பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 15


இருபது கோடி நிலவுகள் கூடி

பெண்மையானதோ

என் எதிரே வந்து புன்னகை

செய்ய கண் கூசுதோ

நிலாவின் முன்பு கேள்வியோடு அமர்ந்திருந்தான் ரிஷி.எப்படி அவனிடம் வாரம் என்பது என்னவென்று கூறுவது என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தாள் வெண்ணிலா.

“வெண்ணிலா வந்து இவ்ளோ நேரமா ஒக்கார்ந்து இருக்கேன்.என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லு மா..இது பெஸ்டிவல் டைம். ஏற்கனவே உன் புருஷன் எங்க போற ஏது போறன்னு கேட்டு என் உசுர எடுத்துட்டான்..நான் சீக்கிரம் போகணும்..”

“அண்ணே அது வந்து..”ஒரு நீண்ட பெருமூச்சை எடுத்து விட்டவள் நேற்று அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை பற்றி அவனிடம் விவரித்தாள்.பிரியா தனக்கு அனுப்பிய புகைப்படத்தை அவனிடம் காட்டினான்.

“சோ இதப் பாத்து நீ அவன சந்தேகப்பட்டுருக்க..அவனும் ஒண்ணுத்தயும் வெளக்கமா சொல்லாம வானத்துக்கும் பூமிக்கும் கிடந்து குதித்திருக்கான் அதானே”

“இந்த பொண்ணு யாருண்ணே.. உங்களுக்கு தெரியுமா”

“ம்ம்ம் இந்த பொண்ணு பேரு ராகினி. எங்க கூட காலேஜ்ல படிச்சா. ராஜ் மேல பைத்தியமா இருந்தா.அவன் கிட்ட எப்பவும் ப்ரொபோஸ் பண்ணிட்டு இருந்தா. ஆனா அவன் கண்டுக்கவே இல்ல. ஒரு நாள் வீட்ல அத்த மகன கட்டிக்க சொல்றாங்க. கடைசியா என்ன சொல்றேன்னு வந்து கேட்டா. இவன் திரும்பியும் பாக்கல. அவளும் போயிட்டா. அத்த மகன கட்டிக்கிட்டு நல்லா இருப்பானு நெனச்சோம். ஆனா போன மாசம் தான் எங்க ஃப்ரன்ட் ஒருத்தன் சொன்னான்.

ராகினிய மெண்டல் ஹாஸ்பிடல்ல பாத்தானு..கையும் ஓடல. காலும் ஓடல.ரெண்டு பேரு அங்க போனோம்.. ராகினியோட புருஷன் வேற ஒரு பொண்ண லவ் பண்ணியிருக்கான்..அந்த பொண்ண கல்யாணம் பண்ண வீட்டுல ஒத்துக்கல.. மீறி கல்யாணம் பண்ணா சொத்துல ஐஞ்சு காசு கூட குடுக்க மாட்டேன்னு அவன் அப்பா சொல்லியிருக்காரு.அந்த நாசமா போறவன் அதுக்கு பயந்து ராகினி கழுத்துல தாலி கட்டிருக்கான்.. லவ் பண்ண பொண்ணு கூட ரகசியமா குடும்பம் நடத்திருக்கான். இது எதுவுமே தெரியாத ராகினி,ராஜ் மேல இருந்த காதல தனக்குள்ளே புதச்சு கிட்டு இவனுக்கு உண்மையா இருந்திருக்கா.. அவனும் இத்தன வருஷம் நடிச்சிட்டு இவ கூடவும் வாழ்ந்து கிட்டு அந்த பொண்ணு கூடவும் வாழ்ந்துருக்கான். ஒரே போன்.. டபுள் சிம்..

அந்த பொண்ணுக்கு ரெண்டு புள்ளைங்க.ராகினிக்கு புள்ள இல்ல..தெனம் மாமியார் குத்தி காட்டி பேச இவனும் அதையே செய்ய ராகினிக்கு வெறுத்து போச்சு.. தற்கொல பண்ணிக்க ட்ரை பண்ணிருக்கா.. காப்பாத்திட்டாங்க.. ஒரு நாள் வீட்ல யாரும் இல்ல.. தூக்கு போட்டு சாகலாம்னு பாத்துருக்கா.அவ நல்ல நேரமோ கெட்ட நேரமோ பக்கத்து வீட்டு பையன் என்னத்தயோ கேக்க கதவ தட்ட உள்ள பேச்சு மூச்ச காணோம். சரின்னு சொல்லி திரும்புறப்போ உள்ள பாத்திரம் உருலுற சவுண்டு.ஜன்னல் வழியா எட்டி பாத்தா ராகினி கயித்துல ஊசலாடிட்டு இருந்துருக்கா.கதவ ஒடச்சு உள்ளார போயி அவள காப்பாத்திருக்கான். அந்த நேரம் பாத்து ராகினியோட புருஷன் வர அவ்ளோ தான்.அவன அவளோட கள்ள காதலன்னு சொல்லி கத கட்டி அத ராகினி குடும்பத்தையும் நம்ப வைச்சு அவள வேணானு டிவோர்ஸ் பண்ணிட்டு அந்த பொண்ண கூட்டிட்டு வந்து குடும்பம் நடத்தவே ஸ்டார்ட் பண்ணிட்டான்.”

