் மனைவி.

 மனம் கலிப்பூருவதற்கு பதிலாக கவலை கொண்டது. வேண்டாத எண்ணம் எல்லாம் வந்து மனதை வாட்டியது. அவசரப்பட்டு முடிவு எடுத்தது தவறு என எண்ணி மருகி கொண்டிருக்க தோழி வேறு இவ்வாறு அவளின் மனதை வேதனைப் படுத்தி கொண்டு இருந்தாள். அப்பொழுது வெளியே ஒரே சலசலப்பு.. என்ன ஏது என்று அறிந்துகொள்வதற்கு தன் இன்னொரு தோழியை வெளியே அனுப்பினாள். வெளியே சென்ற தோழி ஐந்தே நிமிடத்தில் திரும்ப வந்து" கரிஷ்மா மாப்பிள்ளைய காணமாடி.. எனக்கு இந்த கல்யாணமே வேணா எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க.. கரிஷ்மா நீ என்ன மன்னிச்சிரு அப்படின்னு ரூம்ல ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியில எழுதி வச்சிட்டு எங்கேயோ போயிட்டான்டி அவன்" கரிஷ்மாவின் திருமணம் இவ்வாறு ஆனதில் கவலை கொண்ட அந்த நல்மனம் படைத்த தோழி மிகுந்த வேதனையுடன் தகவலை தெரிவிக்க கரிஷ்மா வானத்தில் சிறகடித்துப் பறக்காத குறைதான்.

 சுகன்யா மகேந்திரன் தம்பதிகள் தலைகுனிந்து நிற்க ஆருஷ் தனக்கு நம்பிக்கையானவர்களை நதினை தேட அனுப்பினான்.கரிஷ்மாவின் தந்தை மணமகனின் தந்தையாகிய மகேந்திரனை கிழித்து நார் நாராக தொங்க போட்டுக் கொண்டிருக்க அவர்களால் என்ன பதிலை கூறிட முடியும்.. ஆருஷ் எவ்வளவோ பேசி தங்கள் பக்கம் தவறு இல்லை என்பதை உணர்த்த முயன்றான். ஆனாலும் கரிஷ்மாவின் தந்தை கேட்டபாடில்லை, இறுதியாக கரிஷ்மாவே வந்து அவள் தந்தையிடம் வீட்டிற்கு செல்லலாம் வாருங்கள் எனக்கூறி அழைக்க அதுவரை தன் கவுரவம் பரி போனதே என்று கத்திக் கொண்டிருந்த அவளின் தந்தை மகளின் நிலை கண்டு கதறி அழுதுவிட்டார்.

 தந்தை அழுவதைக் கண்ட கரிஷ்மாவினாலும் கண்கள் கலங்குவதை தடுக்க இயலவில்லை."வாங்க டாடி போயிரலாம் இனிமேல் உங்களுக்கு எந்த வேலயும் இல்ல. நல்லவேளை மாப்பிள்ளை இப்ப ஓடி போனான். இதுவே மேரேஜ் முடிஞ்சு போயிருந்தா அப்படின்னு நெனச்சுக்கிட்டு பேசாம வாங்க போலாம்".. அவளின் நிதானமான பேச்சு அங்கிருந்த யாரை தாக்கியதோ ஆருஷை ரொம்பவே தாக்கியது..

தந்தையின் கை பிடித்து இழுத்து கொண்டிருந்த கரிஷ்மாவின் முன் வந்து"என் தம்பி பண்ணது தப்பு தா அதுக்காக அவன் சார்பா எங்கள மன்னிச்சிரு.. இது அனுதாபத்துலயோ அவசரத்துலயோ எடுத்து முடிவு இல்ல.திடிர்னு தோணுச்சு அதான் கேக்குறேன்.. என்ன கல்யாணம் பண்ணிக்க உனக்கு சம்மதமா..நல்லா யோசிச்சு சொல்லு".. ஆருஷ் அவள் கண்களை பார்த்து கொண்டே ஆழ குரலில் கேட்க அவளோ எதையுமே நினையாமல் எனக்கு சம்மதம் என்றாள்.

