பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 7

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

காலையில் எழுந்த ராஜ் நேற்று இரவு நிகழ்ந்த அனைத்தையும் நினைத்து புன்சிரிப்புடன் நிலாவை கட்டிக்கொண்டு மீண்டும் படுத்து விட்டான்.. படுத்தவன் சும்மா படுக்காமல் அவளின் கழுத்தில் இதழ் உரசிக்கொண்டே சில்மிஷம் செய்ய அவனை பின்னங் காலால் எட்டி உதைத்தாள் நிலா.

“காலங்காதால எழுந்துருச்சு பொண்டாட்டிக்கு ப்ரூ காபி கொடுப்போம்னு அக்கற இல்ல.. ஒய்யாரமா படுக்க..ஒழுங்கு மரியாதையா எந்திரி”என்றவள் அவன் எழாமல் எதற்கோ அடிபோடுவது தெரிந்து அவனிடமிருந்து தான் விலகி எழ முயற்சித்தாள்.அவளின் முயற்சி புரிந்தவன் அவளை அமுக்கி பிடித்து தனக்கு வேண்டியவற்றை பெற்றுக்கொண்டு அவளுக்கு வேண்டியவற்றை வாரி வழங்கி அதற்கு பிறகே அவளை விடுவித்தான்..

சிரிப்புடன் எழுந்தவளுக்கு தெரியாது அன்று முடிவு அவள் உடைந்து அழ போகிறாள் என்று..ராஜ் காலையில் எழுந்ததில் இருந்தே அவளுடன் சுற்றிக் கொண்டிருந்தான்..அவள் செல்லமாக மிரட்டி அடித்தாலும் அதனை சுகமாக வாங்கி கொண்டான்.. காலை பசியாரி விட்டு வரவே மாட்டேன் என்று அடம்பிடித்தவளை அள்ளிக்கொண்டு தளவாட பொருட்கள் வாங்கும் கடைக்கு சென்றான் ராஜ்.. வீட்டிற்க்கு தேவையான சோபா டிவி கட்டில் மெத்தை எல்லாம் ஏற்கனவே இருந்தது..

இப்பொழுது எழுதும் மேஜை உணவு மேஜை உடை அலமாரி இன்னும் முக்கியமான அனைத்தும் வாங்கி கொண்டு வீட்டிற்கு தேவையான தட்டு முட்டு சாமான்கள் அனைத்தையும் நிலா மறுக்க மறுக்க ஒரு வீட்டிற்க்கு வேண்டிய அனைத்தையும் அவள் விருப்பபடியே வாங்கி கொண்டு கடையிலிருந்து கிளம்பவே மணி மதியம் ஆகிவிட்டது..

“ராஜ் இப்பவே மதியம் ஆயிடுச்சு..வா வீட்டுக்கு போலாம்..நான் வீட்டுக்கு போய் சமைக்கணும் வேற.. இது எல்லாம் நீயே வந்து வாங்கி இருக்கலாம் தானே..என்னயும் கொரங்கு குட்டி மாறி கூடவே இழுத்துகிட்டு சுத்துற”..

“என்னடி குண்டு மேடம் உன்ன நீயே கொரங்கு கூட்டத்தோட கூட்டு சேக்குற”

“நா குண்டா.. நேத்து ராத்திரி என்ன சொன்ன”

“என்ன சொன்னேன்”.. ராஜ் நேற்றைய இரவை நினைத்து பார்த்தான்..அந்த இம்சையான இனிய இரவில் அவளை காதல் செய்து கொண்டிருந்தான் ராஜ்..அவனது ஸ்பரிசத்தை ரசித்து அவனின் வேகத்தில் உடல் சிலிர்த்து கொண்டிருந்தவள்

“மாமா..”என்றாள்.. அன்கண்டிஷனல் காதல் வந்தால் மட்டுமே நிலா ராஜை மாமா என்பாள். காதலித்த ஒரு மாதத்தில் அவன் புரிந்து கொண்டது..

