பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 19

பிரியா கொளுத்திய நெருப்பு ராஜ் வீட்டில் பற்றி எரிந்தது. கங்கா குறுஞ்செய்தியை பற்றி கமலாவிடம் ஒன்றுக்கு நான்காக கொளுத்தி போட கமலா ராஜிடம் பேயாட்டம் ஆடி மகனிடம் அதற்கு பதிலாக காட்டமான வசவுகளை வாங்கி கட்டிக்கொண்டு அந்த கடுப்பில் நேராக கிளம்பி வெண்ணிலா வீட்டிற்கு வந்து விட்டார்.அந்நேரம் வீட்டில் அனைவருமே இருக்க தெருவில் நின்றே தொண்டையை திறந்து விட்டார் கமலா.

கங்கா அவரை அடக்காமல் இன்னும் ஏற்றி விட குணா இவர்கள் இருவரையும் அடக்கும் வழியறியாமல் நைசாக ராஜிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பி விட்டு சண்டையை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். தாமரையும் மாறனும் வெளியே வந்து

"ஏங்க இப்டி ரோட்ல நின்னு சத்தம் போடுறீங்க.. எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள வந்து பேசுங்க.. அக்கம் பக்கத்துல எல்லோரும் பாத்து சிரிக்குறாங்க"

"சிரிக்கட்டுமே. உங்க மவ பண்ண வேலைய கேட்டு ஊரே சிரிப்பா சிரிக்கட்டும் எனக்கென்ன.. பொண்ணா பெத்து வெச்சிருக்கீங்க நீங்க"..

இப்பொழுது மாறன்"அம்மா ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க. நீங்களும் ஒரு பொண்ண பெத்து வெச்சிருக்கீங்க தான. ரோட்ல நின்னு பேசுனா எவ்ளோ கேவலம்னு தெரியாதா உங்களுக்கு.. தயவு செஞ்சு அமைதியா உள்ள வந்து பேசுங்க"அவர் தன்மையாக கூற கங்கா அவரை எதிர்த்து பேச இதனை பார்த்த விக்ரம் வேகமாக வெளியே வந்து

"அப்பா நீங்க ஏன் இவங்க கிட்ட கெஞ்சிட்டு இருக்கீங்க.நா போலீஸ்க்கு ஃபோன் பண்றேன் வீட்டு முன்னாடி வந்து தேவயில்லாம பிரச்சன பண்றாங்கனு"என்று கைபேசியை எடுக்க கமலா கப்பென்று வாய் மூடிக் கொண்டார். மகனுக்கு தெரிந்தால் அவர் நிலை என்னாவது?

முணுமுணுத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றார்.உள்ளே வந்து இன்னும் ஆங்காரமாக குரலை உயர்த்தி பேச நிலா ராஜிற்கு அழைத்து அழவே ஆரம்பித்து விட்டாள்."ராஜ் எங்க இருக்கீங்க ப்ளீஸ் சீக்கிரம் வாங்க.. உங்க அம்மாவும் அக்காவும் இங்க வந்து பிரச்சன பன்றாங்க.. ரொம்ப அசிங்கமா பேசுறாங்க. ப்ளீஸ் வாங்க ராஜ்"

"அழாத பாப்பா.. நா அங்கதான் வந்துட்டு இருக்கேன். யாரு என்ன கேட்டாலும் எனக்கு ஒன்னுமே தெரியாது. நா ஒன்னுமே செய்யலன்னு சொல்லு புரியுதா"அவள் சரியென சொல்லி அழைப்பை துண்டிக்க ராஜ் காரை பறக்க விட்டான்.

கமலா யாருடைய பேச்சிற்கும் அடங்காமல் நிலாவை பற்றி அவதூராக பேச, பெற்ற மகளை வீடு ஏறி வந்து ஒருவர் இப்படி பேச எந்த பெற்றோர் அமைதியாக இருப்பார்கள்?ஒரு பெண்ணிடம் சரிக்கு சரி பேசாமல் குணாவிடம் பேசினார் மாறன்."தம்பி உங்க அத்தைய கூட்டிட்டு போயிருங்க.. ஒரு பொம்பள கிட்ட சரிக்கு சரியா பேசுற அளவுக்கு நான் ஒன்னும் அறிவு இல்லாவன் இல்ல.."..

