பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 24


வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தை உடைத்தால் உயிரை உடைப்பாள் ஒருத்தி
என் கண் பார்த்தது என் கை சேருமோ
கை சேராமலே கண்ணீர்
சேருமோ
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம்
கண்டுகொண்டேன்

ராஜ் வெண்ணிலாவை அழைத்துக்கொண்டு மாறன் வீட்டிற்கு சென்றான். வீட்டில் இருந்து கிளம்பியதிலிருந்தே"வேணா ராஜ் நாம பேசாம வீட்டுக்கு போயிரலாம்..அங்க போனா என் அம்மா என்ன சொல்லுவாங்கன்னு தெரியல..கண்டிப்பா என் மேல கடுப்புல இருப்பாங்க.என்ன ஏதாச்சும் சொன்னாலும் பரவால்ல..அன்னைக்கு ஹாஸ்பிட்டல்ல உன்ன எப்படி பேசினாங்க..அந்த மாதிரி இப்ப பேசிட்டா என்ன பண்றது.. இந்த நிலைமையில என்னால எதிர்த்துப் பேசாம இருக்க முடியாது..

 உடனே அவங்க சாபம்தான் விடுவாங்க. எதுக்கு இந்த வீண் வேல.. வண்டிய திருப்பு வீட்டுக்கு போகலாம்"அவளின் ஆசையை அடக்கிக் கொண்டு அவனுக்காக இந்த நேரத்திலும் அவள் சிந்திப்பது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவளின் சந்தோஷத்தை விடவா தாமரை பேசப் போவது அவனுக்கு வேதனையாக இருக்கும்?

 அப்படி என்றால் கமலா என்னென்ன வார்த்தைகள் கொண்டு அவளைக் கூறு கிழித்திருப்பார்.. அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஒரு வார்த்தை பேசிருப்பாளா? எல்லாம் தன் மேல் கொண்ட காதலால் தானே.. அந்தக் காதல் தனக்கு இல்லாமல் போய்விடுமா.. அவள் அளவு இல்லாவிட்டாலும் தன்னுடைய காதலும் உயர்ந்தது தானே. தாமரை யார் தன்னுடைய மாமியார் அல்லவா.. அவர் பேசினால் பேசிவிட்டுப் போகட்டும். நிலா எவ்வளவோ மன்றாடியும் கேட்காமல்  ஒரு பேரங்காடி முன்னால் வண்டியை நிறுத்தினான்.

 அவளை காரில் அமர சொல்லிவிட்டு அவன் மட்டும் உள்ளே சென்று வீட்டிற்கு வெறும் கையோடு செல்லக்கூடாது என்பதற்காக பழங்கள் பிஸ்கட் பாக்கெட்ஸ் சாக்லேட் கேக் என வாங்கி வந்திருந்தான். நிலாவுக்கு அதை எல்லாம் பார்க்கும் போது வயிற்றை கலக்கியது. அவள் வீடு இருந்த ஏரியாவுக்குள் கார் செல்லும் போதே அவன் கரத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.

"ஏன்டா இப்படி பயப்படுற.. இவ்ளோ டைட்டா  என் கைய புடிச்சா நான் எப்படி டிரைவ் பண்ணுவேன்.."

" ராஜ் எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. அப்பா வீட்டுல இருந்தாலாவது அம்மாவ சமாதானப் படுத்துவாரு.. இந்த டைம் அவரு வீட்டில இருக்க மாட்டாரு.. ஈவினிங் அவரு வாக்கிங் போற டைம்..விக்ரம் கிரிக்கெட் வெளாட போயிருவான்.. நம்மள பார்த்ததும் அம்மா காண்டாயிடுவாங்க.. இதெல்லாம் தேவையா.. " அவளின் பதட்டத்தை பார்த்து ராஜ் புன்னகைத்தான். இறுதியாக அவள் வீட்டின் முன் கார் நின்றது.