எல்லோருக்குமே அதிர்ச்சி தான் ஆனாலும் இந்த இடத்தில் அதை வெளிகாட்ட நேரமில்லை.கரிஷ்மாவின் தந்தை ஏதோ சொல்ல வர அவரை தன் பார்வையால் அடக்கியவள் மணமேடையில் சென்று அமர்ந்து கொண்டாள்.நதின் கரிஷ்மா கல்யாணத்துக்கு வந்திருந்த கூட்டம் ஆருஷ் கரிஷ்மா கழுத்தில் மங்கள நாண் சூடுவதை பார்த்து அர்ச்சத்தை தூவி அவலாக இவர்கள் கதை பேசி வெளியே சிரித்த முகமாய் வாழ்த்தி சென்றது. அதன் பிறகு சலசலப்பு ஓய்ந்து அனைவரும் வீட்டிற்கு செல்ல மீண்டும் நதினை தேடும் பணி மும்முரமானது.இன்று நதினின் இருபத்தேழாவது பிறந்தநாள்.

சுகன்யாவின் மனம் ஏன் அவன் இவ்வாறு செய்தான் எதனால் என்னை அவமானப்படுத்தினான் எல்லாமே போய் தொலைகிறது.. எங்கே என் மகன் ஐயோ அவனின் பிறந்தநாள் வேறு இன்று காணாமல் போனவன் கிடைக்காமல் போய் விடுவானோ.. என் நதின் இல்லாமல் நான் என்ன செய்வேன் ஆண்டவா கபாடறியாத தாய் மனம் கதறியது.நதின் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று தேடி பார்த்தும் பலனில்லை. வருணையும் காணவில்லை.

வருணின் நண்பர்களிடம் வருண் எங்கேயென்று வினவினால் ஒவ்வொருவனும் ஒவ்வொரு விதத்தில் அங்கே இங்கே என அலைக்கழிக்க ஒரே ஒருவன் மட்டும் வருண் கடலுக்குள் சென்றான் உடன் அவன் நண்பனும் சென்றான் என்பதை கூறினான். இந்த தகவல் நம்பும்படி இருந்தது. உடனே தன் ஆட்களுக்கு உத்தரவிட்ட ஆருஷ் அவனும் அவர்களுடன் போர்டில் ஏறி கடலுக்குள் சென்றான்.

அன்று பௌர்ணமி கடலின் நீர் மட்டம் உயரும் நாள்..தெளிந்த ஆகாயத்தில் பல ஆயிரம் நதிச்சத்திரங்கள் மின்னி சிரிக்க அதனூடே தனது ட்ரேட் மார்க் புன்னகையுடன் நிலவு மகள் ஒய்யாரமாக பவனி வந்தாள்.சுற்றிலும் சலசலக்கும் தண்ணீரும் உடலை ஊடுருவும் குளிருடன் காற்றும் வீச கப்பலின் கைப்பிடியில் நீட்டி படுத்து கொண்டு வெண்ணிலவை விழிகளில் நிரப்பி கொண்டிருந்தான் நதின்.திருமணம் கண்டிப்பாக நின்று விடும். அம்மா அழுவார்களா? அப்பா என் மேல் கோபமாக இருப்பாரா? ஆருஷ் என்ன செய்வான்? எனக்காக சண்டை இழுக்கும் கும்பலுடன் மல்லுக்கு நிற்பான். அந்த பெண் கரிஷ்மா அழுவாளா? அவமானத்தில் துடிப்பாளா? அவளிடமாவது கூறிவிட்டு வந்திருக்கலாம் ஆனால்..