"இல்லைங்க அங்கிள் அது வந்து"குணா இழுக்க

"நீங்க சும்மா இருங்க. இந்தாளு கிட்ட என்னத்துக்கு இழுத்துகிட்டு இருக்கீங்க.. பொண்ணுக்கு பதிலா பொருக்கிய பெத்துட்டு நெஞ்ச நிமுத்தில பேசுறாரு".. கங்கா இவவாறு கூற விக்ரம்

"ஹேய் இன்னோரு வார்த்த என் அக்காவ பத்தி பேசின அவ்ளோ தான் சொல்லிட்டேன்.. நீ என்னய்யா பொம்பளைங்கள பேசவிட்டு வேடிக்க பார்க்கிற.. ஒழுங்கு மரியாதயா எங்க வீட்ட விட்டு நீங்க வெளிய போல சீன் ஆயிரும் சொல்லிட்டேன்.."

"விக்ரம் அமைதியா இருப்பா"மாறன் மகனிடம் சொல்ல நிலா கங்காவிடம்

"என்ன பத்தியோ எங்க அப்பாவ பத்தி பேச நீங்க யாரு..எங்க வீடு ஏறி வந்து பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கு..உங்க தம்பி வந்தா அவர் கிட்ட கேளுங்க.. அனாவசியமா இங்க கத்துற வேல வேணாம்.."நிலா கங்காவிடம் இவ்வாறு கூற அங்கே கமலாவுக்கு தாமரைக்கும் பெரிய வாக்குவாதமே நடந்து கொண்டிருந்தது. ஒரே பிரச்சனை.

 அக்கம்பக்கம் எல்லாம் வீட்டு வாசலில் கூடிவிட்டது.  குணா செய்வதறியாது திகைத்து நிற்க நல்லவேளையாக வந்து சேர்ந்தான் ராஜ் மித்ரன். உள்ளே வந்தவன் கமலா கத்தி கொண்டிருப்பதை கண்டு" அம்மா உன் வாய மூடுறீயா" என அவன் போட்ட சத்தத்தில் கமலாவின் வாய் தானாக மூடிக் கொண்டது.

 வேகமாக உள்ளே வந்தவன்" உன்கிட்ட நான் எத்தன தடவ படிச்சு படிச்சு சொன்னேன்.. அந்தப் பொண்ணு எந்த மெசேஜும் அனுப்பல. அவளோட ஃபோன யாரோ அக்சஸ் பண்ணிட்டாங்க..என்ன பழி வாங்கனும்னு யாரோ இப்படி பண்ணிருக்காங்க.. எனக்கு என்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு.உனக்கு தான் இந்த கல்யாணத்துல இஷ்டமில்ல. அதான் நீயும் கங்காவும் பிளான் பண்ணி இப்படி ஒரு வேலைய செஞ்சுருக்கீங்கன்னு எனக்கு தோணுது.."ராஜ் பலியை அப்படியே அக்கா அம்மா மீது திருப்பி விட்டான்.

 வெண்ணிலா அவனை வாயை திறந்து பார்க்க அவளுக்கு கண் ஜாடை செய்து அமைதியாக இருக்க சொன்னவன் இன்னும் கமலாவை பார்த்து கத்திக் கொண்டிருந்தான்.

"அம்மா கேட்டியா கடைசியா உன் புள்ள நம்ம மேலயே பழிய போடுறான்.. நமக்கு என்ன ஆசையா?  கூடப்பிறந்த தம்பி வாழ்க்க இந்த மாதிரி ஒரு பொண்ணுகிட்ட சிக்கி நாசமா போயிற கூடாதுன்னு வந்து பேசுறேன் பாத்தியா எனக்கு இது தேவைதான்? டேய் நீ எக்கேடு கெட்டு போனா எனக்கு என்னடா..அவ நல்ல பொண்ணே இல்ல.. அவள கட்டி சீரழிஞ்சு நீதான் போய் நிப்ப..  அம்மா நீ வா நாம போலாம்.. இது என்ன குடும்பமோ தெரியல என்னமோ மாயமந்திரம் செஞ்சு கல்யாணத்துக்கு முன்னேயே இவன மயக்கி வச்சுருக்காங்க..  நாமளும் இங்க நின்னா நமக்கும் இதே நிலைமை தான்..  வா போய்டலாம் இவ எப்படி நம்ம வீட்டுக்கு வர்றான்னு நானும் பாக்குறேன்"

 கங்கா விஷத்தை கக்கி விட்டு கமலா கரத்தைப் பிடித்து வெளியே நடக்க குணா அவர்களுக்குப் பின்னால் நடந்தான்.இங்கே தாமரை தன் மகளை கேவலமாக பேசியவர்களை கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார். அவர் என்ன பேசுவது,தான் என்ன நின்று கேட்பது என கமலாவும் கங்காவும் சென்றுவிட்டார்கள். தாமரையின் கோபம் ராஜ் மீது திரும்பியது. திருமணம்  இன்னும் முடிவு செய்யாத பட்சத்தில் இப்போதே தனது மகளை இந்த மாதிரி பேசினால் திருமணம் முடிந்து இன்னும் என்னவெல்லாம் பேசுவார்கள்?

