பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 23


நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்…

"பாப்பா என்னடா பண்ற."என்றவாரே வந்தான் ராஜ் மித்ரன்.. வெண்ணிலா ஸ்டடி ரூமில் அமர்ந்திருந்தாள்.ராஜ் நிலா இருவருக்குமே புத்தகங்கள் என்றால் உயிர். திருமணமாகிய புதிதில் ஒரு புத்தகத்தை கையில் எடுத்தால் அதைப் படித்து முடிக்கவே முடியாத ஒரு நிலையில் இருந்தாள் நிலா. காரணம் ஆசையாக எடுக்கும் புத்தகத்தின் பத்து பக்கங்களை அவள் படித்து முடிப்பதற்குள் அவளுக்கு பதினோராவதாக ஒரு பிரச்சனை வந்து நிற்கும்.

இப்பொழுது ஓரளவு பிரச்சினைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் அவளுக்காக ஆசை ஆசையாக அந்த அறையை ஹோம் டிசைனர்ஷை கூப்பிட்டு கண்களுக்கு குளிர்ச்சியாக அங்காங்கே செடி கொடிகளை வைத்து அழகாக குட்டி லைப்ரரி போல ரேக் செய்து அதில் நிறைய புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்திருந்தான். அவளுக்கு படுத்துக்கொண்டே கதை படிப்பதில் அவ்வளவு ஆர்வம். எனவே அவள் அமர்ந்து கதைப்படிப்பதற்கு குட்டி மேஜையும் அவளுக்கு முதுகு வலிக்காமல் இருக்க சாய்வு நாற்காலியும் வாங்கிப் போட்டிருந்தான். இன்னொரு பக்கத்தில் ஒரு ஆள் படுக்கக்கூடிய மெத்தை.

அந்த அறை பீச் வண்ணத்தில் ஆங்காங்கே பச்சை நிற செடி கொடிகளுடன் அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரே வாரத்தில் அந்த அறை தயாராகிவிட்டது. அதற்குக் காரணம் ராஜ் தான். அதுவரை நிலாவை குணா வீட்டில் விட்டிருந்தான் ராஜ். ஆம் இப்பொழுது எல்லாம்  குணாவும் கங்காவும் தனியாகத்தான் இருக்கிறார்கள்.

அன்று தேனியில் குணா கங்கா இருவரும் சமரசம் ஆனதை கண்டு மயங்கி விழாதது அதிசயமே. அவருக்கு மகளின் மாற்றம் பெரிதாக படவில்லை. அவளின் நிறக் குறைபாடு பெரிதாக படவில்லை. மாறாக அவள் கையில் தூக்கி வைத்திருக்கும் இருதயா மட்டுமே பெரிதாகப் பட்டாள். வேகமாக கங்கா அருகே வந்த கமலா

"எதுக்குடி இத தூக்கி கையில வெச்சிருக்க.. எல்லாம் இதால வந்தது..அது பொறந்த நேரம் தான் குடும்பத்த போட்டு இந்த ஆட்டம் ஆட்டுது.. அந்த குட்டி பிசாச இறக்கி விடு.. அது பக்கம் கூட போகாத.போய் மொத தலையோட குளி." குழந்தையும் தெய்வமும் ஒன்று என சொன்ன சொற்களை பொய்யாக்கி குழந்தையை தீண்டப்படாத தீட்டு வரிசையில் சேர்த்து விட்டார் கமலா.

எப்பொழுதும் கமலாவின் மூச்சுக்காற்றுக்கு கூட அடிபணியும் கங்கா இப்பொழுது தன் தாயை எதிர்த்து நின்றாள். "அம்மா என்ன பேச்சு பேசுற நீ.. நீ யார பத்தி பேசிக்கிட்டு இருக்க தெரியுமா.. என்னோட புள்ளைய பத்தி.. அது உன் பேரப்பிள்ள இல்லயா.. ஏன் அது மேல உனக்கு இவ்ளோ வன்மம்.. ஒன்ன சொல்லி என்ன இருக்கு.. எனக்கு அறிவு இல்ல.. என் புள்ளைய நான் பாத்துருந்தா இன்னைக்கு நீ இந்த பேச்சு பேசுவியா.. எல்லாத்துக்கும் காரணம் நான்தான்.. இனிமே என் பிள்ள என் கூட தான் இருக்கும்..நான் என் புருஷன் வீட்டுக்குப் போகப்போறேன்.. இதுக்கு மேல உன் கூட இருக்க போறதே கிடையாது.. எனக்காக தான் அவரு நம்ம வீட்டுல வந்து உட்கார்ந்து இருந்தாரு..

அது அவருக்கு எவ்ளோ பெரிய அவமானமா இருக்கும்னு யோசிக்க நான் மறந்துட்டேன்.. எல்லாத்துக்கும் சேத்து நான் அனுபவிச்சுட்டேன்..போதும் இதுக்கு மேல என்னால எதயும் தாங்க முடியாது. எல்லாமே என் தப்புதான். கண்மூடித்தனமா பேயாட்டம் ஆடிட்டேன்.. இனிமே  புருஷன் புள்ளைன்னு அழகான ஒரு வாழ்க்கய வாழ போறேன்.."