மாமா என்றதும் அவனின் வேகம் அதிகரித்தது”மாமா”சிணுங்களாக அழைத்தாள்..

“என்னடி’ராஜின் குரலும் இழைந்தது..

“நா கொஞ்சமாச்சும் இளச்சு இருக்கேனா”ராஜின் இயக்கம் ஒரு வினாடி நின்று பின் மீண்டும் தொடர்ந்தது..

“சொல்லு”

“ம்ம்ம்..கன்னம் கொஞ்சம் கொறஞ்சிருக்கு.. கையி சின்னதா இருக்கு.. நீ ஒல்லியா ஆயிட்ட பாப்பா.. ஆனா மத்ததெல்லாம் செம்மயா இருக்கு”என்றவன் அவள் மேனியை மென்மையாய் தீண்ட சிவந்து போனாள் நிலா.முதல் நாள் இரவை எண்ணி பார்த்தவன் அவளைப் பார்க்க நிலா முறைத்தாள்..

அவனுக்கு புரிந்து போனது”பாப்பா புரிஞ்சிருச்சு.. நீ குண்டா அப்டியே கொஞ்சமே கொஞ்சம் ஒல்லியா இருக்க.. போதுமா”

“கொன்றுவேன் உன்ன.. மனுசனா நீயு.. அப்றம் என்கிட்ட வருவல்ல பேசிக்குறேன் உன்ன தேவாங்கு”நிலா செல்ல கோபத்தில் மனம் நிறைந்து போனான் ராஜ்.அவளை அழைத்து கொண்டு அவனுக்கு பிடித்த உணவகத்திற்கு செல்ல அங்கே தான் வினை ஆரம்பித்தது..

“பாப்பா இங்க பிராவ்ன் பிரியாணி செமயா இருக்கும்..ட்ரை பண்ணி பாரு”

“இங்கதான் வந்து சாப்பிடுவியா ராஜ்..”

“ஆமா டா.. தெனம் இல்ல எப்பவாச்சும் நானும் ரிஷியும் வருவோம் டா..”இரண்டு பிராவ்ன் பிரியாணியை ஆர்டர் செய்தவன் நிலாவின் கரத்தை பிடித்து கொண்டு அமர்ந்து கதை பேசி கொண்டிருந்தான்.. அங்கிருந்த ஓரிரண்டு ஆட்கள் நிலாவின் முகத்தை பார்த்து ஒரு வினாடிக்கும் மேல் பார்வையை அவள் மேல் பதித்து விட்டு சென்றனர்.. சிலர் முன்னால் சென்ற தன்னுடன் வந்த ஆட்களை பிடித்து நிறுத்தி நிலாவை பார்க்க சொல்ல அவர்களும் அவளை திரும்பி பார்த்தனர்..

இது எல்லாம் அவளுக்கு என்ன புதுசா? அசால்ட்டாக அமர்ந்திருந்தாள். அவர்களின் பார்வை ராஜை தியாகி அளவில் பார்ப்பதை தான் நிலா புதிதாக கவனித்தாள்.. அவளுக்கு இது புது உணர்வு.. அவனை தியாகி மாதிரி பார்த்தால் என்னை என்னவென்று நினைக்கிறார்கள்? நான் என்ன குஷ்டரோகியா? என்னை திருமணம் செய்து கொண்டது வியக்கதக்க விஷயமாக பார்க்க?அவள் தனக்குள் பேசிக்கொண்டு ராஜுடன் இயல்பாக பேசிக் கொண்டிருந்தாள்.

ராஜ் இதையெல்லாம் கண்டும் காணாமல் பார்த்து கொண்டிருந்தான். அவளின் முகம் இயல்பாக இருந்தாலும் கண்கள் அவனை புதிதாக எடை போட்டதை கண்டு கொண்டவன் தனது கைபேசியை எடுத்து”பாப்பா வா ஒரு செல்ஃபீ எடுக்கலாம்”என்று நிலா அருகில் எழுந்து வந்து புகைப்படம் எடுத்தான்..