இப்படி பேய்கள் வாழும் குடும்பத்தில் தனது மகளை கட்டிக் கொடுக்க தாமரைக்கு விருப்பமில்லை. நடந்தது இதுதான் என்று ராஜ் தாமரையிடம் சொல்லவில்லை.  நிலா ஏற்கனவே அவனிடம் சொல்லி இருந்தாள்,பிரியா இம்மாதிரி செய்தாலென்று தாமரைக்கு தெரிந்தால் அவரது பிறந்த வீட்டு உறவே முறிந்துவிடும் என்று. கங்காவிடம் சொன்னதைதான் ராஜ் அப்படியே நிலா வீட்டினரிடமும் கூறினான்.

எந்த சூழ்நிலையிலும் அவன் பிரியா பெயரை எடுக்கவே இல்லை. தனது மகளை கேவலமாக பேசிய குடும்பத்தில் அவளைக் கட்டிக் கொடுக்க தாமரைக்கு மனம் வரவில்லை.  ராஜ் முகத்திற்கு நேராகவே" தம்பி நீங்க நல்லவங்களாவே இருந்துட்டு போங்க.ஆனா உங்களுக்கு என் மகள கட்டிக் கொடுக்க எனக்கு சம்மதமில்ல.. உங்க அக்காவும் அம்மாவும் சரியில்ல. வெண்ணிலா ரொம்பவே பொறுமைசாலி..  அவங்க அவளோட பொறுமய ஏமாளித்தனம்னு நெனச்சு ஏறி மிதிக்க பார்ப்பாங்க.. புகுந்த வீடு என் பொண்ணுக்கு நரகமா இருக்கும்..இதெல்லாம் எதுக்கு..

 இந்த சம்பந்தம் வேணா. இனிமே நீங்க என் பொண்ணு கூட பேசாதீங்க."ராஜ் பேச வர அவனை பேசவே விடாமல் தாமரை மட்டுமே பேசி முடித்தார்.வெண்ணிலா தாயின் பேச்சில் இடையிட்டு பேச முயன்று அது முடியாமல் போக கண்ணீரோடு நின்று கொண்டிருந்தாள்.

" தாமரை கொஞ்சம் பொறுமையா இரு நிதானமா பேசலாம்" மாறன் கூறிய எதையும் தாமரை ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ஒரு தாயாக அவரின் வாதம் உண்மையே. ஆனால் ஒரு பெண்ணாக இன்னொரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள அவர் தவறிவிட்டார். தாமரை நிலாவை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றுவிட வேறு வழியில்லாமல் ராஜ் அங்கிருந்து கிளம்பினான்.

 அதன் பிறகு வெண்ணிலாவிடம் பேச ராஜ் நிறைய முயற்சி செய்தான்.அவனை பிளாக் செய்து விட்டாள் வெண்ணிலா. அம்மா பேச்சை மட்டுமே கேட்டு அவள் இந்த முடிவுக்கு வரவில்லை. அன்று பிரியா பேசிய வார்த்தைகள் அவளை நெருஞ்சி முள்ளாய் குத்தி கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய கலவரத்திலும் ராஜ் கம்பீரம் குறையாமல் வந்து பேசிய விதத்தைக் கண்டதும் அந்த முள் உடல் முழுவதும் குத்தத் தொடங்கியது. எந்த விதத்திலும் அவனுக்குத்தான் பொருத்தம் இல்லை என்பது ஆணித்தரமாக அவள் நெஞ்சில் பதிந்து விட்டது.

 இங்கு வெண்ணிலாவுக்கு தொடர்பு கொண்டு ஓய்ந்துபோன ராஜை காண அவனது கடைக்கே வந்தார் மாறன் விக்ரமுடன். தந்தை மகன் இருவரையும் கண்ட ராஜ் அவர்களை வரவேற்று தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தான்.  அவன் வரவழைத்த பழச்சாறை குடிக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார் மாறன்"மித்ரன் நீங்க சொன்னத வீட்டு பொம்பளைங்க நம்பலாம்.. நான் நம்பத் தயாரா இல்ல.. என்ன நடந்துச்சு சொல்லுங்க.. "

 அவரின் உறுதியை அறிந்த ராஜ் நடந்த விஷயத்தை அவரிடம் கூறினான். இதனைக் கேட்ட விக்ரம் இப்பொழுதே பிரியா வீட்டுக்கு சென்று அவளை இரண்டு அறை விட துடித்தான். மகனை சமாதானப்படுத்திய மாறன் அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தார். தாமரை சமையலில் மும்முரமாக இருக்க மொட்டை மாடியில் காய்ந்த துணிகளை எடுத்துக் கொண்டிருந்தாள் நிலா. மாறனும் விக்ரமும் அவள் அருகே சென்று ராஜை சந்தித்து வந்ததைப் பற்றி கூறினார்கள்.