"என்னது வீட்ட விட்டு போறியா.. எங்கடி போற.. யாரு வீட்டுக்கு போவ.. இவனுக்கு என்ன பத்து மளிகையா இருக்கு.. நீ போயி காலட்டிட்டு ஒக்கார. நாயிக்கு தொரத்துனா ஓடறதுக்கு வக்கில்ல..அண்டி நிக்க குடிச கூட இல்ல.. அவன நம்பி நீ போவப் போற.. போயி பிச்ச தான் எடுப்ப. என் அண்ணன் உங்கள வாசப்படி மிதிக்க விட மாட்டாரு.. நீ வேற இப்டி ஆயிட்ட. அவனுக்கு வசதியா இருக்கும் உன்ன வெச்சு சிக்னல்ல பிச்ச எடுக்க"கமலா தீஞ்சொர்களை கொட்ட கங்கா சிலையாகி நிற்க

"அம்மா"என ராஜும் "அத்த"என குணாவும் ஒருசேர கத்தினர்.. குணா வேகமாக வந்து கங்காவை தோளோடு அணைத்து கொண்டு

"இன்னோரு வார்த்த என் புள்ள பொண்டாட்டிய பத்தி பேசுற வேல வெச்சிகாதீங்க.. நா பேச ஆரம்பிச்சா தாங்க மாட்டிங்க.. பெத்த பொண்ண பேசுற பேச்சா இது.. நீங்கல்லாம் நல்ல தாயா..பேசாம நீங்க செத்து மாமா இருந்துருக்கலாம். இப்ப தெரியுதாடி உங்க ஆத்தாவோட அழகு. நீ கூடவே இருக்கனும். அவங்கள விட்டு விலகிட்டா இப்டி தான் சாபமா வரும்.. இனிமே அம்மா நொம்மான்னு ஓடுவ.."

"சத்தியமா இல்லங்க.. அம்மா இனிமே என்ன பத்தியும் என் புருஷன பத்தியும் பேசுற வேல வெச்சிக்காத.. நாங்க இப்பவே கெளம்பறோம்.."என்ற கங்கா ராஜ் நிலாவிடம் திரும்பி

"நீங்க ரெண்டு பேரும் என்ன மன்னிக்கணும்.. இத்தன நாள் நீங்கதான் பாப்பாவ வளத்திங்க..இனிமே என் பிள்ளைய நான் வளத்துருக்குறேனே.. நிலா அதுக்கு நீ சம்மதிக்கணும்..பெத்தவ எப்டி கேக்குறதுனு தெரியல.. என்ன புரிஞ்சிக்க நிலா.பெத்த பிள்ளய பிச்சையா கேக்குறேன் நிலா"நிலாவின் கையை பிடித்து அழுதாள் கங்கா.

நிலாவின் கண்கள் கலங்கி விட்டது.. இத்தனை நாள் இந்த நாளுக்காக தான் அவளுடைய கர்த்தரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். இன்று அது நடந்து விட்டது. ஆனால் நிலாவுக்கு இதயமே வலித்தது.இருதயா முதல் ஆகாரத்தையே அத்தையிடம் தான் குடித்தாள். உயிராக வளர்த்த குழந்தை. ஆயிரம் சொன்னாலும் பெற்றவள் யாசிக்கிறாள். இருதயா அவளிடம் இருப்பது தானே நியாயம்.

"அண்ணி அழாதீங்க. அவ உங்க மக. அவள நல்லா வளங்க.."என்றபடி குழந்தையை தூக்கி ஆசைத் தீர முத்தமிட்டு கங்காவின் கைகளில் கொடுத்தாள். ராஜ் எதுவும் சொல்லாமல் நிலாவை அணைத்துக் கொண்டான். அன்றே கங்கா அவள் தோழியிடம் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள் குணாவோடு பெங்களூருக்கு..

கமலா முணுமுணுத்துக் கொண்டே காரில் ஏற ராஜ் நிலா கமலா மூவரும் அந்த தோழியிடம் விடைபெற்று வீடு வந்து சேர்ந்தனர்.. கமலாவை அவர் வீட்டில் இறக்கி விட்ட ராஜ் எதுவும் வேண்டுமென்றால் தன்னை அழைக்கும் படி கூறி கிளம்பி விட்டான்.

"பாவம் ராஜ்.நாம வேணும்னா அத்த கூட இருக்கலாமா வந்து"

"உனக்கு எவ்ளோ பட்டாலும் அறிவு இல்ல..இது அவங்களுக்கு கடவுள் கொடுத்த தண்டனை. சிலர் விரும்பி தனிமைய ஏத்துக்குவாங்க.சிலருக்கு விதி வற்புறுத்தி கொடுக்கும். சிலருக்கு அது தண்டனை. ஆனா இந்த தனிமை அவங்கள யோசிக்க வைக்கும். கூட்டமா இருக்கும் போது தெரியாது பாப்பா. எடுக்க புடிக்க ஆளு இருப்பாங்க. இப்ப தனிமரமா நிக்கும் போது தான் எல்லாமே தெரியும்.. எங்கம்மாவுக்கு அதான் விதி. அவங்களாவே நம்மள ஒரு நாள் கூப்பிடுவாங்க பாப்பா. அப்ப போலாம்.. சரியா"அவளுக்கு எடுத்து சொல்ல இருதயா நினைவில் வாய் மூடிக்கொண்டாள் நிலா.

