பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 18


"நிலா எவ்ளோ நேரம் சீக்கிரம் வா"கிளம்பி வெளியே தயாராக இருந்தவன் தன் மனைவியை அழைத்தான்.

"இரு வரேன்"நிலா குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தாள்.. தாய் பால் கொடுக்க இயலாத நிலையில் பவுடர் பால் கொடுக்க அது குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை. குமுதாவிடம் குழந்தைக்கு பால் கொடுக்கச் சொல்ல குழந்தை குமுதாவிடம் பால் குடிக்க மறுத்தது..  பிறந்து இரண்டே நாளான குழந்தைக்கு பால் மட்டுமே ஆகாரம். அதுவே சரியில்லாத பட்ச்சத்தில் குழந்தையின் உடல் லேசாக சுட ஆரம்பித்தது.

உடனே பயந்து போன நிலா ராஜிடம் சொல்லி அழ அவன் வீட்டிற்கு வந்து குழந்தையையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு குழந்தை நல கிளிக்னிக்கிற்கு சென்றான்.மருத்துவர் இவனது தோழிதான்.ஓரளவு குழந்தையைப் பற்றிய விஷயங்களை கூற அவர் அறிவுறுத்திய வேறு பால் பவுடரை வாங்கி கொண்டு வீடு வந்து சேர்ந்தனர்.. கமலா, காளை பாண்டியனோடு ராஜ் வீட்டிற்கு முந்தினம் வந்து ஒரே பிரச்சனை.

 கங்கா தற்கொலை முயற்சி செய்துள்ளாள். நல்லவேளையாக கமலா எதுவும் நடக்காமல் கங்காவை காப்பாற்றி விட்டார். இதற்கெல்லாம் காரணம் அந்த குழந்தைதான் என்று இவர்கள் மடத்தனமாக நம்பினார்கள். குழந்தை பிறந்த நேரம் தான் நன்றாக இருந்த குடும்பம் இப்படி சிதறிவிட்டது.குணா ஒரு பக்கம் கங்கா ஒரு பக்கம் என்று பிரிந்து விட்டார்கள்.குழந்தை தலை சுத்தி பிறந்தது வேறு தாய்மாமன் உயிருக்கு உலை என்று ஏதோ ஒரு குருட்டு ஜோசியர் குருட்டாம்போக்கில் ஜோசியம் சொன்ன காரணத்தால் அதை வேறு சாக்காக கட்டிக்கொண்டு இங்கே வந்து கரகம் இல்லாமல் ஆடிக்கொண்டிருந்தார் கமலா.

முதலில் குழந்தைக்காக வந்தவர் பிறகு குழந்தையை தூக்கி வைத்திருந்ததவள் மேல் அவரின் கோபம் திரும்பியது. அவரது வழக்கமான சாபம் விடுவதை செவ்வன செய்தவர் ராஜ் அவரைத் திட்டியனுப்பியதால் வேறு வழியில்லாமல் முனுமுனுத்துக் கொண்டே சென்று விட்டார்..

 நிலாவிற்கு பலமுறை பத்திரம் கூறிவிட்டு ராஜ் கடைக்குச் சென்றான். குமுதா நிலா வீட்டிற்கு வந்தாள். "ஏய் நிலா என்னடி நேத்து அந்த பொம்பள வந்து அந்த பேச்சு பேசிட்டு போனுச்சு போல..நல்லா மூஞ்ச பாத்து குத்தாம குத்து கல்லு மாதிரி நின்னு வேடிக்க பாக்குற.  என் மாமியார் எல்லாம் இப்படி பேசினா அவ்ளோ தான்" குமுதா சிடுசிடுக்க

நிலா பெருமூச்சு ஒன்று விட்டுக்கொண்டே"என்னய என்ன பண்ண சொல்ற.. அவங்களுக்கு வயசாச்சு இப்படி தான் பேசுவாங்க..நாம இதுக்கெல்லாம் ஆட முடியுமா.. "