 மாறன் அவளிடம் உண்மையில் நடந்தது என்னவென்று விசாரிக்க அவளும் பிரியாவைப் பற்றிய உண்மையை தந்தையிடம் கூறி விட்டாள். தன் மனைவியின் மனம் வாடக் கூடாது என்று இவர்கள் இருவரும் செய்த விஷயம் இவர்கள் காதலையே பாதித்ததை எண்ணி  கவலை கொண்டார். மகளை மீண்டும் ராஜிடம் பேச சொன்னார். ஆனால் வெண்ணிலா மறுத்துவிட்டாள். தான் எந்தவிதத்திலும் ராஜீற்கு பொருந்தமான பெண் இல்லை என்று கூறிவிட்டாள். அம்மாவிடம் பிரியா பற்றிய இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம் என தன் தந்தையிடமும் தம்பியிடமும் சத்தியம் வாங்கிக்கொண்டாள்.

அதன்பிறகு ராஜ் பலமுறை பலவகைகளில் வெண்ணிலாவை தொடர்பு கொள்ள முயற்சி செய்தான்.நிலா அவனை சந்திக்க தயாராக இல்லை. அவனை தவிர்த்த வெண்ணிலா வீட்டில் யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடியில் இரவு உறங்காமல் உலாத்திக் கொண்டு கண்ணீர் விடுவதை ஒரு நாள் இரவு மாறன் கவனித்தார். மகளின் தாழ்வு மனதை அவர் புரிந்து கொண்டார். இதனைப்பற்றி ராஜிடம்  பேசினார். என்ன நடந்தாலும் தன் மகளை தன்னை விட மேலாக ராஜ் பார்த்துக்கொள்வானா என்று அவனிடம் கேள்வி எழுப்பினார்.

 "பெத்தவங்கள விட பத்திரமா யாராலயும் ஒரு பொண்ண பாத்துக்க முடியாது சார்.என்ன நம்பி உன்ன பொண்ண கொடுங்க அவள நா பெத்த பொண்ணு மாதிரி பத்திரமா பாத்துக்குவேன்.. எனக்கே ஒரு பொண்ணு பொறந்தாலும் உங்க பொண்ணு தான் என் மொத செல்லம்"என்றவன் இறுதியில் அதிரடியாக அவள் வீட்டிற்கு வந்து அவள் தந்தையின் முன்னாடியே அவளை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டான்..

 இவை அனைத்தையும் எண்ணிப் பார்த்து கொண்டிருந்த வெண்ணிலாவை குழந்தை சிணுங்கி இந்த உலகத்துக்கு அமைத்தது.. வெண்ணிலாவிற்கு வீட்டிலேயே அடைந்து கிடப்பது மிகவும் சோர்வாக இருந்தது. ஏதாவது ஒன்றை செய்ய அவள் மனம் ஆசை கொண்டது.  ஆனால் என்ன செய்வது? அவளின் திறமை என்ன?  நன்றாக சமைப்பாள்.. வீட்டை அழகாக வைத்திருப்பாள்..விதவிதமாக தலை அலங்காரம் செய்வாள்.. இதையெல்லாம்விட அவளிடம் ஏதோ ஒரு திறமை ஒளிந்திருந்தது. அந்த திறமை அவளுக்கு சுட்டிக்காட்ட போகிறதே அவளது கணவன் தான்.

தொடரும்.

Comments

  1. Superb ud sis semmmma raj ganga kamala priya mari iruka ladies irundha family nalla irukum rmba enna jenmangalo ivanga ellam oru ponnu vazhkkaiya nasam panna ipdi alaiyuranga raj ne sonnna word semmma petha ponnu mari pathukiren sonnadhu super semmma ud sis nila mathavanga solradha kadhula vamgama raj kaga mattum yosi waiting for nxt ud sis

    ReplyDelete
  2. SUPER OH SUPER...SEMAIYA POGUTHU...

    ReplyDelete
  3. Semaaaaa semaaaaa super super super 👌👌👌👌😍😍😍💝💝💝

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்