அதை அவளிடம் காட்டி”என்னடி இவ்ளோ அழகா இருக்க..”

நெற்றி வகிட்டில் புதிதாய் பூத்த
சிவப்பு பூ
உன்னை சித்திரமாய் காட்டுதடி
வெண்ணிலவே!

அழகாய் கவிதை சொல்லி அவளை புன்னகையால் கொள்ளை கொண்டவனை மையலோடு பார்த்தாள் நிலா.. பிரியாணி வர உண்டு விட்டு அதன் சுவையில் மேலும் ஒன்றை வாங்கி பார்சல் செய்து கொண்டு வீட்டிற்கு வந்தனர் இருவரும்.. அவர்கள் பின்னோடு பொருட்களும் வந்து சேர நிலா ராஜ் இருவரும் அன்றைய பகளை பொருட்கள் அடுக்குவதில் செலவழித்தனர்..இரவு நிலா அவன் எவ்வளவு சொல்லியும் கேளாமல் ஆசை ஆசையாக அவனுக்காக சமைத்தாள்..

சோறாக்கி சாம்பார் வைத்து கோழி வறுவல் செய்து முட்டை கோஸ் பொரியல் செய்து வேகமாக சமைத்து முடித்தாள் நிலா.. முதன் முறையாக அவளின் கைமணத்தை அனுபவித்தான் ராஜ்.உண்மையில் நன்றாகவே சமைத்திருந்தாள் நிலா..ராஜ் ரசித்து ருசித்து கேட்டு வாங்கி உண்டான்.. அவளை மடியில் அமர்த்தி அவளுக்கும் ஊட்டி விட்டான்.. பின் அவள் அனைத்தையும் சுத்தம் செய்து விட்டு வர அவன் கைபேசி பார்த்து கொண்டிருந்தான்.

நிலா தன் கைபேசியை எடுத்து பார்க்க அதில் பல தவறவிட்ட அழைப்புகள்..அனைத்துமே பிரியாவுடையது..நிலா மனதில் பயம் பரவியது..

“இவளா இவ உலகமாக சனியனாச்சே..யாரு நல்லா இருந்தாலும் பொறுக்காதே.. என்ன எழவுக்கு எனக்கு போன் பண்றா”கையில் கைபேசியை வைத்து கொண்டே யோசிக்க மீண்டும் கைபேசி அலறியது..

எடுக்காமல் இருந்தால் மீண்டும் மீண்டும் முயற்சித்து கொண்டே இருப்பாள்.. என்னதான் சொல்வாள் கேட்கலாம் என்று அழைப்பை ஏற்றாள்..

“என்னடி வெந்த நிலா..கட்டுல விட மாட்டுதா உன்ன.. இல்ல புருஷன் வுட மாட்றானா.. காணாதத கண்ட மாறி பாய்ஞ்சுருபானே”

“பிரியாக்கா உனக்கு என்ன பிரச்சனை.. உன் புருஷன நா அவன் இவன்னு சொன்னா உனக்கு எவ்வளவு கோபம் வரும்…அதே மாதிரிதான் எனக்கும்..ஒழுங்கா என் புருஷனுக்கு மரியாத கொடுத்து பேசு..என் புருஷன் என்ன நீ வச்ச ஆளா..ஒரு மட்டு மரியாத இல்லாம சகட்டு மேனிக்கு அவன் இவனு சொல்ல..”

“ஹேய் என்ன என்னயே எதுத்து பேசுற.. உன் புருஷன் என்ன சுல்தானா? நான் வேணும்னா முட்டி போட்டு சலாம் போடவா? என் புருஷனே என் முன்னாடி கைகட்டி நின்னு தான் பேசுவான்..அவனுக்கே நா மரியாத தரமாட்டேன்..உன் புருஷன் எல்லாம் எம்மாத்திரம்..போடி இவளே.. என்னமோ பெருசா பீத்திக்குற..”

