36 நெருங்கினாள்(ல்)?



டியரிஸ், எனக்கு நீங்க கொடுக்குற ஊக்கம் தான் எனர்ஜி பூஸ்ட்.. முடிஞ்சா சேனல்ல subscribe செஞ்சு எனக்கு சப்போர்ட் பண்ணுங்க❤️


குண்டலகேசி ஆவுடையப்பனின் மடியில் படுத்து இருந்தாள்.அவளது கண்கள் கலங்கவில்லை. முகமும் வாடவில்லை. ஆனால் உணர்ச்சிகள் துடைத்த தோரணையில் அவள் வாழ்வையே தொலைத்தது போல் படுத்திருந்தாள். மகளின் மனதில் என்ன இருக்கிறது என்று அவருக்குத் தெரியவில்லை. அன்று மருத்துவமனையில் தன்னை வந்து பார்த்து சென்ற மருமகன் விரைவில் மகளை தன்னைக் காண அழைத்து வருவதாக கூறிச் சென்றான்.

மகள் வருவாள்.தன்னை பார்ப்பாள். பின் கணவனோடு அவள் வீட்டிற்குச் சென்று விடுவாள். குங்குமம் நெற்றி வகுடில் சூடிருக்க கழுத்தில் மஞ்சள் கயிறு மங்களமாக வீற்றிருக்க இந்த ஏழ்மையின் பிடியில் இருந்து ஒரு நல் வாழ்க்கை அமைந்த செழுமையில் மகள் கணவனோடு செல்லும் காட்சியை மனநிறைவோடு காணலாம் என்று அந்த அன்பான தந்தை எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் அனைத்துமே பொய்யாகி விட்டது.ஒன்று மட்டும் மெய். அவர் நினைத்தது போலவே மகள் வந்தாள். வந்தியதேவன் எனும் ஹேரி அவரை வந்து பார்த்து விட்டு சென்ற மறுநாளே குண்டலகேசி அவளது வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டாள்.

 மருத்துவமனையில் அவரை பார்க்க வந்த  ஹேரி முகம் கொள்ளா சோகத்தோடு அவரை பார்த்து" மாமா.. குண்டலகேசி உங்க வீட்டில தான் இருக்கா. எனக்கும் அவளுக்கும் கொஞ்சம்.. அவ தனியா இருக்க ஆசைப் படுறா. உங்களுக்கும் துணையா இருக்கும்.நீங்க நேரா உங்க வீட்டுக்கு போய்டுங்க.." அனுபவஸ்தரான ஆவுடையப்பன்  மருமகனின் கண்கள் சொன்ன செய்தியில் மகள் மருமகனுக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்துகொண்டார்.

"என்னாச்சு மாப்பிள்ளை..என் பொண்ண கடத்திட்டு போய் கல்யாணம் பண்ற அளவுக்கு அவ மேல நீங்க ஆசை வைத்திருந்தீங்க.  இப்ப அந்த ஆசை என்ன ஆச்சு? கண்டிப்பா நீங்களா என் பொண்ணு என்னோட வீட்டுக்கு அனுப்பி இருக்க மாட்டீங்க.. எதாச்சும் பிரச்சினையா.. என்னால அதை தீர்க்க முடியுமா.. எதுவா இருந்தாலும் சொல்லுங்க மாப்பிள்ளை.. என்ன உங்க அப்பா மாதிரி நெனச்சு சொல்லுங்க.."அவர் குரலில் கலக்கம். தேறி வந்த உடம்பு மீண்டும் ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்த ஹேரி

" இல்ல மாமா நீங்களும் எத்தன நாள் இங்கேயே இருப்பிங்க.. இனிமே உங்க மத்த மாப்பிள்ளைங்க உங்களோட பொண்ணுங்கள நல்லா பாத்துப்பாங்க.. அவங்களோட வாழ்க்கைய நெனச்சு நீங்க கஷ்ட பட வேண்டாம்.. அதே மாதிரி உங்க பேர பிள்ளைங்க படிக்கவும் நான் ஏற்பாடு பண்ணிட்டேன்..  நீங்க குண்டலகேசிக்கு துணையா இருங்க"

