பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 1

மெலனின் அதாவது உடலின் தோல் பகுதியில் ஏற்படும் ஒருவித நிற குறைப்பாட்டையே வெண்புள்ளி என்கிறோம்.மெலனின் என்பது தோலின் வழி உற்பத்தியாகும் மெலோனோஸைட்ஸ் ஆகும். இவைத்தான் நம் தோலுக்கு அதன் வர்ணதை கொடுக்கிறது. மெலோனோஸைட்ஸ் சரியாக உற்பத்தி ஆகாவிடில் போதுமான அளவு மெலனின் நம் சருமத்திற்கு கிடைக்காது.இதனால் வெண் புள்ளிகள் தோல் கூந்தலில் ஏற்பட வாய்ப்புள்ளது.

“நான் இதுவரைக்கும் இந்த உலகத்துல ஒரு உருவத்த இவ்ளோ நேரம் சலிக்காம பாத்ததே இல்ல..லைப்ல மொத தடவ ஒரு மூஞ்சிய இவ்ளோ நேரம் பாக்குறேன்.. பாக்க பாக்க பாக்கணும்னு தான் தோனுச்சு.. அப்டி என்னத்த அதுல பாத்தேன்..யோசிச்சு கிட்டே வரேன்.. என் கார்ல ஓடுற எம் பி ட்ரீய தாண்டி ஒரு குரல் கேக்குது.. வேற யாரும் இல்ல என்னோட அம்மா தான்.. என்னமோ சொல்றாங்க இல்ல கரிச்சு கொட்றாங்க அதெல்லாம் கேட்டா என் மூடு நாசமா போயிரும்..கூடவே இன்னொரு குரல் கேக்குது.

அதாவது என் ஆத்தாவுக்கு எடுத்து கொடுக்குற மாறி பாயிண்ட்ட புடிச்சு பேசிட்டு வரறது என்னோட அக்கா..வயித்துல ஏழு மாச புள்ள இருக்கு.. அதனால வீட்ல இருந்து வரும்போதே பாடில்ல கலக்கி எடுத்துட்டு வந்த அருகம்புல்லு ஜூஸ்ஸ குடிச்சிகிட்டே லேசா மூச்சு வாங்க மூட்டி விடுது..இத எல்லாம் அடக்க துப்பு இல்லாம பாவப்பட்ட ஜீவனா என் பக்கத்துல ஒன்னு ஒக்காந்து வருது என்னோட மாமா..

எங்க சும்மா ஒக்காந்து இருந்தா தன்னயும் பஞ்சாயத்து பண்ண கூப்டுவாங்களோன்னு முன்னெச்சரிக்கையா ஹெட் ஃபோன எடுத்து காதுல மாட்டிக்கிட்டு பாட்டே கேக்காம பின்னால என்ன பேசுறாங்கனு நூதனமான வழியில ஒட்டு கேட்டுட்டு வருது..என் நெனப்பு எல்லாம் இங்க இல்ல..என்னோட சித்தப்பா ரெண்டு நாள் முன்னாடி எனக்கு வாட்ஸாப்ல அனுப்பி விட்ட ஒரு போட்டோவ சுத்தியே இருக்கு.. இப்ப கல்யாணமே வேணா.. என்ன கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுறிங்களான்னு காட்டு கத்து கத்திட்டு இருந்தவன் இந்த போட்டோவ பாத்ததும் ஏலேய் சம்முவம் எட்றா வண்டியனு என் குடும்பத வண்டியில இழுத்து போட்டு போய்ட்டு இருக்கேன்..

ஏற்கனவே ஒரு பொண்ணால உடம்பு முழுக்க புண்ணா போயி ஒக்காந்துருக்கேன்.. அந்த புண்ணுக்கு புனுகு தடவுற மாறி இந்த போட்டோ வந்துச்சு..இந்த போட்டோவுல இருக்குற புனுக பாக்கத்தான் இப்ப போய்ட்டு இருக்கேன்”

இதுவரை இருந்து வந்த மயக்கும் மாலை பொழுது சற்றென்று மாறி மேகம் கருவண்ணம் பூண்டது. தென்றல் காற்றாக மாற என்னவென்று யோசிப்பதற்குள் சட் சட் என்று மழை துளிகள் வேகமாக மண்ணின் மேல் விழுந்தன..