” நீ எல்லாம் எனக்கு போன் பண்ணலனு யாரு அழுந்தா..எதுக்கு போன் பண்ணி உசுர வாங்குற”

“அடிப்பாவி நல்லா இருப்பியா நீயு.. அய்யோ பாவம் நம்ம தங்கச்சி அனாத மாறி அன்னக்காவடியா தாலி கட்டிகிட்டாளே.. ஆளு பாக்க பயங்கரமா இருந்தாலும் உடம்ப நல்லா நாட்டு கட்ட மாறி மெயிண்ட் பண்ணாளே.. ஒருவேள புருஷன் ராத்திரி பூரா செஞ்சுட்டு காலையில உன் மூஞ்சிய பாத்து பயந்து துரத்திவிட்டுடானோ அப்படின்னு நினைச்சு ஃபோன் பண்ணேன்.. என்ன போய் இப்படி கேக்குற” அவளைப் பற்றி நன்கறிந்த நிலாவிற்கு இந்த பேச்சு சலிப்பை ஏற்படுத்துவதற்கு பதிலாக ரணத்தை ஏற்படுத்தியது.. அவளுக்கு தெரியும் பிரியா பொறாமையில் பொங்கி எழுகிறாள் என்று..

மூளை அதனை ஏற்றுக் கொள்கிறது ஆனால் மனம் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது..”இருக்கியா போயிட்டியா..ஹேய் நிலா.. உனக்கெல்லாம் பாத்தியா எப்டி ஒரு புருஷன்னு.. எனக்குன்னு வந்து வாச்சிருக்கே ஒன்னு ஒன்னதுக்கும் லாயக்கு இல்ல..ரொம்ப நாளாவே புது அலமாரி கேக்குறேன்.. வாங்கியே தரல.. இன்னைக்கு உன்ன பர்னிஷர் கடையில பாத்தேனு என் ஃப்ரண்ட்டு சொன்னா..வெந்த வாயிக்கு எல்லாம் வாழ்க்கய பாரு.. கடவுளுக்கு கூட கண்ணு இல்ல..

நா எல்லாம் மனசால கூட யாருக்கும் கெடுதல் நெனச்சது இல்ல..எனக்கு பாரு வாழ்க்கய..நீ உடம்பே வின.. உனக்கு பாத்தியா கூஜா தூக்குற புருஷன்.. புது பொண்டாட்டி உடம்பெல்லாம் தங்கமாதான் ஜொலிக்கும்.. தேய தேய ஜொலிப்பு குறைஞ்சு தூக்கி வீசிருவான்.. பாத்துக்கோ சொல்லிட்டேன்.. நேத்து என்ன செஞ்..”அதற்கு மேல் கேட்க பிடிக்காமல் அழைப்பை துண்டித்து கைபேசியை அணைத்தால் நிலா.

பிரியாவின் கணவன் அப்புராணி..மிகவும் நல்லவன்.. அவள் கேட்க்கும் முன் செய்து கொடுக்கும் அளவுக்கு அவள் மேல் பிரியமாய் இருப்பவன்.. அவனை போய் என்னவெல்லாம் சொல்கிறாள்.. அவனை மட்டுமா.. அவளையும் தானே.. நிலா கண்ணாடி முன்னின்று தன்னை பார்த்தாள். முதல் முறை அந்த வெண் சரும பிரச்சனை அவளுக்கு சாபமாக தோன்றியது.. இதுவரை அது ஒரு நோய் என்று மட்டுமே பார்த்திருந்தவள் இன்று அதனை ஜென்ம சாபமாக எண்ணி அழுதாள்..

ரொம்ப நேரமாக அவளை காணாமல் அறைக்குள் தேடி வந்த ராஜ் அதிர்ந்து போனான்.. அங்கே நிலா மூக்கு வாயில் ரத்தம் வழிய கீழே விழுந்து கிடந்தாள்..

தொடரும்..

Comments

  1. என்ன ஆச்சு நிலாக்கு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்