"என்னமோ போ நான் சொன்னா நீ கேக்கவா போறா.  இனிமே அந்த தாய்க்கிழவி இங்க வந்துச்சினா மூஞ்சி கொடுத்து பேசாத.வார்த்தைக்கு வார்த்த பட்டு பட்டுன்னு பேசித் தொறத்தி விடு..நம்மள நல்லா பாக்குற மாமியாரா இருந்தா காலுல கூட விழுந்து பூஜை பண்ணலாம்.நம்மள பத்தி விட நினைக்கிற மாமியாரா இருந்தா நாம சூதானமா இருக்கணும்.." நிலா அவளுக்கு சிரிப்பையே பதிலாக தர அவளை முறைத்துவிட்டு தன் வீட்டிற்குச் சென்றாள் குமுதா.

குணாவிற்கு பெங்களூரில் வேலை கிடைத்துவிட்டது. அங்கே தங்க இடம் முதல்கொண்டு பார்த்து வைத்துவிட்டு ராஜிற்கு அழைத்து விஷயத்தை கூறினான் குணா.. அவனிடம் குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாக கூறினான் ராஜ்.. முதலில் மறுத்த குணா பின்பு நிதர்சனத்தை புரிந்து கொண்டு இந்த வார இறுதியில் வந்து குழந்தையை பார்த்து விட்டு செல்வதாக கூறினான்..  என்னதான் கங்கா மேல் தவறு இருந்தாலும் தனது சகோதரி கணவன் குழந்தை என்று இன்புற்று வாழ வேண்டுமென ராஜ் மனதார வேண்டிக் கொண்டான்.

 குணா சொன்னது போல அந்த வார இறுதியில் வீட்டிற்கு வந்து தனது குழந்தையைப் பார்த்து கண்ணீர் விட்டு விடுப்பு கிடைக்கும்போதெல்லாம் வருவதாக சொல்லிவிட்டு பெங்களூர் கிளம்பி சென்றான்.. குழந்தையைப் பார்த்து அவன் விட்ட கண்ணீர் நிலாவை மேலும் இம்சித்தது. ஒரு தந்தையாக அவன் குழந்தையை பிரியும் போது அவனுக்கு இருந்த வேதனையை தானே இவளை பிரியும் போது இவளின் தகப்பனுக்கும் இருந்திருக்கும்..  தான் இஷ்டப்பட்ட ஒரே காரணத்திற்காக அம்மாவிற்கு பிடிக்காத திருமணத்தை செய்து வைக்க தயாராக இருந்தாரே மாறன்.

இதனால் வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எவ்வளவு பிரச்சனை? இப்பொழுதுகூட விக்ரம் கூறுவான். வீட்டில் எந்த பிரச்சனை வந்தாலும் அம்மா இறுதியில் இந்த திருமண பிரச்சினையில் வந்து முடித்து விடுவார் என்று. அவரால் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ராஜை பிடிக்காமல் இல்லை.  அவனின் குடும்பத்தை பிடிக்காமல் போய்விட்டது தாமரைக்கு.

 பிறந்ததிலிருந்தே வெண்ணிலாவை தைரியமான பெண்ணாக வளர்ந்திருந்தாலும் இந்த சமுதாயம் அவளுக்கு இருந்த பிரச்சனையை காரணம் காட்டி அவளை அனைத்திலும் ஒதுக்கி வைத்தது. நிலா வளரவளர அவளை எந்த விஷயத்திற்கு அழைத்துச் சென்றாலும் இன்னும் கொஞ்சம் வருஷம் தான் நல்லா இருக்குற பொண்ணுக்கே மாப்பிள்ளை கிடைக்காது. உங்க பொண்ணுக்கு எப்படி தான் கல்யாணம் பண்ணி வைக்க போறீங்களோ? என்ற கேள்வி வராமல் இருக்காது.