“போச்சு இருந்து இருந்து இவளுக்குனு ஒரு நல்ல காரியம் நடக்க இருக்குது.. இப்பனு பாத்தா மழ வரணும்..வருண பாகவனே என் மக வாழ்க்கயில வெளக்கு எரியுற நேரத்துல அதோட பியுஸ புடுங்குற மாறி நீ வந்தா எப்டிப்பா..நான் வேணும்னா என் புருஷன ஒட்டு துணி இல்லாம அம்மண கட்டயா இந்த வீட்ட சுத்தி கையில தீ பந்தத்தோட நடக்க சொல்றேன்.. தயவு செஞ்சு மழைய நிறுத்திரு”… வேண்டுதல் வினையாகி இன்னும் வேகமாக பெய்ய மழையோடு மழையாக வந்து சேர்ந்தனர் மாப்பிள்ளை வீட்டார்.

பெண்ணின் தம்பி விக்ரம் குடையோடு ஓடினான். முனங்கி கொண்டே கார் கதவை திறந்து முதலில் இறங்கினான் குணா.. அவன் காரிலிருந்து இறங்குவதற்குள் குடையோடு அவனை எதிர் கொண்டான் விக்ரம்..

“ஹாய் சார் நீங்கதான் மாப்ளயா?”

“தம்பி கொடய கொஞ்சம் கிட்ட புடிப்பா.. புது சட்ட நெனஞ்சு கசங்கி போனா என் பொண்டாட்டி என்ன கொன்றுவா.. நா மாப்ள இல்ல டிரைவர் சீட்ல ஒக்காந்து இருக்கானே அவன்தான் மாப்ள.. அவன அப்ரம் எட்டி பாரு.. இப்ப என்ன நனையாம உள்ள கூட்டிட்டு போ தம்பி”.. விக்ரம் சிரித்துக்கொண்டே குணாவை நனையாமல் உள்ளே கூட்டிச் சென்றான். மீண்டும் காரின் அருகே விக்ரம் செல்வதற்குள் கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் கங்கா..

அவளின் பெருத்த வயிறை பார்த்ததும் இந்த மழ இப்பயா வரணும் என நினைத்துக்கொண்டு விக்ரம் அவள் அருகே சென்று குடையை பிடித்து அவளை உள்ளே கூட்டி சென்றான். குடையை அவளுக்கு பிடித்தானே தவிர அந்த குடைக்குள் அவன் வரவில்லை..ஏனென்றால் முதல் சந்திப்பிலேயே கங்காவின் பார்வை விக்ரமை ஏற இறங்கப் பார்த்தது.. கண்டிப்பாக இந்த சந்திப்பில் அவளுக்கு விருப்பம் இல்லை என்பது அவளின் பார்வையை வைத்து விக்ரம் புரிந்துகொண்டான்.. அடுத்து கமலா இறங்கினார்.. அவர் குணாவை போல லொடலொடவென பேசவும் இல்லை கங்காவை போல ஏற இறங்க பார்க்கவும் இல்லை..

“என்ன தம்பி உங்க வீட்ல பெரிய கொட கூட இல்லயா.. இத்துனோண்டு ஓட்ட கொடைய வெச்சிக்கிட்டு நிக்குற.. என்ன நனயாம உள்ள கூட்டிட்டு போயிரு.. மழ தண்ணி பட்டா எனக்கு ஆகாது”தன்னை அதிகாரமாக வேலை வாங்கும் அந்த பெண்மணியை விக்ரமுக்கு அறவே பிடிக்கவில்லை.. ஆனாலும் என்ன செய்வது.. பல்லைக் கடித்துக்கொண்டு தான் மாழையில் குளித்தாலும் பரவாயில்லை என்று அந்த பெண்மணியை ஒரு துளி தண்ணீர் கூட மேலே படாத அளவுக்கு பாதுகாத்து வீட்டின் உள்ளே அழைத்துச் சென்றான்.. இதுவரை சந்தித்த மூவரும் மூன்று ரகமாக இருக்க இப்பொழுதுதான் முக்கியமான நபரைப் அவன் சந்திக்கப் போகிறான்.. இவர்கள் எப்படி இருந்தாலும் அவனுக்கு கவலை இல்லை, இப்பொழுது சந்திக்கப்போகும் அந்த ஒருவன் நல்லவனாக இருக்க வேண்டும்..

