அதரா 6-9


அதரா - 6



'ஆருஷ் என்னடா அவன் காண போய் ரெண்டு நாளாச்சு இன்னும் ஒரு தகவலும் இல்ல அவன் எங்க போனான் என்ன ஆனான் ஒண்ணுமே தெரில அவன் கூட வருணும் எங்க போய் தொலைஞ்சான்னு தெரில ஐயோ கடவுளே என் புள்ளைக்கு என்னாச்சு அவனுக்கு இருபத்தேழு வயசுல கண்டம் இருக்குன்னு தெரிஞ்சும் அத பெருசா எடுத்துக்காம நா தா இருந்தேனா அதுக்கு தா இப்ப அனுபவிக்குறேன் போல..நதின் அம்மா உன்ன சரியா பாத்துகல அதான் என்ன விட்டு போயீடியா திரும்ப வந்துரு பேபி திரும்ப மம்மி கிட்ட வந்துரு டா."

சுகன்யாவின் அழுகை குரல் அந்த பெரிய வீடு முழுக்க ஒலித்தது.இந்த இரண்டு நாட்களாக அவர் அழுந்த முகமும் அரற்றும் குரலும் அவர் அவராக இல்லை.ஆருஷ் தம்பியை கண்டு பிடிக்க பல முயற்சிகள் செய்தும் அனைத்தும் பலனில்லாமல் போனது.இறுதியாக வருணுடன் மீன் பிடிக்கும் சக மீனவர்களில் சிலர் ஆழ கடலின் மத்தியில் சிதிலமடைந்த கப்பல் ஒன்றை கண்டதாக காவல்துறையினரிடம் தெரிவிக்க நதினை காணாமல் தேடிக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக அந்த கப்பல் இருந்த இடத்திற்கு இன்னொரு கப்பலின் மூலம் சென்றனர்.

 அவர்களுடன் ஆருஷ் சென்றான். கப்பலின் ஏற்கனவே தேடி பார்த்த மீனவர்கள் கூறியதைப் போல உள்ளே மனிதர்கள் இருப்பதற்கான அறிகுறி இல்லை. ஆனால் அங்கிருந்த சில பொருட்கள் அவை நதின் உடையவை என்றும் வருண் உடையவை என்றும் ஆருஷிற்கு தெரிந்தது. "சார் இந்த பர்ஸ் என் தம்பியோட தா.. இது அவன் ஃப்ரன்ட் வருணோட அவங்க ரெண்டு பேரோட திங்க்ஸ்ஸும் இங்க இருக்கு.. ஆனா அவங்க எங்க"

"மிஸ்டர் ஆருஷ் நாங்களும் அத தா கண்டுபுடிக்க ட்ரை பண்றோம் கப்பல நடுக்கடல்ல நிறுத்திட்டு அவங்க எங்கயும் போயிருக்க முடியாது..கப்பல் வேற டேமேஜ் ஆயி பாதி முழ்குன ஸ்டேஜ்ல இருக்கு.. இவ்வளவு தூரம் எந்த மீனவர்களும் வரக்கூடாதுன்னு நாங்க அலர்ட் பண்ணி இருந்தோம் அப்படியிருக்க எதுக்காக உங்க தம்பியும் அவரோட ஃப்ரண்டு மட்டும் இங்க வரணும்.."

" சார் அவன் காணா போன அன்னைக்கே நான் எல்லா விவரத்தயும் உங்ககிட்ட சொல்லிட்டேன்.. நல்லா தா இருந்தான் மேரேஜுக்கு ஓகே சொன்னான் 
 திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல எழுதி வச்சுட்டு காணாம போயிட்டான். ப்ளீஸ் எப்படியாச்சும் என் தம்பிய கண்டு பிடிச்சு கொடுங்க. "

முத்துக் குளிப்பவர்கள் இருபது பேர் அங்கிருந்து ஆள கடலில் குதித்து முடிந்தவரை தேடிப் பார்த்தார்கள். எவ்வளவு தேடியும் அந்த கடலையை சல்லடை போட்டும் நதின் வருணை கண்டுபிடிக்க முடியவில்லை."ஆருஷ் நாங்க முடிஞ்ச அளவுக்கு தேடி பார்த்துட்டோம் ஆனா உங்க தம்பியயும் அவரோட ஃப்ரண்ட்டயும் கண்டு பிடிக்க முடியல இது என்ன காடா சார் மோப்ப நாய வெச்சு கண்டுபுடிக்க இது கடல் சார்.. இருந்தும் பீல் பண்ணாதீங்க இப்போ அவங்களோட திங்ஸ் கெடச்சிருக்கு இத வெச்சு நாம வேற ஏங்கல்ல யோசிச்சு பாப்போம் நதின் ஒரு பாப்புலர் பிசினஸ்மேன் அவர யாராச்சும் ஃபொல்லொவ் பண்ணி அவங்க இந்த மாறி தனியான இடதுக்கு வந்ததும் ஏன் கடத்திருக்க கூடாது"

"ஐயோ சார்"

"பதறாதீங்க ஆருஷ் உங்க பிரதருக்கு ஒன்னும் ஆயிருக்காது இது ஜஸ்ட் ஒரு டவுட்தா கண்டு புடிச்சிரலாம்.. வாங்க"காவல் துறை அந்த சிதிலமடைந்த கப்பலை கரைக்கு கொண்டு வர ஆவண செய்து விட்டு திரும்பியது. ஆருஷ் வீட்டுக்கு செல்லும் போதே சுகன்யா புலம்பி கொண்டிருந்தார். இந்த இரண்டு நாளில் அவர் கண்ணீரும் கம்பலையுமாக காட்சி தருவதும் அவரை மகேந்திரன் தேற்றுவதும் இப்படியே மணிகள் கடந்து கொண்டிருந்தது.

ஆருஷை கண்டதும்"ஆருஷ் போன விஷயம் என்னாச்சி அவனுங்கள பத்தி ஏதாச்சும் தெரிஞ்சிதா"

"இல்ல டாட் வருணோட கப்பல் யாருமே போவாத ஆழமான இடத்துகிட்ட இருந்துச்சு அதுல நதின் பர்ஸ் வருணோட ஃபோன் எல்லாமே இருந்துச்சு.. ஆனா அவனுங்கள காணோம் இன்ஸ்பெக்டர் நம்பிக்கயா சொல்றாரு கண்டு புடிச்சிரலாம்னு சோ வி டோன்ட் லாஸ் அவர் ஹோப் டாட்"

"ம்ம்ம்.. நீ போயி கரிஷ்மாவ பாரு கல்யாணம் முடிஞ்சதுல இருந்து அந்த பொண்ணு கிட்ட நீ பேசவே இல்ல போ போயி பேசு"கல்யாணம் முடிந்த அன்றே அனுஜனை தேடும் பணி தொடங்கி விட எங்கிருந்து கரிஷ்மாவுடன் பேசுவது.. இப்பொழுது தான் அப்படி ஒருத்தி இருப்பதே நினைப்பு வர அறைக்கு சென்றான். அங்கே நடக்கும் பிரச்சனைக்கும் தனக்கும் எந்த வித தொடர்புமே இல்லாமல் இன்ஸ்டாகிராம் பார்த்து கொண்டு இருந்தாள் கரிஷ்மா.

ஆருஷை கண்டதும் ஒன்றும் செய்யவில்லை மீண்டும் கைபேசியில் கவனத்தை செலுத்த தொடங்கி விட இவ என்ன இப்டி இருக்கா.. நதின கட்டிக்க இருந்தவ விதியால என்ன கல்யாணம் பண்ற நிலைமயாச்சு. இப்போ ஆசப்பட்டவனயும் ஆள காணல ஆனா எதயுமே கண்டுக்காம எப்டி இப்படி கல்லுளி மங்கி மாறி இருக்கா.. ஆருஷ் அவனுக்குள் பேசிக்கொண்டே அவளை பார்த்து கொண்டிருக்க

நிமிர்ந்து பார்த்தவள்"இப்ப எதுக்கு என் மூஞ்சிய பாத்துட்டு இருக்கீங்க ஆருஷ்'..

" இல்ல உன்கிட்ட ஒன்னு கேட்கணும் நீ தப்பா நினைச்சுட்டாலும் எனக்கு பிரச்சன இல்ல.. ஆமா நீ என்னத்துக்கு என்ன கல்யாணம் பண்ண.. நா சொன்னதுக்காகவா
இல்ல வேற வழி இல்லன்னா?"

" இப்போ எதுக்கு உங்களுக்கு இந்த கேள்வி நான் தெரிஞ்சுக்கலாமா.."

" நீ கல்யாணம் பண்ணனும்னு நெனச்சது என்னோட தம்பிய. ஆனா லாஸ் மினிட்ஸ்ல அந்த நாய் எங்கயோ ஓடிப் போயிடுச்சு. அதனால வேற வழி இல்லாம சிட்சுவேஷன் இப்படி ஏதாவது ஒரு காரணத்துக்காக தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டியா.."

"உங்களுக்கு ஒரு உண்மய சொல்லட்டுமா.. உங்க தம்பிய பாத்தோன புடிச்சது ஆனா கல்யாணம்னு வரும்போது ஏதோ ஒரு டிஸ்டர்பன்ஸ் எனக்குள்ள இருந்துச்சு.. நேரம் நெருங்க நெருங்க இந்த கல்யாணம் எப்படியாச்சும் நின்னுராதான்னு நா வேண்டாத கடவுளே இல்ல.. என்னோட வேண்டுதல் ஏதோ ஒரு கடவுளுக்குக் கேட்ருச்சு போல அதான் இந்த கல்யாணம் ஸ்டாப் ஆச்சு.. உங்க தம்பி மேல எனக்கு இருந்தது ஜஸ்ட் க்ரஸ்னு புரிஞ்சிருச்சு போதுமா வெளக்கம்"

"போதும் உனக்கும் ஒரு உண்மைய சொல்லட்டா"அவள் அவன் முகம் நோக்கி கொண்டிருக்க

"என் தம்பிய கட்டிக்க போற பொண்ணுன்னு உன்ன பாத்தேனே தவிர தப்பான தாட்ல உன்ன பாக்கல ஆனா அவன் ஓடிட்டானு தெரிஞ்சதும் உன் மூஞ்சில ஒரு ஹாப்பினஸ் வந்துச்சு அப்போவே தெரிஞ்சிருச்சு உனக்கும் இந்த கல்யாணத்துல இன்டெரெஸ்ட் இல்லன்னு.. ஆனா உன்ன அப்டியே போயிருன்னு விட்ற முடில.. சிட்சுவேஷன் மேரேஜ் தா ஆனா உன்ன புடிச்சு தான் கட்டிக்கிட்டேன்.. இப்ப இது சொல்றது அவசியமானு தெரியல.. சொல்லணும்னு தோணுச்சு. உனக்கும் என்ன புடிக்கும் கண்டிப்பா அதுவர என் தம்பிய தேடி கண்டுபுடிக்கணும் பிசினஸ் ஒரு சைட் இருக்கு சோ நா பிஸியா தா இருப்பேன்.. அதனால உன்ன கம்பல் பண்ண மாட்டேன் ஆனா ரொம்ப டைம் எடுத்துக்காத ம்ம்ம்"

அவன் தான் சொல்லவந்ததை அழகாக ரத்தினச் சுருக்கமாக சொல்லிவிட்டு தன்பாட்டில் துண்டை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் சென்று விட்டான்.. என்னடா இவன் சிவனேனு உட்கார்ந்திருந்த என்கிட்ட என்னென்னமோ சொன்னான் இவன் பாட்டுக்கு துண்ட எடுத்துட்டு குளிக்க போய்ட்டான்.. நதின் மேல நமக்கு இன்ட்ரஸ்ட் இல்ல ஆனா இவன் மேல இன்ட்ரஸ்ட் வராதுன்னு சொல்றத்துக்கும் இல்ல அவன் சொன்ன மாதிரி டைம் எடுத்து யோசிச்சு பாப்போம் என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு அமர்ந்து விட்டாள் கரிஷ்மா..