குணா பெங்களூரில் ஒரு வீடு பார்த்து மனைவி குழந்தையுடன் செட்டிலாகி விட்டான். கங்கா தன் அகங்காரத்தை எல்லாம் விடுத்த காதல் மனைவியாக அவனையும் அன்பு தாயாக குழந்தையையும் உயிராய் பார்த்து கொள்கிறாள்.இங்கே நாட்கள் அதன் போக்கில் நகர இப்பொழுது கடையிலிருந்து வீட்டுக்கு வந்தவன் தன்னவளை தேடி வந்தான்.

"பாப்பா என்னமா செய்ற.."அவள் புத்தகத்தை திறந்து வைத்திருந்தாளே தவிர அவள் எண்ணம் வேறு எங்கேயோ நிலைகுத்தி இருந்தது.

"ஓய் என்னடி"அவள் தோளை தொட்டான் ராஜ். திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள் நிலா. ராஜ் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

"எப்ப வந்த ராஜ்.. ஏன் என்ன கூப்பிடல "

" கூப்பிடலயா ஒன்ன தானடி இவ்ளோ நேரம் கூப்பிட்டு இருந்தேன்.."

"ஓ... அது"

"என்னாச்சு டா.. உடம்பு முடியலையா ஏன் ஒரு மாதிரி இருக்க.. க்ளினிக் போலாமா" அக்கறையாக கேட்டான் ராஜ். அவனது கை அவளின் நெற்றி கழுத்தை தொட்டு ஆராய்ந்தது.உஷ்ணம் எதுவும் இல்லை.

 கேள்வியாக அவளை நோக்க அவன் முன்பு எழுந்து நின்றவள் அவளது கண்களைப் பார்த்துக்கொண்டே தன்னுடைய சட்டையை மேலே உயர்த்தி ராஜின்  கரத்தை எடுத்து தன் மணிவயிற்றின் மேலே வைத்தாள். ராஜ் அதிர்ச்சியாக அவளைப் பார்க்க"நிறைய படத்துல பாத்துருக்கேன் பிரேக்னன்டா இருந்தா இப்டி தான் புருஷன் கிட்ட சொல்லுவாங்க".. என்றாள்.

 அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன்" நல்லா செக் பண்ணியா உனக்கு எப்படி தெரியும்.. " எங்கே இது உண்மை இல்லை என ஒருவேளை தெரிந்தால் அவள் உடைந்து போய் விடுவாள் என்பதால் ஒரு நடுக்கத்தோடு அவளிடம் கேட்டான்.

" காலையில பிரக்னன்சி கிட்ல செக் பண்ணேன்.. அதுக்கப்புறம் குமுதா கூட க்ளினிக் போயி கான்பிர்ம் பண்ணிட்டேன்"என வெட்கத்தோடு கூறினால் நிலா. அவளை அணைத்துக் கொண்ட ராஜ் முத்த மழை பொழிந்தான். அவ்வளவு சந்தோஷம் அவனுக்கு.

"உனக்கு என்ன வேணும் செல்லம்" அவளின் முகத்தை கைகளில் ஏந்தி அவன் கேட்க

"ராஜ் எனக்கு என் அப்பா அம்மாவ பாக்கணும் போல இருக்கு.. அம்மா வீட்டுக்கு போலாமா.. ஒருவேளை அம்மா என் மேல கோபமா இருக்கலாம்.. அவங்க கோபம் நாளைக்கு நம்ம புள்ளைக்கு சாபமா வந்தரக்கூடாது.. போலாமா" கண்களில் ஏக்கத்தோடு தாய்மை அடைந்து நிற்கும் மனைவி கேட்கும் போது அவன் மறுப்பானா? அப்பொழுதே அவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் ராஜ்.

தொடரும்..




Comments

  1. Sema sema sema 👌 Ganga thirunathu unmailaye nalla vishayam....

    ReplyDelete
  2. Wow super super semmmmasemmma semmmmma ud sis super ganga ku ipavadu amma pathi therinjudhe thel kodukku mari iruku avanga pesuradhu appppa enna vai adhu adangudha paru raj nila very happy super ud sis

    ReplyDelete
  3. Semaaaaa semaaaaa super 👏❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌

    ReplyDelete
  4. Semma epi akka..❣👌👌 ganga nila rendu peeuda life um sari agitu 😇😇

    ReplyDelete
  5. Super dr story nalla poguthu... Kadha pora pokka paththa 2 or 3 ud la mudunjidum pola...

    ReplyDelete
  6. சூப்பர் 👌👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்