ஆனால் இயலவில்லை.நடு நிசி..திருமண ஆடையையே வெறித்து பார்த்து கொண்டிருந்த நதினிற்கு இன்னும் மனம் அமைதியடைந்த பாடில்லை. எதையோ இழக்க போவதை போல் மனதை பிடிங்கி ரத்தம் சொட்ட சொட்ட பிய்த்து எரிவதை போல ஒரு மாயை. வலியை தாங்கிட இயலாமல் நெஞ்சில் கையை வைத்து கொண்டான். அதிகமாக வேர்த்து கொட்டியது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி கொண்டது.கால்கள் நடுங்க முதுகு தண்டில் ஜிவ்வென்ற உணர்வு அப்படியே நின்றான் விழிவிரிய.. அவன் கண்களுக்கு முன்னே இருந்த இடம் மறைந்து கொண்ட கோலம் கலைந்து நடுக்கடலில் நின்று கொண்டிருந்தான்.

"என்னாயிற்று கயவனே? கலங்கி துடிப்பதின் காரணம் நான் அறியலாமோ? அன்றி நான் எண்ணும் காரணத்தை தங்களிடம் மொழியலாமோ..தங்களின் துடிப்பின் ரகசியம் தாம் எனக்கிழைத்த துரோகம். உயிராய் நேசித்தவளை நூறாண்டாய் கல்லாய் சமைய செய்த குற்றவுணர்ச்சி..மச்சக்கன்னிகை இவளின் மயிர் கூட காற்றில் அலைபாயாமல் ஒரே இடத்தில் உயிருள்ள கல்லாய் சமைந்திருக்க கொடுத்த சாபம்..

இது தானோ தங்களின் துடிப்பின் ரகசியம்.. அதான் என்னை கல்லாகி காலம் காலமாய் கண்ணீர் சுமக்க விட்டு விட்டு வேறொரு கன்னிகையை மணக்க சித்தம் கொண்டீரோ தயாள பிரபுவே.. செல் அகம்பாவியே செல். என்னை போல் உன்னை நேசிக்கவும் எவளாலும் இயலாது. என்னை போல் உன்னை வஞ்சிக்கவும் ஒருவராலும் முடியாது.. என் கண்ணீருக்கு என்றேனும் ஒருநாள் நீ பதில் சொல்லியே தீர வேண்டும்.. இந்த கதையின் நாயகன் என்று உனை எண்ணினாயோ நீ நாயகன் அல்ல நீ வில்லனாவாய் கொடியவனே கொடும் வில்லனாவாய்"

என்றுமே அதிகார உரிமையுடன் ஒலிரும் குரல் இன்று விரக்தியின் உச்சத்தில் தத்தளிக்க மீண்டும் காட்சி மறைந்து விடுதி அறையில் இருந்தான் நிதின். தலை சுற்றி மயங்கி விழுந்தவனின் முகத்தில் யாரோ தண்ணீர் தெளிக்க அது வருண் தான்.. "இன்னா மச்சி ஒரு தம்மு போட்டு வரரதுக்குள்ள மயக்கடிச்சு கெடக்க..இன்னாடா கேரா இருக்கா..சோடா கொண்டாரா சொல்லவா'

"இல்லடா மச்சி.. நா சொன்னா செய்வியா கேள்வியே கேக்காம"

"இன்னாடா லூசு மாறி பேசிட்டு கெடக்க.. இன்னா மேட்டரு"

"நீ என் மேல சத்தியம் பண்ணு. ஏன் எதுக்குன்னு கேக்காம நா சொல்றத செய்யணும்"

"இன்னாடா சத்தியம் கித்தியம்னு பேஜார் பண்ணிட்டு இருக்க.. உன் பேச்சே சரியில்ல நதினு"

"இப்போ நீ சத்தியம் பண்ணலன்னா இது தான் நா உன்கூட பேசுற கடைசி நாளா இருக்கும் சத்தியம் பண்ணு வருணு"

வருண் திகைத்து பதறி நதின் கரத்தில் அடித்து அவன் என்ன சொன்னாலும் செய்வதாக சாத்தியம் செய்து தர"மச்சி இந்த கல்யாணம் நடக்க கூடாது.. இங்க ஒரு நிமிசம் கூட இருக்க வேணா.. வா போயிரலாம்.என்ன கடலுக்கு கூட்டிட்டு போடா"