" அனைவரும் பார்க்க என்னை தங்களின் தோள் மேல் தூக்கி வந்து இந்த கல்லறையில் அடைத்தாயிற்று அல்லவா"

"மச்சி'

"இன்னும் தங்களுக்கு திருப்தி ஏற்படவில்லையா"

"மச்சி டேய்"
"
"தாங்கள் இந்த அதராவின் வேந்தனாக இருந்தும் தங்களின் குடிகளை இப்படித்தான் நடத்துவீரோ.. நான் தான் முதல் பெண்ணா இல்லை இந்த கோட்டை முழுவதும் பலவந்தபடுத்தி இழுத்து வந்த காரிகைகளின் கதறல் கேட்டிருக்கிறதா இதற்கு முன்"அவள் கேள்வியின் வீரியன் தாளாமல் அவளை பிடித்து தள்ளிய நொடி

"மச்சி நதின்னு".... விழித்துக்கொண்டே கனவு கண்டு கொண்டிருந்த நதின்

"ஹான் இன்னா மச்சி"

"இன்னாவா முண்டம் இன்னாடா கண்ண தொறந்து வெச்சிகினே கனா காண்ட்ரியா..எவ்ளோ நேரம் தான்டா கூப்ட்டுனே இருக்குறது"

"இல்லடா இங்க வந்ததுல இருந்தே எனக்கு என்னமோ ஆச்சு மச்சி பிட்டு பிட்டா ஏதேதோ சீன்லாம் ஞாபகம் வருது.. அதுல இருக்குறது நா தா..ஆனா ரொம்ப திமிரு புடிச்சவனா இருக்கேன். கடல் கன்னி இருந்தால அவள இட்டாந்து வந்து இந்த கோட்டையில் அடச்சு பெட்ல தள்ளி"

"முடிச்சிட்டியா... செம்ம மச்சி நீ அப்பவே வேற லெவல் தா நீங்க"

"ப்ச் தெரிலடா."

"தெரிலயா அவசரப்பட்டு பாராடிட்டேன்"

"மூடு நீயு..எதுக்கு இங்க வந்தோம் எப்டி நம்ம ஒலகத்துக்கு போவ போறோம் எதுவுமே தெரில.. ஆனா ஒன்னு மச்சி நா போன ஜென்மத்துல இங்க தா பொறந்துருக்கேன்.. அப்போ வர்ணிகாவ என்னமோ செஞ்சிருக்கேன்.. அவளால நடக்க முடியும் ஆனா அவள நடக்க விடாம பண்ணிருக்கேன்..நூறு வருஷம் கழிச்சு நா திரும்ப பொறந்து வந்துருக்கேன் ஆனா அவ ஏன் கல்லா இருந்தா.. இங்க இருக்குற எல்லாமே எல்லோருமே நூறு வருசத்துல அப்டேட்டா இருகாங்க ஆனா அவ மட்டும் கல்லா இருக்கா.. ஏன் எதுனால எனக்கு ஒன்னும் புரியல.. வஜ்ரா கிட்ட கேக்கலாம் கேட்டாலும் அவன் சொல்ல மாட்டான்.. சீக்கிரமா இந்த பிரச்சனய செட்டில் பண்ணிட்டு இங்கேருந்து போகனும் அம்மா அழுந்துட்டு இருப்பாங்க என்ன காணோம்னு எல்லோரும் பதறுவாங்க.. எனகொசரம் நீயும் இங்கன வந்து தொக்கா மாட்டிக்கின"

"உன் கேள்வி சரிதான் மச்சி..தொக்கா என்ன எதுக்குடா இங்க இட்டாந்துச்சிங்க.. நீ அதரா பரம்பரையா இருக்கலாம் இல்ல அடுத்த அதராவாவே இருக்கலாம் ஆனா என்ன எதுக்கு தூக்குனுச்சிங்க சொல்லு"

"இன்னா எழவோ நீ பேஜார் ஆவாத..மொத இந்த எடத்த சுத்தி பாப்போம் ஏதாச்சும் க்ளூ இருக்கானு".. கோட்டை உள்ளே பணியாட்கள் அங்கும் இங்குமாக நடைபோட இவர்கள் இருவரை எங்கு பார்த்தாலும் செய்யும் வேலையை விட்டு விட்டு அப்படியே மண்டியிட்டு அமர்ந்து விடுகிறார்கள். அதைக் கண்ட நதினுக்கு சங்கோஜமாக இருந்தது." இன்னா மச்சி இது பொசுக்கு பொசுக்குன்னு கால்ல விழறாங்க"

" நா உன் கூட தான வரேன் எனக்கு மட்டும் எப்படிடா தெரியும்.."இருவரும் நடக்கிறார்கள் நடக்கிறார்கள் கோட்டை முடிந்த பாடில்லை கால் அசந்து போனது தான் மிச்சம்.. "ஐயோ எப்பா இதுக்கு மேல என்னால முடியாதுடா சாமி நீ அதராவோ ஆட்டு குட்டியோ உன் பூர்விகத்த நீயே கண்டு புடி என்ன வுட்ரு மச்சி நா இப்டி ஓரமா படுத்துக்குறேன் அம்மாடி"கால்கள் இரண்டும் நடுங்க வியர்த்து விறுவிறுத்த வருண் அருகே இருந்த அறையில் படுத்து விட தலையிலடித்து கொண்டே நதின் நடக்கலானான்.

அந்த மாய கோட்டை அவன் நடக்க நடக்க வளர்ந்து கொண்டே போனது. கால்கள் வலித்தது ஆனாலும் அந்த வலியிலும் ஒரு சுகத்தை கண்டான். இதோ இந்த அறையில் நங்கை ஒருத்தியின் கரத்தை முதுகு பின்னால் முறுக்கி அவள் திமிறலை ரசிக்கிறான்.அங்கே ஒருத்தி அவன் மீது வீசி எரியும் பொருட்களை மலர்களாக மாற்றி அவள் மீதே பொழிய செய்கிறான்.

குளித்து முடித்து ஈர வஸ்திரத்துடன் குளத்தின் படிக்கட்டில் ஏறும் ஒருத்தி கால் வழுக்கி மீண்டும் தண்ணீரில் விழ இருக்க அவள் இடை இறுக்கி தன்னோடு இணைத்து அவள் மேனி தந்த வாசமதில் தொலைந்து நிற்கிறான். மருதாணி பூசாமல் சிவந்த பாதங்கள் தரை அதிர ஒருத்தி நடக்க அவள் பின்னழகின் அசைவை விழியிரண்டில் அடக்கி கொள்கிறான்.

அந்த ஒருத்தி வேறு யாரும் அல்ல அவன் இதயத்தை கொள்ளையடித்த வர்ணிகாவே.. அந்த ஒருவன் அதரநதின்.ஏதேதோ காட்சிகள் மாய புகையாக தோன்றி அவனை அலைக்கழிக்க தலை விண்ணென்று தெறிக்க இதற்கு மேலும் நடக்க முடியாமல் கால்கள் தடுமாற அப்படியே அமர்ந்து விட்டான் தரையில்..அந்த கோட்டை சுவரெங்கிலும் தீட்டிய சித்திரங்கள் அதரா வம்ச வரலாற்றை பறைசாற்ற அதனை கண்டு இன்னும் தலை பாரமாகியது.

இங்கிருந்தால் விடை காண முடியாதென ஒரே சொடுக்கில் மறைந்து கடல் கரையில் நின்றான். இரவு கவிழ தொடங்கிய நேரம் போலும் நம் உலகத்தை போல் இல்லாமல் அடர் பச்சை நிறம் அதரா உலகத்தை மூழ்கடித்து கொண்டிருந்தது. கடற்கரை மணலில் சம்மணமிட்டு அமர்ந்தவன் கண்களை இறுக்க மூடி மனதை ஒருநிலை படுத்தி தன்னிலை மறந்து தான் யாரென அறிய தன்னையே தேடி கொண்டிருந்தான் ஒவ்வொரு அணுக்களிலும்.அப்படி தேடிய அணுக்களில் அவனுக்கு கிடைத்த பதில் யார் அதரா என்பது அல்ல..அவன் அணுக்களில் எல்லாம் நிறைந்து இருந்த வர்ணிகா நினைவுகள் அவன் சிந்தையை மயக்கி அவனை நூறாண்டுகளுக்கு முன்பு அழைத்து சென்றது..
..…................
கடவுள் பூலோகத்தை படைத்து அதில் நடக்கும் நாசக்கேடுகளால் மனம் வெம்பி மக்கள் சந்தோசத்தை மட்டுமே காண இன்னொரு உலகத்தை படைத்தார்.அந்த உலகம் பூலோகத்தை விட அழகாக கண்களுக்கு குளிர்ச்சியாக இயற்கைக்கு வித்தியாசமாக காட்சியளித்தது.முதலில் உலகத்தை தோற்றுவித்த கடவுள் உயிரினங்கள் மனிதர்கள் தாவரங்கள் கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்தையும் உண்டாக்கினார்.அந்த உலகத்தின் சக்திகள் யாவும் கண் முழி அளவே உள்ள மாய கண்ணாடியின் உள்ளே பாதுகாப்பாக அடைத்து வைத்தார் கடவுள். அதை ஆள அதைவிட காக்க அவர் படைத்த மனிதர்களில் அவர் மனம் கவர்ந்த ஒருவனை தேர்ந்தெடுத்து அவனுக்கு அனைத்து மாய மந்திர சித்திகளை கொடுத்து புஜ பலத்திலும் புத்தி கூர்மையிலும் அவனை வெல்ல இயலா வண்ணம் ஆசீர்வாதம் செய்தார். கடவுள் அந்த மனிதனுக்கு வைத்த பெயர் அதரா..தன்னில் விழும் அனைத்தையும் தனதாக்கும் தீ போல அனைத்து சக்திகளையும் தன்னுள் அடக்கியவனுக்கு இந்த பெயர் அமோக பொருத்தம்.

அதரா எனும் பெயர் கொண்ட வம்சத்தின் ஆட்சியால் அந்த உலகம் அதரலோகமாக பெயர் பெற்றது. அந்த லோகத்தில் ஜீவராசிகள் யாவும் மனநிறைவோடு மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருந்தது. நல்லது ஒன்று இருந்தால் கெட்டது இல்லாமலா.. அந்த உலகத்திற்கும் கேடு காலம் வந்தது இன்னோரு உலகத்தின் ஆட்களின் மூலம்.அவைகள் ஏலியன்கள். அதரலோகத்தின் சக்தியும் இயக்கமும் அவர்கள் கரத்தில் கிடைத்தால் இந்த லோகத்தையும் அவர்களே ஆளவும் அதன் சக்தி கொண்டு அண்ட சராசரங்களையும் கட்டு படுத்த முடியுமென்பதும் எப்படியோ அறிந்து கொண்ட அவர்கள் அந்த பொக்கிஷத்தை கொள்ளையடிக்க நேரம் பார்த்து கொண்டிருந்தனர்.

ஆனால் அதரலோகத்தை ஆண்ட வாரிசுகளின் பராக்கிரமத்தால் அவர்கள் கனவு தவிடு பொடியாகியது. ஒவ்வொரு நூறாண்டுகளுக்கு ஒரு முறை அதரா வாரிசுகள் தங்கள் உயிரை அந்த பொக்கிஷத்தின் முன் தியாகம் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்தால் அந்த பொக்கிஷத்தின் பலம் பெருகி அது மிக சக்தி வாய்ந்ததாக மாறும். அதரலோகத்தின் பாதுகாப்பும் மேலும் வலுப்படும்.

எத்துணை எதிர்ப்புகள் வந்த போதிலும் அதரா வம்சத்தின் வீரர்கள் தங்கள் உயிரை தியாகம் செய்து அந்த பொக்கிஷத்தை பாதுகாத்து வந்தனர். அப்படிபட்ட வம்சத்தில் இதுவரை இருந்து வந்த அதராக்களை மிஞ்சிய வீரனாக தன் சுகம் பெரிதென எண்ணும் சுயநலக்காரனாக பிரஜைகள் மீது உயிரையே வைத்திருக்கும் மன்னனாக தனக்கு வேண்டியதை அடைய குறுக்கே நிற்கும் அனைத்தையும் தவிடு பொடியாக்கும் அதி புத்திசாலியான பிடிவாதகாரன் அதரநதின் தோன்றினான்.

முதுகை தொட்ட சிகை
 அகன்ற நெற்றி
புத்திசாலி தனத்தின் மொத்த அடையாளமாகிய கண்கள்
கூர் நாசி
வார்த்தைகளை கத்தியாக வீசும் இதழ்கள்
பரந்த தோள்
திண்ணென்ற புஜங்கள்
உறுதியான வயிறு
நீண்ட உறுதியான கால்கள் ஒரே சொடுக்கில் அதரலோகத்தையும் ஸ்தம்பிக்க செய்து விளையாடி ஒரு நொடி அந்நிலையை நீள செய்து பின் இயல்புக்கு கொண்டு வந்தான் அதரநதின்.