இந்த சமுதாயம் அவளுடைய தைரியத்தை உடைக்க முயற்சிக்க அவளின் தைரியம் உடைப்படாமல் மென்மேலும் வளர்ந்து.ஆனால் அவளே அறியாமல் சுயபச்சாதாபம் அவளுள் வளர ஆரம்பித்தது. வெளியே தைரியமாக காட்டிக்கொண்டாலும் உள்ளே தனிமையில் அவளுடைய சகோதரிகளின் கொடும் வார்த்தைகளை மனம் பொறுக்க முடியாமல் கண்ணீர் விட்டு போக்கிக் கொள்வாள்.  கண்ணீர் விடுவது கோழைத்தனம் என்று யார் கூறியது? சில வேளைகளில் கண்ணீர் மட்டுமே நமக்கு மருந்தாகிறது.

குழந்தை பால் குடித்து விட்டு உறங்கி கொண்டிருந்தது.அதனருகே படுத்து குழந்தையை ரசித்துக் கொண்டிருந்த அவளின் நினைவுகள் திருமணத்திற்கு இடையிலான அந்த ஒரு மாதத்திற்கு தோன்றியது. ராஜ் அவளைப் பெண் பார்க்க சென்ற அன்றைய இரவே அவளுக்கு அலைபேசியில் அழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அதன்பிறகு அவர்களின் உரையாடல் மெல்ல குறுஞ்செய்தியில் ஆரம்பித்து ஒரு வாரம் சென்ற நிலையில் அழைப்பில் வந்து நின்றது. முதல் நாள் மட்டுமே அவளுக்கு அழைத்துப் பேசிய ராஜ் அதற்கு அடுத்து வந்த நாட்களில் அவளுக்கு குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பினான்.

 எவ்வளவுதான் ஒருவரிடம் குறுஞ்செய்தியில் பேச முடியும்?  ஒரு கட்டத்தில் என்ன தட்டச்சு செய்வது என்றே புரியாமல் குழம்பித் தவித்தாள் நிலா. அவள் பதில் அனுப்புவாள் என்று பார்த்து கொண்டிருந்தவனுக்கு டைப்பிங் என்றே நெடுநேரம் வரை காட்ட புரிந்து கொண்டான் அவளின் அவஸ்தையை. உடனே அவளுக்கு அழைப்பு விடுத்தான். பதற்றத்தில் நெஞ்சம் அடித்துக்கொண்டது அவளுக்கு. நாளைந்து ரிங் சென்ற பிறகே அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

"ஹலோ"அவளுக்கே கேட்காத குரல்.

"ஹாய் பாப்பா.. என்ன டைப் பண்றதுன்னு தெரியலையா?"

"அப்டியெல்லாம் இல்ல..டைப் பண்ணிட்டே இருந்தேன் அப்டியே வெச்சிட்டு ரெஸ்ட் ரூம் போய்ட்டேன்.."சமாளித்தாள். அவன் சிரித்துக் கொண்டான்.

"நம்பிட்டேன்..அப்றம் உங்கள பத்தி சொல்லுங்க. இந்த கலர் இந்த ஹீரோ அந்த ஹீரோயின் இப்டி எதையும் மொக்க போடாம.. உங்கள பத்தி ஐ மீண் உங்க இன்னர் பீலிங்ஸ். உங்களுக்கு பிடிச்ச யாருக்கும் தெரியாத விஷயங்கள்.. உங்க மனசுல பூட்டி வெச்சிருக்குற ஆதங்கம் கோவம் கண்ணீர் இப்படியான விஷயங்கள பத்தி சொல்லுங்க"அவன், அவள் கேள்விப்பட்ட மற்ற காதலன்களை போல அப்புறம் என ஒரு வார்த்தையை உபயோகித்து நேரத்தை நெட்டி தள்ள போகிறான் என்று நினைத்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவனிடம் தன்னை பற்றி கூற தொடங்கினாள். நெருங்கிய தோழியான ஸ்வீட்டியிடம் கூட இதுவரை பகிராத தன்னுடைய உள்ளக் குமுறல்களை பகிர்ந்தாள். அவனை பிரித்து பார்க்க இயலவில்லை அவளால். அவளது காயம் பட்டு காப்பு காய்த்து போயிருந்த இதயத்திற்கு ராஜ் இதமான மயிலிரகாக தோன்றினான். இவர்களின் உரையாடல் இப்படியே தொடர ஆனால் இருவருமே வாய் விட்டு காதலை சொல்லிக்கொள்ளவில்லை.அதாவது அந்த மூன்று எழுத்தில் தான் காதல் உள்ளதா என்ன?