“அவனோட வீட்ல ஒன்னும் சொல்லலையா”

“ரெட்ட ஆம்பள புள்ளையோட ஒருத்தி வந்து நிக்க இவள துரத்தி விட தானே பாப்பாங்க.. ராகினி குடும்பமும் மானம் போச்சு கவுரவம் போச்சுன்னு இவள பாடா படுத்த ஒரு கட்டத்துல தனியா பேச ஸ்டார்ட் பண்ணிருக்கா. ரோட்ல வர போற புள்ளைங்கள தூக்கி வெச்சிருக்கா. உடனே பைத்தியம்னு சொல்லி இங்க தள்ளிட்டாங்க. நானும் ராஜும் போனப்போ எல்லாத்தையும் சொல்லி அழுந்தா. வெளிய போறதுக்கு பதிலா பைத்தியம் மாறி வேஷம் போட்டு இங்கயே இருந்துரலாம்னு சொன்னா.மனசு கேக்கலம்மா.. அவள ராஜ் கூட்டிட்டு வந்தான்.ஒருவேள உன்ன பாக்காம இருந்திருந்தா அந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணிருப்பான்.அவளுக்கு இன்னோரு வாழ்க்க கொடுத்துருப்பான்.”

“இப்ப அந்த பொண்ணு எங்க”

“ராகினி சைக்காட்ரிஸ்ட் கிட்ட டிரீட்மென்ட் எடுத்துட்டு இருக்கா. எங்களுக்கு தெரிஞ்ச இன்னொரு ஃரண்ட் திவ்யா வீட்ல இருக்கா. அவளுக்கு ராஜ் தவிர மத்த யாரையும் அவ்வளவா அடையாளம் தெரியல. தெரிஞ்சிக்க விரும்பல.. அவன பாத்தா மட்டும் கொஞ்சம் நார்மல்லா இருக்கா. மத்தவங்கள பாத்தா ஒரு மாதிரி பயந்து அழறா.நேத்து அப்டி தான் அவ திவ்யா தம்பிய பாத்து அழ அவள சமாதானப்படுத்த ராஜ் போயிருந்தான்..

அவ சமாதானம் ஆகாம ரொம்ப நேரம் அழ அவள பக்கத்துல இருந்த பார்க்குக்கு கூட்டிட்டு போயி பேசி நார்மல் மூடுக்கு கொண்டு வந்தான். ஒரு ஆறுதலுக்காக அவ நெத்தியில கிஸ் பண்ணிருக்கான். அத போயி யாரோ வேணும்னே உன் கிட்ட போட்டோ எடுத்து போட்டு கொடுத்துருக்காங்க.. வெண்ணிலா ராஜ் மனசுல எப்பவும் ஒருத்திக்கு மட்டும் தான் இடம். அந்த ஒருத்தி நீதான்..உன் மேல உசுரயே வெச்சிருக்கான் பயபுள்ள.. பாத்துக்கோ..”அதற்குள் ரிஷியின் ஃபோன் அதிர எடுத்து பார்த்தான்.

“உன் புருஷன் தான்.. மூக்கு வேர்த்துருச்சு.. நா கெளம்புறேன் மா”.. அவன் சென்று விட்டான்.

தன்னை நினைத்தே பெரும் கோபம் கொண்டாள் நிலா. அவளின் இந்த நோயால் தாழ்வு மனப்பான்மையில் என்னென்ன பேசிவிட்டாள். தவறே செய்யாமல் உத்தம மனப்பான்மையில் ஒரு பெண்ணுக்கு உதவி செய்ய போனவனை தரக்குறைவாக பேசி விட்டாள்.வாயிலேயே மிதிக்காமல் விட்டானே..கைபேசியை எடுத்தாள் அவனிடம் மன்னிப்பு கேட்க. ஆனால் அழைக்கவில்லை..ஒரு மன்னிப்பில் தவறு சரியாகிடுமா?

வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றாள்.மாறன் அவளது ஸ்கூட்டியை இங்கயே கொண்டு வந்து கொடுத்து விட்டார்.வெளியே சென்றவள் நர்சரிக்கு சென்று அழகழகான பூச்செடிகள் வாங்கி வந்து தன் கையாலே நட்டு வைத்தாள்..வீட்டில் பொருட்களை எல்லாம் இடம் மாற்றி வைத்தாள். அவனுக்கு பிடித்த சமையலை செய்து அவள் குளித்து வர அவளது படுக்கையறை முழுவதும் விதவிதமான பூச் செடிகள்.