அதரா - 7


இளங்கன்று பயமறியாது என்பதை போல அதராவும் பயம் அறியாமல் அதர லோகத்தை தன் சுண்டு விரலால் ஆட்டி படைத்தான்.. ஒரே மகனான அவனை அடக்கி ஆள மனமில்லாமல் அவன் போக்கில் வளைந்து கொடுத்தனர் அவன் பெற்றோர். பிடிவாதமும் முரட்டு திமிரும் தவிர அவன் மிகவும் நல்லவன் அவனைப் போன்ற வீரன் அதரா வம்சத்தில் இதுவரை பிறந்ததில்லை. இனி பிறப்பானா என்றால் அது அதராவின் மகன் ஆவான்..

 சிறுவயதிலிருந்தே மாய மந்திரங்களின் உறைவிடமான அதரா அனைத்தையும் தன் கண்ணசைவில் வைத்திருந்தான். அவன் பார்வையில் தப்பி அதரலோகத்தில் காற்றும் நுழையாது.மக்களின் மனம் கவர்ந்த கள்வனும் அவனே. மக்களின் மன கவலைக்கான கேள்வியும் அவனே.. இளம் வயதிலேயே கல்வி கேள்விகளில் தேர்ந்தவன் இப்பொழுது வீரத்திலும் அந்த லோகத்தில் இணையில்லாமல் நிற்கிறான்.

சிறிய விழிகள் அதனுள் சுழலும் வெள்ளை பாவையில் நீல நிற விழிகளை பார்க்கையில் அந்த லோகத்தில் உள்ள அனைத்து பெண்களுமே சலனம் கொள்வர்..அதரனுக்கு உரிய வயது வந்ததும் ராஜ்ஜிய பொறுப்பை கொடுத்தனர் அவனது பெற்றோர்.அதுவரை அதரலோகத்தின் இளவரசனாக சுற்றி வந்தவன் அதரலோகத்தின் அரசனானான்.அதரா ஆட்சியை தன் பொறுப்பின் கீழ் ஏற்று கொண்டதும் அவன் செய்த முதல் காரியம் தன் குடிகளின் சிறு சிறு ஆசையையும் நிறைவேற்றி வைப்பதாகும்.அதை அவன் தனியாக செய்ததை விட அவனின் ஆருயிர் மாமாவுடன் சேர்ந்து செய்வதில் அலாதி இன்பம்.

அன்றும் வெளியே செல்ல கிளம்பி மாமனுக்கு ஆற்றின் ஓரம் காத்திருக்கையில் அங்கே தண்ணீர் எடுக்க வந்த கன்னியர் யாவரும் அதரா அங்கே நிற்பதை கண்டு சர்ரே பதற்றம் அடைந்தனர்..நாணமும் பயமும் சேர்ந்தே வர ஓடவும் முடியாமல் தண்ணீர் எடுக்கவும் இயலாமல் அவர்கள் தத்தளித்து நிற்கையில் அவர்களின் அவஸ்தை கண்டு தனக்குள் புன்னகைத்த அதரா" இப்படி ஓயாமல் என்னை கண்டு கொண்டிருந்தால் எனக்கு கண் பட்டு விடாதோ? காளையிவன் கண்ணடி 
பட்டு வீழ்ந்து விட்டால் கன்னியர் நீங்கள் யாவரும் ரசிப்பதற்கு ஆளில்லாமல் ஏங்கி வீங்கிட மாட்டீர்களோ"

அவனின் குறும்பு குரலின் கேலியில் விதிர்விதித்த கன்னியர் கூட்டம் மருண்டு விழிக்க இவனோ கண் மூடி திறப்பதற்குள் அவர்கள் முன் வந்து நின்று"நான் அழகன் என்று நன்கறிவேன் ஆனால் பேரழகன் என்று இப்பொழுது தான் அறிந்து கொண்டேன்"

கூட்டத்தில் ஒருவள்"எப்படி வேந்தே அவ்வாறு உரைக்கிறீர்கள்..பேரழகன் பட்டம் தங்களுக்கு எவ்வாறு பொருந்தும்.. அதுவும் இல்லாமல் தாங்கள் எதற்கு வைத்த கண் எடுக்காமல் என்னையே நோக்கி கொண்டிருக்கிறீர்"

"பொருந்தும் பெண்ணே பேரழகியான நீ என்னை மையல் பார்வை பார்க்கும் போது நானும் பேரழகனாக மாறிட மாட்டேனோ.. என்ன செய்வேன் கண்மணி உன்னை பார்க்கும் பொழுது வயிற்றுக்குள்ளிருந்து தொண்டை வரை படபடவென்று பட்டாம்பூச்சி பறக்கிறதே அது உன் கண்களுக்கு தெரிகிறதா?"

அந்த பெண்களுக்கு தெரியும் இவன் கூறுவது பொய் என்று ஆனால் கூறுபவன் அதரா ஆயிற்றே. அவன் பொய்யே கூறினாலும் சொல்லி முடித்த பின் அந்த வார்த்தையை கேட்ட செவிகளை எறும்புகள் மொய்காதோ..அந்த லோகத்தில் மனிதர்களில் ஆண்கள் ஒன்பது அடி உயரத்தில் இருப்பார்கள் ஸ்திரீகள் எட்டும் அதற்கு சற்று கீழேயும் இருப்பார்கள் ஆனால் அதரா மட்டும் பத்து அடியில் அம்சமாக இருப்பான். அதனாலே அந்த லோகத்தின் ஸ்திரிகளுக்கு அவன் மேல் ஒரு ஈர்ப்பு எப்பொழுதும் உண்டு.நாணம் கொண்ட அந்த தலை நிமிரவே முடியாத வண்ணம் தரை நோக்க அவர்களின் மனதில் மன்மத பானத்தை அடித்து அவர்கள் நாணம் கொள்ளும் அழகை குறும்பாக பார்த்துக் கொண்டிருந்தான் அந்தக் கள்வன்.

"என்ன பெண்ணே நீ என்ன வான்கோழி வம்சமா? விட்டால் தலையை மண்ணில் புதைத்து விடுவாய் போல நிமிர்ந்து என்னை பார் பெண்ணே.. உன் விழி அசைவின் வழிக்கான ஆவலாக காத்துக் கொண்டிருக்கும் என்னை ஏமாற்றி விடாதே இங்கே நிமிர்ந்து என்னைப் பார்.."நாணம் பிடிங்கி தின்ன அந்த பெண்ணும் நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கே அதரனை ஒரே தள்ளாக தள்ளி விட்டு மீசையை முறுக்கி உதட்டை வழித்து பறக்கும் முத்தம் ஒன்றை அந்த பெண்ணை நோக்கி தூக்கி வீசியவன் அதரனின் தாய்மாமன் வருனேந்திரன்.. அதரலோகத்தின் புதிய சேனாதிபதி.பாவம் அந்த பெண் அவளின் வெட்கம் போன இடம் தெரியவில்லை. வருணனுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத ராசி.. பெண்கள் சிரிப்பார்கள் பதிலுக்கு இவனும் அழகாக தான் சிரிப்பான் ஆனால் அந்த சிரிப்பே எமனாக வந்து அந்த நங்கை ஓடி விடுவாள்.

இப்பொழுதும் அதுவே நடந்தது. பின்னங்கால் பிடரியில் இடிபட ஓடிக் கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து அவளின் தோழிமார்களும் ஓட்டம் பிடிக்க அதரா வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்கலானான்."என்ன மாமா உன் மன்மத வித்தை யாவும் வீணாகி விட்டதோ.. உனக்கு உன் சிரிப்பே எமன். எதற்கய்யா அந்த பெண்ணிடம் குறுக்கே விழுந்து பல்லை காட்டினாய். பார் அவள் கொள்ளிவாய் பிசாசை பார்த்தவள் போல் ஓடியே விட்டாள். இனி ஒருவாரத்திற்கு வீட்டிலிருந்து வெளியே வர மாட்டாள். தேவையா உனக்கு இது ஐயோ ஐயோ"

"அதரா பார்த்து சிரி பற்களுக்கு வலிக்க போகிறது.ஒரு ஆண் காதல் பெருக்கெடுத்து அதை இதழ் வழி கொண்டு வந்து மயக்கும் புன்னகை சிந்தினால் பொறுக்காதே உங்களுக்கு. எனக்காக ஒரு பச்சை கிளி பிறக்காமலா இருப்பாள்.."

"ஒரு சிறு திருத்தம் பச்சை கிளி கிடையாது.. காய்ந்த கருவாட்டை போல் கருவாச்சி ஒருவள் வேண்டுமானால் உனக்காக காத்திருக்க சாத்தியம் உண்டு என்ன மாமா"

"வீணாக என் வாளுக்கு வேலை வைத்து விடாதே பொத்தி கொண்டு நட.. ஆமாம் எதற்கு இப்பொழுது கடலுக்குள் செல்ல வேண்டுமென்று என் உயிரை எடுக்கிறாய்..நீ என்ன சிறுவனா உன்னால் தனியாக கடலுக்குள் செல்ல இயலாதோ. கடல் மட்டும் என்ன கண்காணாத அண்டத்திலா உள்ளது. அதுவும் உன் ஆட்சியின் கீழ் அல்லவா உள்ளது..அங்கே செல்வதற்கு உனக்கு ஒரு துணையா..தனியாக சென்றால் கடற்கன்னி யாராவது அடித்து விடுவாளோ"

"என்ன மாமனே உடம்பு பரபரவென்று அரிகிறது போல நான் வேண்டுமானால் சொரிந்து விடவா"

"நீ ஏற்கனவே சொறிந்ததே இன்னும் ரத்த களரியாக உள்ளது. மேற்கொண்டு உன் கைவினையை காட்ட வேண்டாம்.. மருமகனே என் தமக்கை உனக்கு விவாகம் முடிக்க இந்த லோகம் முழுக்க பெண் தேடி கொண்டிருக்கிறாள்.. இந்த லோகத்தில் உள்ள சிற்றரசர்கள் அனைவரும் சக்கரவர்த்தி அதரநதினுக்கு பெண் கொடுக்க போட்டி போட்டு போர் தொடுப்பதாக கேள்வி. நீயானால் அதை பற்றி கண்டு கொள்பவனாக இல்லையே ஏன்.. மனதில் யாரையாவது எண்ணுகிறாயா.. எதுவாக இருந்தாலும் மாமனிடம் சொல்லடா. பெண் எவளாக இருந்தாலும் தட்டி தூக்கி விடலாம்"

"மங்குனி மாமா எந்நேரமும் நிழலை போல் என்னுடன் ஒட்டி கொண்டு திரிபவன் நீ..உனக்கு தெரியாமல் நான் இயற்கை உபாதை கூட கழிக்க சென்றது இல்லை.. இதில் எங்கே இதயத்தில் ஒருவளை நினைப்பது"

"நீ இயற்கை உபாதை கழிப்பதை நான் எங்கேயடா கண்டேன். அந்த கருமத்தை காணுவதா என் வேலை கிராதகா..எவளும் உன் மனதில் இல்லையென்றால் சற்று நேரத்திற்கு முன் ஆற்றங்கரையில் அந்த பெண்ணிடம் முப்பத்து இரண்டு பற்களையும் காட்டி நின்றாயே அதற்கு அர்த்தம் என்னவாம்" 

"மாமனே பல்லை காட்டினால் திரும்ப பல்லை காட்டுபவள் எனக்கு வேண்டாம். பல்லை காட்டினால் பல்லை உடைப்பவளே எனக்கு வேண்டும்.."

"அதற்கு நீ ஒருவளை உருவாக்க வேண்டும். இந்த அதரலோகத்தில் இருக்கும் பெண்கள் அனைவருமே உன் மேல் மயக்கம் கொண்டுள்ளனர். உன் காலில் முள் குத்தினாலும் உடனே வாளை எடுத்து அவர்கள் காலை வெட்டி எரிந்து விட்டு இருக்கும் ஒரு காலில் நொண்டி அடித்து கொண்டே வந்து தான் உன் காலில் குத்திய முல்லை எடுப்பார்கள். அப்படியிருக்கையில் பல்லை உடைக்கும் பெண்ணை எங்கே தேடுவது.. அதுமட்டுமில்லாமல் உனக்கு ஏனடா இந்த விபரீத ஆசை.."