ஒரு மாதம் கழிந்த நிலையில் சனிப் பகவான் தன்னுடைய ஏழாம் வீட்டிலிருந்து வெண்ணிலாவை பார்த்தார்.. அவ்வளவு தான் பகவானின் கிருபையால் பிரியா மூலம் பூகம்பம் வெடித்தது.

பிரியா அன்று தன் சித்தி வீட்டிற்கு வந்தாள். வந்தவள் சிறிது நேரம் தாமரையிடம் பேசிவிட்டு நிலாவை காண அவளது அறைக்குள் சென்றாள்.  அந்த நேரம் மாலை என்பதால் நிலா குளித்துக் கொண்டிருந்தாள். வெண்ணிலா எப்போதும் அவளது கைப்பேசிக்கு லாக் வைத்திருக்க மாட்டாள். என்னேரமும் அவள் கையிலிருக்கும் கைபேசியை அப்படி யார் எடுத்து நோண்டி விட போகிறார்கள் என்ற அலட்சியம் தான்.

அவளது அலட்சியம் இன்று ஆப்பாக மாறிவிட்டது.பிரியா நிலாவின் கைபேசியின் உள்ளே சென்று வாட்ஸாப் கெலரி வரை அலசி ஆராய்ந்து உடனே கூகிள் சென்று அங்கிருந்து ஒரு முகம் தெரியாத பெண்ணின் ஆபாசமான புகைப்படம் ஒன்றினை எடுத்து அதனை ராஜிற்கு அனுப்பி வைத்தாள்.கீழே"எப்படி இருக்கேன் ராஜ்.. இப்பவே வரியா நா ரெடியா இருக்கேனு"குறுந்தகவல் அனுப்ப வெண்ணிலாவின் கெட்ட நேரம்,அந்த சமயம் ராஜின் கைபேசி கங்காவிடம் இருந்தது.தன் கைபேசி பிரச்சனையாக இருக்க தோழிக்கு முக்கியமான அழைப்பு விடுக்க அந்நேரம் அருகே இருந்த தம்பியின் கைபேசியை பயன்படுத்திக் கொண்டிருந்தாள்.

நிலாவிடமிருந்து குறுஞ்செய்தி வர அதனை திறந்து திருட்டுத்தனமாக பார்த்தாள் கங்கா. அவ்வளவுதான். "ச்சீ இவ்ளோ கீழ்த்தரமான கேடு கெட்ட பொண்ணா.. இவள போயா நீ கட்டிக்கணும்னு இருக்க..இவ பொண்ணே இல்ல சரியான தே......."கங்கா கைபேசியை ராஜிடம் வீசிவிட்டு இந்த விஷயத்தை கமலாவிடம் கூற சென்றாள். நிலா அனுப்பிருந்த புகைப்படத்தை பார்த்து முதலில் அதிர்ந்த ராஜ் பின்பு அந்த படத்தை நன்றாக பார்த்தான்.நிலா மஞ்சள் மேனியால்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் உடலோ கோதுமை நிறத்தில் இருந்தது. அதுமட்டுமில்லாமல்  இந்தப் பெண்ணின் கழுத்து சங்கிலி இல்லாமல் வெறுமனே இருந்தது. நிலா அவனிடம் பேசியதில் பகிர்ந்துகொண்ட ஒரு விஷயம், அவள் எப்பொழுதுமே கழுத்தில் சிலுவை கோர்த்த மெல்லிய தங்க சங்கிலி அணிந்திருப்பாள்.