 வெண்ணிலாவுக்கு பயத்தில் வேர்த்து கொட்டியது. எப்போதுமே தாமரைக்கு வெண்ணிலா என்றால் அலாதி பாசம். வெண்ணிலாவின் திறமையும் அவளது புத்திசாலித்தனமும் பெற்ற தாய்க்கு எப்பொழுதுமே பெருமை தேடித் தந்திருக்கிறது.. அவளை உள்ளங்கையில் வைத்து தாங்குவார். இந்தத் திருமணம் மட்டும் தான் பிரியாவின் குளறுபடியால் இப்படி நடந்துவிட்டது. கண்டிப்பாக தாமரைக்கு இன்னும் தன் மீது கோபம் இருக்கும் என அவள் நினைத்துக்கொண்டாள்.இல்லையென்றால் இந்நேரம் தன் வீட்டிற்கு வந்து தன்னை பார்த்திருப்பாரே..

 சுய அலசலில் அவள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இறங்கி வந்து அவள் பக்கம் கதவை திறந்துவிட்டான் ராஜ்.. வேறு வழி இல்லாமல் பயத்தோடு கீழே இறங்கினால் நிலா. தாமரை வந்து பார்க்கிறாரோ இல்லையோ அதற்குள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் வெண்ணிலாவை பார்த்து விட்டனர். பக்கத்து வீட்டு  வசந்தா ஆண்ட்டி"நிலா வாடியம்மா இப்பதான் அம்மா வீட்டுக்கு வர வழி தெரின்ஞதா.. எத்தன நாளாச்சு உன்ன பார்த்து..எப்படி இருக்க நல்லா இருக்கியா.. இவரு தான் உன் வீட்டுக்காரரா.. ஜோடிப்பொருத்தம் என் கண்ணே பட்டுரும் போல..

என்னடி இவ்ளோ அழகா இருக்க..பொண்ணும் மாப்பிள்ளயும் வந்து நிக்கிறாங்க என்ன பண்றா உங்க அம்மா..தாமர.. தாமர" வசந்தா ஆண்ட்டி நல்ல மனதோடு நிலாவை வரவேற்று தாமரையை அழைத்தார். நிலாவுக்கு பயத்தில் கை கால்கள் நடுங்க ராஜ் கரத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். வசந்தா ஆண்ட்டியின் குரளைக் கேட்டு என்ன அக்கா என்றபடி வெளியே வந்தார் தாமரை.

வந்தவர் அப்படியே நின்றுவிட்டார்.தன்னுடைய மகளை தன் வீட்டு வாசலில் அவர் எதிர்பார்க்கவில்லை.. அம்மாவை பல மாதங்கள் கழித்து பார்த்ததும் நிலா கண்களில் அப்படி ஒரு கண்ணீர்.தாமரையின் கண்கள் அவளை அவ்வளவு வேகமாக ஸ்கேன் செய்தது.. நெற்றி வகிட்டில் குங்குமம் இரு புருவத்துக்கும் இடையே சிறியதாக சிவப்பு பொட்டு. காதில் தங்கத் தோடு. கழுத்தில் தாலிக்கொடி. ஒரு கையில் கை சங்கிலியும்  மற்றொரு கையில் கடிகாரம் கட்டியிருந்தாள்.

சாதாரண கருப்பு வர்ண குர்த்தி அணிந்திருந்தாள்.. அதுவே அவளை பேரழகியாக காட்டியது. வெண்ணிலாவின் முகத்தில் புதுப்பொலிவு தென்பட்டது.  எப்பொழுதுமே தன்னுடைய குறையை எண்ணி அவள் முகம் வாடியது கிடையாது.. இப்பொழுது ஒரு குறையே தன்னிடம் இல்லாதது போல அவ்வளவு கம்பீரமாக இருந்தது அவளின் முகம். அதில் தெரிந்த லேசான வாட்டமும் முகத்தின் சோர்வும் அவள் கரத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நின்ற ராஜின் பிடியும் சொன்னது அவள் வாழும் வாழ்க்கையை பற்றி.