ஆவுடையப்பன் அவன் தன்னிடம் சொல்ல விரும்பவில்லை என்பதை புரிந்து கொண்டார்.எதுவாக இருந்தாலும் சரி முதலில் சென்று தன் மகளை பார்த்தாக வேண்டும்.தாய் இல்லாத பெண் இத்தனை நாள் தன்னை காணாமல் தவித்து போயிருக்க மாட்டாளா.. என் மகளை இன்னும் சில நிமிடங்கள் தவிக்க விடுவது கூட தவறுதான். " மாப்ள எனக்கு ஒரு உதவி பண்ணுங்க.  ஒரு ஆட்டோ பிடிச்சி கொடுத்தீங்கன்னா நான் அப்படியே என் வீட்டுக்கு போயிடுவேன்"

"ஆட்டோ எதுக்கு மாமா என் ஆளுங்க உங்கள பத்திரமா கொண்டு போய் வீட்டில் விட்டுருவாங்க..உடம்ப பாத்துக்கோங்க..  அப்புறம்"ஏதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தயங்கினான்.

 ஆவுடையப்பன் அவனின் முகம் பார்த்துக் கொண்டிருக்க"அது வந்து.. மாமா எல்லாத்தையும் எல்லார் கிட்டயும் சொல்ல முடியாது. அப்படி தான் இந்த விஷயம்.  குண்டலகேசி என்னை மன்னிக்கவே இல்ல. எனக்கே தெரியும் இந்த உண்மை தெரிஞ்சா அவள் என்ன மன்னிக்க மாட்டானு.ஆனா எனக்கு வேற வழி தெரியல. மாமா உங்க பொண்ணு கிட்ட இல்ல என் பொண்டாட்டி கிட்ட சொல்லுங்க. என்ன நடந்திருந்தாலும் இனி அதை மாத்த முடியாது.இனிமே வர காலத்த நம்மளுக்கு புடிச்ச மாதிரி மாத்த முடியும். என்னை மன்னிக்க முடியாட்டியும் பரவால்ல. ஆனா வெறுத்துட வேணாம்னு சொல்லுங்க."

 அவனும் எவ்வளவோ தன்னை அடக்கிக்கொள்ள தான் முயற்சி செய்தான். ஆனால் இறுதியாக அந்த வாக்கியத்தை முடிக்கும் போது அவன் குரல் உடைந்தது. கடகடவென அவன் அனுமதியின்றி கண்ணீர் துளிகள் அவன் கன்னத்தை ஸ்பரிசித்தன. தன்னை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் மாமனார் முன்னிலையில் இன்னும் நின்று அழுது கொண்டிராமல் அங்கிருந்து வேகமாக வெளியேறி சென்று விட்டான்  ஹேரி.

 இதுவரை அவனை ஒருமுறை பார்த்திருந்த ஆவுடையப்பனுக்கு அவனுடைய குணாதிசயம் புரியவில்லை.  மகளை கடத்தி தன்னையும் தன் பிற மகள்களையும் கடத்தி ஒரு வீட்டில் அடைத்து வைத்து தங்களுக்கு வேண்டிய அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தவன்.  ஆனால் அனைத்திலும் ஒரு பித்தலாட்ட தனம் இருந்தது. உண்மையாக நேர் வழியில் செல்பவன் என்றால் நேராக வீட்டிற்கு வந்து அவர் முன்பே குண்டலகேசி கழுத்தில் தாலி கட்டி இருந்தால் அவன் நேர்மையானவன் என்று அவர் கொடி பிடித்திருப்பார்.  எப்பொழுது இந்த கடத்தலில் இறங்கி இன்று எதையோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் தொண்டை அடைத்து கண்ணீர் விட்டு செல்கிறான் அப்போதே அவரது வயதின் அனுபவத்தில் புரிந்து போனது அவன் ஏதோ ஒரு கோக்குமாக்கு தனம் செய்து தன் மகளின் கோபத்தை பரிசாக வாங்கிக் கொண்டு இருக்கிறான் என்பதை.

 அக்கா தங்கை ஆறு பேரும் மூட்டை முடிச்சோடு ஹாலில் காத்திருந்தார்கள்.  அவர்களுக்கும் வந்தியதேவன் அலைபேசி வழியாக இன்று அவர்களது கணவன்மார்கள் திரும்பி விடுவார்கள்.அந்த வீட்டில் அவர்கள் உபயோகித்த அவர்களுக்குப் பிடித்த எந்த பொருளை வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். மேலும் அவர்கள் பிள்ளைகளின் படிப்புச் செலவை அனைத்தும் அவனது பொறுப்பு என்று கூறியவன் அவர்களின் கணவன்மார்கள் இனி எந்த வித சேட்டை செய்தாலும் கண்டிக்க தான் இருக்கிறேன் என்று வாக்குறுதி தந்தான்.