"மாமனே நான் இதுவரையில் பெண்களிடம் விளையாடி உள்ளேன். ஆனால் வரம்பு மீறியதில்லை. அவர்களின் அழகிய நாணம் கொண்ட மதிமுகம் காண அத்துணை ஆசை எனக்கு.. அதற்காக பார்ப்பவள் எல்லாம் என் காதலியாகிட முடியுமா..அம்மா பெண் பார்ப்பதாக என்னிடம் கூறினார்கள் சரி பாருங்கள் என்றேன். ஏனெனில் இந்த நொடி வரை என் மனதில் எவளும் கிடையாது. ஒருவேளை என் மனதை தொட்ட பெண்ணை நான் கண்டால் அம்மா பார்க்கும் பெண்ணிற்கு என் வந்தனங்களை சமர்ப்பித்து விடுவேன் எப்படி"

"உன் வந்தனங்களை நீயே வைத்து கொள்ளடா ஏன்னெனில் அவளையாவது நான் மணந்து கொள்கிறேன்.."

"அதற்கு அவள் ஓடாமல் இருக்க வேண்டுமே"

"மூடு மூடிக்கொண்டு நட.. ஆமாம் தெரியாமல் தான் கேட்கிறேன் உனக்கும் காதலுக்கும் வெகு தூரம்.. காதல் என்ற வார்த்தையை ஒருவன் உன்னிடம் கூறினாலே வெடி வைத்து விடுவாய். அப்படியிருக்கையில் நீ எப்படி காதல் செய்வாய் காதலை பற்றி என்னடா தெரியும் உனக்கு"

"வெடி என்ன மாமா உலகமே இரண்டாக உடைந்தாலும் நம்பி வந்த பெண்ணின் கரத்தை விடாமல் இறுக்க பற்றிருப்பவனே மெய்யான காதலன். கடவுளே இறங்கி வந்து அவனை நம்பாதே என்று கூறினாலும் அவன் மீது முழு நம்பிக்கையும் கொண்டு அவன் முன்னேற்றத்திற்கு தோள் கொடுத்து அழும் போது மடி கொடுத்து தூங்கும் போது மார் கொடுத்து காதலால் அவனுக்கு தன்னையே ஒருவள் கொடுக்கிறாள்.

அவளே மெய்யான காதலி. இப்படி இருப்பவர்கள் எந்த விஷமிகள் நடுவில் திரி பற்ற வைத்தாலும் தண்ணீர் ஊற்றி விட்டு சென்று விடுவர் இவர்கள் காதலை யாராலும் உடைக்க முடியாது.. ஆனால் யாரென்றே அறியாதவன் ஒன்று கூறினான் என்றதும் சந்தேகம் கொண்டு சண்டையிட்டு பிரிகிறார்களே இதெல்லாம் காதலா ச்சை..

என்னை பொறுத்த வரை காதல் ஒரு சக்தி மாமா. ஒரு பெண்ணை கண்டு அந்த நொடி அவள் எனக்கே எனக்கு உரிமையானவள் என்று தோன்ற வேண்டும். அவள் சுவாசிக்கும் மூச்சும் என் மூச்சிலிருந்து வெளிப்பட வேண்டும் என்னை தீண்டிய காற்று பாதுகாப்பாக உள்ளபடியால் மட்டுமே என்னவளை தழுவ வேண்டும் அதும் பட்டும் படாமல்.. இப்படி ஒருவளை கண்டதும் நான் பித்தாகி போனால் அப்பொழுது தங்களிடம் கூறுகிறேன் போதுமா"

அவர்கள் பேசிக்கொண்டே கடற்கரைக்கு வர அப்பொழுது சிம்மா எனும் நாமம் கொண்ட அதராவின் வாகனமான யானை மிதந்து அங்கே வந்தது"வேந்தே என் வந்தனங்கள்.மகிழ தேசத்தின் சேனாதிபதி தங்களை காண வந்துள்ளார்"

"மகிழ தேசத்தின் அரசனே வந்திருந்தாலும் என்னால் இப்பொழுது காண இயலாது.. நான் வரும்வரை அவர் காத்திருக்கட்டும்"

"மருமகனே என்ன பேச்சு பேசுகிறாய்.. இந்த அதராவின் சக்கரவர்த்தி இப்படி இறுமாப்புடன் இருக்கலாமோ தவறு அதரா.வா நாம் சென்று முதலில் அவரை காணலாம்"

"மாமனே இது இறுமாப்பல்ல என் இஷ்டம் அவரை இப்பொழுது சந்திக்க என்னால் முடியாது.. எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது.. நீ வேண்டுமானால் செல்.. சிம்மா மாமனை கோட்டையில் விட்டு வா".. அவனை திருத்த முடியாதென்பதால் வருணன் சிம்மா மேலேறி சென்று விட அதரா கடலில் இறங்கலானான்.

பச்சை கடலின் மேல் பறந்து கொண்டிருந்த பறவைகள் ஒவ்வொன்றும்"ஹேய் அங்கே வருவது நமது வேந்தன் தானே அவர் எதற்காக இங்கே வருகிறார்"

தங்கமீன் ஒன்று"உனக்கு தெரியாதா நேற்று அவரின் தமக்கை இங்கே வந்திருந்தாரே. சூரிய நமஸ்காரம் செய்ய அப்பொழுது நீரில் இறங்கையில் அவர் அணிந்திருந்த இடை சங்கிலி எங்கேயோ தொலைந்து விட்டது போல. கடலையே சல்லடை போட்டு தேடியும் கண்டு பிடிக்க இயலவில்லை.. அவர் அழுது கொண்டே சென்று விட்டார்..தமக்கையின் அழுகை பொறுக்காமல் தான் தனுஜன் வந்திருக்கிறார் போல.. "அவைகள் தங்களுக்குள் பேசி கொள்ள நொடியில் இந்த செய்தி கடல் முழுக்க பரவியது.

கடலின் ஆழத்தின் தங்க மீன்களுடன் மற்றோரு தங்க மீனாக நீந்தி கொண்டிருந்தாள் ஒருவள்.பாதி மனித உடலும் மீதி மீனின் வடிவாகவும் கடற்கன்னி அவள் கொல்லும் அழகுடன் நீந்தி கொண்டிருந்தாள் தன் தோழிகள் புடை சூழ. அந்த கடலை ஆளும் கடலரசனின் இரு மகள்களில் ஒருத்தி. அவள் தோழிகளில் ஒருவள்"அடி பௌர்ணிமா செய்தி கேட்டாயா நம் லோகத்தின் அதிபதி நமது இல்லத்திற்குள் வந்துள்ளாராம்.."

"என்ன வேந்தன் அதிரநதினா"நீந்தி கொண்டிருந்தவள் அப்படியே அதிர்ந்து நிற்க

"ஆமாம் அதற்கு நீ எதற்கடி அலறுகிறாய் எதையோ தேடி கொண்டு வந்திருக்கிறாராம்.."

"ஐயோ திராவியா நான் அவரை காண வேண்டுமடி தோழி.. அவரை பற்றி செய்திகளை மட்டுமே இதுவரை கேட்டுள்ளேன். ஆனால் ஒரு தடவை கூட அவரை கண்டதில்லை.நம் லோகத்தின் வேந்தனின் புகழை புல் பூண்டு கூட வாய் ஓயாமல் பாட அவரை காண எத்தனை நாள் காத்திருக்கிறேன் தெரியுமா"

"வேண்டாம் பௌர்ணிமா அவர் நமது வேந்தனாக இருக்கலாம். ஆனால் பெண்கள் விடயத்தில் அவர் அவ்வளவு நல்லவர் இல்லையென்று செய்தி. அவர் முன் நாம் நிற்பது நமக்கு ஆபத்தை விளைவிக்கும். அதிலும் தேவ கன்னிகைகளே பொறாமை படும் அளவு எழில்மிகுந்த நீ அவர் முன் செல்வது பேராபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம்."

"திராவியா அவர் மானிட பெண் மேல் ஆசை கொள்ள நியாயம் இருக்கிறது. என்மேல் மோகம் கொள்ள காரணம் இல்லையே. தோழி நீ என்ன சொன்னாலும் சரி நான் அவரை காணாமல் விட மாட்டேன். நான் அவர் இருக்கும் திசை நோக்கி செல்கிறேன்"எவ்வளவு தடுத்தும் பிடிவாதகாரி அதரனை காண சென்று விட தோழிகள் இதனை உடனே கடலரசனிடம் கூற சென்றனர்.

பௌர்ணிமா வேகமாக நீந்தி அதரனிற்கும் திசைக்கு செல்கிறாள். கடலின் மேல் பரப்பிற்கு வந்து அவனை தேடிக்கொண்டிருக்கையில் மேலே பறந்து கொண்டிருந்த கொக்கு ஒன்று அதரா என்று கூறியது தான் தாமதம் மற்ற பறவைகள் அனைத்தும் எம்பி பறக்க இவளும் அந்த பெயர் கொடுத்த தாக்கத்தில் கடலின் உள்ளே சென்று செடிக்கு பின்னே மறைந்து கொள்கிறாள்.

இவளின் ஆர்வம் அனத்தமாக மாற போவதை உணராமல் இந்த லோகத்தின் ஐம்பூதங்களையும் கட்டி ஆளும் ஒருவனை காண ஆவலே வடிவாக மறைந்திருந்தாள் பௌர்ணிமா. அதோ அவன் வருகிறான். உண்மையிலே முந்தினம் அவன் சகோதரி தவிர விட்ட இடை சங்கிலியை கண்டு எடுத்து செல்லவே வந்திருந்தான். அந்த இடை சங்கிலிக்காக அவள் உண்ணாமல் உறங்காமல் அழுது கொண்டிருக்கிறாள் ஏனென்றால் அது அவளின் கணவன் பரிசளித்ததாம்.

சகோதரியின் அழுகை பொறுக்காமல் இதோ கடலுக்கடியில் ஆழத்தில் தேடி கொண்டிருக்கிறான் அதரா.எவ்வளவு தேடியும் சங்கிலி கிடைக்கவில்லையே ஒருவேளை நீரோட்டத்தில் இன்னும் ஆழத்திற்கு அடித்து செல்லப்பட்டு விட்டதோ.. என்ன செய்யலாம் ம்ம்.. என்றவன் மீண்டும் ஒருமுறை நன்றாக தேடி பார்த்தான். அது அவன் கண்களுக்கு சிக்குவேனா என்று ஆட்டம் காட்ட அதன் சினம் அவன் முகத்தில் தெரிகிறது. உடனே தன் கையை மேல்நோக்கி உயர்த்த என்ன ஏதென்று யோசிப்பதற்குள் கடல் நீர் இரண்டாக பிரிந்தது. இதை சத்தியமாக பௌர்ணிமா எதிர்பார்க்கவில்லை.

கடல் இரண்டாக பிரிந்ததால் நீரின்றி நடு பகுதி பள்ளமாக மாற மற்ற மீன்கள் இன்ன பிற கடல் வாழ் உயிரினங்கள் நீரின்றி தவிக்க அவன் தேடியது இப்பொழுது எளிதாக கண்ணில் பட்டது. அதனை எடுத்து பத்திர படுத்தி கொண்டவன் கண்களுக்கு அங்கிருந்த மீன்களின் துடிப்பு பெரியதாக தெரியவில்லை அவற்றை அலட்சிய படுத்தி நகரும் போது தான் ஒன்றை கண்டான்.

முதலில் அவன் கண்களில் விழுந்தது பொன்னிற நீண்ட கூந்தலே.. அந்த கூந்தல் தரையில் புரண்டு கிடக்க நன்றாக உற்று பார்த்தான். முகம் செடியின் பின்னால் மறைந்து கிடந்தது. மெல்ல அவள் துடித்து கொண்டிருக்கும் திசை நோக்கி நடக்கலானான்.பொன்னிற வால்கள் தரையில் அடிக்க தட்டையான வயிறு தண்ணீருக்கு ஏங்க நட்சத்திர மீன்களை காவலாக கொண்ட திமிறிய மார்புகள் மூச்சுக்கு துடிக்க சங்கு கழுத்தில் பச்சை நரம்புகள் தெரிய அவளின் செங்கமல இதழ்கள் தண்ணீருக்கு விம்ம செடியை விலக்கி அவள் முகத்தை பார்த்தவன் அதிலே மூழ்கி போனான்.