 தாமரைக்கு பின்னால் வந்து நின்றனர் மாறனும் விக்ரமும்.. ராஜ் வீட்டிலிருந்து கிளம்பும்போதே மாமனாருக்கு குறுந்தகவல் அனுப்பி விட்டால் அதனால் நடக்கப்போகும் கலவரத்தை அறிந்து மாறன் வாக்கிங் செல்லவில்லை. கிரிக்கெட் விளையாட கிளம்பிய விக்ரமையும் வீட்டில் இருக்க கூறிவிட்டார்.இருவரும் தாமரை வெண்ணிலாவை என்ன கூறி விடுவார் என்பதால் சற்று பயத்தோடு நின்றிருந்தார்கள்.

 தாமரை வாய் எடுக்கும் முன்பே"தாமர.. வெளிய வச்சு எதுவும் பேசிடாதே..எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள கூப்பிட்டு பேசு.. அக்கம் பக்கம் எல்லோருடைய கண்ணும் நம்ம மேல தான் இருக்கு.. "மாறன் சொல்லியதும் உண்மைதானே..

தாமரை எதுவும் பேசாமல் உள்ளே சென்றுவிட மாறன் வந்தவர்களை உள்ளே வரவேற்றார்.. அவருக்கும் ஏன் திடீரென்று இந்த பிரவேசம் என்பது தெரியாது. விக்ரம் மாமா என்று ராஜ் கரத்தைப் பிடித்து குலுக்கினான். மாறன் தன்னுடைய மகளின் தலையை வருடி அவளின் நெற்றியில் இதழ் பதித்தார்.. "வாடா கண்ணு வாங்க மாப்பிள்ள"என முதல் முறையாக திருமணம் முடிந்து தங்கள் வீட்டிற்கு வரும் மகளை வரவேற்றார் மாறன்.

உள்ளே வந்து தாமரை முன்பு நிற்கும் போது கூட ராஜ் வெண்ணிலாவின் கரத்தை விடவில்லை. தாமரை ஒரு ஓரமாக நின்றிருந்தார்.. ராஜ் நேரடியாக அவர் முன்பு சென்று நின்றான் வெண்ணிலாவோடு.."அத்தை இன்னும் உங்களுக்கு எங்க மேல கோபம் போகலையா.. நாங்க என்ன செஞ்சா உங்க கோபம் போகும்.. பெத்த தாயா உங்க கோபம் சரிதான்..ஆனா கோபத்தில நீங்க ஒன்னு யோசிக்க மறந்துட்டீங்க.என்ன மறந்துட சொல்லி நிலா கட்ட சொன்னீங்க..என் அம்மா பேசுனது அப்படி.உங்கள சொல்லி குத்தமில்ல..

 ஆனா நீங்க ஒன்ன யோசிக்க தவறிட்டிங்க..நிலா உங்க பொண்ணு. அதாவது கடவுள் உங்க மூலமா இந்த பூமிக்கு வரவெச்ச ஒரு உயிர்.. அத்தை அவள பெத்த உங்களுக்கு அவள வளத்து படிக்க வைக்க உரிம இருக்கு. ஆனா அவ கல்யாண வாழ்க்கன்னு வரும்போது அவளோட விருப்பமும் அதுல முக்கியம்ன்னு ஏன் யோசிக்க மறந்திங்க.. நீங்க பெத்தா அவ என்ன உங்க அடிமையா? அவ கேக்கலையே என்ன பெத்து போடுன்னு. நீங்களே பெத்தீங்க. நீங்களே வளத்திங்க. நீங்களே ஸ்கூல் சேத்து விட்டிங்க. அவளுக்கு தேவையான எல்லாத்தையும் பாத்து பாத்து செஞ்சீங்க. ஆனா அவ மனச புரிஞ்சிக்க மறந்துடிங்க.