 பிறகு அக்கா தங்கை ஆறு பேருக்கும் அவர்களுக்கு எந்த  கைத்தொழில் செய்ய பிடிக்கும் என்பதைக் கேட்டு அதனை முதலீடு போட்டு தொடங்கி தான் வைப்பதாகவும் வாக்கு கொடுத்தான்.அவனது பர்சனல் எண்ணை கொடுத்து எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் கேட்க கூறினான். சகோதரிகள் ஆறு பேருக்கும்  அவன் சொன்ன விஷயங்களைக் கேட்டு மனம் பூரித்து போனாலும் எங்கே தங்களது சகோதரி குண்டலகேசி.  அவளிடம் பேச வேண்டும் என்று அவனிடம் கோரிக்கை வைத்தார்கள்.

 அதற்கு அவனும் குண்டலகேசி உங்கள் அப்பா வீட்டில் இருக்கிறாள். நீங்கள் முதலில் உங்கள் வீட்டிற்கு சென்று பிறகு நிதானமாக அங்கே சென்று அவளைப் பாருங்கள். உங்களை நான் எந்த விதத்திலாவது கஷ்டப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்ற கோரிக்கையோடு அழைப்பை துண்டித்தான்.

அவர்களுக்கும் இந்த ஒரு விஷயம் புரியவில்லை.இத்தனை நாட்களில் அவர்களை கடத்தி வந்து அவன் ஒரு வினாடிகூட துன்புறுத்தவில்லை.அவர்கள் பிறந்ததிலிருந்தே பார்த்து வந்த ஏழ்மையான வாழ்விலிருந்து அவர்களுக்கு இந்த சிறிது நாட்களில் நல்ல நிலையான வாழ்க்கையை காட்டி இருந்தான்.  உண்ட உணவில் இருந்து அணியும் உடை வரை அவர்களைத் தேடி வந்தது. ஆனால் ஏன் முகம் காட்டாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான்?

 தங்கை மீது பிரியம் ஏற்பட்டிருந்தாலும் அவள் கழுத்தில் தாலி ஏற இருக்கும் இறுதி வினாடி வரை அவனுக்கு நேரம் இருந்ததே. அவன் நினைத்திருந்தால் மணமேடையில் வைத்தே குண்டலகேசிக்கு தாலிகட்டி இருக்கலாம். ஆனா ஏன் அப்படி அவன் செய்யவில்லை.. எதற்காக இந்த கடத்தல் நாடகம். இப்படி அவர்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவர்கள் கணவன்மார்கள் ஆறுபேரும்  குற்றுயிரும் குலையுயிருமாக வந்து வீடு சேர்ந்தனர். அவர்களைக் கண்டு அவர்களது மனைவிமார்களுக்கு இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.

 என்னதான் கணவனை பிரித்து எடுக்க கூறினாலும் இந்த அளவிற்கு பிரித்து எண்ணியிருப்பார்கள் என்று அவர்கள் எண்ணவில்லை.  ஒவ்வொருவரும் தங்களது கணவன்மார்கள் இந்நிலையைக் கண்டு கண்ணீர் வடிக்க இத்தனை நாள் வாங்கிய அடியில் தான் ஆண்கள் அனைவருக்கும் தங்களின் மனைவிகளின் அருமை புரிந்தது. அவர்களை அப்படியே அழ அனுமதிக்காமல் முகமூடிகள் வந்து அனைவரையும் அழைத்துக் கொண்டு அவரவர் வீட்டில் விட்டுச் சென்றனர்.

 ஆவுடையப்பனை அலுங்காமல் குலுங்காமல் அவரது வீட்டில் இறக்கி மனிதர் அக்கம்பக்கத்தார் விசாரிப்பதை கூட பொருட்படுத்தாமல் கதவைத் திறந்து கொண்டு தன் வீட்டிற்குள் சென்றார். அவரது கண்கள் குண்டலகேசியை தேடியது. என் மகள் இங்கே தான் இருக்கிறாள் என்று மருமகன் கூறினாரே. அவளைக் காணவில்லையே. அந்த சிறிய வீடு முழுவதும் அவரது கண்கள் படிந்தது. அனைவரும் படுத்துக் கொண்ட அந்த ஒற்றை அறை உள்ளே சென்று தேட அங்கே அவரது அன்பு மகள் குண்டலகேசி வெறும் தரையில் விட்டத்தை வெறித்துக் கொண்டு படுத்தவாறு கிடந்தாள்.