"இன்னாடா அப்டியே வெச்சேன்னா..செவுலு திரும்பிரும்.. பைத்தியம் மாறி பேசிட்டு இருக்க பாவம்டா உன் அம்மா அது எவ்ளோ சந்தோசமா இந்த கல்யாணத்த அரேஞ் பண்ணுச்சு எல்லாம் உனக்கொசுரம் தானே..நதினு நீ ஒன்னும் கொலம்பிக்காத டைம் இருக்கு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடு எல்லாம் சரியாயிடும்"

"மச்சி நீ சத்தியம் பண்ணிருக்க.. அத மீற மாட்டன்னு தெரியும்.. நீ வரியோ இல்லயோ நா போறேன்"என்றவன் ட்ரெஸிங் டேபிள் கண்ணாடியில் குளிக்கும் சோப்பால் எதையோ கிறுக்கி விட்டு சுகன்யாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறி ஒரு சொடுக்கில் மறைந்து போனான். வருண் பதறி நதினை தேடி ஏதோ பொறி தட்ட வேகமாக கிளம்பி தன்னுடைய கப்பலின் அருகே வந்து பார்க்க அங்கே நின்று கொண்டிருந்தான் நதின்.

"மச்சி கப்பல எடு"

"டேய் லூசு மயிறு மாறி பண்ணாத.. இன்னைக்கு பௌர்ணமி மச்சி அலை ஜாஸ்தியா இருக்கும் அங்க உன்ன காணோம்னு பிரச்சன ஆயிரும் மச்சி வாடா போலாம்"அவனை ஏளனமாக பார்த்த நதின் என்ன செய்தேனோ அடுத்த வினாடி இருவருமே கப்பலில் இருந்தனர். வருணின் கரங்கள் தானாக கப்பலை இயக்கியது.எதுவும் செய்ய இயலாத நிலையில் எல்லாமே கைமீறி விட்டதாக தோன்றியது வருணிற்கு.

ஆனாலும் ஒரு உள்ளுணர்வு இந்த பயணம் இவர்கள் தலையெழுத்தை மாற்ற போவதாக.எங்கே செல்கிறோம் என தெரியாமல் இலக்கே இல்லாமல் கப்பலை செலுத்தி கொண்டிருந்தான் வருண். வெளியே படுத்து கொண்டு வானத்தை பார்க்கும் நதினை மிதிக்கலாமா என்ற தோன்றியது. ஆனால் தோன்றிய வேகத்தில் மறைந்தது. இன்னும் எவ்வளவு நேரம் இவனும் ஏதும் கூறிய பாடில்லை என யோசித்து கொண்டிருக்கும் வேளை நதினின் செவிகளுக்கு அந்த ஆழி பேசுவது போல் தோன்றியது..

அதரா அதரா என்று ஆழியின் ஆழத்தில் இருந்து பல குரல்கள்.. அதில் ஒரு குரல் அதரா எனும் சங்கீத குரல் படக்கென்று எழுந்த நதின் எதையும் யோசியாமல் கடலில் குதித்தான். துப்புக்கடீர் என்ற சத்தம் கேட்டு ஓடி வந்த வருண் நதின் தான் குதித்தான் என உறுதி செய்து கொண்டு மச்சி என கூவி கொண்டே குதித்தான். நீருக்கடியில் கும்மிருட்டில் நதினை தேடி கலைத்து மூச்சு திணறி நண்பனை இழந்து விட்டோம் இனி உயிர் வாழ ஒன்றுமில்லை என முடிவுடன் மயங்கி சரிய அவனை ஒரு சக்தி இழுத்து சென்றது.அதே சக்தி தான் நதினையும் இழுத்து சென்று இருவரையும் ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்க்க அங்கே அதரா அதரா என்ற குரல் மட்டுமே கேட்டது..

தொடரும்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்