உங்களுக்கு புடிச்சா கல்யாணம் பண்ணிக்கணும். நீங்க வேணாம்னு சொன்னா அவ கல்யாணம் பண்ணிக்க கூடாது. நா பெத்தேன் என் பொண்ணுன்னு என் உரிமைன்னு நீங்க எப்படி அவ மேல உரிம கொண்டாட முடியும். நீங்க ஒரு கருவி அத்தை. நாளைக்கி நிலாவுக்கு குழந்தை பொறந்த பிறகு அதோட வாழ்க்கய அதான் முடிவு எடுக்கும். நாம அதோடு நல்லது கெட்டத எடுத்து சொல்லலாமே தவிர அவங்க ஆசா பாசத்துல தலையிட முடியாது.

அவ என்ன ஓரினசேர்க்கயா ஒரு பொண்ணயா கொண்டு வந்தா கட்டிக்குறேனு சொன்னா.. என்ன கூட நீங்க எல்லோரும் தான அவளுக்கு இன்ட்ரோ பண்ணி விட்டிங்க. உங்கள மீறி அவ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா இதான உங்களுக்கு கோபம். அவ வாழ்க்கய அவ முடிவு எடுத்துக்கிட்டா.. அதுக்கு கூட அவளுக்கு உரிம இல்லையா. இல்ல அவ மேல உங்களுக்கு நம்பிக்க இல்லையா.. அவ இதுவரைக்கும் என்ன தப்பான முடிவு எடுத்துருக்கா.. இதுவும் தப்பா போக..

அப்டியா நாலயும் யோசிச்சு பாக்க தெரியாத அளவுக்கு அவள வாழ்த்துருக்கீங்க.. பாவம் அத்தை அவ உங்கள ரொம்ப மிஸ் பண்றா.. நிலா பிரேக்னன்டா இருக்கா. இப்பதான் எனக்கே சொன்னா.. என்ன வேணும்னு கேட்டப்போ அவ உங்கள பாக்கணும்னு தான் சொன்னா.. ஆனா சொல்லிட்டு அவளோ பயந்தா.. அத்தை என்ன கோவம்னாலும் என்ன அடிங்க.. கெட்ட வார்த்தயில ஏசுங்க. அவள மன்னிச்சிருங்க.. எல்லாமே என் தப்பு தான்.. அவ மேல ஒரு தப்பும் இல்ல.."ராஜ் அதிர்ச்சியில் உறைந்து நின்ற தாமரை காலில் விழுந்தான்.

 தாமரை பதற நிலா அவனை பிடித்து இழுத்தாள்.. "என்ன ராஜ் எதுக்கு இப்டி பண்ண.." அவள் கண்களில் கண்ணீர் கட்டுப்பாடில்லாமல் வழிந்தது..

"நிலா ஆயிரம் சொன்னாலும் நான் செஞ்சது தப்பு.. அதுக்கு உன் அம்மா கிட்ட மன்னிப்பு கேட்க எனக்கு எந்த தயக்கமும் இல்ல.. சொல்லப்போனா அது என் கடம.."என்றவன் கையெடுத்து கும்பிட தாமரை அவன் கையை பிடித்து கதறிவிட்டார்..

"ஐயோ மாப்ள என்ன பண்றிங்க.. உங்க வயசுக்கு எவ்ளோ பக்குவமா நடந்துக்குறீங்க.. என் வயசுக்கு நா யோசிக்க தவறிட்டேன்.. என் பொண்ணு நான் பெத்தேன்னு என் விருப்பு வெறுப்ப அவ மேல திணிச்சது தப்பு தானே.. அவளுக்கும் மனசு இருக்குனு புரிஞ்சிக்காம அகங்காரமா இருந்துட்டேன்.. உங்களயும் வாயிக்கு வந்த மாறி பேசிட்டேன் என்ன மன்னிச்சிருங்க மாப்ள..நீயும் என்ன மன்னிச்சிருடி கண்ணு"வெண்ணிலா தன் தாயை கட்டிக்கொண்டு கதறினாள்.