அவன் சிந்தையில் அந்த நொடி வேறொன்றும் இல்லை.இதோ இங்கே இருப்பவள் மானிட பெண்ணா மச்சக்கன்னியா என்று மனம் எடுத்துரைக்கவில்லை. அவன் மனம் கூரியது ஒன்றே ஒன்று தான் இவள் எனக்கானவள் என்னவள். எனக்கே எனக்கென பிறந்தவள். என் மூச்சு சுவாசித்த காற்றையே இனி அவள் சுவாசிக்க வேண்டும் நான் அனுமதித்தால் மட்டுமே தென்றலும் அவளை தீண்ட வேண்டும்.இது என்ன மாதிரி உணர்வு நெஞ்சு கூடு காலியாகி உயிர் ஒரு புள்ளியில் தெரிகிறதே அதோ அவள் நீருக்கு ஏங்கி துடிக்கிறாள் அவளின் உயிர் காக்கும் நீர் என் இதழுக்குள் அல்லவா உள்ளது..

அவன் கால்கள் அவளை நோக்கி நடந்தன. தரையில் தவித்து கொண்டிருந்த மீன்கள் அவன் கால் பட்டு ரணமாகின. இருபுறமும் தண்ணீர் பிரிந்து கருங்கடலாக காட்சி அளிக்க முகத்தில் மந்தகாச புன்னகை ஒட்டி கொள்ள அவளை நெருங்கினான்.கடைசி மூச்சுக்கு அவள் துடிதுடித்து தவிக்க அவளின் உயிர் போராடத்தால் ஒரு பக்க மாரிலிருந்த நட்சத்திர மீன் நழுவிருக்க வெய்யோன் தீண்டாத இடம் அவன் கண்களுக்கு போதை ஏற்றியது.

இதுவரை அவன் சிறுவயதில் அன்னையின் அமுத பால் சுரந்த மார்பையே கண்டிருந்தான்.வளர வளர பெண்களிடம் குறும்பாக விளையாடுவானே தவிர அவர்களை தப்பான கண்ணோட்டத்தில் அவன் கண்டதில்லை.குழந்தையின் பசி போக்கும் அமுத சுரபியாக தான் இதுவரை மார்பை அவன் எண்ணிருந்தான்.ஆனால் இன்றோ பொர்ணிமாவை இந்த கோலத்தில் கண்டதும் தன் பிள்ளை அமுதம் பருகினால் அது இவள் மாரிலிருந்து என முடிவே செய்து விட்டான்.

பௌர்ணிமா மூச்சுக்கு போராடும் நிலையிலும் அவனின் பார்வை உணர்ந்து நடுங்கிய கரத்தை தன் ஒற்றை மார்பில் வைத்து மறைக்க அவள் இதழ்களோ தண்ணீருக்கு வரண்டு காய்ந்து போக தொடங்கியது. அந்நிலையிலும் அவள் தைரியமாகவே அவனை முறைத்து கொண்டு கிடந்தாளே தவிர அவள் கண்களில் துளியும் மரணபயமில்லை.

அந்த நொடி மன்மதனின் மலர் பாணம் அதரனின் மனதில் அடித்தது. அவள் மார் மறைத்து கீழே கிடந்த நட்சத்திர மீனை எடுத்து அவன் பத்திரமாக தன் இடை கச்சையில் சொருகி கொள்ள திமில் போல் அவனை நோக்கி மூச்சுக்கு ஏங்கிய மற்றொரு மார்பின் மேலிருந்து இன்னொரு நட்சத்திர மீனும் தண்ணிரன்று கீழே சரிய அதை உணர்ந்த பௌர்ணிமா கரத்தை வைத்து மறைப்பதற்குள் அவளை அள்ளி தூக்கி இடை இறுக்கி துடிக்கும் இதழில் தன்னிதழ் பொருத்தி தன் சுவாசத்தை அவளுக்கு சுவாசிக்க கொடுத்தான்.

இந்த அதிர்ச்சியில் பௌர்ணிமாவின் கண்கள் விரிய இதயம் நடுங்க இன்னொரு பக்க மாரிலிருந்த நட்சத்திர மீனும் கீழே விழ அவளோ மேலாடை இல்லாமல் அவன் நெஞ்சில் சாய அவனோ மேலாடையாக அவளை தானே போர்த்தி விட்டான்.. அந்த நொடி ஸ்தம்பித்து நின்ற கடலும் ஒன்றாக கலந்தது.

அதரா - 8


இன்னும் எத்துணை நேரமோ அவன் அறியவில்லை அவளை முத்தமிட்டு மோக நிலைக்குள் கொண்டு செல்லும் இதழ்களுக்கும் தெரியவில்லை. இந்த முத்தம் விடையே இல்லாத வினா போல் முடிவே இல்லாத தொடக்கம் போல் விதி அறியாத வாழ்க்கை போல் நீண்டு கொண்டே செல்ல வேண்டுமென அவன் மனம் ஏங்கி தவித்தது.. சற்று முன்னால் மாமனிடம் வசனம் பேசியவன் இப்பொழுது ஒரு பெண்ணிடம் முழுதும் மயங்கி நிற்கிறான். அவனால் இதிலிருந்து மீள முடியுமோ? இல்லை அவன் மீள விரும்பவில்லை மீளவும் விட மாட்டான். 

தன்னை முத்தமிட்டவனை விலக்கி தள்ள போராடி கொண்டிருந்தாள் கடற்கன்னி. அவளின் போராட்டம் அங்கிருந்த செடிகளின் பின்னால் பதுங்கியிருந்த மீன்களுக்கு கூட பரிதாபத்தை வரவழைக்க ஆனால் முத்தமிட்டவானோ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அவள் இதழ் சுவைத்தான். அவளின் துடிப்பு அவனுக்கு கொண்டாடமாக இருந்தது. அவளின் வாசம் ஆழ கடலிலும் அவனை கிறங்கடித்தது.

மென்னிதழ் இவனது முரட்டு இதழால் முத்தமிடப்பட்டு சிவந்து உதிர துளி கடல் நீரில் கலக்க அப்பொழுது தான் அவன் நிமிர்ந்தே பார்த்தான். அவளோ வெறுப்போடும் வேதனையோடும் அவனை பார்க்க அதை அலட்சியபடுத்தியவன்"உன் பெயர் இன்று இந்த நொடி வரை எதுவேண்டுமென்றாலும் இருந்து விட்டு போகட்டும். ஆனால் நான் உன்னை கண்ட நொடியில் இருந்து உன் பெயர் வர்ணிகா.. வர்ணிகா என்றால் நிலா என்பதும் பொருளாகும். அதே சமயம் வர்ணிக்க இயலாத பேரழகு பொக்கிஷமும் பொருளாகும் உனக்கு இரண்டுமே பொருந்தும் ஆதலால் உன் பெயர் இனி வர்ணிகா..

பிறகு வர்ணிகா இதான் உன் இருப்பிடமா எங்கே உன் தாய் தந்தை இருவரும்.. "அவன் அவளுக்கு பெற்று பெயர் வைத்ததை போல பேசிக்கொண்டே போக அதற்கு முன் வரை பௌர்ணிமா எனும் நாமம் கொண்டவள் வர்ணிகா என்ற புதிய நாமத்தின் தாக்கத்தில் இருந்து வெளியேறி அவனை கடுமையாய் முறைத்து

"என்ன தைரியம் இருந்தால் என்னை முத்தமிட்டுருப்பீர் உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது ஹான்"

அவளின் இடை இறுக்க அவள் அவனிடமிருந்து விடுபட திமிற அதனை நொடியில் அடக்கியவன்"அதராவிற்கு உரிமையை கொடுக்க யாருக்கும் உரிமை இல்லை பெண்ணே..என் உரிமையை நீ பார்க்கிறாயா"என அவளை விடுவிக்க அவளோ மேலாடை இன்றி இருக்கரங்களை கொண்டு மாரழகை மறைக்க அவனோ மென்னகையோடு மெல்ல நீந்தியபடியே அவளை சுற்றி வந்து முதுகில் முத்தமிட அவள் வாலால் அவனை தாக்க முயல லாவகமாக அவளிடமிருந்து தப்பியவன் வேண்டுமென்றே மார்பு வயிறு கழுத்து கரங்கள் வால் இப்படி அவளை சுற்றி சுற்றி நீந்தி முத்தமிட அவளின் போர்க்குணம் வெளியே வந்தது.

அவனை தாக்க முயன்று போராடி கொண்டிருந்தாள்.ஆனால் இருகரமும் மேனி மறைக்க எங்கிருந்து அவள் போராட. அவளின் தவிப்பு அவனுக்கு பரவசத்தை கொடுத்தது. வாளிப்பான தேகம் வாவென்று கூக்குரல் இட மனதை சிரமபட்டு அடக்கியவன் அவள் எதிர்பாராத நேரத்தில் பின்னிருந்து அணைத்து இரு கரங்களையும் அவள் சிறையிட்டு மறைத்திருந்த மாரழகில் இருந்து அகற்றினான்."என்னை விடு கயவனே.. பெண்ணின் விருப்பமின்றி அவள் மேனியை பார்வையால் தீண்டுவதும் தவறென்று அறியாதவனா நீ"

அவள் கரத்தை அவன் இறுக்க பற்றிருக்க அவளால் அசைய கூட இயலவில்லை.கடற்கன்னி என்றாலும் அவளும் பெண் அல்லவா.. அவளுக்கும் மனமும் அதில் வெட்கம் நாணம் பயிர்ப்பு அனைத்தும் இருக்குமல்லவா.பெற்றவள் கூட காணாத அங்கத்தை அதரனிவன் காண அவளால் ஏதும் செய்ய இயலவில்லையே. ஆத்திரம் தாளாமல் வாளால் அவனை சுழற்றி அடிக்க முயன்றாள். முயற்சி தோல்வியில் முடிந்தது. அவளின் போராட்டங்களை பார்த்தவன் கண்கள் இப்பொழுது மாரழகை மொய்க்க அந்த நட்சத்திர மீனாக ஏன் தான் பிறக்கவில்லை என்று ஏக்கமே அவனுள் வேராக ஊன்றியது.இருந்தும் அதை விழுங்கி அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து மார்பை நோக்கி ஊத தண்ணீரில் அவன் மூச்சு காற்று குமிழிகளாக மாறி அவள் மென்மையான பகுதியை வெண்ணிற வஸ்திரமாக உருமாறி மறைத்தன.

அதன் பின்னே அவளை விடுவிக்க ஆத்திரம் தாளாத வர்ணிகா"சீ நீயெல்லாம் இந்த அதரலோகத்தின் வேந்தனா.. உனை காணவா நான் பேராவல் கொண்டேன்.. உன் குடிகளை இவ்வாறு தான் நடத்துவாயா..உன் ஆண்மையின் வீரத்தையும் மந்திர தந்திரங்களையும் ஒரு அபலையிடம் தான் வெளிப்படுத்துவாயோ"

இதுவரை இம்மாதிரி அவன் முன் யாரும் கேள்வி எழுப்பியதே இல்லை காரணம் அவன் முன்னால் இவ்வளவு துணிவாக நின்று பேச யாருக்கு துணிச்சல் வரும்.. அவளின் இந்த துணிச்சல் அவனை கவர்ந்தது உண்மையே.அவளுக்கு பதில் கொடுக்காமல் நீந்தியபடியே அவளை சீண்டி முத்தமிட்டபடியே இருக்க அவளும் தன் நகத்தால் அவன் ரோமம் மண்டிய மார்பில் நகத்தால் கீறி அவனது உதிரத்தை நீரில் கலக்க வைத்தாள்.கடலில் இவர்களது போராட்டத்தை பார்த்து கொண்டிருந்த ஜீவராசிகள் அதராவையே காயம் செய்யும் கடல் கன்னியை பரிதாபமாகவும் ஆச்சர்யமாகவும் பார்க்க விஷயம் திமிங்கலத்தின் மூலம் கேள்வியுற்று வர்ணிகாவின் தாய் தந்தை மற்றும் அவர்களது கூட்டமே அடித்து பிடித்து வந்து பார்க்க வர்ணிகா தன் வால் மூலம் அதராவை கண்ணாபின்னா வென்று தாக்கி கொண்டிருந்தாள்.

அதனை கண்டு பயந்த அவள் பெற்றோர்"பௌர்ணிமா என்ன செய்து கொண்டிருக்கிறாய் மகளே இவர் யாரென்று எண்ணினாய் இந்த லோகத்தின் வேந்தன் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளும் சக்தி பெற்றவர் அவரை தாக்க முயற்சிக்கிறாயே மக்கு பெண்ணே.. வேந்தே தாங்கள் எம் இருப்பிடம் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி எங்கள் புதல்வி விளையாட்டு பிள்ளை அறியாமல் தவறு இழைந்திருந்தால் தாம் அவளை மன்னித்தருள வேண்டுமென மன்றாடி கேட்டு கொள்கிறேன்"

வர்ணிகாவின் தந்தை அவன் முன் மன்றாடியது அவளுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.. "தந்தையே இவனிடம் போய்"

"பௌர்ணிமா"கடுப்புடன் அவள் வாய் மூடி கொள்ள மற்றவர்கள் பயத்துடன் பார்த்து கொண்டிருக்க

அதரா"இப்பெண்ணிற்கு விவாகம் ஆகி விட்டதா"என

"இல்லை வேந்தே ஆனால் கூடிய விரைவில் நடக்க இருக்கிறது.."