மீண்டும் வாசலில் காலை வைக்க போன விக்ரம் அப்படியே நின்றுவிட்டான்.. அவன் சந்திக்க இருந்த அந்த முக்கியமானவன் தானே காரில் இருந்து இறங்கி மழையில் ஓடி வந்து விக்ரம் முன் நின்று சிரித்துக் கொண்டிருந்தான்..

“என்ன சார் நா தான் கொட கொண்டு வரேனே.. அதுக்குள்ள நீங்க எதுக்கு மழையில”

“இது மழையா இல்ல ஆசிட் குண்டா என் மேல பட்டா உருக்குலைச்சு போக..சில் மாப்ள வா உள்ளார போலாம்”

“சார் நீங்க இன்னும் பொண்ண பாத்து பேசவே இல்ல.. எல்லாம் முடியட்டும் அப்றம் இந்த உறவு முறைய வெச்சுக்கலாம்”

“பொண்ணு கிட்ட நிறைய பேசணும். அது வந்து எங்க அஃப்டெர் மேரேஜ் வாழ்க்கய பத்தி..”.. அந்த புதியவனின் பதிலில் விக்ரம் வாயடைத்து போய் நிற்க அவன் தோளில் கைபோட்டு அவனோடு சேர்ந்து உள்ளே நுழைந்தான் ராஜ் மித்ரன்..

நான்கு பேர் வசிக்க அழகிய கச்சிதமான வீடு.. அதை மேலும் அழகாக்கி வைத்திருந்தாள் அந்த வீட்டுப் பெண்.. வீடு சுத்தமாக இருந்தது.. ஹாலில் அவனுடைய குடும்பம் ராஜின் சித்தப்பா அமுதன் பெண்ணின் தந்தை மாறன் தாயார் தாமரை அனைவரும் மழையில் பாதி நனைந்து விட்டிருந்த ராஜை பார்க்க லேசாக புன்னகைத்தவன் குணாவின் அருகே அமர்ந்துக் கொண்டான்.. சித்தப்பா அனைவரையும் முறையே அறிமுகப்படுத்த வழக்கமான உபசரிப்புகள் முடிந்து பெண்ணை அழைக்க உள்ளே சென்றார் தாமரை..

பிளேன் ஆரஞ்சு வர்ண லாங் குர்தியில் அவளது இடை வரை தவழ்ந்த சுருள் முடிகளை காதுளின் இருப்பக்கம் கொஞ்சம் முடி எடுத்து சிறிய பட்டர்ஃப்ளை பின்னின் உள்ளே அடக்கிருந்தாள்..நெற்றியில் சிறிய கருப்பு வட்ட பொட்டு.. மூக்கில் ஒற்றை வெள்ளை கள் முக்குத்தி.உதடுக்கு பிங்க் நிற உதட்டு சாயம்.. காதுகளில் சிறிய ஜிமிக்கி தோடு. கழுத்தில் தங்க சங்கிலி..குங்கும பூ வர்ண துப்பட்டாவை ஒரு பக்கமாக போட்டிருந்தாள்..

இவை அனைத்தையும் விட ராஜை மிகவும் கவர்ந்த விஷயங்கள் அவள் அணிந்திருந்த பீச் வண்ண ஃபிரேமிட்ட கண் கண்ணாடி, அவளது கன்னங்களில் ஒரு இடம் இல்லாமல் தனது கைவரிசையை காட்டிருந்த முகப்பருக்கள் மற்றும் அவளது கொழு கொழு மேனி இவைகள் தான்..