"குண்டம்மா"நாத் தழுதழுக்க ஆவுடையப்பன் அழைக்க அவளின் பார்வை விட்டத்தில் இருந்து அழைப்பு வந்த திசை நோக்கியது. அங்கே நின்று தன்னை கண்ணீர் மல்க பார்த்துக்கொண்டிருப்பது தன்னுடைய தந்தை என்று அவள் மூளைக்கு ஒரு வினாடியில் புரிய எழுந்தவள் ஓடி வந்து அப்பா என்ற அலறலோடு கட்டிக்கொண்டாள்.

 அழுதாள். அழுதாள். அழுதுக் கொண்டே இருந்தாள். மகளைப் பார்த்த சந்தோஷத்தில் ஆவுடையப்பனும் கண்ணீரில் மிதந்தார். இருவரும் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. குண்டலகேசியின் பார்வை தந்தையின் உடல் நலத்தை வேகமாக அளவிட்டது. அதேபோல் ஆவுடையப்பன் பார்வை வேகவேகமாக தன்னுடைய மகளின் திருமண வாழ்க்கையை அளவிட்டது.

 அவர் எதிர்பார்த்தது போலவே நெற்றி வகிட்டில் குங்குமம் சூடி மஞ்சள் கயிறுக்கு பதிலாக தாலிக்கொடி கனமாக அவளது கழுத்தில் இடம் பெற்றிருந்தது. திருமணத்துக்கு முன் இருந்ததை விட இப்பொழுது இன்னும் ஒரு சுற்று உடல் ஏறியிருந்தாள். முன்பெல்லாம் சற்று பூசினார் போலிருக்கும் இவளை பொண்ணு குண்டா இருக்கே அப்படி என்று சொல்லி நிராகரித்து விடுவார்களோ என்ற பயம்  ஆவுடையப்பனுக்கு இருக்கும்.

 ஆனால் இப்பொழுது அவள் உண்மையாகவே முன்னை விட குண்டாக தான் இருக்கிறாள். ஆனால் பூசினார் போன்ற கன்னங்களும் அடுக்கடுக்காக இருந்த கழுத்து மடிப்புகளும் அவருக்கு பெரியதாக தோன்றவில்லை. சொல்லப்போனால் அது அனைத்தும் அவளது மணவாழ்க்கையின் பூரிப்பு என்று அவருக்கு தோன்றியது.

 அன்றைய நாள் முழுவதும் இத்தனை நாட்கள் எங்கே சென்றீர்கள் என்று அக்கம்பக்கத்தார் ஜாடை மாடையாக வந்து விசாரித்து விட்டுச் செல்ல வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லி ஆவுடையப்பன் தான் சமாளித்துக் கொண்டிருந்தார். குண்டலகேசி சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு தெரியும் எப்படியும் தனது சகோதரிகள்  தன்னைக் காண இங்கே வருவார்கள் என்று. தன்னுடைய அப்பாவையே விடுதலை செய்தவன் தன் சகோதரிகளையும் விடுதலை செய்யாமல் எப்படி இருப்பான்...

 எனவே அனைவருக்கும் சேர்த்தே உணவு தயாரித்தாள்.. ஆவுடையப்பன் தன் மகளிடம் தனியாக பேச முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்தார்.அக்கம்பக்கத்தார் அனைவரும் ஊர் வம்புக்கு அலைந்து கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக பேசி சரிக்கட்டி தன் மகளிடம் செல்லலாம் என்று பார்த்தால் அதற்குள் அவருடைய மற்ற பெண்கள் அனைவரும் அடிப்பட்ட கணவனை கூட பக்கத்திலிருந்து பார்த்துக் கொள்ளாமல் தந்தை வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

வந்தவர்கள் நேராக தன் தகப்பனின் உடல் நலத்தை கண்டு மகிழ்ந்து பின் இத்தனை நாட்கள் காணாத சகோதரியை கட்டிப்பிடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.. தன்னுடைய மற்ற மகள்களை பார்த்த சந்தோஷத்தில் ஆவுடையப்பன் இப்பொழுதுதான் குண்டலகேசியிடம் அவளது மண வாழ்க்கையை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்.