 பின்னால் பார்த்துக் கொண்டிருந்த மாறனுக்கும் விக்ரமுக்கும் இப்படி ஒரு வாழ்க்கையை வெண்ணிலாவுக்கு கொடுத்த கடவுளுக்கு அந்த நேரம் நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை. மாறன் ராஜ் கையைப் பிடித்துக்கொண்டார். தாமரை மகளின் கண்களை துடைத்து விட்டு அவளைப் பார்த்து ராஜ் கூறியது உண்மையா என்று கண்களால் வினவினார்.. வெண்ணிலா வெட்கத்தோடு ஆமென அவளை நெட்டி முடித்தவர் இருவரையும் அமர வைத்துவிட்டு பூஜை அறைக்கு சென்று திருநீர் எடுத்து வந்து இருவர் நெற்றியிலும் வைத்துவிட்டார்.

 முதல்முறையாக வீட்டிற்கு வந்த மகள் மருமகனை உட்கார வைத்துவிட்டு உடனே விருந்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பித்து விட்டார் தாமரை. தன் மகளை உயிராய் நேசிக்கும் ஒருவன். பெற்ற தாயாக தான் அந்த இடத்தில் தோற்றுப் போனாலும் தன்னையே மிஞ்சி பாசம் செலுத்தும் அளவுக்கு அவளுக்கு ஒருவனை கடவுள் கொடுத்துவிட்டார். இரவு சாப்பாடு அவர்கள் வீட்டில்தான் என்று கண்டிப்பாக கூறிவிட்ட தாமரை பம்பரமாகச் சுழன்றார்.. அவருக்கு உதவியாக நிலா சென்று காய்களை வெட்டி கொடுத்தாள்.

 மகளிடம் பேச்சுக் கொடுத்து அவர்கள் வீட்டில் நடந்த அத்தனையும் தெரிந்து கொண்டார் தாமரை.. அவருக்கு மலைப்பாக இருந்தது.. ஒரு இடத்தில் கூட ராஜ் வெண்ணிலாவை விட்டுக்கொடுக்காமல் அனைத்துப் பிரச்சினைகளிலும் தனியாக இருந்து செயல்பட்டுள்ளான்.. தன் மகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தால் இவ்வளவு தூரம் நேசிப்பான்.. பெற்றோர் காலில் கூட விழாத இந்த காலத்தில் மனைவிக்காக அவள் தாயாரின் காலில் விழுந்தானே.. இவனை புரிந்துகொள்ளாமல் எவ்வளவு கடுஞ்சொற்களை வீசி விட்டார்..

 வெண்ணிலா தன் தாயாரிடம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டாலும் ப்ரியா செய்த செயலைப் பற்றி மூச்சு விடவில்லை. அது கண்டிப்பாக பெரியம்மாவுக்கும் அம்மாவுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால் அவள் அதைக் காட்டிக் கொள்ளவில்லை.. தாமரை விரைவாக விருந்தை செய்து முடித்தார்.. முதலில் அனைவரையும் உட்கார வைத்து பரிமாற போனவரை பிடித்து அமர வைத்தான் ராஜ். அவரையும் தங்களுடன் உணவுண்ண அழைக்க இறுதியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணடனர்..

 சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு அங்கேயே தங்க சொல்ல அவர்களின் மனம் வாடாத படி எடுத்துச்சொல்லி ராஜ் வெண்ணிலாவை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். உடல் கழுவி இருவரும் கட்டிலில் விழ உடனே எழுந்து எங்கேயோ சென்றான். அவளுக்கு சூடாக பாதம் சேர்த்து பால் காய்ச்சி எடுத்து வந்து கொடுத்தான். வேண்டாம் என்று மறுத்த வெண்ணிலாவை மிரட்டி குடிக்க வைத்தான்.. அவள் குடித்து முடித்து கிளாஸை கொடுக்கவும் எடுத்துச்சென்று கழுவி வைத்தான்.