அமுதன் வார்த்தையை தட்ட முடியாமல் பெண் பார்க்க வந்திருக்கும் இவன் தன்னைக் கண்டதும் பின்னங்கால் பிடறியில் இடிபட ஓடிவிடுவான் என்று ஓவர் கான்ஃபிடன்ஸ்சில் தெனாவட்டாக நின்றுகொண்டிருந்தாள் வெண்ணிலா. ஆனால் அவளுக்குத் தெரியாத ஒரு விஷயம் அமுதன் அவளது புகைப்படத்தை அவனுக்கு ஏற்கனவே அனுப்பி விட்டார். படத்தில் அவளை பார்த்து பிடித்துபோய் தான் நேரில் பார்க்க வந்திருந்தான் அவன்.. தனது தந்தையின் நெருங்கிய நண்பரான அமுதன் அங்கிளின் வார்த்தையை தட்ட முடியாமல் அவளும் இந்த பெண் பார்க்கும் படலத்திற்கு சம்மதித்திருந்தாள்.. தந்தையின் பக்கத்தில் அமர்ந்தவள் குணா கங்கா கமலா மூவரின் முகபாவத்தை வைத்தே அவர்கள் தன்னைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பதை ஒருவாராக கணித்தாள். இறுதியாக அவளது பார்வை ராஜ் மேல் விழுந்தது..

கொஞ்சம் கூட சங்கோஜமே இல்லாமல் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் ராஜ்.. அவனின் பார்வையைக் கண்டு உள்ளுக்குள் பொறுக்கி என்று அவனைக் கடிந்து கொண்டாள்.. கமலா முதலில் பேச்சைத் தொடங்கினார்

“பொண்ணு மேல எல்லாம் இப்டி வெந்து போயி கெடக்கே ஆஸ்பத்திரி எங்கயும் கூட்டிட்டு போயி காடுனீங்களா”அவரின் சுடு சொற்கள் வெண்ணிலாவின் குடும்பத்தாரை அதிகம் வாட்டியது.. அமுதன் அண்ணி என்று அவரை அழைக்க அதற்குள் மாறன்

” என் பொண்ணு உடம்பு ஒன்னும் வெந்து போல.. அவளுக்கு வைட் ஸ்கின் ப்ரோப்லேம்.. நாங்களும் எவ்வளவோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் பார்த்துட்டோம்.. எதுவும் சரியாகல.. “

“ஓ இது ஒட்டுமா”கமலாவின் இந்த கேள்வியில் ராஜிற்கே கோபம் வந்தது.. மாறன் பதில் சொல்வதற்குள்

“ம்மா அந்த பொண்ணு என் கூடத்தான் வாழப் போது.. சோ இந்த சீக்கு தொட்டா ஒட்டுமா ஒட்டாதான்னு நீ கவல படாத.. ஒட்டுனா நல்லது தான்.. நான் கொஞ்சம் கலரா மாறிட்டு போறேன்..”தன்னுடைய மாநிற கன்னத்தை தேய்த்து கொண்டே அவன் அம்மாவிற்கு பதில் கூறினான். வீட்டிலிருந்து வரும் போதே வெண்ணிலாவை பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று கங்காவிற்கு கூறியிருந்தார் கமலா..

வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு அடுத்தவரின் குறையை பற்றி விமர்சித்தால் தனது குழந்தைக்கு அதே பிரச்சனை வந்துவிடும் என்பது சிலரின் நம்பிக்கை. அந்த சிலரில் கமலாவும் ஒருவர். மகனின் பதிலைக் கேட்டு நறநறவென்று பல்லை கடித்த கமலா

“அப்ப சரிங்க வீட்டுக்கு போயி கலந்து பேசிட்டு சொல்றோம்”என எழ அவருக்கு முன் எழுந்த ராஜ்

“எங்க வீட்ல இருக்குறதே நாங்க மட்டும் தான். சித்தப்பா என்னோட வெல் விஷ்ஷர்.. என்ன பத்தி உங்க கிட்ட சொல்லிருப்பாரு..புதுசா என்ன பத்தி சொல்ல ஒன்னுமே இல்ல.. ஆனா எனக்கு உங்க பொண்ணு கிட்ட சொல்ல இல்ல கேக்க ஒரு விஷயம் இருக்கு..கேக்கவா”

“கேளுங்க” என்றாள் வெண்ணிலா அவனின் அருகே வந்து நின்று..