 என்ன விசாரித்து என்ன அவள் வாய் திறந்தால் தானே. ஒன்றுமே பேசாமல் அனைவருக்கும் உணவை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தவளை காண்கையில் என்ன சொல்வது என்று அவர்களுக்கே புரியவில்லை. தாங்கள் ஒரு வார்த்தை பேசினால் பதிலுக்கு நூறு வார்த்தை பேசும் தங்களது சகோதரி இன்று தாங்கள் இத்தனை வார்த்தைகள் பேசியும் அதற்கு மறுமொழி கூறாமல் அமைதியான புன்னகையுடன் கடந்து செல்கையில் என்னமோ ஒன்று உள்ளது என்று அவர்களுக்கு சொல்லாமல் புரிந்தது.

 அதுவே ஆவுடையப்பனின் எண்ணமாகவும் இருந்தது. குண்டலகேசி உணவு பாத்திரத்தை எடுக்க உள்ளே சென்றதும் தனது மற்ற பெண்களிடம்"அம்மாடி.. அவளுக்கு என்னமோ பிரச்சனை போல.. நாம எல்லாருக்காகவும் அவ ஓடி ஓடி உழைச்சிருக்கா.. ஓடா தேஞ்சிருக்கா.. அவளுக்கு நம்ம கிட்ட சொல்லனும்னு தோணினா சொல்லுவா.. அதுவரைக்கும் நாம எதுவும் கேட்டு அவள கஷ்டப் படுத்த கூடாது.. அவளா சொன்னா சொல்லட்டும்.." என்று விட சகோதரிகள் அனைவரும் கவலையை மறைத்து குண்டலகேசியிடம் சந்தோஷமாக பேச முற்பட்டனர்.

 குண்டலகேசி அப்போதும் பட்டும் படாமல் பேசி விட்டு அனைவரோடும் அமர்ந்து உணவு அருந்தி தந்தைக்கு தேவையான மாத்திரைகளை எடுத்துக் கொடுத்து விட்டு அறைக்குள் சென்று முடங்கி விட்டாள்.  பிற பெண்கள் அவளை கவனித்துக் கொள்ளுமாறு ஆவுடையிடம் சொல்லி விட்டு தங்கள் வீட்டிற்கு கிளம்ப ஆவுடை குண்டலகேசியை யோசனையாக பார்த்தார்.

 இதுவே ஒரு வாரம் தொடர்ந்தது. இந்த ஒரு வாரத்தில் நடந்த இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் அவரது மற்றும் மருமகன்கள் யாவரும் வீடு தேடி வந்து மாமனார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தாங்கள் திருந்தி விட்டதாக அவர்களே அறிவித்து இனி இந்த குடும்பத்தை தாங்கும் தூண் நான் தான் என்று அவர்களுக்குள் சண்டை போட்டு ஒரு வழியாக இடத்தை காலி செய்தார்கள்.

எப்படியோ தன்னுடைய குழந்தைகளை அவர்கள் நன்றாக பார்த்துக் கொண்டால் போதும் என்று ஆவுடையப்பன் எண்ணினார்.மாறவே மாட்டார்கள் இனி தன் மகள்களின் வாழ்க்கை மாறவே மாறாது என்று எண்ணியது கூட இப்போது மாறி விட்டது. ஆனால் யாருக்குமே துரோகம் இழைக்காத குண்டலகேசி ஏன் இப்படி வாடிய கொடியாக இருக்கிறாள்.அவளது பிரச்சனையை பலவகையில் கேட்டுப் பார்த்தார் ஆவுடையப்பன்.

மூச்சு கூட விட மாட்டேன் என்கிறாள். தன் மகள் இவ்வளவு அழுத்தக்காரியா? வந்தியதேவன் குறித்து கொடுத்திருந்த எண்ணிற்கு அழைத்து அவனிடம் என்ன பிரச்சனை என்று கேட்டார்.  அவனும் வாயைத் திறந்து பதில் கூறவில்லை.  மண்டை காய்ந்த நிலையில் ஒன்றே ஒன்று மட்டும் அவருக்கு புரிந்தது.  பிரச்சினைக்கு காரணமான இருவருமே வாய் திறந்து சொன்னால் ஒழிய இதில் தான் முன் சென்று செய்ய ஒன்றுமே இல்லை என்பது.