 அனைத்தையும் வெண்ணிலா பார்த்துக்கொண்டிருந்தாள். இம்மாதிரி அன்பு தனக்கு கிடைக்க கூடாது என்பதால் தானே அனைவரும் இவர்கள் சேரக் கூடாது என ஆட்டமாய் ஆடினார்கள்.ஆனால் கடவுள் சேர்த்து வைத்து விட்டாரே. அவளுக்கு பைபிள் வசனம் ஒன்று நினைவு வந்தது..

கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருப்பான்..

இது எவ்வளவு பெரிய உண்மை.. ராஜ் வந்து அவளருகில் படுத்தான்..வெண்ணிலா அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டு

"ராஜ்..ஏன் என் அம்மா காலுல விழுந்த"

"தப்பு செஞ்சிருக்கேன்டி..அதான் விழுந்து மன்னிப்பு கேட்டேன்.."

"அப்டி பாத்தா உன் அம்மா காலுலயும் நான் விழுவனும் தானே"

"கொன்றுவேன் உன்ன.. என் அம்மா வயசுல பெரியவங்க ஆனா அவங்க ஆடுன ஆட்டமும் பேசுன பேச்சும் கொஞ்சமா நஞ்சமா.. அவங்க தான் உன் கிட்ட மன்னிப்பு கேக்கணும். பாப்பா நா உங்கம்மா கிட்ட சொன்னது தான். பெத்தவங்க ஒரு கருவி. கடவுள் அவங்க மூலமா ஒரு உயிர கொண்டு வராங்க. பிள்ளைங்கள பிள்ளைங்களா பாக்கணுமே தவிர அடிமையா இல்ல. அவங்க ஆடுற ஆட்டத்துக்கு எல்லாம் நாமளும் ஆட முடியுமா.. இல்ல நம்மள பெத்தவங்கன்னு வாய மூடிட்டு இருக்க முடியுமா"

"ராஜ் நம்ம பாப்பாவ எப்டி வளப்ப"

"கண்டிப்பா தப்பு செஞ்சா கண்டிப்பேன். அடிக்கணும்னு இருக்குற நிலைமையில அடிப்பேன். எல்லா விசயத்துலயும் அவன் கைய புடிக்காம அவன விட்டு புடிப்பேன்.. அவன் ஆசைய நடத்தி வைப்பேன் அதுக்கு முன்னாடி அவன் ஆசபட்டத்த அடைய ஏதாச்சும் வேல கொடுப்பேன்.அத செஞ்சா தான் அவன் ஆசப்பட்டத்த வாங்கி கொடுப்பேன்..ஒரு நண்பனா இருப்பேன். நல்லது கெட்டது சொல்லி வளப்பேன்.. அவன் விழும்போது கை கொடுக்காம அவன் எழ ஊக்குவிப்பேன்.. அவன் அர்ச்சிவ் பண்ணும் போது அவனோட பணத்த பங்கு போடாம பணத்தோட அருமைய சொல்லி தருவேன்.. சிம்பிள்ளா நாலு பேருக்கு நல்லது செய்யலானாலும் கெடுதல் செய்யாதனு சொல்லி வளப்பேன்"

"அது என்ன அவன் அவனு சொல்ற.. பொண்ணு பொறந்தா"

"அதுக்கும் அதான்டி.."என அவளை தட்டி கொடுத்து உறங்க வைத்தான் ராஜ். இருவரும் நன்றாக உறங்கி கொண்டிருக்க அலைபேசி அழைத்தது.

தொடரும்..

Comments

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்