"அது நடந்தே இருந்தாலும் பரவாயில்லை இனி இவள் இந்த அதராவின் சொத்து.. என்னுடையவள்.. அவளை பெற்ற உங்களிடம் முறை படி அவளை அழைத்து செல்வதை தெரிவித்து விட்டேன் இல்லையேல் மகளை காணவில்லை என தாங்கள் பதறிட கூடாதே அதற்காக"வர்ணிகா உட்பட அனைவருமே அவன் கூற்று கேட்டு அதிர்ந்து நிற்க வேறு என்ன செய்ய முடியும். அவனை எதிர்க்க அங்கே யாருக்கும் துணிவு இல்லை.

இருந்தும் ஒருவள் எதிர்த்தாள்."தாங்கள் யார் என்னை உரிமை கொண்டாட.. உங்களை போய் அறிவுள்ள நங்கை ஒருத்தி ஸ்ரீகரிப்பாளா.. அதரா என்றால் நெருப்பு தன்னுள் விழும் அனைத்தையும் விழுங்கி கொள்ளும் கொடூர நெருப்பு அத்தகைய எண்ணம் தான் உன்னிலும் இருக்கிறது.. நீ இந்த அதரா லோகத்திற்கே வேந்தனாக இருக்கலாம் ஆனால் என்னை ஆள உனக்கு அதிகாரம் கிடையாது"

"மகளே வேண்டாம்"தாய் தந்தையர் இருவரும் தடுத்தும் அந்த அகம்பாவியின் முன் கோபத்தை அடக்காமல் பேசிக்கொண்டே செல்ல

"ஆக பெண்ணே நீ என்னுடன் வர போவதில்லை அப்படித்தானே"

"அதை சொல்லி புரிந்து கொள்ள தாங்கள் முட்டாள் அல்லவே"

"வேந்தே அவள் குழந்தை"எதையோ அதராவிடம் சமாளிக்க அவள் பெற்றோரை அடக்கியவன் தீர்க்கமான பார்வை ஒன்றை அவள் மேல் செலுத்தி விட்டு தன் காலை ஓங்கி கீழே மிதிக்க அந்த கடலே தரையிலிருந்து அப்படியே அந்தரத்தில் மிதக்க அதில் நீந்திய அனைத்து உயிரினங்களும் தண்ணீர் இன்றி துடி துடிக்க வர்ணிகாவிற்கு மட்டும் ஏதும் ஆகவில்லை. ஏனெனில் அவள் தான் அதராவின் கைப்பிடிக்குள் இருக்கிறாளே..

தாயே தந்தையே என்று அவர்களிடம் செல்ல முயன்றவளை தன் கைப்பிடிக்குள் அழுத்தியவன்"இப்பொழுது சொல் பெண்ணே என்னுடன் என்னுடையவளாக வருகிறாயா".. இவன் கொடூரன் எதற்காக இவனை காண ஆவல் கொண்டேன் இத்துணை ஜீவராசிகளையும் பலி கொடுக்கவா"கண் முன்னே தான் சார்ந்தவர்கள் துடிக்க பேதையவள் அவனிடம் கெஞ்சினாள்.

"அவர்களை விட்டு விடுங்கள் தண்ணீர் இன்றி அவர்கள் துடிப்பது தெரியவில்லையா அவர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள் தயை கூர்ந்து கடலை கீழே வர வையுங்கள்"

"நான் கேட்டதற்கு இது பதிலில்லையே"

அவனை கண்ணீர் ததும்பிய முகத்துடன் முறைத்தவள்"நான் கடற்கன்னி தங்களுடன் வந்து என்ன செய்வது மானுடன் கடல் நங்கையை மணப்பது சாத்தியமற்றுது அறியாதவரா தாங்கள்"

"அதராவினால் முடியாது ஒன்றுமில்லை அறியாதவளா நீ.. அங்கே பார் வர்ணிகா அந்த மீன்கள் கூட்டம் மரணத்தின் இறுதி பிடியில் இருக்கின்றன நீயானால் என்னிடம் வார்த்தையாடி கொண்டிருக்கிறாய் உன் இனத்தின் மீது உனக்கு அக்கறையே இல்லை போ"

கண் முன் கோடான கோடி ஜீவராசிகளுடன் அவள் பெற்றோரும் துடிக்க"நான் உங்களுடன் உங்களுடையவளாக வருகிறேன்"என்று சொன்னது தான் தாமதம் அந்தரத்தில் மிதந்த கடல் அந்த பள்ளத்தை நிரப்பியது. அனைத்து ஜீவராசிகளும் மூச்சை நன்றாக சுவாசிக்க"தங்களின் மகள் என்னுடன் வர சம்மதித்து இருக்கிறாள் நான் அவளை என்னுடன் அழைத்து செல்கிறேன்.. தாங்கள் வேண்டுமானால் பிறகு வந்து அவளை என்னுடைய கோட்டையில் காணலாம்"

என்றவன் அவர்கள் ஏதோ கூற வருமுன் அவளை நொடியில் கடலுக்கு மேல் கொண்டு வந்தான். தண்ணீரின் மீது அவன் நிற்க அவளோ அவன் முகத்தையே பார்க்க அவளை தூக்கி தோளில் போட்டவன் சுலபமாக கடலின் மேல் நடந்து கரைக்கு வர அவளது கண்ணீர் அவன் முதுகை நனைத்தது. ஈர மண்ணின் காற்று பட்டதும் அவள் வால் கால்களாக மாறி பொன்னிற வஸ்திரம் அவள் இடை கீழே ராட்டினம் சுற்றியது.

அவன் தோளில் இருந்து வளைந்து நெளிந்து கீழே குதித்தவள்"என்னை தீண்டாதீர்கள்.என்னை தீண்டும் உரிமையோ அருகதையோ யோக்கியமா உமக்கு கிடையாது.. எனக்கு கடவுள் அருளிய கால்கள் இருக்கிறது திவ்யமாக நடந்து அதை விட திவ்யமாக உங்களுடன் வந்து தொலைய இயலும்"..

கடுகடுவென்றிருந்த அவள் முகத்தை கண் கொட்டாமல் ஒருவன் பார்த்து கொண்டிருந்தான்.. "நீ ஏன் இத்துணை காலம் என் கண்ணில் படவில்லை வர்ணிகா.ஏன் கடவுள் இவ்வளவு கல்நெஞ்சகாரரானார். ஒரு நாள் முன் உன்னை சந்திக்கும் வாய்ப்பு கிட்டிருந்தாலும் இன்னும் கூடுதல் மணித்துளிகள் உன் மதிமுகம் கண்டு உன் வாசம்தனில் எனை தொலைத்து உன்னுள் கரைந்திருப்பேனே ம்ம்ம் இதை தான் நேரம் கூடி வரவேண்டுமென்று சொல்வது போல.. ஆமாம் நீ என்ன சொன்னாய் திவ்யமாக நடக்க இயலும் என்றா நன்றாக நட வர்ணிகா ஆனால் இப்போதல்ல நமது கோட்டையில் நட.. நாம் ஓடி பிடித்து விளையாடும் போது புள்ளி மான் போல் துள்ளி குதித்து ஓடு யார் வேண்டாம் என கூறியது..ஆனால் இப்பொழுது நீ என் கரத்தில் தவழ நான் உன்னை தூக்கி கொண்டே நகரத்தை கடந்து கோட்டையை அடைய வேண்டும்"...

"எங்கள் வீட்டில் நான் அடைந்த அவமானம் போதாதா.. இதில் தேசம் முழுதும் அதர வேந்தனின் அடிமை பெண்ணை பாருங்கள் என என்னை எள்ளி நகையாட வேண்டுமா.. நீங்கள் மெய்யாகவே வேந்தன் தானோ அன்றி ஏதாச்சும் கொடிய பிசாசா"

"பிசாசு தான் வர்ணிகா.. உன்னை காலம் முழுக்க பீடித்திருக்க போகும் காதல் பிசாசு"அவள் முறைத்து விட்டு நடக்க அவளை நடக்க விடாமல் தன் வாகனமான சிம்மா என்ற யானையின் மீது ஏற்ற கடலுக்கடியில் நடந்த அனைத்தையும் அரசல் புரசலாக மீன்கள் பறவைகள் மூலம் அறிந்திருந்த சிம்மா

"வேந்தே இந்த பெண் கடல் கன்னி அல்லவா"

"ஆம் அது இதுவரை இன்றிலிருந்து இவள் எனது உடமை"என்றவன் அவளை தொடர்ந்து யானை மீது அமர வர்ணிகா கண்ணீருடன் தன் பிறந்தகத்தை இழந்தாள். அவளின் பெற்றோர் கடலின் மத்தியில் இருந்து இவர்களை பார்த்து கொண்டிருந்தனர். சிம்மா காற்றில் மிதந்து வர தேச மக்கள் யாவரும் வர்ணிகாவை அதிசயமாக பார்த்தனர். 

குட்டி குட்டி றெக்கை கொண்ட மனிதர்கள் அந்த அரண்மனை முழுக்க பறந்து கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியெங்கிலும் நீல நிற மினுக்கும் துகள்கள் சிதறி பறந்தன.அவர்கள் அங்கேயும் இங்கேயும் பரபரப்பாக பறக்க அந்த துகள்களின் வர்ண கோலத்தால் கோட்டையை சுற்றிலும் நீல வானவில் தோன்றிய உணர்வு.. அதரா கோட்டையை நெருங்கும் முன்னரே விஷயம் அவன் பெற்றோர் வரை சென்று விட அனைவருக்குமே பேரதிர்ச்சி.. பேரு காலத்திற்கு வந்த அதரனின் தமக்கை மிருளா தன் பொருட்டே ஒரு அபலை பெண்ணின் கதி இவ்வாறு போய் விட்டதென்ன கலங்கி நின்றாள். சிம்மாவின் மேல் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த அதிரனின் முன் கூனி குறுகி அமர்ந்திருந்தாள் வர்ணிகா.

கடல் நீரின் ஈரம் இன்னும் அவள் கூந்தலில் சொட்டி கொண்டிருந்தது. மனமெங்கிலும் ரணமாக வலித்தது. ஏன் இவனை காண ஆர்வம் கொண்டேன் என சிறிது நேரத்தில் சில ஆயிரம் முறை தனக்குள் கேட்டு கொண்டாள். குடிகள் தங்கள் வேந்தனின் புதிய முகம் கண்டும் வர்ணிகாவின் நிலை கண்டும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்தனர். இதுவரை அவர்கள் கண்ட அதரனே வேறாயிற்றே.

சிம்மாவிற்கு வர்ணிகாவின் மனநிலை புரிந்ததோ என்னவோ அது வேகமாக கோட்டையை சென்றடைந்தது.கோட்டை வாயிலை கடந்து வாசலுக்கு வர அங்கே அதரனின் பெற்றோர் மிருளா அமைச்சர்கள் மந்திரி பிரதானிகள் வீரர்கள் உள்ளிட்ட பலர் நிற்க அவர்களில் யாரையும் ஏறெடுத்தும் காணவில்லை வர்ணிகா.