வாயைத் திறந்து தன் பிரச்சினையை சொல்லாவிட்டாலும் குண்டலகேசி தன் அப்பாவிடம் ஆறுதல் தேடினாள் மௌனமாக. அன்று அப்படிதான் அவர் தரையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருக்க மெல்ல நடந்து வந்து அவரது மடியில் படுத்துக் கொண்டாள். அவளின் மனநிலை புரிந்ததோ என்னவோ எதுவும் பேசி அவளை மேலும் துன்பப்படாமல் அவளது கூந்தலை வருடிக் கொடுத்து முதுகை தட்டிக் கொடுத்தார் அந்த பாசமான தகப்பன்.

 கண்மூடி படுத்திருந்தாலும் குண்டலகேசியின் எண்ணம் அன்றைய நாளுக்கு சென்றது. வந்தியதேவன் உடலில் இருந்த  ஹேரி தன்னிலை விளக்கம் கொடுத்துவிட்டு ஏதோ மந்திர உச்சாடனங்களை உச்சரித்தான். உடனே வந்தியதேவன்   உடலிலிருந்து பிரிந்த ஆத்மா ஹேரி உடலுக்குள்ளும் ஹேரி உடலில் இருந்த வந்தியதேவன் ஆத்மா  அவனது மெய்யான உடலுக்குள்ளும் புகுந்தது. இப்பொழுது இருவருக்குமே தங்களது உண்மையான உடல் கிடைத்து விட்டது.

 ஆனால் குண்டலகேசிக்கு அனைத்துமே இழந்ததை போல ஆனது. ஹேரி அவனுடைய பக்க நியாயத்தை கூறிவிட்டான். இப்பொழுது வந்தியதேவன் என்ன கூறப் போகிறேன் என்பது போல குண்டலகேசி அவனைப் பார்த்தாள். ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் அல்லவா? அவளது பார்வையை வைத்தே அவள் என்ன நினைக்கிறாள் என்பதை கணித்து விட்டான் வந்தியதேவன்.

 குண்டலகேசி கண்களோடு தன் கண்களை கலக்க விட்டு"இன்னிக்கு நீ அனுபவிக்கிற எல்லா கஷ்டத்திற்கும் காரணம் நான் மட்டும்தான். அன்னைக்கு போன பிறவியோட முடிய வேண்டிய பிரச்சனைய நான் காதல் பேர் சொல்லி இத்தனை தூரம் கொண்டு வந்துருக்கேன். விதிய மாத்துறென்ற  பெயரில  நம்ம விதிய இப்படி சிக்கலாக்கிட்டேன். நா மாந்திரீகத்த என்ன காப்பாத்துற ஆயுதமா பயன்படுத்த என்னைக்குமே நெனச்சது இல்ல.

 அதனாலதான் நான் ஜெயில்ல இருந்த போதும் சரி.. அதுக்கு பின்னால என் உயிரே போற நிலைம வந்தப்போ சரி மாந்திரீகத்தை பயன்படுத்தவே இல்ல. அப்படியே இருந்து இருக்கலாம். ஆனா உன்மேல நான் வைத்திருந்த பாசம்.அது வெறியா மாறிருச்சு. அந்த வெறி தான் அந்த ஜென்மத்துல முடிய வேண்டிய பந்தத்தை  இந்த ஜென்மத்துக்கு இழுத்துட்டு வந்துருக்கு..நந்தனா என் காதல் உன்னை சேர முடியாம போயிருக்கலாம்.. வந்தியதேவனா என்னோட காதல்  இன்னும் புனிதமா உனக்காக காத்துட்டு இருக்கு..

 வந்துரு குட்டி. இத்தன நாள் உனக்கு நடந்தது எல்லாமே துரோகம்.  பித்தலாட்டம்.  ஆள் மாறாட்டம். உன்ன ஏமாத்தி  அடைஞ்சிருக்கான்.இதுக்கு பேர் காதல் இல்ல. தயவுசெஞ்சு  இப்போ உனக்கு உண்மை தெரிஞ்சு போச்சு.அவன் உனக்கு வேணாம். நீ போன ஜென்மத்துல காதலிச்ச நந்தன் நான் தான். இவனால தான் நாம அப்ப சாக வேண்டியதா போச்சு. இந்த ஜென்மத்துல இவன் கூட இருந்தா கண்டிப்பா நீ நல்லாவே இருக்க மாட்டே.