அவள் துண்டு மட்டுமே கட்டிருக்க அவளை பின்னிருந்து அணைத்து கழுத்தில் முகம் புதைத்து சந்திரிகா சோப்பின் நறுமணத்தை தன்னுள் நிரப்பி கொண்டவன்

“பிடிச்சிருக்கா”

“ஸாரி”

“நா பூச்செடி பிடிச்சிருக்கானு கேட்டேன்”

“நா ஸாரி கேட்டேன்”

“நா தான் ஸாரி கேக்கணும். நேத்து கடையில வேற டென்ஷன். அப்டியே வீட்டுக்கு வந்து உன்ன வேற ரொம்பவே திட்டிட்டேன்.. மாமா மேல கோபமா டா.. “

“ம்ஹும்”அவளை திருப்பி அணைத்து கொண்டவன் ரிஷி கூறியது போலவே ராகினியை பற்றி சொல்லி முடித்தான்.நிலா முகத்தை பார்த்து

“எனக்கு இந்த வெண்ணிலா போதும். எந்த நட்சத்திரமும் சைட்ல வேணா.. முழு பௌர்ணமியே எனக்கு கெடச்சிருக்கு இதுக்கு மேல என்னடி வேணும்”

“ராஜ்.. உன் காதலுக்கு நான் தகுதியானவ இல்ல.. எப்டி என்ன வெறித்தனமா லவ் பண்ற.. நா உன்ன சந்தேகம் படுறேன்..டார்ச்சர் பண்றேன்.. சிடு சிடுன்னு இருக்கேன்.. இப்டி இருந்தும் ஏன்”அவள் மூக்கை வலிக்காமல் கடித்து

“ஏன் ஏன் ஏன்? பெரிய பிரபு இவங்க.. ஏன்டி இதெல்லாம் எதனால.. நீ என்ன அவ்ளோ லவ் பண்ற.. அதான் நா உன்ன விட்டு போயிருவேன்னு பயப்படுற..இந்த ராஜ் மித்ரன் முழுசா மொத்தமா எப்பவும் என் வெண்ணிலா குட்டிக்கு தான் போதுமா..”

“இனிமே என்ன நடந்தாலும் சரி ராஜ். இந்த மாறி உன்ன சந்தேகம் பட மாட்டேன்..இப்ப என்ன விடு நா டிரஸ் போடணும்.. ஆமா ஏன் இவ்ளோ சீக்கிரம் வந்துருக்க..”

“மனசே சரியில்லடா.. உன்கிட்ட சொல்லாம காலையில போய்ட்டேன். நேத்தும் சண்ட. மத்தியானமே வரலாம்னு பாத்தேன் முடியல. அதான் ஓரளவு ஒர்க் முடிஞ்சதும் ஓடி வந்துட்டேன்”

“ம்ம்ம்.. நீ வெளிய போ ராஜ்.. நா வரேன்”

“மனசாட்சி இல்லயாடி..உனக்கு.. பொண்டாட்டி இப்டி இருக்கும் போது எந்த புருஷன் வெளிய போவான்..”என்றவன் அவள் சுதாகரிக்கும் முன் சுற்றி வளைத்து அவளை சூறையாடி விட்டான். அதன் பிறகு மீண்டும் இருவரும் குளித்து உண்டு அந்த நாள் அவர்களின் காதலின் ஆழம் இன்னும் அதிகமாகியது.

குழைகின்ற தங்கங்கள்

கன்னங்கள் ஆகாதோ

நெளிகின்ற வில் ரெண்டு

புருவங்கள் ஆகாதோ

மறுநாள் ராஜ் நிலாவை கடைக்கு கூட்டிச் சென்றான் அவள் மறுக்க மறுக்க.. நிலாவிற்கு முகத்தை காட்டவே சங்கடமாக இருந்தது. ஏனென்றால் கடையில் ஆடைகள் வாங்க வந்தவர்கள் ராஜுடன் வந்திறங்கிய நிலாவை பார்த்து தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.. இதற்கு தான் முகத்தை ஷாலால் மறந்திருந்தாள் நிலா. ராஜ் காரிலிருந்து இறங்கும் போது அதை உருவி போட்டு விட்டான்.

நிலாவை கைபிடித்து அழைத்து சென்றவன் ஆபீஸ் அறைக்கு சென்று அங்கே தனத்திருக்கையில் அவளை அமர வைத்தான்.

“ராஜ் ஏன் இங்க கூட்டிட்டு வந்த?”

“என் பொண்டாட்டிய பாத்துட்டே இருக்க தான்”

“சொல்லு ராஜ்”சிணுங்கினால் நிலா.

“நமக்கு கல்யாணம் ஆனதுக்கு நம்ம ஸ்டாப்ஸ் எல்லோருக்கும் சின்னதா பார்டி கொடுக்கணும்டா. அதுக்கு தான் டிரஸ் எடுக்க வந்துருக்கோம். டிரஸ் எடுத்துட்டு அப்டியே கடைய பாத்துட்டு கெளம்பலாம் ஓகேவா”

“ராஜ் இது உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா?”

“வந்து ரெண்டு வாய் சாப்பிடு போட்டும்”என்று சிரித்தான் ராஜ். ஆனால் நிலாவால் சிரிக்க முடியவில்லை. கங்கா கமலா இருவரை நினைத்து பயந்தவள் ராஜ் இருக்கும் தைரியத்தில் மனதை திடப்படுத்தி கொண்டாள்.

தொடரும்

Comments

  1. சூப்பர் சண்டை போட்டு சீக்கிரம் சமாதானம் ஆகிட்டாய்ங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்