அந்த சங்கிலி வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது இன்னமும் அதனை அவள் ஒரு நாள் கூட கழுத்திலிருந்து கழட்டவே இல்லையென அவனிடம் கூறிருந்தாள்.உடனே ராஜ் வெண்ணிலாவுக்கு அழைத்தான். பிரியா இந்த நாச வேலையை செய்து விட்டு நல்ல பிள்ளைபோல சித்தியிடம் சென்று பேசிக் கொண்டிருந்தாள்.  குளித்து வெளியே வந்த நிலா கைபேசி அழைக்கவும் எடுத்து பார்த்தாள். அழைப்பை ஏற்று" சொல்லுங்க ராஜ்"என்றாள்.

"என்ன பண்ணிட்டு இருக்க பாப்பா.."

" இப்பதான் குளிச்சிட்டு வரேன் ராஜ்"

"உன் ஃபோன் இதுவரைக்கும் எங்க இருந்துச்சு.."

"இங்க தான்"

"யாராச்சும் எடுத்தாங்களா"

"என்ன ராஜ் சொல்றிங்க. என் ஃபோன யாரு எடுப்பா"

"யாரோ எடுத்துருக்காங்க. உன் வாட்ஸாப் பாரு.. லாஸ்ட்டா எனக்கு என்ன மெசேஜ் பண்ணிருக்க"பிரியா அந்த புகைப்படத்தை அழித்து விட்டிருந்தாள்.நிலவுக்கு மட்டும் அந்த படம் தெரியவில்லை. இறுதியாக ஏதோ புத்தகத்தின் பெயரை அவனுக்கு அனுப்பியிருந்தாள்.அதை அவன் ராஜிடம் சொல்ல அவன் வேகமாக பிரியா அனுப்பியதை ஸ்கிரீன் ஷாட் செய்து அவளுக்கு அனுப்பி வைத்தான்.

அதனைப் பார்த்த அவளுக்கு ஒரே அதிர்ச்சி.அவளுடைய வாட்ஸ்அப் கணக்கிலிருந்து தான் குறுந்தகவல் சென்றிருந்தது. என்ன ஏதென்று அவள் பதற்றத்தில் ராஜிடம்"ராஜ் நான் இல்ல ராஜ்..நா இப்படி செய்யவே இல்ல. இந்த மாதிரி கேவலமான பொண்ணு நான் இல்ல ராஜ்.."அழுகையே வந்து விட்டது அவளுக்கு.

"பாப்பா நான் உன்ன ஏதாச்சும் சொன்னேனா? உன் ஃபோன யாரோ மிஸ் யூஸ் பண்ணிருக்காங்க. இல்லனா அக்ஸஸ் பண்றாங்க.. நீ பீல் பண்ணாத நா பாத்துக்குறேன்"

"ராஜ் என்ன நம்புறீங்க தானே"அழுகையோடு விக்கி விக்கி அவள் கேட்க அவன் மனம் தவியாய் தவித்தது.

"உன்ன எப்பவும் நம்புவேன் பாப்பா.. விடு பாத்துக்கலாம்.. நீ அழாத, கண்ண தொட".. அவனது நம்பிக்கையான வார்த்தைகளால் இவளது கண்ணீர் நின்றது.அழைப்பைத் துண்டித்தவள் முகத்தை கழுவி அறையை விட்டு வெளியே வர அங்கே பிரியா தாமரையுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்.

 அவளைக் கண்டதும் நிலாவுக்கு ஏதோ சந்தேகம் வர"பிரியாக்கா எப்ப வந்த..அம்மா,பிரியாக்கா வந்தத ஏன் என்கிட்ட சொல்லல..நான் சீக்கிரமா குளிச்சுட்டு வந்துருப்பேன்ல.."