“எனக்கு உன்ன உனக்காகவே புடிச்சிருக்கு..பரிதாபப்பட்டு பாவப்பட்டு வந்துச்சின்னு என் லவ்வ கேவல படுத்திராத.. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. போட்டோல பாத்தப்போ புடிச்சிருந்துச்சு.. நேர்ல பாத்தோன முடிவு பண்ணிட்டேன்..உன்ன நல்லா பாத்துப்பேன்.. எனக்கு ட்ராவெல்லிங் புடிக்கும் சோ நல்லா ஊரு சுத்தலாம்..நம்ம பேரப்பிள்ளைங்க கிட்ட சொல்லுவேன் உங்க பாட்டி பொண்ணு பாக்கும் போது என்ன பாத்து மொறச்சானு..”வெண்ணிலா அவனை ஆச்சரியமாக பார்த்தாள்..

உன்ன நல்லா பாத்துப்பேன்.. அப்படி என்றால் அவளை அவளுக்காகவே ஏற்றுக்கொண்டான்.. நல்லா ஊரு சுத்தலாம்.. அவளுக்கு இந்தப் பிரச்சனை இருந்தால் என்ன அதைப்பற்றி யார் என்ன பேசினாலும் அவனுக்கு அவமானமோ அசிங்கமோ இல்லை..நம்ம பேரப்பிள்ளைங்க.. வாழ்க்கை முழுவதிற்கும் அவளோடு பயணிக்க விரும்புகிறான்..

இவ்வளவு அழகான நச்சென்று தன் மனதை அவளுக்கு கூறிவிட்டு அவளின் பதிலுக்கு காத்திருந்தான்.. மாறன் தாமரை இருவரும் வெண்ணிலாவின் பதிலுக்காக காத்திருருக்க அவள் என்னவென்று பதில் சொல்வாள்.. சிலையாக நின்றாள்.. அவள் மனம் படும் பாடு அவனுக்கு புரிந்தது.. அவளைப் பார்த்து சிரித்தான். அவனின் கழுத்திருக்கு இரண்டு அடி கீழே இருந்தவள் லேசாக அவனை அண்ணாந்து பார்த்தாள். இடது பக்கம் அவன் சிரிக்கும் போது மிக மிக லேசாக குழி விழுந்தது..

“இப்பவே சொல்லணும்னு இல்ல.. நல்லா யோசி..தோணும் போது சொல்லு.. உன் நம்பர சித்தப்பா கிட்ட வாங்கி நைட்டு குட் நைட் மெசேஜ் அனுப்புவேன்.. ரிப்ளை பண்ணலன்னா பரவால்ல.. அதுக்கும் வெயிட் பண்றேன்..கெளம்புறேன் அங்கிள்.. கெளம்புறேன் ம்மா.. பாய் விக்ரம்..பாய் நிலா”

என்றவன் வெளியே சென்று விட அவனை தொடர்ந்து அவனது குடும்பமும் வெளியேறியது..மழை வெளியே நின்று விட்டது. ஆனால் அவளது நெஞ்சுக்குள் இடியுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது..

தொடரும்..


Comments

  1. Start ing super அழகுக்கு
    ஆயுள் கம்மி அதை
    ராஜ் உணர்ந்து பேசியது
    அருமை

    ReplyDelete
  2. Superrr sis rompa different a iruku nama tinam kadantupogum silar life la Iruka unmai ya solringa

    ReplyDelete
  3. சூப்பர் ராஜ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்