நீ இல்லாம நானும் இருக்க மாட்டேன். வந்துரு குட்டி"கைநீட்டி அவளிடம் யாசித்தான் வந்தியதேவன். குண்டலகேசி மெல்ல எழுந்தாள். தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் இரண்டு ஆடவர்களையும் ஒரு நொடி பார்த்தாள்.பின் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து அந்த அறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடி முன் வந்து நின்றாள்.  மனம் உடைந்து சுக்கு நூறாக அள்ளவே முடியாத நிலையில் இருந்த போதும் அவளின் துடுக்குத்தனம் வெளிப்பட்டது.

 கண்ணாடியில் தன்னை அப்படியும் இப்படியும் திருப்பி பார்த்துக் கொண்டவள்

"எந்த பக்கம் பாத்தாலும் நா ஒலக அழகி மாறி தெரியலையே. எனக்கு போயா போன ஜென்மத்துல இருந்து ஹெவி காம்பெடேஷன்.. ஏன்டா அழகி அவப் பாட்டுக்கு இருந்தா.. ஏதோ அவ பாட்டி கட்டி வைக்க இருந்தவன கட்டிக்கிட்டு காவேரில முதல் மரியாதை ராதா மாறி ரவிக்கை இல்லாம சேலை கட்டி பரிசல ஒட்டிட்டு இருந்துருப்பா.

அந்த ரெண்டு பேர கூட்டிட்டு வந்து அதுங்களுக்கு உதவ போயி அந்த வெள்ளக்காரன் அவ மேல கண்ண வெச்சு கடைசியில உங்க காதல் கலியாட்டங்களுக்கு அவள பழிக்கொடுத்துடிங்களேடா..நல்லா இருப்பிங்களாடா நீங்க ரெண்டு பேரும்..

ஏன்டா முண்டம் உனக்கு மாந்திரிகம் தெரிஞ்சிருந்தா அழகிய எப்படியாச்சும் உசுரோட கொண்டு வந்து குடும்பம் நடத்திருக்கணும். அத விட்டுப்புட்டு அவளுக்கு கொள்ளி வெச்சு நீயும் போயி சேந்துட்ட. செத்த நாய் பொத்திக்கிட்டு சாக வேண்டியது தானடா. எதுக்கு டா மறுபிறவி மண்ணாங்கட்டினு வரம் கேட்ட..

நீ பொறந்து ச்சீ படு.. என்ன ஏன்டா இழுத்து விட்ட... அப்றம் நீ.. வெள்ளக்காரனா இருந்த ஒனக்கு ஒரு வெள்ளக்காரி கண்ணுல படல. ஊரான் வீட்டு பொண்டாட்டி தான் உங்களுக்கு மணக்குதோ? எப்படியெல்லாம் பிளான் போடருக்க நீயு.. சரி டேய் ஜென்ம சைக்கோங்களா இதெல்லாம் நடந்தது போன ஜென்மத்துலடா..

அப்ப உன் பேரு நந்தன். இவன் பேரு என்ன எழவோ சொன்ன வாயில நொழையில..துரைன்னு வெச்சுக்குவும். என் பேரு அழகி... ரவிகை இல்லாம முதல் மரியாதை ராதா மாறி இப்ப நா சிட்டிக்குள்ள திரிஞ்சா உடனே தூக்கி சோனாகாஜிக்கு பார்சல் பண்ணிருவானுங்க காஜி புடிச்சவனுங்க.

நான் சொல்ல வரறது புரியுதாடா உங்களுக்கு.. போன ஜென்மத்த அப்டியே குழித் தோண்டி பொதைக்காம இம்மாம் தூரம் இழுத்துட்டு வந்து விட்ருக்கீங்க. நான் என்னடா பாவம் பண்ணேன் உங்களுக்கு.. ஆவுடைக்கு பிள்ளையா பொறந்து ஆட்டுப்பால் வாங்க கூட வாக்கிலாம இருந்தாலும் நான் பாட்டுக்கு இருந்தேனே. கூடு விட்டு கூடு பாஞ்சி எனர்ஜி வெஸ்ட் பண்ணி எல்லாம் எதுக்கு..