"அவ வந்ததும் உன்னதான் கேட்டா..ரூமுக்கு வந்து உன்ன பார்த்தா நீ குளிச்சிட்டு இருந்த போல.. அதான் வெளிய வந்து என்கூட உட்கார்ந்து பேசிகிட்டு இருக்கா" தாமரை எதார்த்தமாக சொல்ல நிலாவின் சந்தேகம் தொண்ணூறு சதவீதம் உறுதியானது..  இருந்தாலும் பிரியாவின் அருகே சென்றமர்ந்து அவளிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு பெண்மணி எதையோ கேட்க தாமரை எழுந்து வெளியே சென்றார். அந்த நேரம் பிரியா

"என்னடி அந்த ஜவுளிக்கடை ஓனர் கூட ரொம்ப கொஞ்சர போல.. மெசேஜ் எல்லாம் அப்படியே உருகி வழியுது.."

"அப்போ நீ தான பிரியாக்கா..அவருக்கு அந்த மாதிரி மெசேஜ் எல்லாம் அனுப்பிருக்க..உன்ன யாரு என் ஃபோன எடுக்க சொன்னா.. அவருக்கு போய் அப்படி மெசேஜ் அனுப்பி வச்சிருக்கியே யாராச்சும் பார்த்தா என் நிலைமை என்ன ஆவும்"கோபமாக கேட்டாள் நிலா.

" என்ன ஆவும் இந்த கல்யாணம் நின்னு போகும்..எனக்கு நீ அவன கல்யாணம் பண்றது புடிக்கல..  உன் தகுதிய நீ நெனச்சு பாரு. அவன் கருப்பா இருந்தாலும் கலையா இருக்கான்.சொந்த வியாபாரம். நிறைய சொத்து. பேரு புகழ் அந்தஸ்து மரியாதை எல்லாமே அவனுக்கு ஜாஸ்தியா இருந்தது.உனக்கு என்ன இருக்கு. உன் மூஞ்சிய நீ கண்ணாடியில பார்த்துருக்க தானே.இன்னொரு விஷயம் நீ வேற குண்டா இருக்க..குண்டா இருந்தா பிள்ள பெக்குறதுல பிரச்சன வருமா தெரியுமா..நல்ல காலத்திலேயே நீ கால் வெச்சா விளங்காது. பாவம் அவன் யாரு பெத்த பிள்ளயோ அவன் வம்சம் நல்லா வெளங்கிட்டு போகட்டும்..அவன விட்டுட்டு நிலா அவன் உனக்கு வேணா.நீ அவன் வாழ்க்கையில அவனுக்கு பிடிக்க போற சாபம்.."

இவ்வாறு பிரியா சொல்லி நஞ்சை கக்கி அந்த பேதையின் இதயத்தில் சலனத்தை உண்டு பண்ணியதும் கிளம்பி விட்டாள். பாவம் வெண்ணிலா,பிரியா கூறியதை போல தான் ராஜிற்கு பொருத்தம் இல்லையோ என குழம்பி தவிக்கும் சமயத்தில் தான் தன்னுடைய காதலை உணர்ந்து கொண்டாள்.

தொடரும் 

Comments

  1. Intha priya saniyan yen than ipadi irukko ava purusan uh pathu kitu irukama yen ipadi atuthava kudi kettuka nenaikuralo theriyala 🤦🏻 Raj nala priya aparam innum rendu erumainga irukku la athungala vangu vangu nu vanganum.... Apo than ennaku nimathiya irukum....

    ReplyDelete
  2. Priya matum kaila. kidacha kaila than... pullaiya ava ellam... 😠😠😠😠😠

    ReplyDelete
  3. Cha iva ellam enna sister apdiye adichu kollanu. Avala veetla solama irukadhu nila thappyu. Dhan raj purinjikita mmari avanga veetla purinjikivangala ennna chaa pavam nila

    ReplyDelete
  4. Priya ponna ava pei..yen than ippadi ellam pannuralgalo😑😡😡😡 pavam nila priya than ippadina kanga kamala ellam pisasunga 🤮😠😠 nice epi akka😊😊

    ReplyDelete
  5. Adai pavi ne ellam oru ponna 😡😡😡😡👌👌👌👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்