அதரனோ அதனை கண்டு கொண்டதாக தெரியவே இல்லை. அவன் பாட்டில் இறங்கினான். அவள் இறங்க கரம் நீட்டினான். அவளோ அதனையும் அலட்சிய படுத்த அவள் கரத்தை பற்றி இழுத்து தன் கைகளில் குழந்தையென ஏந்தி கொண்டவன் சாதாரணமாக நடந்து வர அதனை சகிக்க இயலாமல் அவனின் தாய் அமிர்தி"அதரா என்னடா இதெல்லாம்.. ஒரு லோகத்தை ஆளும் வேந்தன் செய்யும் காரியமா இது.. இப்படி என்றால் குடிகளுக்கு எவ்வாறு உன் மேல் நம்பிக்கை வரும்.. உன் குடிகள் உன் குழந்தைகள் போலல்லவா.. அவர்களை காப்பது உன் கடமை அல்லவா அப்படியிருக்க நீயே இம்மாதிரி செய்தால் நாளை விஷம ஆண்கள் யாவரும் பெண்கள் மீது கை வைக்க துணிச்சல் கொண்டு செயல்படுவர்.. அவர்களை என்னவென்று தட்டி கேட்பது கேட்டால் வேந்தனே ஒரு பெண்ணை பலவந்த படுத்தி இழுத்து வருகையில் நாங்கள் செய்தால் என்ன குற்றம் என வினவ மாட்டாரோ"

"அம்மா காதல் கொண்டு உரிமையோடு ஒருத்தியை கவர்ந்து வருவது வேறு.. காம கண் கொண்டு அவள் அங்கம் களவாட அவளை தொடுவது வேறு.என் மக்கள் மெய்யான காதல் கொண்டு ஒருவளை இணைந்தால் இந்த அதரன் வாழ்த்துவான். அதுவே ஒரு பெண்ணிடம் அவள் விருப்பமின்றி அத்து மீறினால் அவன் மரணத்திலும் கொடும் தண்டனையை அனுபவிப்பான்.."

"மகனே உன் குடிகளுக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாயமா..அந்த பெண்ணின் முகத்தை பார் மரணத்தை அனு அனுவாக அனுபவித்து கொண்டிருக்கிறாள்.. அவளுக்கு உன்னை பிடிக்க வில்லையடா.. அவளை விட்டு விடு"

அதரன் வர்ணிகா முகத்தை கண்டான். அதில் அளவேயில்லாத வெறுப்பு கொட்டி கிடந்தது.அவளின் பச்சை விழிகளில் அவன் மேல் இச்சையில்லை. ஆனாலும் அந்த விழிகளில் அவன் ஒன்றை கண்டான் அது அவனின் உயிர்.இந்த கண்களை காணாமல் இதனுடன் கதைக்காமல் நான் உயிர் வாழ இயலுமா.இவளுக்கு இப்பொழுது என் மேல் வெறுப்பு உள்ளது வெறுப்பு விருப்பாக மாறாமல் போகாதே.. "அம்மா தாங்கள் சொல்லுக்கே வருகிறேன் இதோ என் கரத்தில் தவழும் காரிகை இவள் முப்பது நாள் என் அருகில் இருப்பாள். என்னை அவள் ஏற்று கொண்டால் ஒழிய அவளை நான் பலவந்த படுத்த மாட்டேன். முப்பத்தி ஒன்றாவது நாள் இந்த உலகமே பார்க்க அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு இவளை அவள் பெற்றோரிடம் ஒப்புவிப்பேன்.."

"ஒருவேளை அவளுக்கு உன்னை பிடித்திருந்தால்"தாய் அறியாத சூலா.. மகனின் தோரணையில் குதியாட்டம் போடும் தாயிற்கு தெரியாதா அவனிடம் ஒரு பெண் மயங்காமல் இருந்தால் அவள் ஒரு அதிசய பிறவி என்று. வர்ணிகாவின் முகம் அமிர்திக்கும் பிடித்தே இருந்தது. என்ன மாதிரி அழகு இவள் இப்படியும் எழில் ஒருவளிடம் குடிகொள்ள முடியுமா.அப்பப்பா இதனால் தான் கண்டதும் காதல் கொண்டு கள்வன் அவளை கவர்ந்து வந்துள்ளான்."சரி மகனே உன் பேச்சை நாங்கள் நம்புகிறோம்.. ஆனால் அதுவரை"

"அம்மா அதுவரை அவள் கற்பை காப்பது இந்த காதலனின் பொறுப்பு. அவள் விருப்பமின்றி என் கற்பும் கூட கலங்கப்படாது.."அமிர்தி அவசரமாக கடவுளிடம் வேண்டுதல் வைத்தார் வர்ணிகா அதரனின் மனைவியாக வேண்டுமென. அதரனின் தந்தை அவனிடம் பேசவே இல்லை. விறைப்பாக நின்று கொண்டிருந்தார். தமக்கை மிருளா மட்டும்"அதரா காதல் பொல்லாத தீ.. தன்னுள் வீழ்பவர்களை முழுதாய் முழுங்கி விடும். நெருப்பையே கட்டி ஆளும் நீயே அதற்கு பலியாகி விடாதே. பெண்ணே உன் இப்போதைய நிலைக்கு நானும் ஒரு காரணம் என்னை மன்னித்து விடு.. ஆனால் என் தனுஜன் சொன்ன சொல் மீறாதவன்.முப்பது நாள் எங்கள் கோட்டையின் விருந்தாளி நீ. உன் கற்பு உன்னிடமே பத்திரமாக இருக்கும் நீ மனது வைக்கும் வரை"என்றவள் வேறென்ன சொல்வாள்.

இவ்வளவு நடந்தும் அவன் வர்ணிகாவை இன்னமும் கரத்தில் ஏந்தி கொண்டிருந்தவன்.அவள் சங்கடமாக நெளியும் போதும் அவளை கீழே இறக்காமல் இறுக்கமாக பிடித்திருந்த கரங்கள் கூறியது இந்த பிடியில் இருந்து நீ தப்புவது சுலபமில்லை என்று. இதற்கும் மேலும் நின்று யாரிடமும் பதிலுரைக்க பிடிக்காதவன் தன்னறை நோக்கி சென்றான்.அவன் நினைத்தால் ஒரே சொடுக்கில் மஞ்சத்தில் கிடக்கலாம் ஆனாலும் அவளுடன் இருக்கும் நேரம் குறைந்து விடுமே அதற்காகவே இப்படி ஒரு குறுக்க வழி.

வழிநெடுகிலும் வீரர்களும் சேவகர்களும் அதிர்ந்து பார்ப்பதை அலட்சிய படுத்தியவன் அவளை தனதறைக்கு தூக்கி சென்றான்.வெகு நேரமானதால் தண்ணீர் இன்றி அவள் மேனி நடுங்க தொடங்கியது.அதை உணர்ந்தவன் தனதரையின் மத்தியில் இருக்கும் தாமரை குளத்தில் அவளோடு இறங்கினான். தண்ணீர் பட்டதும் அவள் கால்கள் மறைந்து மீண்டும் வாலாக மாறியது. கெண்டை மீன்போல் அவள் துள்ளி நீந்துவதை மந்தகாச சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான்.

அதரன் அவர்களிடம் உரைத்தது அவளுக்கு நம்பிக்கை இல்லை. அவன் காயம் செய்த உதடு இன்னமும் வலிக்கிறது."இந்த லோகத்தின் வேந்தன் உறுதி வசனங்களை அள்ளி வீசலாம் அதை மீறினால் தட்டி கேட்க ஒருவனுக்கும் துணிவில்லை என்பதால் தானே என் கற்புக்கு உறுதி அளித்தீர்கள்"

"திருத்தம் வர்ணிகா அது உன் கற்பு இல்லையம்மா என் கற்பு"

"என்ன"

"ஆம் எனக்கு மட்டும் கற்பு இல்லையா ஆண்களுக்கும் கற்பு உண்டு தாயே.. உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன் நான் இன்னமும் கன்னி கழியவே இல்லை..அதனால் என் கற்பு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒருவேளை நீ மனது வைத்தால் என் கற்பை நான் இழப்பேன்"நீந்தி கொண்டிருந்தவள் ஓரிடத்தில் நிற்க நொடியில் அவளை நெருங்கி தன்னோடு நெருகியவன்"என் மனது கற்பு இழந்தது உன்னாலே..என் ஆண்மை கற்பு இழக்க போவதும் உன்னாலே.. கண்டதும் காந்தமென என்னுள் ஒட்டி கொண்டாய் பிரித்தெடுக்க என்னால் இயலவில்லை பெண்ணே அதைவிட விரும்பவில்லை என்று சொல்லி கொள்ளலாம்.

இன்று உனை கண்ணீர் விட வைக்கிறேன் அது எனக்கே தெரியும்.ஆனால் ஒரு நாள் என் போல் நீயும் காதல் கொள்வாய் அன்று என் சுவாசம் உன்னை விட்டு கனம் நீக்கினாலும் வாடி விடுவாய்..உன்னை உன் அனுமதி இன்றி மொத்தமாக எடுத்து கொள்ள மாட்டேனே தவிர மத்த விஷயங்களை தாராளமாக எடுத்து கொள்வேன். அது இம்மாதிரி முத்தமாக வேண்டுமானாலும் இருக்கலாம்".. என்றவன் பச்சக்கென்று அவள் கன்னத்தில் முத்தமிட அவள் மிரண்டு விழிக்கும் போதே கண்ணடித்து சிரித்தான் கள்வன்.

அதரா - 9

வேகமாக எங்கேயோ நடந்து கொண்டிருந்தவனின் நெஞ்சில் கைவைத்து நிறுத்தினான் வருணேந்திரன்.அதரனுக்கு தெரியும் தன்னை தொட்டு அதுவும் தைரியமாக தன் நெஞ்சில் கைவைத்து கேள்வி கேட்கும் உரிமை ஒருவனுக்கே உண்டென்று.தாய் மாமன் தான் ஆனால் அதையும் தாண்டிய நட்பு அவர்களுக்குள். முறைப்புடன் தன்னை நோக்கி கொண்டிருந்த கண்களை சந்தித்தவன் சிரித்து விட்டான்.

"மாமனே இப்பொழுது நீ முறைக்கிறாயா இல்லை சிரிக்கிறாயா"

"நெற்றிகண் எனக்கில்லை என்ற ஆனவமாடா.. அப்படி இருந்திருந்தால் நீ செய்த வேலைக்கு இன்னேரம் உன்னை எரித்து சாம்பலாக்கி இருப்பேன்.. இதில் முறைக்குறேனா சிரிக்குறேனா என கேள்வி எழுப்ப என்ன திண்ணகம் இருக்க வேண்டும் உமக்கு.. சிவனிடமிருந்து நெற்றி கண்ணை கடன் வாங்கியாவது உன்னை எரி்கிறேன் பார்"

"நெற்றி கண்ணை சிவனிடமிருந்து கடன் வாங்கி என்னை எரிக்கும் அளவுக்கு என்றைக்கு எப்பொழுது நான் குற்றம் செய்தேன் மாமா"

"சற்று முன்பு விருப்பமே இல்லாத பெண்ணை இழுத்து வந்து அடைத்து வைத்திருக்கிறாயே அது குற்றமில்லையா உனக்கு"

"விருப்பமே இல்லாதவள் தான் இந்த அதரனை காண ஆவல் கொண்டாலோ"

"அவள் ஆவல் கொண்டது அரக்கனை காண அல்ல அதரலோகத்தின் வேந்தனை காண.."

"அதரன் அரகனாகி போனேனோ"

"அதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா.. நீயே இப்படி செய்யலாமா"

"மாமனே நான் தவறொன்றும் செய்யவில்லை.அவளை கடலின் கீழ் பார்த்தேன். பார்த்து கொண்டே இருந்தேன்  பார்த்து கொண்டே இருந்த போது பாவையின் பால் தொலைந்து போனேன் இது தவறா"

"அதரா யாரடா உனக்கு இதெல்லாம் சொல்லி தருவது.. காதல் வசனங்களை கரைத்து குடித்து உள்ளாய் போ..மருமகனே நீ செய்தது தவறென்றே ஒருவினாடி கூட உனக்கு புரியவில்லையா.. நீ மட்டும் கடற்கன்னியாக இருந்தாலும் அழகி ஒருவளை தூக்கி வந்து விட்டாயே. அங்கே அவளது தோழியென எவளும் உன் கண்ணில் அகப்படவில்லையா.. இவள் அளவு இல்லாவிட்டாலும் வத்தலும் தொத்தலுமாய் ஒருவளும் கிடைக்கவில்லையா..கருவாடாக இருந்தாலும் கண்ணில் வைத்து காத்திருப்பேனே இப்படி என்னை வஞ்சித்து விட்டாயே மருமகனே"

"ஹாஹாஹா ஓஹோ மாமனே நான் கூட நீ திருந்தி விட்டாயோ என்று எண்ணி ஒரு நிமிடம் ஆடி விட்டேன் நீயாவது திருந்துவதாவது"

"எனக்கு தான் தெரியுமே என் மருமகன் தெரியாமல் கூட தவறிழைக்க மாட்டான் என்று.ஆனால் சில நாழிகைகளுக்கு முன்னதாக தானடா ஒருவளை பார்த்து எப்படி பித்தம் கொள்ள வேண்டுமென்று பாடம் எடுத்தாய்.. நான் இப்படி நகர்ந்ததும் அப்படி வேலையை பார்த்து விட்டாயே படு பயங்கரமான ஆள் தான் போ நீ"..