இதுக்கா.. இந்த உடம்புக்கா..இதுக்கு தானடா ரெண்டு பேரும் அலையுறிங்க"அதுவரை நிதானமாக பேசிக் கொண்டிருந்தவள் திடீரென ஆவேசம் வந்தவளை போல கத்தி தன் உடைகளை கிழித்து வீசி நிர்வாணமாக நிற்க அவளது செய்கையில் ஆண்கள் இருவரும் ஸ்தம்பித்து நின்றனர்.

ஒரு பெண்ணின் உச்சக்கட்ட வேதனை அவள் முகத்தில் குறிப்பாக கண்களில் இருந்து வெளிப்பட்டது..ஒரு சில நொடி ஸ்தம்பித்து நின்ற இருவருமே ஒருங்கே ஓடி வர வந்தியதேவன் தன் மேலாடையை கழட்டி அவளை மூட ஹேரி போர்வையை உருவி வந்து மூடினான்.

குண்டலகேசி காட்டுத் தானமாக கத்தினாள்"போங்கடா என்ன விட்டு போயி தொலைங்கடா.. காதல்னு சொல்லி இன்னும் எத்தன காலத்துக்குடா பொம்பளைங்கள எழவெடுப்பீங்க.. உங்களுக்கு எல்லாம் கேடு வர.. பொம்பளைங்க சாபம் சும்மா விடாதுடா உங்கள.. போங்க இங்க ஒரு நாயும் நிக்க கூடாது. போங்க போங்க.. போலன்னா எரியுற கொள்ளிக்கட்டய எடுத்து என் பிறப்புறுப்புல நானே நெருப்பு வெச்சி பொசுக்கிருவேன்..போங்க"

அந்த மாளிகை அதிரும் வண்ணம் கத்தியவளின் வேதனையில் சிலையாகிய இரு ஆண்களும் செய்வதரியாமல் வெளியேற குண்டலகேசி அப்படியே அமர்ந்து அடித்துக் கொண்டு அழுதாள்.அவளுக்கு அங்கே இருக்க மூச்சு முட்டியது. யோசிக்க முடியவில்லை. அழுது அழுது சோர்ந்து விட பொழுதும் விடிந்தது. எழுந்து சென்று குளித்தவள் உடையணிந்து வெளியே வர அறைக் கதவின் மேலயே சாய்ந்து கொண்டு கிடந்தனர் அவள் வாழ்வை கேள்விக் குறியாகியவர்கள்.

குண்டலகேசி ஹேரியை பார்த்து "இப்பவே நான் என் வீட்டுக்கு போகணும். ஏற்பாடு பண்ணு. இல்ல நேத்து நான் சொன்னது தான்"அவள் கண்ணில் தெரிந்த உக்கிரத்தில் பேசும் சக்தியற்று அவளை அழைத்து வந்து விட்டான் ஹேரி.. வந்தியதேவனும் ஹேரி அனுமதி இல்லாமல் பின்னால் ஏறிக் கொண்டான்.அவனை பொறுத்த வரை குண்டலகேசி யோசிக்க அவகாசம் வேண்டும்.

ஹேரி பரிதாவிப்போடு அவளை பார்க்க கதவை அறைந்து சாத்தினாள்.
 
தொடரும்.

Comments

  1. Evan nalavan evan ketavan ni therlaye

    ReplyDelete
  2. Interesting ud sis super hospital ah hari pathana avanoda uruvam deva va irundhicha hari ah pathutu avudai reaction pannalaya achoooo kesi ipa enna decide panna poranga

    ReplyDelete
  3. Yanama epadi pandinga kundu epa epadi muduvu yaduka poranu thariyalaya

    ReplyDelete
  4. Kundallakesi ennna mudivu edhupa nnu pakkarakku aarvam jasthiya iruku sis,,,sikram next ud podhunga.

    ReplyDelete
  5. Super ma waiting for next ud semmaya pothu sis story

    ReplyDelete
  6. Kesi enna decide panna poralo.. VD ah Harry ah??? 😟😟

    ReplyDelete
  7. என்ன திடீர்னு இப்படி ஒரு முடிவு,😳😳😳😳😳😳😳😳😭😭😭😭😭😭😭😭👌👌👌👌👌👌👌நிலா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்