"மாமா நான் என்ன கூறினேனோ அப்படியே இருக்கிறாள் உன் மகள்.. அழகு என்றால் பேரழகு பெட்டகம் போ.. என்ன திமிரு என்ன அகங்காரம் என்ன பார்வை என்ன கோபம் என்ன குரல் என்ன எப்படி என்னென்ன என்று எண்ணிலடங்கா எண்ணங்களின் உறைவிடம் அவள் மாமா"

"அந்த என்ன நங்கையின் பெயர் என்னடா"

"அவள் பெயரா வர்ணிகா.. நானே வைத்தேன் தெரியுமா"

"நீயே வைத்தாயா அப்படியென்றால் அவள் பிறந்த குழந்தையா.. அவள் வளருவதற்குள் நீ கிழவனாகி முட்டியெல்லாம் ஆடி விடுமே என்னடா செய்வாய் பிறகு"

"மாமனே மிதி வாங்காதே..அவளை பார்த்த நொடியில் நான் அவளுக்கு வைத்த பெயர் வர்ணிகா. அவள் அப்பன் என்னமோ சொல்லி அவளை அழைத்தானே என்ன அது"அவன் யோசித்து கொண்டிருக்கும் போதே

"பௌர்ணிமா"

"ஆம் பௌர்ணிமா பௌர்ணிமா"என திரும்பி பார்க்க அங்கே அவள் நின்று கொண்டிருந்தாள். இதுவரையில் அவளை காணாத வருணன் கூட அசந்து தான் போய் விட்டான் அவள் அழகில்.

"என்ன வேந்தரே என் பூர்விகம் கூட மறந்து விட்டதோ இல்லை மறக்கடிக்க படுவதற்கு முன் எச்சரிக்கையா இது"

"இரண்டும் அல்ல உன் பூர்விகம் எனக்கு தேவையற்றது. தேவையற்ற ஒன்று நினைவில் இருந்தால் தானே மறக்கடிக்க படுவதற்கு"

"தேவையற்று ஒன்று தான் வேந்தே உங்களை காண ஆவல் கொண்டது. அந்த நாசமாய் போன ஆவல் எனக்கு தோன்றாமல் இருந்திருந்தால் இந்நேரம் அளவில்லாத எங்கள் வீட்டில் ஆனந்தமாய் நீந்தி கொண்டிருப்பேன். அனைத்தையும் அழித்து நாசம் செய்து விட்டிரே நீங்களெல்லாம் இந்த லோகத்தின் வேந்தன்.."

"இந்தா பெண்ணே உதிர்க்கும் வார்த்தைகளில் கவனம் மிக அவசியம். கவனமற்று நீ உதிர்க்கும் வார்த்தை வரம்பில்லாமல் போகிறது. உனக்கு ஜென்ம சனி அதனாலே அதரனை காண ஆவல் கொண்டாய்.. உன் ஆவலே உனக்கு ஆபத்தாய் போக அதற்கு என் மருமகன் என்ன செய்வான்.உன் மேல் தவறை வைத்து கொண்டு குத்துதே குடையுதே என்று என் மருமகனை குறை சொல்கிறாயே ஏனம்மா கடற்கன்னியாக இருந்தாலும் நியாயம் தர்மம் வேண்டாமா"

"நீ யாரடா என்னை பற்றி விமர்சிக்க.. எனக்கு ஆலோசனை கூற உனக்கென்ன தகுதி உள்ளது.. ஒரு பெண்ணை அவள் விருப்பமின்றி கவர்ந்து வந்துள்ளான் உன் மருமகன். அவனுக்கு நல்லதை எடுத்து கூறி அறிவுரை சொல்லாமல் உனக்கு ஜோடி சேர்த்து வரவில்லையென்று குறை பட்டு கொள்கிறாய்.வெட்கமாக இல்லை. என் வாழ்வை மனதை உன் மருமகன் நாசம் செய்தது போதவில்லையோ. இப்பொழுது என் குல பெண்களின் நிம்மதி வேண்டுமோ உனக்கு. சீ உங்களுக்கு எல்லாம் மானமே இல்லையா.. பெயர் தான் அதர வம்சம் ஆனால் நீங்கள் அனைவரும் நீச்சர்கள்.."

அதுவரை பொறுமையாக அவளை பேச விட்டவன் அவள் கழுத்தை பற்றி உயரே தூக்க தரையிலிருந்து அவள் பாதம் அந்தரத்தில் மிதந்தது."அதரா அவள் ஆத்திரத்தில் பேசுகிறாள் அவளை விட்டு விடுடா.. அவள் பெண் என்பதை மறவாதே. அழைத்து வந்த அன்றே இம்மாதிரி நடந்து உன் மேல் வரும் அபிமானத்தை கொன்று விடாதே"

"இவள் என்னை என்ன வேண்டுமென்றாலும் பேசி கொள்ளட்டும்.இல்லையேல் கொன்றே போடட்டும். அதை விட்டு விட்டு உன்னையும் நம் வம்சத்தையும் பற்றி பேச என்ன திண்ணகம் வேண்டும் மாமா.. என்னடி உன் வம்சம். எது உன் குலம். நீ என்ன தேவலோக கன்னியா. நீ யாராக வேண்டுமானால் இருந்து விட்டு போய் தொலை. ஆனால் நீ இப்பொழுது இருப்பது அதரலோகத்தில். இந்த லோகத்தின் வேந்தன் நான்.

தேவலோக கன்னியாக இருந்தாலுமே என் காதல் வலையில் வீழ்ந்திருந்தால் தூக்கி வந்திருப்பேன் அப்படியிருக்க உன்னை விட்டு விடுவேனோ.."

"அதரா என்னடா நீ அவளை விடு ஐயோ அவள் மூச்சுக்கு திணறுகிறான் விட்டு விட்டுடா"

"விட வேண்டுமா இவளையா.. அறிவு கெட்ட மாமா பார் அவளை. எவ்வளவு திமிராக என்னையே முறைத்து கொண்டிருக்கிறாள்.. ஹேய் மூச்சு முட்டுகிறதா உனக்கு.. கீழே இறக்கி விட வேண்டுமென்றால் ஒழுங்காக உன் பேச்சிற்கு மன்னிப்பு கேள்"

மூச்சு திணறி நெஞ்சு கூடு ஏறி இறங்க அவள் கால் வரை மறுத்த உணர்வு தோன்றி மறைய"மூச்சு திணறலா கடலில் பிறந்து பாதி மனிதியாக மீதி மீனாக பிறந்தவளை கட்டான்தரையில் கிடைத்திருக்கிறீரே அப்போது திணறாத மூச்சா இப்பொழுது திணற போகிறது..கரங்களின் இறுக்கத்தை இன்னும் இறுக்கி பிடியுங்கள் வேந்தே நான் நிம்மதியாக கண்மூடி விடுவேன்"

"உன் பேச்சில் கழிவிரக்கம் கொண்டு கை நடுங்க இதயம் பதற உன்னை இறக்கி விட்டு விடுவேன் என்று நினைத்தாயோ. நான் அதரனடி உன் பாசாங்கு பேச்சுக்கள் எல்லாம் இந்த வேந்தனிடம் செல்லாது"என்றவன் அவள் கழுத்திலிருந்து கையை எடுத்து விட்டு மணிகட்டை பிடித்து தரதரவென இழுத்து செல்ல வருணனின் குரல் அவன் காதுகளுக்கு எட்டவே இல்லை.

அவளை இழுத்து கொண்டு தோட்டத்திற்கு வந்தவன் மலர் பந்தல் மேல் அவளை பிடித்து தள்ளி விட மலர்களோடு உயிருள்ள மனித மலரும் ஒன்றோடு ஒன்று உரச அது இரவு வேளை என்பதால் அவள் விழுந்த வேகத்தில் மலர்களில் ஒளிந்திருந்த மின்மினி பூச்சிகள் யாவும் மின்னி மின்னி பறக்க அவைகள் மின்னி கொண்டே அவள் மேனியில் ஆங்காங்கே அமர சற்று நேரம் வர்ணிகா இந்த லோகத்தில் இல்லை.

இப்படி ஒரு உணர்வு அவள் வாழ்வில் அவளுக்கு நடந்ததில்லை. அவ்வளவு அழகு. அழகு என ஒரு சொல்லில் அடக்கிட இயலாத அழகு.அப்படியே கண்மூடி அந்த மோக நிலையை உள்வாங்கினாள். அங்கே ஒருவன் தன்னை ரசிப்பதை கூட காணாமல். அவனோ ஏன் தான் அந்த மின்மினியாக பிறக்கவில்லையென ஏக்கம் கொண்டான். அவளின் உடல் ஒவ்வொரு முறை சிலிர்த்து அடங்கும் போதும் அதில் அவன் உள்ளமே சிலிர்த்து கொண்டது.

சற்று நேரம் தன்னை தொலைத்தவள் இரவின் ஏகாந்த சுகந்ததையும் தாண்டி தன்னுள் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்தாள். அவள் கால்கள் மெல்ல மெல்லமாக செதில்கள் முளைத்து சத சதவென்று மாறி கொண்டிருந்தது. அவளுக்கு இப்பொழுது நீர் வேண்டும்.ஆனால் அவனிடம் கூற அவள் தன்மானம் இடங்கொடுக்க வில்லை.பேசாமல் விழி மூடி கொண்டிருக்க அவள் கால்கள் முற்றிலும் தங்க நிற வாலாக மாறி தரையில் அடிக்க அவளுமே மூச்சுக்கு ஏங்கி துடிக்க அரை கண் மலர்ந்து வழியும் கண்ணீருடன் அவனை பார்க்க அவனோ சும்மவே சொடுக்கிட்டு அப்பொழுது தோன்றும் நெருப்பில் விளையாடி கொண்டிருந்தான்.

துடிக்கிறாள் கடற்கன்னி தண்ணீருக்காக ஆனால் அவள் துடிப்பிற்கு காரணமானவன் இதனை கண்டு கொள்ளாமல் விளையாடி கொண்டிருக்கிறான்.அவளின் கண்ணீர் நின்றது.வீம்பு வந்து ஒட்டி கொள்ள மெல்லமாக நகரலானாள் அங்கிருந்த குலத்தை நோக்கி. கைகளால் நகர்வதும் சிறிது நேரம் அப்படியே மண்ணில் குப்புற சாய்ந்து மூச்சு எடுப்பதுமாக இருந்தவள் ஒருவழியாக குலத்தை அடைந்தாள்.

தண்ணீர் அவளின் தாயகம்.போன உயிர் மீண்டும் வந்தது."அதரா நீ வேந்தனாக இருக்கலாம் விருப்பமில்லாத பெண்ணை கவர்ந்து வர உனக்கு சக்தி இருக்கலாம்.ஆனால் நீ அனைவரிடமும் பிதற்றும் காதலென சொல்லை நம்பிட நான் முட்டாள் அல்ல.எவ்வளவு ஆனந்தமாக இந்த நாள் விடிந்தது. அதை எனக்கே அஸ்தமனமாக்கி விட்டாயே உன்னை விட மாட்டேன் அதரனே எனக்கு நீ செய்த வஞ்சத்திற்கு பதில் கூறியே ஆக வேண்டும்.

அதுவரை இந்த பௌர்ணிமா சாக மாட்டாள்"சிறிது நேரம் நன்றாக தண்ணீரில் தன்னை ஆசுவாச படுத்தி கொண்டவள் நீந்தியபடியே ஒரு முடிவுக்கு வந்தாள்.அந்த முடிவின் படி அவள் தரைக்கு வர இப்பொழுது மீண்டும் வால் காலாக மாறிருக்க நேராக நடந்து அவனருகில் சென்றாள். அவளை நமுட்டு சிரிப்புடன் பார்த்திருந்தான் அவன். அவனருகே சென்றவள்"நாம் நாளையே திருமணம் செய்து கொள்ளலாம் வேந்தே. எனக்கு உம்முடன் உரிமையற்ற வாழ்வு வாழ பிடிக்கவில்லை. ஆதலால் நாளையே இந்த லோகத்தின் முன் நாம் விவாகம் செய்து கொள்ளலாம். "

அவள் பேசிவிட்டு சென்று விட அவளை தூண்டி விட்டு பேச வைத்தவன் வந்த ஒரே நாளில் அவள் வாயாலேயே விவாகத்திற்கு அடி போட்டு சிரிக்கிறான் கள்வன்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்